சினிமா..சினிமா..சினிமா..சினிமா

"என்னடா போனையே காணோம்"

"என்னது போனை காணாமா? தொலைச்சுட்டையா?"

"என்ன கடிக்கிறயா. உதைப்பேன் ராஸ்கல். உன்கிட்ட இருந்து போன் காலே வரலைன்னு கேட்டா...."

"இல்லண்ணே வேலை ஜாஸ்தி. கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்"

"அப்ப நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம்." என்றார் என் அண்ணன்.

சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்கையா. அமீரகமே வேலையில்லாம இருக்கு ஆனா எம் கம்பனில மட்டும் ஆணி இஷ்டத்துக்கு இருக்கு. புடுங்க புடுங்க வந்துகிட்டே இருக்கு. பதிவு எழுதுறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.

சரி நைட்டு ரூம்ல என்னடா பண்றேன்னு கேட்டா, ரூமுக்கு வந்து போன வாரம் முழுசும் சென்ஷி கொடுத்த இரண்டு புக்கை படிச்சேன். அப்புறம் கலந்து கட்டி நிறைய படம் பார்த்தேன்... இரவு நெடுநேரம்.

புத்தக விமர்சனம் எழுதுற அளவுக்கு இப்ப பொறமை இல்ல. பார்த்த சினிமாவை பத்தி எழுதலாம். முதல்ல தமிழ்...

வெண்ணிலா கபடி குழு:

ஏற்கனவே நிறைய விமர்சனம் படிச்சிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தனால கொஞ்சம் தைரியமாவே(மொக்கையா இருக்காதுன்னு) பார்த்தேன். எதிர்பார்ப்ப விட அதிகமாவே பூர்த்தி செஞ்சுது. ஒரிஜினல் பிரிண்ட் கிடைக்கிற வரை பார்க்காம இருந்து கிடைச்ச உடனே பார்த்தேன்.

அடக்கமான அறிமுகங்களின் அசத்தனால நடிப்பு, தெளிவான திரைக்கதை, காதல் விளையாட்டுன்னு இரண்டு விஷயங்களை திருவிழான்னு ஒரு புள்ளியில தொடங்கி ஒரே சீராக கொண்டு போய் அதே திருவிழாவில முடிச்சிருக்கறது என எல்லாமே அட்டகாசம்.கேரளாவுக்கு மட்டும் பிரம்மாவின் சலுகை!

முடிவு "காதல்" படம் மாதிரி கொஞ்சம் மனசை தொடர மாதிரி இல்லைன்னா "பிடிச்சிருக்கு" படம் மாதிரி நல்லா இருந்தாலும் சரியா போகாதுன்னு டைரக்டர் தெரிஞ்சிருக்கார். படம் எப்படி போகுதுன்னு சென்னையில இருக்குறவங்க தெரியப்படுத்தலாம்.

Ullasanga Uthsahanga (தெலுங்கு)
கேபிள் சாரோட "ஹேப்பி டேஸ்" விமர்சனத்தில பின்னூட்டம் மூலமா நம்ம சூப்பர் ஸ்டார் கார்க்கி இந்த படத்தை பத்தி சொல்லியிருந்தார். "ஹேப்பி டேஸ்" ஏற்கனவே பார்த்துட்டேன். "உல்லாசங்கா உற்சாகங்கா" நெட்ல தேடி எடுத்து டவுண்லோட் பண்ணி பார்த்தேன். முதல் பாதி காமெடின்ற பேர்ல படு மொக்கையா இருந்தது. தெரியாம டவுண்லோட் பண்ணிட்டோமோ நினைச்சேன். ஹீரோவும் சரியில்லை. ஒரே ஆறுதல் ஹீரோயின் "சினேகா உலால்". அப்படியே fresh ஆ இன்னைக்கு பூத்த பூ மாதிரி இருக்கா.இரண்டாவது பாதி கொஞ்சம் நல்லாயிருக்கு. அதுவும் அந்த "சரோஜா லேதம்மா" காமெடி சூப்பர். க்ளைமாக்ஸூம் நல்ல திருப்பம். ஒரு அக்மார்க் தெலுங்கு படமா நல்லா தான் இருந்தது.

