ஞானும், தற்கொலையும் பின்னே கொலையும்அப்போது சென்னைக்கு வந்து மூன்று தினங்கள் ஆகிவிட்டது. விடுமுறைக்காக சென்னை வந்ததிலிருந்து அன்று ரொம்ப போர் அடித்தது. கடந்த இரண்டு தினங்களாக அந்த விபரீத எண்ணம் ஆசையாக மனதில் வந்து சென்றது. இரவு 9 மணி இருக்கும் அப்போது. இது தவறென்று தெரிகிறது. ஆனாலும் மனது கேட்கவில்லை.

தனியாக இருந்தால் இந்த மாதிரி வீபரீத எண்ணம் தோன்றும். ஆனால் சரியான வழிகாட்டி இருந்தால் இதே எண்ணம் சில சமயம் நல்லவிதமாக முடியும். வலைகளில் பல பெரியவர்கள் இத்தொண்டினை ஆற்றி வருகிறார்கள்.

இவ்வெண்ணத்தைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை. சொல்லத்தோன்றவும் இல்லை. இன்னும் நான்கு தினங்களில் அண்ணனின் கல்யாணம் இருந்ததால் வீட்டில் இதை சொல்ல மிகவும் தயங்கினேன். இதைச் சொல்லி அவர்களை கோபப்படுத்தவும் விரும்பவில்லை. பாவம் அவர்களுக்கு கல்யாண டென்ஷன் வேறு.

எப்பொழுதும் ஒரே அலைவரிசை கொண்ட எனது நண்பர்கள் இரண்டு பேரை தொடர்புகொண்டு இந்த எண்ணத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர்களுக்கும் இதே போன்று தோன்றியது ஆச்சர்யம் அளிக்கவில்லை எனக்கு. ஆனால் ஏற்கனவே இதில் வலி தாங்காமல் பாதியில் திருந்தி வந்த அனுபவம் வினோத்திற்கு உண்டு.

எச்சரிக்கை செய்தான். நாங்கள் கேட்கவில்லை. மாறாக அவனையும் மாற்ற முயற்சி செய்தோம். வெற்றியும் பெற்றோம்.

பின்பு ஆகும் செலவைப் பற்றி அப்போது கவலைப்படாமல் எங்கு எப்படி என்பதைப் பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தோம். அதை செயல்படுத்தும் முன் வலையில் அதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நான் கூறிய யோசனையை புறக்கணித்த நண்பன் அதைப் படிப்பதால் சுவாரஸியம் குறைந்து விடும் என்றான். ஆமோதித்த மற்றவர்கள் பின்னால் தாங்கள் செய்த மிகப்பெரிய தவறை உணர்ந்தது வேறு விசயம்.

பின்பு அடுத்தடுத்த காரியங்களை செய்யதொடங்கினோம். ஆளுக்கு எழுபத்தைந்து ரூபாய் மட்டுமே செலவானது. நண்பர்கள் சில சில்லரைகள் கொடுத்து சிகரெட் வாங்கியது எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.

மணி 9.45யளவில் தொடங்கியது எங்கள் போராட்டம்.....ஏஸி அறையிலும் வியர்க்க ஆரப்பித்தது.

கிட்டதட்ட கோழியின் கழுத்தை அறுப்பது போல, நான்கு பேருக்கும் வலி. சூடான இரத்தம் காதின் வழியேயும், கண்ணின் வழியேயும் வழிவதைப் போல உணரமுடிந்ததே தவிர காண முடியவில்லை.

முனங்கல் சத்தம் காதின் வழியே, நிசப்சத்தில், நின்ற மழையின் சாட்சியாக இலையிலிருந்து வழிந்து விழும் கடைசி சொட்டின் சத்தமாக.....(டேய் இராசா சென்ஷி கூட சேராதன்னு சொன்னா கேட்டியா? வரலைன்னா விடுடா).

