யானை கதை - பஞ்சாமிர்தம்

நம்ம கம்பெனி தியேட்டரைப் பத்தி சொல்லியிருந்தேன்ல....இரண்டு வாரத்துக்கு முன்னாடி டிவெண்டி-20ன்னு ஒரு மலையாள படம் போட்டாங்க. மம்மூட்டிய காண்பிக்கும் போது ஒரு ஆளு திடீர்னு “மம்மூட்டிக்கு ஜே! மம்மூட்டிக்கு ஜே!”னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

எல்லோரும் சிரிச்சிட்டே விட்டுட்டாங்க. படத்துல மோகன்லால் மம்மூட்டி வீட்டு பாதுகாப்புல இருந்து வெளிய வர்ர சீன் ஒன்னு இருக்காம். அப்படி ஸ்டைலா வெளிய வரும் போது எவனோ ஒருத்தன் “மோகன்லாலுக்கு ஜே! மோகன்லாலுக்கு ஜே!”னு கத்த ஆரம்பிச்சுட்டான்.

அதுக்கப்புறம் எல்லோரும் காண்டாகிட்டாங்க. அந்த படத்துல மலையாள நடிகர் நடிகர்கள் எல்லோரும் நடிச்சிருந்தாங்க. இனி ஒவ்வொருத்தனுக்கும் கத்த போறான்களோன்னு எல்லோரும் டென்சன் ஆகிட்டானுங்க. நல்ல வேளை கத்தல. ஆனா...

போன வாரம் வில்லு போட்டிருக்காங்க. உடல் நிலையை மனதில் கொண்டு நான் போகல. விஜயை காண்பிக்கும் போது ரெண்டு மலையாள பக்கிங்க விசிலடிச்சு ஒரே கத்தலாம். கத்துனதும் இல்லாம, படம் முடிஞ்ச அப்புறமா நான் படம் எப்படின்னு கேட்டேன். சூப்பரா இருந்ததுன்னு சொல்றானுங்க.

அடப்பாவி மக்கா ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஆளுங்கள கெடுத்து வச்சிருக்கு இந்த விஜய் பயபுள்ள.
----------------------------------------------------------------------------------------------
நண்பர் ஒருத்தர் எங்கேயோ படிச்சதா சொன்ன கதை...

நல்ல மரங்கள் அடர்ந்திருக்கிற ஒரு அமைதியான இரயில் நிலையம். ஒருத்தர் ரயிலை பிடிக்கிறதுக்காக வேகமா ஓடி வந்தும் ரயிலை மிஸ் பண்ணிடுறார். மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் ப்ளாட்பாரத்துல இருக்குற பெஞ்சுல உட்கார்ந்திருக்கார்.

பையில இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார். அந்த புத்தகத்திலேயே மூழ்கி போயிருக்கும் போது ஒரு விசும்பல் சத்தம் கேட்குது.யார்ரா அதுன்னு திரும்பி பார்க்கிறார். அவருக்கு பக்கத்துல ஒரு யானை உட்கார்ந்திருக்குது. விசும்பல் சத்தம் அந்த யானைகிட்டிருந்து தான் வருது. அதோட கண்களை பார்க்கிறார். அதில் ஒரு சோகம் இருப்பதை உணர்கிறார். கர்சிப் கொடுத்து கண்ணை துடைக்க சொல்லுறார். அதுவும் துடைக்குது. ஆனா திரும்பவும் அழுகுது.

சரி பசியில அழுகுது போலன்னு நினைச்சுட்டு கேண்டீன்ல போய் ஒரு பாக்கெட் பாப்கார்ன் வாங்கிட்டு வரார். அதை அது கையில கொடுக்குறார். அது வாங்கிட்டு அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது..... அந்த பாப்கார்னை பார்க்குது அவரை பார்க்குது.....