Mr and Mrs Iyer (ஆங்கிலம்)

ரொம்ப வருஷமா பார்க்கனும் நினைச்சுகிட்டுருந்த படம் இது. உத்ராஞ்சலோ ஏதோ ஒரு மலைபகுதிலிருந்து கல்கத்தாவிற்கு தன் ஒரு வயது குழந்தையுடன் தனியாக செல்கிறாள் தமிழ் பிராமண பெண் Mrs Iyer. பஸ்ஸில் பயணத்தில் உதவியாக இருக்க பேருந்து நிலையத்தில் தன் தந்தையால் அறிமுகப்படுத்த படுகிறார் "ராஜா" என்கிற ஒரு இளைஞர். பின்பு மத கலவரத்தில் மாட்டிக்கொண்டு அந்த பஸ் பாதியில் நிற்கின்றது. பஸ் நின்ற ஊரில் ஊரடங்கு உத்தரவு. தன் கைக்குழந்தையுடன் அவஸ்தை படும் அவளை பத்திரமாக கல்கத்தா சேர்கிறான் அந்த "ராஜா" என்கிற முஸ்லீம் இளைஞர். இருவரும் காதலுடன் இரயில் நிலையத்தில் பிரிகின்றனர்.இந்த படத்தை எடுத்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியின் கேரக்டரை டயலாக்கே அதிகம் இல்லாமல் ஒரு 20 நிமிடம் காண்பிக்கும் காட்சிகள் அற்புதம். படத்தை பாராட்ட பல காட்சிகள் இருந்தாலும் கொஞ்சம் சவுத் இண்டியன் முக்கியமாக பிராமணர்களை பகடி செய்திருப்பதாக தோன்றுகிறது :) திரும்பவும் பார்க்க வேண்டும். இதை இவ்வாறு சிறிதாக விமர்சனம் செய்வது கடினம். பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.

Memento (ஆங்கிலம்)

ஏற்கனவே பார்த்த படம் தான். ஒன்னுமே புரியாம அப்படியே வச்சிருந்தேன். ஆனால் போன வாரம் ஹாலிவுட் பாலாவும், சர்வேசனும் விமர்சனம் செய்ததில் கொஞ்சம் புரிஞ்சு திரும்பவும் பார்த்தேன். அதை எடுத்த விதம் உண்மையிலேயே பாராட்டுக்குறியது. ஆனா இப்பவும் "டெடி" நல்லவனா கெட்டவனான்னு ஒரு சந்தேகம் இருக்கு. சரி விடுங்க இன்னொரு தடவை யாராவது விளக்கம் கொடுத்தா அப்ப திரும்பவும் பார்த்து தெளிஞ்சுக்கலாம் :)ஏற்கனவே நம்ம கார்க்கி சொல்லி "Irreversible" படம் பார்த்தேன்(பார்த்ததுக்கு பின்னால ஏண்டா பார்த்தேன்னு ஆயிடுச்சு). இதே போல கதையை பின்னாடி இருந்து முன்னாடி சொல்லியிருப்பாங்க. ஆனா அதைவிட இது கொஞ்சம் பெட்டரா இருக்கு. Irreversibleல ஒவ்வொரு காட்சியும் 15 நிமிஷத்துக்கு மேல வரும். அதுல என்ன ஸ்பெஷல்னா அதை கட்டே செய்யாம ஒரே சாட்ல எடுத்திருப்பாங்க.

