”அட்வைஸ்” அல்ல டிப்ஸ்....

முன்குறிப்பு: இது இந்த பதிவுக்கு எதிர் பதிவல்ல.

முன் குறிப்புக்கு ஒரு பின் குறிப்பு: இது எந்த பதிவுக்கும் எதிர் பதிவல்ல. சும்மா கலர் மாத்தி கொடுத்திருக்கேன். லின்ங் எதுவும் இல்லை. அதை நோண்டி நோண்டி மானிட்டரை டேமேஜ் ஆக்க வேண்டாம். மேலும் “அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்கன்னு” பின்னூட்டம் இடும் அப்பாவிகளுக்கு நன்றிகள்.

வாழ்க்கையில சில முக்கியமான காலகட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் நிறைய பேர் தடுமாறி திணறுவாங்க. முக்கியமா படிச்சு முடிச்சு கொஞ்ச நாள் சும்மா வெட்டியா உட்காரலாம்ன்னா வீட்ல விடமாட்டாங்க.

அவுங்களுக்காக சில எச்சரிக்கை மற்றும் டிப்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சால், பினாயில இலவசமா கொடுத்தாலும் குடிக்கும் நம்ம பசங்க இந்த எச்சரிக்கையை “இலவச அட்வைஸ்” நினைச்சு அலறிகிட்டு ஓட வாய்ப்புண்டு. அப்படியெல்லாம் இல்லை...சில டிப்ஸ்னு நினைச்சுக்கோங்க. மீறி இதை இலவச அட்வைஸா தான் நினைப்பேன்னா 0003489867811213 இந்த அக்கௌண்ட் நம்பருக்கு 1001 ரூபாய் அனுப்பியிருங்க.

நடு குறிப்பு: அக்கௌண்ட் நம்பர் சும்மா டைப் பண்ணியது. ”அண்ணே இந்த அக்கௌண்ட்டுக்கு பணம் போகல”ன்னு பின்னூட்டம் இடும் நல்லவர்கள் 1001 ரூபாய் டி.டி எடுத்து அனுப்பலாம்.

மூன்று வருடம் கடுமையாக உழைத்து படிச்சு பாஸாகி (அ) பெயிலாகி ஒரு ஆறு மாசம் வீட்ல உட்காரலாம் என்றால் வீட்டில் செய்யும் சதிகள் நம்மை வேலை தேடி அலைய வைத்து விடும்.

அக்னி வெயில்ல பரிட்சை முடிஞ்சு காலையில தூங்கும் போது மப்ளரை கட்டிக் கொண்டு அப்பா “டேய் வெளிய ஒரே குளிரா இருக்கு, அப்பானால வெளிய போகமுடியல..போய் பால் வாங்கிட்டு வா”ன்னு 5 மணிக்கு அப்பா எழுப்பினா மறுப்பேதும் சொல்லாம போய்ட்டு ஒரு 9 மணிக்கு ரிட்டன் வாங்க. இரண்டு நாள் இப்படி செஞ்சீங்கன்னா திருப்பி அனுப்புவது சந்தேகமே.

(திருப்பி அனுப்ப நேர்ந்தால் பாலில் ஒரு துளி தயிரை சேர்த்து விடவும். நீங்க வாங்கிட்டு வர்ர பால் எல்லாம் கெட்டுப்போகுதுன்னு அனுப்பாம இருக்க வாய்ப்புண்டு)

”அடுப்புல குழம்பு கொதிக்குது ராசா...கொஞ்சம் நம்ம அண்ணாச்சி கடையில போய் பூண்டு வாங்கிட்டு வாயா” என்று அம்மா தொடங்க வாய்ப்புண்டு. பூண்டு தானே சாதாரணமாக நினைத்தால் அது வெடிகுண்டாக மாறி உங்கள் வெட்டி ஆபிசர் வேலைக்கே உலை வைத்துவிடும்.

