படித்த முட்டாள்கள்....

வர வர படிச்ச முட்டாளுங்க அதிகமாயிகிட்டே வருகிறார்கள். கடந்த இரண்டு தினங்களாக தொலைகாட்சியிலும் இணையத்திலும் இருந்து வரும் செய்திகள் கவலையையும் சிரிப்பையும் தான் தருகின்றன.

முதல்ல நம்மூர்காரன பார்ப்போம். இரண்டு நாளா தினசரில வந்திகிட்டுருக்கிற விசயம் தான். தேவராஜ்னு ஒருத்தன் தன் மனைவி, குழந்தைகள், மனைவியின் சகோதரரின் குடும்பத்தையும் சுட்டு விட்டு தானும் சுட்டு இறந்து போயிருக்கிறார். அதுவும் அமெரிக்காவில்... லூசுப்பய உங்களுக்குள்ள சண்டையின்னா அதுக்கு குழந்தைங்க என்னடா பாவம் பண்ணியது? அதுகளை கொல்றதுக்கு எப்படிடா மனசு வந்தது?

நீங்கெல்லாம் எங்க போனாலும் திருந்த மாட்டீங்கடா...இங்கிருந்தா சொந்தத்துக்குள்ள வெட்டிகிட்டு சாவறது...அமெரிக்கான்னா சுட்டுகிட்டு சாவறது.

*************************************************************************************************
சரி அடுத்து நம்ம பக்கத்து மாநிலத்த பார்ப்போம். கேரளாவில இங்க இருக்குற கட்சிய விட மிகக்குறைவு தான். ஆனா கொடுக்குற அளப்பறை இருக்கே...யப்பா சாமி தாங்கமுடியலடா.

டிவிய தொறந்தா இருக்குற இருபது தொகுதிய பத்தி முப்பது நாளா டீப்பா சொல்றான்ங்க. பேட்டி எடுத்தவனையே திருப்பி பேட்டி எடுக்குறது. ஒருத்தனே பல டி.வி.ல பேட்டி கொடுக்குறது. இப்படி பல சேட்டைகள் நடக்குது. நேரடி ஒளிபரப்புன்னு பண்ற அட்டகாசம் தாங்கமுடியல..

இதுல நேத்து ஒரு விசயத்தை பற்றி ஒரு டிவில ஒரே அலசல். அதாவது பல தொகுதியில பிரபல கட்சியின் வேட்பாளரோட பேருல, அதுவும் அதே இன்ஷியலோட வேற ஒரு வேட்பாளர எதிர்கட்சி நிறுத்துதாம். ஒருத்தர் இரண்டு பேரல்ல...ஐந்து பேர் வரைக்கும். அந்த பேரும் அரசியல்ல எந்தவொரு தொடர்பும் இல்லாத பொதுமக்களாம்.

சரி எதுக்கிந்த மாதிரி செய்றாங்கன்னா ஒரே பேர்ல இரண்டு மூணு வேட்பாளர் இருந்தா மக்கள் குழப்பமாகி ஓட்டு திரிஞ்சு போயிடுமாம். இத ஒரு பிரச்சனைன்னு ஒரு டிவில ஸ்பெஷல் ரிப்போர்ட்டா போடுறாங்கன்னா அப்ப அந்த ஊரு ரிப்போர்டர் எப்படி காஞ்சு போய் கெடக்குறாங்கன்னு பார்த்துக்கங்க.வெண்ணவெட்டிங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....அதிகமா படிச்சிருந்தா இந்த பிரச்சனை தான் போல. பக்கத்தில சின்னத்தை பார்த்து ஓட்டு போடமாட்டாங்களாம்.

அதிகமா படிச்சதால படிச்சு பார்த்து மட்டும் தான் ஓட்டு போடுவாங்களாம்... ரொம்ப கஷ்டம்

*************************************************************************************************

அடுத்து ஒரு வெளிநாடு. இது மெயில்ல வந்தது. ஜெர்மனியில ஒரு தம்பதியினருக்கு ரொம்ப நாள் குழந்தையே இல்லையாம். ஆலமரம், அரசமரம், மாம்பழ சாமியாருன்னு எதுவுமே அந்த ஊருல இல்லாததால டாக்டர்கிட்ட போனா... நம்ம தலைவனுக்கு பிரச்சனை இருக்குறது கண்டு பிடிக்கப்பட்டதாம்.

அதுக்காக மனச தளர விடமாம "டெஸ்ட் டியூப்"ன்னு ரொம்ப செலவுள்ள முறைக்கு போகாம. பக்கத்து வீட்ல இருக்குற ஒருத்தர வாரத்தில மூணு நாள்ன்னு ஆறு மாசத்துக்கு டாலர் 2500க்கு வாடகைக்கு அமர்த்தினாங்களாம். அந்த பக்கத்து வீட்டுகாரருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைங்க இருக்குதாம்.

