”விளம்பர உலகம்”டா இது!

நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். நமக்கு ஃபாலோவர் மட்டும் முக்கிகிட்டே நிக்குது (எவன்டா அவன் நல்லா எழுதுனா தான் ஃபாலோவர் சேருவாங்கன்னு சொல்றது....பிச்சு விடுவேன் பிச்சு). கையில காசிருந்தால் தமிலிஷ் மாதிரி எல்லா தமிழ் இணைய தளத்தில் போய் விளம்பரம் செய்யலாம்.

ஆனா வாங்குற சம்பளம் கைக்கும் வாயுக்குமே பத்த மாட்டேங்குது. இதுல விளம்பரம் வேற ஒரு கேடா என்ன?. ஓக்கே இத இப்படியே விடமுடியாது வேற என்ன செய்யுறதுன்னு? யோசிச்சப்ப கிடைச்சுது “சுயவிளம்பரம்”.

நமக்குள்ள ஒரு அக்ரிமெண்டுக்கு வரலாம். கீழ இருக்குற விளம்பரத்த அப்படியே உங்க சைட்ல(site) ஒரு சைடுல வச்சீங்கன்னா உங்க சைட்டுக்கு இலவசமா இதே மாதிரி விளம்பரம் செஞ்சு கொடுப்பேன். என்னது? சைடுல விருது வைப்பதற்கே இடம் இல்லையா? கொஞ்சம் யோசிக்கனுமே.....

சரி எனக்கு ஃபாலோவர் ஆகிடுங்க. சரியா.....

இப்ப விளம்பரத்துக்கு போவோம்.

Photobucket

சோப்பு போட்டு தேய்ச்சு குளிச்சாக்கா, துணி பவுடர் போட்டு துணி துவைச்சாக்கா, அப்பாலிக்கா கூல் ட்ரிங்ஸ் குடிச்சாகா, டூத் பவுடர் போட்டு பல் தேய்ச்சா “தன்னம்பிக்கை” வர்றப்ப.....நம்ம “குப்பைத்தொட்டி”யில இருக்குற பதிவ படிச்சா கூட ”தன்னம்பிக்கை” வரும்ன்னு சொல்ற விளம்பரம் தான் மேல இருக்குறது.

அதாவது நம்ம “ஜூஜூ” அண்ணனுக்கு போன வருசம் நடந்த ரன்னிங் ரேஸ்ல தோத்து போயிட்டாரு. அப்பால நம்ம ”குப்பைத்தொட்டி”யில இருக்குற பதிவுகள படிச்சப்ப அண்ணனுக்கு “தன்னம்பிக்கை” வந்திருச்சு. அடுத்த வருசம் நடந்த போட்டியில அண்ணன் ஜெயிச்சிருறாரு.

ஓடாதபோன்

அதாவது என்னான்னா.....இந்த குப்பைத்தொட்டியில இருக்குற எல்லா பதிவுகளும் வைரத்துக்கு சமம்(நன்றி கோமா) . இன்னாடா இந்த குப்பைதொட்டியில வந்திருக்கோமேன்னு யாரும் ஃபீல் பண்ணகூடாது. இது வைரங்கள் நிறைஞ்ச குப்பைதொட்டியாக்கும் :)

காலையில வந்தம்மா, கொஞ்சம் பக்கத்து சீட்ல கடலை போட்டோமா, கொஞ்சம் ப்ளாக் படிச்சு ஜாலியா இருந்தோமான்னு இருக்கனும். சீரியஸ் ஆகி சண்டை போடக்கூடாதுங்கிறேன்.

ss

நம்ம பதிவுகள படிச்சா சும்மா தைரியம் பொளந்துகிட்டு வரும் ஜாக்கிசான் தங்கச்சி மாதிரி. ”பிஸ்கட்” சாப்பிட்டா தைரியம் வரும் போது நம்ம பதிவ படிச்சா வராதா என்ன? நம்ம பதிவ ஆபிஸ்ல படிச்சுட்டு வீட்டுக்கு போற “ஜூஜூம்மா”கிட்ட வாலாட்டுனான் வில்லன். விட்டாங்க பாரு ஒரு அடி. அப்படியே அவன் பொறி கலங்கி போய்ட்டான் வில்லன். வேணும்னா நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்களேன்.