பின்பு கீரை ஆய்ந்து கொடுப்பது, அரிசியில் நெல்,கல் பொருக்குவது என பெரிதாக முடிய வாய்ப்புண்டு.

பூண்டு வாங்கிவரச் சொன்னால் வெங்காயம் வாங்கி வரவேண்டும். கோவித்துக்கொள்ளும் அம்மாவிடம் “அப்ப இது பேரு பூண்டு இல்லையா?” என்று அப்பாவியாக கேட்கவும்.

(திரும்பவும் பூண்டின் படம் வரைந்து பாகங்களோடு அம்மா விளக்கி கூறி வாங்கி வரச் சொல்ல வாய்ப்புள்ளது. அப்போது “வெள்ளை வெங்காய”த்தை வாங்கி வருதல் உச்சிதம்)

”டேய் கிச்சன்ல வேலை இருக்கு, கொஞ்சம் சீரியல் பார்த்து கதை சொல்லுடா. மதியம் சாப்பாடு செய்யனுமில்ல” என்று டீசண்டாக மிரட்டபடலாம். சீரியல் பார்த்து தான் சோறு சாப்பிட வேண்டுமா? என்று வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு செல்ல முடிவெடுக்க வேண்டாம்.

“அவ அவளோட மாமியாருக்கு கால் அமுக்கி விட்டா”,

”மாமியார் அவளுக்கு காபி போட்டு கொடுத்தா”.

”அவளோட கணவன் ஆபிஸ்ல இருந்து பத்திரமா வீட்டுக்கு வந்துட்டான்”.

”அவ தங்கச்சி காதலன்கிட்ட ”வீட்ட விட்டு உன்னோடு ஓடிப்போக வரமாட்டேன்னு” சொல்லிட்டா”

இந்த மாதிரி நல்ல நல்ல விசயங்களை சொன்னோம்ன்னா அம்மாவுக்கு வெறுப்பாகி “நீ ஆணியே புடுங்க வேணாம்”ன்னு சொல்ல வாய்ப்புள்ளது.

உண்ட மயக்கத்தில் உறங்கும் நேரம், எழுப்பி “சாயங்காலம் ஸ்நாக்ஸ் என்னப்பா செய்ய? பஜ்ஜியா? போண்டாவா? என கேட்கும் போது கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். அதற்கு பதில் கூறினால் “சரி அம்மா பஜ்ஜி செஞ்சு வைக்கிறேன்..போய் ரேசன் கடைக்கு போய் சர்க்கரை, ரவா, மைதா எல்லாம் வாங்கிட்டு வாப்பா” என கூறினால் அதுதான் உச்சகட்டத் தாக்குதல்.

மாலைநேரம் பள்ளி,கல்லூரி விடும் நேரம். பெண்கள் சாரை சாரையாக செல்லும் வழியிலேயே ரேசன் கடை அமைந்திருக்கும். அங்கே கையில் பையுடன் ரேசன் கடையின் வரிசையில் நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை?

“எனக்கு ஒன்னும் வேண்டாம்மா”, எனக்கூறி வழக்கம் போல நாயர்கடையில் டீயும்,பஜ்ஜியும் வாங்கி உண்பது உத்தமம்.

இதெல்லாம் உன் சொந்த அனுபவமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுருத்தப்படும் எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.42 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நாமக்கல் சிபி said...

எங்க வீட்டுல என்னை தண்ணி பிடிக்க அனுப்புவாங்க!

குழாய் பக்கத்துலயே உக்காந்துகிட்டு சொம்பு சொம்பா மொண்டு குடத்துல ஊத்தணும்!

நான் வேணும்னே சொம்பும், பாத்திரமும் ஒடுங்கி போகும் அளவுக்கு வேகமா மொண்டு ஊத்துவேன்! 2/3 நாள் பார்த்துட்டு அப்பாலிக்கா நிறுத்திட்டாங்க!

