32 பல்லையும் உடைப்பேன்!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

நான் ஆதவன்.. முதல்ல சொந்த பேர்ல தான் ஆரம்பிச்சேன். அப்படி ஒருத்தர் இருக்குறதைப் அப்ப பார்த்ததால. ஆதவன்ன்னு வச்சேன் ஆனா அப்படியும் ஆள் நிறைய பேரு இருக்குறது அங்கங்க பின்னூட்டத்தில தெரிஞ்சுது. உடனே "நான் ஆதவன்"ன்னு மாத்திகிட்டேன். அப்படியும் யாராவது இருந்தா "நான்தான்டா ஆதவன்" மாத்திரலாம்ன்னு நினைச்சேன். ஆனா உங்க அதிர்ஷ்டம் அப்படி ஆகல.

நிஜப்பெயர்: "சூர்யகுமார்" எங்கம்மா வைச்ச பெயர். எல்லாரும் "சூர்யா"ன்னு கூப்பிடுவாங்க. "நேருக்கு நேர்" படம் வர்ர வரைக்கும் எனக்கு அந்த பேரு கூட பிடிக்காம தான் இருந்தது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

கடைசியா??????? ம்ம்ம் ஞாபகம் வந்திடுச்சு. என் அக்கா பையன் வேதாந்த் கூட விளையாடும் போது கண்ணை மூடிகிட்டு நான் சும்மானாகாச்சிக்கும் அழ அவன் சீரியஸா அழ அடுப்படியில இருந்த எங்கக்கா வந்து இரண்டு பேருக்கும் என்ன ஆச்சு கண்ணு கலங்க...... மாடியிலருந்து வந்த எங்கம்மா "அய்யய்யோ என்னாச்சு" பதற...... வெளியில பேப்பர் படிச்சுட்டு இருந்த எங்கப்பா "என்ன அங்க சத்தம்"ன்னு தழுதழுத்த குரல்ல கேட்டுட்டு ஓடி வர...........

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நல்லா முத்து முத்தா இருக்குற கையெழுத்து யாருக்காவது பிடிக்காம போகுமா?. இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க எப்படி இருக்கு என் கையெழுத்து?

எனக்கு பிடிச்சுதா இல்லையான்றத விட என் ஸ்கூல்ல என் பின்னால உட்கார்ந்து பரிட்சை எழுதிகிட்டுருந்த விஜய்க்கு சுத்தமா பிடிக்காது.

4. பிடித்த மதிய உணவு என்ன?

மிளகாய் கிள்ளி சாம்பார் மற்றும் மீன் வறுவல் (யோவ் சென்ஷி என்னையா கேள்வி இது?. இதெல்லாம் கேட்டுட்டு வீட்டுக்கு வரும் போது இதெல்லாம் செஞ்சு போடனும் ஆமா. கைப்புள்ள அண்ணே உங்களுக்கும் தான்)


5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

எனக்கென்ன தலையெழுத்தா? தெரிஞ்சே தப்பு செய்யுறதுக்கு...

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கூட யார் குளிக்கிறாங்கன்றத பொருத்து இருக்குது.....


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆம்பிள்ளையா இருந்தா தலைமுடி பார்ப்பேன். அதாவது நம்மள விட எவ்வளவு முடி கொட்டியிருக்குன்னு பார்ப்பேன்.

பெண்களா இருந்தா வேற வழியே இல்லை. கண்களை தான்....(இது என் தோழி சொல்லிக்கொடுத்தது)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் இரகசியம் காப்பது. பாருங்க காலேஜ் பாத்ரூம்ல சீனியரைப் பத்தி கேவலமா எழுதுனது என் பிரண்டு இராஜேந்திரன் தான்ங்கிறத அவன்கிட்ட பண்ணின சத்தியத்தின் படி இதுவரை யார்கிட்டேயும் சொல்லாம காப்பாத்தி வந்திருக்கிறேன்.

