”குவிக் கன் முருகன்”-பஞ்சாமிர்தம்

தமிழன் இல்லாத இடமே கிடையாது. தமிழனோட காலடி படாத இடமே கிடையாதுன்னு ஒரு யார்கிட்ட வேணா சொல்லலாம். இந்த சேட்டன்மார்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க.

இரண்டு வாரத்துக்கு முன்னால ஒரு வீக் எண்ட் ஏண்டா இந்த பேச்சை தொடங்கினோம்னு ஆகிடுச்சு. சுத்து போட்டு கும்ம ஆரம்பிச்சுட்டாங்க. எங்க ஆளுங்க அங்கே இருக்காங்க..இங்கே இருக்காங்கன்னு இத்தனை சதவிகதம் இருக்காங்கன்னு ஒரு லிஸ்டே வர ஆரம்பிச்சுது.

இதுல நிலாவுல ஆம்ஸ்ட்ராங் போனப்ப நாயர் கடையில டீ குடிச்சாருன்னு மொக்க சோக்குலெல்லாம் நிறைய விழுந்ததை தட்டி விட்டுகிட்டே நானும் விடாம பேச......கடைசியில அவங்க கேட்ட ஒரு கேள்வி எனக்கு பதிலே பேச முடியாம என்னோட தோல்வியை ஒத்துக்க வேண்டியதா போச்சு.

பாகிஸ்தான்ல தமிழர்கள் இருக்காங்களா?ன்னு கேட்டாங்க. தெரியலைன்னு சொன்னேன். பாவிமக்கா அங்க ஆயிரத்துக்கும் மேல மலையாளிகள் இருக்காங்களாம்.

நம்பாம கூகுள்ல அடிச்சப்ப ஒன்னுரெண்டு வருது. சரி நமக்கு தெரியாம தமிழர்கள் கூட அங்க இருக்க வாய்ப்பிருக்குன்னு கூகுளாண்டவர்கிட்ட வேண்டிகிட்டு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இல்லைன்னு தான் சொல்றாரு கூகுளாண்டவர்.

பாகிஸ்தான் பிரிஞ்சு போனப்ப கேரளாவில் இருந்து நிறைய முஸ்லீம்கள் அங்க போனதா சேட்டன்மார்கள் சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மைனு தெரியல. தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா.
-------------------------------------------------------------------------------------------------
ஒரு பறவை வியாபாரிகிட்ட பறவை வாங்க ஒருத்தர் ஒரு கூண்டுல இரண்டு கிளியும்,ஒரு காக்காவும் இருப்பதை பார்த்துட்டு இந்த கிளி எம்புட்டு கேட்க “அஞ்சாயிரம்” சொன்னவுடனே ஷாக்கான அவர் அப்படி என்னையா இந்த கிளிகிட்ட ஸ்பெஷல்?னு கேட்டாரு. இந்த கிளி MS office எல்லாம் தெரியும் நல்லா வேலை செய்யும்னு கடைகாரர் சொன்னாரு.

இரண்டாவது கிளி என்ன விலைன்னு அவர் கடைக்காரரிடம் கேட்க “பத்தாயிரம்”னு பதில் வந்தது. ஆச்சர்யமான அவர் அப்படி என்ன இந்த கிளிகிட்ட ஸ்பெஷல்னு கேட்டார். இந்த கிளிக்கு MS office மட்டும் இல்ல நல்லா படம் வரையும், ஆட்டோகேட் மட்டுமில்லாம நிறைய சாப்ட்வேர் தெரியும். சூப்பரா சொன்ன வேலைய செய்யும் அப்படின்னாரு.

இந்த காக்கா என்ன விலைன்னு கேட்டாரு. “இருபத்தஞ்சாயிரம்”னு பதில் வந்தது. பயங்கரமா ஷாக்கான அவர் “இந்த காக்காவுக்கு ஏன்யா இம்புட்டு ரேட்டு. அப்படி என்ன தெரியும் இந்த காக்காவுக்கு” கேட்டாரு வாங்க வந்தவரு. அதற்கு வியாபாரி “எனக்கும் அதான் தெரியல. இது ஒரு வேலையும் செஞ்சு பார்த்ததில்லை. ஆனா மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்படிக்கு

ரெண்டாவது அழகான கிளி
நான் ஆதவன்
-------------------------------------------------------------------------------------------------
ரம்பா ஒரு ஆங்கில படத்துல நடித்திருக்கிறதா போன வாரம் தினமலர் சைட்ல பார்த்தேன். ஸ்லம்டாக் மில்லினரி படத்தோட டிஸ்ட்ரிபியூட் தான் இந்த படத்தையும் டிஸ்ட்ரிபியூட் பண்றாங்க. தெலுங்கு நடிகர் ராஜேந்திரபிரசாத் தான் ஹீரோ. படத்தோட பேரு “க்விக் கன் முருகன்”. நாசர், ராஜிசுந்தரம் இன்னும் நிறைய தமிழ் நடிகர்கள் கூட நடிச்சிருக்காங்க.

