”ஆப்பக்கடை” எதிரில்.......


பதிவர் வட்டம்


புகைப்படங்களில் சில........
ஒரு வழியா பதிவர் சந்திப்பு முடிஞ்சுது. சக்திவேலுக்கு புகழாரம் சூட்டி ஆசிப் அண்ணாச்சியும்,அய்யனாரும் தொடங்கி வைத்தனர். தேவையில்லாமல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லோகலப்படுத்தியதற்காக குசும்பன் மீது குற்றம் சாற்றப்பட்டது. ஆனால் இதில் அண்ணாசிக்கும் பங்கிருப்பதால் விசாரணை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

ஆப்பக்கடை எதிரில் “ஆப்பு” “ஆப்புரசன்” யாராக இருக்கும் என்ற கேள்வியே நெடு நேரம் ஓடியது. பின்பு “ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது. “ஆப்பு” மட்டும் யார் என்று முடிவெடுக்காமலேயே போயிற்று.

பல முக்கியமான விசயங்களை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் ஆசிப் அண்ணாச்சி விளக்கியது சிறப்பு. இன்றைய பதிவுலக சூழலை முன்பிருந்த சூழலோடு ஒப்பிட்டு பேசினார். அனைவரையும் எதற்காக எழுத வந்திருக்கிறீர்கள் என்ற கேட்க தொடங்கினார். அடிக்காத போனை அனவரும் எடுத்து “ஹலோ” என்ற போது வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றினார்.

அய்யனாரின் நேர்மையான விவாதம், வலைப்பதிவின் அடுத்த கட்ட நகர்வுக்கான அவரது ஆதங்கம் என “நச்” என சொல்லியது மற்றொரு சிறப்பு. சுந்தர் சார் கொண்டு வந்த வடைகள் மற்றொரு சிறப்பு.

யாரும் இங்கு “பிரபல பதிவர்” “மூத்த பதிவர்” கிடையாது. தங்களுக்கான அடையாளத்தை மற்றவர்கள் முக்கியமாக பின்னூட்டங்களோ, வெகுஜன இதழ்களோ கொடுக்க முடியாது என்றும் தாங்களே அதை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். முடிந்த வரை மொக்கைளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு குசும்பனின் சாபத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் அச்சு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எழுவது நல்ல பழக்கம் ஆனால் எழுதும் முன் நன்றாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல் நலம். இதற்காக புத்தகங்கள் அவசியப்படின் தரவும் தயார் என அய்யனாரும்,ஆசிப் அண்ணாச்சியும் கூறினர். புதிதாக வலைப்பூவில் எழுத வந்துள்ள பதிவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெளிவாக்கப்படும் என்றார். பட்டறை நடத்தலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது.

யார் யார் வந்தார்கள் என்று அறிய சென்ஷி எழுதிய பதிவிற்கு செல்லவும்
குசும்பன் எழுதிய பதிவு
செந்தில் எழுதிய பதிவு
கீழை ராஸா எழுதிய பதிவு
கிளியனூர் இஸ்மத்

சில துளிகள்:

1. வந்ததில் ஒரே ஒரு பெண் பதிவர். “படகு” என்ற வலைப்பூவை எழுதுபவர்.

2.ராஜேந்திரன் என்ற 60 வயது மதிக்கதக்க பதிவரல்லாத ஒருவர் உருப்படியாக இங்கு ஒரு கூட்டம் நடப்பதாக கேள்விப்பட்டு குசும்பனுக்கு போன் செய்து வந்திருந்தது ஆச்சர்யம். அதை அவர் குசும்பனுக்கு விளக்க குசும்பன் ஞாபகம் வராமல் “ஙே” என முழிக்க....பின்பு ”ஓ நீங்களா” ஞாபகம் வந்தவராக பேசினார்.

