விடமாட்டோம்ல.......கோர்த்து விட்டாச்சு!


புரளிய கிளப்ப நிறைய ஆள் இருக்காங்க போல. நான் ஏதோ நல்லா சுவாரஸியமா எழுதுவேன்னு புரளிய கிளப்பிவுட்டுருப்பாங்க போல, நம்ம ராப் அக்கா உடனே எனக்கு ஒரு விருதை கொடுத்து கவுரவிச்சுட்டாங்க(நீங்க இது புரளி இல்ல நிஜம்ன்னு சொல்றது என் காதுக்கு கேட்குது).

இதுக்கு பணமுடிப்பு ஏதாவது தரவேண்டியிருக்கான்னு செந்தழல் ரவியோட பதிவை மூணு தடவை படிச்சேன். ப்ச்......அந்த மாதிரி இல்ல. அடுத்த தடவை யார் கொடுத்தாலும் பணம் தர்ர மாதிரி பார்த்துக்கங்க.

யாருக்கு கொடுக்கலாம்ன்னு யோசிச்ச உடனேயே நம்ம நினைவுக்கு வருபவர்
இளைய பல்லவன். சரித்திர நாவல், திரைக்கதை எழுவது எப்படி? என தொடர்கள் எழுதுகிறார். அரசியல், கதை, மொக்கை,கவிதை(இரண்டுக்கும் நடுவுல கமா இருக்கு...பார்த்துக்கங்க) என சுவாரஸியமா எழுதுறதுல்ல வல்லவர். வாழ்த்துகள் இளைய பல்லவன்.

இரண்டாவது நம்ம பப்புவுக்கு. இவர் பதிவ படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். எவ்வளவு சுவாரஸியமானவர் என்று. கல்லூரி மாணவனுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய கலாட்டா தான் இவர் பதிவுகள். கொஞ்சம் அரசியல், காமெடி, சினிமா என சுவாரஸியமா எழுதுபவரில் வல்லவர். வாழ்த்துக்கள் பப்பு :)

அடுத்து ஆ!இதழ்கள் ஆனந்த். தலைவர் கொஞ்ச நாளா எழுதவே இல்ல. என்னென்னு தெரியல. நல்ல சுவாரஸியமா பல விசயங்களை எழுதுவார். அவருக்கும் என் வாழ்த்துகள்.


விருது வாங்கின எல்லாரும் பேசினபடி பொட்டி அனுப்பிறனும் சரியா?

28 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

செந்தழல் ரவி said...

கஞ்சம்யா நீர்.

ஆறு பேருக்கு கொடுக்கச்சொன்னா மூனு பேருக்குத்தான் கொடுத்திருக்கீர்...

ஆபிரகாம் said...

வாழ்த்துக்கள்!

செந்தழல் ரவி said...

ஓட்டு போட்டாச்சு உமக்கு..

சந்தனமுல்லை said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

சென்ஷி said...

/செந்தழல் ரவி said...

கஞ்சம்யா நீர்.

ஆறு பேருக்கு கொடுக்கச்சொன்னா மூனு பேருக்குத்தான் கொடுத்திருக்கீர்...//


ரிப்பீட்டே :)))

சென்ஷி said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இளைய பல்லவன் மாத்திரம் வாசிப்பது உண்டு. மற்ற இருவரின் அறிமுகத்திற்கு நன்றி ஆதவன்.

இளைய பல்லவன் said...

நன்றி ஆதவன்! விருது பெற்ற மற்றையோருக்கும் வாழ்த்துக்கள்.

//
கதை, மொக்கை,கவிதை(இரண்டுக்கும் நடுவுல கமா இருக்கு...பார்த்துக்கங்க)
//

கமா போட்டாலும் பக்கத்து பக்கத்து இடத்துல போட்டு இருக்கீங்க! இதுலேருந்தே நீங்க சொல்ல வர்றது தெரியுது.