இன்னும் நாலைஞ்சு லேடி“ஜூஜூ” பொம்மய வச்சு நம்ம ஆடித்தள்ளுபடி விளம்பரம், "axe" பாடி ஸ்பேரே மாதிரி நம்ம பதிவ படிச்சாலே பொண்ணுங்க எல்லாம் பின்னாடியே சுத்துற மாதிரி, “குப்பைத்தொட்டி”ய படிச்சா ஐ.ஏ.எஸ் ஆகுற மாதிரி ஒரு விளம்பரம்ன்னு கைவசம் நிறைய இருக்கு. நேரம் கிடைக்கும் போது அவுத்து விடுறேன் மக்கா.

ஏலேய் மக்கா ஓட்டு போட மறந்துராதீக........

61 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சந்தனமுல்லை said...

சான்ஸே இல்ல...:-)))

நானும் குப்பைத்தொட்டியை படிக்கறேன்..இந்த வருஷம் அப்ரைசல் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்!ஹிஹி

இளைய பல்லவன் said...

அருமை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாத கிரியேட்டிவிட்டி தெரிகிறது!

வாழ்த்துக்கள்..

இரண்டிலும் ஓட்டை சேர்த்துவிட்டேன்.

குசும்பன் said...

//நம்ம பதிவுகள படிச்சா சும்மா தைரியம் பொளந்துகிட்டு வரும் ஜாக்கிசான் தங்கச்சி மாதிரி. //

யோவ் ஏற்கனவே ஊருல பாதி பின்லேடன் சிஸ்டர் கணக்காதான் இருக்குங்க இதுல உன் பதிவை வேற படிச்சி ஜாக்கி ஜான் சிஸ்டர் ஆவனுமா? அடிங்க!

இப்படி ஒரு சகல அம்சங்களும் பொருந்திய சிஸ்டர் உனக்கு மனைவியாக வர எல்லாம் வல்ல மகரநெடுங்குழல் நாதனை பிராத்திக்கிறேன்!

ஆ! இதழ்கள் said...

என்னய்யா விளம்பரம்? அந்த சினிமாகாரங்க தான்.....

சரி வேணாம்

வெளம்பரம் சூப்பராகீது... எனக்கு ஒரு விளம்ப்ரம் செய்து உங்க ப்ளாக்ல சைட்ல நீங்க போட்டீங்கன்னா... உங்க விளம்ப்ரத்தை நான் என் ப்ளாக்ல போட்றேன்... எப்படி டீலு நாங்கெல்லாம் யாரு...

கார்த்திகைப் பாண்டியன் said...

கிரியேட்டிவிட்டி அருமை..நல்லா இருக்கு நண்பா.. இத்தனை நாள் உங்களை எப்படி பாலோ பண்ணாம விட்டேன்னு தெரியல.. போகட்டும்.. கலக்குங்க.. தொடர்கிறேன்..

Mrs.Faizakader said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் கிரியேட்டிவிட்டி.. அருமை..அருமை..

மின்னுது மின்னல் said...

ஹய்யோ ஹய்யோ :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

Suppppppppppppeeeeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrrr

வினோத்கெளதம் said...

Wat a creativity..!!!
Hats off..(tamil font work aagula)

ச.செந்தில்வேலன் said...

தலை.. எப்படி இப்படி எல்லாம் விளம்பரம் பண்றீங்க? கலக்கல்

இத்தன தொடருவோர வச்சிருக்கற நீங்களே புலம்புனா நாங்க என்ன பண்றது ;)

கைப்புள்ள said...