ஸ்கூல்ல சமூக அறிவியல் டீச்சர் ஷீலா வரும் போது "ஐ லவ் யூ"ன்னு போர்டுல எழுதி போட்ட என் உயிர் நண்பன் செல்வகுமாரை இதுவரை யார்கூடவும் காட்டி கொடுத்ததே இல்லை. இனிமேலும் மாட்டேன். ( இதுல பாருங்க இதே கேள்வி என் ஸ்கூல் பத்தாவது முடியும் போது கேட்டாங்க. இதே பதில தான் சொன்னேன். ஆனா பாருங்க என் ஃபிரண்டுக்கு மரண அடி கிடைச்சுது. ஏன்னு தான் தெரியல)


பிடிக்காத விஷயம்ன்னா யாராவது "உன்கிட்ட பிடிச்ச விஷயம் என்ன?" "பிடிக்காத விஷயம் என்ன?"ன்னு கேட்டா எனக்கு பிடிக்கவே பிடிக்காது.


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு நல்ல சரி பாதியா பார்த்து பேசி முடிச்சு கொடுத்தீங்கன்னா அதுக்கப்பறம் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன்

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

முதல் காதலி, முதல் நண்பன் பார்த்தசாரதி மற்றும் அக்கா பையன் வேதாந்த்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

@3#)*%^**(#)!@!#)(*^&^%$%$

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

"க@#$(*)) எனக்கு லீவு கொடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டானே. பட்டியிண்ட மோனு !@#$)($%^%^%" என ஒரு சேட்டன் எனது மானேஜரை "ரெட் லேபிளி"ன் உதவியோடு வசை பாடி கொண்டிருக்கிறார் இப்போது.


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பச்சை கலர். எங்கப்பா என்னைய பெரிய கலெக்டர் ஆக்கி பச்சை கலர் பேனாவுல ஊருக்கே வளைச்சு வளைச்சு கையெழுத்து போடனும்ன்னு ஆசைப்பட்டாரு. அத எப்படியாவது நிறைவேத்தனும்.

14. பிடித்த மணம்?

தமிழ்மணம் (யப்பா இப்பவாவது நட்சத்திரமாக்குங்கப்பா)

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஆசிப் அண்ணாச்சி: தொடர் பதிவு மற்றும் விருதுன்னா மத்தவங்க மனசு கோணாம அப்படியே ஃபாலோ பண்ணுவாரு.

அப்புறம் என் மச்சானையும் கூப்பிட்டுகிறேங்க. இந்த தடவை பாடி ஸ்ப்ரேவும், செண்டும் வாங்கிட்டு போலன்னு ரொம்ப கோவிச்சுகிட்டாரு. அதுனால இவரை சமாதான படுத்த இவரையும் சேர்த்துகிறேங்க.

அவர் பதிவரெல்லாம் கிடையாதுங்க. இந்த கேள்வியெல்லாம் பிரிண்ட் எடுத்து பதில் வாங்கிட்டு நானே ஒரு பதிவா போட்டுறேன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

இப்படி திடீர்ன்னு கேட்டா எப்படி ஒரு இரண்டு நாளாவது டைம் கொடுங்க படிச்சுட்டு சொல்றேன்.....சரி சரி சொல்றேன்

சென்ஷி எழுதுற கதைகள் எல்லாம் பிடிக்கும். முக்கியமா புனைவுகள்.

கைப்புள்ள அண்ணே அவர் மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ரொம்ப பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

ஐஸ் பாய், ஏழு கல் மற்றும் குழிப்பந்து (தெரியாதவங்க மெட்ராஸ் ஆளுங்க கிட்ட கேட்டுக்கங்கப்பா)


18. கண்ணாடி அணிபவரா?

இல்லப்பா

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

பார்க்கிற நம்மள முட்டாபயலுகன்னு நினைக்க வைக்காத படங்கள் பிடிக்கும்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

என் நேரம் சென்னையில போய் சனியனை காசு கொடுத்து பார்க்கனும்ன்னு இருந்திருக்கு "இராஜாதி ராஜா"


21. பிடித்த பருவ காலம் எது?