சீனி கம் (ஹிந்தி)

படம்னா இது படம்யா. சும்மா 65 வயசு இளைஞனை வச்சு படம் முழுசும் இளைமையாவே எடுத்திருக்காங்க. நம்ம அமிதாப்போட நடிப்பு சூப்பர். சும்மா பூத்து விளையாடுறார். 65க்கும் 35க்கும் காதல்ன்னதும் ஒரு காமெடியாவும் இல்லாம விகாரமாவும் இல்லாமல் ஒரே ரொமான்ஸா அதாவது காதலாவே தெரியிற மாதிரி எடுத்திருக்கிறது சூப்பர்.அதுவும் தபுவோட அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்க போய் அவர் இவரோட 6 வயசு சின்னவருன்னு தெரியிற இடம் சூப்பர். பாத்ரூம்ல போய் பொண்ணு கேட்டு அவர் அதிர்ச்சியில ஜிப்ப போடாம நிக்கிற இடம் ஒரே காமெடி.

சீக்கிரமே செத்திடும்ன்னு படத்தோட ஆரம்பத்தில சொல்லி படத்தோட கடைசியில சாவுற அந்த சின்ன பொண்ணு கேரக்டரும் நல்லாயிருக்கு. ஆனா வாய் ஜாஸ்தி. பேச்சுல ஒரே அதிகபிரசங்கிதனம்.

Earthstorm (ஆங்கிலம்)

ங்கொய்யால...ராஸ்கல்ஸ் என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க. உங்களுக்கு எடுக்கெடுத்தாலும் ஒரே பயம்னு எங்களுக்கு தெரியும் அதுக்காக இப்படியெல்லாம் மொக்க படம் எடுத்து எங்க உயிர வாங்கனும்.

அட நம்ம அமெரிக்காகாரனை தான் சொல்றேங்க. சரியான மொக்க படம்ங்க இது. ஹீரோவா நம்ம விஜயகாந்தோ இல்ல விஜயோ நடிக்க வேண்டிய படம்ங்க இது.


அதாவது நிலா ரெண்டா உடையப்போகுதாம். அப்படி உடைஞ்சு நேரா அமெரிக்காவில விழப் போகுது போல. உலகத்தில அங்கங்க வேற விழுதாம். ஆனா இந்த உலகத்த காப்பாத்த அமெரிக்கா மட்டும் தான் இருக்கே. அங்கயிருந்து நிலாவுக்கு ஒரு டீமை அனுப்புறாங்க. அனுப்புற டீமுல நம்ம ஹீரோவும் இருக்கார். அவர பார்த்தா நம்ம பழைய அஜீத்த விட தொப்ப பயங்கரமா இருக்கு.

அந்த டீமை நிலாவுல அனுப்பி உடையிற நிலாவை வெல்டிங் செஞ்சு ஒட்ட வைக்கனுமாம். நல்லா கேட்டுகங்க மக்கா இரண்டா உடையிற நிலாவை வெல்டிங் செஞ்சு ஒட்டவைக்கனுமாம். ங்கொய்யால கேக்குறவன் கேன பயலாயிருந்தா தேவாவுக்கு கூட ஆஸ்கார குடுக்கனும்ன்னு சொல்லுவானுங்க.
வெல்டிங்னா 3G, 6G வெல்டிங் போல இல்ல மக்காஸ்....இது கொஞ்சம் பெருசு.

ஏலேய் விஜய், அஜித், தனுசு, சிம்பு, விசாலு வாசு மகனுன்னு எல்லோரும் ஓடி வாங்கடோய்.. இங்க கூட ஒங்கல மாதிரி மொக்கச்சாமிங்க இருக்கானுவுஙோய்...அதுனால காலர கொஞ்சம் தூக்கிவிட்டுகங்கடோய்..

இப்படி இரவு முழுதும் சினிமாவில் கரைந்தது. இன்னும் பார்க்க வேண்டிய படம் நிறைய இருக்கிறது. நேரம் கிடைத்து பார்க்கும் போது பதிவிடுகிறேன்.

