அவ்வளவு மோசமாவா இருக்கு?

அக்னி வெயிலில் நண்டு சாப்பிடுவது அவ்வளவு மோசமானதா? இருக்காது வேறு சில காரணம் ஏதாவது இருக்குமா? இல்லை மதியம் சாப்பிட்ட இரண்டு மாம்பழம் காரணமாக இருக்குமோ என்று மொட்டு வளையத்தைப் பார்த்து நான் யோசித்துக்கொண்டிருந்த நேரம் என் அக்கா நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி (அக்காவுக்கு தலையில அடிக்கிறது புடிக்காது) "எவ்ளோ நேரமா கூப்பிடுறேன் அப்படி என்னடா மேல பார்த்திகிட்டுருக்க" என்றார்.

"இப்ப என்ன வேணும்? ஒரு மாசம் நிம்மதியா இருக்கலாம்ன்னு ஊருக்கு வந்தா தொல்லையா இருக்கே..."

டேய் கிச்சன் நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குதுடா..நீ தான் ஏதேதோ எழுவியாம்ல! அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..

என்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் "மாமா எதுனா கதை சொல்லுவான். அப்படியே தூங்கிடனும். சரியா" என்றபடி சுமையை இறக்கி வைத்த போர்டர் போல சென்றுவிட்டார்.

என்ன கதை சொல்வது?? நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது? அன்னைக்கு டீப்பாயில ஆனந்த விகடனப் பார்த்துட்டு இதையெல்லாம் வாங்கி ஏன் காச வேஸ்ட் பண்றீங்க? உயிர்மை, காலச்சுவடு இந்த மாதிரி வாங்க மாட்டீங்களான்னு சும்மா ஒரு சீனுக்கு பிட்ட போட்டப்ப 'தினகரன்' படிச்சுகிட்டுருந்த அப்பா ஒரு மாதிரி பார்த்தாரே! அவர் சொல்லியிருப்பாரா?

எதிர் வீட்டு ஃபிகர் வீட்டுக்கு வந்தப்ப ஆனந்த விகடன்ல வந்த கதை சரியில்ல, கதையோட்டம் சரியில்ல, ஒரு முரண் இல்லன்னு சீன் போட்டத அக்கா கேட்டிருப்பாளோ?

பலகேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருந்த என்னை தலையில் கொட்டி(இவனுக்கும் தலையில் அடிப்பது பிடிக்காது) கத சொல்லு மாமா என்றான் ஆதி.

மனதை தேத்திக் கொண்டு "உரையாடல்-சமூக, இலக்கிய அமைப்பு" நடத்தும் போட்டிக்காக நான் வைத்திருந்த கருவிற்கு உயிர் கொடுத்து, கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

"ஒரு ஊர்ல பயங்கர தண்ணி பஞ்சமாம்"

"எங்க மாமா துபாய்லயா?" ஆதி

"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா"

"சரி நீ சொல்லு" கீர்த்தி

"அந்த ஊருல ஒருத்தன் கிணறு வெட்டத்தொடங்கினானாம்?"

"பூதம் வந்துச்சா மாமா" கீர்த்தி

"இங்கேரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா மாமாவுக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்"

"விளக்கமாறு பிஞ்சிடும்" கிச்சனிலிருந்து அக்கா குரல்....

"விடமாட்டாங்களே...சரி அவன் கிணறு வெட்டுனானா..ஆனா ரொம்ப பள்ளம் தோண்டியும் தண்ணியே வரலையாம்"

"ஏன் மாமா மோட்டர் போடலையா?" ஆதி

"ஸ்ஸ்ஸ்ப்பா"

"சரி சொல்லு. நான் இனிமே பேசமாட்டேன்" ஆதி

"அப்புறமா ரொம்ப ஆழத்துக்கு அப்புறம் தண்ணி வந்துச்சாம். ஆனா தண்ணி சூப்பரா இருந்துச்சாம்"

"சூப்பரான்னா?" கீர்த்தி

"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் கிணத்துலேயே தண்ணி எடுக்க ஆரம்பிச்சாங்களாம். இவன் எல்லாரும் இறங்கி தண்ணி பிடிக்கறதுக்காக படிக்கெட்டெல்லாம் போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்.."