படம் அதோட முடியுது....

title of story: யானை பசிக்கு சோளப்பொறி

இந்த நக்கல் பிடிச்ச கதைய நம்ம மக்கள்ஸ் யாராவது தான் எழுதியிருப்பாங்க. லின்ங் இருந்தா கொடுங்க மக்கா.
------------------------------------------------------------------------------------------------
சாண்டில்யன் “யவண ராணி” படிக்க ஆரம்பிச்சிருக்கேன். இராண்டாம் நூற்றாண்டின் சோழப் பேரரசரான இளஞ்சேட் சென்னியா காலத்தில் இருந்து கதை தொடங்குகிறது.

முதல் பாகத்தின் பாதி வரை தான் படித்துள்ளேன். கல்கியின் நாவல்களை படிக்கும் போது அதில் நடப்பவையெல்லாம் உண்மையாக நடந்ததாக மனம் நினைத்து கொள்ளும்(இன்றும் மீள்வாசிப்பின் போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்).

ஆனால் இக்கதை ஆரம்பத்தில் படிக்கும் போதே பல சந்தேகங்கள். புகாரின் சோழர் படையில் யவணர்கள் உண்மையில் இருந்தார்களா?. அது அவர்களின் கைவசம் போனதா?.

வாணிபத்தில் இவ்வளவு செழிப்பாக தமிழக கடற்கரை துறைமுகம் இருந்த்தா? யவண ராணி உண்மையில் இங்கே வந்தாளா? என பல சந்தேகங்கள். உடனே நம் வரலாற்று சந்தேகங்களை தீர்த்து வைக்கும் “இளைய பல்லவனை” கேட்டு தெளிவாக்கினேன்.

இதையெல்லாம் மீறி கதையின் சுவாரஸியம் நம்மை இழுத்துச் செல்கிறது. கதையை முடித்ததும் முழு விமர்சனமும் பார்ப்போம்.

அதற்கு முன் கோபி கிருஷ்ணனின் “டேபிள் டென்னிஸ்” படிக்க ஆரம்பித்தேன். ஒன்றுமே புரியாமல் அப்படியே மூடி வைத்து விட்டேன். உள்ளுக்குள் “நீ இன்னும் நிறைய வளரனும் தம்பி” என்று கேட்டுகொண்டே இருந்தது. அவ்வ்வ்
-----------------------------------------------------------------------------------------------
வெப்பன்ஸ் சப்ளையர் கார்த்திகேயன் புண்ணியத்தில் "before sunrise(1994)" பார்த்தேன். இரண்டே கதாபாத்திரங்களை வைத்து இவ்வளவு சுவாரஸியமாக அதுவும் கதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறார்கள். படம் முழுவதும் கதாநாயகனும் கதாநாயகனும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த இருவரோடு மூவராக நாமும் பயணிக்கிறோம் மௌனத்துடனும், ஆங்காங்கே சிரிப்புகளுடனும்.

அதுவும் முடிவு நம்மளை அறியாமல் ”ஆகா அற்புதம்” என முணங்க வைக்கிறது. இருவரும் மறுபடியும் சந்தித்தார்களா? இல்லையா? என கூறாமல் விட்டுருப்பது நல்ல முடிவு. இதிலிருக்கும் ஒரு காட்சியை வழக்கம் போல நமது கோலிவுட் இயக்குனர் அப்பட்டமாக சுட்டிருக்கிறார். வாலி படத்தில் வரும் அஜித்&ஜோதிகா பேசும் “டிரிங் டிரிங்” காட்சி தான்.

இதனுடைய இரண்டாவது பார்ட் “before sunset(2004)". அதே இரண்டு கதாபாத்திரங்கள். முதல் படத்தின் முடிவோடு ஒத்து போனதால் இந்த படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா என நீண்ட நேரம் ஆலோசித்தேன். முடிவில் அப்படத்தை கண்ட போது “ஆகா அருமை”. முதல் பார்ட் மனதை கொள்ளை கொண்டது என்றால் இந்த பார்ட் மனதை கனக்க வைத்தது.