///
Blogger செந்தழல் ரவி said...
கஞ்சம்யா நீர்.
ஆறு பேருக்கு கொடுக்கச்சொன்னா மூனு பேருக்குத்தான் கொடுத்திருக்கீர்...
//

ரவி, நீங்க வேற. அவர் உங்க பதிவு மூணு முறை படிச்சதால மூணு பேருக்கு கொடுத்திருக்கார். ஒரு தடவ படிச்சிருந்தார்னா ஒருத்தருக்குத்தான் கொடுத்திருப்பார்.

கோபிநாத் said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

Suresh Kumar said...

விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

\\செந்தழல் ரவி said...
கஞ்சம்யா நீர்.

ஆறு பேருக்கு கொடுக்கச்சொன்னா மூனு பேருக்குத்தான் கொடுத்திருக்கீர்...
\\

தல

இதுக்கு பெயர் தான் கட்டுடைத்தல் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பணம் இல்லாமலே அதை மூணு பேருக்குத்தான் பிரிச்சிக்குடுத்திருக்கீர்..

காசு குடுத்திருந்தா. ... ஒருத்தருக்கு குடுத்தாலே சந்தேகம் போல இருக்கு..:)

☀நான் ஆதவன்☀ said...

@ரவி

//கஞ்சம்யா நீர்.

ஆறு பேருக்கு கொடுக்கச்சொன்னா மூனு பேருக்குத்தான் கொடுத்திருக்கீர்..//

அவ்வ்வ் மூணு தடவை படிச்சும் அத கவனிக்காம விட்டுட்டேனே. பாவ மன்னிப்பு எதுனா இருந்தா சொல்லுங்க. செஞ்சுடுவோம்

☀நான் ஆதவன்☀ said...

@இளைய பல்லவன்

//கமா போட்டாலும் பக்கத்து பக்கத்து இடத்துல போட்டு இருக்கீங்க! இதுலேருந்தே நீங்க சொல்ல வர்றது தெரியுது.//

என்னைய்யா இது! எப்படி போட்டாலும் குத்தம் கண்டுபிடிக்கிறீங்க. இனிமே நீங்க கவிதையே எழுதறதில்லைன்னு சொல்லிடுறேன். போதுமா....

//ரவி, நீங்க வேற. அவர் உங்க பதிவு மூணு முறை படிச்சதால மூணு பேருக்கு கொடுத்திருக்கார். ஒரு தடவ படிச்சிருந்தார்னா ஒருத்தருக்குத்தான் கொடுத்திருப்பார்//

ஹி..ஹி...ஹி..அதெல்லாம் இருக்கட்டும் போன தடவை கொடுத்த பட்டாம்பூச்சி விருதையே நீங்க யாருக்கும் கொடுக்காம வச்சுகிட்டீங்க. இதையாவது கொடுங்க. நம்ம இரவி இந்த விருது கொடுக்குற எல்லார் பதிவுக்கும் போய் கரெக்ட்டா ஞாபகப்படுத்துகிறார். இந்த தடவை தப்பிக்க முடியாது.

அப்படியே விருது கொடுத்த என்னைய புகழ்ந்து இரண்டு வார்த்தை எழுதினாலும் தப்பில்ல....

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
பணம் இல்லாமலே அதை மூணு பேருக்குத்தான் பிரிச்சிக்குடுத்திருக்கீர்..

காசு குடுத்திருந்தா. ... ஒருத்தருக்கு குடுத்தாலே சந்தேகம் போல இருக்கு..:)//

ஆகா...மேடம் நீங்க ஆறு பேருக்கு கரெக்ட்டா கொடுத்தனால இப்படி என் பேருக்கு களங்கம் விளைவிக்குறமாதிரி கமெண்ட் போடலாமா?? பதிவுலகம் என்னைய பத்தி என்ன நினைக்கும்??? :)

☀நான் ஆதவன்☀ said...

//தல

இதுக்கு பெயர் தான் கட்டுடைத்தல் ;))//

டாங்ஸ் தல

இளைய பல்லவன் said...

