"காக்கா கதை" - பஞ்சாமிர்தம்

ஒரு மரத்தில காக்கா வெட்டியா உட்கார்ந்து இருந்துச்சாம். அங்க வந்த முயலு கீழருந்துகிட்டு"ஏன் காக்கா வெட்டியா உட்கார்ந்திருக்கே. வேற எதுவும் வேலை இல்லையா"ன்னு கேட்டுச்சாம்.

அதுக்கு காக்கா "அதெல்லாம் இருக்குது, நான் சும்மா தான் உட்கார்ந்திட்டிருக்கேன். நீ உன் வேலைய பாரு"ன்சாம். உடனே முயலும் ரோஷமாகி "நானும் வெட்டியா இப்படி தான் உட்காருவேன்"னு சொல்லிட்டு மரத்துக்கு கீழ சும்மாவே உட்கார்ந்துச்சாம்.

அந்த நேரம் பார்த்து அங்க வந்த வேட்டைக்காரன் முயல் ஓடாம சும்மா உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு ஈஸியா புடிச்சுட்டு போயிட்டானாம்.


ss1


moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...

வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்

நான் ஆதவன்

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

இப்போதைக்கு ஹாட் டாபிக் "சாரு-ஜெமோ" சண்டை தான். இந்த பதிவுக்கும் கவர்ச்சியா "உண்மையான பைத்தியக்காரன் சாருவா?", "ஜெமோவுக்கு பா.ஜாவின் ராஜ்யசபா எம்.பி பதவியா?", "ஜ்யோராம் சுந்தர்க்கு மூளை(யும்) கிடையாதா?", "பைத்தியகாரன்னுக்கு லண்டனில் இருந்து டாலர் பறிமாறியதா?", "உரையாடல் போட்டி பணம் கையாடலா?", "நர்சிமை பதிவு போடச் சொல்லி அழுத்தம் தரப்பட்டதா?"ன்னு ஏதாவது தலைப்பு வச்சா நல்லாதான் இருக்கும். ஆனா 'சூடான இடுகைகள்' இல்லாம இதெல்லாம் செஞ்சு வேஸ்ட் தான்.

என்கிட்ட இலக்கிய அறிவு ரொம்ப கம்மின்னு தண்டுமாரியம்மன் கோவில் சூடத்து மேல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லவேண்டியதில்ல.... அதுனால நான் இவுங்கள பத்தி எதுனா எழுதலாம்ன்னு நினைச்சாக்கா.... எங்க ஒன்னு விட்ட தாத்தா சொல்றது தான் ஞாபகம் வருது "ஜட்டி போட்டு பழக்கம் இல்லாதவன் ஜிப்பு வச்ச பேண்ட போடவே கூடாது".....அதையும் மீறி போட்டா பிரச்சனை தான்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

கடைசியாக படித்து முடித்த புத்தகம் லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் வித்யா". இதை படித்து முடித்தவுடன் திருநங்கைகளின் மேல் இச்சமூகத்தில் உள்ள தவறான பார்வைகள் புலப்படும். நமக்கே தெரியாமல் நம்முள்ளே அவர்களின் மேல் ஒரு அருவருப்பு இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பது தெரியும். ஒரு புரிதல் கிடைக்கும். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சக மனிதனாக அவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும்.

இப்புத்தகத்தை கொஞ்சம் சுருக்கி அல்லது அவர்களைப் பற்றி ஒரு கட்டுரையாக பள்ளி பாடங்களில் சேர்த்தால் பின் வரும் தலைமுறையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

சேட்டன்மார்களை பத்தி எழுதி ரொம்ப நாளாச்சு. எழுத எக்கச்சக்க மேட்டரெல்லாம் இருக்குது. ஆனா இந்த தடவை கேரள சிஎம் அச்சுதானந்தன் சேட்டன் பற்றிய ஒரு காமெடி பார்ப்போம்.

அச்சு சேட்டன் கட்சி ஆதரவாளரா 'சுகுமார் ஆழிக்காடு'ன்னு ஒரு எழுத்தாளர் இருக்காரு. கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் தோத்ததற்கு அப்புறம் அச்சு சேட்டன் பத்திரிக்கையாளர் சந்திப்புல எதுக்கோ வாய்விட்டு சிரிச்சாராம். உடனே இந்த எழுத்தாளர் ஒரு பேட்டியில "பறவை தன் கூண்டுலேயே கக்கா போய் அசிங்கமாக்கிடும் அது மாதிரி தான் கட்சியில அச்சுதானந்தனே அசிங்கபடுத்துறாரு"ன்னு அறிக்கை விட்டாரு.