18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

ங்கொய்யால...."மார்கழி மாசம் கூழ் ஊத்தறதும் ஞாயித்துகிழமை பதிவு போடுறதும் ஒன்னுன்னு" எங்க அப்பத்தா சொல்லுச்சு. அது உண்மைதான் போல ஒரு ஈ, காக்கா குஞ்சு கூட காணோம்.

அண்ணே வலைப்பூக்கள், என் தமிழ், தமிழ்பண்ணை எல்லோரும் எங்க போய்டீங்க.....அட்லீஸ் நீங்களாவது பின்னூட்டம் போடுங்களேன்.

டிஸ்கி: பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

Anonymous said...

yellame pazhaiya padam....

SUREஷ் said...

இத்தனை படத்தையும் பார்த்துட்டீங்களா......

mvalarpirai said...

நல்லாயிருக்கு பின்னூட்ட பழமொழி ! :):):):)

நான் ஆதவன் said...

நன்றி நான் ஆதவன் :)
------------------------------------------------
// Anonymous said...

yellame pazhaiya padam....//

அண்ணாத்தே பழைய எல்லாம் பழைய படம் தான். ஆனா ரொம்ப நாள் பார்க்க நினைச்சுகிட்டுருந்த படங்கள்.

கொஞ்சம் முன்னால வந்து பின்னூட்டம் போட்டுருந்தா ஒரு பழமொழி கிடைக்காம போயிருக்கும் :)
-----------------------------------------------------
//SUREஷ் said...

இத்தனை படத்தையும் பார்த்துட்டீங்களா......//

வாங்க சுரேஷ். ஆமா பார்த்தேன். இதுயில்லாம ஒரு பிரெஞ்ச் படமும் பார்த்தேன். அதையெல்லாம் எழுதுனா இருக்குற நூற்றுகணக்கான ரசிகைகள் வராம போயிருவாங்களேன்னு எழுதல :)
---------------------------------------------------------
// mvalarpirai said...

நல்லாயிருக்கு பின்னூட்ட பழமொழி ! :):):):)//

வாங்க வளர்பிறை. ரொம்ப நன்றிங்கோ.

வித்யா said...

mr & mrs iyer ரொம்ப நல்லாருக்கும். ஆனா சில இடங்களில் பிராமணர்களை கிண்டலடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்னு தோண வைக்கும்.
இந்த ஹாலிவுட்காரனே இப்படித்தான் பாஸ். நம்ம அம்புலிமாமா கதையை பாலீஷ் போட்டு தருவானுங்க. நம்மளும் வாயப் பொளந்துகிட்டு பார்ப்போம். ம்ம்ம் படமா பார்த்து தள்றீங்க. நடத்துங்க பாஸ்.

நான் ஆதவன் said...

//Blogger வித்யா said...

mr & mrs iyer ரொம்ப நல்லாருக்கும். ஆனா சில இடங்களில் பிராமணர்களை கிண்டலடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்னு தோண வைக்கும்.//

வாங்க வித்யா. எனக்கும் அப்படி தான் தோணிச்சு. அவுங்க பிராமணர் சொல்லாம சவுத் இண்டியன் சொல்றதே கொஞ்சம் எரிச்சலா இருந்தது.

// இந்த ஹாலிவுட்காரனே இப்படித்தான் பாஸ். நம்ம அம்புலிமாமா கதையை பாலீஷ் போட்டு தருவானுங்க. நம்மளும் வாயப் பொளந்துகிட்டு பார்ப்போம். ம்ம்ம் படமா பார்த்து தள்றீங்க. நடத்துங்க பாஸ்.//

அதே தான். கொஞ்சம் கேலக்ஸியில ஒரு ஸ்பேஷிப்ப காண்பித்தா போதும் நமக்கு வாயப் பொளந்துகிட்டு பார்ப்போம் :)

ராஜ நடராஜன் said...

ஒரு பதிவுல இத்தனை பிலிம் காட்டறீங்க:)நன்றி.