தென்னிந்திய படங்களை பயங்கரமா கிண்டல் பண்ணியிருக்காங்க. ஹீரோ கௌபாய் கெட்டப் தான். படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,ஆங்கிலம்ன்னு எல்லா மொழியிலையும் வருது. ஷாருக்கானோட ’ஓம் சாந்தி ஓம்’ படம் பார்த்தவங்க அதுல அவர் தமிழ் படத்துல நடிக்கிறேன்னு “மைண்ட் இட்”னு டயலாக் சொல்லிட்டு ஒரு கெட்டப்ல வருவாருல்ல...அதே தான்.

இந்த டிரைலரை பார்த்துட்டே பயங்கரமா சிரிப்பு வருது. படத்துக்காக வெயிட்டிங். படம் பார்த்துட்டு எல்லோரும் சிரிச்சாலும் தென்னிந்திய படங்களை கிண்டல் செய்திருக்கறதுனால பிரச்சனையும் சந்திக்கலாம்.

பப்பு தன்னோட பதிவுல இந்த படத்தோட டிரைலரை போட்டிருந்தார். தமிழ் வெர்ஷன் கிடைக்குமான்னு தேடி பார்த்தேன். கிடைக்கல. நீங்க தேடி பாருங்க கிடைச்சா லின்ங் கொடுங்க. இப்போதைக்கு ஹிந்தி பட டிரைலர் மட்டும். இதுல கடைசியில வர தமிழ் டயலாக்க மிஸ் பண்ணாங்க. என்சாய்ய்ய்ய்ய்-------------------------------------------------------------------------------------------------
ஆதவனோட “என் பெயர் ராமசேஷன்” புத்தகம் படிச்சேன். மேல் தட்டு மக்கள் காட்டும் பாசாங்கும்,மிடில் க்ளாஸ் குடும்பத்தினரின் முகமூடிகளும், பாசாங்களும் அப்படியே சொல்லியிருக்கார் ஆதவன்.

கதாநாயகன் ராமசேஷனை சுற்றி இருக்கும் அனைவரும், இதில் அவன் அம்மா, தங்கை,அத்தை என எல்லா உறவு முறைகளும், நண்பர்களும் ஒரு வித முகமூடிகளுடனும், தங்களை இச்சமுதாயத்தில் நிலை நிறுத்திக்கொள்ளும் நோக்குடன் பழகும் முறையுமே கதை. ஆனால் இக்கதையை படிக்கும் இது அவனை சுற்றிமட்டுமல்ல நம்மை சுற்றியும் நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருப்பதை உணர முடிகிறது. கதையோடு சேர்ந்த இளமையின் துள்ளல்கள் படிக்கும் ஆர்வத்தை மேலும் கூட்டுகின்றது :)

கதை முழுதும் ஊறிப்போன சம்பிரதாயங்களையும், போலி மனிதர்களையும் சாடி விட்டு முடிவில் அம்முகமூடியை கதையின் நாயகனுக்கு அணிவிப்பது போல் முடிப்பது மெலிதான புன்னகையை வரவழைக்கிறது.

இக்கதை இப்போது எந்த வித சஞ்சலமும் ஏற்படுத்த வில்லையென்றாலும் கதை வந்த காலகட்டத்தில் நிச்சயம் படிப்பவர்கள் மனதில் ஒரு வித அதிர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பதை உணரமுடிகிறது. இப்புத்தகத்தை படிப்பவர்கள் இனி ஆதவனின் புத்தகங்களை தேடித் தேடி படிப்பது உறுதி.