// சந்தனமுல்லை said...
சான்ஸே இல்ல...:-)))

நானும் குப்பைத்தொட்டியை படிக்கறேன்..இந்த வருஷம் அப்ரைசல் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்!ஹிஹி
//


// இளைய பல்லவன் said...
அருமை என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாத கிரியேட்டிவிட்டி தெரிகிறது!

வாழ்த்துக்கள்..

இரண்டிலும் ஓட்டை சேர்த்துவிட்டேன்.

//

ரெண்டுத்துக்கும் ரிப்பீஈஈஈஇட்டேய் :))

குடந்தை அன்புமணி said...

//இத்தன தொடருவோர வச்சிருக்கற நீங்களே புலம்புனா நாங்க என்ன பண்றது ;)//

தொடர்வோர் (எண்ணிக்கையில்)இருந்தா மட்டும் போதுமா பாஸ்?

ரெட்மகி said...

என்னமா திங்க் பன்றங்கபா...

Suresh said...

sema idea nalla dealum kuda ;) ha ha itho unga follower agiyachu..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குப்பையிலிருந்து இரண்டே இரண்டு வைரமா..அதும் கருப்பு வைரமா..இனி தான் பட்டைத் தீட்டனுமா..?
அந்த விளம்பரத்தை இன்னோருக்கா பளபளான்னு செய்யுங்க கூடை நிறைய வைரமாக்குங்க..கொஞ்சமா குப்பை வைங்க.. :)) எத்தனை பதிவுங்க இருக்கு ரெண்டே ரெண்டு வைரமா..:))

ஏன்னா டெட்டால் விளம்பரம் பாத்திருக்கீங்களா.. அதால் துடைச்சா பத்து கிருமி இருந்த இடத்துல ஒன்னு தான் இருக்கும்..
( அதையெல்லாம் என்ன சரியா கணக்கெடுத்தா போட்டிருப்பாங்க)

முல்லை சொன்னமாதிரி நான் ரொம்ப நாளா குப்பைத்தொட்டி படிக்கிறேன்.. என் புது முயற்சிகளெல்லாம் என்ன வெற்றி யடையுதுன்னு பார்க்கலாம்.. :))

ஜெஸிலா said...

ரொம்ப அழகான விளம்பரம். வாழ்த்துகள். கண்டிப்பா பந்தயத்தில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

♫சோம்பேறி♫ said...

இலவசமாக சோப்பு டப்பா, சுண்ணாம்பு டப்பா கொடுத்தல், கிரகப்பிரவேசம் ஆஃபர் என்று விளம்பரம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததும் சொல்லி அனுப்பவும். வந்து ஓட்டு போடுறேன்.

கலையரசன் said...

நான் உங்களை முன்னாடியே ஃபாலோ பன்றேனே?

அப்ப அதை டெலீட் செஞ்சிட்டு... திரும்ப ஃபாலோ செய்யட்டா?
ஏன்னா, உங்க விளம்பரம் வீணாயிட கூடாது பாருங்க.

ஸ்ரீமதி said...

Present sir.. :)

(Pic onnum theriyala oppice-la... adhaan.. :(( )

எவனோ ஒருவன் said...

”விளம்பர உலகம்”டா இது!

எவனோ ஒருவன் said...

என்னது "பொக்கிஷ" கருத்தா?
சரி சரி...
---
அப்பிடியே இதையும் ட்ரை பண்ணு மாமே...

திடீர்னு வானத்துல இருந்து பெரிய பெரிய தீ பந்தா நம்ம ஊருக்குள்ள விழுது... பெரிய பெரிய கட்டிடமெல்லாம் டமார்னு தரைல விழுது... அப்பாலிக்கா, பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய பறக்கும் தட்டா பறந்து வருது, மனுசங்கள எல்லாம் ஒரு பெரிய ரோபாட் வந்து புடிச்சி அதோட வய்த்துக்குள்ள போட்டுகுது... அதுக்குள்ள பிச்சக்காரன் ஒருத்தனும் (குப்பைத்தொட்டி வாசகன்) மாட்டிகிறான்... குப்பத்தொட்டி படிக்கிறதால நெறைய தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட நம்ம பிச்சக்காரன், ரோபாட் வைத்த திருவோட்டாலயே அடிச்சி பொளந்து சாகடிக்கிறான். அப்பிடியே வெளிய வந்து பறக்குந்தட்டையெல்லாம் பறந்து பறந்து டவுன் பன்றான்... உலகத்தியே காப்பாத்துறான்...