3.முதலுதவி பெட்டியுடன் பதிவர் சந்திப்புக்கு வரலாம் என நினைத்தால், உலகத்திலேயே மிக அமைதியான,அடக்கமான,அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் என்று சான்றிதல் கொடுக்கப்பட்டது ஆச்சர்யம்.கிசுகிசு மாதிரி......
ஒரு பதிவர் கொண்டு வந்த புத்தகங்களை ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு எடுத்து படிக்க(புரியலைனாலும் சில ஆங்கில புத்தங்களும் கூட) ஒரே ஒரு புத்தகம் மட்டும் அனாமத்தாக கிடந்தது. யாரும் அதை எடுக்கவே இல்லை. அந்த “பிரபலப் பதிவர்” அதை எடுத்த போது எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம் கலந்த வியப்பு. ஆனால் அதை எடுத்த அவர் “கர்சீப் கொண்டு வரல மக்கா”ன்னு காற்றுக்காக வீச தொடங்கிய போது சபையே சிரிப்பில் மூழ்கியது. அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.

26 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

வினோத்கெளதம் said...

சூப்பர் விளக்கம்..வோட்டு போட்டாச்சு..

கீழை ராஸா said...

ஆளாலுக்கு கலக்குறீங்க.. மக்க

கோபிநாத் said...

\\அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.\\

அந்த படத்தை யாரு வைத்திருந்தாலும் உடனே பதிவிடுங்கள் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பச்சை பசேல்ன்னு இருக்கு அந்த பார்க் ...

சென்ஷி said...

//இதில் அண்ணாசிக்கும் பங்கிருப்பதால் விசாரணை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.//

அண்ணாச்சி மேல நாம எம்புட்டு மருவாதி வச்சிருக்கோமுங்கறத இந்த ஒரு வரியில தெரிஞ்சுருக்கும் :)

சென்ஷி said...

//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //

ஏன்! அறிவு ஆவி, அறிவு குமுதம், அறிவு குங்குமம் இந்த பதிவர்கள் இருக்குறதை எல்லாம் நீங்க குறிப்பிடல ஆதவன் :)

ச.செந்தில்வேலன் said...

நல்ல பதிவு ஆதவன்.. அந்த பிரபல பதிவருக்கு 12 எழுத்துப்பேர்னும் சொல்லீறவேண்டியது தானே :))

//
பின்பு “ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது. “ஆப்பு” மட்டும் யார் என்று முடிவெடுக்காமலேயே போயிற்று.
//

கலை.. சொல்லவே இல்ல? கழுகுப் பார்வை பார்க்கும் போதே நினைச்சேன் :)

வெடிகுண்டு முருகேசன் said...

நல்லா இருக்கு படங்கள்

நாகா said...

நல்லாருக்கு தல..

சந்தனமுல்லை said...

//சென்ஷி said...

//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //

ஏன்! அறிவு ஆவி, அறிவு குமுதம், அறிவு குங்குமம் இந்த பதிவர்கள் இருக்குறதை எல்லாம் நீங்க குறிப்பிடல ஆதவன் :)
//

:-)))

குசும்பன் said...

// குசும்பனுக்கு போன் செய்து வந்திருந்தது ஆச்சர்யம். அதை அவர் குசும்பனுக்கு விளக்க குசும்பன் ஞாபகம் வராமல் “ஙே” என முழிக்க....பின்பு ”ஓ நீங்களா” ஞாபகம் வந்தவராக பேசினார்.//

நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி!உன்னை எல்லாம்...இருடீ!


கிசு கிசு ஹி ஹி ஹி ஹி:))

ஆ! இதழ்கள் said...

யாராவது சூப்பர் ஸ்டார் எங்கனு சொல்லுங்கப்பா...

☀நான் ஆதவன்☀ said...

//ஆ! இதழ்கள் said...
யாராவது சூப்பர் ஸ்டார் எங்கனு சொல்லுங்கப்பா...//

ஹி..ஹி முத படத்துல மூணாவதா, ப்ளூ ஜீன்ல இருக்காருல்ல அவரு தான்..

☀நான் ஆதவன்☀ said...

முதல் படத்தில் from left to right சுபைர்,அய்யனார்,நான்,கோபிநாத்,கார்த்திகேயன்,சென்ஷி,வினோத் கௌதம்

☀நான் ஆதவன்☀ said...

