”குளிக்க வாரீகளா”

எச்சரிக்கை: முக்கியமான வேலையில் இருக்கும் போதோ, டேமேஜர் மேல் கோவத்தில் இருக்கும் போதோ, ரிலாக்ஸ் செய்யும் போதோ, சந்தோசமாக இருக்கும் போதோ, துக்கத்தில் இருக்கும் போதோ, ரொமாண்டிக் மூடில் இருக்கும் போதோ, காலம் பொன் போன்றது எனக் கொள்கை கொண்டவரோ இப்பதிவைப் படிக்க வேண்டாம் என கம்பனியின் சார்பில் எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மகா மொக்கையான, சொட்டையான, தட்டையான பதிவு இது.

”பின்ன எப்பத்தான்யா படிக்கிறது?” என்று டென்ஷன் ஆகுபவர்கள் கண்டிப்பாக படிக்கலாம்.

குளிக்கிறதுன்னாலே பல பேருக்கு குஷியாகிடும். பல பேருக்கு ஸ்டொமக் ப்ராளத்துல சிக்கி கிட்ட மாதிரி மூஞ்சி கோணலா போயிரும். குளியல்னா சாதாரணம் கிடையாது..... அது ஒரு ஸ்பெஷல் மசாலா.

பல வீடு இருக்குற குடியிருப்புல எல்லா வீட்டுக்கும் சேர்த்து ஒரு பாத்ரூம் தான் இருக்கும். என்ன தான் குளிப்பதற்கு வெறுப்பாக இருந்தாலும் நாலு வீட்டுக்கு கேட்கிற மாதிரி “அம்மா நான் குளிக்க போறேன்”னு சத்தம் போட்டுக்கொண்டே நாம் சுத்தமாக இருப்பதை விளம்பரம் செய்துவிட்டு உள்ளே ஒரு கப்பு தண்ணீரை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஒன்னரை மணி நேரமாக “ச்சே குளிச்சு தான் ஆகனுமா?” என்று யோசிப்பர் சிலர்.

பெரும்பாலும் சாயங்காலம் தனக்கு வருகிற போன் கால்களை எடுக்காமல் பின்பு போன் செய்து “இல்லடா குளிச்சுட்டு இருந்தேன். அதான் எடுக்கல” என்று வலுகட்டாயமாக காரணத்தை சொல்லி “என்னது நீ சாயங்காலமும் குளிப்பயா” என்று எதிர் முனையில் ஆச்சர்யத்துடன் கேட்கும் போது அவர்கள் முகத்தில் பெருமை பொங்கும். “ஆமாண்டா....இல்லைன்னா உடம்பு கச கசன்னு இருக்கும்” என்பார்கள்.

பலபேருக்கு குளிக்கும் போது பாடும் பழக்கம் இருந்து வருகிறது. இதொன்றும் தவறில்லை என்றும். மெசொப்பொத்தொமிய நாகரீகத்தில் இருந்து இப்பழக்கம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. (இதை எளிதாக கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் வயசு பிள்ளைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் குளிக்க போனால் ஏன் பல மணி நேரம் ஆகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்க இயலாதது புரியாத புதிராகவே உள்ளது. பல நாட்டு அறிவியல் அறிஞர்களும் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு இன்னமும் முடிவு தெரியாமல் திண்டாடுவதாக கேள்வி.)

ஆனால் பாடும் போது ஹாலில் உள்ள டிவியிம் சப்தம் அதிகரித்தாலோ அல்லது பொது குளியலறையில் குளிக்கும் போது “எடுபட்ட பய” “கட்டையில போறவன்” என்ற வார்த்தைகள் கேட்டாலோ கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடனடியாக உங்கள் குரல் வளத்தை செல்போனில் பதிவு செய்து கேட்கவும். அவ்வாறு கேட்கும் போது உங்கள் வாய் “எடுபட்ட பய” “கட்டையில போறவன்” என்ற வார்த்தையை உங்களை அறியாமல் உபயோகித்தால் பொதுநலம் கருதி பாடாமல் இருப்பது நல்லது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஏத்த மாதிரி குளியல்ல பலவகை உண்டு. 1.அழுகாச்சி குளியல், 2.அழுக்குதீர குளியல் 3.ஆனந்த குளியல், 4.காக்கா குளியல், 5.’தேமே’ குளியல், 6.அமாவாசை குளியல்.

