”விளம்பர உலகம்”டா இது!

நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்துட்டேன். நமக்கு ஃபாலோவர் மட்டும் முக்கிகிட்டே நிக்குது (எவன்டா அவன் நல்லா எழுதுனா தான் ஃபாலோவர் சேருவாங்கன்னு சொல்றது....பிச்சு விடுவேன் பிச்சு). கையில காசிருந்தால் தமிலிஷ் மாதிரி எல்லா தமிழ் இணைய தளத்தில் போய் விளம்பரம் செய்யலாம்.

ஆனா வாங்குற சம்பளம் கைக்கும் வாயுக்குமே பத்த மாட்டேங்குது. இதுல விளம்பரம் வேற ஒரு கேடா என்ன?. ஓக்கே இத இப்படியே விடமுடியாது வேற என்ன செய்யுறதுன்னு? யோசிச்சப்ப கிடைச்சுது “சுயவிளம்பரம்”.

நமக்குள்ள ஒரு அக்ரிமெண்டுக்கு வரலாம். கீழ இருக்குற விளம்பரத்த அப்படியே உங்க சைட்ல(site) ஒரு சைடுல வச்சீங்கன்னா உங்க சைட்டுக்கு இலவசமா இதே மாதிரி விளம்பரம் செஞ்சு கொடுப்பேன். என்னது? சைடுல விருது வைப்பதற்கே இடம் இல்லையா? கொஞ்சம் யோசிக்கனுமே.....

சரி எனக்கு ஃபாலோவர் ஆகிடுங்க. சரியா.....

இப்ப விளம்பரத்துக்கு போவோம்.

Photobucket

சோப்பு போட்டு தேய்ச்சு குளிச்சாக்கா, துணி பவுடர் போட்டு துணி துவைச்சாக்கா, அப்பாலிக்கா கூல் ட்ரிங்ஸ் குடிச்சாகா, டூத் பவுடர் போட்டு பல் தேய்ச்சா “தன்னம்பிக்கை” வர்றப்ப.....நம்ம “குப்பைத்தொட்டி”யில இருக்குற பதிவ படிச்சா கூட ”தன்னம்பிக்கை” வரும்ன்னு சொல்ற விளம்பரம் தான் மேல இருக்குறது.

அதாவது நம்ம “ஜூஜூ” அண்ணனுக்கு போன வருசம் நடந்த ரன்னிங் ரேஸ்ல தோத்து போயிட்டாரு. அப்பால நம்ம ”குப்பைத்தொட்டி”யில இருக்குற பதிவுகள படிச்சப்ப அண்ணனுக்கு “தன்னம்பிக்கை” வந்திருச்சு. அடுத்த வருசம் நடந்த போட்டியில அண்ணன் ஜெயிச்சிருறாரு.

ஓடாதபோன்

அதாவது என்னான்னா.....இந்த குப்பைத்தொட்டியில இருக்குற எல்லா பதிவுகளும் வைரத்துக்கு சமம்(நன்றி கோமா) . இன்னாடா இந்த குப்பைதொட்டியில வந்திருக்கோமேன்னு யாரும் ஃபீல் பண்ணகூடாது. இது வைரங்கள் நிறைஞ்ச குப்பைதொட்டியாக்கும் :)

காலையில வந்தம்மா, கொஞ்சம் பக்கத்து சீட்ல கடலை போட்டோமா, கொஞ்சம் ப்ளாக் படிச்சு ஜாலியா இருந்தோமான்னு இருக்கனும். சீரியஸ் ஆகி சண்டை போடக்கூடாதுங்கிறேன்.

ss

நம்ம பதிவுகள படிச்சா சும்மா தைரியம் பொளந்துகிட்டு வரும் ஜாக்கிசான் தங்கச்சி மாதிரி. ”பிஸ்கட்” சாப்பிட்டா தைரியம் வரும் போது நம்ம பதிவ படிச்சா வராதா என்ன? நம்ம பதிவ ஆபிஸ்ல படிச்சுட்டு வீட்டுக்கு போற “ஜூஜூம்மா”கிட்ட வாலாட்டுனான் வில்லன். விட்டாங்க பாரு ஒரு அடி. அப்படியே அவன் பொறி கலங்கி போய்ட்டான் வில்லன். வேணும்னா நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்களேன்.