அடிக்கடி பிலிம் காட்டினீங்கன்னா நமக்கு தேர்ந்தெடுத்து படம் பார்க்க வசதியாயிருக்கும்:)

ஆ! இதழ்கள் said...

ஆணி அதிகமா இருக்கும் போதே இத்தனை படம்னா.. உங்கள ஆணியே புடுங்க வேணாம்னா எத்தனை பாப்பீங்க..

ஷண்முகப்ரியன் said...

'பொதிகையில் மலரும் நினைவுகள்'பார்த்த மாதிரி இருந்தது.நன்றி ஆதவன்.

கார்க்கி said...

//பின்னூட்டம் மூலமா நம்ம சூப்பர் ஸ்டார் கார்க்கி இந்த படத்தை பத்தி சொல்லியிருந்தார்//

ஹேய் பார்த்துக்கோங்கப்பா... நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்..

சகா, முடிஞ்சா defiance என்ற படத்தைப் பாருங்கள். சுமார் ரகம்தான். ஆனா அதுல ஒரு விஷயம் இருக்கு.(மேட்டர் இருக்குனு டைப் பண்ணிட்டு ,உங்களுக்கான பின்னூட்டம் என்பதால் விஷயம் என்று மாற்றினேன்). நம்ம ஜேம்ஸ்பான்டு டேனியல் கிரெய்க் நடிச்ச படம்.

ஸ்ரீமதி said...

:))))))))))))))))

நான் ஆதவன் said...

//ராஜ நடராஜன் said...

ஒரு பதிவுல இத்தனை பிலிம் காட்டறீங்க:)நன்றி.

அடிக்கடி பிலிம் காட்டினீங்கன்னா நமக்கு தேர்ந்தெடுத்து படம் பார்க்க வசதியாயிருக்கும்:)//

வாங்க ராஜநடராஜன். இனி அடிக்கடி போட்ருவோம்
------------------------------------------------
// ஆ! இதழ்கள் said...

ஆணி அதிகமா இருக்கும் போதே இத்தனை படம்னா.. உங்கள ஆணியே புடுங்க வேணாம்னா எத்தனை பாப்பீங்க.//

ஆகா நீங்க ஒருத்தர் தான் பாயிண்ட கரெக்டா புடிச்சிருக்கீங்க. இது எல்லாம் நான் நைட்டு பார்த்த படங்கள். தூங்க மணி 12 இல்ல 1 ஆயிடும்
------------------------------------------------
//ஷண்முகப்ரியன் said...

'பொதிகையில் மலரும் நினைவுகள்'பார்த்த மாதிரி இருந்தது.நன்றி ஆதவன்.//

வாங்க ஷண்முகப்ரியன் அய்யா. ரொம்ப நன்றி

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

ஹேய் பார்த்துக்கோங்கப்பா... நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்..//

ஆமா... இல்லையா பின்ன...

// சகா, முடிஞ்சா defiance என்ற படத்தைப் பாருங்கள். சுமார் ரகம்தான். ஆனா அதுல ஒரு விஷயம் இருக்கு.(மேட்டர் இருக்குனு டைப் பண்ணிட்டு ,உங்களுக்கான பின்னூட்டம் என்பதால் விஷயம் என்று மாற்றினேன்). நம்ம ஜேம்ஸ்பான்டு டேனியல் கிரெய்க் நடிச்ச படம்.//

பார்த்திடுவோம் சகா. (இதுக்கு நேரா மேட்டருன்னே டைப் பண்ணியிருக்கலாம் :)
---------------------------------------------------
// ஸ்ரீமதி said...

:))))))))))))))))//

வாம்மா ஸ்ரீமதி. எம்புட்டு பெரிய சிரிப்பு...

கைப்புள்ள said...