"ஒரு நாளு..."

"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா படிக்கெட்டெல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். சரின்னு எல்லா படியையும் சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப எல்லா படியும் உடைஞ்சு கிடக்குதாம்."

"ஏன் மாமா உடைஞ்சு போச்சு?" கீர்த்தி

"ஏய் அது ஸ்டாராங்கா இல்லப்பா. இல்ல மாமா?" ஆதி

"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்?. ஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு படிகட்ட சரி செஞ்சுட்டு மறுபடியும் காலையில"

"காலையில பார்த்தா படிகெட்டு உடைஞ்சு கிடக்குதாம்" ஆதி

"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் மாமா சொல்றேன்ல..... அன்னைக்கு படிக்கெட்ட சரி பண்ணிகிட்டு இராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு "திபு திபு திபு திபு"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய மாடு இறங்கி ஓடி வந்துச்சாம். "

"பெரிய மாடா மாமா" கீர்த்தி

"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம் பெருசாம். அதோட வாலு சுருண்டு சுருண்டு சுருண்டு சுருண்டு ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்."

"டேய் ஆதி இவ்ளோ பெருசா இருக்கும்டா" கையை முடிந்த மட்டும் விரிக்கிறாள் கீர்த்தி.

"இல்லடி அது நம்ம வீட்ட விட பெருசா இருக்கும் தெரியுமா" ஆதி

"மாமா இங்க பாரேன் வீட்ட விட பெருசா எங்கன்னா மாடு இருக்குமா?ஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்" சிரிக்கிறாள் கீர்த்தி.

"மாமா நேத்து (அவன் மொழியில இன்னைக்கு, நாளைக்கு தவிர எல்லாமே நேத்து தான்) டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு.." ஆதி

"டாய் மாமா கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம். அந்த மாடு வந்து படிகட்டுல இறங்கி அந்த தண்ணிய குடிச்சுதாம். திரும்பவும் மேலே போச்சாம். அப்ப படிக்கட்டெல்லாம் உடைஞ்சு போச்சாம். அத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த மாடு நிலாவுக்கு நேரா போச்சாம்"

"ஏண்டா தம்பி... அந்த மாடு திரும்பி பாக்கல" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.

"டேய் சீக்கிரம் சொல்றா. எனக்கு வேலை இருக்கு"

"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்ற?"

"அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு" என்றார் அக்கா கரண்டியை மற்றொரு உள்ளங்கையில் தட்டி.

"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.

"வைடூரியம்,வைரம்ன்னா என்ன மாமா" ஆதி

"சரி கிண்டர் ஜான், குர்குரே, லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து மாடு கிளம்பும் போது திரும்பி வந்தானாம். ஆனா ஒரு நாளா இவனை காணாம அவன் பொண்டாட்டி ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பசங்களுக்கு கிண்டர் ஜானும்,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.

எப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா?"

"ம்ம் புரியுது மாமா" கோரஸ்...

"அவன் பொண்டாண்டியும் அவன் புள்ளைங்களும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் அவன். அப்புறமா அவன் பொண்டாண்டி தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க இவளும் யார்கிட்டயும் சொல்லாதன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு"

"அய்யய்யோ..."அக்கா

"என்ன அய்யய்யோ......உள்ள வேலைய பாருங்க" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.

