ஆஸ்கார் கிடைக்கல..ஆனா பட்டாம்பூச்சி கிடைச்சுது

மனசுக்குள்ள கிட்டதட்ட பட்டாம்பூச்சியே பறக்குற மாதிரி தான் இருக்கு. ஆமாங்க சும்மா இல்ல போன வாரம் ரெட்டை சந்தோஷம். ஒன்னு நம்ம அஞ்சா நெஞ்சன்(நல்லா படிங்கப்பா..) கைப்புள்ள எனக்கு "பட்டாம்பூச்சி" விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.அவர் எனக்கு பரிச்சியமானது நான் "Butterfly effect" பத்தி ஒரு பதிவ போட்டபோதுன்னு நினைக்கிறேன். அதுனாலவோ என்னவோ எனக்கு இந்த "பட்டாம்பூச்சி" விருதை கொடுத்திருக்கிறார் போல. நான் ஆஸ்காரை பத்தி எழுதிய இந்த பதிவை முதல்ல படிச்சிருந்தா எனக்கு ஆஸ்காரே கொடுத்து கௌரவபடுத்தியிருப்பார். ஆனா விதி விளையாடிருச்சு :(

ஓகே சந்தோஷமா பேசிகிட்டிருக்கும் போது எதுக்கு என் கஷ்டம். இரண்டாவது சந்தோஷம் என்னான்னா..... போன வாரம் "Live Traffic Feed"ல எங்கிருந்தெல்லாம் வந்திருக்காங்கன்னு பார்க்கும் போது யூத் விகடன்ல இருந்து ஒரு புண்ணியவான் வந்திருக்காரு. லின்ங் புடிச்சு போய் பார்த்தா குட் ப்ளாக்கர்ஸ்ல என்னோட "நாங்க (தான்) கடவுள்" வந்திருக்கு.

நீங்க நினைக்கிற மாதிரி "நம்மளையும் பெரிய ஆளுங்க கவனிக்க ஆரம்பிச்சுடாங்கன்னு" பொறுப்பெல்லாம் வரல....எனவே மொக்கைகள் தொடரும் :)இத யாருக்கு கொடுக்கலாம்ன்னு யோசிச்சா உடனே ஞாபகம் வந்தது நம்ம "பல்லவன்". இவர் சம்பந்தபட்ட துறை,வரலாறு, கவிதை மொக்கைகள் (அய்யய்யோ கவிதை பக்கத்தில கமா(,) வரும்.. போட மறந்திட்டேன்) என கலந்துகட்டி அடிக்கிறவர்.


அடுத்து நம்ம அனந்த் "ஆ!இதழ்கள்". போட்டாகிராப்பர் . இன்னமும் சினிமாவுல காலேஜ் போற மாதிரி யூத் மாதிரி இருப்பேன்ன்னு அவரே சொல்லுவாரு. அவ்வளவு நகைச்சுவையாளர் அவரு.

அடுத்து எல்லாருக்கும் போய் சலிக்காம பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துற "ஜமால்" அண்ணாத்தே.

நீங்க செய்ய வேண்டியது....

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

6. நான் "கைப்புள்ள" பதிவுல இருந்து இந்த ஐஞ்சு பாயிண்டையும் காப்பி & பேஸ்ட் செஞ்ச மாதிரி என் பதிவுல இருந்து இந்த பாயிண்ட காப்பி பண்ணாம டைப் செய்யனும் . ஆமா சொல்லிபுட்டேன்.......

9 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் டியர்

வாழ்த்து பெற்ற மற்றவருக்கும் வாழ்த்துகள்

ஆ! இதழ்கள் said...

நன்றி ஆதவன். இதைப் பற்றி ஒரு பதிவு போடுறேன்.

நான் photographer by profession இல்லை, photography is my hobby என்பதை உங்களுக்கு தெரிந்தாலும் மற்றவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

அப்புறம் மேலும் மொக்கை போடுறதுக்கு வாழ்த்துக்கள் தந்ததற்கு நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் நண்பா..

கைப்புள்ள said...

//நான் ஆஸ்காரை பத்தி எழுதிய இந்த பதிவை முதல்ல படிச்சிருந்தா எனக்கு ஆஸ்காரே கொடுத்து கௌரவபடுத்தியிருப்பார். ஆனா விதி விளையாடிருச்சு :(
//

இந்த மாதிரி எழுதுறீங்கல்ல அதுக்குத் தான் சாமி உங்களுக்கு அந்த விருது குடுத்துருக்கு.
:)

கைப்புள்ள said...

//"பட்டாபூச்சி" விருது//


முதல்ல பூச்சிக்கு முன்னாடி ஒரு 'ம்' போடுங்கப்பா. பட்டாபட்டின்னு படிச்சிட்டேன்.
:)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

சே... ஆஸ்கார் கிடைக்கலன்னா என்ன.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் புகழ் மறையுமான்னு கவலைகொள்ளவேண்டாம்.

இளைய பல்லவன் said...

அண்ணே, நீங்க கவிதை மொக்கைன்னாலும் கவிதை கவிதைதான்.

கவிதை மொக்கையாகலாம். ஆனால் மொக்கை கவிதையாகுமா?

உங்களுடைய இந்த விருதை மனமுவந்து ஏற்றுக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வரலாற்று நிகழ்வை வாழ்த்தி வரவேற்று ஒரு சிறப்புக் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்:)))

நான் ஆதவன் said...

வாங்க ஜமால் அண்ணாத்த..நன்றி
--------------------------------------
வாங்க ஆ!இதழ்கள். அது உங்க ஹாபின்னு போட மறந்துட்டேன். ரொம்ப நன்றி
--------------------------------------
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
--------------------------------------
கைப்புள்ள அண்ணே பட்டாபட்டி விருத மாத்திட்டேன். இன்னொரு தபா நன்றி :)
--------------------------------------
வாங்க முத்துலட்சுமி மேடம். உங்களை மாதிரி பெரிய ஆளுங்க கொடுக்குற தைரியத்தில நான் இருக்கேன். கண்டிப்பா ஆஸ்கார் கிடைக்கும்ன்னு.........
--------------------------------------
ஆஹா பல்லவன். மொக்கை கவிதையாக முடியாது தான் ஆனா இப்படி பின்னூட்டமும் மொக்கையாக முடியும்ன்னு இப்ப தான் தெரியுது :)

என்னது மகிழ்ச்சியோடு இன்னொரு கவிதை தொகுப்பா???? அது சரி துன்பம் வரும் போது சிரின்னு சொன்னது இதுக்கு தானா....

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ராசா ;)

உன்னிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

Related Posts with Thumbnails