31 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அக்மார்க் பஞ்சாமிர்தம்
//இப்படிக்கு
ரெண்டாவது அழகான கிளி
நான் ஆதவன்//
"நெனப்பு பொழப்ப கெடுத்துச்சாம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
கந்தசாமிக்கு டிக்கெட் கிடச்சதா?
இல்லையா
இப்படிக்கு
டேமேஜர் மண்டைல ஆப்பாயில் போடுவோர் சங்கம்

நாஞ்சில் நாதம் said...

:))

ஆயில்யன் said...

//பாகிஸ்தான்ல தமிழர்கள் இருக்காங்களா?ன்னு கேட்டாங்க. தெரியலைன்னு சொன்னேன். பாவிமக்கா அங்க ஆயிரத்துக்கும் மேல மலையாளிகள் இருக்காங்களாம்.//

இது நெசம்தான் பாஸ் அதுமட்டுமில்ல அங்க சுதந்திரத்துக்கு முன்னாடியே போய் செட்டிலான ஆளுங்களும் உண்டாம்! :)

ஆயில்யன் said...

//உங்கள் "பொக்கிஷ" கருத்து///


ஆஹா அப்ப கருத்து சொல்றதையும் சேரன் படப்பேரை வைச்சு காமெடி பண்றாங்கப்பா :((

ஆயில்யன் said...

//மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அடப்பாவி மக்கா பாவம்ம்ய்யா அந்த டேமேஜரு :(

ஆயில்யன் said...

//மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஒண்ணும் தெரியாமலே உங்களையெல்லாம் கட்டி மேய்க்கிறாரே எல்லாம் தெரிஞ்சிருந்தா என்னாவாயிருக்கும் நினைச்சுப்பாருமோய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

///இப்போதைக்கு ஹிந்தி பட டிரைலர் மட்டும். இதுல கடைசியில வர தமிழ் டயலாக்க மிஸ் பண்ணாங்க. //

நானும் முதன் முதலா இந்த ஹிந்தி டிரெயிலர்தான் பார்த்தேன் லாஸ்ட் பேசுற தமிழ்தான் டாப்பு :)))

நிறைய இருக்கு குயிக் கன் முருகன் போட்டு ஆராயஞ்சாலே ஏகப்பட்ட் லிங்க் வந்து வுழுது பாஸ் :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

அன்பு நண்பர் நான் ஆதவன் அருமையான பதிவிட்டமைக்கு நன்றி

பாகிஸ்தானில் தமிழர்கள் இருக்கிறார்களா?
என்பது தெரியாது.
ஆனால் ஹிந்துக்கள் இருபது சதம் உள்ளனர்.

இப்போது யார் பாகிஸ்தான் சென்று வந்தாலும் பயங்கர வாதியாகத்தான் பார்க்கப்படுவர்.
நம் அரசியல் வியாதிகள் இப்படி ஆக்கி வைத்துள்ளனர்.

இங்கு வேலை செய்யும் பாகிஸ்தானியரை காணும் போது இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தான் தோன்றுகிறது.உங்களுக்கும் தெரியும்.

அதுவும் இல்லாமல் தமிழன் என்றாலே அவர்களுக்கே நடுக்கம் உண்டு
(மாவீரர் பிரபாகரன் புண்ணியம் )
மலையாளிகளுக்கு அந்த கவுரவம் இல்லை.

llஇது ஒரு வேலையும் செஞ்சு பார்த்ததில்லை. ஆனா மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ல்
நல்ல பினிஷ்

யோவ் :-
சரியான காமெடி டிரைலர்
துப்பாக்கி கீழ போடுறா?
சூபரப்பு.................

இந்த மாதிரி படங்களையெல்லாம் கூட நிறைய எடுக்கலாம்
அப்போதுதான் வழமையான சம்பிரதாயங்கள் உடைபடும்.

நம்ம பேய்க்காமன் இன்ச்பெக்டேரும் இருக்காருங்க.

ஆதவன் புக்கை எனக்கு கொடுத்து செல்லவும்
படித்து விட்டு கொடுக்கிறேன்.

நல்ல பதிவுய்யா....................வோட்டுக்கள் போட்டாச்சு

வானம்பாடிகள் said...

யப்பா தாங்கல சாமிகளா. :)))

மங்களூர் சிவா said...

very nice panchamirtham
:))

அகல் விளக்கு said...

//இது ஒரு வேலையும் செஞ்சு பார்த்ததில்லை. ஆனா மத்த ரெண்டு கிளியும் இந்த காக்காவை “பாஸ்” “டேமேஜர்”ன்னு தான் கூப்பிடுதுங்க”னாரு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

சேம் பீலிங்..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

சந்தனமுல்லை said...

