"கொச்சின் கொச்சுஸ்"-பஞ்சாமிர்தம்

போன வீக் எண்ட் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் மேட்ச் ரூமில் எல்லோரும் கண்டு கொண்டிருந்தோம். சென்னை அணி கலக்கிகொண்டிருக்க எல்லோரும் மிகத்தீவரமாக IPL T20 டீம்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். மலையாளிகள் பலபேர் சென்னை அணிக்கு சாதகமாக தான் இருந்தார்கள். பின்பு பல டீம்களை முழுமையாக அலசி நமது
கேரளா இது போல ஒரு டீம் ஆரம்பித்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆளாளுக்கு ஐடியா கொடுக்க தொடங்கினர். கடைசியாக "God's own team" என முடிக்க, நிலைமை விபரீதமாவதை கண்ட நான் "கொச்சின் கொச்சுஸ்" என சொன்னேன். அதென்ன "கொச்சுஸ்" என மாறி மாறி கேட்க...அட மலையாளம் தானுங்க "கொச்சு"ன்னா குழந்தை. அததான் பன்மையில சொன்னேன்,
என முடிக்க டென்ஷனான சேட்டன் மார்கள் "தம்பி நங்கெல்லாம் ஃபுட்பால்ல........." என தொடங்கிய போது அடிக்காத செல்போனை
எடுத்து "ஹலோ சொல்றா மச்சி" என நகர்ந்தேன்.

-------------------------------------------------------------------------------------------------

நம்மூர்ல தான் இந்த தொல்லைங்கன்னா இங்கேயும் சில கொடுமைகள் நடக்கதான் செய்யுது. எவனோ ஒருத்தன் எனக்கு அரபி
படிக்க தெரியும்ன்னு "Etisalat"(அமீரக தொலை தொடர்பகம்)ல போட்டு கொடுத்திருப்பான் போல. ஒரு நாளைக்கு ஒரு ஐஞ்சு மெசேஜாவது
வருது. அதுவும் அரபி எழுத்துகளில். எல்லாம் விளம்பர SMSதான். மத்தவங்களுக்கெல்லாம் ஆங்கிலத்தில தான் வருது. இதுல போன
வாரம் ஒருத்தன் போன் பண்ணி "நாங்க Etisalatல இருந்து பேசுறோம் "Etisalat" ஸ்பெஷல் ஆஃபர்ல உங்க நம்பருக்கு 2மில்லியன் திரம்ஸ் விழுந்திருக்கு"ன்னான். அப்படியே ஷாக் ஆயிட்டேன். கவுண்டமணி ஸ்டைல்ல டேமஜர கூப்பிட்டு "டேய் தகர டப்பா தலையா உன் கம்பெனி என்ன விலை? நீ வச்சிருக்குற காரை என்ன விலைக்கு தருவ"ன்னு கேட்க போயிட்டேன். இருந்தாலும் நாம இரண்டு கட்சிகாரங்ககிட்டயும் துட்ட வாங்கிட்டு தேர்தல் நாள்ல மூணாவது கட்சிகாரன் வாங்கிகொடுக்குற பிரியாணிக்கும் குவார்டருக்கும் ஓட்டு போடுற தமிழனாச்சே. பட்டுன்னு உள்ளுக்குள்ள ஒரு பட்சி அடிக்க "அப்படி ஒரு ஆஃபர் விளம்பரம் நான் பார்க்கவே இல்லையே" என்றேன்.
"இல்ல கடந்த இரண்டு மாசமா இது இருக்கு"ன்னு சொன்னான். அப்புறம் அவன் பேரு,ஆபிஸ் எல்லாம் கேட்டப்ப டுபாகூர்ன்னு தெரிஞ்சுது.
எதுக்கோ மீட்டர் போடுது இந்த அரபி குதிரைன்னு நினைச்சுகிட்டே சரி வர்ர கழுதைய ஏன் விடனும்ன்னு "அண்ணே ரொம்ப சந்தோஷம் இப்ப நான் என்ன செய்யனும்"னுகேட்டேன்