இன்னும் நாலைஞ்சு லேடி“ஜூஜூ” பொம்மய வச்சு நம்ம ஆடித்தள்ளுபடி விளம்பரம், "axe" பாடி ஸ்பேரே மாதிரி நம்ம பதிவ படிச்சாலே பொண்ணுங்க எல்லாம் பின்னாடியே சுத்துற மாதிரி, “குப்பைத்தொட்டி”ய படிச்சா ஐ.ஏ.எஸ் ஆகுற மாதிரி ஒரு விளம்பரம்ன்னு கைவசம் நிறைய இருக்கு. நேரம் கிடைக்கும் போது அவுத்து விடுறேன் மக்கா.

ஏலேய் மக்கா ஓட்டு போட மறந்துராதீக........

”இலவு காத்தக் கிளிகள்”-பஞ்சாமிர்தம்

எப்பவும் சேட்டனுக்கு நீ மட்டும் தான் கோல் அடிப்பையா? அவர் உன்ன கலாய்க்கமாட்டாரான்னா..........அதுவும் சில சமயம் நடக்கும். என்ன நான் வெளிய சொல்லிக்கிறதுல்ல.

சேட்டனுக்கு வாரக் கடைசியான வியாழக்கிழமை மட்டும் கொஞ்சம் மப்பு அதிகமாக இருக்கும். எனக்கு ரொம்பவும் போர் அடித்தால் இரண்டு மூன்று சேட்டன்மார்கள் ஒன்றாக இருக்குமிடத்தில் போய் மொக்கை போடுவது வழக்கம். டைம் பாஸ் ஆகும்.

அதுபோல் சென்ற வாரம் பேசிக்கொண்டிருக்கும் போது “அதிர்ஷ்டம்”த்தை பற்றி பேச்சு வந்தது. அதிர்ஷ்டத்தில தான் வாழ்க்கையே இருக்குதுடா தம்பின்னார்.

எங்கன சேட்டா?ன்னு தெரியாம கேட்டுட்டேன்.

உடனே “ஒருத்தன் வாழ்க்கையில வேலையே கிடைக்காம ரொம்ப கஷ்டபட்டிருந்தான் அது அவனோட துரதிஷ்டம். அப்புறம் ஒரு வேலை கிடைச்சுது அது அவன் அதிர்ஷ்டம். ஆனா அது சாதாரணப் பெயிண்டர் வேலை, அது அவன் துரதிஷ்டம். ஆனா அதுல அவனுக்கு கொஞ்சம் பணம் கிடைச்சு அதுல பசிய போக்குற அளவுக்கு சாப்பாடு வாங்கினான், அது அவன் அதிர்ஷ்டம். ஆனா அந்த வேலையில ரொம்ப உயரமான கட்டத்தில தொங்கிட்டு வேலை செய்ய வேண்டியிருந்தது அவன் துரதிஷ்டம்....”

”சேட்டா மதி...ஞனக்கு சமயம் ஆயி....ஞான் பின்ன வரா...” முடிக்கும் முன் அட இரு தம்பி என்றபடி தொடர்ந்தார்.

“உயரமான கட்டிடத்தில வேலைப் பார்த்தாலும் நிறைய பாதுகாப்புகளை கம்பெனி செஞ்சிருந்தது, அது அவன் அதிர்ஷ்டம். அப்படி பாதுகாப்பு செஞ்சிருந்தாலும் அதுல ஒரு கயிறு ஸ்டாராங்க இல்லாதது அவன் துரதிஷ்டம். அத அவன் கவனிச்சது அவன் அதிர்ஷ்டம். ஆனா அதுக்குள்ள அது அறுந்து விழுந்தது அவன் துரதிஷ்டம். ஆனா பக்கத்திலேயே ஆஸ்பிட்டல் இருந்தது அவன் அதிர்ஷ்டம். விழுறதுக்கு முன்னால கீழ ஒரு லாரி வந்தது அவன் துரதிஷ்டம், ஆனா அது மணல் லாரியா போனது அவன் அதிர்ஷ்டம். மணல் மேல குதிக்கலாம்ன்னு போனவனுக்கு மணலுக்கு நடுவுல ஒரு கடப்பாரை செங்குத்தா குத்தி நிக்க வச்சது அவன் துரதிஷ்டம்” மூச்சு விடாமல் முடித்தார்.

