புதியவர்களுக்கு வழிவிடுகிறேன் - “பஞ்சாமிர்தம்”

"உரையாடல்” போட்டிக்கான முடிவுகள் ஒரு வழியாக சனிக்கிழமை வருவதாக ”பைத்தியகாரன்” அறிவித்துள்ளார். எப்படியாவது இந்த ஒரு தடவை வெற்றி பெற்றோம்னா அடுத்த வருகிற போட்டியில கலந்துக்காம “நானெல்லாம் ஏற்கனவே பரிசு(கள்) வென்றிருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழி விடுகிறேன்”னு ஒரு ஸ்டேட்மெண்ட போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.

வெற்றிபெறலைனாலும் எனக்கு ஒன்னுமில்ல. என்ன....திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்.

நடுவர்கள் வெற்றி பெற்ற கதையை எதன் அடிப்படையில் எடுத்தார்கள் எனவும், அக்கதைகளின் சிறப்பம்சத்தையும் வெளியிட்டார்களானால் அடுத்த தடவை போட்டியில் கலந்து கொள்ளும் போது தவறுகளை திருத்திக்கொள்ளலாம்.

**************************************************************************************
சார்ஜாவில ஆண்கள் தங்க நகை போட கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்குது. அது நம்ம ஊரு “பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது” “ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டகூடாது” மாதிரி பேருக்கு தான் இருந்தது. நம்ம சேட்டன்களும், குஜராத்திகளும் சும்மா தக தகன்னு ஜொலிச்சுகிட்டுருந்தாங்க.

போன வாரம் தூசி தட்டி அந்த சட்டத்தை திரும்ப செயல்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. “மெகா மால்”க்கு போன இந்தியன்ஸ் இரண்டு பேரோட செயினை போலீஸ் காரன் கழட்டி வாங்கிட்டு போயிட்டான். இதே மாதிரி இரண்டு சின்ன பசங்க போட்டிருந்த செயின், ப்ரேஸ்லெட் (வெள்ளி) மாதிரி அயிட்டத்தையும் புடுங்கிட்டானுங்க.

இதெல்லாம் நம்ம ஊரு மாதிரி கொஞ்ச நாள் தான். அப்புறம் அடங்கிடும்.

கிறிஸ்துவ நண்பர்கள் சில பேர் பேர் கொஞ்சம் கவலையாகவும், கொஞ்சம் சந்தோஷமாவும் ஒரு விசயம் திரும்ப திரும்ப எல்லார்கிட்டேயும் கேட்டு தெளிவுபடுத்திட்டாங்க. அந்த கேள்வி ”கல்யாண மோதிரமும் போடக்கூடாதா?”

************************************************************************************** ”நான் கடவுள்” பார்த்தப்ப கிடைச்ச பிரம்மிப்பும், படர்ந்த சோகத்தையும் விட அதிகமா கிடைச்சுது (அ) பாதிச்சுது ஜெமோவின் “ஏழாம் உலகம்”. கதாபாத்திரங்களின் உருவங்கள் மிக அழுத்தமாக பதிந்தது. ஒருவேளை அந்த படத்தை முதல்ல பார்த்ததாலயே என்னவோ ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உருவமும் உடனே பதிந்து விட்டது.

முதல் அத்தியாயம் படிச்சப்ப இது தமிழா?இல்ல மலையாளமா? ரெண்டும் இல்லாத புது மொழியான்னு ஒரே குழப்பம். கொஞ்சம் மலையாளமும் தெரியும்ங்கிறதால அடுத்து படிக்க படிக்க எளிமையாகிடுச்சு. இந்த கதையில முடிவுன்னு ஒன்னு இருக்கிற மாதிரி தெரியல. இப்ப முடிஞ்சிருக்குற விதத்த பார்க்கும் போது எந்த அத்தியாயத்திலேயும் கதையை முடிக்கலாம் போல. அதுவும் நல்லா தான் இருக்குது.

நிறைய இடத்தில் வாய்விட்டு சிரிக்க முடிகிறது. முக்கியமாக எருக்குவின் ”இஞ்சிருங்கோ”வும். குய்யன் வரும் இடங்களிலும். “பனி விழும் மலர் வனம். உன் பார்வை” பாடல் பண்டாரம் காதில் ரீங்காரமிடும் போது வலுக்கட்டாயமாக “முருகா முருகா” எனும் போது மெலிதான் புன்னகையை வரவழைக்கிறது.

ஏழாம் உலகம் - நாம் கண்டிராத புது உலகம்.