அப்புறம் நாசால்லாம் வந்து பிச்சக்காரனையும், குப்பைத்தொட்டி ஓனரையும் பேட்டியெல்லாம் எடுத்து...

ஸ்ஸ்ப்பா.... இதுக்கு மேல முடியல, நீயே டெவெலப் பண்ணிக்க.

☀நான் ஆதவன்☀ said...

// சந்தனமுல்லை said...

சான்ஸே இல்ல...:-)))

நானும் குப்பைத்தொட்டியை படிக்கறேன்..இந்த வருஷம் அப்ரைசல் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்!ஹிஹி//

இந்த வருசம் உங்களுக்கு ப்ரோமோசன் கிடைக்கும் பாருங்க :)
-----------------------------------
நன்றி பல்லவன் :)
-----------------------------------
குசும்பரே உங்க சொந்த கதை சோககதையெல்லாம் இங்க சொல்லப்படாது. அண்ணி கிட்ட சொல்லி ஒரு தடவை நம்ம குப்பைத்தொட்டிய படிக்க சொல்லுங்க. அப்ப பாருங்க யபக்ட்ட :)

பாலா... said...

ஓட்டு போட்டாசி. அசத்தலா இருக்கு. பாராட்டுகள்.

☀நான் ஆதவன்☀ said...

@ஆ!இதழ்கள்

ஆனந்த் இந்த வேளையே வேணாம். முதல்ல உங்க சைட்ல போடுங்க. அப்பாலிக்கா எத்தினி ஃபாலோவர் வர்ராங்கன்னு பார்த்துட்டு நான் உங்க விளம்பரத்த போடுறதுன்னு முடிவெடுக்கிறேன் :)
-----------------------------------
@கார்த்திகை பாண்டியன்

நன்றி நண்பா. ஆனால் முன்பே நீங்கள் ஃபாலோவரா இருந்த ஞாபகம் எனக்கு.
-----------------------------------
நன்றி Mrs.Faizakader :)
----------------------------------
நன்றி மின்னல்
-----------------------------------
நன்றி குறை ஒன்றும் இல்லை இராம் (இது தானே உங்க பெயர்?)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி வினோத். எந்த மொழியானாலும் பாராட்டுதான் முக்கியம். ஸோ நோ ப்ராப்ளம் :)
-------------------------------------
வாங்க செந்தில். நன்றி

இதுக்கே இப்படின்னா முந்நூறெல்லாம் அடிச்ச பதிவர்கள் இருக்காங்களே!
-------------------------------------
நன்றி கைப்புள்ளண்ணே! தொடர்ந்து நீங்க கொடுத்து வரும் ஆதரவிற்கும் நன்றிண்ணே
-----------------------------------
@குடந்தை அன்புமணி
//தொடர்வோர் (எண்ணிக்கையில்)இருந்தா மட்டும் போதுமா பாஸ்?//
நியாமான கேள்வி அன்புமணி. இது சும்மா காமெடிக்காக போட்ட பதிவு. சீரியஸாக எடுக்க வேண்டாம் :)

ஆ! இதழ்கள் said...