"மறுநாள் அவன் பொண்டாட்டி புள்ளைங்களோட பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த மாடு "திபு திபு திபு திபு"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் மாடு வாலை பிடிக்க,அவன் கால அவன் புள்ள புடிக்க,புள்ள கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்"

"காலு வலிக்காதா மாமா?" ஆதி

"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா..... அப்ப அவன் பையன் அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு கேட்டான். இல்லடா கண்ணா ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டான் புள்ள. அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க"

"எப்படி மாமா செத்து போனாங்க"கீர்த்தி

"அவன் மாடு வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும் எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க"

"அப்புறம் என்னாச்சு மாமா"ஆதி

"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது"

ம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஏய்ய்ய் எழுந்திருங்க அவன் தான் வேலையத்தவன் ஏதோ சொல்றான்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திருடி, எழுந்திருடா போய் கண்ண மூடி படுங்க போ கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன். மூடு.... என்று என்னையும் தலையில் ஒரு கொட்டி போய் விட்டார் என் அக்கா.

அவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...

நம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு???.......

டிஸ்கி: அதுக்கப்பறமா எழுதியது தான் "வவுத்த வலி" சிறுகதை...இல்லைன்னா இதையே எழுதி அனுப்பலாம்ன்னு இருந்தேன்

24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

jothi said...

அருமையா இருக்கு,..

சென்ஷி said...

//பலகேள்விகளுக்கு பதில் தெரியாமல் இருந்த என்னை தலையில் கொட்டி(இவனுக்கும் தலையில் அடிப்பது பிடிக்காது) கத சொல்லு மாமா என்றான் ஆதி.//


LOL :)))))))))

கார்க்கி said...

:))

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஜோதி, சென்ஷி & கார்க்கி

வித்யா said...

:))

கைப்புள்ள said...

யாரு சொன்னது கதை மோசமாயிருக்குன்னு? பொறாமை புடிச்சவங்க...

:))

கதை சான்ஸே இல்லாம இருக்கு. ஹாரி பாட்டர் எல்லாம் தோத்தான் போங்க.
:))

சந்தனமுல்லை said...

:-))))

கைப்புள்ள said...

//மனதை தேத்திக் கொண்டு "உரையாடல்-சமூக, இலக்கிய அமைப்பு" நடத்தும் போட்டிக்காக நான் வைத்திருந்த கருவிற்கு உயிர் கொடுத்து, கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.
//

இதெல்லாம் ரொம்பவே பின் நவீனத்துவமா இருக்க்கு.

இளைய பல்லவன் said...

//
அக்னி வெயிலில் நண்டு சாப்பிடுவது அவ்வளவு மோசமானதா?
//

மோசமா இருக்கோ நல்லா இருக்கோ அது நண்டோட பிரச்சினை. அதுக்கு எப்பல்லாம் பசிக்குதோ அப்பல்லாம் சாப்பிடப்போகுது.. அது அக்கினி வெயில்ல சாப்பிட்டா நமக்கென்ன? மார்கழி குளுர்ல சாப்பிட்டா நமக்கென்ன?

என்னய்யா இது.. கேக்கறதுக்கு யாருமே இல்லையா??

இளைய பல்லவன் said...

இந்த உட்டாலக்கடி கதையை விட வவுத்தவலி கதை ரொம்ப சூப்பரா இருக்கு..

இளைய பல்லவன் said...

இப்படி நறுக் நறுக்குன்னு குட்டினா தல வலிதானே வரணும். வவுத்துவலி ஏன் வந்தது???

இளைய பல்லவன் said...

//
டிஸ்கி: அதுக்கப்பறமா எழுதியது தான் "வவுத்த வலி" சிறுகதை...இல்லைன்னா இதையே எழுதி அனுப்பலாம்ன்னு இருந்தேன்
//

எத. இந்தப் பதிவையா, இல்ல பதிவுக்குள்ள இருக்குற கதையையா?

☀நான் ஆதவன்☀ said...

@வித்யா

நன்றி வித்யா
------------------------------------
@சந்தனமுல்லை

நன்றிங்கோ!
------------------------------------
@கைப்புள்ள

//யாரு சொன்னது கதை மோசமாயிருக்குன்னு? பொறாமை புடிச்சவங்க...//

அப்பவே நினைச்சேண்ணே,,,இந்த மாதிரி எதுனா இருக்கும்னு

//கதை சான்ஸே இல்லாம இருக்கு. ஹாரி பாட்டர் எல்லாம் தோத்தான் போங்க.//

அப்ப இதோட கண்டினியூட்டிய போட்டுடலாமா??