”என்னது காந்தி செத்துட்டாரா?”ன்ற ரேஞ்சுக்கு இப்ப தான் இந்த புத்தகத்தை படிக்கிறயான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.

**************************************************************************************
கம்பெனியில முன்பு போல் வேலை இல்லை. ஓவர் டைம் கிடைக்காததால் சீக்கிரமே ரூமிற்கு வந்து போரடிக்கும் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே இருந்த ஒர் ஹாலில் ஒரு ஸ்கீரினும், ப்ரொஜெக்டரையும் வைத்து சிறிய திரையரங்காக ஆக்கி கொடுத்துள்ளது கம்பெனி.

முதல் இரண்டு தினங்கள் மலையாள படங்களாக ஓடி கொண்டிருந்தது. இப்போது வட இந்தியர்கள் ஹிந்தி படத்தை போடு என்றும் ஆங்கில படத்தை போடு என்றும் கொஞ்சம் பிரச்சனை ஆரம்பமாகியிருக்கிறது. தமிழ் படம் போடுன்னு இருக்கிற கொஞ்ச தமிழர்கள் கத்த தேவையே இல்லை. இருக்கிற மலையாளிகள் மலையாள படத்தை விட தமிழ் ப்டத்தை போடுவதையே விரும்புகிறார்கள்.

ம்ம்ம் இக்கரைக்கு அக்கரை பச்சை.....
**************************************************************************************
இந்த வாரம் கார்டூன் இல்லை அனிமேசன் தான்.


Photobucket

சிறுகதை போட்டி முடிவுகள் வந்த பிறகு பதிவர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்னு வரையலாம் யோசிச்சேன். அப்ப இந்த “ஜூஜூ” விளம்பரம் ரொம்ப பொருத்தமா இருந்தது. கொஞ்சம் மாத்திஅதையே கொடுத்திருக்கேன்

34 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Cable Sankar said...

நல்லாருக்கு விளம்பரம்.. நைஸ்

பிரியமுடன்.........வசந்த் said...

good one

வெட்டிப்பயல் said...

As usual.. Good One :)

goma said...

அழகாகப் பொருத்தமாக கார்ட்டூன் மூலம் உரையாடல் முடிவு அருமை...

புல்லட் said...

75/100மார்க்குகள்..

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

ரொம்ப சந்தோஷம் நான் ஆதவன்.
நல்ல பதிவு போட்டீர்கள்.
நானும் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்னும் சட்டம் கேள்விப்பட்டேன்.
முதலில் அமலில் இருக்கும் புகை பிடிக்கக்கூடாது சட்டத்தை வலுவாக்க சொல்லுங்கள்.
(சொன்னா மட்டும்?)

ஏழாம் உலகம் நல்ல படைப்பு அதற்கு நான் வியந்து கருத்துரை எழுதி அதை ஈ காக்கா கூட சீண்டவில்லை.
நீங்களாவது படியுங்க குரு.
படித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.
http://geethappriyan.blogspot.com/2009/06/100-ways-you-can-improve-environment.html

கார்க்கி said...

அனிமேஷன் ஆப்ட்... :))

கோபிநாத் said...

\\அந்த படத்தை முதல்ல பார்த்ததாலயே என்னவோ ஒவ்வொரு கதாபாத்திரமும், அவர்கள் உருவமும் உடனே பதிந்து விட்டது.
\\

அது...;))

\\இந்த கதையில முடிவுன்னு ஒன்னு இருக்கிற மாதிரி தெரியல\\

ஆமாம்...முத்தம்மையில் தொடங்கிய கதை மீண்டும் முத்தம்மையில் முடியும்.

எனக்கு முத்தம்மையும் அவள் மகன் ரஜனியும் மறக்கவே முடியாது.

அதே போல பண்டாராம் காதப்பத்தித்தை செதுக்கியிருக்கிறார். தந்தையாக பண்டாராம் படும் தவிப்பு இருக்கு பாருங்க...மனுஷன் வாழ்ந்திருக்கான் அந்த காதப்பத்திரத்தில். ;)

நிறைய சொல்ல வேண்டும் போல இருக்கு...

கோபிநாத் said...

\\கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...
ரொம்ப சந்தோஷம் நான் ஆதவன்.
நல்ல பதிவு போட்டீர்கள்.
நானும் ஆண்கள் தங்கம் அணியக்கூடாது என்னும் சட்டம் கேள்விப்பட்டேன்.
முதலில் அமலில் இருக்கும் புகை பிடிக்கக்கூடாது சட்டத்தை வலுவாக்க சொல்லுங்கள்.
(சொன்னா மட்டும்?)