முதல்ல உங்க சைட்ல போடுங்க. அப்பாலிக்கா எத்தினி ஃபாலோவர் வர்ராங்கன்னு பார்த்துட்டு நான் உங்க விளம்பரத்த போடுறதுன்னு முடிவெடுக்கிறேன் :)//

இந்த கண்டிஷன் முன்பே போடப்படவில்லை... இதை வன்மையாகக் கண்டித்து ஃபாலோயரில் இருந்து வெளியேறுகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ரெட்மகி :)
------------------------------
நன்றி சுரேஷ் :)
-------------------------------
@முத்துலட்சுமி மேடம்

மேடம் நான் சொல்ல வந்தது “வெளியில இருந்து பார்த்தா தான் இது குப்பைத்தொட்டி. உள்ள வந்தா இருக்குறதெல்லாம் வைரம் தான்”ன்னு :) ஆனா “கை நிறைய வைரம் காமிச்சிருந்தாலும் நல்லா தான் இருந்திருக்கும் :)

உங்க புது முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்
-----------------------------------
நன்றி ஜெஸிலா :)
-----------------------------------
யோவ் சோம்பேறி உன்னால ஓட்டு போடுறதுக்கு சோம்பேறித்தனம்மா சொல்லிடு. அதுக்காக “சோப்பு டப்பா” “தகர டப்பா”ன்னு சொல்லி எஸ்கேப் ஆகாத... :)
-----------------------------------
@கலையரசன்

கலை அதை விட புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு அதையும் என்னோட ஃபாலோவர் ஆக்கிருங்க. எப்பூடி?

☀நான் ஆதவன்☀ said...

//இந்த கண்டிஷன் முன்பே போடப்படவில்லை... இதை வன்மையாகக் கண்டித்து ஃபாலோயரில் இருந்து வெளியேறுகிறேன்.//

சாமி வெயிட்ட்ட்ட்ட்ட்ட்...ஒத்துக்கிறேன். உங்க கண்டிசனுக்கெல்லாம் ஒத்துக்கிறேன்..அவ்வ்வ்வ்வ்வ் உள்ளதும் போயிரும் போலயே! :)

☀நான் ஆதவன்☀ said...

@ஸ்ரீமதி

வா ஸ்ரீ. நல்லாயிருக்கையா?
வழக்கம் போல மெயில்ல அனுப்பிறவா?
-------------------------------------
@பிரதாப்

யோவ் சிம்பிளா எதுனா கதை சொல்லுவியா அத விட்டுட்டு இம்புட்டு பெரிய கதை சொன்னீன்னா பட்ஜெட் எகிரிறாது? நீ செலவு செய்யிறதா இருந்தா சொல்லு அந்த படத்தையும் செய்யலாம் :)
-----------------------------------
நன்றி பாலா :)

எவனோ ஒருவன் said...

//யோவ் சிம்பிளா எதுனா கதை சொல்லுவியா அத விட்டுட்டு இம்புட்டு பெரிய கதை சொன்னீன்னா பட்ஜெட் எகிரிறாது? நீ செலவு செய்யிறதா இருந்தா சொல்லு அந்த படத்தையும் செய்யலாம் :)//

நாமளும் எப்ப ஹாலிவுட் ரேஞ்சுக்கு போறது... ஆங்... பட்ஜெட் உதைக்கும்ல?!

இல்லன்னா உலகத்தரம், ’கலைப்படம்’னெல்லாம் சொல்றாங்களே அப்படி ட்ரை பண்லாமா? கதை இருக்குதோ இல்லையோ கூட்டம் கண்டிப்பா இருக்கும்.

ஆ! இதழ்கள் said...

படமெல்லாம் சூப்பர் ஆதவன். அதுலயும்
ஜாக்கிசான் தங்கச்சி சூப்பர். அப்புறம் ரன்னிங் ரேஸ்ல ஆடியன்ஸ்....

மேக்கிங் ஆப் திஸ் ஆட் ஒண்ணு ரிலிஸ் பண்ணீங்கன்னா நாங்களும் கத்துக்குவோம்.

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........டூ மச்சா நல்லாயிருக்கு:):):)

rapp said...

நானும் குப்பைத்தொட்டியை படிக்கறேன். எங்க என்னால வோட்டு போட முடியிதான்னு பாக்கறேன்.

rapp said...

