துபாயிலயும் பெரியார் வேண்டும்!

"சொல்லுங்க ஆதவன், என்ன செய்ய போறீங்க?"

"சார் ப்ரொஜெக்ட் தான் நிறைய இருக்கே."

"அதெல்லாம் நாம ஆறு மாசத்துக்கு முன்னால சைன் பண்ணியது. இன்னும் மூணு மாசத்துக்கு அந்த ப்ரொஜெக்ட் ஓடும்..அது இருக்கட்டும் நான் கேட்டது என்ன? நீங்க சம்பந்தமே இல்லாம பேசுறீங்க"

என்னது சம்பந்தம் இல்லையா...அடகொக்கா மக்கா. டேய் மேனேஜர் மண்டையா போன வருஷம் இதே டேபிள், இதே சேர் உட்கார்ந்து நாம இரண்டு பேரு பேசுனது மறந்துட்டியா. இல்ல அத ஞாபகம் வச்சுகிட்டு இப்படி கூப்பிட்டு வச்சு கலாக்கிறயா....

போன வருஷம் பிப்ரவரி மாசம். இதே மேனேஜர் முன்னாடி உட்கார்ந்துகிட்டுயிருக்கேன். அவர் கொஞ்சம் சாப்டா கேக்குறாரு.

"என்ன ஆதவன் விஷயம் ஏதாவது ப்ரொஜெக்ட்ல பிரச்சனையா?"

"இல்ல சார் பர்சனலா கொஞ்சம் பேசனும்"

"சொல்லுங்க என்ன விஷயம்"

"சார் எனக்கு இன்கிரிமெண்ட் பத்தல" பட்டென்று போட்டு உடைத்தேன்.

கொஞ்சம் அதிர்ச்சியானார் பின்பு "என்ன ஆதவன் இத பேசுறதுக்கு முன்னால உங்க டிசைனர் கிட்ட பேசுனீங்களா? அவர் என்ன சொன்னார்"

"அவர்கிட்ட நான் ஏன் சார் பேசனும்."


"உங்க அப்ரைசல் அவுங்க குடுக்குற ரிப்போர்ட்ட பேஸ் பண்ணியும் இருக்கும்"

"இருக்கட்டும் சார். ஆனா எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. என்னோட வேலை மேல எதாவது ப்ளாக் மார்க் இருந்தா சொல்லுங்க ஏத்துக்கிறேன்."

சிரிக்கிறார்..."அப்படி எதுவும் இல்ல....ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் போட்டுயிருக்கோம். உங்களுக்கும் 30% போட்டிருக்கோம் ஆதவன். செக் பண்ணி பாருங்க"

"இல்ல சார் எனக்கு இதுல உடன் பாடில்ல. முடியலைன்னா சொல்லுங்க நான் ரிஸைன் பண்ணிக்கிறேன். வீட்ல வேற அம்மாவும் அப்பாவும் அங்கேயே செட்லாக கூப்பிட்டுயிருக்காங்க" கையில ஆறு ப்ராஜெக்ட் இருக்குற தைரியம். வேற எவனா வருவதற்கே இரண்டு மாசமாவது ஆகும். கண்டிப்பா கொடுப்பானுங்கன்ற தைரியம்.

"ஓகே ஆதவன். நீங்க சீட்டுக்கு போங்க. நான் எம்.டி கிட்ட பேசிட்டு சொல்றேன்"

விசிலடித்துகொண்டே சீட்டிற்கு வந்தேன். பக்கத்து சீட்டிலிருக்கும் மலையாளி "எந்தா தம்பி இத்தற சந்தோஷம்? மேனேஜர் என்னா சொல்லி" இவன் ஒருத்தன் தமிழ் பேசுறதா நினைச்சுகிட்டு மலையாளமும் இல்லாம தமிழும் இல்லாம ஒரு புது மொழில பேசுறவன்.

"சேட்டா உங்களுக்கு எங்க பெரியார தெரியுமா?"

"ஆரு தம்பி"

"மூடநம்பிக்கைன்னா என்னான்னு தெரியுமா சேட்டா. அதை எல்லாம் எங்க மக்கள் கிட்ட தப்புன்னு எடுத்து சொன்னவரு" ங்கொய்யால இவன்கிட்ட இத சொல்லி புரியவைக்கிறதுகுள்ள தாவு தீர்ந்து போச்சு.

