கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ

’ஆப்பம் இருக்காப்பா?’

’இல்லைங்க சார்’?

‘பரோட்டா?’

’இல்ல சார்’?

’சரி அப்ப சேவலை உயிரோட கொண்டு வா... கழுத்த அறுத்து நாங்க சாப்பிட்டுக்கிறோம்”

“சார் இது சரவணபவன். சைவம்”

’ஒன்னுமே இல்லாம அப்புறம் என்னங்கய்யா சைவம்?’

’மச்சி ஏன் இருக்குற கோவத்தை இவர்கிட்ட காட்டுற. மூணு ப்ளேட் சப்பாத்தி, டேய் உனக்கென்ன வேணும் ப்ரைடு ரைஸா, ஓக்கே அது ஒன்னு, ஒரு கிச்சடி, மூணு தோசை” ஆர்டர் செய்தான் நண்பன்.

பக்கத்தில் ஒரு ஆறு வயது குழந்தை அழுதுகொண்டே இருந்தது. பார்க்க பாவமாக இருந்தது. சோகத்துடன் அந்த குழந்தையுடன் அம்மாவும், அப்பாவும்.

இவர்களும் அங்கிருந்து தான் வந்திருக்கிறார்கள் என்பது அவர்கள் முகத்தை பார்க்கும் போதே தெரிந்தது.

’ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?’ என்றேன்.

‘ச்சே அப்படியெல்லாம் இல்லைடா. நிறைய பேரு இதுனால பாதிக்கபடுறாங்க. இன்னைக்கே பார்த்தல்ல எத்தனை பேருன்னு. இதோ இங்க பக்கத்தில உட்கார்ந்திருக்கிற குடும்பம் இருக்கே அவங்களும் பாதிக்கபட்டிருக்காங்க. அந்த குழந்தைய பார்த்தயா? அது என்ன பாவம் பண்ணுச்சு? நம்மளாவது இத தாங்கிற சக்தி இருக்கு. இது போல நிறைய அடிகளை வாங்கி நம்ம மனசு மறத்து போச்சுடா. அந்த குழந்தையை நினைச்சு பாருடா. ”

“ம்...” என்றவாறு அந்த குழந்தையைப் பார்த்தேன். பாவமாக தான் இருந்தது. தலையை ஒரு பக்கம் சாய்த்தே வைத்திருந்தது. கழுத்து வேறு சுளுக்கி விட்டது போல. பதட்டத்தில் இங்கும் அங்கும் தலையை திருப்பியதில் அவ்வாறு நேர்ந்திருக்கும்.

சப்பாத்தி தான் முதலில் வந்தது. யாரும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை. பத்து நிமிடம் கழித்து அனைத்தும் வந்தது. நாங்கள் இன்னும் சாப்பிடாமல் இருப்பதை கண்டு சர்வர் முழித்தவன் பின்பு அறிந்தவன் உதட்டோரம் ஒரு கேலி புன்னகையை விரித்து சென்றான். எனக்கு எரிச்சலாக இருந்தது. ஏதோ உங்களை போல் எத்தனை பேரை பார்த்திருப்போம் என்ற நோக்கில் இருந்தது அந்த புன்னகை.

வேண்டாவெறுப்பாக எட்டு பேரும் சாப்பிட ஆரம்பித்தோம். சற்று முன் ஏற்பட்ட விபரீத சம்பவத்தில் ஏதாவது ஞாபகம் வருகிறதா என்று யோசித்தேன். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. கண் தான் வலித்தது. ஏன் நிலையாக அட்லீஸ் சேர்த்தார்போல் ஒரு பத்து வினாடி கூட நிற்கவில்லை என்று தெரியவில்லை.

ஹோட்டல் மாடியின் ஜன்னல் வழியாக பார்த்த போது மக்கள் திரும்பவும் வெளியே கும்பலாக நிற்பதை கண்டபொழுது ஒரு வித பரிதாபம் தான் ஏற்பட்டது. இத்தனைக்கும் அனைவரும் படித்தவர்கள் போலிருந்தது. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். தெரிந்தே செய்வதில்லை என்று எனக்கு ஏற்பட்ட பொழுது தான் உணர முடிந்தது.

