”இலவு காத்தக் கிளிகள்”-பஞ்சாமிர்தம்

எப்பவும் சேட்டனுக்கு நீ மட்டும் தான் கோல் அடிப்பையா? அவர் உன்ன கலாய்க்கமாட்டாரான்னா..........அதுவும் சில சமயம் நடக்கும். என்ன நான் வெளிய சொல்லிக்கிறதுல்ல.

சேட்டனுக்கு வாரக் கடைசியான வியாழக்கிழமை மட்டும் கொஞ்சம் மப்பு அதிகமாக இருக்கும். எனக்கு ரொம்பவும் போர் அடித்தால் இரண்டு மூன்று சேட்டன்மார்கள் ஒன்றாக இருக்குமிடத்தில் போய் மொக்கை போடுவது வழக்கம். டைம் பாஸ் ஆகும்.

அதுபோல் சென்ற வாரம் பேசிக்கொண்டிருக்கும் போது “அதிர்ஷ்டம்”த்தை பற்றி பேச்சு வந்தது. அதிர்ஷ்டத்தில தான் வாழ்க்கையே இருக்குதுடா தம்பின்னார்.

எங்கன சேட்டா?ன்னு தெரியாம கேட்டுட்டேன்.

உடனே “ஒருத்தன் வாழ்க்கையில வேலையே கிடைக்காம ரொம்ப கஷ்டபட்டிருந்தான் அது அவனோட துரதிஷ்டம். அப்புறம் ஒரு வேலை கிடைச்சுது அது அவன் அதிர்ஷ்டம். ஆனா அது சாதாரணப் பெயிண்டர் வேலை, அது அவன் துரதிஷ்டம். ஆனா அதுல அவனுக்கு கொஞ்சம் பணம் கிடைச்சு அதுல பசிய போக்குற அளவுக்கு சாப்பாடு வாங்கினான், அது அவன் அதிர்ஷ்டம். ஆனா அந்த வேலையில ரொம்ப உயரமான கட்டத்தில தொங்கிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது அவன் துரதிஷ்டம்....”

”சேட்டா மதி...ஞனக்கு சமயம் ஆயி....ஞான் பின்ன வரா...” முடிக்கும் முன் அட இரு தம்பி என்றபடி தொடர்ந்தார்.

“உயரமான கட்டிடத்தில வேலைப் பார்த்தாலும் நிறைய பாதுகாப்புகளை கம்பெனி செஞ்சிருந்தது, அது அவன் அதிர்ஷ்டம். அப்படி பாதுகாப்பு செஞ்சிருந்தாலும் அதுல ஒரு கயிறு ஸ்டாராங்க இல்லாதது அவன் துரதிஷ்டம். அத அவன் கவனிச்சது அவன் அதிர்ஷ்டம். ஆனா அதுக்குள்ள அது அறுந்து விழுந்தது அவன் துரதிஷ்டம். ஆனா பக்கத்திலேயே ஆஸ்பிட்டல் இருந்தது அவன் அதிர்ஷ்டம். விழுறதுக்கு முன்னால கீழ ஒரு லாரி வந்தது அவன் துரதிஷ்டம், ஆனா அது மணல் லாரியா போனது அவன் அதிர்ஷ்டம். மணல் மேல குதிக்கலாம்ன்னு போனவனுக்கு மணலுக்கு நடுவுல ஒரு கடப்பாரை செங்குத்தா குத்தி நிக்க வச்சது அவன் துரதிஷ்டம்” மூச்சு விடாமல் முடித்தார்.

ஏற்கனவே இந்த மொக்கை ஓடியிருக்கும் போல. மத்த சேட்டன்மார்கள் கண்டுக்கவே இல்ல.

நைஸாக கழண்டு வெளியே வந்த போது எல்லா சேட்டன்களும் சத்தம் போட்டு சிரிப்பது கேட்டது. ங்கொக்கா மக்கா இனிமே இவன்க தண்ணியடிச்சிருக்கும் போது பேசவே கூடாது.