கிளி - LOL! நீங்க ரெண்டாவது கிளியா..ஹ்ம்ம்..புத்தகம் பற்றிய பகிர்வுக்கு நன்றி!

பஞ்சாமிர்தம் - சூப்பர்! :-)

சந்தனமுல்லை said...

// ஆயில்யன் said...

//பாகிஸ்தான்ல தமிழர்கள் இருக்காங்களா?ன்னு கேட்டாங்க. தெரியலைன்னு சொன்னேன். பாவிமக்கா அங்க ஆயிரத்துக்கும் மேல மலையாளிகள் இருக்காங்களாம்.//

இது நெசம்தான் பாஸ் அதுமட்டுமில்ல அங்க சுதந்திரத்துக்கு முன்னாடியே போய் செட்டிலான ஆளுங்களும் உண்டாம்! :)//

ஆமா..பாஸ்..மலையாளிஸ் பத்தி ஏதாவது தெரியனும்னா எங்க ஆயில்ஸ் பாஸை கேளூங்க!! :))

கலையரசன் said...

முருகனையும் காமிச்சு பஞ்சாமிர்தமும் குடுத்துட்ட... அருமை!

ஆபீஸ் டயம்ல வேலை செய்ய சொன்னா.. அனிமேசன் பண்றதும், போன் போட்டு பிளாக்கர் கிட்ட ராவுரதும் இந்த இரண்டாவது கிளிக்கு வேலையா போச்சு!

இப்படிக்கு,
காக்கா பாஸ் கலையரசன்

pappu said...

துப்பாக்கி கீழ போடுடா... ழ...ழ... ழ...கீழ... சான்ஸே இல்ல.... டுமீல்


theaterical trailer tamil nuநான் youtubeல பாத்தேன். தேடுங்க!

நான் க்விக் கன்னோட ஃபேன் ஆயிட்டேன். mind it.

கோபிநாத் said...

தற்கொலையை பற்றி எப்போ பதிவு வரும்!!!? ;))

பிரியமுடன்...வசந்த் said...

டேஸ்டான பஞ்சாமிர்தம்

பிரியமுடன்...வசந்த் said...

நான் இருக்குற கத்தார் ,

துபாய் இப்பிடி வளைகுடா நாடுகளில தான் பட்டிகளின் தொல்லைனா

பாகிஸ்தானிலுமா?

நல்ல வேளை....

மாயா said...

"குவிக் கன் முருகன்” தொடர்பான திரைக்கண்ணோட்டம் மற்றும் டிரைலர் இங்கே காணலாம்....

☀நான் ஆதவன்☀ said...

@பாலா

நன்றி பாலா. கந்தசாமி போனேன். நொந்துபோய் வந்திருக்கேன் பாலா :(
------------------------------------
@ஆயில்ஸ்

பாஸ் எங்களையெல்லாம் பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையா? எங்க டேமேஜரைப் பார்த்து பாவப்படுறீங்க.

அப்புறம் பாகிஸ்தான்ல மலையாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி பாஸ் :)
-----------------------------------
@கார்த்திகேயன்.

கார்த்தி ரொம்ப நன்றி. புக் அடுத்த தடவை மீட் பண்ணும் போது தருகிறேன்.
-----------------------------------
நன்றி வான்ம்பாடிகள்
-----------------------------------
நன்றி சிவா

☀நான் ஆதவன்☀ said...

@அகல்விளக்கு

வாங்க அகல்விளக்கு. கருத்துக்கு நன்றிகள்
-------------------------------------
@சந்தினமுல்லை

அட ஆமாங்க நான் ரெண்டாவது கிளி தான் :)

அப்ப ஆயில்ஸூம் சேட்டனா? அவ்வ்வ்வ்
-----------------------------------
@கலையரசன்

கலை உன்னோட போன்ல பேசுனது இப்படி பப்ளிக்கா எல்லாம் சொல்லப்படாது :)

நீங்க காக்காதான்கிற ஒத்துகிட்டதுக்கு நன்றி கலை :)

☀நான் ஆதவன்☀ said...