அந்த அம்மா குழந்தைக்கு ஏதோ ஊட்ட முயற்சித்தும் அது சாப்பிடமால அடம்பிடிக்க அவர் பொறுமையிழந்தவராக முதுகில் ரெண்டு அடி அடிக்க ஆரம்பித்தார். குழந்தையின் அலறல் அனைவரையும் அவர்கள் பக்கம் ஈர்த்தது.

“ஏன் மேடம் அடிக்கிறீங்க?” என்றான் என் நண்பன்

‘பின்ன என்னப்பா ஏற்கனவே எவ்ளோ கடுப்புல இருக்கோம்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். இப்ப இவளும் இங்க சாப்பிடாம அடம் பிடிக்கிறா. நான் என்ன செய்யிறது? காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடல. இங்க வரப்போற சந்தோஷத்துல எதுவுமே சாப்பிடமாட்டேன்னு சொல்லிட்டா. இப்பவும் சாப்பிடலைன்னா உடம்பு என்னத்து ஆகும்?” என்று உள்ளக்குமுறலை விடாமல் கொட்டினார். அவர் கண்ணில் நீர்கோர்த்திருந்தது. அவர் கணவர் வார்த்தைகள் அற்ற ஆறுதல் கூறும் தொனியில் அவர் கையை பற்றி இறுக்கினார்.

எங்கள் அனைவரையும் அங்கே பார்த்திருப்பார் போல. நண்பனும் சற்று ஆறுதலான வார்த்தைகளை கூறி அவனுடைய HTC மொபைலை அந்த குழந்தைக்கு காட்டி விளையாட்டு காண்பித்து சாப்பிட வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாதரணமாக நாங்கள் அந்த மொபைலை தொடும் போதே கோவப்படுபவன் ஒரு குழந்தையிடம் விளையாடக்கொடுத்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கஷ்டமான சூழ்நிலை மனிதனை எந்த அளவுக்கு பக்குவப்படவைக்கிறது. உலகம் விந்தையானது தான்.

யாரை குத்தம் சொல்வது என்று தெரியவில்லை. என் மேலும் தவறு இருக்கிறது. கடந்த இரண்டு வாரமாக நண்பனுக்கு எத்தனை தடவை போன் செய்திருப்பேன் இதற்காக?. அவன் பொறுமையை எந்த அளவிற்கு சோதித்திருப்பேன். ச்சே ஒரு இரண்டு நாள் பொறுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம்.

அழுது கொண்டே இருந்த குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். நண்பன் தன் உருண்டையான தலையை 90,180,270,360 என நான்கு டிகிரிக்கும் திருப்பி “கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ...கொக்..கொக்...கொக்...கொக்கரக்கோ.....கந்த கந்த...கந்த..கந்த...கந்தசாமி..” என கத்திக்கொண்டிருந்தான். அனைவரும் கவலையை மறந்து சிரிக்க தொடங்கினோம்.

அந்த படத்தை பார்த்தது அட்லீஸ் கொழந்த சிரிக்கறதுக்காவது யூஸ் ஆச்சே...............

தியேட்டர் உள்ளே சிரித்த சில நொடிகள்.

1. பிரபுவை க்ளோஸப் ஷாட்டில் பிண்ணனி இசை இல்லாமல் சில நொடிகள் காட்டிலாலும் தியேட்டரின் எங்காவது ஒரு மூலையில் இருந்து வரும் “என்ன கொடுமை சரவணன் சார் இது?” டயலாக்.

2. ஆங்கில டயலாக்கான ”ஃபுல்ஷிட்” என்று பிரபு சொன்ன போது தியேட்டரே சிரித்தது.

3. “நீயி ஆம்பிள்ளையே இல்லைடா” என்று ஸ்ரேயா சொன்னதுக்கு “நீ பொம்பளையே இல்லடி” என்று விக்ரம் சொல்லுவார். தியேட்டரில் ஒருவன் “எங்களுக்கும் அதே டவுட்டு தான்” என்று கத்திய போது...வேறென்ன தியேட்டரே ....கொல்

4. சி.பி.ஐ ஹெட் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா ஒய்.ஜி மகேந்திரன் கொடுத்த கேசட்டை மாற்றும் போது “என்னது இவரும் விக்ரம் க்ளாஸ்மேட்டா?” என்று யாரோ டைமிங் ஜோக் அடித்த போது.