இளவேனில்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

லிவிங் ஸ்மைல் வித்யாவின் "நான் வித்யா", எஸ் ராவின் "நெடுங்குருதி"


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

கைப்புள்ள அண்ணே மட்டும் கூப்பிடாம சென்ஷி மட்டும் கூப்பிட்டிருந்தாருன்னா இந்த கேள்விக்கு பதில் வேற மாதிரி இருந்திருக்கும். தப்பிச்சாரு சென்ஷி.... படத்தை மாத்துறதேயில்லை....ஒரு வருஷமாச்சு


24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அக்கா (சின்ன) பையன் "யா..யா...யா..யா மாம்ம்மா"ன்னு கத்திகிட்டே சொல்றது இப்போதைக்கு ரொம்ப பிடிச்சது.

அக்கா (பெரிய) பையன் "ஏஏஏஏஏ மாமான்னு" கத்திகிட்டே தூங்கிட்டிருக்கிற என் மேல விழுறது இப்போதைக்கு பிடிக்காத சத்தம்.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கிஷ் ஐலேண்ட் (ஈரான்)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சொல்லமாட்டேன் போ..


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏற்றுக்கொள்ள முடியாத விசயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

இருந்தது. பால் தினகர் கிட்ட சொல்லி ஓட்ட வச்சாச்சு

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மூணாறு (கல்யாணம் ஆகும் வரை)

காசி (ஆனதுக்கப்பறம்)

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

எவனும் எந்த கேள்வியும் கேட்ககூடாது.....அப்படி வாழனும்ன்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

கல்யாணம்

அட அது ஆனப்பொறகு பதில் சொல்றேன்னு சொன்னேன்

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

சென்ஷி கவிதை மாதிரி சிக்கலா இல்லாம ஸ்ரீமதி கவிதை மாதிரி ஈஸியாகவும் இல்லாம, ஜ்யோராம் கவிதை மாதிரி "கிக்"ன்னு வாழனும்
----------------------------------------------------------------------------------------------------
33. தற்போதைய ஆசை என்ன?

சென்ஷியை ஒரு ஒரு கேள்விக்கும் ஒரு பல்லுன்னு நுப்பத்தி இரண்டு பல்லையும் உடைக்கணும்.

33 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

நாந்தான் முன்னாடி வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

ஆயில்யன் said...

//"32 பல்லையும் உடைப்பேன்!"//


அடப்பாவி மக்கா! முன்னாடி வந்தது ஒரு தப்பா போச்சே :(

ஆயில்யன் said...

//நான்தான்டா ஆதவன்//

நாந்தாண்டா ஆதவன் - செம டெர்ரரா இருக்கும்போல ஃபீல் பண்றேன் பாஸ் பேசாமா மாத்திக்கோங்களேன்! :))

ஆயில்யன் said...

//நேருக்கு நேர்" படம் வர்ர வரைக்கும் எனக்கு அந்த பேரு கூட பிடிக்காம தான் இருந்தது.///

அப்புறம் தான் சிம்ரனை புடிக்க ஆரம்பிச்சுதா? :)

ஆயில்யன் said...

//"என்ன அங்க சத்தம்"ன்னு தழுதழுத்த குரல்ல கேட்டுட்டு ஓடி வர...........//


ஆஹா !

மொத்தத்துல்ல குடும்பமே ஓ” வென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிச்சீங்களா! :(

ஆயில்யன் said...

//நல்லா முத்து முத்தா இருக்குற கைழுத்து யாருக்காவது பிடிக்காம போகுமா?. இந்த பதிவ படிக்கிற நீங்களே சொல்லுங்க எப்படி இருக்கு என் கையெழுத்து?///


மிக அழகா இருக்கிறது !

அட நம்ம ரெண்டு பேரு கையெழுத்தும் அப்படியே பிரிண்ட் எடுத்த கணக்கா அம்புட்டு அழகா இருக்கில்ல! ? ! :)

ஆயில்யன் said...

//கூட யார் குளிக்கிறாங்கன்றத பொருத்து இருக்குது.....///


அம்பூட்டு நேரம் பொறுத்து இருந்தா குளிக்கவே முடியாது பாஸ் :)

ஆயில்யன் said...

//யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

முதல் காதலி,//


ரொம்ப வருந்தாதீங்க பாஸ் :(

அதான் செகண்ட் செட் பண்ணியாச்சுல்ல பெறவு எதுக்கு ஃபீலிங்க்ஸ்ஸு :))))

ஆயில்யன் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

ஒரு நல்ல சரி பாதியா பார்த்து பேசி முடிச்சு கொடுத்தீங்கன்னா அதுக்கப்பறம் இந்த கேள்விக்கு பதில் சொல்லுவேன்/


உங்களோட இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப்ப்ப்ப புச்சிருக்கு !

ஆயில்யன் said...

//பச்சை கலர். எங்கப்பா என்னைய பெரிய கலெக்டர் ஆக்கி பச்சை கலர் பேனாவுல ஊருக்கே வளைச்சு வளைச்சு கையெழுத்து போடனும்ன்னு ஆசைப்பட்டாரு. அத எப்படியாவது நிறைவேத்தனும்.//

ஊரையே வளைச்சுப்போடணும்ன்னு ஆசைப்படாத வரைக்கும் நல்ல விசயம்தான் :)))

ஆயில்யன் said...

//. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

சொல்லமாட்டேன் போ.//


வாவ்!

கலக்கல் :))

ஆயில்யன் said...

//தற்போதைய ஆசை என்ன?

சென்ஷியை ஒரு ஒரு கேள்விக்கும் ஒரு பல்லுன்னு நுப்பத்தி இரண்டு பல்லையும் உடைக்கணும்.///


அடப்பாவி 32ஐயும் உடைச்சு அதை வைச்சு நீ என்ன பண்ணப்போற? இல்ல உடைக்குற அளவுக்கு காட்டிட்டு வித் அவுட் பல்லோட அவுருதான் என்ன பண்ணப்போறாரு? :))))

ஆயில்யன் said...

என்னாப்பா இது யாருமே பல்லை காட்டிக்கிட்டு இன்னும் வர்ல :(

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேனா?

சரி !

☀நான் ஆதவன்☀ said...

//ஆயில்யன் said...

என்னாப்பா இது யாருமே பல்லை காட்டிக்கிட்டு இன்னும் வர்ல :(

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேனா?

சரி !//

சிங்கம் வேட்டையாடும் போது வேடிக்கை தான் பார்க்கணும். உள்ள வந்து அடிபடகூடாது

ஆயில்யன் said...

// ☀நான் ஆதவன்☀ said...

//ஆயில்யன் said...

என்னாப்பா இது யாருமே பல்லை காட்டிக்கிட்டு இன்னும் வர்ல :(

நான் மட்டும்தான் மாட்டிக்கிட்டேனா?

சரி !//

சிங்கம் வேட்டையாடும் போது வேடிக்கை தான் பார்க்கணும். உள்ள வந்து அடிபடகூடாது//

ஆஹா இது தெரியாம அ”சிங்க”ப்பட்டுட்டேனா ??? :(((

☀நான் ஆதவன்☀ said...

//
ஆஹா இது தெரியாம அ”சிங்க”ப்பட்டுட்டேனா ??? :(((//

சங்கத்து சிங்கத்துக்கு "அசிங்க"படுதலெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்

சென்ஷி said...

அடங்கொய்யால....

☀நான் ஆதவன்☀ said...

//
ஆஹா இது தெரியாம அ”சிங்க”ப்பட்டுட்டேனா ??? :(((//

பாஸ் சிங்கம்ன்னு சொன்னது உங்கள தான். நீங்க பின்னூட்டம் போடும் போது நடுவுல நான் வந்து டேமேஜ் ஆக வேண்டாம்ன்னு பார்த்தேன் :)

வித்யா said...

ROTFL:))

♫சோம்பேறி♫ said...

நான் என் பேரை நான் ஆதவன்னு மாத்திக்கப் போறேன். சென்ஷி நான் தாண்டா ஆதவன்னு மாத்திக்கப் போறார்.

எனவே நீங்கள் 'ங்கொப்புறான் சத்தியமா நான் தாண்டா ஆதவன்' என்று பெயரை மாற்றிக் கொள்ளவும்.