பாசக்கார அண்ணன் "தம்பி ஒரு ஆயிரம் திரம்ஸ் சர்வீஸ் சார்ஜா நான் சொல்ற அக்வுண்ட் நம்பர்ல போட்றா தம்பி" முடிஞ்சான்

"அண்ணே ஒரு காரியம் செய்யுங்கண்ணே அந்த ஆயிரம் திரம்ஸ் நீங்க கொடுத்துட்டு, 2மில்லியன்ல ஒரு மில்லியன் நீங்க எடுத்துட்டு
மீதி ஒரு மில்லியன என் அக்கவுண்ட் நம்பர் தரேன் அதுல போட்ருங்கண்ணே" தான் சொன்னேன் அதுக்கு பயபுள்ள கோவிச்சுகிட்டு போயுடுச்சு.

-------------------------------------------------------------------------------------------------

போன மாசம் கொஞ்சம் வேலையில பிஸியாயிட்டேன். அதுனால இங்க பதிவு போடமுடியல. அதுக்காக இங்க தினமும் வந்து பார்த்த கோடான கோடி என் இரசிக பெருமக்களுக்கு என் மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனா இங்க போட வேண்டிய பதிவெல்லாம் "வருத்தபடாத வாலிபர் சங்கத்"தில போட்டிருக்கேன். மிஸ் பண்ணவங்க போய் படிச்சுட்டு வாங்க. அப்புறம் நம்ம குரு, பேச்சுலரின் காவல் தெய்வம் தாம்.....ஸாரி ஆதிமூலகிருஷ்ணன் ஒரு பதிவுல ப்ளாக்க பாலோ பண்றவங்க ரொம்ப குறைஞ்சுட்டதா சொன்னாரு. எனக்கு வந்தது பாருங்க காண்டு(ஆகா இந்த வார்த்தையெல்லாம் நாம யூஸ் பண்ணகூடாதோ?)... பின்ன என்னங்க நமக்கு முக்கி முக்கி முப்பது பேர் தான் இருக்காங்க. அதுவும் இழுத்துக்கோ... பறிச்சுக்கோன்னு....சரி அவரு சுவாரஸியமா எழுதுறாரு..நாம அந்த மாதிரி எழுதல..அதுக்காக இப்படி பப்ளிக்கா அவர் கவலைய சொல்லி நம்மள பொறாமைபடவைக்கிறது???

-------------------------------------------------------------------------------------------------

இதே மாதிரி ஒரு தடவை எழுதினதுல லேபிள் "பஞ்சாமிர்தம்"னு
போட்டிருந்தேன். இனி அதையே யூஸ் பண்ணலாமான்னு நினைக்கிறேன்.
பின்ன தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் ஆச்சே. அ(கு)வியல், கூட்டு, பொறியல், துவையல், கூட்டாஞ்சோறு, நொறுக்ஸ், மிக்ஸ்டு ஊறுகாய்ன்னு,
எல்லாம் திங்கிற ஐயிட்டமாவே இருக்குது. இது வித்தியாசமா நக்குற ஐயிட்டமா இருந்துட்டு போகட்டுமே.... ஆனா என்னை
பொருத்த வரைக்கும் "காக்டெயில்" பேரு தான் கனகச்சிதம் :)

தமிழின சாப்பாட்டுபிரியர்களின் சூத்திரங்களுக்குட்பட்டு....ஒரு கவுஜ

ஆயா சுட்ட வட
தின்னுட்டு வாய தொட
தொடச்சுட்டு கதவ அட
அடைச்சுட்டு மல்லாக்க கிட

23 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

வித்யா said...

:))

நான் ஆதவன் said...

எழுதி சுமார் ஒன்னறை மணிநேரத்திற்கு பின்னூட்டமே வராமல் பாலைவனமாய் இருந்த பதிவு உங்க பின்னூட்டம் நைல் நதியாய் பாய்கிறது வித்யா. நன்றிகள்

அளவில்லா ஆனந்த கண்ணீருடன்
நான் ஆதவன்

கார்க்கி said...