******************************************************************************************
போன வாரம் நண்பரோட சாட்டிங்ல இருக்கும் போது சாம் ஆண்டர்சன் படத்த பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

படம் செம காமெடியாக இருப்பதாக கூறினார். நாளைக்கே அவரைப் பற்றி ஒரு பதிவு எழுத போவதாக கூறினார். சாம் ஆண்டர்சன் பார்வையற்றவர் என்று கூறியதும். கொஞ்சம் யோசித்தவர்.......ஓக்கே இனி அவரை கிண்டலேத்தி எதுவும் சொல்ல மாட்டேன் என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து “நல்லா தெரியுமா அவருக்கு கண்ணு தெரியாதா? இல்ல அந்த படத்தோட டைரக்டருக்கு கண்ணு தெரியாதா? என்றார். யோசிக்க வேண்டிய கேள்வி.

******************************************************************************************
ஸ்ஸ்ஸ்ப்பா வெயில் மண்டைய பொளக்குது இங்க. இதுல தெரியாத்தனமா “நெடுங்குருதி” படிக்க ஆரம்பிச்சேன். வெக்கை என் மேல் வடிந்து, கழுத்து வழி கசிந்து, உடம்பெங்கும் படர்ந்து....படிக்கிற நம்மளுக்கும் வியர்க்க வைக்கிறது அந்த புத்தகம். கதை சொல்லும் போக்கே எனக்கு புதியதாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலேயும் கதை நகர்வது அந்த காலத்திற்கே நம்மை பயணிக்க வைக்கிறது. கதைக்கு நாயகன் என்று யாருமில்லை. கதை மாந்தர்களை நம் மனதில் மிக அழுத்தமாய் பதிய வைக்கிறார் எஸ்.ரா.

கதை வாசிக்கும் போது வேம்பின் மணத்தை நம் மேலும் படற விடுகிறார் ஆசிரியர். மனதை விட்டு அகல மறுக்கிறது அந்த வேம்பலை கிராமம்.

******************************************************************************************
இந்த வருஷம் தம்பி (சித்தி பையன்) ஒருத்தன் +2 பரிட்சை எழுதியிருந்தான். ரிசல்ட் வருகிற நேரம் அவன்கிட்ட நம்பர் வாங்கி இங்க மார்க் பார்த்தேன். மார்க்கு ரொம்ப சுமார் தான். அப்ப கூட சேட்டனும் இருந்தாரு.

கொஞ்ச நாள் முன்னாடி பொறியியல் கவுன்சிலிங் நடக்குறத நியூஸ்ல காமிச்சாங்க. அத பார்த்திட்டு இருந்த சேட்டன் “தம்பியோட(என்னொட) தம்பிக்கு எந்த காலேஜ் கிடைச்சுது”ன்னு கேட்டாரு. நான் ”இல்ல சேட்டா பையன் மார்க் ரொம்ப கம்மி. இன்ஞினியரிங் எல்லாம் கிடைக்காது. வேற ஏதாவது தான் சேர்க்கனும்”ன்னு சொன்னேன்.

“ஏன்?”ன்னு கேட்டாரு

“இரண்டு மெயின் சப்ஜெக்ட்ல பார்டர்ல பாஸாயிட்டான்”ன்னேன்

“பார்டர்ல பாஸானா மிலிட்ரி சுட்டுறாதா தம்பி”ன்னு கெக்க பெக்கேன்னு ஒரே சிரிப்பு பயபுள்ளைக்கு.....

நான் “இல்ல சேட்டா அது சென்ட்ரல் போர்ட்ல(CBSE) தான் அப்படி ஸ்டேட் போர்டுல அப்படி இல்ல. பையன் ஸ்டேட்ல தான் பார்டர் பாஸ் பண்ணினான்”னேன்....கோல் வாங்கிட்டு அதுக்கும் பயபுள்ள கெக்கே பெக்கேன்னு சிரிப்பு.
******************************************************************************************
இந்த வார கார்டூன்: “இலவு காத்தக் கிளிகள்”


24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சுந்தர் said...

பார்டர் ல பாஸ் , செம காமெடி , இகி..., இகி ......

சந்தனமுல்லை said...

//பையன் ஸ்டேட்ல தான் பார்டர் பாஸ் பண்ணினான்”னேன்....கோல் வாங்கிட்டு அதுக்கும் பயபுள்ள கெக்கே பெக்கேன்னு சிரிப்பு.//

:-)))))))))))

கலையரசன் said...