ஆனால் இந்த முடிவும் அருமையாக இருப்பதால் இனி மூன்றாவது பார்ட் வந்தால் பார்க்க கூடாது என்ற முடிவில் இருக்கிறேன் :)
------------------------------------------------------------------------------------------------
ஒரு வழியா எழுத வந்து ஒரு வருசம் ஆச்சு. ஃபாலோவர் 100 பேரும் சேர்ந்தாச்சு. பல பேர் 300 தாண்டிட்டாங்க. ஆனாலும் பரவாயில்லை. உருப்படியா எதுவும் இல்லாம மொக்கையாவே எழுதி 100 பேர் சேர்ந்திருக்காங்கன்னா ஆச்சர்யம் தான். இளைய பல்லவன் ஓராண்டு ஆனதுக்கு ஏதாவது அனிமேசன் செய்யலாம் என்றார். நானும் அவரும் ஒன்னா தான் எழுத வந்தோம்.

ஆனால் நேரம் சரியா ஒத்துழைக்காததால் செய்ய முடியல. அவருக்கு என்னோட என்னோட வாழ்த்துகள். ஃபாலோவரா சேர்ந்திருக்கும் 100 பேருக்கும், ரீடரில் படிக்கும் மற்றும் நேரடியாக படிக்கும் எல்லா வாசககண்மணிகளுக்கும் நன்றி நன்றி நன்றி :)

28 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :))

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

வாழ்த்துகள் ஆதவன். ஓராண்டு முடிவடிந்ததற்கும், சதத்திற்கும், உங்கள் பதிவிற்கும் :)

கலையரசன் said...

* நாமதான் விஜய கிழிகழின்னு கிழிக்கிறோம்! என் ரூம்மெட்டுக்கு கண்ணூர்ல ஷைலா என்ற சினிமா தியேட்ர் இருக்கு.. அவன் தியேட்டர்ல எப்போதும் இவன் படம்தான். அவன் பண்ணுற அலப்பரைய பாக்கனுமே! விஜய்னா உயிர விடுவானுங்க..
:::நேரம் என்பது ரஜினி படம் மாதிரி...ஓடிக்கிட்டே இருக்கும்.
ஆனா,
வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி... அதை நாமதான் (ஓட்ட)னும்.:::

*யானை பசிக்கு சோளப்பொறி பத்தி கதை எழுதிட்ட... அப்படியே "நாயி போர்வை வாங்குன" கதையையும் எழுதிடேன்..

* நீ மட்டும் யவண ராணி.. யுவ ராணின்னு படி. நாங்க படிக்க புக்கு கேட்டா மட்டும்.. இந்தியாவுல இருக்கு, அத படிக்கத ன்னு ரிவைன்ட் பண்ணு!

* நல்ல படம்.. எத்தன் ஹாக் நடிச்சு நல்லா ஓடின படம் இரண்டுதான். ஒன்னு Before Sunrise இன்னொன்னு Trainning Day.

* //மொக்கையாவே எழுதி 100 பேர் சேர்ந்திருக்காங்கன்னா// அடிங்.. மொக்கையா எழுதுனாதான் சேருவாங்க.. 200 அடிக்க வாழ்த்துகள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஒரு வருடம் நிறைவுற்றதுக்கு வாழ்த்துகள் நண்பா..

விசை.. ஹி ஹி..ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை..

“யவண ராணி”- சாண்டில்யனோட எல்லாப் புத்தகங்களுமே இந்த வகைதான்.. கேள்வி கேட்காம படிச்ச அருமையா இருக்கும்.. குறிப்பா கடல்புறாவும் மன்னன் மகளும் எனக்கு ரொம்பப் புடிக்கும்..

100 பேர்- அன்பால தானா சேர்ந்த கூட்டம்.. மீண்டும் வாழ்த்துகள்..

வித்யா said...

வாழ்த்துகள்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//விஜயை காண்பிக்கும் போது ரெண்டு மலையாள பக்கிங்க விசிலடிச்சு ஒரே கத்தலாம். அடப்பாவி மக்கா ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஆளுங்கள கெடுத்து வச்சிருக்கு இந்த விஜய் பயபுள்ள. // நல்லவேலை கொடுத்த காசுக்கு மேல கூவல. //ஒரு வழியா எழுத வந்து ஒரு வருசம் ஆச்சு// வாழ்த்துக்கள் ஆதவன்.

