ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் (FYI பரிசல்)

இன்று சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு பல இலக்கியங்களை தொட்டு பின்பு கவிதையின் ஊடே ஒளியை போல சீராக நகர்ந்தது.

இன்று கண்ட ஆசிப் அண்ணாச்சியின் திறந்த மடல் பதிவைப் பற்றி சென்ஷியிடம் கூறிய போது மிகவும் சூடாகி ஒரு கவிமடத்தலைவனாக இருந்து இது போல தவறான வழி காட்டுதல் நலமா? என்று கேட்டார்.

எல்லாரும் முதல்ல இத படிங்க அப்புறம் இங்க வாங்க
...

///சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.///

இது தானே பரிசல் கவிஜ. இதில் இத்தனை வார்த்தை விரயம் அவசியமல்லாதது என்று அண்ணாச்சி கூறியது உண்மை தான். ஆனால் அதற்கு அவர் திருத்திய கவிதை..

//சரவணபவன்
இட்லி
முடிந்தது//


என்ன இது???? இதில ஏன் இத்தனை வார்த்தை விரயம். இதுல நுட்ப வாசகனுக்கு யோசிக்க நிறைய இருக்கலாம். ஆனால் நூட்ப வாசகனுக்கு??? அட அதாங்க ரூம் போட்டு யோசிக்கிறவன்.

கவுஞன் எதையும் சப்-டெக்ஸ்டாக பூடகமாகத்தான் சொல்லணும் அது சரிதான் ஆனால் கவிமட தலைவன் டெக்ஸ்டெ இல்லாம தானே சொல்லனும். பின்ன சாதா கவிஞனுக்கும் ஸ்பெஷல் சாதா கவி....ஸாரி கவிமட தலைவனுக்கும் என்ன வித்தயாசம்?? உங்க கவிதை சரவணபவனில் இட்லி முடிந்தது என்பதை எந்தவொரு சந்தேகமும் இல்லாம தெரியப்படுத்தது.

சரவணபவன் வெளியில வைக்கிற போர்டு மாதிரி இருக்கு இது. பார்க்கிறவன் அடுத்து பொங்கலுலாவது சாப்பிடலாம்ன்னு உள்ள போயிடுவான். ஆனா ஒரு கவிஞர் இதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமா?

கவிஞனோட வேலையே வாசகனை சட்டைய கிழிச்சு அலைவிடுறதுயில்ல. அதுக்கும் மேல "ங்ங்ங்ங்ங்...ங்ங்ங்ங்..." தலையில கொட்டிகிட்டே கூட சிரிச்சுகிட்டும் அழுதுகிட்டும் அலைய விடனும். (காதல் படம் பார்த்தீங்களா? அந்த மாதிரி) . இதெல்லாம் இல்லைன்னா எப்படி உங்களை கவிஞனா ஏத்துப்பான்.

அதுனால செப்பல் போட்டுட்டு ஸாரி செப்பனிடப் படிங்க...

சரவணபவன்
முடிந்தது


இப்படி எழுதிட்டீங்கன்னா.. நூட்ப வாசகனை எவ்வளவு நாள் ரூம் போட்டு யோசிக்க வைக்கலாம் பாருங்க.. இத தான் சொறி சிரங்குன்னு ஸாரி சொற்செரிவுன்னு சொல்றோம். இதுகூட தெரியாம ஹைய்யோ ஹைய்யோ...


சரவண பவன்ல இட்லி முடிஞ்சதுன்னா அது எந்தக் காலத்தைக் குறிக்கும்னு யோசிப்பான் நுட்ப வாசகன். ஆனா சரவண பவனே முடிஞ்சுதுன்னா அவன் எந்த காலத்தை பத்தி யோசிப்பான்???


"முடிந்தது" இதுல தொங்கி நிக்கிற பல விசயத்தை ரூம் போட்டு யோசிச்சு பாருங்க..உங்களுக்காக படம் வரைஞ்சு வேற போட்டுருக்கேன்

முடிந்தது"முடிந்தது"- இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என முடிந்ததாக கொள்ளலாம், சரவணபவனின் எதிர்காலமே முடிஞ்சுதுன்னு வைச்சுக்கலாம். கோர்ட்,கேஸூ எல்லாம் முடிஞ்சுன்னு வச்சுக்கலாம். சரவணபவன் அண்ணாச்சியோட எதிர்காலமே முடிஞ்சுதுன்னு கூட பொருள்கொள்ளலாம். அப்புறம் ஜீவஜோதியோட...இல்ல விடுங்க. அடேங்கப்பா!! இந்த ரீதியில் யோசிச்சுப் பார்த்தா கவுஜை தன்னைத்தானே எப்படில்லாம் எழுதும்னு நெனச்சு... அடப் போங்க அண்ணாச்சி!! ஒரு நோபல் பரிசை அம்பொன்னு தவற விட்டுட்டீங்களே?!
அதனால...