பக்கத்து வீட்டுகாரரோட மனைவி இதுக்கு சம்மதிக்கல(இவ தாண்டா பொண்டாட்டி). ஆனா நம்ம ஆளு "இது வெறும் பணத்துக்காக தான். உன்னைய விட எனக்கு யாரும் முக்கியமில்ல"ன்னு பேசியிருக்காரு.

இப்படியே 72 தடவை இந்த கூத்து நடந்தும் அம்மணி கருத்தருக்கல.....பக்கத்து வூட்டுகாரரும் அம்மணியும் மெடிக்கல் செக்கப்புக்கு போனப்ப நம்ம பக்கத்து வூட்டுகாரருக்கும் மலட்டு தன்மை இருந்துச்சாம்.

பகீர் ஆயிடுச்சு எல்லாருக்கும். ஆனா நம்ம பக்கத்து வூட்டுகாரரோட மனைவிக்கு மட்டும் அதிர்ச்சியாகல..அந்த குழந்தைய பத்தி கேட்டதுக்கு கூலா"அது அவர் குழந்தையில்லைன்னு"சொல்லுச்சாம்.

அப்புறம் நம்ம தலைவனும் தலைவியும் கோர்ட்டுக்கு போய் கொடுத்த காச திருப்பி கொடுக்க சொல்லி கேசு போட்டாங்களாம். அதுக்கு நம்ம பக்கத்து வூட்டுகாரர். நான் அக்ரிமெண்ட்ல எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்கல்ன்னு தெளிவா தன்னோட தரப்பு நியாத்த சொன்னாராம். நான் என் வேலைய நேர்மையா தான் செஞ்சேன்னு சொல்லியிருக்கார். கலிகாலம்டா சாமி..........

28 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோபிநாத் said...

ரைட்டு....ஆணி அதிகமுன்னு சொன்னியே!! அது இந்த ஆணி தானா ;))

ஜி said...

:))

ஆமாம்... அந்த ஜெர்மனி மக்கள் படிச்சவங்கன்னு எப்படி சொல்றீங்க? 'லண்டன்ல பிச்சக்காரன்கூட இங்க்லிஷ்லதான்டா பிச்ச எடுக்குறான்' மாதிரியா? ;))

வித்யா said...

1. :(
2. :)
3. கலிமுத்திடுத்து:)

சென்ஷி said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...ஒண்ணும் சொல்லிக்க முடியல... :-))

// ஜி said...

:))

ஆமாம்... அந்த ஜெர்மனி மக்கள் படிச்சவங்கன்னு எப்படி சொல்றீங்க? 'லண்டன்ல பிச்சக்காரன்கூட இங்க்லிஷ்லதான்டா பிச்ச எடுக்குறான்' மாதிரியா? ;))//

முடியல ஜி.. முடியல

கார்க்கி said...

ரைட்டு..

ஜூட்டு

markkandan unga oorkaran said...

இது படிச்சவங்க மட்டும் பண்றது இல்ல,
நாம எல்லாம் குரங்குல இருந்து பிறந்தோம்

நமக்கு இந்த மிருக புத்தி இருக்கும்ல !!!!!!!!!!!
தான் பிள்ளையையே கொல்றது.............
அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆச படுறது ................

எல்லாம் 5 அறிவு ஜீவன் செய்றது

markkandan unga oorkaran said...

இது படிச்சவங்க மட்டும் பண்றது இல்ல,
நாம எல்லாம் குரங்குல இருந்து பிறந்தோம்

நமக்கு இந்த மிருக புத்தி இருக்கும்ல !!!!!!!!!!!
தான் பிள்ளையையே கொல்றது.............
அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆச படுறது ................

எல்லாம் 5 அறிவு ஜீவன் செய்றது

கைப்புள்ள said...

அந்த மூனாவது ஜெர்மன் கதையைப் படிச்சிட்டு சிரிப்பு வந்துடுச்சு :)

//ஆமாம்... அந்த ஜெர்மனி மக்கள் படிச்சவங்கன்னு எப்படி சொல்றீங்க? 'லண்டன்ல பிச்சக்காரன்கூட இங்க்லிஷ்லதான்டா பிச்ச எடுக்குறான்' மாதிரியா? ;))
//

@ஜி : :)))))

ஆ! இதழ்கள் said...

ஆகா.. சுடச்சுட தினத்தந்தி படிச்ச எஃபெக்ட்.

ஸ்ரீமதி said...