ஏற்கனவே இந்த மொக்கை ஓடியிருக்கும் போல. மத்த சேட்டன்மார்கள் கண்டுக்கவே இல்ல.

நைஸாக கழண்டு வெளியே வந்த போது எல்லா சேட்டன்களும் சத்தம் போட்டு சிரிப்பது கேட்டது. ங்கொக்கா மக்கா இனிமே இவன்க தண்ணியடிச்சிருக்கும் போது பேசவே கூடாது.

******************************************************************************************
போன வாரம் நண்பரோட சாட்டிங்ல இருக்கும் போது சாம் ஆண்டர்சன் படத்த பார்த்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

படம் செம காமெடியாக இருப்பதாக கூறினார். நாளைக்கே அவரைப் பற்றி ஒரு பதிவு எழுத போவதாக கூறினார். சாம் ஆண்டர்சன் பார்வையற்றவர் என்று கூறியதும். கொஞ்சம் யோசித்தவர்.......ஓக்கே இனி அவரை கிண்டலேத்தி எதுவும் சொல்ல மாட்டேன் என்றார்.

கொஞ்ச நேரம் கழித்து “நல்லா தெரியுமா அவருக்கு கண்ணு தெரியாதா? இல்ல அந்த படத்தோட டைரக்டருக்கு கண்ணு தெரியாதா? என்றார். யோசிக்க வேண்டிய கேள்வி.

******************************************************************************************
ஸ்ஸ்ஸ்ப்பா வெயில் மண்டைய பொளக்குது இங்க. இதுல தெரியாத்தனமா “நெடுங்குருதி” படிக்க ஆரம்பிச்சேன். வெக்கை என் மேல் வடிந்து, கழுத்து வழி கசிந்து, உடம்பெங்கும் படர்ந்து....படிக்கிற நம்மளுக்கும் வியர்க்க வைக்கிறது அந்த புத்தகம். கதை சொல்லும் போக்கே எனக்கு புதியதாக இருக்கிறது. ஒவ்வொரு காலத்திலேயும் கதை நகர்வது அந்த காலத்திற்கே நம்மை பயணிக்க வைக்கிறது. கதைக்கு நாயகன் என்று யாருமில்லை. கதை மாந்தர்களை நம் மனதில் மிக அழுத்தமாய் பதிய வைக்கிறார் எஸ்.ரா.

கதை வாசிக்கும் போது வேம்பின் மணத்தை நம் மேலும் படற விடுகிறார் ஆசிரியர். மனதை விட்டு அகல மறுக்கிறது அந்த வேம்பலை கிராமம்.

******************************************************************************************
இந்த வருஷம் தம்பி (சித்தி பையன்) ஒருத்தன் +2 பரிட்சை எழுதியிருந்தான். ரிசல்ட் வருகிற நேரம் அவன்கிட்ட நம்பர் வாங்கி இங்க மார்க் பார்த்தேன். மார்க்கு ரொம்ப சுமார் தான். அப்ப கூட சேட்டனும் இருந்தாரு.

கொஞ்ச நாள் முன்னாடி பொறியியல் கவுன்சிலிங் நடக்குறத நியூஸ்ல காமிச்சாங்க. அத பார்த்திட்டு இருந்த சேட்டன் “தம்பியோட(என்னொட) தம்பிக்கு எந்த காலேஜ் கிடைச்சுது”ன்னு கேட்டாரு. நான் ”இல்ல சேட்டா பையன் மார்க் ரொம்ப கம்மி. இன்ஞினியரிங் எல்லாம் கிடைக்காது. வேற ஏதாவது தான் சேர்க்கனும்”ன்னு சொன்னேன்.

“ஏன்?”ன்னு கேட்டாரு

“இரண்டு மெயின் சப்ஜெக்ட்ல பார்டர்ல பாஸாயிட்டான்”ன்னேன்

“பார்டர்ல பாஸானா மிலிட்ரி சுட்டுறாதா தம்பி”ன்னு கெக்க பெக்கேன்னு ஒரே சிரிப்பு பயபுள்ளைக்கு.....

நான் “இல்ல சேட்டா அது சென்ட்ரல் போர்ட்ல(CBSE) தான் அப்படி ஸ்டேட் போர்டுல அப்படி இல்ல. பையன் ஸ்டேட்ல தான் பார்டர் பாஸ் பண்ணினான்”னேன்....கோல் வாங்கிட்டு அதுக்கும் பயபுள்ள கெக்கே பெக்கேன்னு சிரிப்பு.
******************************************************************************************
இந்த வார கார்டூன்: “இலவு காத்தக் கிளிகள்”


”ஆப்பக்கடை” எதிரில்.......


