சென்னையை கடந்த "புயல்"

ஒன்னரை மாசமா பதிவேயே காணோம்? என்னாச்சு உங்களுக்கு?ன்னு எக்கசக்க பெண் இரசிகைகளும், நண்பர்களும் கேட்டு மெயில் அனுப்பியிருந்தாங்கன்னு சொல்ல ஆசை தான். ஆனா ஒரு பய கண்டுக்கல.

பரவாயில்லை விடுடா ஆதவா. நாமலெல்லாம் இத எதிர்பார்த்தா எழுதிகிட்டுயிருக்கோம் அப்படின்னு மனசை தேத்திக்க வேண்டியது தான். ஏன்னா இதையெல்லாம் எதிர்பார்த்து எழுத்து துறைக்கு என்னைய அர்பணிக்கல..

ஒரு மாசம் மதுரை, சென்னைன்னு அலைச்சல். ஒரு நாள்ல மதுரை பதிவர் சந்திப்பையும், இரண்டு நாள்ல பதிவர்களின் உலக திரைப்பட விழாவையும் கலந்துக்க முடியாம இங்கேயும் அங்கேயும் இடம் மாறி இருந்துட்டேன்.
------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஆறுதல் பதிவர் பொன்ஸ் கல்யாணத்தில் தல பாலபாரதியையும், முத்துலட்சுமி மேடத்தையும், அயன் கார்த்திக்கையும் பார்த்தது தான். கல்யாணம் மிகச் சிறப்பாக நடந்தது.

இந்த போட்டோவை எடுத்தது வருங்கால பி.சி.ஸ்ரீராம்... நமது முத்துலட்சுமி மேடத்தின் புதல்வர் சபரி அவர்கள்.

தல பாலபாரதியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்ல. எல்லாருக்கும் அவரோட கேரக்டர் தெரிஞ்சிருக்கும். சூரியனுக்கு டார்ச் அடிச்ச மாதிரி நான் எதுவும் சொல்ல வேண்டாம். அதேபோல் தான் முத்துலட்சுமி மேடம்.

இளைய பல்லவனோட தொலைபேசியில் மட்டும் உரையாடினேன். பார்க்க முடியாதது வருத்தமே :(
-------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வருஷம் கண்ணும் கருத்துமா வெயில்ல வெளிய போகாம, ஏஸியிலேயே இருந்து கொஞ்சம் கலரை ஏத்தி ஊருக்கு வந்தா......பக்கி அங்க "அக்னி நட்சத்திர"மாமே.

ஒரே நாள் தான் வெளியில சுத்துனேன். என் ஒரிஜினல் கலருக்கு வந்துட்டேன். என்ன செய்ய ஊர்குருவி பருந்தாகுமா??
-------------------------------------------------------------------------------------------------------------
ஒன்னுமே எழுதாம இருந்த இந்த ஒன்னரை மாசத்தில மொத்தம் 15 பாலோவர்ஸ்க்கும் மேல சேர்ந்திட்டாங்க. இத ஒரு பதிவர் கிட்ட சொன்னதுக்கு....

நீங்க எழுதாம இருந்தீங்கன்னா நூறு பேர் வந்திருவாங்க அதுனால எழுதுறத உடனே நிறுத்துங்கன்னு சொன்னாரு. என்னா வில்லத்தனம்???

22 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

வெல்கம் பேக்(கு) மாப்ள :))

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Cable Sankar said...

வெல்கம் பேக்.

goma said...

நீங்கள் எழுதாமல் இருந்த சமயம் 15 ஃபாலோயர்ஸ் சேர்ந்ததன் ரகசியம் சொல்லட்டுமா.
தினமும் வந்து மேய்ந்திருப்பார்கள் புல் ஒன்றும் இல்லை என்றதும் ,புல் விழுந்தால் தெரிந்து கொண்டு வரலாம் என்று ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் பதிந்து சென்றிருப்பார்கள்
[இது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா?
புல் தேடி...கிட்டாமல்தான் நானும், நானானி,முத்துச்சரத்தின் ஃபாலோயர் ஆனேன்]

ஆ! இதழ்கள் said...

அதான ரொம்ப நாலா தொட்டி காலியாவே இருக்கேனு பாத்தேன். இனிமே கொட்டுங்க ...

Bleachingpowder said...

ஒட்டகத்துல ஏறி ஊர விட்டு போயிடுச்சுன்னு நம்பி சந்தோசமா இருந்தோம்...பய புள்ள எப்படியோ திரும்பி ஊருக்குள்ள வந்திடுச்சு.அவ்வ்வ்வ்வ்

கோபிநாத் said...

வாய்யா ராசா ;)

\\தல பாலபாரதியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்ல. எல்லாருக்கும் அவரோட கேரக்டர் தெரிஞ்சிருக்கும். சூரியனுக்கு டார்ச் அடிச்ச மாதிரி நான் எதுவும் சொல்ல வேண்டாம். அதேபோல் தான் முத்துலட்சுமி மேடம்.\\

ரைட்டு ;)

நாடோடி இலக்கியன் said...