ஏழாம் உலகம் நல்ல படைப்பு அதற்கு நான் வியந்து கருத்துரை எழுதி அதை ஈ காக்கா கூட சீண்டவில்லை.
நீங்களாவது படியுங்க குரு.
படித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.
http://geethappriyan.blogspot.com/2009/06/100-ways-you-can-improve-environment.html
\\

என்ன தல இப்படி சொல்லிட்டிங்க...வந்துக்கிட்டே இருக்கோம்ல்ல ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா?? :))

சம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே..

சென்ஷி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா?? :))

சம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே../

ரிப்பீட்டே :-))

சந்தனமுல்லை said...

:-) கலக்கலா இருந்தது அனிமேஷன்!! ரொம்ப நல்ல ஆபிஸா இருக்கே...:-)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கேபிள் சங்கர்

நன்றி ப்ரியமுடன் வசந்த்

நன்றி வெட்டி :)

------------------------------------
//goma said...
அழகாகப் பொருத்தமாக கார்ட்டூன் மூலம் உரையாடல் முடிவு அருமை..//

நன்றி கோமா. போன பதிவு பார்த்தீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

புல்லட் 1st க்ளாஸ்ல பாஸ் ஆக்கியிருக்கீங்க. ரொம்ப நன்றி
------------------------------------
நன்றி கார்த்திகேயன். அங்கு என் கருத்தையும் சொல்லியிருக்கேன்.
-------------------------------------
நன்றி கார்க்கி
-------------------------------------
@கோபிநாத்

ஆமா தல. பண்டாரம் கேரக்டர் அருமை தான். ஆனா அதுல இருக்குற ஒரே குறை. நடக்கின்ற காலத்தை தெளிவாக சொல்லாதது தான். நிறைய இடங்கள்ல சொதப்பல்.

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ம்... பேசாம வழிய விட்டு ஒதுங்கி நிக்க வேண்டியது தானே.. இதுக்கு பதிவு வேறயா?? :))//

ஆகா உங்களுக்கு எம்புட்டு சந்தோஷம் இதுல...

//சம்பளமும் குடுத்து உங்களுக்கு தியேட்டரும் கட்டிக்கொடுக்கறாங்களா நல்ல ஆபிசா இருக்கே..//

ஹி...ஹி ஹி இந்த மாதிரி கிறுக்குதனமா எங்க கம்பெனி அடிக்கடி செய்யும் :)
-----------------------------------
நன்றி சென்ஷி :)
-----------------------------------
நன்றி சந்தனமுல்லை.

goma said...

ரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ?
அஸ்கு அஸ்கு ரெண்டும் இல்லை கிடைக்கலேனா அழவும் மாட்டேன் கிடைச்சா குதிக்கவும் மாட்டேன்

எவனோ ஒருவன் said...

என்னத்தச் சொல்ல... விளம்பரம் சூப்பர்.

---
☀நான் ஆதவன்☀ said...
//நன்றி கோமா. போன பதிவு பார்த்தீங்களா?//

விளம்பர உலகம்டா இது :)

☀நான் ஆதவன்☀ said...

//goma said...
ரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ?
அஸ்கு அஸ்கு ரெண்டும் இல்லை கிடைக்கலேனா அழவும் மாட்டேன் கிடைச்சா குதிக்கவும் மாட்டேன்//

கோமா போன பதிவுல என்ன ஸ்பெஷல்னா நீங்க ஒரு தடவை குப்பைத்தொட்டியில எல்லாம் வைரமா இருக்குன்னு சொன்னீங்கல்ல...அதை இரண்டாவது அனிமேசனா செஞ்சிருக்கேன். அதுனால கேட்டேன்.
உங்களுக்கு நன்றியும் சொல்லியிருக்கேன் :)
//இந்த குப்பைத்தொட்டியில இருக்குற எல்லா பதிவுகளும் வைரத்துக்கு சமம்(நன்றி கோமா) . //
--------------------------------

யோவ் பிரதாப்...கோமாவுக்கு கொடுத்த விளக்கத்த படி. அதுக்குள்ள காலை வாரி விடுறயே :)

நன்றி பாராட்டுக்கு :)

எவனோ ஒருவன் said...