பதிவர் வட்டம்


புகைப்படங்களில் சில........
ஒரு வழியா பதிவர் சந்திப்பு முடிஞ்சுது. சக்திவேலுக்கு புகழாரம் சூட்டி ஆசிப் அண்ணாச்சியும்,அய்யனாரும் தொடங்கி வைத்தனர். தேவையில்லாமல் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அல்லோகலப்படுத்தியதற்காக குசும்பன் மீது குற்றம் சாற்றப்பட்டது. ஆனால் இதில் அண்ணாசிக்கும் பங்கிருப்பதால் விசாரணை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

ஆப்பக்கடை எதிரில் “ஆப்பு” “ஆப்புரசன்” யாராக இருக்கும் என்ற கேள்வியே நெடு நேரம் ஓடியது. பின்பு “ஆப்பரசன்” கலையரசனாக முடிவெடிக்கப்பட்டது. “ஆப்பு” மட்டும் யார் என்று முடிவெடுக்காமலேயே போயிற்று.

பல முக்கியமான விசயங்களை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் ஆசிப் அண்ணாச்சி விளக்கியது சிறப்பு. இன்றைய பதிவுலக சூழலை முன்பிருந்த சூழலோடு ஒப்பிட்டு பேசினார். அனைவரையும் எதற்காக எழுத வந்திருக்கிறீர்கள் என்ற கேட்க தொடங்கினார். அடிக்காத போனை அனவரும் எடுத்து “ஹலோ” என்ற போது வேறு வழியில்லாமல் பேச்சை மாற்றினார்.

அய்யனாரின் நேர்மையான விவாதம், வலைப்பதிவின் அடுத்த கட்ட நகர்வுக்கான அவரது ஆதங்கம் என “நச்” என சொல்லியது மற்றொரு சிறப்பு. சுந்தர் சார் கொண்டு வந்த வடைகள் மற்றொரு சிறப்பு.

யாரும் இங்கு “பிரபல பதிவர்” “மூத்த பதிவர்” கிடையாது. தங்களுக்கான அடையாளத்தை மற்றவர்கள் முக்கியமாக பின்னூட்டங்களோ, வெகுஜன இதழ்களோ கொடுக்க முடியாது என்றும் தாங்களே அதை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார். முடிந்த வரை மொக்கைளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு குசும்பனின் சாபத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் அச்சு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எழுவது நல்ல பழக்கம் ஆனால் எழுதும் முன் நன்றாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல் நலம். இதற்காக புத்தகங்கள் அவசியப்படின் தரவும் தயார் என அய்யனாரும்,ஆசிப் அண்ணாச்சியும் கூறினர். புதிதாக வலைப்பூவில் எழுத வந்துள்ள பதிவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெளிவாக்கப்படும் என்றார். பட்டறை நடத்தலாம் என்று கூட ஆலோசிக்கப்பட்டது.

யார் யார் வந்தார்கள் என்று அறிய சென்ஷி எழுதிய பதிவிற்கு செல்லவும்
குசும்பன் எழுதிய பதிவு
செந்தில் எழுதிய பதிவு
கீழை ராஸா எழுதிய பதிவு
கிளியனூர் இஸ்மத்

சில துளிகள்:

1. வந்ததில் ஒரே ஒரு பெண் பதிவர். “படகு” என்ற வலைப்பூவை எழுதுபவர்.

2.ராஜேந்திரன் என்ற 60 வயது மதிக்கதக்க பதிவரல்லாத ஒருவர் உருப்படியாக இங்கு ஒரு கூட்டம் நடப்பதாக கேள்விப்பட்டு குசும்பனுக்கு போன் செய்து வந்திருந்தது ஆச்சர்யம். அதை அவர் குசும்பனுக்கு விளக்க குசும்பன் ஞாபகம் வராமல் “ஙே” என முழிக்க....பின்பு ”ஓ நீங்களா” ஞாபகம் வந்தவராக பேசினார்.