//இதெல்லாம் ரொம்பவே பின் நவீனத்துவமா இருக்க்கு//

பி.நாவா ஆக்கினதுக்கு ரொம்ப நன்றிண்ணே

☀நான் ஆதவன்☀ said...

@பல்லவன்
//மோசமா இருக்கோ நல்லா இருக்கோ அது நண்டோட பிரச்சினை. அதுக்கு எப்பல்லாம் பசிக்குதோ அப்பல்லாம் சாப்பிடப்போகுது.. அது அக்கினி வெயில்ல சாப்பிட்டா நமக்கென்ன? மார்கழி குளுர்ல சாப்பிட்டா நமக்கென்ன?

என்னய்யா இது.. கேக்கறதுக்கு யாருமே இல்லையா?//

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கய்யா?? முடியல...அன்னைக்கு தின்ன அந்த நண்டுவ வாந்தி எடுத்தாவது உங்ககிட்ட கொடுத்துடுறேன். என்னைய ஆள விடுங்க...

//இந்த உட்டாலக்கடி கதையை விட வவுத்தவலி கதை ரொம்ப சூப்பரா இருக்கு..//

ஒரு கெட்ட செய்தி....ஒரு நல்ல செய்தி

//இப்படி நறுக் நறுக்குன்னு குட்டினா தல வலிதானே வரணும். வவுத்துவலி ஏன் வந்தது??//

அந்த வவுத்து வலிக்கு முத பத்தியில விளக்கம் கொடுத்ததக்கு தான் உங்க முத பின்னூட்டம்....சாமி முடியல...

//எத. இந்தப் பதிவையா, இல்ல பதிவுக்குள்ள இருக்குற கதையையா?//

பதிவுக்குள் இருக்கும் கதைய தலைவா...

pappu said...

என்ன, சின்ன வயசுல சிறுவர் மலர் படிப்பீங்களா?

ஏதோ உங்க கதைனு எங்ககிட்ட டுபாக்கூர் விடுறீங்க பாத்தீங்களா?

குசும்பன் said...

விஜயகாந்து அடுத்த படத்துக்கு கதை இதுதான் போல:)

கோபிநாத் said...

\எதிர் வீட்டு ஃபிகர் வீட்டுக்கு வந்தப்ப ஆனந்த விகடன்ல வந்த கதை சரியில்ல, கதையோட்டம் சரியில்ல, ஒரு முரண் இல்லன்னு சீன் போட்டத அக்கா கேட்டிருப்பாளோ?\\

:-)))

☀நான் ஆதவன்☀ said...

@பப்பு

இப்படி பப்ளிக்கா எதுவும் பேசப்படாது பப்பு..(அப்பாலிக்கா சேட்டிங்கல கவனிச்சுகிறேன்)
----------------------------------------
@குசும்பன்

இல்ல குசும்பன்..இதுல கதாநாயகனும் செத்துடுவான். அதுனால வேற கதை தான் ரெடி பண்ணனும் (இந்த கதையில கதாநாயகன் மாடா?னு எல்லாம் கேக்கப்ப்டாது குசும்பன்)
----------------------------------------
@கோபிநாத்

வாங்க தல..வருகைக்கு நன்றி

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆதவன்.. நல்ல கதை.. அந்த உள் கதையை( நிலா பயணம்) நான் முன்பே படித்துள்ளேன். ஆனால் நீங்க சொன்ன விதம் அருமை..

☀நான் ஆதவன்☀ said...

நன்றி குறை ஒன்றும் இல்லை!

தினகரன் said...

மிக நல்ல பதிவு

☀நான் ஆதவன்☀ said...

நன்றி தினகரன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதை.. சூப்பர்...:)))

Gayathri said...

ayyo mudiala evlothaan sirikarathu...super kalakkal andha pasanga...haha storyum thaan

Related Posts with Thumbnails