:))))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:))))

புல்லட் பாண்டி said...

ஹிஹிிஹி!நல்லாருக்கு! ஓட்டும் குத்தியாச்சு ! :))

மாசிலா said...

ஜெர்மன்காரனுங்க இப்படியா? அடப்பாவிங்களா! டேய் டேய் வேணாங்கடா, விட்டுடுங்கடா தாங்கமுடியல!!!

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...

ரைட்டு....ஆணி அதிகமுன்னு சொன்னியே!! அது இந்த ஆணி தானா ;))//

அயராத பணிகளுக்கிடையே இது போன்ற செய்திகளுக்கும் இடமளிக்கவேண்டும் உடன்பிறப்பே!
-----------------------------------------------------
// ஜி said...

:))

ஆமாம்... அந்த ஜெர்மனி மக்கள் படிச்சவங்கன்னு எப்படி சொல்றீங்க? 'லண்டன்ல பிச்சக்காரன்கூட இங்க்லிஷ்லதான்டா பிச்ச எடுக்குறான்' மாதிரியா? ;))//

வாங்க ஜி. நல்லாத்தான் யோசிக்கிறீங்க :))
-----------------------------------------------------
// வித்யா said...

1. :(
2. :)
3. கலிமுத்திடுத்து:)//

வாங்க வித்யா.

நான் ஆதவன் said...

// சென்ஷி said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

ஒண்ணும் சொல்லிக்க முடியல... :-))//

இப்படியா கத்துறது... காது வலிக்குது
-----------------------------------------------------
//கார்க்கி said...

ரைட்டு..

ஜூட்டு//

ரைட்டு......
-----------------------------------------------------
//markkandan unga oorkaran said...

இது படிச்சவங்க மட்டும் பண்றது இல்ல,

நாம எல்லாம் குரங்குல இருந்து பிறந்தோம்

எல்லாம் 5 அறிவு ஜீவன் செய்றது//

வாங்க markkandan unga oorkara. ரொம்ப சரியா சொன்னீங்க

நான் ஆதவன் said...

//கைப்புள்ள said...

அந்த மூனாவது ஜெர்மன் கதையைப் படிச்சிட்டு சிரிப்பு வந்துடுச்சு :)//

வாங்கண்ணே. அண்ணே அது கதையல்ல நிஜம்..நிஜம்...நிஜம் :)
----------------------------------------------
// ஆ! இதழ்கள் said...

ஆகா.. சுடச்சுட தினத்தந்தி படிச்ச எஃபெக்ட்.//

ம்ம்ம் அப்ப இப்ப தான் எழுந்திருச்சீங்க போல? :))
----------------------------------------------
// ஸ்ரீமதி said...

:))))//

இனிமே உன்ன சிரிப்பு ஸ்ரீமதின்னு கூப்பிடலாம் போல.

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

:))))//

வாங்க மேடம். அதென்ன எல்லாரும் அளவா சிரிக்கிறீங்க. அதுவும் ஒரே அளவா?
-------------------------------------------------
// புல்லட் பாண்டி said...

ஹிஹிிஹி!நல்லாருக்கு! ஓட்டும் குத்தியாச்சு ! :))//

ரொம்ப நன்றி புல்லட் அண்ணே
-------------------------------------------------
// மாசிலா said...

ஜெர்மன்காரனுங்க இப்படியா? அடப்பாவிங்களா! டேய் டேய் வேணாங்கடா, விட்டுடுங்கடா தாங்கமுடியல!!!//

அவுங்களுக்கு இதெல்லாம் ஜகஜம் போல மாசிலா :))

ஆசிப் மீரான் said...

கேரளத்துல இந்த பெயர் பிரச்னை மிக முக்கியமானதென்பதால்தான் அதைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். கடந்த முறை சுதிரன் என்பவர் 1000 வாக்குகல் வித்தியாசத்தில் தோற்றார். அதெ எபெய்ரைல் நின்றவருக்குக் கிடைத்தது 8000 வாக்குகள். எனவே 'அபரன்கள்' எனப்படும் ஒரே பெயர் கொண்டவர்களைப் பற்றிய நிறைய கவலை இருக்கவே செய்யும்.தமிழகத்து மொக்கை செய்தி தொலைக்காட்சிகளோடு ஒப்பிடுகையில் கேரளத்து செய்தி தொலைக்காட்சிகள் பல மடங்கு சிறந்தவையே

நான் ஆதவன் said...