3.முதலுதவி பெட்டியுடன் பதிவர் சந்திப்புக்கு வரலாம் என நினைத்தால், உலகத்திலேயே மிக அமைதியான,அடக்கமான,அறிவு ஜூவி பதிவர்கள் இருப்பது அமீரகத்தில் தான் என்று சான்றிதல் கொடுக்கப்பட்டது ஆச்சர்யம்.கிசுகிசு மாதிரி......
ஒரு பதிவர் கொண்டு வந்த புத்தகங்களை ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு எடுத்து படிக்க(புரியலைனாலும் சில ஆங்கில புத்தங்களும் கூட) ஒரே ஒரு புத்தகம் மட்டும் அனாமத்தாக கிடந்தது. யாரும் அதை எடுக்கவே இல்லை. அந்த “பிரபலப் பதிவர்” அதை எடுத்த போது எல்லாருக்கும் ஒரே ஆச்சர்யம் கலந்த வியப்பு. ஆனால் அதை எடுத்த அவர் “கர்சீப் கொண்டு வரல மக்கா”ன்னு காற்றுக்காக வீச தொடங்கிய போது சபையே சிரிப்பில் மூழ்கியது. அவர் வீசுவதை போட்டி போட்டுக் கொண்டு படம் எடுத்த மக்கள் வெளியிடுவார்களா என்று தெரியவில்லை.

விடமாட்டோம்ல.......கோர்த்து விட்டாச்சு!


புரளிய கிளப்ப நிறைய ஆள் இருக்காங்க போல. நான் ஏதோ நல்லா சுவாரஸியமா எழுதுவேன்னு புரளிய கிளப்பிவுட்டுருப்பாங்க போல, நம்ம ராப் அக்கா உடனே எனக்கு ஒரு விருதை கொடுத்து கவுரவிச்சுட்டாங்க(நீங்க இது புரளி இல்ல நிஜம்ன்னு சொல்றது என் காதுக்கு கேட்குது).

இதுக்கு பணமுடிப்பு ஏதாவது தரவேண்டியிருக்கான்னு செந்தழல் ரவியோட பதிவை மூணு தடவை படிச்சேன். ப்ச்......அந்த மாதிரி இல்ல. அடுத்த தடவை யார் கொடுத்தாலும் பணம் தர்ர மாதிரி பார்த்துக்கங்க.

யாருக்கு கொடுக்கலாம்ன்னு யோசிச்ச உடனேயே நம்ம நினைவுக்கு வருபவர்
இளைய பல்லவன். சரித்திர நாவல், திரைக்கதை எழுவது எப்படி? என தொடர்கள் எழுதுகிறார். அரசியல், கதை, மொக்கை,கவிதை(இரண்டுக்கும் நடுவுல கமா இருக்கு...பார்த்துக்கங்க) என சுவாரஸியமா எழுதுறதுல்ல வல்லவர். வாழ்த்துகள் இளைய பல்லவன்.

இரண்டாவது நம்ம பப்புவுக்கு. இவர் பதிவ படிச்சீங்கன்னா உங்களுக்கே தெரியும். எவ்வளவு சுவாரஸியமானவர் என்று. கல்லூரி மாணவனுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய கலாட்டா தான் இவர் பதிவுகள். கொஞ்சம் அரசியல், காமெடி, சினிமா என சுவாரஸியமா எழுதுபவரில் வல்லவர். வாழ்த்துக்கள் பப்பு :)

அடுத்து ஆ!இதழ்கள் ஆனந்த். தலைவர் கொஞ்ச நாளா எழுதவே இல்ல. என்னென்னு தெரியல. நல்ல சுவாரஸியமா பல விசயங்களை எழுதுவார். அவருக்கும் என் வாழ்த்துகள்.


விருது வாங்கின எல்லாரும் பேசினபடி பொட்டி அனுப்பிறனும் சரியா?

”அட்வைஸ்” அல்ல டிப்ஸ்....

முன்குறிப்பு: இது இந்த பதிவுக்கு எதிர் பதிவல்ல.

முன் குறிப்புக்கு ஒரு பின் குறிப்பு: இது எந்த பதிவுக்கும் எதிர் பதிவல்ல. சும்மா கலர் மாத்தி கொடுத்திருக்கேன். லின்ங் எதுவும் இல்லை. அதை நோண்டி நோண்டி மானிட்டரை டேமேஜ் ஆக்க வேண்டாம். மேலும் “அண்ணே லின்ங் கொடுக்க மறந்திட்டீங்கன்னு” பின்னூட்டம் இடும் அப்பாவிகளுக்கு நன்றிகள்.