1.அழுகாச்சி குளியல்: இந்த வகை குளியல பத்தி அதிகமா சொல்ல விரும்பல. ஒரே அழுகாச்சியா இருக்கும். பெரும்பாலும் ஒரு ஆறு இல்லைன்னா ஏழு வயசுக்குள்ள நடக்குற விசயமா இருக்கும். காலங்காத்தால எழுந்திருச்சவுடனேயே “சோறு எங்கே?” கேட்குற ஆளுகிட்ட “போய் பல்லு தேயி, குளி”ன்னு கண்டிசன் போட்டா எப்படி அவன் குளிப்பான். முதுகில ரெண்டு தட்டு தட்டி அரைஞான் கயிறை பிடிச்சு இழுத்துட்டு போய் கதற கதற குளிப்பாட்டுறது தான் இதோட ஸ்பெஷல்.

2.அழுக்கு தீரக்குளியல்: கோலி,காத்தாடி,பம்பரம்,கிரிக்கெட்,ஃபுட்பால்,ஐஸ் பாய், ஏழு கல்,திருடன் போலீஸ்,குழி பந்து இந்த மாதிரி ஆடிட்டு வந்தோம்னா முதுகுல “பளீர்”ன்னு ஒன்னு போட்டு நாரை எடுத்து நாம வெள்ளை ஆகுற வரைக்கும் தேய்ச்சு குளிப்பாட்டுவாங்க.

3.ஆனந்த குளியல்: ரொம்ப முக்கியமான இடத்துக்கு வந்திருக்கோம். இது முக்கியமா வீட்டுல ஷவர், அருவியில, மோட்டார் பம்பு செட்ல, கம்மாயில, ஆத்துல, கொளத்துலன்னு குளிக்கிறது. பெரும்பாலும் டீன் ஏஜ்ல நடக்குற குளியல். இந்த சைட் ரொம்ப டீசண்டானதுனால அஜால், குஜால் மேட்டரெல்லாம் கிடையாது. போனா போகுது ஒரே ஒரு படம்.4.காக்கா குளியல்: வெறும் வாயில வெங்காயத்த கடிச்ச மாதிரி மூஞ்சிய வச்சுகிட்டே குளிக்க உள்ள போய் உடனே திரும்பி வந்திடுவாங்க. வரும் போதே துண்டால தலைய துடைச்சுகிட்டே வருவாங்க. அதுக்குள்ள குளிச்சிட்டயான்னு யாராவது கேட்டாங்கன்னா “பின்ன வெளியவா குளிக்க முடியும்”னு மொக்கை சோக்கு சொல்லி சமாளிப்பார்கள். பெரும்பாலும் அவசரமாக ஆபிஸ் போறவங்களுக்கு தான் இந்த குளியல்.

5.’தேமே’ குளியல்: குளிப்பதை ஒரு கடமையாக செய்து வருவது ‘தேமே’ குளியல். ரிட்டயர்ட் ஆகியவர்கள் இவ்வகை குளியல் செய்வதை காணலாம்.

6.அமாவாசை குளியல்: இதுக்கு விளக்கம் வேணுமா என்ன? வயசானவர்கள் இவ்வகை குளியலில் ஈடுபடுவர்.

குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

1. பாட்டு பயிற்சி பெற குளியலறை முக்கிய பங்கு வகிக்கிறது.

2. எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது “கறி” சோறு கிடைக்க வாய்ப்புள்ளது.

3. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சும்மா “டைம் பாஸ் செய்யலாம்”

4. ஆபிசுக்கு லேட்டாக செல்லுபவர்கள் “ஏன் லேட்டு?” என்ற கேள்விக்கு “குளிச்சுட்டு வர லேட்டாகிடுச்சு” என்று பெருமையை பறைச்சாற்றலாம்.

5. ”ஆத்தா நான் குளிக்க போறேன்” என்று ஏரியா முழுவதும் கூட கர்வத்தோடு பறைசாற்றலாம்.

6. முதுகு தேய்த்து விட ஆள் கிடைக்க வாய்ப்புண்டு.

குளிப்பதனால் ஏற்படும் தீமைகள்:

1. தண்ணீர், சோப்பு, ஷாப்பு என அனைத்து பொருட்களுக்கும் பணம் தேவை படுகிறது.

2. நேரம் விரயமாகிறது.

3. குளித்த பிறகு தலையை துவட்டும் பணி ஒன்று சேர்ந்து விடுகிறது

4. குளியலறையில் வழுக்கி விழ வாய்ப்புள்ளது.


இன்னும் நிறைய விசயங்கள் உள்ளது. “குளியல்” பற்றிய ஆராய்ச்சி மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.