அதே மாதிரி இலை வாங்கிட்டு வான்னு சொன்னா திரும்ப திரும்ப அனுப்பக் கூடாதுன்னு ஐடியா பண்ணி ஒரு கட்டு இலை வாங்கிட்டு வந்து வெச்சிடுவேன்!

:)

☀நான் ஆதவன்☀ said...

ஆகா இது நல்ல ஐடியாவா இருக்கே. இத சேர்க்காம விட்டேனே சிபி.

கருத்திற்கும் ஐடியாவுக்கும் நன்றி சிபி

சென்ஷி said...

நல்லாக்கொடுக்கறீங்கடா அட்வைஸு :))

♫சோம்பேறி♫ said...

/* வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு செல்ல முடிவெடுக்க வேண்டாம். */

ஓக்கே.. டன்..

/* இதெல்லாம் உன் சொந்த அனுபவமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுருத்தப்படும்*/

Bcoz, இவை பேச்சுவாக்கில், என்னிடமிருந்து கறக்கப்பட்ட உண்மைகள். 1001 அனுப்ப பிரியப்படுபவர்களுக்கு என் அக்கவுண்ட் எண் 20003482449..

அக்பர் said...

நல்லா கொடுக்குறாங்கய்யா டிப்சு.

இன்னு நாலு பிட்டு சேர்த்து போட வேண்டாமா.

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

வாங்க தல
-----------------------------------
@சோம்பேறி
//Bcoz, இவை பேச்சுவாக்கில், என்னிடமிருந்து கறக்கப்பட்ட உண்மைகள். 1001 அனுப்ப பிரியப்படுபவர்களுக்கு என் அக்கவுண்ட் எண் 20003482449.//

சோம்பேறி முடிஞ்சா கேஸ் போட்டுக்கங்க....இருக்குற மூளையை கசக்கி எழுதினா இப்படியா உரிமை கொண்டாடுறது
-----------------------------------
@அக்பர்

ஆஹா இதுக்கு இப்படி ஒரு ரசிகர் இருப்பாருன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நிறைய அள்ளி விட்டுருப்பேனே அக்பர். வருகைக்கு நன்றி அக்பர்

எவனோ ஒருவன் said...

அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்க

எவனோ ஒருவன் said...

நா அப்பாவிண்ணே!

எவனோ ஒருவன் said...

இத எங்க அம்மா பாத்தாங்கன்னா... ‘வெளங்காத பய, புள்ளயல எப்புடி கெடுக்குறாம்பாரு!’ன்னு திட்டுவாங்க.

நா சொல்ல மாட்டேன். அப்புறம், ’நீ இந்த மாதிரியெல்லாம் பண்ணியோடா?’ அப்டின்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க...

dinesh said...

மச்சி இதே உன் வாழ்கை நந்தா கதா பொல்லு உள்ளதே த

செந்தழல் ரவி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கலக்கல்........

☀நான் ஆதவன்☀ said...

@எவனோ ஒருவன்

நீங்க அப்பாவி தான் நண்பா.(பேர சொல்லுங்க தலைவா)

என்னது அம்மகிட்ட சொல்லபோறீங்களா?அவ்வ்வ்வ்..இதெல்லாம் கம்பெனி இரகசியம் வெளிய சொல்லப்படாது :)
------------------------------------
@தினேஷ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தினேஷ் :)
-----------------------------------
@செந்தழல் இரவி

கருத்துக்கு நன்றி இரவி :)

Balaji said...

எங்க அம்மா வெங்காயம் வாங்கி வரவேண்டும் என்றல் பூண்டு வாங்கிவரச் சொல் வாங்க.

☀நான் ஆதவன்☀ said...

// Balaji said...

எங்க அம்மா வெங்காயம் வாங்கி வரவேண்டும் என்றல் பூண்டு வாங்கிவரச் சொல் வாங்க//

என்னது அதுக்குள்ள டிப்ஸ் லீக்காயிடுச்சா? பரவாயில்லை பாலாஜி இனி பூண்டு வாங்கியாற சொன்னால் பூண்டு வெடி வாங்கி கொடுக்கவும் :)

மங்களூர் சிவா said...