//....சரி அவரு சுவாரஸியமா எழுதுறாரு//

இந்த மாதிரி நகைச்சுவையாய் எழுத உங்கள விட்டா யார் இருக்கா சகா?

:)))

சென்ஷி said...

:-))

கலக்கல்..

கொச்சின் கொச்சுஸ் - பிரமாதம்!

ஸ்ரீமதி said...

எல்லாமே சூப்பர் அண்ணா :))))

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
எழுதி சுமார் ஒன்னறை மணிநேரத்திற்கு பின்னூட்டமே வராமல் பாலைவனமாய் இருந்த பதிவு உங்க பின்னூட்டம் நைல் நதியாய் பாய்கிறது வித்யா. நன்றிகள்

அளவில்லா ஆனந்த கண்ணீருடன்
நான் ஆதவன்//

நான் தான் முதல்ல வந்தேன் இங்க நெட்வொர்க் சதியால இப்போ தான் பின்னூட்ட முடிஞ்சது.. :((((( பரவால்ல நம்ம வித்யா தானே?? :)))

ஸ்ரீமதி said...

//ஆயா சுட்ட வட
தின்னுட்டு வாய தொட
தொடச்சுட்டு கதவ அட
அடைச்சுட்டு மல்லாக்க கிட //

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)) கவிஞர்கள் எல்லாம் உங்ககிட்ட பிச்ச தான் வாங்கணும்.. என்னவொரு ஆழமான கருத்துகள்?? ம்ம்ம் பின்றீங்க.. Way to go anna.. :)) Good.. keep it up... ;))

டிஸ்கி: இது பொறாமையால் போட்ட பின்னூட்டமல்ல.. ;)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ஆ! இதழ்கள் said...

எல்லாம் திங்கிற ஐயிட்டமாவே இருக்குது. இது வித்தியாசமா நக்குற ஐயிட்டமா இருந்துட்டு போகட்டுமே.... //

தமிழர்களை டோட்டல் டேமேஜ்.

:)

welcome back

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

//....சரி அவரு சுவாரஸியமா எழுதுறாரு//

இந்த மாதிரி நகைச்சுவையாய் எழுத உங்கள விட்டா யார் இருக்கா சகா?

:)))//

சகா என்ன விளையாட்டு இது??? இப்படி பப்ளிக்கா எல்லா உண்மையையும் சொல்லப்படாது :)
----------------------------------------
//சென்ஷி said...

:-))

கலக்கல்..

கொச்சின் கொச்சுஸ் - பிரமாதம்!//

வாங்க சென்ஷி

நான் ஆதவன் said...

வாங்க ஸ்ரீமதி

//நான் தான் முதல்ல வந்தேன் இங்க நெட்வொர்க் சதியால இப்போ தான் பின்னூட்ட முடிஞ்சது.. :((((( //

அதெல்லாம் செல்லாது செல்லாது :)

//கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா :)) கவிஞர்கள் எல்லாம் உங்ககிட்ட பிச்ச தான் வாங்கணும்.. என்னவொரு ஆழமான கருத்துகள்?? ம்ம்ம் பின்றீங்க.. Way to go anna.. :)) Good.. keep it up... ;))//


ஆஹா உனக்கு இது பிடிச்சிருக்குன்னா என்கிட்ட இது மாதிரி ஆயிரம் கவிதைகள் இருக்கு...மெயில்ல அனுப்பட்டுமா??

//டிஸ்கி: இது பொறாமையால் போட்ட பின்னூட்டமல்ல.. ;)))//

அட பரவாயில்ல ஸ்ரீமதி. கவிஞனுக்கு இதெல்லாம் ஜகஜம்

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)//

ஆமா நீங்க யாரு புதுசா இருக்கீங்க :)

மேடம் என்ன இது அடிக்கடி பேர மாத்துறீங்க..பேருல வாஸ்து சரியில்லையோ :)
----------------------------------------

// ஆ! இதழ்கள் said...


தமிழர்களை டோட்டல் டேமேஜ்.

:)

welcome back//

நன்றி ஆனந்த். தமிழன் பேரு தான் எப்பவோ டேமேஜ் ஆகிடுச்சே...