"ஆ அறியும்....கொரச்சு கேட்டுட்டுண்டு"

"அவர் மாதிரி ஒரு ஆள் இந்த துபாய்க்கு வேணும் சேட்டா" என்றேன்

"அது எந்தா தம்பி அங்கன பறஞ்சு"

"அது வந்து சேட்டா. நான் ரிஸைன் பண்ணப்போறேன் சொன்னேன். அதுக்கு நம்ம மேனேஜர் இல்ல வேண்டாம் ஆதவன் நீங்க வந்த பிறகு தான் நல்ல நல்ல ப்ராஜெக்ட் எல்லாம் கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னால இப்படியெல்லாம் கிடைக்கல நம்ம அரபாப் கூட போன வாரம் இதே தான் சொன்னாரு. நீங்க போனா பழையபடி கம்பெனி ஆகிடும் அதுனால போகாதீங்க அப்படின்னாரு. இப்ப பறையும் சேட்டா இந்த மாதிரி ஆளுங்களுக்கு எங்க பெரியார் தான் கரெக்டு" என்று பயங்கரமாக சிரித்தேன். அவன் சிரிக்கவில்லை. எனக்கு அது தான் வேணும். அடிக்கடி அவனை கலாய்ப்பதில் அப்படி சுகம் எனக்கு.

எனக்கு 40% இன்கிரிமெண்ட் கிடைத்தது. ஆனா.....அது போன வருஷம். நான் இப்ப கேட்டுட்டுயிருக்குறது இந்த வருஷம்.................

இப்ப எனக்கு விசா முடியுது. என்னை கூப்பிட்டு டேய் இருக்குறயா இல்ல போறயான்னு கேக்குறார் என்னோட மேனேஜர். அதுக்கு தான் முதல்ல பேசுன டயலாக். திரும்பவும் போவோம் அந்த சீனுக்கு...
"சொல்லுங்க ஆதவன், என்ன செய்ய போறீங்க?"

"சார் ப்ரொஜெக்ட் தான் நிறைய இருக்கே."


"அதெல்லாம் நாம ஆறு மாசத்துக்கு முன்னால சைன் பண்ணியது. இன்னும் மூணு மாசத்துக்கு அந்த ப்ரொஜெக்ட் ஓடும்..அது இருக்கட்டும் நான் கேட்டது என்ன? நீங்க சம்பந்தமே இல்லாம பேசுறீங்க"


"இல்ல சார் இந்த தடவை எக்ஸ்டண்ட் பண்ணிக்கிறேன்"


"இல்ல ஆதவன் போன வருஷமே உங்க அப்பா அம்மாகிட்ட போனும்ன்னு சொன்னீங்க"

"இல்ல சார் அவுங்கலால இப்ப பிரச்சனை ஏதும் இல்ல சார்..ஹி...ஹி..ஹி" வழிந்தேன்.


ஒரு பார்வை பார்த்துவிட்டு "இந்த தடவை இன்கிரிமெண்ட் எல்லாம் கிடையாது ஆதவன். இஷ்டம்னா சொல்லுங்க விசா அடிக்கலாம். இல்லைன்னா உங்க விருப்பம்"

"யெஸ் சார். நோ ப்ராப்ளம்..ஹி...ஹி...ஹி" மறுபடியும் இளித்தேன். இருடி இரு நிலைம மாறாமலா போகும் அப்ப இருக்குது உனக்கு....

எரிச்சலுடன் வெளியே வந்தேன். அதே சேட்டன் கவலையோடு நான் வருவதை பார்த்து என்னவென்று கேட்டார். இன்கிரிமெண்ட் இல்லையென்று சொன்னேன்.

அவர் ஆறுதல் கூறி உனக்கு முன்னாடியே நான் போயிட்டு வந்துட்டேன். எனக்கும் இல்லைன்னு சொன்னார்.

கொஞ்ச நேரம் கழித்து "தம்பி ஓர்மம் உண்டோ...நீ பறஞ்ச பெரியார பத்தி" என்று பயங்கரமாக சிரித்தார்.

அடங்கொக்கா மக்கா...நாதாரி நான் ஒரு வருஷம் முன்னாடி சொன்னத ஞாபகம் வச்சிட்டு இப்படி டைமிங்கல எடுத்துவுடுது. இதுல பஞ்ச் டயலாக் வேற

"தம்பி வித்தில (சுவர்ல) அடிச்ச பால் திருச்சு வரும் தம்பி ஹா...ஹா...ஹா"

ங்கொய்யால இருடி இரு அடுத்த தடவை அதே சுவர்ல சாணி அடிக்கிறேன்......