1.அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்க

மங்களூர் சிவா said...

2.
/
0003489867811213 இந்த அக்கௌண்ட் நம்பருக்கு 1001 ரூபாய் அனுப்பியிருங்க.
/

அண்ணே இந்த அக்கௌண்ட்டுக்கு பணம் போகல

மங்களூர் சிவா said...

3. அண்ணே இதெல்லாம் உன் சொந்த அனுபவமா ???

குறை ஒன்றும் இல்லை !!! said...

சரி.. ஒக்கே.. ரைட்டு.. பாத்துக்கலாம்..

☀நான் ஆதவன்☀ said...

1.அப்பாவி மங்களூர் சிவாண்ணே நன்றிகள்

2.டி.டி எடுத்து அனுப்ப சொல்லியிருந்தேனே. சீக்கிரம் அனுப்புங்க. இல்லைன்னா சாரு புக்கு வாங்கி கொரியர்ல அனுப்புங்க.

3.அடச்சே இத மறந்துட்டேனே. உங்க பின்னூட்டத்த வெளியிட்டதும் இல்லாம பதில் வேற சொல்றேன்.
-----------------------------------
ஓக்கே ரைட்டு....நன்றி குறை ஒன்றும் இல்லை :)

kanagu said...

செம காமெடிங்க... :)

நல்லா சிரிச்சேன் :)

/* சும்மா கலர் மாத்தி கொடுத்திருக்கேன். லின்ங் எதுவும் இல்லை. அதை நோண்டி நோண்டி மானிட்டரை டேமேஜ் ஆக்க வேண்டாம். மேலும் “அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்கன்னு” பின்னூட்டம் இடும் அப்பாவிகளுக்கு நன்றிகள்.*/

ஹ ஹ ஹ.. :)

/*பூண்டு வாங்கிவரச் சொன்னால் வெங்காயம் வாங்கி வரவேண்டும். கோவித்துக்கொள்ளும் அம்மாவிடம் “அப்ப இது பேரு பூண்டு இல்லையா?” என்று அப்பாவியாக கேட்கவும்.
*/

முடியல :)

/*மாலைநேரம் பள்ளி,கல்லூரி விடும் நேரம். பெண்கள் சாரை சாரையாக செல்லும் வழியிலேயே ரேசன் கடை அமைந்திருக்கும். அங்கே கையில் பையுடன் ரேசன் கடையின் வரிசையில் நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை*/

ஆமாம் ஆமாம் :)

Jaleela said...

டிப்ஸா? டிப்ஸா? ஹி ஹி சிரிப்போ சிரிப்பு

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கனகு
---------------------------
வாங்க ஜலீலா. உங்கள மாதிரியெல்லாம் டிப்ஸ் சொல்லமுடியுமா?. நீங்கெல்லாம் டிப்ஸ் கொடுக்குறதுக்காகவே ப்ளாக் வச்சிருக்கீங்க :)

இளைய பல்லவன் said...

என் "பொக்கிஷ" கருத்து இதோ:

அண்ணே, அட்வைஸ்னா என்ன? டிப்ஸ்னா என்னண்ணே??

நீங்க கொடுத்ததெல்லாம் டிப்ஸ்தான்னு எப்படி சொல்றீங்க. டிப்ஸ் எப்படி கொடுக்கணும்? நீங்க கொடுத்தது டிப்ஸாவா இல்ல கப்ஸாவா? இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டுப்போங்க.

இப்போது கமெண்டு:

1. லிங்க் வேலை செய்யவில்லை என்று மங்களூர் சிவா சொல்லியதை நானும் உறுதி செய்கிறேன்.

2. நீங்கள் சொன்ன கணக்கில் பணம் செல்கிறது. கிரெடிட் ஆனதும் கன்ஃபர்ம் செய்யவும்.