ஆசிப் அண்ணாச்சி நல்லா கவினிச்சீங்கன்னா நான் தமிழ் செய்தி தொலைகாட்சிகளோடு ஒப்பீடு செய்திருக்கவில்லை. நான் தமிழ் செய்திகளை கேட்பதும் இல்லை. என் ரூமில் வருவது கலைஞர் செய்தி மட்டுமே. அதை கேட்காமலே அதில் என்ன செய்தி சொல்கிறார்கள் என்று அனைவரும் அறிவர்.

அவர்கள் சிறிய விசயத்திற்கெல்லாம் பதட்டப்படுவது தொடந்து அவர்கள் செய்திகளை பார்த்து வரும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மேலும் இது வெறும் வேட்பாளர் பெயரை மட்டும் வாசித்து ஓட்டு போடுவது என்பது புத்திசாலி செய்யும் செயலா??

ஆசிப் மீரான் said...

சில விசயங்கள் எரிச்சல் தரும் அவனுங்க கிட்ட. அம்ரிக்காவில் விமானம் வீழ்ந்து 10 பேர் பலி.இறந்தவரில் மலையாளி யாரும் இல்லை அப்படின்னுதான் செய்தி சொல்வாங்க :-) துபாய்ல பாலம் இனிட்ஞ்சு விழுந்து 5 தமிழ்நாட்டுக்காரனுங்க செத்ததை எந்த தமிழ் ஊடகமும் கண்டுக்கவேயில்லை :-((

பெயர மாற்றம் பெரிய விசய்மா? சின்னத்தைப் பார்த்து வாக்களிக்க முடியாதான்னு கேட்டா... உங்க் அதலைப்பு சரிதான். அதுவும் சேட்டன் மாரு படிச்சுட்டதா நெனச்சுக்கிடிருக்குற முட்டாள்கள் :-)

நான் ஆதவன் said...

நன்றி அண்ணாச்சி :))

Bleachingpowder said...

தலைப்பை பார்த்ததும் என்னை தான் கலாய்க்கறீங்கனு நினைச்சேன் தல :)

//பக்கத்து வீட்ல இருக்குற ஒருத்தர வாரத்தில மூணு நாள்ன்னு ஆறு மாசத்துக்கு டாலர் 2500க்கு வாடகைக்கு அமர்த்தினாங்களாம். //

கரும்பு தின்ன கூலி :))

//இப்படியே 72 தடவை இந்த கூத்து நடந்தும் அம்மணி கருத்தருக்கல///

இத வேற அந்த மானங்கெட்ட புருசன் எண்ணிட்டு இருந்திருக்கான் பாருங்க.

கிரி said...

//Bleachingpowder said...
தலைப்பை பார்த்ததும் என்னை தான் கலாய்க்கறீங்கனு நினைச்சேன் தல :)//

:-)))))))

ஒண்ணும் சொல்றதுக்கில்ல உலகம் போற போக்க பார்த்தா

அறிவே தெய்வம் said...

பக்கத்து வீட்டுகாரரோட மனைவி...

மீறுன ஆளுங்கோ...!!!

நான் ஆதவன் said...

//தலைப்பை பார்த்ததும் என்னை தான் கலாய்க்கறீங்கனு நினைச்சேன் தல :)//

தலைப்பை வச்சுட்டு போஸ்ட் பண்ண உடனே உங்க ஞாபகம் வந்தது தல..அதே மாதிரி நீங்க கேட்டுடீங்க :))

//
கரும்பு தின்ன கூலி :))//

நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

//இத வேற அந்த மானங்கெட்ட புருசன் எண்ணிட்டு இருந்திருக்கான் பாருங்க//

வேற வேலை????
------------------------------------------------
//ஒண்ணும் சொல்றதுக்கில்ல உலகம் போற போக்க பார்த்தா//

ஆமாம் கிரி. ஆனா அவுங்களுக்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம்
-------------------------------------------------
வாங்க அறிவே தெய்வம். கருத்துக்கு நன்றி

இளைய பல்லவன் said...

கடைசி மேட்டர்ல மொத மேட்டர் அமுங்கிடிச்சி.

ஆக படித்த முட்டாள்கள் எதுன்னாலும் செய்வாங்கன்னு வகைக்கொண்ணா சொல்லியிருக்கீங்க.

நெசமாலுமே துபாய் தினத்தந்தி நிரூபர்தான் நீங்க!.

நான் ஆதவன் said...

துபாய் தினந்தந்தியா??? அவ்வ்வ்வ் சொல்றது ஒரு BBC சேனல் ரேஞ்சுக்கு சொல்லகூடாதா..

பரவாயில்லை...நன்றி பல்லவன். இனி இந்த மாதிரி நியூஸ் அடிக்கடி கொடுக்கிறேன்

goma said...

குப்பைத் தொட்டிக்குள் இத்தனை வைரங்களா?

Related Posts with Thumbnails