//
என்னைய்யா இது! எப்படி போட்டாலும் குத்தம் கண்டுபிடிக்கிறீங்க. இனிமே நீங்க கவிதையே எழுதறதில்லைன்னு சொல்லிடுறேன். போதுமா....
//

நல்ல வேளை,
நான் எழுதறது கவிதையே இல்லைன்னு சொல்லாம விட்டீங்களே !!

///
ஹி..ஹி...ஹி..அதெல்லாம் இருக்கட்டும் போன தடவை கொடுத்த பட்டாம்பூச்சி விருதையே நீங்க யாருக்கும் கொடுக்காம வச்சுகிட்டீங்க. இதையாவது கொடுங்க. நம்ம இரவி இந்த விருது கொடுக்குற எல்லார் பதிவுக்கும் போய் கரெக்ட்டா ஞாபகப்படுத்துகிறார். இந்த தடவை தப்பிக்க முடியாது.///

ஹி..ஹி...ஹி..

///
அப்படியே விருது கொடுத்த என்னைய புகழ்ந்து இரண்டு வார்த்தை எழுதினாலும் தப்பில்ல....///

என்ன எழுதணும்னு சொல்லிட்டீங்கன்னா அப்படியே சேத்துருவேன்!!

செந்தழல் ரவி said...

பெரிசா எதுவும் செய்ய வாண்டாம்.

ஸ்டெப் 1 இன்னும் மூன்றுமுறை பதிவை படிக்கவும்.

ஸ்டெப் 2 அப்புறம் இன்னொரு பதிவு போடவும்.

கி கி கி அதில் இன்னும் மூன்று பேருக்கு கொடுக்கவும்....

வால்பையன் said...

இப்படியே போனா நான் விருது கொடுக்க ஆளே இருக்க மாட்டாங்க போலயே!

அட்வான்ஸ் புக்கிங்
சாரு
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஷ்ணன்

இவுங்களுக்கு நான் தான் குடுப்பேன்!

என்னா இவிங்க சுவாரஸ்ய பதிவர்கள் இல்லையா!?

ஆ! இதழ்கள் said...

பார்ரா... ஏன் பேரு இருக்கு... சரிதாங்க... இப்பல்லாம் நான் எழுதறதில்லை. கண்டிப்பா எழுதறேன் இனிமே. ரொம்ப நன்றி.

feeling honored.

:)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள்!

தமிழிச்சி said...

வாழ்த்துக்கள். சரியாகத்தான் விருது கொடுத்துளார்கள். போதுமா? ஹா ஹா ஹா

இளைய பல்லவன் said...

விருதுகளை கொடுத்துவிட்டேன் நண்பரே.

நான் ஆறு பேருக்குக் கொடுத்திருக்கிறேன்!!

rapp said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்:):):)

rapp said...

//நான் ஏதோ நல்லா சுவாரஸியமா எழுதுவேன்னு புரளிய கிளப்பிவுட்டுருப்பாங்க போல//
//நீங்க இது புரளி இல்ல நிஜம்ன்னு சொல்றது என் காதுக்கு கேட்குது//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........அது புரளியெல்லாம் கெடயாது. மொதோ தடவையா உண்மையச் சொல்லிட்டு, வாட் இஸ் திஸ்?:):):)

rapp said...

தண்டனையா பேசாம என் பதிவுகள தெனமும் ரெண்டு தரம் படிங்க. உலகே மாயம் வாழ்வே மாயம்னு புரிஞ்சிடும்:):):)

pappu said...

ரெண்டு நாளா ஆன்லைன் வர முடியல. இன்னைக்கு தான் பாத்தேன் தாங்க்ஸ்,
என்னடா பதிவு போடாமலே ரெண்டு மூணு பேரு என் பதிவுக்கு வராங்களேன்னு நெனச்சேன். நீங்கதான் காரணமா

kanagu said...

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. :)

/*இரண்டுக்கும் நடுவுல கமா இருக்கு...பார்த்துக்கங்க*/

ஹா ஹா ஹா :)

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

Related Posts with Thumbnails