தேர்தல் கார்டூன்ஸ்

நேர்காணலில் கலைஞர்............நேர்காணலில் புரட்சி தலைவி............


தங்கசாலை பிரசாரத்தில் தயாநிதிமாறன்.....

படித்த முட்டாள்கள்....

வர வர படிச்ச முட்டாளுங்க அதிகமாயிகிட்டே வருகிறார்கள். கடந்த இரண்டு தினங்களாக தொலைகாட்சியிலும் இணையத்திலும் இருந்து வரும் செய்திகள் கவலையையும் சிரிப்பையும் தான் தருகின்றன.

முதல்ல நம்மூர்காரன பார்ப்போம். இரண்டு நாளா தினசரில வந்திகிட்டுருக்கிற விசயம் தான். தேவராஜ்னு ஒருத்தன் தன் மனைவி, குழந்தைகள், மனைவியின் சகோதரரின் குடும்பத்தையும் சுட்டு விட்டு தானும் சுட்டு இறந்து போயிருக்கிறார். அதுவும் அமெரிக்காவில்... லூசுப்பய உங்களுக்குள்ள சண்டையின்னா அதுக்கு குழந்தைங்க என்னடா பாவம் பண்ணியது? அதுகளை கொல்றதுக்கு எப்படிடா மனசு வந்தது?

நீங்கெல்லாம் எங்க போனாலும் திருந்த மாட்டீங்கடா...இங்கிருந்தா சொந்தத்துக்குள்ள வெட்டிகிட்டு சாவறது...அமெரிக்கான்னா சுட்டுகிட்டு சாவறது.

*************************************************************************************************
சரி அடுத்து நம்ம பக்கத்து மாநிலத்த பார்ப்போம். கேரளாவில இங்க இருக்குற கட்சிய விட மிகக்குறைவு தான். ஆனா கொடுக்குற அளப்பறை இருக்கே...யப்பா சாமி தாங்கமுடியலடா.

டிவிய தொறந்தா இருக்குற இருபது தொகுதிய பத்தி முப்பது நாளா டீப்பா சொல்றான்ங்க. பேட்டி எடுத்தவனையே திருப்பி பேட்டி எடுக்குறது. ஒருத்தனே பல டி.வி.ல பேட்டி கொடுக்குறது. இப்படி பல சேட்டைகள் நடக்குது. நேரடி ஒளிபரப்புன்னு பண்ற அட்டகாசம் தாங்கமுடியல..

இதுல நேத்து ஒரு விசயத்தை பற்றி ஒரு டிவில ஒரே அலசல். அதாவது பல தொகுதியில பிரபல கட்சியின் வேட்பாளரோட பேருல, அதுவும் அதே இன்ஷியலோட வேற ஒரு வேட்பாளர எதிர்கட்சி நிறுத்துதாம். ஒருத்தர் இரண்டு பேரல்ல...ஐந்து பேர் வரைக்கும். அந்த பேரும் அரசியல்ல எந்தவொரு தொடர்பும் இல்லாத பொதுமக்களாம்.

சரி எதுக்கிந்த மாதிரி செய்றாங்கன்னா ஒரே பேர்ல இரண்டு மூணு வேட்பாளர் இருந்தா மக்கள் குழப்பமாகி ஓட்டு திரிஞ்சு போயிடுமாம். இத ஒரு பிரச்சனைன்னு ஒரு டிவில ஸ்பெஷல் ரிப்போர்ட்டா போடுறாங்கன்னா அப்ப அந்த ஊரு ரிப்போர்டர் எப்படி காஞ்சு போய் கெடக்குறாங்கன்னு பார்த்துக்கங்க.வெண்ணவெட்டிங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா....அதிகமா படிச்சிருந்தா இந்த பிரச்சனை தான் போல. பக்கத்தில சின்னத்தை பார்த்து ஓட்டு போடமாட்டாங்களாம்.

அதிகமா படிச்சதால படிச்சு பார்த்து மட்டும் தான் ஓட்டு போடுவாங்களாம்... ரொம்ப கஷ்டம்

*************************************************************************************************

அடுத்து ஒரு வெளிநாடு. இது மெயில்ல வந்தது. ஜெர்மனியில ஒரு தம்பதியினருக்கு ரொம்ப நாள் குழந்தையே இல்லையாம். ஆலமரம், அரசமரம், மாம்பழ சாமியாருன்னு எதுவுமே அந்த ஊருல இல்லாததால டாக்டர்கிட்ட போனா... நம்ம தலைவனுக்கு பிரச்சனை இருக்குறது கண்டு பிடிக்கப்பட்டதாம்.

அதுக்காக மனச தளர விடமாம "டெஸ்ட் டியூப்"ன்னு ரொம்ப செலவுள்ள முறைக்கு போகாம. பக்கத்து வீட்ல இருக்குற ஒருத்தர வாரத்தில மூணு நாள்ன்னு ஆறு மாசத்துக்கு டாலர் 2500க்கு வாடகைக்கு அமர்த்தினாங்களாம். அந்த பக்கத்து வீட்டுகாரருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைங்க இருக்குதாம்.

பக்கத்து வீட்டுகாரரோட மனைவி இதுக்கு சம்மதிக்கல(இவ தாண்டா பொண்டாட்டி). ஆனா நம்ம ஆளு "இது வெறும் பணத்துக்காக தான். உன்னைய விட எனக்கு யாரும் முக்கியமில்ல"ன்னு பேசியிருக்காரு.

இப்படியே 72 தடவை இந்த கூத்து நடந்தும் அம்மணி கருத்தருக்கல.....பக்கத்து வூட்டுகாரரும் அம்மணியும் மெடிக்கல் செக்கப்புக்கு போனப்ப நம்ம பக்கத்து வூட்டுகாரருக்கும் மலட்டு தன்மை இருந்துச்சாம்.

பகீர் ஆயிடுச்சு எல்லாருக்கும். ஆனா நம்ம பக்கத்து வூட்டுகாரரோட மனைவிக்கு மட்டும் அதிர்ச்சியாகல..அந்த குழந்தைய பத்தி கேட்டதுக்கு கூலா"அது அவர் குழந்தையில்லைன்னு"சொல்லுச்சாம்.

அப்புறம் நம்ம தலைவனும் தலைவியும் கோர்ட்டுக்கு போய் கொடுத்த காச திருப்பி கொடுக்க சொல்லி கேசு போட்டாங்களாம். அதுக்கு நம்ம பக்கத்து வூட்டுகாரர். நான் அக்ரிமெண்ட்ல எந்த ஒரு உத்தரவாதமும் கொடுக்கல்ன்னு தெளிவா தன்னோட தரப்பு நியாத்த சொன்னாராம். நான் என் வேலைய நேர்மையா தான் செஞ்சேன்னு சொல்லியிருக்கார். கலிகாலம்டா சாமி..........
Related Posts with Thumbnails