//goma said...
ரெண்டு ஜூ ஜூ வில் நான் எந்த ஜூஜூ?//
முன்னாடி இருந்தும் ரிசல்ட் பாக்கத் தெரியாம முழிச்சிட்டே இருக்குதே அந்த ஜூஜூவா கூட இருக்கலாம்.
நானா இருந்தா இப்படி அழுதுட்டு போக மாட்டேன், இன்னும் பாக்காத மாதிரி அங்கயே நின்னுட்டு கொஞ்ச நேரத்துல எஸ்கேப் ஆய்ருவேன். :(

//☀நான் ஆதவன்☀ said...
யோவ் பிரதாப்...கோமாவுக்கு கொடுத்த விளக்கத்த படி. அதுக்குள்ள காலை வாரி விடுறயே :)//
சரி மாதவா, தெரியாம அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கய்யா...அப்டின்னு சொல்லுவேன்னு பாத்தியா... அதெல்லாம் முடியாது. என்ன இருந்தாலும் விளம்பரம் பண்ண ஆளுதானய்யா நீயி..
:)

கார்த்திக் said...

எப்ப்டிடீங்க விளம்பரம் தயார் பண்றீங்க.. கொஞ்சம் சொல்லிகொடுங்களேன்..

☀நான் ஆதவன்☀ said...

@பிரதாப்

அதான் உன்னையப் பத்தி தெரியுமே. விளம்பரம் இல்லாம வாழ்க்கை இல்ல அண்ணே :)
-----------------------------------
@கார்த்திக்

அதெல்லாம் சிம்பிள் மேட்டர் தலைவா. கொஞ்சம் படம் வரைய தெரிஞ்சிருக்கனும். ரெண்டு மூணு சாப்ட்வேர் வச்சிருக்கனும். அவ்வள்வு தான். கூடிய சீக்கிரம் எப்படின்னு ஒரு பதிவாவே போட்டுடலாம் :)

பாலகுமார் said...

உங்க அனிமேஷன் அருமை !

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஏழாம் உலகம் - நாம் கண்டிராத புது உலகம். என்னது காந்தி செத்துட்டாரா?”ன்ற ரேஞ்சுக்கு இப்ப தான் இந்த புத்தகத்தை படிக்கிறயான்னு கேட்டு வரும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.//

அடப் போங்கப்பா.. நான் இன்னும் படிக்கல..:-(((

rapp said...

இப்டி நீங்க கலக்குறத்துக்காகவே இன்னும் நாலஞ்சிப் போட்டி வெக்கலாம்(நான் சொல்றது அனிமேஷன், ஹி ஹி).

//“நானெல்லாம் ஏற்கனவே பரிசு(கள்) வென்றிருக்கிறேன். புதிதாக எழுத வருபவர்களுக்கு வழி விடுகிறேன்”னு ஒரு ஸ்டேட்மெண்ட போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.
வெற்றிபெறலைனாலும் எனக்கு ஒன்னுமில்ல. என்ன....திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........எத்தனப் பேருய்யா இப்டி சிம்பு பார்முலாவை காப்பியடிக்கக் கெளம்பிருக்கீங்க? எங்க புதுச் சிங்கத்தைக் களமிறக்குனாத்தான் சரிபடும் போலருக்கு:):):)

rapp said...

//
முதல் அத்தியாயம் படிச்சப்ப இது தமிழா?இல்ல மலையாளமா? ரெண்டும் இல்லாத புது மொழியான்னு ஒரே குழப்பம். //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........அந்த ஸ்லாங்கோட அழகை இப்டி சொல்லிட்டீங்களே.

//ஓவர் டைம் கிடைக்காததால் சீக்கிரமே ரூமிற்கு வந்து போரடிக்கும் தொழிலாளர்களுக்காக ஏற்கனவே இருந்த ஒர் ஹாலில் ஒரு ஸ்கீரினும், ப்ரொஜெக்டரையும் வைத்து சிறிய திரையரங்காக ஆக்கி கொடுத்துள்ளது கம்பெனி.
முதல் இரண்டு தினங்கள் மலையாள படங்களாக ஓடி கொண்டிருந்தது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......, என்ன கம்பெனி அது:):):)

//தமிழ் படம் போடுன்னு இருக்கிற கொஞ்ச தமிழர்கள் கத்த தேவையே இல்லை. இருக்கிற மலையாளிகள் மலையாள படத்தை விட தமிழ் ப்டத்தை போடுவதையே விரும்புகிறார்கள்//

என்னமோ தெனம் லாலேட்டன், மம்மூக்கா எண்பதுகளில் நடிச்ச சூப்பர் படங்களாட்டம், எடுத்து விடுறாப்டி பேசறீங்க. இருங்க இருங்க, நாலு சுரேஷ் கோபி படம் புத்தம் புதுக் காப்பி பார்சல் அனுப்பறேன்:):):) அப்புறம் குருவி, வில்லு எல்லாம் உங்களுக்கு தெய்வீகமா தெரியும்:):):)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி பாலகுமார்
-----------------------------------
கார்த்திகை பாண்டியன் கண்டிப்பா படிங்க.
-----------------------------------
//இப்டி நீங்க கலக்குறத்துக்காகவே இன்னும் நாலஞ்சிப் போட்டி வெக்கலாம்(நான் சொல்றது அனிமேஷன், ஹி ஹி). //

ராப் இதுக்காகவே நிறைய கதை எழுதி வச்சிருக்கேன். முதல்ல உங்களுக்கு மெயில அனுப்பிட்டு தான் மறுவேலை.