33 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Seenu said...

There is Superb timing in ur post.....Kalakkal....

ஆ! இதழ்கள் said...

40% அதுவே ரெண்டு வருஷத்துக்கு தாங்குமே.

மேனேஜர சொல்லை குத்தமில்ல M.D அவன்ட இதவே தான் சொல்லிருப்பான். இப்ப அவன் மத்தவிங்யலுக்கு சொல்றான்.

அப்ப இன்னும் 3 வருஷத்துக்கு குப்பைத்தொட்டி நிரம்பி வழியப்போகுது.

:)

புல்லட் பாண்டி said...

சொல்லியிருக்கிற விதம்... அந்த ப்ளாஷ்பாக் போய் வாற ட்விஸ்ட்டு

சூப்பர்...

வாழ்த்துக்கள்... :)

கார்க்கி said...

கலக்கறீங்க சகா

கைப்புள்ள said...

ஆதவன்,
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html

Bleachingpowder said...

என்ன தல டேமேஜர் அப்படி சொன்ன உடனே, முள்ளூம் மலரும் ரஜினி மாதிரி, ரெண்டு கையும், ரெண்டு காலையும் வெட்டி போட்டா கூட இந்த ஆதவன் பொழச்சுப்பான் சார், கெட்ட பையன் சார் இவன்னு ஒரு பில்டப் கொடுத்துட்டு வருவீங்களா அத விட்டுட்டு.

இங்கேயும் சேம் ப்ளட் தான் தல, ஆனாலும் கைப்புள்ள மாதிரி ஜெத்தை மெயிண்டேன் பண்ணிட்டு இருக்கேன்...அவ்வ்வ்வ்வ்வ்

கோபிநாத் said...

\\இல்ல சார் இந்த தடவை எக்ஸ்டண்ட் பண்ணிக்கிறேன்" \\

அப்போ சுபம் போட்டாச்சா!!??? ;)

கைப்புள்ள said...

பதிவை இப்போ தான் படிச்சேன். செம சூப்பரா எழுதிருக்கீங்க. பெரியாரை இந்த மேட்டர்ல இழுத்தது உங்க திறமைக்கு ஒரு சான்று.
:)

வித்யா said...

நீங்க புடுங்கற ஆணிக்கு அதுவே அதிகம்னு நினைச்சிட்டாரோ என்னமோ:)

குசும்பன் said...

ஆதவன் செம கலக்கலாக இருக்கு, கோபியோட சேர்ந்தும் இதுபோல் எப்படி உங்களால எழுத முடியுது?

Mr.Maanga Madayan said...

பிளாஷ் பேக்னா இப்படி தான் இருக்கணும். அதை விட்டுட்டு எப்போ பாரு இருபத்தி அஞ்சு வருசத்துக்கு கொண்டு போய்.. நேர்மையான அப்பாவை கொல்றது இல்லாம நியாயமான ஒன்னு. நல்லா இருக்கு

நான் ஆதவன் said...

//Seenu said...

There is Superb timing in ur post.....Kalakkal....//

நன்றி சீனு :)
-------------------------------------------------------
// ஆ! இதழ்கள் said...

40% அதுவே ரெண்டு வருஷத்துக்கு தாங்குமே.//

அவ்வ்வ் அப்ப நீங்க மேனேஜ்மெண்ட் ஆளா....

//
அப்ப இன்னும் 3 வருஷத்துக்கு குப்பைத்தொட்டி நிரம்பி வழியப்போகுது.

:)//

வேற வழி??? உங்க தலையெழுத்து நான் எழுதறயெல்லாம் படிக்கனும்ன்னு இருந்தா யார் மாத்த முடியும் :)

நான் ஆதவன் said...

//Blogger புல்லட் பாண்டி said...

சொல்லியிருக்கிற விதம்... அந்த ப்ளாஷ்பாக் போய் வாற ட்விஸ்ட்டு

சூப்பர்...

வாழ்த்துக்கள்... :)//

ரொம்ப நன்றி புல்லட் பாண்டி (ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க)
---------------------------------------------------------
//கார்க்கி said...

கலக்கறீங்க சகா//

நன்றி சகா.

நான் ஆதவன் said...

// கைப்புள்ள said...