வெல்கம் பேக்..!

கைப்புள்ள said...

வாங்க வாங்க :)

உங்களை ஒரு சங்கிலித் தொடர்ல சேர்த்து விட்டுருக்கேன்.

http://kaipullai.blogspot.com/2009/06/32-32.html

நான் ஆதவன் said...

நன்றி
சென்ஷி
கேபிள் சங்கர்

நான் ஆதவன் said...

// goma said...

நீங்கள் எழுதாமல் இருந்த சமயம் 15 ஃபாலோயர்ஸ் சேர்ந்ததன் ரகசியம் சொல்லட்டுமா.
தினமும் வந்து மேய்ந்திருப்பார்கள் புல் ஒன்றும் இல்லை என்றதும் ,புல் விழுந்தால் தெரிந்து கொண்டு வரலாம் என்று ஃபாலோயர்ஸ் லிஸ்ட்டில் பதிந்து சென்றிருப்பார்கள்//

வாங்க கோமா. நீங்க சொன்ன காரியம் சரியா இருந்தா அதை பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை :)
--------------------------------------------------
//ஆ! இதழ்கள் said...

அதான ரொம்ப நாலா தொட்டி காலியாவே இருக்கேனு பாத்தேன். இனிமே கொட்டுங்க ...//

ஆமா ஆனந்த். இனி நிறைய குப்பைகள் வரும் :)

நான் ஆதவன் said...

// Bleachingpowder said...

ஒட்டகத்துல ஏறி ஊர விட்டு போயிடுச்சுன்னு நம்பி சந்தோசமா இருந்தோம்...பய புள்ள எப்படியோ திரும்பி ஊருக்குள்ள வந்திடுச்சு.அவ்வ்வ்வ்வ்//

நான் ஊர்ல இல்லாத தைரியத்தில பதிவுன்ற பேருல இல்லாத அட்டகாசம் பண்ணியிருக்கீங்க போல :) நடக்கட்டும் நடக்கட்டும்
------------------------------------------
நன்றி கோபிநாத். நாடோடி இலக்கியன் :)
-------------------------------------------
கைப்புள்ள அண்ணே கண்டிப்பா நாளைக்கே பதிவு போட்டு விடுறேண்ணே. அழைத்ததற்கு நன்றிண்ணே

வித்யா said...

வெல்கம் பேக்:)

ஆயில்யன் said...

//சென்ஷி said...

வெல்கம் பேக்(கு) மாப்ள :))
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

rapp said...

//தல பாலபாரதியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்ல. எல்லாருக்கும் அவரோட கேரக்டர் தெரிஞ்சிருக்கும். சூரியனுக்கு டார்ச் அடிச்ச மாதிரி நான் எதுவும் சொல்ல வேண்டாம். அதேபோல் தான் முத்துலட்சுமி மேடம்.//


இப்டி சொல்லியே, யாரும் எதையும் எழுதலைன்னா எப்டி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.;

rapp said...

//ஒரு வருஷம் கண்ணும் கருத்துமா வெயில்ல வெளிய போகாம, ஏஸியிலேயே இருந்து கொஞ்சம் கலரை ஏத்தி ஊருக்கு வந்தா...//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...இதென்ன ஐந்தாண்டுத் திட்டம் கணக்கா இருக்கு. சில சமயம் ஓவரா ஏசில இருந்தா ஊரவெச்ச தக்காளியாட்டமும் ஆகா நெறைய சான்ஸ் இருக்கு:):):)

கார்க்கி said...

வாங்க வாங்க வாஙக்றதுக்கு வாங்க சகா

நான் ஆதவன் said...

நன்றி வித்யா, ஆயில்யன் மற்றும் சகா கார்க்கி
---------------------------------------
ராப் அக்கா என் கவலை எனக்கு. அடிக்கிற வெயில்ல வெள்ளைகாரனே கருப்பாயிடுறான். நான் எம்மாத்திரம்

ஊர்சுற்றி said...

மறுவரவுக்கு வாழ்த்துக்கள்....
இந்த சூரியனைப் பார்த்து எவ்ளோ நாளாச்சு...!!!

☀நான் ஆதவன்☀ said...

நன்றி ஊர்சுற்றி

இளைய பல்லவன் said...

//
இளைய பல்லவனோட தொலைபேசியில் மட்டும் உரையாடினேன். பார்க்க முடியாதது வருத்தமே :(
//

ஆதவன் எனக்கும் வருத்தமே..

அடுத்த முறை, நான் துபாய் வரும்போது, துபாய் பஸ் ஸ்டாண்டு பக்கத்து சந்துலயாவது மீட் பண்றதுக்கு ட்ரை பண்ணுவோம் !!

☀நான் ஆதவன்☀ said...

வாங்க பல்லவன். கண்டிப்பா.. அப்படி அங்க முடியலைன்னாலும் பரவாயில்லை துபாய் மூத்திர ஸாரி முட்டு சந்திலியாவது மீட் பண்ணி பேசலாம் :)

Related Posts with Thumbnails