அசிங்கப்பட்டான்டா சேட்டன்!

நேற்று காலை வழக்கம் போல எழுந்து குளித்து விட்டு ரூமிற்குள் நுழையும் போது வழக்கம் போல ஏசியா நெட் நீயூஸ் சேனல் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த சேனலுக்கு ஏதாவது ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் போதும். அன்றைய பொழுது முழுதும் "சர்ச்சை" என்ற பெயரில் ஒரு நாள் முழுதும் ஏதாவது ஓட்டி விடுவார்கள். நம்ம மலையாள நண்பர்களும் அதையும் கேட்டு சீரியஸாவார்கள்.

ஒருமுறை "முல்லை பெரியாறு" பிரச்சனையைப் பற்றி சர்ச்சை என்ற பெயரில் சேனல் ஏதேதோ உளறி கொண்டிருக்க, நமக்கு அதையெல்லாம் கேட்டு வேறு எதுவும் பேசாமல் அடக்கிவாசிக்கவேண்டியிருந்தது. நம்ம ரூமில் உள்ள சேட்டன் மார்கள் அப்பொழுது தான் அவர்கள் தரப்பு நியாத்தை நம்மிடம் சொல்வார்கள். யோவ் நான் எதுனா கேட்டேனா? பேசாம இருங்கைய்யான்னா கேட்க மாட்டானுங்க.

என்னிடம் சொல்லி எந்த பிரச்சனையும் தீரப்போவதில்லை என்று நன்றாக தெரிந்தும் என்னவோ நான் தான் தமிழக முதல்வர் மாதிரி என்னிடம் சொல்லவதுண்டு.

நேற்று இடுக்கி அருகில் உள்ள நிறைய சிறிய மருத்துவமனையில் உபயோகப்படுத்திய "சிரெஞ்சு"களை தமிழகத்திலிருந்து வரும் ஆட்கள் வாங்கி செல்வதாக ஒரு சிறிய "சர்ச்சை" ஏசியாநெட் நியூஸ் சேனலில் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் அதிர்ச்சிகரமான ரிப்போர்ட் அது. ஒருதடவை உபயோகப்படுத்திய ஊசிகளை திரும்ப உபயோகிக்ககூடாதென்று சட்டம் இருப்பதாகவும், மேலும் உபயோகப்படுத்திய சிரெஞ்சுகளை முறைப்படி களைய வேண்டுமென்றும் சிறிய விளக்கமும் அதே சேனலில் வழியே தெரிவிக்கப்பட்டது.

மிகவும் சோகமான விஷயம் என்பதாலும், மேலும் அது தமிழ்நாட்டுக்கு அனுப்படுவதாலும் என் முகத்தில் கவலை ரேகை தெரியதொடங்கியது. என்ன கொடுமை இது. அங்கிருக்கும் பஞ்சாயத்து யூனியன் இதெயெல்லாம் கவனிப்பதில்லையா? என்று சேட்டனிடம் கவலையோடு வருத்தத்தை தெரிவித்தேன்.

டி.வியில் ஊசியை அள்ளி போகும் ஒரு தமிழ் ஆள் பேட்டி ஒன்றையும் வெளியிட்டார்கள். அவர் "கடந்த பல வருடங்களாக இதே தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடம் இருந்து ஒரு கும்பல் வாங்கி செல்வதாகவும்" மிகத் தெளிவான தமிழில் பேட்டி கொடுத்திருந்தார்.

ரூமில் ஒரு சேட்டன் "தம்பி இதையெல்லாம் எடுத்து அவர் எந்து செய்யும்?. தம்பி நாட்டுக்கு போகும் போல் கொரஞ்சு சூசிச்சு போகனும்" கக்கே பொக்கே கக்கே பொக்கேன்னு வழக்கம் போல சிரிப்பு.

அடங்கொக்க மக்கா இதுக்கெல்லாமா நம்மள கிண்டல் ஏத்துவானுங்க, சரி விடு நம்ம இத விட பயங்கரமா நம்ம கிண்டல் ஏத்தி இரண்டு நாள் நம்மகிட்ட பேசாம கூட இருந்திருக்கானுங்க. இதெல்லாம் சகஜம்.

அப்படி நினைச்சுகிட்டே ஆகா நம்ம மக்கள் இந்த ஊசியை மறுபடி உபயோகிச்சா என்னென்ன நோய் வருமோன்னு கவலையோட நியூஸை பார்த்துகிட்டு வந்தேன்.

நியூஸ்ல கடைசியா "தமிழ்நாட்டுல இதை கடத்தி கொண்டு போய் கொஞ்சம் சுத்தப்படுத்தி திரும்பவும் கேரளாவுக்கே விற்பதாக" சேனலில் சொல்ல, ங்கொக்கா மக்கா சின்ன கேப்பு கிடைச்சா லாரியே ஓட்டலாம் இத விடுவேனா.... நான் சேட்டன் பக்கம் திரும்பினேன் வழக்கம் போல....

நான் சிரிக்காமஎன்ன சொல்லி வெறுப்பேத்தியிருப்பேன்னு உங்களுக்கே தெரியும். இன்னைக்கு காலையில இந்த பதிவ போடுற வரைக்கும் சேட்டன் என்கிட்ட சரியா பேசல. விடு கழுதைய....

நிலைமை ரொம்ப மோசம் தான். ஆனா இத யார் தடுப்பது? டி.வி வரைக்கும் வந்தும் யாரும் ஏதாவது செஞ்சாங்களானு தெரியல? இது நம்ம தமிழகமும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக வேறு சொல்கிறார்கள்.

அப்படியென்றால் அது தமிழ்நாட்டுக்கும் விற்பனை செய்யப்படாமலா இருக்கும்?. இது தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிந்திருக்குமா? இல்லையென்றால் எப்படி, யாரிடம் தெரியப்படுத்துவது?