ஆதவன்,
உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கேன். ஏத்துக்கும் படி கேட்டுக்கறேன். நன்றி.

http://kaipullai.blogspot.com/2009/03/blog-post_18.html//

ரொம்ப நன்றி கைப்புள்ள. "ஏத்துக்கடா ஆதவன்"னு கட்டளையிடுங்கள். காத்திருக்கின்றேன்

நான் ஆதவன் said...

// Bleachingpowder said...

என்ன தல டேமேஜர் அப்படி சொன்ன உடனே, முள்ளூம் மலரும் ரஜினி மாதிரி, ரெண்டு கையும், ரெண்டு காலையும் வெட்டி போட்டா கூட இந்த ஆதவன் பொழச்சுப்பான் சார், கெட்ட பையன் சார் இவன்னு ஒரு பில்டப் கொடுத்துட்டு வருவீங்களா அத விட்டுட்டு.
//

நான் மூணு வேளை கஞ்சி குடுச்சிட்டுருக்கறது புடிக்கலையா தல...ஏன் இந்த கொலவெறி????

//இங்கேயும் சேம் ப்ளட் தான் தல, ஆனாலும் கைப்புள்ள மாதிரி ஜெத்தை மெயிண்டேன் பண்ணிட்டு இருக்கேன்...அவ்வ்வ்வ்வ்வ்//

ஓஓ பல பேருக்கு இந்த நிலைமை தானா....கொஞ்சம் ஆறுதலா இருக்கு தல

நான் ஆதவன் said...

// கோபிநாத் said...

\\இல்ல சார் இந்த தடவை எக்ஸ்டண்ட் பண்ணிக்கிறேன்" \\

அப்போ சுபம் போட்டாச்சா!!??? ;)//

வேற வழி??? உங்கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா தல :)
----------------------------------------------------
// கைப்புள்ள said...

பதிவை இப்போ தான் படிச்சேன். செம சூப்பரா எழுதிருக்கீங்க. பெரியாரை இந்த மேட்டர்ல இழுத்தது உங்க திறமைக்கு ஒரு சான்று.
:)//

அண்ணே திரும்பவும் வந்து கமெண்ட் போட்டததுக்கு ரொம்ப நன்றிண்ணே. என் திறமையை புரிஞ்சுகிட்ருக்குற ஒரே ஆள் நீங்க தாண்ணே...

நான் ஆதவன் said...

// வித்யா said...

நீங்க புடுங்கற ஆணிக்கு அதுவே அதிகம்னு நினைச்சிட்டாரோ என்னமோ:)//

இப்படி வெளிப்படையா எல்லாம் கேக்கப்படாது வித்யா :)
----------------------------------------------------
// குசும்பன் said...

ஆதவன் செம கலக்கலாக இருக்கு, கோபியோட சேர்ந்தும் இதுபோல் எப்படி உங்களால எழுத முடியுது?//

அண்ணே பாராட்டிட்டு இப்படி பத்த வச்சிட்டீங்களே.. இருந்தாலும் அவர் உங்ககிட்ட சேர்ந்ததிலிருந்து எழுதறதயே நிறுத்திட்டாராமே???

நான் ஆதவன் said...

// Mr.Maanga Madayan said...

பிளாஷ் பேக்னா இப்படி தான் இருக்கணும். அதை விட்டுட்டு எப்போ பாரு இருபத்தி அஞ்சு வருசத்துக்கு கொண்டு போய்.. நேர்மையான அப்பாவை கொல்றது இல்லாம நியாயமான ஒன்னு. நல்லா இருக்கு//

ரொம்ப நன்றிங்க Mr.Maanga Madayan

சத்தியமூர்த்தி said...

நல்லா பண்ணீங்க கட்டு, இப்போ டு ஒரு வருஷம் முன்னால டு இப்போ.

நல்ல வேள சம்பள உயர்வுதான் கொடுக்கல, சம்பளம் கட் பண்றதுதான் இப்போ ஃபேஷன்.

இருந்தாலும், உங்க சம்பளம் இந்த வருஷமும் 30% ஏறிதான் இருக்கு சார். போன வருஷம் இருந்த டாலர் - ரூபாய் ரேட் என்ன இப்ப என்ன!

என்ஜாய் செட்டி!

இத படிங்க:
உண்மையே உன் விலை என்ன?”

முகமது பாருக் said...