//ங்கொய்யால...."மார்கழி மாசம் கூழ் ஊத்தறதும் ஞாயித்துகிழமை பதிவு போடுறதும் ஒன்னுன்னு" எங்க அப்பத்தா சொல்லுச்சு. அது உண்மைதான் போல ஒரு ஈ, காக்கா குஞ்சு கூட காணோம்.

அண்ணே வலைப்பூக்கள், என் தமிழ், தமிழ்பண்ணை எல்லோரும் எங்க போய்டீங்க.....அட்லீஸ் நீங்களாவது பின்னூட்டம் போடுங்களேன்.

டிஸ்கி: பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது//

பதிவை மேலோட்டமா தான் படிச்சேன். ஆனா இந்த பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சேன். ரத்தத்துலேயே எம்புட்டு ஹாஸ்ய ரசம் கலந்துருக்குன்னு தெரியுது. தொடர்ந்து இதே மாதிரி எழுதுங்க.
:))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\\கைப்புள்ள said...

//ங்கொய்யால...."மார்கழி மாசம் கூழ் ஊத்தறதும் ஞாயித்துகிழமை பதிவு போடுறதும் ஒன்னுன்னு" எங்க அப்பத்தா சொல்லுச்சு. அது உண்மைதான் போல ஒரு ஈ, காக்கா குஞ்சு கூட காணோம்.

அண்ணே வலைப்பூக்கள், என் தமிழ், தமிழ்பண்ணை எல்லோரும் எங்க போய்டீங்க.....அட்லீஸ் நீங்களாவது பின்னூட்டம் போடுங்களேன்.

டிஸ்கி: பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது//

பதிவை மேலோட்டமா தான் படிச்சேன். ஆனா இந்த பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சேன். ரத்தத்துலேயே எம்புட்டு ஹாஸ்ய ரசம் கலந்துருக்குன்னு தெரியுது. தொடர்ந்து இதே மாதிரி எழுதுங்க.
:))//
ரிப்ப்பீட்டேய்... :)

Bleachingpowder said...

//கார்க்கி said...
சகா, முடிஞ்சா defiance என்ற படத்தைப் பாருங்கள். சுமார் ரகம்தான். ஆனா அதுல ஒரு விஷயம் இருக்கு//

நான் கூட இப்படி தான். சிட்டிசன் படம் பார்த்துட்டு, எல்லாரையும் போய் பார்க்க சொன்னேன். கொய்யாலே நான் மட்டும் என்ன இளிச்சவாயனா

நான் ஆதவன் said...

// கைப்புள்ள said...

பதிவை மேலோட்டமா தான் படிச்சேன். ஆனா இந்த பின்னூட்டத்தை ரொம்ப ரசிச்சேன். ரத்தத்துலேயே எம்புட்டு ஹாஸ்ய ரசம் கலந்துருக்குன்னு தெரியுது. தொடர்ந்து இதே மாதிரி எழுதுங்க.
:))//

நன்றிங்க கைப்புள்ள...
அண்ணே எங்க வீட்ல "மிளகு ரசம்" தான் செய்வாங்க "ஹாஸ்ய ரசம்" எல்லாம் எங்கம்மாவுக்கு செய்ய தெரியாது :)
---------------------------------------------------------
ரீப்பீட்டு போட்ட அக்காவுக்கு ஒரு நன்றிஙோவ்வ்வ்வ்
---------------------------------------------------------
//leachingpowder said...

//கார்க்கி said...
சகா, முடிஞ்சா defiance என்ற படத்தைப் பாருங்கள். சுமார் ரகம்தான். ஆனா அதுல ஒரு விஷயம் இருக்கு//

நான் கூட இப்படி தான். சிட்டிசன் படம் பார்த்துட்டு, எல்லாரையும் போய் பார்க்க சொன்னேன். கொய்யாலே நான் மட்டும் என்ன இளிச்சவாயனா//

ஆகா அவசரப்பட்டு டவுண்லோட் பண்ணிட்டேன்னே.....

Related Posts with Thumbnails