3. இது உங்க சொந்த அனுபவமான்னு கேக்க மாட்டேன். ஏன்னா உங்களப்பத்தி எனக்குத் தெரியாதா???

இளைய பல்லவன் said...

என் "பொக்கிஷ" கருத்து இதோ:

அண்ணே, அட்வைஸ்னா என்ன? டிப்ஸ்னா என்னண்ணே??

நீங்க கொடுத்ததெல்லாம் டிப்ஸ்தான்னு எப்படி சொல்றீங்க. டிப்ஸ் எப்படி கொடுக்கணும்? நீங்க கொடுத்தது டிப்ஸாவா இல்ல கப்ஸாவா? இதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டுப்போங்க.

இப்போது கமெண்டு:

1. லிங்க் வேலை செய்யவில்லை என்று மங்களூர் சிவா சொல்லியதை நானும் உறுதி செய்கிறேன்.

2. நீங்கள் சொன்ன கணக்கில் பணம் செல்கிறது. கிரெடிட் ஆனதும் கன்ஃபர்ம் செய்யவும்.

3. இது உங்க சொந்த அனுபவமான்னு கேக்க மாட்டேன். ஏன்னா உங்களப்பத்தி எனக்குத் தெரியாதா???

Gifarz said...

அனுபவம் பேசுது.....

அம்மா அப்பாவுக்கு ஹெல்ப் பன்னாட்டி பின்ன யாருக்கு தான் ஹெல்ப் பன்றதாம்

அது மம்ம கடமையல்லவா மறந்திடாம

☀நான் ஆதவன்☀ said...

@இளைய பல்லவன்

என்னடா இன்னும் குண்டக்க மண்டக்க யாரும் கேட்கலையேன்னு பார்த்தேன். சாட்லயும் சரி...இங்கேயும் சரி எனக்குன்னு வரும் போது எப்படி தான் இப்படி ஆகுறீங்களோ.

சரி சொல்லிடுறேன்...

இப்ப ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகும் போது நீங்க சர்வருக்கு காசு கொடுத்தீங்கன்னா அது டிப்ஸ். இத அதாவது டிப்ஸ அவன் வாங்கனும்ன்னு இல்ல. அது அவன் இஷ்டம்.

டிப்ஸ அவன் வேண்டாம்ன்னு சொல்லிட்டு “உழைச்சு சாப்பிடுறது தான் சார் உடம்புல நிக்கும் மத்தெல்லாம் டபுள் காட் பெட் போட்டு படுத்துக்கும்”ன்னு உங்ககிட்ட சொன்னான்னா அது அட்வைஸ். நீங்க அத கேட்டே ஆகனும். ஏன்னா அங்க நீங்க டிப்ஸ் கொடுக்க முயற்சி பண்ணி தோத்துட்டீங்க.

போதுமா இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். டிப்ஸ வேணும்ன்னா எடுத்துகலாம். இல்லைன்னா விட்டுடலாம். ஆனா அட்வைஸ் கேக்குற நிலைமைக்கு வந்துட்டா கேட்டே ஆகனும் வேற வழியே இல்லை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//1. லிங்க் வேலை செய்யவில்லை என்று மங்களூர் சிவா சொல்லியதை நானும் உறுதி செய்கிறேன்.//

மங்களூர் சிவாவுக்கு சொன்ன அதே பதில் தான்

//2. நீங்கள் சொன்ன கணக்கில் பணம் செல்கிறது. கிரெடிட் ஆனதும் கன்ஃபர்ம் செய்யவும்.//

கிரெடிட் ஆகவில்லை. டி.டி எடுத்து அனுப்பவுன்

//3. இது உங்க சொந்த அனுபவமான்னு கேக்க மாட்டேன். ஏன்னா உங்களப்பத்தி எனக்குத் தெரியாதா???//

இப்படி பப்ளிக்கா சொல்லப்படாது பல்லவன்

☀நான் ஆதவன்☀ said...