42 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயா சாமி.. முடியல.. குளியல்ல இப்படி ஒரு ஆராய்ச்சியா? நடாத்துங்க..

Bala Kumaran said...

வணக்கங்கண்ணா..
//அஜால், குஜால் மேட்டரெல்லாம் கிடையாது//
இன்னு சொல்லிட்டு நமீதா படத்த போட்டருகிங்க.
உங்க குளியல் வகை, நன்மை, தீமைகள்...
சரியான சதுர மொக்கை.
நடக்கட்டும்..நடக்கட்டும்...

தாரணி பிரியா said...

அதிசயமா என்னிக்காவது குளிச்சுற வேண்டியது. உடனே இது போல ஒரு பதிவு போட்டு நான் இன்னிக்கு குளிச்சுட்டேன்னு வலையுலகம் பூரா விளம்பரம் செய்ய வேண்டியது ஏன் ஆதவா ஏன் ??

தாரணி பிரியா said...

ஆமாம் பல்லு விளக்கறதை பத்தின பதிவு எப்ப வரும் :)

ச.செந்தில்வேலன் said...

பாத்ரூம் போட்டு யோசிச்சீங்க போல.. குளியலைப் பற்றி பதிவிட்ட ஆதாவனுக்கு ஓ போடுகிறேன் :)

Bala Kumaran said...

அது சரி. யார குளிக்க கூப்ட்ரிங்க. அமீரகத்துல கூட்டு சேர்ந்துதான் குளிபீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

ஹி..ஹி. நன்றி கார்த்திகைப் பாண்டியன்
-------------------------------------
பால குமரன் நல்லா பாருங்க நமீதா படத்தை. இருக்குறதிலேயே அது தான் ரொம்ப டீசண்ட்டான படம் ஆமா.

உங்க எல்லாரையும் தான் கூப்பிடுறேன்
-----------------------------------
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...ஏன் இந்த கொலவெறி தாரணிபிரியா? நாங்கெல்லாம் டெய்லி ரெண்டு தடவை குளிப்போமாக்கும். வேணும்னா சாயங்காலம் எனக்கு போன் பண்ணுங்க. நான் எடுக்கவே மாட்டேன் :)

ஆஹா...அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்திட்டீங்க. நன்றி :)
-----------------------------------
செந்தில் வேலன் ரொம்ப நன்றி. ஓ போட்டீங்க சரி..ஓட்டு போட்டீங்களா :)

☀நான் ஆதவன்☀ said...

என்ன கொடுமை இது. தமிழ்மணத்துல வரவே இல்லை. சூன்யம் வச்சுட்டாங்களோ.....

சந்தனமுல்லை said...

ஆகா...இதுவல்லவோ மொக்கை ஆராய்ச்சி!! :-))

சந்தனமுல்லை said...

//ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...ஏன் இந்த கொலவெறி தாரணிபிரியா? நாங்கெல்லாம் டெய்லி ரெண்டு தடவை குளிப்போமாக்கும். வேணும்னா சாயங்காலம் எனக்கு போன் பண்ணுங்க. நான் எடுக்கவே மாட்டேன் :)//

LOL!!

சந்தனமுல்லை said...

//4. ஆபிசுக்கு லேட்டாக செல்லுபவர்கள் “ஏன் லேட்டு?” என்ற கேள்விக்கு “குளிச்சுட்டு வர லேட்டாகிடுச்சு” என்று பெருமையை பறைச்சாற்றலாம்.//

அவ்வ்வ்வ்..நினைச்சுப்பார்த்தேன்...இப்படிச் சொன்னா எப்படி இருக்கும்னு!! அடுத்த தடவை ஏன் லேட்டுன்னு கேக்கவே மாட்டாங்க போல!! :-))

குறை ஒன்றும் இல்லை !!! said...

நற நற நற///

☀நான் ஆதவன்☀ said...

வாங்க சந்தனமுல்லை. ஏன் இந்த ஆராய்ச்சின்னு கேட்டீங்கன்னா லேபிள பார்த்தா உங்களுக்கே தெரிய வரும் :)

//அவ்வ்வ்வ்..நினைச்சுப்பார்த்தேன்...இப்படிச் சொன்னா எப்படி இருக்கும்னு!! அடுத்த தடவை ஏன் லேட்டுன்னு கேக்கவே மாட்டாங்க போல!! :-))//

பாருங்க எப்படியெல்லாம் இந்த பதிவு யூஸ் ஆகுதுன்னு :) தைரியமா சொல்லுங்க. ஆனா மறுநாள் நீங்க சீக்கிரமா ஆபிஸ் போனா உங்கிட்ட வருவதற்கே எல்லாரும்(டேமேஜர் கூட) பயப்படுவாங்க.........அதுனால உசார்

☀நான் ஆதவன்☀ said...