சந்தனமுல்லை said...

//அடப்பாவி மக்கா ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஆளுங்கள கெடுத்து வச்சிருக்கு இந்த விஜய் பயபுள்ள. //

avvvvvvv! இதென்ன கொடும!! :))

சந்தனமுல்லை said...

//படம் அதோட முடியுது....

title of story: யானை பசிக்கு சோளப்பொறி//

LOL! நல்லவேளை ...மாரல் ஆஃப் த ஸ்டோரில்லாம் சொல்லலையே!! :))

சந்தனமுல்லை said...

ஆகா..வாழ்த்துகள்!! இன்னும் நிறைய எழுதவும் வாழ்த்துகள்! :-) நல்லாருக்கு பஞ்சாமிர்தம்!!

எவனோ ஒருவன் said...

பஞ்சாமிர்தம் நல்லாருக்கு.
இந்த தடவ கதைல ஏதோ மிஸ்ஸிங்.

Vijay said...

"போன வாரம் வில்லு போட்டிருக்காங்க. உடல் நிலையை மனதில் கொண்டு நான் போகல"
//கந்தசாமி கொடுத்த வரமோ இல்லை வில்லுவினால் முன்பே காயம்பட்ட அனுபவமோ?? // ;)))

இளைய பல்லவன் said...

வாழ்த்துக்கள் ஆதவன்!

உங்களுக்கும் ஒரு வ்யசு ஆகிருச்சு. பொறுப்பா பதவிசா நடந்துக்குங்க!

அம்புட்டுதேய்ஞ்சொல்லிப்புட்டேன்.

====

யவன ராணி முதல் அத்தியாயத்திலேதான் இருக்கீங்களா?? அதுலயே இவ்வளவு டவுட்டுன்னா.. கதை முடியறதுக்குள்ள உங்க டவுசர் அல்லது என் டவுசர கிழிச்சிருவீங்க போல இருக்கே...

☀நான் ஆதவன்☀ said...

நன்றிக்கா :)
-----------------------------------
நன்றி பாஸ் :)
-----------------------------------
நன்றி செந்தில்வேலன்
-----------------------------------
@கலையரசன்
//வாழ்க்கை என்பது விஜய் படம் மாதிரி... அதை நாமதான் (ஓட்ட)னும்.:::
//
ஆகா சூப்பர் கலை :)
//"நாயி போர்வை வாங்குன" கதையையும் எழுதிடேன்..//
இதென்ன புதுசா இருக்கு. கூடிய சீக்கிரம் அதையும் எழுதிடுவோம் :)

☀நான் ஆதவன்☀ said...

@கார்த்திகை பாண்டியன்
நன்றி நண்பா :)

கடல் புறா,மன்னன் மகள் ரெண்டும் அடுத்த தடவை லீவுல வரும் போது வாங்கிடுறேன் :)
-------------------------------------
நன்றி வித்யா
-------------------------------------
நன்றி பாலா :)
-----------------------------------@சந்தனமுல்லை
நன்றி சந்தன்முல்லை
//LOL! நல்லவேளை ...மாரல் ஆஃப் த ஸ்டோரில்லாம் சொல்லலையே!! :)//

ஹி..ஹி.. ஏதாவது போடலாம்னு பார்த்தேன். கொஞ்சம் ஓவரா இருக்கும்னு தான் போடல :)
-----------------------------------

☀நான் ஆதவன்☀ said...

@எவனோ ஒருவன்

அப்படியா மாப்பி...சரி அடுத்த தடவை சரி செய்திடலாம் :)
-------------------------------------
@விஜய்

அதே அதே விஜய் :)
-------------------------------------
@பல்லவன்

//உங்களுக்கும் ஒரு வ்யசு ஆகிருச்சு. பொறுப்பா பதவிசா நடந்துக்குங்க!