5. வடிவேலு குளிக்கும் காட்சியின் போது (இது மட்டும் தாங்க படத்துல வர்ர சீனைப் பார்த்து சிரிச்சது....பாக்கியெல்லாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

40 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்ட்டேய்ய்ய்ய்ய் :))

ஆயில்யன் said...

//ஒரு கஷ்டமான சூழ்நிலை மனிதனை எந்த அளவுக்கு பக்குவப்படவைக்கிறது. உலகம் விந்தையானது தான்.//

மெசேஜ் - 1

ஆயில்யன் said...

//பிரபுவை க்ளோஸப் ஷாட்டில் பிண்ணனி இசை இல்லாமல் சில நொடிகள் காட்டிலாலும் தியேட்டரின் எங்காவது ஒரு மூலையில் இருந்து வரும் “என்ன கொடுமை சரவணன் சார் இது?” டயலாக்.//


இந்த சீன் அப்படின்னு இல்ல பொதுவாவே இப்ப எல்லாம் எதாச்சும் ஒரு சீரியஸ் சோக காட்சி அல்லது மெளனம் இருக்கும்போது பயபுள்ளைங்க எங்கிருந்தாவது “என்ன கொடுமை” கத்த ஆரம்பிச்சிடுதுங்க பாஸ் :)))))

கதிர் - ஈரோடு said...

//தியேட்டர் உள்ளே சிரித்த சில நொடிகள். //

பின்னீட்டீங்க...
கண்முனி விரிகிறது

ஆயில்யன் said...

//பாக்கியெல்லாம்..அவ்வ்வ்வ்வ்வ்வ்///


மெசேஜ் - 2


கந்தசாமி????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

சந்தனமுல்லை said...

ஆகா...சூப்பர் விமர்சனம்!! :)))) சேதாரம் அதிகம் போல இருக்கே!! :))))

சந்தனமுல்லை said...

//கழுத்து வேறு சுளுக்கி விட்டது போல. பதட்டத்தில் இங்கும் அங்கும் தலையை திருப்பியதில் அவ்வாறு நேர்ந்திருக்கும்.//

அவ்வ்வ்வ்வ்..இவ்ளோ சைட் எஃபெக்ட் இருக்கா?!!!

சந்தனமுல்லை said...

ஆகா..ஆயில்ஸ் பாஸ் இங்கேதான் கும்மியா இன்னைக்கு!! :-)

நிஜமா நல்லவன் said...

ஹா..ஹா..ஹா...

நிஜமா நல்லவன் said...

நல்லவேளை நான் தப்பிச்சேன்:)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இதுக்கு பேர் தான் கொலைவெறி விமர்சனமா? இதுல டிக்கெட் கிடைக்க கடவுள வேண்டிக்க சொல்லி ஜிடாக் ஸ்டாடஸ் வேற. கொய்யால வசமா கூப்ட்டு வச்சு கும்மி அடிச்சுடங்களா....

seemangani said...
This comment has been removed by the author.
seemangani said...

“கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ...கொக்..கொக்...கொக்...கொக்கரக்கோ.....கந்த கந்த...கந்த..கந்த...கந்தசாமி..”
என்ன கொடுமை ஆதவன் சார் இது?

ஜெஸிலா said...

கந்தசாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅமி கந்தல்சாமி :-)

பிரியமுடன்...வசந்த் said...

//3. “நீயி ஆம்பிள்ளையே இல்லைடா” என்று ஸ்ரேயா சொன்னதுக்கு “நீ பொம்பளையே இல்லடி” என்று விக்ரம் சொல்லுவார். தியேட்டரில் ஒருவன் “எங்களுக்கும் அதே டவுட்டு தான்” என்று கத்திய போது...வேறென்ன தியேட்டரே ....கொல்//

நானும் சிரிச்சுக்கிறேன்.......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்படி பாதிக்கப்படுவதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் பேதம் ஏது?
எல்லாம் விளம்பரத்தின் செயல்..
:) உங்க நிலைமை தேறி இருக்கிறதா? நன்றாகத் தூங்கி மீண்டும் சகஜநிலைக்கு மாறவும்.

pappu said...

உங்க ரவுசு கெட்ட ரவுசுய்யா!

எ.கொ.ச.இ?

நான் பட்ட கதைய நீங்களே பாத்துருப்பீங்க! இந்த மாதிரி கஷ்டமான காலத்தில பதிவர்கள் தங்களுக்குள்ள ஒத்துமையா இருக்கனும்.