நேரம் ஆகி கொண்டிருந்தது. மூச்சு முட்டியது. வலி பொறுக்க முடியாமல் கத்தினேன். என்னைப் போலவே நண்பர்களும் கத்த ஆரம்பித்தனர்.

ங்கொய்யால டேய்ய் படமாடா அது? திரிஷாவை மட்டும் கழுத்த அறுத்து கொல்லடா நீங்க. எங்களையும் சேர்த்து தான்.

"சர்வம்"-தற்கொலைக்கு சமம்

தெரிந்தே செய்ததால் அதை தற்கொலைக்கு சமமாக எடுத்து கொண்டேன். ஆனால் எதுவும் தெரியாமல் "இராஜாதி இராஜா" சென்றது என்னை கொல்ல நடந்த முயற்சி அல்லவா?

இதய பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம் என்று கீழே சிறியதாக மண்டை ஓடுடன் ஒரு எச்சரிக்கை போடவில்லையென்றாலும் வெறும் எழுத்துக்கலாளவது எழுதியிருக்கலாம் அல்லவா?

இண்டெர்நெட்டின் அவசியத்தை நன்கு உணர்ந்தேன் அப்போது. தொடர்ந்து ஒரு மாதமாக அதை உபயோகப்படுத்தாமல் இருப்பதன் தாக்கத்தை உணர்ந்தேன். அதுவும் "கேபிள் சங்கரின்" அவசியத்தையும் உணர்ந்தேன்.

இதற்கு சென்ஷியின் கவிதையே பரவாயில்லை என்று உணர்த்தியது இந்த இரண்டு படங்கள்.

28 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

ஹா ஹா ஹா

கலக்கல் :))))

வால்பையன் said...

நிச்சியமா இது தற்கொலை தான்!

அன்புடன் அருணா said...

அச்சோ!!! சிரித்து சிரித்து....இன்னும் முடியவில்லை!!!!

கைப்புள்ள said...

செம கலக்கல்.
:))

நட்புடன் ஜமால் said...

சூப்பரபூ

கார்க்கி said...

ஹாஹாஹா

கோபிநாத் said...

;-)))

எவனோ ஒருவன் said...

உண்மைலேயே ரொம்ம்ம்ம்ப நல்லா இருந்துச்சு.

rapp said...

:):):)

♫சோம்பேறி♫ said...

தலைப்பை பாத்துட்டு, நான் என்னமோ ஏதோனு சந்தோஷமா வந்து பாத்தா.. நல்லா எழுதுறாய்ங்கய்யா விமர்சனம்.

சர்வம் முதல் பாதி நல்லா தானே இருந்தது. அதுவும் அந்த சிம்பு காமெடி கலக்கல்.

த்ரிஷா செத்துப் போறப்போ கூட அந்த சிம்பு காமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டிருந்தேன். (ப்ச்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்.)

வித்யா said...

:))

☀நான் ஆதவன்☀ said...

நன்றி

சென்ஷி
வால்பையன்
அருணா
கைப்புள்ள அண்ணே
ஜமால் அண்ணாத்தே
சகா கார்க்கி
பின்னூட்ட புயல் கோபி
நண்பரான எவனோ ஒருவன்
ராப் அக்கா
வித்யா

எவனோ ஒருவன் said...

//நண்பரான எவனோ ஒருவன்//

அப்போ ஆய்ட்டேனா! ஐ.

☀நான் ஆதவன்☀ said...

// ♫சோம்பேறி♫ said...

தலைப்பை பாத்துட்டு, நான் என்னமோ ஏதோனு சந்தோஷமா வந்து பாத்தா.. நல்லா எழுதுறாய்ங்கய்யா விமர்சனம்.//

தெரியுமே! கல் நெஞ்சு சாமி உங்களுக்கு

//சர்வம் முதல் பாதி நல்லா தானே இருந்தது. அதுவும் அந்த சிம்பு காமெடி கலக்கல்.//

மொக்க காமெடிக்கெல்லாம் சிரிச்சுட்டு மொக்கை பதிவர்னு நிருபிச்சுட்டீங்க. படத்துல இருக்குற ஒரே காமெடி அதுதான். அதுக்காக படத்தையே பார்க்க முடியுமா?