அப்புறம் இரண்டு பேருக்கும் முட்டிக்க ஆரம்பிச்சுது. ரெண்டு பேரும் சண்டை போட்டது பத்திரிக்கையில எல்லாம் வந்தது. தீடீர்னு நம்ம அச்சு சேட்டன் சுகுமாருக்கு போன் செய்து சமரசம் பேசிட்டாரு. சுகுமாரும் அவரே வலியக்க வந்து பேசிட்டாரேன்னு கூலாகி பத்திரிக்கைய கூப்பிட்டு "நானும் அச்சுவும் இராசியாகிட்டோம்"அப்படின்னு சொன்னாரு.

இத பத்திரிக்கையில பார்த்த அச்சு காண்டாகி நான் போன்ல பேசவேயில்லை அப்படின்னு திருப்பி சொல்லியிருக்காரு. செம காமெடி ஆகி போச்சு.

எவனோ மிமிக்ரி கலைஞன் ஒருத்தன் அச்சுதானந்தன் வாய்ஸ்ல சுகுமார்கிட்ட பேசியிருக்கான். இதுதெரியாம சுகுமார் ஆழிக்காடு பத்திரிக்கைய கூப்பிட்டு சொல்லிட்டாரு.....பத்திரிக்கைங்களுக்கு செம தீனி.

38 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

சூப்ப்பர் பதிவு. :))

உண்மையிலே செம்ம கலக்கல்!

//
இப்புத்தகத்தை கொஞ்சம் சுருக்கி அல்லது அவர்களைப் பற்றி ஒரு கட்டுரையாக பள்ளி பாடங்களில் சேர்த்தால் பின் வரும் தலைமுறையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.//

ஆமோதிக்கிறேன்!

கார்க்கி said...

//அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்//

நீங்களே அழகான முயல்ன்னா உங்க டேமேஜர் எபப்டி இருப்பாரு? ஆவ்வ்வ்வ்

Anonymous said...

நல்லா இருக்கு.

திருநங்கைகளைப் பற்றி பாலபாரதி எழுதிய நாவலும், ப்ரியா பாபுன்னு ஒரு திருநங்கையே எழுதிய மூன்றாம் பாலின் முகம் நாவலும் படிங்க.

உங்க தாத்தா ஜோக்குக்கு வி வி சிரிச்சேன்.

நட்புடன் ஜமால் said...

வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்

நான் ஆதவன்\\

மெய்யாலுமா!

ஆயில்யன் said...

/moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...
வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்
நான் ஆதவன்///
செம கலக்கல் :)))))

வெட்டிப்பயல் said...

செம கலக்கல் பதிவு...

தாத்தா சொன்ன மேட்டரை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரித்தேன் :)

வித்யா said...

காக்கா கதை:)

$anjaiGandh! said...

2வது மேட்டர் சூப்பர்மா.. :))

//எவனோ மிமிக்ரி கலைஞன் ஒருத்தன் அச்சுதானந்தன் வாய்ஸ்ல சுகுமார்கிட்ட பேசியிருக்கான். இதுதெரியாம சுகுமார் ஆழிக்காடு பத்திரிக்கைய கூப்பிட்டு சொல்லிட்டாரு..//

இதெல்லாம் என்ன பிஸ்கோத்து மேட்டரு.. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பேர்ல ஒருத்தர் போன் போட்டு மிரட்டினார்னு பாக் அதிபர் சர்தாரி அறிக்க வுட்டதவிடவா? :))

கோபிநாத் said...

பஞ்சாமிர்தம் - ரொம்ப நல்லாயிருக்கு ;)

pappu said...

முதல் இஸ்டோரி சூப்பரு தல! சொந்தமா யோசிச்சீங்களோ? கோக்குமாக்கா இருக்கே?

சேட்டன்ஸ் மேல ஏன் இந்த கொல வெறி?

☀நான் ஆதவன்☀ said...

@சென்ஷி

ரொம்ப நன்றி தல
-------------------------------------
// கார்க்கி said...

நீங்களே அழகான முயல்ன்னா உங்க டேமேஜர் எபப்டி இருப்பாரு? ஆவ்வ்வ்வ்//

பொறாமை...பொறாமை

☀நான் ஆதவன்☀ said...

// வடகரை வேலன் said...
நல்லா இருக்கு.

திருநங்கைகளைப் பற்றி பாலபாரதி எழுதிய நாவலும், ப்ரியா பாபுன்னு ஒரு திருநங்கையே எழுதிய மூன்றாம் பாலின் முகம் நாவலும் படிங்க.