இனிமே கவுஜை எழுதுறதா இருந்தா யோஜிச்சு எழுதுங்க

நல்லா இருங்க!!ன்னு நம்ம சென்ஷி பொரிஞ்சு தள்ளிட்டார். மிக வேதனையான மனநிலைமையில இருக்கிறதுனால இந்த பதிவை நான் போட வேண்டியதா போச்சு.

35 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....?!

விசாரிச்சேன்னு சொல்லுங்க :)))

பரிசல்காரன் said...

தம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...

உரத்த குரலில் படிக்கவும்..


”இப்ப நான் என்ன செய்ய?”


முக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.

:-))))

கோபிநாத் said...

\ பரிசல்காரன் said...
தம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...

உரத்த குரலில் படிக்கவும்..


”இப்ப நான் என்ன செய்ய?”


முக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.

:-))))
\\

அண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ!!?? ;)))

கோபிநாத் said...

சென்ஷிக்கு
முடிந்தது ;))


எது!!!!????????

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))

நான் ஆதவன் said...

// ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....?!

விசாரிச்சேன்னு சொல்லுங்க :)))//

வாங்க ஆயில்யன். கண்டிப்பா அவர்கிட்ட சொல்றேனுங்க....

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\
கோபிநாத் said...
சென்ஷிக்கு
முடிந்தது ;))
எது!!!!????????//

ஆகா.. :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆயில்யன் கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டு..

கோபிநாத்தின் இந்த கமெண்டுக்கும் ஒரு ரிப்பீட்டே..
\\அண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ!!?? ;)))//

--------------
வார்த்தையில் தொக்கி( தொங்கி ) நிற்கும் அனிமேசன் ந்ல்லா இருந்தது.. :)

நான் ஆதவன் said...

//பரிசல்காரன் said...
தம்பி மாதவன் மாதிரி கேக்கறேன்...
உரத்த குரலில் படிக்கவும்..
”இப்ப நான் என்ன செய்ய?”

முக்கியக்குறிப்பு: இது வெறும் கேள்வி. கவிதை அல்ல.

:-))))//

அண்ணன் மாதவன் மாதிரி கேட்டாலும் "எனக்கு தெரியாது"ன்னு தான் சொல்லுவேன் பரிசல்.

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...
அண்ணே இதொல்லாம் ஓவரு....நீங்க செய்தற்க்கு தான் இப்போ இந்த நிலைமை...இன்னும் எத்தனை பதிவுகள் வர போகுதோ!!?? ;)))//

இதுவே ஈ ஓடுது தலீவரே....பார்க்கலாம் அடுத்து எத்தனை வருதுன்னு

// கோபிநாத் said...

சென்ஷிக்கு
முடிந்தது ;))


எது!!!!????????//

:))))))

நான் ஆதவன் said...

//ச்சின்னப் பையன் said...

:-)))))))))))//

வாங்க ச்சின்ன பையன். நன்றிகள்
------------------------------------------
வாங்க முத்துலட்சுமி மேடம். சென்ஷி பேர போட்டது வொர்க் அவுட் ஆகுது போல :))

நீங்க ஒருத்தர் தான் அனிமேஷனை கவனிச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ஒரு ரசிகையாவது இருக்கீங்களேன்னு :)

T.V.Radhakrishnan said...

:-))))

ஆ! இதழ்கள் said...

கொஞ்ச நஞ்சம் தொக்கிக் கொண்டிருந்ததையும் தொங்கப் போட்டுட்டீங்க. சீக்கிரம் அயன் பண்ணி வச்சுருங்கய்யா..

:))

அருமை

நான் ஆதவன் said...

வாங்க ராதாகிருஷ்ணன் அய்யா. வருகைக்கு நன்றி
--------------------------------------------
வாங்க ஆ!இதழ்கள். நான் எங்க தொங்க போட்டேன். அது ஏற்கனவே தொங்கிட்டிருந்தது தானே :)

முரளிகண்ணன் said...

:-)))

ஸ்ரீமதி said...

:)))))பதிவு சூப்பர் :))

அனிமேஷன் தெரியல அண்ணா.. :((

//விசாரிச்சேன்னு சொல்லுங்க :)))//

இதுக்கொரு பெரிய ரிப்பீட்டு... :)

நான் ஆதவன் said...

வாங்க முரளிகண்ணன். நன்றி
------------------------------------------
ரீப்பீட்டுக்கு நன்றி ஸ்ரீமதி :))

Bleachingpowder said...

//இன்று சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்//

என்ன தல, நான் தான் சாருவை படிச்சதில் இருந்து இப்படி ஆயிட்டேன்னா, நீங்களுமா :))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுல பாருங்க, இன்னும்கூட நூஊஊட்பமா நீங்க யோசிச்சிருக்கலாம்.

சரவணபவன்
முடிந்தது

எதுக்கு சரவணபவன்...?

முடிந்தது

அவ்வளவுதான். இப்ப பாருங்க, வேலை நேரம் முடிஞ்சுது, பார்வை நேரம் முடிஞ்சுது, டாஸ்மாக் நேரம் முடிஞ்சுதுன்னு... எவ்வளவு பொருள் கொடுத்துக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :

சரவணபவன்

அவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.

சென்ஷி said...

//சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை//

எலேய்.. ஒழுங்கா காற்புள்ளி, அரைப்புள்ளி வச்சி தொலைங்கய்யா.. அர்த்தமே தப்பாகுது.. நாங்கள்லாம் மீராவை மாத்திரம் சைட் அடிக்குற சாதி

சென்ஷி said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :

சரவணபவன்

அவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.//

நான் இன்னும் நுட்பமா யோசிச்சு ஒண்ணுமே எழுதாம விட்டிருந்தா எவ்ளோ பேரு பொழச்சுருப்பாங்கன்னு சொன்னத ஆதவன் டைப் அடிக்கலை..

சென்ஷி said...

//Blogger ஆயில்யன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

பயபுள்ள இணைய பக்கமே வராம இப்படி ஃபீலிங்க்ஸ் வுட்டுக்கிட்டு திரியிதா....?!

விசாரிச்சேன்னு சொல்லுங்க :)))//

நன்றி தலைவா.. கனிவான விசாரித்தல்களுக்கு

சென்ஷி said...

// கோபிநாத் said...

சென்ஷிக்கு
முடிந்தது ;))


எது!!!!????????//

தேவைதான் டா எனக்கு

சென்ஷி said...

மீ த 25 :)

ஸ்ரீமதி said...

சென்ஷி அண்ணா ஹவ் ஆர் யூ??

Bhuvanesh said...

போங்க சார்.. உங்களுக்கு கவிதையே எழுத தெரியல..
//சரவணபவன்
முடிந்தது//

இது ஏதோ தினகரன் தலைப்பு செய்து மாதிரி இருக்கு.. உங்க கவிதை இப்படி செய்தியை தெளிவா சொன்னா நுண்ணிய வாசகன் எப்படி ஆராய்ய முடியும்? அவர்களை நீங்கள் ஏமாத்தலாமா??

சரவணபவன்

இது எப்படி இருக்கு ? சரவணபவன் முடிந்ததா? அங்க இட்லி இருக்கா? முடுஞ்சுதா? கோர்ட் கேஸ் முடுஞ்சுதான்னு எல்லோரும் ஆராய்ச்சி பண்ணுவாங்க..
நீங்க இன்னும் பெயர் வைக்காத உங்க விருதை மிஸ் பண்ணிடீங்கலே ?

Bhuvanesh said...

//இன்னும் நூஊஊட்பமா வேணும்னா, இப்படி வச்சுக்கலாம் :

சரவணபவன்

அவ்வளவுதான். சரவணபவன் ஹோட்டலா, ஆளோட பேரா, ஆண்டவனோட பேரா, ஏன் பவன், அங்க என்ன ஆச்சு, விலையெல்லாம் இறக்கிட்டாங்களா... இப்படி எவ்வளவு மேட்டர் இருக்கு.//

அய்யய்யோ என்ன மாதிரியே இவரும் யோசிச்சிருகார்..

இளைய பல்லவன் said...

அய்யா ஆதவன் அவர்களே

சரவண பவன்
முடிந்தது

என்பதில் எந்த ஒரு கவிதைத் தனமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதற்குப் பதிலாக

சரவ...ன்
முடிந்தது

என்று எழுதும் போது எஃபெக்ட் தூக்குகிறது அல்லவா? சற்று சிந்திப்பீரா?