//
த்ரிஷா செத்துப் போறப்போ கூட அந்த சிம்பு காமெடியை நினைச்சு நினைச்சு சிரிச்சுகிட்டிருந்தேன். (ப்ச்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ்.)//

எல்லாத்துக்கும் சேர்த்து டிக்கெட் வாங்குன என் நண்பனைப் பார்த்து தான் எனக்கு சிப்பு சிப்பா வந்துச்சு

☀நான் ஆதவன்☀ said...

// எவனோ ஒருவன் said...

//நண்பரான எவனோ ஒருவன்//

அப்போ ஆய்ட்டேனா! ஐ.//

அட ஆமாங்க

எவனோ ஒருவன் said...

ரொம்ப சந்தோசம்.

Kathir said...

கிகிகி.....

ஸ்ரீமதி said...

Paavi anna ennamo edhonnu bayandhe poyitten..

RR said...

கலக்கல்......இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கும்னு எதிர் பார்க்க வில்லை....

☀நான் ஆதவன்☀ said...

நன்றி கதிர் & RR
-------------------------------------
@ஸ்ரீமதி

இதுக்கெல்லாம் ரென்ஷன் ஆகாத தங்காச்சி. அஞ்சா நெஞ்சன் இந்த ஆதவன்ங்கறது தெரியுமில்ல

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்ல பதிவுங்க..
கடைசி வரை யூகிக்கவே முடிய வில்லை இது ஒரு திரை விமர்சனம் என்று!!!..

☀நான் ஆதவன்☀ said...

பாராட்டுகளுக்கு நன்றி குறை ஒன்றும் இல்லை

pappu said...

ச்சே... தண்ணி எதுவும் அடிக்க போறீங்களோன்னு நினைச்சா.... இந்த கருமம் புடிச்ச படங்கள பாத்ததான் சொன்னீங்களா?

☀நான் ஆதவன்☀ said...

பப்பு என்ன சொல்லிட்டீங்க. சிவ சிவ...தண்ணியாவது நாங்களாவது

ஆ! இதழ்கள் said...

அஞ்சா நெஞ்சர் தான் நீங்க...

உங்களை பலிவாங்கிய விஷ்ணுவை இந்த விமர்சனத்தை படிக்கவிட்டு பலி வாங்கணும்ங்க...

☀நான் ஆதவன்☀ said...

@ ஆனந்த்

அட அவ்வளவு கொடுமையாவா இருக்கு என் விமர்சனம்? அவ்வ்வ்வ்வ்

இளைய பல்லவன் said...

பாதியிலேயே ஊகிக்க முடிந்ததுன்னு பதில் போட்டா நீங்க என்ன நெனப்பீங்களோன்னு நெனப்பு வந்தாலும் இப்படி பதில் போடுறத தவிர்க்க முடியல...

☀நான் ஆதவன்☀ said...

// இளைய பல்லவன் said...
பாதியிலேயே ஊகிக்க முடிந்ததுன்னு பதில் போட்டா நீங்க என்ன நெனப்பீங்களோன்னு நெனப்பு வந்தாலும் இப்படி பதில் போடுறத தவிர்க்க முடியல...
//

இப்படி தான் உங்ககிட்ட இருந்து பின்னூட்டம் வரும்ன்னு என்னால ஊகிக்க முடிந்ததுன்னு பதில் போட்டா நீங்க என்ன நெனப்பீங்களோன்னு நெனப்பு வந்தாலும் இப்படி பதில் போடுறத தவிர்க்க முடியல...

Related Posts with Thumbnails