அம்புட்டுதேய்ஞ்சொல்லிப்புட்டேன்.//

அவ்வ்வ்வ்வ் அப்ப நான் யூத் பதிவர் இல்லையா

//யவன ராணி முதல் அத்தியாயத்திலேதான் இருக்கீங்களா?? அதுலயே இவ்வளவு டவுட்டுன்னா.. கதை முடியறதுக்குள்ள உங்க டவுசர் அல்லது என் டவுசர கிழிச்சிருவீங்க போல இருக்கே..//

விடமாட்டோம்ல...ரெடியா இருந்துகங்க...சந்தேகம் எல்லாம் வரிசைகட்டி நிக்குது :)

☀நான் ஆதவன்☀ said...

தமிழ்மணத்துல சூன்யம் வச்சுட்டானுங்கய்யா....வச்சுட்டாங்க

எவனோ ஒருவன் said...

//அவ்வ்வ்வ்வ் அப்ப நான் யூத் பதிவர் இல்லையா //

யூத் - ங்க்குற வார்த்தய நாமல்லாம் யூஸ் பண்ணக்கூடாது மாமே...

seemangani said...

//இந்த நக்கல் பிடிச்ச கதைய நம்ம மக்கள்ஸ் யாராவது தான் எழுதியிருப்பாங்க. லின்ங் இருந்தா கொடுங்க மக்கா.//

கண்டுபிடிச்சா சொல்லுங்க மக்கா..
//ஒரு வழியா எழுத வந்து ஒரு வருசம் //

வாழ்த்துகள்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஹா ஹா ஹா.. நல்லா இருக்குங்க!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் (01029051831305616633) said...

தேவுடு காரு
பஞ்சாமிர்தம் சூப்பரா உந்தி
விஷி நையாண்டி கலக்கல்
யானை கதை கலக்கலோ கலக்கல்
யவன ராணி
பேரை கேக்கும்போதே எனக்கே தூக்கம் வருதே ?
தலைக்கு வச்சி தூங்குறீங்களா?:)))))))
என்கிட்டே ஈபுக்கா இருக்கு.
படத்தோடு பாக்க நன்றாக இருக்கும்னு நினைக்கிறேன்.

அப்புறம் கைய குடுங்க
படம் பாத்துட்டீங்களா?
ஏன்னா படம்ல?
அடுத்த முறை பார்க்கையில் இதை பத்தி மட்டும் பேசுறோம்..
படம் பாத்துட்டு எனக்கும் கிரெடிட் கொடுத்த நீ தேவுடு தான்.

நூறை தொட்டதற்கு பாராட்டுக்கள்
நூத்திஒன்னாக நானும் வாரேன்.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

சென்ஷி said...

வாழ்த்துக்கள் :)

☀நான் ஆதவன்☀ said...

ஓக்கே ஏனோஓனோ மாப்பி :)
------------------------------------
நன்றி சீமான் கனி
------------------------------------
நன்றி ராஜ்
------------------------------------
நன்றி கார்த்திகேயன் வருகைக்கும் பின் தொடர்தலுக்கும் :)
-----------------------------------
நன்றி கோபி
-----------------------------------
நன்றி சென்ஷி

மின்னுது மின்னல் said...

ரைட்டு..:)

ஸ்ரீமதி said...

வாழ்த்துகள் அண்ணா.. :))

யானைக்கதை- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

pappu said...

யோவ், நீங்க எல்லாம் ஈசாப் நீதி கதைகளே படித்ததில்லையா?

தலைப்பு - யானையும் மனிதனும்

நீதி - யானை பசிக்கு சோளப் பொறி!

இது கூடத் தெரில! சேம்! சேம்! பப்பி சேம்!

ஜெகநாதன் said...

அடேங்கப்பா!! அசத்தலான இருக்கு சினிமாக் கதையும், யானைக் கதையும்! ​டேபிள் ​டென்னிஸ் - படிக்கிறக்கு முன்னாடி தூயோன் வாசித்து விட்டு படிங்க.. ​ஈஸியா புரியும். இது ​ரெண்டு புத்தகங்களும் ஒன்றோடொன்னு ​நெருங்கிய ​தொடர்புடையவை.
அப்புறம் காலடியின் தீஅதீ ரசிகக்கண்மணிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் - followers 100-க்கு!!

Related Posts with Thumbnails