உங்க தாத்தா ஜோக்குக்கு வி வி சிரிச்சேன்.//

நன்றி அண்ணாச்சி. கண்டிப்பாக படிக்கிறேன்

☀நான் ஆதவன்☀ said...

@ஜமால்

ஆங் தலைவா...மெய்யாலும் தான்
------------------------------------
நன்றி ஆயில்யன்
------------------------------------
நன்றி வெட்டிபயல் :)

☀நான் ஆதவன்☀ said...

நன்றி வித்யா
------------------------------------
நன்றி சஞ்சய்

//இதெல்லாம் என்ன பிஸ்கோத்து மேட்டரு.. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பேர்ல ஒருத்தர் போன் போட்டு மிரட்டினார்னு பாக் அதிபர் சர்தாரி அறிக்க வுட்டதவிடவா? :)//

அது நல்ல காமெடி தான்...
-----------------------------------
நன்றி கோபிநாத்
-----------------------------------
பப்பு இது சொந்த சரக்கு தான்னு வச்சுக்குக்கங்களேன்..

சேட்டன்ங்க மேல ஏன் வெறுப்புன்னா....காரணம் எதுவும் இல்ல. சேட்டன் செய்யுற எல்லா மேட்டரும் காமெடியா இருக்கும். அத இங்க பதிவு செய்யுறேன். அவ்ளோ தான் :)

அனுஜன்யா said...

ஹா ஹா. அட்டகாசமா இருக்கு எல்லாமே.

அனுஜன்யா

நர்சிம் said...

விடமாட்டீங்களாய்ய்ய்ய்ய்யா..

கலக்கல்...

கைப்புள்ள said...

செம கலக்கல்.

அண்டங்காக்கா - அழகான முயல், தாத்தா-ஜட்டி-ஜிப்...:)))

எப்படி இப்படியெல்லாம்?
:)))

சந்தனமுல்லை said...

//moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...

வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்

நான் ஆதவன்//

:-)))))

//கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சக மனிதனாக அவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும்.//

உண்மைதான்!

மங்களூர் சிவா said...

very nice!

☀நான் ஆதவன்☀ said...

@அனுஜன்யா

நன்றி அனுஜன்யா
-------------------------------------
@நர்சிம்

விடமாட்டோம்ல....நன்றி நர்சிம் :)
-------------------------------------
@கைப்புள்ள

உள்ளுக்குள்ள இருந்து அதுவா வருதுண்ணே.....
-----------------------------------
நன்றி சந்தனமுல்லை

நன்றி மங்களூர் சிவா...
(பின்னூட்டம் இந்த மாதிரி சின்னதா போடுறத பார்த்து உங்கள ரொம்ப அமைதியானவருன்னு நினைச்சுட்டேன்..அவ்வ்வ்)

ஜிப்பு வச்ச பேண்ட் போட்டவன் said...

பரையாடல் போட்டி பணத்தை, பாரு குபேதிதா மான நஷ்ட வழக்கு போட்டு பிடுங்கி விட்டார். போட்டியாளர்களுக்கு பே.. பே..

அண்டங்காக்கா said...

என்னவே! வேலையப் பாக்க சொன்னா, இங்க வந்து பஞ்சாமிர்தம் கடையுறவே.. அந்தால போயி இட்லிக்கு மாவாட்டுவே..

சாக்ரீம் said...

// இந்த பதிவுக்கும் கவர்ச்சியா "ஜெமோவுக்கு பா.ஜாவின் ராஜ்யசபா எம்.பி பதவியா?", "பைத்தியகாரன்னுக்கு லண்டனில் இருந்து டாலர் பறிமாறியதா?", "உரையாடல் போட்டி பணம் கையாடலா?", "ன்னு ஏதாவது தலைப்பு வச்சா நல்லாதான் இருக்கும். //

நீ பச்சமண்ணுப்பா...

இது இரத்தபூமி.....இங்கென்ன வேலை.

:)

ஒன்னாம் க்ளாஸ் வாத்தியார் said...

/*இப்போதைக்கு ஹாட் டாபிக் "சாரு-ஜெமோ" சண்டை தான்.

அவர்களைப் பற்றி ஒரு கட்டுரையாக பள்ளி பாடங்களில் சேர்த்தால் பின் வரும் தலைமுறையில் கண்டிப்பாக மாற்றம் வரும். */

வழிமொழிகிறேன்.. நானும் சாரு-ஜெமோ சண்டை பத்தி ஒரு கட்டுரை எழுதிகிட்டிருக்கேன். அதையும் சேர்த்து விடுங்கள் நண்பா..

cheena (சீனா) said...

அன்பின் ஆதவா - நல்லாவே இருக்கு - நம்ம வேலய நாம் செய்யணும் - ஆமா - நல்வாழ்த்துகள் ஆதவா

எவனோ ஒருவன் said...