//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........எத்தனப் பேருய்யா இப்டி சிம்பு பார்முலாவை காப்பியடிக்கக் கெளம்பிருக்கீங்க? எங்க புதுச் சிங்கத்தைக் களமிறக்குனாத்தான் சரிபடும் போலருக்கு:):):)//

ஹலோ இது என்னோட சொந்த சரக்கு. சிம்புவோட ஃபார்முலாவ சுடுற அளவுக்கு இன்னும் நாங்க மோசமாகலக்கோவ் :)

//என்னமோ தெனம் லாலேட்டன், மம்மூக்கா எண்பதுகளில் நடிச்ச சூப்பர் படங்களாட்டம், எடுத்து விடுறாப்டி பேசறீங்க. இருங்க இருங்க, நாலு சுரேஷ் கோபி படம் புத்தம் புதுக் காப்பி பார்சல் அனுப்பறேன்:):):) அப்புறம் குருவி, வில்லு எல்லாம் உங்களுக்கு தெய்வீகமா தெரியும்:):):)//

அதென்னவோ உண்மை தான். இந்த கொடுமையெல்லாம் நாங்களும் அனுபவிச்சிருக்கோம். அதுவும் சுரேஷ் கோபியோட “லங்கா”ன்னு ஒரு படம். அதை பார்த்துட்டு இனிமே இவன் படம் எதுவுமே பார்க்க கூடாதுன்னு முடிவு பண்ணினேன். ஆனா விதி வலியது அதுக்கப்புறம் இரண்டு படம் பார்த்துட்டேன் :(

நாஞ்சில் நாதம் said...

உங்க அனிமேஷன் விளம்பரம் அருமை

goma said...

கோமா போன பதிவுல என்ன ஸ்பெஷல்னா நீங்க ஒரு தடவை குப்பைத்தொட்டியில எல்லாம் வைரமா இருக்குன்னு சொன்னீங்கல்ல...அதை இரண்டாவது அனிமேசனா செஞ்சிருக்கேன். அதுனால கேட்டேன்.

பார்த்தேன் ரசித்தேன் கோமாவுக்கு நன்றி என்ர வரிகளையும் சேர்த்துதான் சொல்கிறேன்...
வைரத்தை வைரம்னு சொன்னா அதுக்கெல்லாம் நன்றியா...

மங்களூர் சிவா said...

/
சார்ஜாவில ஆண்கள் தங்க நகை போட கூடாதுன்னு ஒரு சட்டம் இருக்குது.
/

ஓ.

இந்த சட்டம் உலகம் முழுக்க வரக்கூடாதா???

☀நான் ஆதவன்☀ said...

நன்றி நாஞ்சில் நாதம்
-------------------------------------
பாராட்டுக்கு நன்றி கோமா :)
-------------------------------------
ஏன் சிவா இப்படியொரு ஆசை? :)

ஜெகநாதன் said...

//திரும்பவும் போட்டினு வந்தா கலந்துப்பேன். மாட்டிக்க போறது நீங்களும் நடுவர்களும் தான்//
ச்சே.. ஈவு இரக்கமேயில்லாம நடந்துக்கறாங்கப்பா!
:-)

☀நான் ஆதவன்☀ said...

வாங்க பச்சபுள்ள ஜெகநாதன். அவுங்க மட்டும் ஈவி இரக்கமே இல்லாம என் கதைய செலக்ட் செய்யாதப்ப நானும் அப்படி தான் இருப்பேன் :)

seemangani said...

வணக்கம்,நானும் உங்ககளை போல்தான் பிறந்தது மதுரை, வளர்ந்தது சென்னை, இப்போ பொழப்புக்காக சவுதி அரேபியா ....
இப்போது பதிவு பைத்தியம் பிடித்து அலைகிறேன்....
உங்கள் எழுத்துகள் எல்லாம் அருமை ....
வாழ்த்துகள் .......

ஸ்ரீமதி said...

பதிவு சூப்பர் :)) அஸ் யூஸ்வல் அனிமேஷன் தெரியல.. :(((

Related Posts with Thumbnails