//சோப்பு போட்டு தேய்ச்சு குளிச்சாக்கா, துணி பவுடர் போட்டு துணி துவைச்சாக்கா, அப்பாலிக்கா கூல் ட்ரிங்ஸ் குடிச்சாகா, டூத் பவுடர் போட்டு பல் தேய்ச்சா “தன்னம்பிக்கை” வர்றப்ப.....நம்ம “குப்பைத்தொட்டி”யில இருக்குற பதிவ படிச்சா கூட ”தன்னம்பிக்கை” வரும்ன்னு சொல்ற விளம்பரம் தான் மேல இருக்குறது.//

:):):)

//“குப்பைத்தொட்டி”ய படிச்சா ஐ.ஏ.எஸ் ஆகுற மாதிரி ஒரு விளம்பரம்ன்னு கைவசம் நிறைய இருக்கு. நேரம் கிடைக்கும் போது அவுத்து விடுறேன் மக்கா.//

அதெல்லாம் ஓகே, ஆனா தேவயானி கணக்கா கலெக்டராகி, என் மாமனார் கட்டைவிரலை பேப்பர் வெயிட்டால நசுக்கனுமான்னு பாக்குறேன்.

rapp said...

//
ஏலேய் மக்கா ஓட்டு போட மறந்துராதீக//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......இதுதான் புண்ணைக் கீறி வைத்தியம் பாக்குறதா?

அய்யனார் said...

சான்ஸே இல்ல...:-)))

பிரியமுடன்.........வசந்த் said...

அண்ணா குப்பைதொட்டி கிரியேட்டிவிட்டி சூப்பர்ங்ணா எப்பிடி உங்கள மிஸ் பண்ணேன்னு தெரியல சரி வுடுங்க 75 ஃபாலோயர் நாந்தேன்......

☀நான் ஆதவன்☀ said...

நன்றி பிரதாப்
------------------------------------
நன்றி ஆனந்த். கண்டிப்பா அதைப் பற்றியும் கூடிய சீக்கிரம் போட்டுடலாம் :)
------------------------------------
ராப் பதிவா நல்லாயிருக்குன்னு ஏன் அழறீங்க. அவ்வ்வ்வ்...

மாமனார் மேல என்ன ஒரு பாசம் :)

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......இதுதான் புண்ணைக் கீறி வைத்தியம் பாக்குறதா?//

அப்ப உங்களுக்கு ஓட்டு போடுற வயசாகல போல :)சந்தோஷமான விசயம் தானே.
-----------------------------------
நன்றி அய்யனார்
----------------------------------
நன்றி வசந்த். இந்த பதிவோட நோக்கம் உங்கள மாதிரி ஒரு நாலைஞ்சு பேரு தான் புரிஞ்சிருக்காங்க :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

அண்ணே ரோஜாவ எப்படி கூப்பிட்டாலும் அழகுண்ணே.. அதே மாதிறி என்னை நீங்க எப்படி வேணாலும் கூப்புடுங்க.. என் பேரு ராஜ் ங்க..

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. குப்பைத்தொட்டி கோபுரம் போல அல்லவா காட்சி அளிக்கிறது. உற்சாகம் பெற பிறரை உற்சாகப்படுத்துங்கள் எனும் வகையில் அமைந்த இடுகை அருமை. மிக்க நன்றி.

கோபிநாத் said...

கலக்கல் டா செல்லம் ;)))

ஆமா உன் கூட போன்ல பேசுறதை வச்சி ஏதாச்சும் விளம்பரம் போட்டுவியோ!!!!? ;)

sgramesh said...

2000% superrrr Boss. Vazhthukkal

சூரியன் said...

சிறப்பான விளம்பரம் ..

☀நான் ஆதவன்☀ said...

ஓக்கே ராஜ் :)
---------------------------------
நன்றி இராதாகிருஷ்ணன்
---------------------------------
நன்றி கோபிநாத்
----------------------------------
நன்றி ரமேஷ்
---------------------------------
நன்றி சூரியன்

pappu said...

அனிமேஷன்லாம் ப(பி)ண்றீங்களே! எனக்கும் ஏதாவது பண்ணிக்கொடுங்க. நாங்களும் பொழச்சுக்குவோம்ல!