கோபிநாத் said...

ஏன்....ஏன் இப்படி எல்லாம்...உனக்கே இது ஒவருன்னு தெரியல..!

படத்தை பத்தி முன்னாடியே தெரியாத உனக்கு!! :))

மின்னுது மின்னல் said...

எவ்வளவோ தாங்கிட்டோம் இத தாங்க மாட்டமா.. :)

அகல் விளக்கு said...

நானும் பார்த்தேன் அந்த கொடுமைகளை...

என்ன செய்வது விதி வலியது...

☀நான் ஆதவன்☀ said...

@ஆயில்ஸ்

பாஸ் மெசஜ் சொன்னேன்னு எனக்கே தெரியல. ஆனா உங்களுக்கு தெரிஞ்சிருக்கே. ஞானிகளுக்கு தான் சொல்றதோட மதிப்பு தெரியாதுங்கிறது உண்மை தான் போல :)
----------------------------------
@கதிர்

அவ்வ்வ் எல்லாம் கண்முன் விரிகிறதா கதிர்? நாங்க கத்துனது கதறுனது எல்லாம்? நன்றி கதிர்
-----------------------------------
@சந்தனமுல்லை

வாங்க சந்தனமுல்லை. இந்த சைட் எஃபெக்ட் எல்லாம் ஜூஜூபி. உள்காயம் நிறைய இருக்கு :(

☀நான் ஆதவன்☀ said...

@நிஜமா நல்லவன்

ஆமா நல்லவன் எங்கள மாதிரி ஆளுங்களால நீங்க தப்பிச்சீங்க :)
-------------------------------------
@பாலகுமார்

ஆகா பாலகுமார் இது உங்க சாபம் தானா. அவ்வ்வ்வ் இதுல ஒரு சந்தோஷம் என்னான்னா நீங்க இன்னைக்கு இந்த படத்துக்காக ரிசர்வ் பண்ணிட்டேனு சொன்னீங்களே அது தான் :)
-----------------------------------
@சீமான்கனி

ஆமா கனி...ரொம்ப கொடுமை தான் :(

☀நான் ஆதவன்☀ said...

@ஜெஸிலா

ஜெஸிலா நீங்க ஜஸ்ட் மிஸ். அன்னைக்கு மட்டும் டிக்கெட் கிடைச்சிருந்தா நீங்களும் பலிகடா தான் :)
-------------------------------------
@வசந்த்

வாங்க வசந்த். இங்கேயே சிரிச்சுகங்க. தியேட்டர்ல போய் சிரிக்கலாம்னு நினைக்காதீங்க :)
-----------------------------------
@முத்துலட்சுமி

அக்கா சின்னதா கேப் கிடைச்சா இப்படி வாருறீங்களே. நான் அந்த இடத்துல சொல்ல வந்தது திரைவிமர்சனம் படிச்சவங்க. அத அப்படியே சொன்னா சுவாரஸியம் குறைச்சுருமேன்னு படிச்சவங்கன்னு சொன்னேன்(அவ்வ்வ்வ்வ்வ்வ்).

உடம்பு இப்ப பரவாயில்லக்கா.
-----------------------------------
@பப்பு

ஆமா பப்பு இந்த விசயத்துல ஒத்துமை அவசியம் தான் :)

ஆமா அதென்ன எ.கொ.ச.இ?

☀நான் ஆதவன்☀ said...

@கோபிநாத்

ஹி..ஹி என்ன செய்யிறது தல. எல்லாம் படத்தை விமர்சனம் பண்ணி கிழிச்செடுத்துட்டாங்க. அதான் கொஞ்சம் டிப்ரெண்டா பண்ணலாம்னு... :)
------------------------------------
@மின்னுது மின்னல்

பாஸ் உங்களூக்கு கல் நெஞ்சு பாஸ் :)
-----------------------------------
@அகல் விளக்கு

நீங்களுமா?அவ்வ்வ்வ்வ்வ். இப்ப உடம்பு பரவாயில்லையா?

கலையரசன் said...

அம்மாஞ்சொல்லியும் நீ அடங்கலியேப்பபபபா!!!

கலையரசன் said...

உனக்கு ஒரு பயலும் ஓட்டு போடலியே ஏன்பா?
சூனியம் வச்சிகிட்டியா?

ச.செந்தில்வேலன் said...