நல்லா சொன்னீங்க...இங்கயும் அப்படிதான்..கடனை அடைக்கலாமுன்னு இங்க வந்தா நம்ம நேரத்துக்கு நிலைமை இப்படி ஆகி போச்சு..என்னத்த செய்ய..

நல்ல பதிவு தோழரே

தோழமையுடன்

முகமது பாருக்

afrine said...

ஹாய் ஆதவன் ரொம்ப சிரிச்சேன். படிச்சிட்டு. இன்னைக்கு துபாயோட நிலைமை அதுதானே. 'போ'னு மட்டும் சொல்லாதே. இன்க்ரிமெண்ட் இல்லைனாலும் பரவாயில்லை அந்த நிலைதான். பொறுங்க ஆதவன் இன்னும் ஒரு வருஷத்தில் நிலைமை வேறு மாதிரி ஆகும்.

சிவக்குமார் ஸ்டைலில் (சித்தி சீரியல்)

"இதுவும் கடந்து போகும்.....

Pradeep said...

சொன்ன விதம் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆகாகா...:)

ச்சின்னப் பையன் said...

கலக்கறீங்க சகா

தமிழ் பிரியன் said...

ஆகாகா...:)

நான் ஆதவன் said...

// சத்தியமூர்த்தி said...

நல்லா பண்ணீங்க கட்டு, இப்போ டு ஒரு வருஷம் முன்னால டு இப்போ.

நல்ல வேள சம்பள உயர்வுதான் கொடுக்கல, சம்பளம் கட் பண்றதுதான் இப்போ ஃபேஷன்.

இருந்தாலும், உங்க சம்பளம் இந்த வருஷமும் 30% ஏறிதான் இருக்கு சார். போன வருஷம் இருந்த டாலர் - ரூபாய் ரேட் என்ன இப்ப என்ன!

என்ஜாய் செட்டி!

இத படிங்க:
உண்மையே உன் விலை என்ன?”//
கருத்துக்கு நன்றி சத்தியமூர்த்தி. நிச்சயமா படிக்கிறேன் உங்க பதிவை.
----------------------------------------------------
கொஞ்ச மாசத்துக்கு கஷ்டம் தான் பாரூக் :(

கருத்துக்கு நன்றி முகமது பாரூக் :)

----------------------------------------------------
// afrine said...

ஹாய் ஆதவன் ரொம்ப சிரிச்சேன். படிச்சிட்டு. இன்னைக்கு துபாயோட நிலைமை அதுதானே. 'போ'னு மட்டும் சொல்லாதே. இன்க்ரிமெண்ட் இல்லைனாலும் பரவாயில்லை அந்த நிலைதான். பொறுங்க ஆதவன் இன்னும் ஒரு வருஷத்தில் நிலைமை வேறு மாதிரி ஆகும்.//

அந்த நம்பிக்கையில தான் இருக்கேன் அப்ரைன்

// சிவக்குமார் ஸ்டைலில் (சித்தி சீரியல்)

"இதுவும் கடந்து போகும்.....//

:))))))))))

நான் ஆதவன் said...

// Pradeep said...

சொன்ன விதம் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்//

நன்றி பிரதீப்
----------------------------------------
// முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஆகாகா...:)//

ஆமாம் மேடம் இப்போதைக்கு வேற வழி இல்ல :)
----------------------------------------
// ச்சின்னப் பையன் said...

கலக்கறீங்க சகா//

வாங்க சகா. ரொம்ப நன்றி :)
----------------------------------------
// தமிழ் பிரியன் said...

ஆகாகா...:)//

அண்ணே நீங்க ஜஸ்ட் எஸ்கேப் அண்ணே :))))))))))

உருப்புடாதது_அணிமா said...

:-((

உருப்புடாதது_அணிமா said...

:-)))) ( இது பதிவுக்கு)

உருப்புடாதது_அணிமா said...

எத்தினி வருச விசா??

நான் ஆதவன் said...

வாங்க அணிமா..மூணு வருச விசா

அபி அப்பா said...

ஆதவா! என் பதிவை ஏன் திருடினாய்?????? என் மனதில் இருந்த பதிவை ஏன் திருடினாய்?????????

நான் ஆதவன் said...

//அபி அப்பா said...

ஆதவா! என் பதிவை ஏன் திருடினாய்?????? என் மனதில் இருந்த பதிவை ஏன் திருடினாய்?????????//

உங்க மனதை திருடி விட்டேன் :)

Related Posts with Thumbnails