1. சேட்டனுங்க காமநெடி தானே பண்ணுவாங்க காமெடி எல்லாம் பண்றாய்ங்களா?

2. பாசோட படத்த பாத்தா நமக்குதான் கண்ணு எக்கிக்குமுன்னு சொல்ல வேன்டியதுதான..

3. பார்த்தா இங்கிலீபீசு படிக்கபுள்ள மாதிரி இருக்குற? தமிழ் புஸ்தகமெல்லாம் படிப்பியா கண்ணு?

4. CBSE ன்னா.. சென்ட்ரல் பஸ்டான்ட் ஆப் சவுத் எக்மோர் ன்னு மல்லூகிட்ட சொல்லலியா ராசா?

அடுத்த தடவ புதிய பதிவர்கள் vs பிரபல பதிவர்கள் பத்தி கார்டூன் போடு மச்சி!!

rapp said...

அய்யய்ய, நீங்களும் சேட்டன்களும் செத்து செத்து வெள்ளாடினா, அதுக்கு எங்கள ஒய் அம்பயராக்குறீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்............

//
நான் “இல்ல சேட்டா அது சென்ட்ரல் போர்ட்ல(CBSE) தான் அப்படி ஸ்டேட் போர்டுல அப்படி இல்ல. பையன் ஸ்டேட்ல தான் பார்டர் பாஸ் பண்ணினான்”னேன்....கோல் வாங்கிட்டு அதுக்கும் பயபுள்ள கெக்கே பெக்கேன்னு சிரிப்பு.//

அய்யகோ என்னைய முந்திடுவீங்க போலருக்கே பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடிக்கிரதில்:):):)

//படம் செம காமெடியாக இருப்பதாக கூறினார். நாளைக்கே அவரைப் பற்றி ஒரு பதிவு எழுத போவதாக கூறினார். சாம் ஆண்டர்சன் பார்வையற்றவர் என்று கூறியதும். கொஞ்சம் யோசித்தவர்.......ஓக்கே இனி அவரை கிண்டலேத்தி எதுவும் சொல்ல மாட்டேன் என்றார்.//

சும்மா இல்லாம எதையாச்சும் கொளுத்தி போட்டுடறதா? இப்போ நாயகன், கானல்நீர் பட இயக்குனர்களின் பார்வையும் கேள்விக்குரியதாகிடுது பாருங்க. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........
சாம் ஆண்டர்சன் நேரடியா வந்து ஸ்டெப்னிக்கு வெளக்கம் கொடுத்தாதான் சரிவரும்:):):)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி சுந்தர்
---------------------------
நன்றி சந்தனமுல்லை
---------------------------
அவ்வ்வ்...கலை யார பாத்து இங்கிலீசுபீசு புஸ்தகம் படிப்பேன்னு நினைச்சீங்க..அந்த எழவெல்லாம் படிக்கறதில்ல கலை :)

அடுத்த மீட்டிங் வரட்டும் அதையும் போட்டுடலாம் :)
----------------------------
வாங்க இராப்.
//அய்யகோ என்னைய முந்திடுவீங்க போலருக்கே பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பிடிக்கிரதில்:):):)//

உங்களயெல்லாம் மிஞ்ச முடியுமா? நீங்க எல்லைதாண்டிய பயங்கரவாதம் ஆச்சே :)

யூ டியூப்ல போய் சாம் ஆண்டர்சன் வீடியோல இருக்குற கமெண்ட்ஸ பாருங்க. அதுல நிறைய பேரு அவர் பார்வையற்றவருன்னு தான் சொல்லியிருக்காங்க

கைப்புள்ள said...

//கொஞ்ச நேரம் கழித்து “நல்லா தெரியுமா அவருக்கு கண்ணு தெரியாதா? இல்ல அந்த படத்தோட டைரக்டருக்கு கண்ணு தெரியாதா? என்றார். யோசிக்க வேண்டிய கேள்வி.//

ஹி...ஹி...உண்மையாவே யோசிக்க வேண்டிய கேள்வி தான் :)

கைப்புள்ள said...