இவ்ளோ மோசமாகவா இருந்தது? ஆழ்ந்த அனுதாபங்கள்.

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

என்ன செய்யிறது. உங்களுக்கு நான் கைட் பண்ண மாதிரி எனக்கு யாரும் பண்ணல கலை :(

//உனக்கு ஒரு பயலும் ஓட்டு போடலியே ஏன்பா?
சூனியம் வச்சிகிட்டியா?//

அதுதன் எனக்கும் தெரியல. ஆக்சுவலா இது தமிலிஷ்ல வரவே இல்லை. தேடி தேடி பார்த்துட்டேன். எதே பிரச்சனைன்னு நினைக்கிறேன். ஒரு வேளை நம்ம வொர்த்தே அவ்வளவு தான் போல கலை.

@செந்தில்வேலன்

அவ்வ்வ்வ்வ்...அனுதாபங்களுக்கு நன்றி செந்தில்

இளைய பல்லவன் said...

அண்ணே சேவலோட கொக் கொக் ரொம்ப ஓவர் போல இருக்கே...

ரியாக்ஷன் பயங்கர சுடிராங்கா இருக்கே...

thagavalkaran said...

kandasamy parthu nonthasamyya neenka?

அகல் விளக்கு said...

யாரும் கவலைபடாதீங்க......

நாம ஒரு சங்கம் ஆரம்பிச்சிடலாம்....

"கந்தசாமியை பார்த்து நொந்தசாமிகள் சங்கம்"

தலீவர் நீங்கள்தான்.

Vijay said...

நான் தனி ஆளு இல்லை; எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு என்று சொல்ல எனக்கு ஒரு பஞ்ச் ரெடிங்கோவ்! :)))
என் அனுபவத்தையும் கொஞ்சம் கண்duட்க்கோங்க!!!

Saravanan Renganathan said...

:-)

ஆவ்வ்வ்வ் ...........ஆழ்ந்த அனுதாபங்கள் !!
இந்த மாதிரி சமயங்கள்ல மனசு ஒடைஞ்சுட கூடாது.....

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

அழுது கொண்டே இருந்த குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டு திரும்பினேன். நண்பன் தன் உருண்டையான தலையை 90,180,270,360 என நான்கு டிகிரிக்கும் திருப்பி “கொக்...கொக்...கொக்....கொக்...கொக்கரக்கோ...கொக்..கொக்...கொக்...கொக்கரக்கோ.....கந்த கந்த...கந்த..கந்த...கந்தசாமி..” என கத்திக்கொண்டிருந்தான். அனைவரும் கவலையை மறந்து சிரிக்க தொடங்கினோம்.///

நல்ல நகைச்சுவை
இது மொக்கை பட மாதம் போல
ஒட்டுக்கள் போட்டாச்சு

☀நான் ஆதவன்☀ said...

@பல்லவன்

அண்ணே இது ரொம்ப கம்மிண்ணே. படத்தை இனி யாரும் ரொம்ப எதிர்பார்க்காம இருக்க தான் இவ்ளோ ஸ்ட்ராங் :)
-------------------------------------
@அகல்விளக்கு

ஓக்கே டன். தலைவர் நான் தான். கொ.ப.செ நீங்க. ஓக்கேவா? :)
-----------------------------------
ஆமா தகவல்காரன் :)
----------------------------------
@விஜய்

அவ்வ்வ்வ்வ்.... உங்க நிலைமையும் கொஞ்சம் மோசமாதான் இருக்கு போல :)
----------------------------------
@சரவணன் ரங்கராதன்

ஆறுதலுக்கு நன்றிங்க :)
----------------------------------
வாங்க கார்த்திகேயன். நன்றி

ஸ்ரீமதி said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நீயுமா அண்ணா?? :)))))))))

நாடோடி இலக்கியன் said...

அருமை அருமை.

வித்தியாசமான விமர்சனம்.

☀நான் ஆதவன்☀ said...

ஆமாம் ஸ்ரீமதி. :)
--------------------------------
நன்றி இலக்கியன்

jaisankar jaganathan said...

//"கந்தசாமியை பார்த்து நொந்தசாமிகள் சங்கம்"
//

னானும் இதில் சேர்ந்து கொள்கிறேன்.

கிளைமாக்ஸ் மாதிரி காமடி உலகத்தில் இல்லை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

:)))))))))))))))))

Related Posts with Thumbnails