வாழ்க்கையில சில முக்கியமான காலகட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் நிறைய பேர் தடுமாறி திணறுவாங்க. முக்கியமா படிச்சு முடிச்சு கொஞ்ச நாள் சும்மா வெட்டியா உட்காரலாம்ன்னா வீட்ல விடமாட்டாங்க.

அவுங்களுக்காக சில எச்சரிக்கை மற்றும் டிப்ஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சால், பினாயில இலவசமா கொடுத்தாலும் குடிக்கும் நம்ம பசங்க இந்த எச்சரிக்கையை “இலவச அட்வைஸ்” நினைச்சு அலறிகிட்டு ஓட வாய்ப்புண்டு. அப்படியெல்லாம் இல்லை...சில டிப்ஸ்னு நினைச்சுக்கோங்க. மீறி இதை இலவச அட்வைஸா தான் நினைப்பேன்னா 0003489867811213 இந்த அக்கௌண்ட் நம்பருக்கு 1001 ரூபாய் அனுப்பியிருங்க.

நடு குறிப்பு: அக்கௌண்ட் நம்பர் சும்மா டைப் பண்ணியது. ”அண்ணே இந்த அக்கௌண்ட்டுக்கு பணம் போகல”ன்னு பின்னூட்டம் இடும் நல்லவர்கள் 1001 ரூபாய் டி.டி எடுத்து அனுப்பலாம்.

மூன்று வருடம் கடுமையாக உழைத்து படிச்சு பாஸாகி (அ) பெயிலாகி ஒரு ஆறு மாசம் வீட்ல உட்காரலாம் என்றால் வீட்டில் செய்யும் சதிகள் நம்மை வேலை தேடி அலைய வைத்து விடும்.

அக்னி வெயில்ல பரிட்சை முடிஞ்சு காலையில தூங்கும் போது மப்ளரை கட்டிக் கொண்டு அப்பா “டேய் வெளிய ஒரே குளிரா இருக்கு, அப்பானால வெளிய போகமுடியல..போய் பால் வாங்கிட்டு வா”ன்னு 5 மணிக்கு அப்பா எழுப்பினா மறுப்பேதும் சொல்லாம போய்ட்டு ஒரு 9 மணிக்கு ரிட்டன் வாங்க. இரண்டு நாள் இப்படி செஞ்சீங்கன்னா திருப்பி அனுப்புவது சந்தேகமே.

(திருப்பி அனுப்ப நேர்ந்தால் பாலில் ஒரு துளி தயிரை சேர்த்து விடவும். நீங்க வாங்கிட்டு வர்ர பால் எல்லாம் கெட்டுப்போகுதுன்னு அனுப்பாம இருக்க வாய்ப்புண்டு)

”அடுப்புல குழம்பு கொதிக்குது ராசா...கொஞ்சம் நம்ம அண்ணாச்சி கடையில போய் பூண்டு வாங்கிட்டு வாயா” என்று அம்மா தொடங்க வாய்ப்புண்டு. பூண்டு தானே சாதாரணமாக நினைத்தால் அது வெடிகுண்டாக மாறி உங்கள் வெட்டி ஆபிசர் வேலைக்கே உலை வைத்துவிடும்.

பின்பு கீரை ஆய்ந்து கொடுப்பது, அரிசியில் நெல்,கல் பொருக்குவது என பெரிதாக முடிய வாய்ப்புண்டு.

பூண்டு வாங்கிவரச் சொன்னால் வெங்காயம் வாங்கி வரவேண்டும். கோவித்துக்கொள்ளும் அம்மாவிடம் “அப்ப இது பேரு பூண்டு இல்லையா?” என்று அப்பாவியாக கேட்கவும்.

(திரும்பவும் பூண்டின் படம் வரைந்து பாகங்களோடு அம்மா விளக்கி கூறி வாங்கி வரச் சொல்ல வாய்ப்புள்ளது. அப்போது “வெள்ளை வெங்காய”த்தை வாங்கி வருதல் உச்சிதம்)

”டேய் கிச்சன்ல வேலை இருக்கு, கொஞ்சம் சீரியல் பார்த்து கதை சொல்லுடா. மதியம் சாப்பாடு செய்யனுமில்ல” என்று டீசண்டாக மிரட்டபடலாம். சீரியல் பார்த்து தான் சோறு சாப்பிட வேண்டுமா? என்று வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு செல்ல முடிவெடுக்க வேண்டாம்.