தமிழிச்சி said...

பதில்கள் எல்லாமே குறும்புடன் 'நச்' என்று இருக்கு. உண்மையாகவே பல்லுக் களட்டிர பழக்கம் உண்டோ?

☀நான் ஆதவன்☀ said...

// ஆயில்யன் said...

//கூட யார் குளிக்கிறாங்கன்றத பொருத்து இருக்குது.....///


அம்பூட்டு நேரம் பொறுத்து இருந்தா குளிக்கவே முடியாது பாஸ் :)//

ஹலோ பாஸ் குளிக்கவே இல்லைனாலும் பரவாயில்லை. ஆனா பார்ட்டி வர்ர வரைக்கும் வெயிட் பண்ணுவோம்ல

//
அட நம்ம ரெண்டு பேரு கையெழுத்தும் அப்படியே பிரிண்ட் எடுத்த கணக்கா அம்புட்டு அழகா இருக்கில்ல! ? ! :)//

ஆமா...இல்லையா பின்ன

//
அதான் செகண்ட் செட் பண்ணியாச்சுல்ல பெறவு எதுக்கு ஃபீலிங்க்ஸ்ஸு :))))//

எப்படி இப்படி??? சரியா சொன்னீங்க :)

//ஊரையே வளைச்சுப்போடணும்ன்னு ஆசைப்படாத வரைக்கும் நல்ல விசயம்தான் :)))//

பாஸ் எங்கப்பா ஸ்கூல் வாத்தியார் மாதிரி ரொம்ப நேர்மையானவரு...இப்படியெல்லாம் ஆசை படமாட்டாரு

//
வாவ்!

கலக்கல் :))//

நன்றி தலைவா

வெறும் கடையில டீ ஆத்திகிட்டிருந்த என் பதிவுல இவ்வளவு கமெண்ட் போட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

☀நான் ஆதவன்☀ said...

// சென்ஷி said...

அடங்கொய்யால....//

ம்ம்ம்ம்ம்ம்

-------------------------------------
//வித்யா said...

ROTFL:))//

நன்றி வித்யா
-------------------------------------
// ♫சோம்பேறி♫ said...

நான் என் பேரை நான் ஆதவன்னு மாத்திக்கப் போறேன். சென்ஷி நான் தாண்டா ஆதவன்னு மாத்திக்கப் போறார்.

எனவே நீங்கள் 'ங்கொப்புறான் சத்தியமா நான் தாண்டா ஆதவன்' என்று பெயரை மாற்றிக் கொள்ளவும்.//

என் பேர "நான் இல்லைடா ஆதவன்"ன்னு மாத்துனாலும் மாத்துவேன் நீங்க சொன்னமாதிரி மட்டும் மாத்தமாட்டேன் சோம்பேறி
----------------------------------------
// தமிழிச்சி said...

பதில்கள் எல்லாமே குறும்புடன் 'நச்' என்று இருக்கு. உண்மையாகவே பல்லுக் களட்டிர பழக்கம் உண்டோ?//

நன்றி தமிழிச்சி. அதெல்லாம் சும்மா லுலுலாயிக்கு தமிழிச்சி

ஆ! இதழ்கள் said...

ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கு....

பரவாயில்லை யூத்துமாதிரியே பதில் சொல்லிருக்கீங்க.

நல்லாகீதுபா..

ஆயில்யன் said...

//வெறும் கடையில டீ ஆத்திகிட்டிருந்த என் பதிவுல இவ்வளவு கமெண்ட் போட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி///


நல்லாவே ஆத்துறீங்க!

அதான் ஒரு ரவுண்ட் டீ குடிச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன் ராசா :))

கோபிநாத் said...

:-)))

☀நான் ஆதவன்☀ said...

// ஆ! இதழ்கள் said...

ஒரே சின்னப்புள்ளத்தனமா இருக்கு....