காக்கா கத சூப்பர்.
---
//வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்//
ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா?

☀நான் ஆதவன்☀ said...

ஜிப் வச்ச பேண்டு போட்டவன், அண்டங்காக்கா, சாக்ரீம், ஒன்னாங்கிளாஸ் வாத்தியாரு எல்லாருக்கும் நன்றிகள்...
------------------------------------------
நன்றி சீனா ஐயா
-------------------------------------
@எவனோ ஒருவன்
நன்றி நண்பா

Kathir said...

காக்கா கதை சூப்பர் பாஸ்..

இருந்தாலும் உங்க பாஸ் மேல உங்களுக்கு ரொம்ப பாசம் பாஸ்.....

;))

☀நான் ஆதவன்☀ said...

ஆமாம் கதிர். பாஸீன்னா எனக்கு உயிர் :)

கலையரசன் said...

ஆகா.. ஜட்டி போட்டும் சில பேருக்கு... ஒருவேளை, ஓட்டையோ?

இளைய பல்லவன் said...

மிஸ்டர் முயல்,
இப்படி பதிவு போட்ட என்ன கமென்ட் போடறது?

கமெண்டு போடறா மாதிரி பதிவு போடுங்கப்பா...

☀நான் ஆதவன்☀ said...

@கலையரசன்

வாங்க கலை....நோ கமெண்ட்ஸ் :)
-------------------------------------

@பல்லவன்

இதெல்லாம் ஓவரு பல்லவன். இருந்தாலும் அடுத்த பதிவுக்கு நீங்க எப்படி பின்னூட்டம் போடுவீங்க சொன்னீங்கன்னா ஒரு பதிவு ரெடி பண்ணிடுவேன்.

அடக்கத்துடன் அதே அழகான முயல்
நான் ஆதவன்

ஆ! இதழ்கள் said...

முயல் மேட்டரும் ஜிப் மேட்டரும் சூப்பருப்பூ...

அந்த தாத்தா ஏன் உங்ககிட்ட வந்து இந்த மேட்டர சொல்றாரு...

♫சோம்பேறி♫ said...

ஹல்லோ ஆதவன். நல்லா எழுதிருக்கீங்க.. அந்த காக்கா கதையில கதையோட்டம் நல்லா வந்திருக்க்கு. ஆனா முரண் கொஞ்சம் குறையுது.

உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே!

☀நான் ஆதவன்☀ said...

@ஆ!இதழ்கள்
வாங்க ஆனந்த். அதெல்லாம் குடும்ப இரகசியம். வெளிய சொல்லப்படாது.
-------------------------------------
@சோம்பேறி

//உரையாடல் போட்டிக்கு அனுப்பலாமே!//
பூட்டின வீட்டுல சலம்பல் பண்ண சொல்றீங்களா???

பை த வே எனக்கு நடிகர் கரண்,திரைப்படம் அரண் ஏன் கமிஷ்னர் லத்திகா சரண்(என் ஃப்ரெண்டோட க்ளோஸ் ஃப்ரெண்டு:) கூட தெரியும்...முரண் அப்படின்னா என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.

எவனோ ஒருவன் said...

//பை த வே எனக்கு நடிகர் கரண்,திரைப்படம் அரண் ஏன் கமிஷ்னர் லத்திகா சரண்(என் ஃப்ரெண்டோட க்ளோஸ் ஃப்ரெண்டு:) கூட தெரியும்...முரண் அப்படின்னா என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்.//

இதான் முரணோ?

☀நான் ஆதவன்☀ said...

"கப்"ன்னு பாயிண்ட்ட புடிச்சீங்க எவனோ ஒருவன். ஆனா இது உங்களுக்கு தெரியுது மத்தவங்களுக்கு தெரியலயே

இளைய பல்லவன் said...

//@பல்லவன்

இதெல்லாம் ஓவரு பல்லவன். இருந்தாலும் அடுத்த பதிவுக்கு நீங்க எப்படி பின்னூட்டம் போடுவீங்க சொன்னீங்கன்னா ஒரு பதிவு ரெடி பண்ணிடுவேன்.

அடக்கத்துடன் அதே அழகான முயல்
நான் ஆதவன்
//

சூப்பர்.

கலக்கல்!

பின்னிட்டீங்க

அருமை

அட்டகாசம்

ரொம்ப நல்லா இருந்தது

எக்செல்லன்ட்

இப்படில்லாம் போட முடியாம ஏதாவது நக்கலா, கலக்கலா கமெண்ட் எழுதுற மாதிரி...

Related Posts with Thumbnails