//நைஸாக கழண்டு வெளியே வந்த போது எல்லா சேட்டன்களும் சத்தம் போட்டு சிரிப்பது கேட்டது. ங்கொக்கா மக்கா இனிமே இவன்க தண்ணியடிச்சிருக்கும் போது பேசவே கூடாது.//

புத்தி கொள்முதல்
:)

இளைய பல்லவன் said...

பஞ்சாமிர்தம் - இலவு காத்த கிளிகள்னு ஐந்து கிளிகளைப் போட்ட உங்கள் பினா வானாவைப் பாராட்டுகிறேன்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\rapp said...
அய்யய்ய, நீங்களும் சேட்டன்களும் செத்து செத்து வெள்ளாடினா, அதுக்கு எங்கள ஒய் அம்பயராக்குறீங்க? கிர்ர்ர்ர்ர்ர்ர்............
//

இது சூப்பர்..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அவர் உன்ன கலாய்க்கமாட்டாரான்னா..........அதுவும் சில சமயம் நடக்கும். என்ன நான் வெளிய சொல்லிக்கிறதுல்ல.//
நீங்க அரிச்சந்திரனுக்கு பக்கத்துவீட்டுக்கு குடிபோயிட்டிங்களோ...?

இதுக்குமுன்னாடி வந்த பதிவில் எதெல்லாம் இப்படி கேட்டு வாங்கிப்போட்டதுன்னு தெரியலயேப்பா.. :))

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கைப்புள்ள அண்ணே. இனி உசாரா இருந்துக்கனும் :)
------------------------------------
// இளைய பல்லவன் said...
பஞ்சாமிர்தம் - இலவு காத்த கிளிகள்னு ஐந்து கிளிகளைப் போட்ட உங்கள் பினா வானாவைப் பாராட்டுகிறேன்!//

பதிவு நல்லாயிருக்கா இல்லையான்னு ஒன்னுமே சொல்லாம பினா வானா பின்னூட்டம் போட்ட உமது திறமையையும் பாராட்டுகிறேன் :)
----------------------------------
//நீங்க அரிச்சந்திரனுக்கு பக்கத்துவீட்டுக்கு குடிபோயிட்டிங்களோ...?//

கிர்ர்ர்ர்...எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் அவர் குடித்தனம் இருந்தாரு.

//இதுக்குமுன்னாடி வந்த பதிவில் எதெல்லாம் இப்படி கேட்டு வாங்கிப்போட்டதுன்னு தெரியலயேப்பா.. :)//

மேடம் இப்படி சந்தேகப்பட்டுடீங்களே..
எல்லாம் சொந்த சரக்கு மேடம் :)

வினோத்கெளதம் said...

1.இப்பேர்ப்பட்ட மொக்கை குரூப்ல நீங்க எப்படி மாட்டுனிங்க..

2.உண்மையில் சாமுக்கு கண் தெரியாதா..

3.எனக்கும் ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் மேல் ரொம்ப பிரியம் உண்டு..

4.அவ்வவ்..

5.அடுத்த தடவ புதிய பதிவர்கள் vs பிரபல பதிவர்கள் பத்தி கார்டூன் போடு மச்சி!!..
(இது மட்டும் ரொம்ப நேரம் யோசிச்சு போட்ட கம்மென்ட்..)

Bleachingpowder said...

//யூ டியூப்ல போய் சாம் ஆண்டர்சன் வீடியோல இருக்குற கமெண்ட்ஸ பாருங்க. அதுல நிறைய பேரு அவர் பார்வையற்றவருன்னு தான் சொல்லியிருக்காங்க//

இது யாரோ கிளப்பி விட்ட கப்ஸா, யாருக்க்கு யாரோ படத்தின் சில காட்சிகளை யூ ட்யூபில் பார்த்தது உங்கள் அதிர்ஷ்டம், ஆனா இந்த கருமம் புடிச்ச படத்தை நான் முழுசா பார்த்தது என்னோட துரதிஷ்டம்.

எவனோ ஒருவன் said...

பார்டர் பாஸ் காமெடி சூப்பர்.

“இலவு காத்தக் கிளிகள்”ல ரொம்ப உள்குத்து இருக்கும்போல இருக்கே...

கோபிநாத் said...