“அவ அவளோட மாமியாருக்கு கால் அமுக்கி விட்டா”,

”மாமியார் அவளுக்கு காபி போட்டு கொடுத்தா”.

”அவளோட கணவன் ஆபிஸ்ல இருந்து பத்திரமா வீட்டுக்கு வந்துட்டான்”.

”அவ தங்கச்சி காதலன்கிட்ட ”வீட்ட விட்டு உன்னோடு ஓடிப்போக வரமாட்டேன்னு” சொல்லிட்டா”

இந்த மாதிரி நல்ல நல்ல விசயங்களை சொன்னோம்ன்னா அம்மாவுக்கு வெறுப்பாகி “நீ ஆணியே புடுங்க வேணாம்”ன்னு சொல்ல வாய்ப்புள்ளது.

உண்ட மயக்கத்தில் உறங்கும் நேரம், எழுப்பி “சாயங்காலம் ஸ்நாக்ஸ் என்னப்பா செய்ய? பஜ்ஜியா? போண்டாவா? என கேட்கும் போது கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். அதற்கு பதில் கூறினால் “சரி அம்மா பஜ்ஜி செஞ்சு வைக்கிறேன்..போய் ரேசன் கடைக்கு போய் சர்க்கரை, ரவா, மைதா எல்லாம் வாங்கிட்டு வாப்பா” என கூறினால் அதுதான் உச்சகட்டத் தாக்குதல்.

மாலைநேரம் பள்ளி,கல்லூரி விடும் நேரம். பெண்கள் சாரை சாரையாக செல்லும் வழியிலேயே ரேசன் கடை அமைந்திருக்கும். அங்கே கையில் பையுடன் ரேசன் கடையின் வரிசையில் நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை?

“எனக்கு ஒன்னும் வேண்டாம்மா”, எனக்கூறி வழக்கம் போல நாயர்கடையில் டீயும்,பஜ்ஜியும் வாங்கி உண்பது உத்தமம்.

இதெல்லாம் உன் சொந்த அனுபவமா என்று கேட்டு வரும் பின்னூட்டங்கள் கண்டிப்பாக மட்டுருத்தப்படும் எனபதை தெரிவித்துக்கொள்கிறேன்."காக்கா கதை" - பஞ்சாமிர்தம்

ஒரு மரத்தில காக்கா வெட்டியா உட்கார்ந்து இருந்துச்சாம். அங்க வந்த முயலு கீழருந்துகிட்டு"ஏன் காக்கா வெட்டியா உட்கார்ந்திருக்கே. வேற எதுவும் வேலை இல்லையா"ன்னு கேட்டுச்சாம்.

அதுக்கு காக்கா "அதெல்லாம் இருக்குது, நான் சும்மா தான் உட்கார்ந்திட்டிருக்கேன். நீ உன் வேலைய பாரு"ன்சாம். உடனே முயலும் ரோஷமாகி "நானும் வெட்டியா இப்படி தான் உட்காருவேன்"னு சொல்லிட்டு மரத்துக்கு கீழ சும்மாவே உட்கார்ந்துச்சாம்.

அந்த நேரம் பார்த்து அங்க வந்த வேட்டைக்காரன் முயல் ஓடாம சும்மா உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு ஈஸியா புடிச்சுட்டு போயிட்டானாம்.


ss1


moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...

வயித்தெரிச்சலுடன் அண்டங்காக்காவுக்கு கீழே பணியிலிருக்கும் அழகான முயல்

நான் ஆதவன்

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

இப்போதைக்கு ஹாட் டாபிக் "சாரு-ஜெமோ" சண்டை தான். இந்த பதிவுக்கும் கவர்ச்சியா "உண்மையான பைத்தியக்காரன் சாருவா?", "ஜெமோவுக்கு பா.ஜாவின் ராஜ்யசபா எம்.பி பதவியா?", "ஜ்யோராம் சுந்தர்க்கு மூளை(யும்) கிடையாதா?", "பைத்தியகாரன்னுக்கு லண்டனில் இருந்து டாலர் பறிமாறியதா?", "உரையாடல் போட்டி பணம் கையாடலா?", "நர்சிமை பதிவு போடச் சொல்லி அழுத்தம் தரப்பட்டதா?"ன்னு ஏதாவது தலைப்பு வச்சா நல்லாதான் இருக்கும். ஆனா 'சூடான இடுகைகள்' இல்லாம இதெல்லாம் செஞ்சு வேஸ்ட் தான்.