நன்றி வினோத்

நன்றி கீழை ராஸா

ஆமாம் கோபி...சீக்கிரம் போடச் சொல்லனும் :)

@முத்துலட்சுமி
அவ்வ்வ் மேடம்..புரியுது மேடம் புரியுது :)

நன்றி சென்ஷி :)

நன்றி செந்தில்வேலன் :)

நன்றி வெடிகுண்டு முருகேசன்

நன்றி நாகா

நன்றி சந்தன முல்லை

குசும்பரே முக்கியமான நிகழ்வுகள்ல அதுவும் ஒன்னு :)

rapp said...

//அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் //

கழுகு விருது வாங்கலாம்னு தலைதெறிக்க ஓடிவந்தா அதுக்குள்ள ரெண்டு பேர் சொல்லிட்டாங்களா??????????கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.............

rapp said...

//அடிக்காத போனை அனவரும் எடுத்து “ஹலோ” என்ற போது வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றினார்.//

:):):)

கரவைக்குரல் said...

எழுத்தாளர்களுக்கான அங்கீகாரத்தை எந்த வெகுஜன ஊடகங்களோ அல்லது எந்த களிப்பூட்டும் இதழ்களோ வழ்ங்கிவிட முடியாது.அது அந்த அந்த எழுத்தாளர்களே உருவாக்கி கொள்வது தான்.
சுட்டிக்காட்டபடவேண்டிய கருத்து, பகிர்வு சிறப்பு

ஆசிப் மீரான் said...

//அண்ணாச்சி மேல நாம எம்புட்டு மருவாதி வச்சிருக்கோமுங்கறத இந்த ஒரு வரியில தெரிஞ்சுருக்கும் :)//

எலே சென்ஷி!! நீ வசீருக்குற மருவாதிதான் நாட்டுக்கே தெரியுமே?

ஆதவன் நல்லா தொகுத்திருக்க.

Bleachingpowder said...

//ஆனால் அதை எடுத்த அவர் “கர்சீப் கொண்டு வரல மக்கா”ன்னு காற்றுக்காக வீச தொடங்கிய போது சபையே சிரிப்பில் மூழ்கியது. அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.//

அட சீக்கிரமா படத்தை போடுங்கப்பா, அப்ப தானே அந்த புத்தகத்திற்கும் ஒரு "விளம்பரம்" கிடைக்கும்.

ஜெஸிலா said...

புகைப்படத்தை பார்த்ததும் தெரியுதே இதுதான் பதிவர் வட்டம்னு :-)

கலையரசன் said...

//“ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது.//

இது எப்பயா நடந்தது, நா போன பிறகா?
நல்லா கிளபுறீங்க....
பீதியயய!!

இருங்க ஆப்புகிட்டயே சொல்றேன்!

வால்பையன் said...

டாக் ஆஃப் த சிட்டி!
விசிறி மேட்டர் தான் போல!
அதுக்காகவாவது பயன்படுதேன்னு சந்தேஷ்ப்படுங்க தல!

☀நான் ஆதவன்☀ said...

வாங்க இராப். அதான் நாங்கலே சொல்லிட்டோம்ல. எங்களுக்கு அந்த கழுகு விருது :)
---------------------------------
நன்றி கரவைக்குரல் தினேஷ் :)
---------------------------------
நன்றி அண்ணாச்சி :)
---------------------------------
@ப்ளீச்சிங் பவுடர்
ஆகா....தல கிசு சிசு எழுதினா ஈஸியா கண்டுபிடிச்சிட்டீங்க. நான் இன்னும் வளரனும் தல
--------------------------------
@ஜெஸிலா
நீங்க ஒருத்தர் தான் நோட் பண்ணியிருக்கீங்க ஜெஸிலா. நன்றி
--------------------------------
@கலை
கலை அது நீங்க இருக்கும் போதே பேசி முடிவு பண்ணது. அதுவும் நீங்க அத ஒத்துக்கிட்டீங்க. இனி மறுக்காதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்
----------------------------------
@வால் பையன்
அவ்வ்வ்வ்வ் இப்படி போட்டு தாக்குறீங்களே வால் :)

srinivasan said...

Good..with more photos, coverage is also a professional approach..

இளைய பல்லவன் said...

புத்தகக் காற்று வாங்கிய "பிரபலப் பதிவர்" நான் ஆதவன் வாழ்க வாழ்க !!

Related Posts with Thumbnails