@பப்பு

வாங்க பப்பு. ரொம்ப நன்றி. திருப்பி தேடிப் பார்க்கிறேன் “மைண்ட் இட்”
-------------------------------------
@கோபிநாத்

தல..அத இன்னைக்கே போட்டுறேன் :)
-------------------------------------
@ப்ரியமுடன்...வசந்த்

நன்றி வசந்த்
-----------------------------------
@ மாயா

நன்றி மாயா. லின்ங் கொடுத்ததற்கு :)

இளவட்டம் said...

//தமிழ் வெர்ஷன் கிடைக்குமான்னு தேடி பார்த்தேன்///.இட்லி வடை ப்ளோக்ல பொய் பாருங்க ஆதவன்...தமிழ் வெர்ஷன் ட்ரைலர் கிடைக்கும்.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி இளவட்டம். பார்க்கிறேன்

இளைய பல்லவன் said...

கிளி கொஞ்ச நாள்ல காக்காவாயிடப்போகுது. அப்ப பாக்கலாம்.
====

குவிக் கன் முருகன் நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன். 28ம் தேதி ரிலீசாகுது

==

பாகிஸ்தான்ல இருக்குற இந்து ரிபோர்ட்டர் நிருபமா சுப்பிரமணியன் தமிழா??

☀நான் ஆதவன்☀ said...

//கிளி கொஞ்ச நாள்ல காக்காவாயிடப்போகுது. அப்ப பாக்கலாம்.//

வாழ்த்துகளுக்கு நன்றி பல்லவன் :)

//பாகிஸ்தான்ல இருக்குற இந்து ரிபோர்ட்டர் நிருபமா சுப்பிரமணியன் தமிழா??//

அட அவுங்க இங்கிருந்து ரிப்போர்டர் வேலைக்காக அங்க போயிருக்கலாம் பல்லவன். இருந்தாலும் நெட்ல தேடி பார்க்கிறேன்

.:: மை ஃபிரண்ட் ::. said...

kili, kaakkaa kathai arumai.

:-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

ada.. pakistanle malayaleegal irukkangga, thamizhargal orutharkoode illainggirathu ennaale namba mudiyavillai. aanaalum thagavalukku nandri. :-)

jailani said...

1995ல் நான் ரியாத்தில்(சவுதி அரேபியா )இருக்கும் போது தினமும் மாலை 4.30 லிருந்து 5மனி வரை ரேடியோவில் ((ஷார்ட் வேவ்‍‍‍‍‍‍‍ தற்போது நெம்பர் மறந்து விட்டது))காஷ்மீர் தமிழர்கழுக்காக என்று தமிழில் சினிமா மற்றும் தமிழ் பெயர்கள் வரும்.முதல் நாள் முதல் தடவை அது நான் இந்தியா காஷ்மீர் என்று தான் நினைத்தேன்.ஆனால் நிகழ்சி முடியும் போது பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று முடிந்ததை கண்டு ஒரு வினாடி அதிர்ந்தேன்.பிறகு தான் தெரிந்தது அது பாக்கிஸ்தானில் வாழும் காஷ்மீர் தமிழ்ர்கழுக்காக என்று.அதனால் நெஞ்ஜை நிமிர்த்தி சொல்லுங்கள் தமிழ்ர்கள் பாக்கிஸ்தானிலும் வாழ்கிறார்கள்..

jailani said...

1995ல் நான் ரியாத்தில்(சவுதி அரேபியா )இருக்கும் போது தினமும் மாலை 4.30 லிருந்து 5மனி வரை ரேடியோவில் ((ஷார்ட் வேவ்‍‍‍‍‍‍‍ தற்போது நெம்பர் மறந்து விட்டது))காஷ்மீர் தமிழர்கழுக்காக என்று தமிழில் சினிமா மற்றும் தமிழ் பெயர்கள் வரும்.முதல் நாள் முதல் தடவை அது நான் இந்தியா காஷ்மீர் என்று தான் நினைத்தேன்.ஆனால் நிகழ்சி முடியும் போது பாக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று முடிந்ததை கண்டு ஒரு வினாடி அதிர்ந்தேன்.பிறகு தான் தெரிந்தது அது பாக்கிஸ்தானில் வாழும் காஷ்மீர் தமிழ்ர்கழுக்காக என்று.அதனால் நெஞ்ஜை நிமிர்த்தி சொல்லுங்கள் தமிழ்ர்கள் பாக்கிஸ்தானிலும் வாழ்கிறார்கள்..

jailani said...
This comment has been removed by the author.
Related Posts with Thumbnails