வெட்டிப்பயல் said...

அட்டகாசம்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

எங்கிருந்தாலும் உடனடியாக இந்த பக்கத்திற்கு வரும் படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்.. மீறினால் ஜக்கம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்....
http://yellorumyellamum.blogspot.com/2009/07/blog-post_28.html

நாகா said...

அய்யோ எட்டிசலாத் சாணி தாங்க முடியவில்லை.. நேத்தே கமெண்டு போடலாம்னா, நெட்டு படுத்துது.. உங்க விளம்பரத்தால ஒன் மோர் ஃபாலோயர் ரெடி..

நாகா said...

என்னங்க ஃபாலோயர்ஸ் விட்ஜெட்ட Disable பண்ணிட்டீங்களா? லோடு ஆகவே மாட்டேங்குது?

☀நான் ஆதவன்☀ said...

வாங்க பப்பு. கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா? :)
------------------------------------
நன்றி வெட்டி :)
------------------------------------
விருதுக்கு நன்றி ராஜ்
------------------------------------
நாகா ரொம்ப நன்றி. நான் எதுவும் டிஸ்ஸபெல் பண்ணலையே? ஒரு ஆளு கூடினது நேத்தே தெரிஞ்சுது. ஆனா யாருன்னு பேரு தான் வரல. இப்பவும் உங்க பேரு வரல நாகா.

Moni said...

Please visit my site, too.

http://monimaus-monalila.de.tl

Greetings from Austria

Moni

ஸ்ரீமதி said...

//வழக்கம் போல மெயில்ல அனுப்பிறவா?//

Anuppunga anna.. :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

கலக்கல் ஆதவன்.. ரசித்தேன்.!

எனக்கும் டெய்லி 500 ஹிட்ஸ், 50 பின்னூட்டம் கிடைக்கும் படி அருள் கிடைக்குமா?

cheena (சீனா) said...

அய்யோ - கலக்கல் பதிவு - வைரங்கள் நிறைந்த குப்பைத் தொட்டி

நல்லாருக்கு

நல்வாழ்த்துகள் நான் ஆதவன்

☀நான் ஆதவன்☀ said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...

கலக்கல் ஆதவன்.. ரசித்தேன்.!

எனக்கும் டெய்லி 500 ஹிட்ஸ், 50 பின்னூட்டம் கிடைக்கும் படி அருள் கிடைக்குமா?//

நன்றி ஆதி. டெய்லி மூணு தடவை “குப்பைத்தொட்டி”க்கு வந்து எல்லா பதிவையும் படிங்க. கண்டிப்பா நல்லது நடக்கும் :)

-----------------------------------
நன்றி சீனா ஐயா

ஆ! இதழ்கள் said...

நன்றி ஆதி. டெய்லி மூணு தடவை “குப்பைத்தொட்டி”க்கு வந்து எல்லா பதிவையும் படிங்க. கண்டிப்பா நல்லது நடக்கும் :)//

யாருக்கு? ஹலோ அவரு கேட்டது அவரு ப்ளாகுக்கு 500 ஹிட்ஸூ...

தேவன் மாயம் said...

கிழித்து................சாரி .............கிளிச்சு நார் நாரா தொங்க விட்டியே நாராயணா!!!

தேவன் மாயம் said...

புடிங்க 500 ஹிட்டு!!!!ஓகேயா!!

கார்த்திக் said...

எப்படிங்க முடியுது.. அசத்துங்க...

goma said...

எனக்குப் பிடித்தவர்கள் இந்த ஜூ ஜூ மக்காஸ்...பெரிய பெரிய விஷயஙக்ளையெல்லாம் அழகாக சொல்லி விடுகிறார்கள்.
குப்பைத் தொட்டியில் இன்னும் அழகாக ஜொலிக்கிறார்கள் .வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நானும் இப்பொழுது பின் தொடர்கிறேன் - நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails