அசிங்கப்பட்டான்டா சேட்டன்!

நேற்று காலை வழக்கம் போல எழுந்து குளித்து விட்டு ரூமிற்குள் நுழையும் போது வழக்கம் போல ஏசியா நெட் நீயூஸ் சேனல் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த சேனலுக்கு ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும். அன்றைய பொழுது முழுதும் "சர்ச்சை" என்ற பெயரில் ஒரு நாள் முழுதும் ஏதாவது ஓட்டி விடுவார்கள். நம்ம மலையாள நண்பர்களும் அதையும் கேட்டு சீரியஸாவார்கள்.

ஒருமுறை "முல்லை பெரியாறு" பிரச்சனையைப் பற்றி சர்ச்சை என்ற பெயரில் சேனல் ஏதேதோ உளறி கொண்டிருக்க, நமக்கு அதையெல்லாம் கேட்டு வேறு எதுவும் பேசாமல் அடக்கிவாசிக்கவேண்டியிருந்தது. நம்ம ரூமில் உள்ள சேட்டன் மார்கள் அப்பொழுது தான் அவர்கள் தரப்பு நியாத்தை நம்மிடம் சொல்வார்கள். யோவ் நான் எதுனா கேட்டேனா? பேசாம இருங்கைய்யான்னா கேட்க மாட்டானுங்க.

என்னிடம் சொல்லி எந்த பிரச்சனையும் தீரப்போவதில்லை என்று நன்றாக தெரிந்தும் என்னவோ நான் தான் தமிழக முதல்வர் மாதிரி என்னிடம் சொல்லவதுண்டு.

நேற்று இடுக்கி அருகில் உள்ள நிறைய சிறிய மருத்துவமனையில் உபயோகப்படுத்திய "சிரெஞ்சு"களை தமிழகத்திலிருந்து வரும் ஆட்கள் வாங்கி செல்வதாக ஒரு சிறிய "சர்ச்சை" ஏசியாநெட் நியூஸ் சேனலில் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் அது. ஒருதடவை உபயோகப்படுத்திய ஊசிகளை திரும்ப உபயோகிக்ககூடாதென்று சட்டம் இருப்பதாகவும், மேலும் உபயோகப்படுத்திய சிரெஞ்சுகளை முறைப்படி களைய வேண்டுமென்றும் சிறிய விளக்கமும் அதே சேனலில் வழியே தெரிவிக்கப்பட்டது.

மிகவும் சோகமான விஷயம் என்பதாலும், மேலும் அது தமிழ்நாட்டுக்கு அனுப்படுவதாலும் என் முகத்தில் கவலை ரேகை தெரியதொடங்கியது. என்ன கொடுமை இது. அங்கிருக்கும் பஞ்சாயத்து யூனியன் இதெயெல்லாம் கவனிப்பதில்லையா? என்று சேட்டனிடம் கவலையோடு வருத்தத்தை தெரிவித்தேன்.

டி.வியில் ஊசியை அள்ளி போகும் ஒரு தமிழ் ஆள் பேட்டி ஒன்றையும் வெளியிட்டார்கள். அவர் "கடந்த பல வருடங்களாக இதே தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடம் இருந்து ஒரு கும்பல் வாங்கி செல்வதாகவும்" மிகத் தெளிவான தமிழில் பேட்டி கொடுத்திருந்தார்.

ரூமில் ஒரு சேட்டன் "தம்பி இதையெல்லாம் எடுத்து அவர் எந்து செய்யும்?. தம்பி நாட்டுக்கு போகும் போல் கொரஞ்சு சூசிச்சு போகனும்" கக்கே பொக்கே கக்கே பொக்கேன்னு வழக்கம் போல சிரிப்பு.

அடங்கொக்க மக்கா இதுக்கெல்லாமா நம்மள கிண்டல் ஏத்துவானுங்க, சரி விடு நம்ம இத விட பயங்கரமா நம்ம கிண்டல் ஏத்தி இரண்டு நாள் நம்மகிட்ட பேசாம கூட இருந்திருக்கானுங்க. இதெல்லாம் சகஜம்.

அப்படி நினைச்சுகிட்டே ஆகா நம்ம மக்கள் இந்த ஊசியை மறுபடி உபயோகிச்சா என்னென்ன நோய் வருமோன்னு கவலையோட நியூஸை பார்த்துகிட்டு வந்தேன்.

நியூஸ்ல கடைசியா "தமிழ்நாட்டுல இதை கடத்தி கொண்டு போய் கொஞ்சம் சுத்தப்படுத்தி திரும்பவும் கேரளாவுக்கே விற்பதாக" சேனலில் சொல்ல, ங்கொக்கா மக்கா சின்ன கேப்பு கிடைச்சா லாரியே ஓட்டலாம் இத விடுவேனா.... நான் சேட்டன் பக்கம் திரும்பினேன் வழக்கம் போல....

நான் சிரிக்காமஎன்ன சொல்லி வெறுப்பேத்தியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு காலையில இந்த பதிவ போடுற வரைக்கும் சேட்டன் என்கிட்ட சரியா பேசல. விடு கழுதைய....

நிலைமை ரொம்ப மோசம் தான். ஆனா இத யார் தடுப்பது? டி.வி வரைக்கும் வந்தும் யாரும் ஏதாவது செஞ்சாங்களானு தெரியல? இது நம்ம தமிழகமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக வேறு சொல்கிறார்கள்.

அப்படியென்றால் அது தமிழ்நாட்டுக்கும் விற்பனை செய்யப்படாமலா இருக்கும்?. இது தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிந்திருக்குமா? இல்லையென்றால் எப்படி, யாரிடம் தெரியப்படுத்துவது?

பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கிறேன். சேட்டன் என்னிடம் பேசாமல் இன்று காலையும் நீயூஸ் சேனல் பார்த்துகொண்டிருந்தார் ....

23 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

சென்ஷி said...

அதிர்ச்சியடைய வைக்கும் விசயம்தான் ஆதவன். ஒரு முறை உபயோகித்த சிரிஞ்சுகளை மற்றுமொரு முறை உபயோகித்தல் பல தொற்று நோய்களூக்கு வழிகாட்டியாக அமைகின்றது. எப்படியும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அதே ஊசி மூலம் கேடு நேரலாம் என்பதை நினைவில் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் கஷ்டம்தான். :-(

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மாநிலம் மாநிலம்ன்னு பிரிக்காம எந்த உயிருன்னாலும் அது தப்பு தான்..
ஆனா அவரு தமிழ்நாட்டை கிண்டல் செய்வதற்கு முன் அதை வாங்கி விற்பதற்கு அவர் ஊருக்காரங்க விற்கறது தப்புன்னு தோணி இருக்கவேண்டாமா..?

சரி நமக்கா வரப்போதுன்னு விற்கிற ஆளுக்கே அது திரும்பி வருவது ..சோகமான படிப்பினை..

கிரி said...

//யோவ் நான் எதுனா கேட்டேனா? பேசாம இருங்கைய்யான்னா கேட்க மாட்டானுங்க//

வலை விரிக்கிறான் வலை விரிக்கிறான் :-))))))

மோனி said...

இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மத்திய அரசே இதை கவனிக்க வேண்டிய விஷயம். நிலைமை விபரீதம் ஆகும் முன்னாள் ஆவன செய்வது அவசியம்.
செய்வார்களா ?

நான் ஆதவன் said...

// சென்ஷி said...

அதிர்ச்சியடைய வைக்கும் விசயம்தான் ஆதவன். ஒரு முறை உபயோகித்த சிரிஞ்சுகளை மற்றுமொரு முறை உபயோகித்தல் பல தொற்று நோய்களூக்கு வழிகாட்டியாக அமைகின்றது. எப்படியும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கும் அதே ஊசி மூலம் கேடு நேரலாம் என்பதை நினைவில் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் கஷ்டம்தான். :-(//

ஆம் சென்ஷி. பணம் என்றால் பிணம் தின்னும் பேய்கள் அவர்கள்

தவநெறிச்செல்வன் said...

மிகவும் கவலையான செய்தி,
சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும், நிச்சயம் சானல்களில் வந்ததால் அதன் பலன் கிடைக்கவாய்ப்புண்டு நம்புவோம்.

நான் ஆதவன் said...

// முத்துலெட்சுமி-கயல்விழி said...

மாநிலம் மாநிலம்ன்னு பிரிக்காம எந்த உயிருன்னாலும் அது தப்பு தான்..//

கரெக்ட்டு தான். நாம நினைக்கிறதுக்கு இருக்கட்டும் அவுங்களும் நினைக்கனுமில்ல..

// ஆனா அவரு தமிழ்நாட்டை கிண்டல் செய்வதற்கு முன் அதை வாங்கி விற்பதற்கு அவர் ஊருக்காரங்க விற்கறது தப்புன்னு தோணி இருக்கவேண்டாமா..?//

அதெல்லாம் தோணுனாலும் நம்மகிட்ட கெத்த விட்டு கொடுக்கமாட்டாரு இவரு

// சரி நமக்கா வரப்போதுன்னு விற்கிற ஆளுக்கே அது திரும்பி வருவது ..சோகமான படிப்பினை..//

அங்க தான் எனக்கு சிரிப்பு வந்திடுச்சு மேடம். விவேக்கின் ஆட்டோகாரன் காமெடி தான் நினைவுக்கு வந்தது(ரைட்ல இண்டிகேட்டர் போடுவோம், லெப்ட்ல கை போடுவோம் ஆனா நேரா போயிடுவோம்)

நான் ஆதவன் said...

// கிரி said...

//யோவ் நான் எதுனா கேட்டேனா? பேசாம இருங்கைய்யான்னா கேட்க மாட்டானுங்க//

வலை விரிக்கிறான் வலை விரிக்கிறான் :-))))))//

கரெக்ட் கிரி..ஆனா நாமளாவது மாட்டுறதாவது கிரி :))

ஸ்ரீமதி said...

படிச்சதும் கஷ்டமா இருந்தது அண்ணா.. :(( தெரியபடுத்தியதற்கு நன்றி.. ஆனால் தடுக்க?? :(((

நான் ஆதவன் said...

//மோனி said...

இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மத்திய அரசே இதை கவனிக்க வேண்டிய விஷயம். நிலைமை விபரீதம் ஆகும் முன்னாள் ஆவன செய்வது அவசியம்.
செய்வார்களா ?//

ஆம் மோனி. எங்கு புகார் செய்வதென்று தெரியவில்லை :((
---------------------------------------------
//தவநெறிச்செல்வன் said...

மிகவும் கவலையான செய்தி,
சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்க வேண்டும், நிச்சயம் சானல்களில் வந்ததால் அதன் பலன் கிடைக்கவாய்ப்புண்டு நம்புவோம்.//

உயிரிழப்பு ஏற்படும் முன் தடுக்க வேண்டும் தவநெறிச்செல்வன்

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

படிச்சதும் கஷ்டமா இருந்தது அண்ணா.. :(( தெரியபடுத்தியதற்கு நன்றி.. ஆனால் தடுக்க?? :(((//

தடுக்க நம்மள மாதிரி ஆளுங்க என்ன செய்ய முடியும் ஸ்ரீமதி. இனிமே ஊசியே போடாம மாத்திரை மட்டும் தான் வாங்கனும் போல :((

ஸ்ரீமதி said...

நான் ஊசியும் போட்டுக்க மாட்டேன்.. மாத்திரையும் சாப்ட மாட்டேன் அண்ணா.. ஆனா மத்தவங்க?? :((

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

நான் ஊசியும் போட்டுக்க மாட்டேன்.. மாத்திரையும் சாப்ட மாட்டேன் அண்ணா.. ஆனா மத்தவங்க?? :((//

இப்படியெல்லாம் அடம் புடிக்க கூடாது ஸ்ரீமதி. ஒழுங்கா அடம் புடிக்காம போட்டுக்கனும்

ஸ்ரீமதி said...

ம்ஹீம் மாட்டேன் எனக்கு பயம் :(((

Bleachingpowder said...

//நியூஸ்ல கடைசியா "தமிழ்நாட்டுல இதை கடத்தி கொண்டு போய் கொஞ்சம் சுத்தப்படுத்தி திரும்பவும் கேரளாவுக்கே விற்பதாக" சேனலில் சொல்ல, ங்கொக்கா மக்கா சின்ன கேப்பு கிடைச்சா லாரியே ஓட்டலாம் இத விடுவேனா.... நான் சேட்டன் பக்கம் திரும்பினேன் வழக்கம் போல....//

ஹாஹாஹா...சூப்பர் தல, இது முன்னாடி நான் ஆணி புடுங்குன இடத்திலையும் முக்காவாசி சேட்டனுங்க தான். சும்மா இருக்காம வாய கொடுத்து அடிக்கடி பல்ப் வாங்குவாங்க :)

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

ம்ஹீம் மாட்டேன் எனக்கு பயம் :(((//

கஷ்டம் தான். தங்காச்சி நூறு வருஷம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் :)))
--------------------------------------------
// Bleachingpowder said...

ஹாஹாஹா...சூப்பர் தல, இது முன்னாடி நான் ஆணி புடுங்குன இடத்திலையும் முக்காவாசி சேட்டனுங்க தான். சும்மா இருக்காம வாய கொடுத்து அடிக்கடி பல்ப் வாங்குவாங்க :)//

அப்படி பல்ப் நம்ம கொடுக்கல....நம்ம பொழப்பு இங்க கஷ்டம் தல

Anonymous said...

Namma munnadi syringe "fresh" a coverla irundhu yedutha kooda inime
doubt varum...Apparam, Nalla velai vivek style la "chettanda Chettaigal" title vaika pona variakum Santhosam :)
.......Krish

கோபிநாத் said...

\\நான் ஆதவன் said...
// ஸ்ரீமதி said...

நான் ஊசியும் போட்டுக்க மாட்டேன்.. மாத்திரையும் சாப்ட மாட்டேன் அண்ணா.. ஆனா மத்தவங்க?? :((//

இப்படியெல்லாம் அடம் புடிக்க கூடாது ஸ்ரீமதி. ஒழுங்கா அடம் புடிக்காம போட்டுக்கனும்

26.3.09


ஸ்ரீமதி said...
ம்ஹீம் மாட்டேன் எனக்கு பயம் :(((\\\\


ஸ்ரீமதி இன்னிக்கு நீ ஸ்கூலுக்கு போகலியா!!?? ;)

கோபிநாத் said...

நாமக்கு (உனக்கும் தான்) இந்த சேட்டன்களின் கொசுதொல்லை எல்லாம் பழகிடுச்சி.

தமிழ்நெஞ்சம் said...

O God

//
அப்படியென்றால் அது தமிழ்நாட்டுக்கும் விற்பனை செய்யப்படாமலா இருக்கும்?. இது தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிந்திருக்குமா? இல்லையென்றால் எப்படி, யாரிடம் தெரியப்படுத்துவது?

நான் ஆதவன் said...

@krish

வாங்க கிரிஷ். கருத்துக்கு நன்றி
------------------------------------------------
@கோபி

தலீவரே ஸ்கூலு இன்னைக்கு லீவு :)
------------------------------------------------
@தமிழ் நெஞ்சம்

வாங்க தமிழ் நெஞ்சம். இப்படியே நீடிச்சா நேரா கடவுள்கிட்டயே கேட்டுறலாம் :)

துளசி கோபால் said...

முதல்லே பழைய சிரிஞ்சிகளை விக்கறவனுக்கு ஆப்பு வைக்கணுமா இல்லையா?

காசுக்கு ஆசைப்பட்டு வித்துட்டு.......
இப்ப யானை தன் தலையிலே மண்ணை வாரிப்போட்டுக்கிச்சு.

(oops....பின்னூட்டத்துலேகூட யானை உதாரணம்தான் வருது)

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...

முதல்லே பழைய சிரிஞ்சிகளை விக்கறவனுக்கு ஆப்பு வைக்கணுமா இல்லையா?

காசுக்கு ஆசைப்பட்டு வித்துட்டு.......
இப்ப யானை தன் தலையிலே மண்ணை வாரிப்போட்டுக்கிச்சு.

(oops....பின்னூட்டத்துலேகூட யானை உதாரணம்தான் வருது)///

வாங்க டீச்சர். யானையை உங்களையும் பிரிக்க முடியாது போல :))

Related Posts with Thumbnails