பரவாயில்லை யூத்துமாதிரியே பதில் சொல்லிருக்கீங்க.//

ஹலோ ஆனந்த் நீங்க பெரிசுன்றதால் எங்களை அந்த லிஸ்ட்ல சேர்காதீங்க. நான் இன்னும் யூத்து தான். யூத்து தான். யூத்து தான்

// நல்லாகீதுபா..//

டாங்ஸ்பா
------------------------------------------------
//
நல்லாவே ஆத்துறீங்க!

அதான் ஒரு ரவுண்ட் டீ குடிச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன் ராசா :))//

அப்படியே வடையும் இருக்கு சாப்பிட்டு போங்க...
------------------------------------------------
வாங்க தல....சிரிச்சுட்டு மட்டும் போனா எப்படி?

pappu said...

ஏற்றுக்கொள்ள முடியாத விசயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது
/////

நாங்களே மண்ட காஞ்சு போய் இங்க வ்ர்றோம்....நீங்க வேற....

கைப்புள்ள said...

//பெண்களா இருந்தா வேற வழியே இல்லை. கண்களை தான்....(இது என் தோழி சொல்லிக்கொடுத்தது)
//

ஹி...ஹி...இங்கே வேற வழியே இல்லைன்னு போட்டிருக்கீங்க...அது தான் டச்சே!
:)

கைப்புள்ள said...

// ( இதுல பாருங்க இதே கேள்வி என் ஸ்கூல் பத்தாவது முடியும் போது கேட்டாங்க. இதே பதில தான் சொன்னேன். ஆனா பாருங்க என் ஃபிரண்டுக்கு மரண அடி கிடைச்சுது. ஏன்னு தான் தெரியல)
//

அதுக்கும் முன்னாடி "யார் கிட்டயும் சொல்லிடக் கூடாதுடா ஏன்னா இது பரம ரகசியம்"னு சொல்லி சில பல பேர் கிட்ட சொல்லிருப்பீங்களே...அவங்க எண்ணிக்கை எல்லாம் சொல்லவே இல்லை?
:)

கைப்புள்ள said...

//27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

ஏற்றுக்கொள்ள முடியாத விசயத்தை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது
//

ரசிச்சேன். கேட்ட உடனே சங்கிலிப் பதிவு போட்டு நெடுநாளைய விரதத்தை முடிச்சிக்கிட்டதுக்கு நன்னி பாஸ்.
:)

உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே நீங்க காசி போவீர்களாக.
:))

☀நான் ஆதவன்☀ said...

//நாங்களே மண்ட காஞ்சு போய் இங்க வ்ர்றோம்....நீங்க வேற....//

வாங்க பப்பு. இத்தனை கேள்வி கேட்டதால எங்க மண்டை காஞ்சுபோய் தான் இந்த பதிலே :)
-------------------------------------------------
//அதுக்கும் முன்னாடி "யார் கிட்டயும் சொல்லிடக் கூடாதுடா ஏன்னா இது பரம ரகசியம்"னு சொல்லி சில பல பேர் கிட்ட சொல்லிருப்பீங்களே...அவங்க எண்ணிக்கை எல்லாம் சொல்லவே இல்லை?
:)//

சத்தியமா இதுவரைக்கும் யார்கிட்டேயும் சொல்லவே இல்லை. உங்களுக்கு எப்படிண்ணே இந்த விஷயம் தெரியும்????

//ரசிச்சேன். கேட்ட உடனே சங்கிலிப் பதிவு போட்டு நெடுநாளைய விரதத்தை முடிச்சிக்கிட்டதுக்கு நன்னி பாஸ்.
:)
//

அண்ணே யாருமே கூப்பிடாம இருந்த என்னைய கூப்பிட்டதுக்கு நான் தான் நன்னி சொல்லனும் உங்களுக்கும் சென்ஷிக்கும்

//உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே நீங்க காசி போவீர்களாக.
:))//

இப்பெல்லாம் கல்யாணம் ஆனா மூணாறு தான் போக கூடாது. காசிக்கு தாராளமா போகலாம். எனிவே உங்க வாக்கு பலிக்கட்டும்

" உழவன் " " Uzhavan " said...

ஹேய்ய்.. ஒரே காமடியா இருந்துச்சுப்பா :-)

Related Posts with Thumbnails