ஸ்ரீமதி said...

//ஆஹா உனக்கு இது பிடிச்சிருக்குன்னா என்கிட்ட இது மாதிரி ஆயிரம் கவிதைகள் இருக்கு...மெயில்ல அனுப்பட்டுமா??//

அய்யய்யோ வேண்டாம்.. தெரியாம சொல்லிட்டேன்.. ;)))))))

கோபிநாத் said...

:-))

" உழவன் " " Uzhavan " said...

"கொச்சின் கொச்சுஸ்" மேட்டர் சூப்பர்ணா.. :-)

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

//ஆஹா உனக்கு இது பிடிச்சிருக்குன்னா என்கிட்ட இது மாதிரி ஆயிரம் கவிதைகள் இருக்கு...மெயில்ல அனுப்பட்டுமா??//

அய்யய்யோ வேண்டாம்.. தெரியாம சொல்லிட்டேன்.. ;)))))))//

அப்ப ஒரு டீல்..நான் எழுதுற எல்லா கவுஜைங்களை சூப்பரா இருக்குன்னு சொல்லனும் :)
----------------------------------------
@கோபிநாத்
நன்றி தல
----------------------------------------
// " உழவன் " " Uzhavan " said...

"கொச்சின் கொச்சுஸ்" மேட்டர் சூப்பர்ணா.. :-)//

நன்றிங்கண்ணோவ்வ்வ்

ச்சின்னப் பையன் said...

:-))))

நான் ஆதவன் said...

சிரிப்பானுக்கு நன்றி ச்சின்னபையன் :)

/'\சோம்பேறி/'\ said...

/* ஸ்பெஷல் ஆஃபர்ல உங்க நம்பருக்கு 2மில்லியன் திரம்ஸ் விழுந்திருக்கு"ன்னான். */

தலைவரே வணக்கம். துரும்பா இளைச்சுப் போய்ட்டீங்களே! உடம்பப் பாத்துக்கோங்க..

/*அப்புறம் அவன் பேரு,ஆபிஸ் எல்லாம் கேட்டப்ப டுபாகூர்ன்னு தெரிஞ்சுது. */

ஸாரி ராங்க் கமெண்ட். யோவ்.. யாருய்யா நீ? ஹூ த ஹெல் ஆர் யு மேன்?

நான் ஆதவன் said...

/'\சோம்பேறி/'\ said...
/* ஸ்பெஷல் ஆஃபர்ல உங்க நம்பருக்கு 2மில்லியன் திரம்ஸ் விழுந்திருக்கு"ன்னான். */
// தலைவரே வணக்கம். துரும்பா இளைச்சுப் போய்ட்டீங்களே! உடம்பப் பாத்துக்கோங்க..//

யோவ்.. யாருய்யா நீ? ஹூ த ஹெல் ஆர் யு மேன்?/*அப்புறம் அவன் பேரு,ஆபிஸ் எல்லாம் கேட்டப்ப டுபாகூர்ன்னு தெரிஞ்சுது. */
// ஸாரி ராங்க் கமெண்ட். யோவ்.. யாருய்யா நீ? ஹூ த ஹெல் ஆர் யு மேன்?//

தலைவரே வணக்கம். துரும்பா இளைச்சுப் போய்ட்டீங்களே! உடம்பப் பாத்துக்கோங்க..

thevanmayam said...

எழுதி சுமார் ஒன்னறை மணிநேரத்திற்கு பின்னூட்டமே வராமல் பாலைவனமாய் இருந்த பதிவு உங்க பின்னூட்டம் நைல் நதியாய் பாய்கிறது வித்யா. நன்றிகள்

அளவில்லா ஆனந்த கண்ணீருடன்
நான் ஆதவன்///

என்ன இப்படியெல்லாம் ஃபீலிங்க்ஸ்!!
ஓட்டு போட்டாச்சு!!

ஆயில்யன் said...

:)))

குசும்பன் said...

உங்களுக்கு பஞ்சாமிர்தமா?

ரைட்டு

இந்த வார பஞ்சாமிர்தம் அருமை:)

Related Posts with Thumbnails