வாங்க ராஜ். உங்க கோவம் எனக்கு புரியுது. என்னைய குத்துற மாதிரி நினைச்சு ஓட்டு குத்திட்டு போயிடுங்க :)

கலையரசன் said...

குளிக்க வாரீகளளளளளான்னு இழுக்கும் போதே நினைச்சேன், நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையே.. அப்புறம் ஏன் போயிகிட்டுன்னு!

ஆனா, நமிதாஆஆஆ.... (எல்லாரும் பாக்றாங்க பாரு.. வாய மூடு!) படத்தை போட்டு, பாத்ரூம்ல... சோப்பு மேல கால வச்ச மாதிரி "சர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு" இஸ்துகின்னு வந்துடுச்சுபா!!

கலையரசன் said...

நான் கூட ’தேமே’ குளியலுன்னு சொன்னவுடனே,
நா டெய்லி குளிக்கிற மாதிரின்னு நனைச்சேன்..
பட்! டீசண்டா எழுதி என் நண்பன்ங்றத ப்ரூவ் பண்ணிட்ட சூ!

பதிவில் நல்ல நகைசுவை... கீப் ராக்கிங்!!

கலையரசன் said...

'நாயிக்கு பேரு வச்சியே.. சோறு வச்சியா? 'ன்னு நீ கேக்குறத்து முன்னாடியே சொல்லிடுறேன்...
"ஓட்டு போட்டாச்சு தல.."

☀நான் ஆதவன்☀ said...

கலை உங்கள மாதிரி நல்ல பசங்களுக்காக தான் நமீத படமே. இல்லைன்னா பயபுள்லைங்க உள்ளவே வரமாட்டேங்கிறாங்க.

அவ்வ்வ்வ் உன் நண்பனா இருந்துட்டு இண்டீசண்டா பதிவெல்லாம் எப்படி எழுத வரும் கலை :) நாமெல்லாம் ரொம்ப டீசண்டுன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே :)

ஓட்டு போட்டதுக்கு நன்றி கலை. முடிஞ்சா கள்ள ஓட்டு எதுனா போடமுடியுமான்னு பாருங்க :)

துபாய் ராஜா said...

அருமையான ஆராய்ச்சி.

அற்புதமான தகவல்கள்.

அடுத்தது 'பல் தேய்க்கிறது' பத்தியும் ஒரு பதிவு போடுங்க. :))

எவனோ ஒருவன் said...

அப்படியே நன்மைகள்ல இதையும் சேத்துக்கலாம்.
- இந்த மாதிரி மொக்கை போடும் யோசனைகள் எழக்கூடும். (அப்பத்தான் நீயும் குளிக்கிறன்னு தெரியும்)

//முதுகு தேய்த்து விட ஆள் கிடைக்க வாய்ப்புண்டு. //
இது எப்படி என அடுத்த பதிவில் விளக்கவும் (இல்லையேல் சாட்டில் வந்து சொல்லலாம்)

//குளிப்பதனால் ஏற்படும் தீமைகள்://
இங்கதான்யா உன் மேல சந்தேகமே வருது...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

நாயிக்கு பேரு வச்சியே.. சோறு வச்சியா? 'ன்னு நீ கேக்குறத்து முன்னாடியே சொல்லிடுறேன்...
tamilish & tamil manam"ஓட்டு போட்டாச்சு தல.."
குளியலைப் பற்றி பதிவிட்ட ஆதாவனுக்கு ஓ போடுகிறேன் :)

கிறுக்கல் கிறுக்கன் said...

//குளிப்பதனால் ஏற்படும் தீமைகள்://

இது எனக்கு ஏற்பட சான்ஸே இல்ல

கிறுக்கல் கிறுக்கன் said...

:)

சென்ஷி said...

:-)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி துபாய் ராஜா. கூடிய சீக்கிரம் அதையும் போட்டுடலாம் :)
-------------------------------------
//இது எப்படி என அடுத்த பதிவில் விளக்கவும் (இல்லையேல் சாட்டில் வந்து சொல்லலாம்)//

ரைட்டு கொஞ்சம் செலவாகும் ஓக்கேவா?