//Gifarz said...
அனுபவம் பேசுது.....

அம்மா அப்பாவுக்கு ஹெல்ப் பன்னாட்டி பின்ன யாருக்கு தான் ஹெல்ப் பன்றதாம்

அது மம்ம கடமையல்லவா மறந்திடாம//

என்ன Gifarz. சீரியஸா ஆகிடீங்க போல. ஜஸ்ட் இது ஒரு காமெடிக்காக தான். ரிலாக்ஸ்

நாஞ்சில் நாதம் said...

\\\என்ன Gifarz. சீரியஸா ஆகிடீங்க போல. ஜஸ்ட் இது ஒரு காமெடிக்காக தான். ரிலாக்ஸ்///


கலக்கல், ஜுப்ப்ப்ப்ப்பரு

ஆ! இதழ்கள் said...

அட அட அடா..... எப்படிங் இப்புடி?

ஹையோ ஹையோ.... நீங்க சொன்ன டிப்ஸ் மொத ரெண்டு நாளைக்கு தான் உதவும் மூணாவது நாள் தண்டச்சோறுன்றாங்க்யலே என்ன பண்றது?

:(

ஆ! இதழ்கள் said...

இந்த பதிவு ஏற்கனவே இந்த இடத்தில் இருக்கு...

ஹீ ஹீ

☀நான் ஆதவன்☀ said...

நன்றி நாஞ்சில் நாதம்
------------------------------------
//ஹையோ ஹையோ.... நீங்க சொன்ன டிப்ஸ் மொத ரெண்டு நாளைக்கு தான் உதவும் மூணாவது நாள் தண்டச்சோறுன்றாங்க்யலே என்ன பண்றது?//

அதுக்கும் ஐடியா இருக்கு ஆனந்த். முதல்ல பணத்த அனுப்புங்க. அதையும் சொல்றேன் :)

//இந்த பதிவு ஏற்கனவே இந்த இடத்தில் இருக்கு...

ஹீ ஹீ//

இத படிச்சப்ப “பகீர்”னு ஆனது உண்மை ஆன்ந்த். என்னடா மூளைய கசக்கி எழுதினோமே வேற யாராவது போட்டுட்டாங்களான்னு.....ஆனா நான் வச்ச ஆப்ப எனக்கே திருப்பி வச்சிட்டீங்க....சூப்பர் :)

rapp said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன். நீங்களும் தொடருங்களேன்.

செந்தழல் ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ராப், நன்றி செந்தழல் ரவி

" உழவன் " " Uzhavan " said...

அடடா.. இது தெரியாம ஒரு நாலு தடவை டிக்கெட் எடுத்திடேனப்பா :-)

ரெட்மகி said...

நல்லா கிளப்புறீங்க பீதிய ,,,,,,

ஹி ஹி ஹி

இரா.சிவக்குமரன் said...

:)

reena said...

ஹி ஹி ஹி....

வால்பையன் said...

//“அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்கன்னு” பின்னூட்டம் இடும் அப்பாவிகளுக்கு நன்றிகள்.//

அட்வான்ஸ் நன்றிக்கு நன்றி!

☀நான் ஆதவன்☀ said...

நன்றி உழவன் :)

நன்றி ரெட்மகி

நன்றி சிவக்குமரன்

நன்றி ரீனா (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க போல :)

வாங்க வால் பையன். நாந்தான் அட்வான்ஸ் நன்றிக்கு நன்றிகள் முன்னாடியே சொல்லிட்டேனே. அதுனால் திருப்பி நன்றி சொல்ல மாட்டேன்...ஹி...ஹி

சுரேகா.. said...

//இதெல்லாம் உன் சொந்த அனுபவமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுருத்தப்படும் எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்.//


யாருங்க அது குதுருக்குள்ள?

:))

Cool Boy said...

தொடரட்டும் சிறப்பாக...

Related Posts with Thumbnails