என்கிட்ட இலக்கிய அறிவு ரொம்ப கம்மின்னு தண்டுமாரியம்மன் கோவில் சூடத்து மேல அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லவேண்டியதில்ல.... அதுனால நான் இவுங்கள பத்தி எதுனா எழுதலாம்ன்னு நினைச்சாக்கா.... எங்க ஒன்னு விட்ட தாத்தா சொல்றது தான் ஞாபகம் வருது "ஜட்டி போட்டு பழக்கம் இல்லாதவன் ஜிப்பு வச்ச பேண்ட போடவே கூடாது".....அதையும் மீறி போட்டா பிரச்சனை தான்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

கடைசியாக படித்து முடித்த புத்தகம் லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் வித்யா". இதை படித்து முடித்தவுடன் திருநங்கைகளின் மேல் இச்சமூகத்தில் உள்ள தவறான பார்வைகள் புலப்படும். நமக்கே தெரியாமல் நம்முள்ளே அவர்களின் மேல் ஒரு அருவருப்பு இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பது தெரியும். ஒரு புரிதல் கிடைக்கும். கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். சக மனிதனாக அவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும்.

இப்புத்தகத்தை கொஞ்சம் சுருக்கி அல்லது அவர்களைப் பற்றி ஒரு கட்டுரையாக பள்ளி பாடங்களில் சேர்த்தால் பின் வரும் தலைமுறையில் கண்டிப்பாக மாற்றம் வரும்.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

சேட்டன்மார்களை பத்தி எழுதி ரொம்ப நாளாச்சு. எழுத எக்கச்சக்க மேட்டரெல்லாம் இருக்குது. ஆனா இந்த தடவை கேரள சிஎம் அச்சுதானந்தன் சேட்டன் பற்றிய ஒரு காமெடி பார்ப்போம்.

அச்சு சேட்டன் கட்சி ஆதரவாளரா 'சுகுமார் ஆழிக்காடு'ன்னு ஒரு எழுத்தாளர் இருக்காரு. கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் தோத்ததற்கு அப்புறம் அச்சு சேட்டன் பத்திரிக்கையாளர் சந்திப்புல எதுக்கோ வாய்விட்டு சிரிச்சாராம். உடனே இந்த எழுத்தாளர் ஒரு பேட்டியில "பறவை தன் கூண்டுலேயே கக்கா போய் அசிங்கமாக்கிடும் அது மாதிரி தான் கட்சியில அச்சுதானந்தனே அசிங்கபடுத்துறாரு"ன்னு அறிக்கை விட்டாரு.

அப்புறம் இரண்டு பேருக்கும் முட்டிக்க ஆரம்பிச்சுது. ரெண்டு பேரும் சண்டை போட்டது பத்திரிக்கையில எல்லாம் வந்தது. தீடீர்னு நம்ம அச்சு சேட்டன் சுகுமாருக்கு போன் செய்து சமரசம் பேசிட்டாரு. சுகுமாரும் அவரே வலியக்க வந்து பேசிட்டாரேன்னு கூலாகி பத்திரிக்கைய கூப்பிட்டு "நானும் அச்சுவும் இராசியாகிட்டோம்"அப்படின்னு சொன்னாரு.

இத பத்திரிக்கையில பார்த்த அச்சு காண்டாகி நான் போன்ல பேசவேயில்லை அப்படின்னு திருப்பி சொல்லியிருக்காரு. செம காமெடி ஆகி போச்சு.

எவனோ மிமிக்ரி கலைஞன் ஒருத்தன் அச்சுதானந்தன் வாய்ஸ்ல சுகுமார்கிட்ட பேசியிருக்கான். இதுதெரியாம சுகுமார் ஆழிக்காடு பத்திரிக்கைய கூப்பிட்டு சொல்லிட்டாரு.....பத்திரிக்கைங்களுக்கு செம தீனி.
Related Posts with Thumbnails