நான் ஆதவன் said...

//Bleachingpowder said...

என்ன தல, நான் தான் சாருவை படிச்சதில் இருந்து இப்படி ஆயிட்டேன்னா, நீங்களுமா :))//

சாருவை படிச்சேன்ங்கறீங்க ஆனா தொடையும், இடையும் இலக்கியத்துல முக்கிய பங்குன்னு உங்களுக்கு தெரியலயே :))
-------------------------------------------
//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதுல பாருங்க, இன்னும்கூட நூஊஊட்பமா நீங்க யோசிச்சிருக்கலாம்.

சரவணபவன்
முடிந்தது

எதுக்கு சரவணபவன்...?

முடிந்தது

அவ்வளவுதான். இப்ப பாருங்க, வேலை நேரம் முடிஞ்சுது, பார்வை நேரம் முடிஞ்சுது, டாஸ்மாக் நேரம் முடிஞ்சுதுன்னு... எவ்வளவு பொருள் கொடுத்துக்கலாம்.//

அண்ணே பேசாம உங்கள கவிமட தலைவராக்கிறலாம்ன்னு இருக்கோம். உங்களுக்கு சம்மதமா?

நான் ஆதவன் said...

// சென்ஷி said...

எலேய்.. ஒழுங்கா காற்புள்ளி, அரைப்புள்ளி வச்சி தொலைங்கய்யா.. அர்த்தமே தப்பாகுது.. நாங்கள்லாம் மீராவை மாத்திரம் சைட் அடிக்குற சாதி//

சம்பந்தபட்டவருக்கு தான் இதுல இருக்குற உள்குத்து புரிஞ்சிருக்கு :)))

//நான் இன்னும் நுட்பமா யோசிச்சு ஒண்ணுமே எழுதாம விட்டிருந்தா எவ்ளோ பேரு பொழச்சுருப்பாங்கன்னு சொன்னத ஆதவன் டைப் அடிக்கலை..//

மறந்துட்டேன் தலீவரே

//தேவைதான் டா எனக்கு//

ஹா..ஹா..அண்ணாச்சிய அடுத்த தடவை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்

// சென்ஷி said...

மீ த 25 :)//

நன்றி தலீவரே

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

சென்ஷி அண்ணா ஹவ் ஆர் யூ??//

இதுக்கு அவரோட சாட் பண்ணி விசாரிச்சிருக்கலாம் ஸ்ரீமதி. பாரு கண்டுக்காம போய்ட்டாரு
-----------------------------------------------------
// Bhuvanesh said...

அய்யய்யோ என்ன மாதிரியே இவரும் யோசிச்சிருகார்.//

அண்ணே எப்படின்னே இப்படியெல்லாம். அவர மாதிரியே நீங்க யோசிச்சிருகீங்க????(இப்படி நாங்க கேக்கனும்:))
-----------------------------------------------
//இளைய பல்லவன் said...

அய்யா ஆதவன் அவர்களே

சரவண பவன்
முடிந்தது

என்பதில் எந்த ஒரு கவிதைத் தனமும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதற்குப் பதிலாக

சரவ...ன்
முடிந்தது

என்று எழுதும் போது எஃபெக்ட் தூக்குகிறது அல்லவா? சற்று சிந்திப்பீரா?//

அவ்வ்வ்வ்வ் என்னடா இன்னும் வித்தியாசமா ஒரு பின்னூட்டமும் வரலையேன்னு நினைச்சேன். அண்ணே இனிமே சிந்திக்கிறேண்ணே

ஊர் சுற்றி said...

ஐயோ..... ஐயோ....
உங்களுடைய இந்த விசாரணைகளும் விளக்கங்களும் என்னை ஒரு நூட்ப வாசகனா மாத்திடும் போல இருக்கே!!! :)))

நான் ஆதவன் said...

//ஊர் சுற்றி said...

ஐயோ..... ஐயோ....
உங்களுடைய இந்த விசாரணைகளும் விளக்கங்களும் என்னை ஒரு நூட்ப வாசகனா மாத்திடும் போல இருக்கே!!! :)))//

அப்பாடா இந்த பதிவை படிச்சுட்டு ஒரு நூட்ப வாசகன் கிடைச்சுட்டான். நன்றி ஊர்சுற்றி

வால்பையன் said...

அத தான் நான் ஏற்கனவே பின்னூட்டத்தில் போட்டுடேனே!

Related Posts with Thumbnails