;-))

♫சோம்பேறி♫ said...

/* அந்த படத்தோட டைரக்டருக்கு கண்ணு தெரியாதா? என்றார். யோசிக்க வேண்டிய கேள்வி. */

ரொம்ப அறிவுப்பூர்வமான கேள்வி.. உங்க நண்பர் ரொம்ப பெரிய புத்திசாலியா இருப்பார் போல.. அவருக்கு தங்கத்துல காப்பு செஞ்சு போடுங்க..

மங்களூர் சிவா said...

/
“பார்டர்ல பாஸானா மிலிட்ரி சுட்டுறாதா தம்பி”ன்னு கெக்க பெக்கேன்னு ஒரே சிரிப்பு பயபுள்ளைக்கு.....
/

:))))))))))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

ஹலோ சூர்யா நல்ல பதிவு

//கொஞ்ச நேரம் கழித்து “நல்லா தெரியுமா அவருக்கு கண்ணு தெரியாதா? இல்ல அந்த படத்தோட டைரக்டருக்கு கண்ணு தெரியாதா? என்றார். யோசிக்க வேண்டிய கேள்வி.//

சேட்டை ஓவருப்பா
சூபர் ,ஒட்டு போட்டாச்சு

நீங்கள் வரைந்த மரமும் கருத்தும் அருமை

☀நான் ஆதவன்☀ said...

// வினோத்கெளதம் said...

1.இப்பேர்ப்பட்ட மொக்கை குரூப்ல நீங்க எப்படி மாட்டுனிங்க..//

அட என்ன வினோத்.....என்கிட்ட மாட்டுனதுல தான் அவுங்க ரொம்ப ஃபீல் பண்றாங்க

// 2.உண்மையில் சாமுக்கு கண் தெரியாதா..//

அப்படிதான் யூ டியூப்ல இருக்கு


//5.அடுத்த தடவ புதிய பதிவர்கள் vs பிரபல பதிவர்கள் பத்தி கார்டூன் போடு மச்சி!!..
(இது மட்டும் ரொம்ப நேரம் யோசிச்சு போட்ட கம்மென்ட்..)//

கலை போட்ட கமெண்ட காப்பி செய்து போட்டுட்டு பயபுள்ளைக்கு பேச்ச பாரு பேச்ச :)

☀நான் ஆதவன்☀ said...

//இது யாரோ கிளப்பி விட்ட கப்ஸா, யாருக்க்கு யாரோ படத்தின் சில காட்சிகளை யூ ட்யூபில் பார்த்தது உங்கள் அதிர்ஷ்டம், ஆனா இந்த கருமம் புடிச்ச படத்தை நான் முழுசா பார்த்தது என்னோட துரதிஷ்டம்.//

ஆகா...தல நீங்களுமா அவ்வ்வ்வ்வ்
-----------------------------------
//எவனோ ஒருவன் said...

பார்டர் பாஸ் காமெடி சூப்பர்.//

நன்றி பிரதாப் :)

// “இலவு காத்தக் கிளிகள்”ல ரொம்ப உள்குத்து இருக்கும்போல இருக்கே...//

கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா

☀நான் ஆதவன்☀ said...

// கோபிநாத் said...

;-))//

என்ன சிரிப்பு ராஸ்கல். கமெண்ட போடாம :)
-------------------------------------
//♫சோம்பேறி♫ said...

ரொம்ப அறிவுப்பூர்வமான கேள்வி.. உங்க நண்பர் ரொம்ப பெரிய புத்திசாலியா இருப்பார் போல.. அவருக்கு தங்கத்துல காப்பு செஞ்சு போடுங்க.//

என்னது தங்கத்து காப்பா? அதெல்லாம் அந்த பயபுள்ளைக்கு ஓவரு.சாக்லேட் வாங்கி கொடுத்தா போதும் சோம்பேறி. கப்புன்னு அடங்கிடுவான்

☀நான் ஆதவன்☀ said...

நன்றி மங்களூர் சிவா :)

நன்றி கார்த்திக்

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல நகைச்சுவை பதிவுங்க!!!

☀நான் ஆதவன்☀ said...

நன்றி குறை ஒன்றும் இல்லை :)

Related Posts with Thumbnails