//இங்கதான்யா உன் மேல சந்தேகமே வருது...//

உனக்கு டவுட்டா இருந்தா வீடியோ எடுத்து அனுப்புறேன். அப்பவாவது நம்பு.
-----------------------------------
நன்றி கார்த்திகேயன் :)
-----------------------------------
நன்றி கிறுக்கல் கிறுக்கன். உண்மைய ஒத்துகிட்டு நல்லவன் ஆகிடீங்க :)
-----------------------------------
நன்றி தல :)

கோபிநாத் said...

;))

Anonymous said...

Sorry for the late comment.
..
..
I was taking bath


Kumar From USA

எவனோ ஒருவன் said...

//ரைட்டு கொஞ்சம் செலவாகும் ஓக்கேவா?//
எது? உன் நெட் பில்ல சொல்றியா?

//உனக்கு டவுட்டா இருந்தா வீடியோ எடுத்து அனுப்புறேன். அப்பவாவது நம்பு.//
நீ மட்டும் தனியா குளிக்கிற வீடியோவா இருந்தா வேணாம்... :)

இளைய பல்லவன் said...

விடுபட்டவை:

குளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

1. இப்படியெல்லம் டரியள் பதிவு போட முடியும் என்று எடுத்துக்காட்டுவது.

2. குளிப்பது என்ற ஒரு விஷயம் இருக்கிறது என்பதை ஆதவன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தது.

3. இதெல்லாம் ஆராய்ச்சிக்குறிய விஷயம் என்று ஆதவன் ஆராய்ந்து எழுதியிருப்பது

4. இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு ஆதவனுக்கு டைம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது.

(இத்தோட நிறுத்திக்கிறேன்)

குளிப்பதனால் ஏற்படும் தீமைகள்:


1. இப்படியெல்லம் டரியள் பதிவு போட முடியும் என்று எடுத்துக்காட்டுவது.

2. குளிப்பது என்ற ஒரு விஷயம் இருக்கிறது என்பதை ஆதவன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்தது.

3. இதெல்லாம் ஆராய்ச்சிக்குறிய விஷயம் என்று ஆதவன் ஆராய்ந்து எழுதியிருப்பது

4. இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்வதற்கு ஆதவனுக்கு டைம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது.

(இத்தோட நிறுத்திக்கிறேன்)

ஆனா மீண்டும் வருவேன்!

நாஞ்சில் நாதம் said...

:))

மங்களூர் சிவா said...

:))

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கோபி
-------------------------------------
நன்றி குமார் :)
-------------------------------------
//நீ மட்டும் தனியா குளிக்கிற வீடியோவா இருந்தா வேணாம்... :)//

கூட யாராவது நீயே செட் பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும் :)
-------------------------------------
பல்லவரே உங்களோட விடுபட்டவைகளை சிலபஸ்ல சேர்த்துக்க சொல்லிடுறேன் :)

//ஆனா மீண்டும் வருவேன்!//

இன்னுமா? அவ்வ்வ்வ்வ்வ்
-----------------------------------
நன்றி நாஞ்சில் நாதம்
-----------------------------------
நன்றி சிவா

தேவன் மாயம் said...

குளியலில் இவ்வளவு மேட்டரா?

எவனோ ஒருவன் said...

//கூட யாராவது நீயே செட் பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும் :)//

நல்லாத்தான் இருக்கும், உனக்கு.
என்ன மச்சான்னே கூப்பிடு. அதுக்கு மேல மரியாத வேணாம்... :)

D.R.Ashok said...

நல்லாதான் இருக்கு.. நம்ம ஆசை தீர குளியல்..
ஏதோ நமிதா மேடம் படம் போட்டதனால இந்த பின்னொட்டம். :)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி தேவா & அசோக்
--------------------------------
//நல்லாத்தான் இருக்கும், உனக்கு.
என்ன மச்சான்னே கூப்பிடு. அதுக்கு மேல மரியாத வேணாம்... :)//

ஓக்கே டன் :)

வானம்பாடிகள் said...

யப்பா. எப்படியெல்லாம் ஆராயிராய்ங்கப்பா. சூப்பரு.

ஸ்ரீமதி said...

Label paarththutten.. ;))))

Cable Sankar said...

முடியல..

க. பாலாஜி said...

Cable Sankar said...
// முடியல..//

enna mudiyala, kulikkavaa.. ennaalaiyumthan. naan kammunnu illa.

RAD MADHAV said...

ஐயோ .... படிச்சுட்டு , படத்தப் பாத்ததும் கண்ணக் கட்டுதே :-)

Hindu Marriages In India said...

Nalla sinthanai.

Related Posts with Thumbnails