பல கேள்விகள் விடை தெரியாமல் இருக்கிறேன். சேட்டன் என்னிடம் பேசாமல் இன்று காலையும் நீயூஸ் சேனல் பார்த்துகொண்டிருந்தார் ....

ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு திறந்தும் திறக்காத கடிதம் (FYI பரிசல்)

இன்று சென்ஷியுடன் ரம்பாவிற்கும் மீனாவிற்கும் ஏன் இன்னும் திருமணமாகவில்லை என்று இலக்கியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு பல இலக்கியங்களை தொட்டு பின்பு கவிதையின் ஊடே ஒளியை போல சீராக நகர்ந்தது.

இன்று கண்ட ஆசிப் அண்ணாச்சியின் திறந்த மடல் பதிவைப் பற்றி சென்ஷியிடம் கூறிய போது மிகவும் சூடாகி ஒரு கவிமடத்தலைவனாக இருந்து இது போல தவறான வழி காட்டுதல் நலமா? என்று கேட்டார்.

எல்லாரும் முதல்ல இத படிங்க அப்புறம் இங்க வாங்க
...

///சரவணபவன் இட்லியைச்
சாப்பிட ஆரம்பித்தான்
முடிந்துவிட்டது.///

இது தானே பரிசல் கவிஜ. இதில் இத்தனை வார்த்தை விரயம் அவசியமல்லாதது என்று அண்ணாச்சி கூறியது உண்மை தான். ஆனால் அதற்கு அவர் திருத்திய கவிதை..

//சரவணபவன்
இட்லி
முடிந்தது//


என்ன இது???? இதில ஏன் இத்தனை வார்த்தை விரயம். இதுல நுட்ப வாசகனுக்கு யோசிக்க நிறைய இருக்கலாம். ஆனால் நூட்ப வாசகனுக்கு??? அட அதாங்க ரூம் போட்டு யோசிக்கிறவன்.

கவுஞன் எதையும் சப்-டெக்ஸ்டாக பூடகமாகத்தான் சொல்லணும் அது சரிதான் ஆனால் கவிமட தலைவன் டெக்ஸ்டெ இல்லாம தானே சொல்லனும். பின்ன சாதா கவிஞனுக்கும் ஸ்பெஷல் சாதா கவி....ஸாரி கவிமட தலைவனுக்கும் என்ன வித்தயாசம்?? உங்க கவிதை சரவணபவனில் இட்லி முடிந்தது என்பதை எந்தவொரு சந்தேகமும் இல்லாம தெரியப்படுத்தது.

சரவணபவன் வெளியில வைக்கிற போர்டு மாதிரி இருக்கு இது. பார்க்கிறவன் அடுத்து பொங்கலுலாவது சாப்பிடலாம்ன்னு உள்ள போயிடுவான். ஆனா ஒரு கவிஞர் இதுக்கெல்லாம் இடம் கொடுக்கலாமா?

கவிஞனோட வேலையே வாசகனை சட்டைய கிழிச்சு அலைவிடுறதுயில்ல. அதுக்கும் மேல "ங்ங்ங்ங்ங்...ங்ங்ங்ங்..." தலையில கொட்டிகிட்டே கூட சிரிச்சுகிட்டும் அழுதுகிட்டும் அலைய விடனும். (காதல் படம் பார்த்தீங்களா? அந்த மாதிரி) . இதெல்லாம் இல்லைன்னா எப்படி உங்களை கவிஞனா ஏத்துப்பான்.

அதுனால செப்பல் போட்டுட்டு ஸாரி செப்பனிடப் படிங்க...

சரவணபவன்
முடிந்தது


இப்படி எழுதிட்டீங்கன்னா.. நூட்ப வாசகனை எவ்வளவு நாள் ரூம் போட்டு யோசிக்க வைக்கலாம் பாருங்க.. இத தான் சொறி சிரங்குன்னு ஸாரி சொற்செரிவுன்னு சொல்றோம். இதுகூட தெரியாம ஹைய்யோ ஹைய்யோ...


சரவண பவன்ல இட்லி முடிஞ்சதுன்னா அது எந்தக் காலத்தைக் குறிக்கும்னு யோசிப்பான் நுட்ப வாசகன். ஆனா சரவண பவனே முடிஞ்சுதுன்னா அவன் எந்த காலத்தை பத்தி யோசிப்பான்???


"முடிந்தது" இதுல தொங்கி நிக்கிற பல விசயத்தை ரூம் போட்டு யோசிச்சு பாருங்க..உங்களுக்காக படம் வரைஞ்சு வேற போட்டுருக்கேன்

முடிந்தது"முடிந்தது"- இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என முடிந்ததாக கொள்ளலாம், சரவணபவனின் எதிர்காலமே முடிஞ்சுதுன்னு வைச்சுக்கலாம். கோர்ட்,கேஸூ எல்லாம் முடிஞ்சுன்னு வச்சுக்கலாம். சரவணபவன் அண்ணாச்சியோட எதிர்காலமே முடிஞ்சுதுன்னு கூட பொருள்கொள்ளலாம். அப்புறம் ஜீவஜோதியோட...இல்ல விடுங்க. அடேங்கப்பா!! இந்த ரீதியில் யோசிச்சுப் பார்த்தா கவுஜை தன்னைத்தானே எப்படில்லாம் எழுதும்னு நெனச்சு... அடப் போங்க அண்ணாச்சி!! ஒரு நோபல் பரிசை அம்பொன்னு தவற விட்டுட்டீங்களே?!
அதனால...

இனிமே கவுஜை எழுதுறதா இருந்தா யோஜிச்சு எழுதுங்க

நல்லா இருங்க!!ன்னு நம்ம சென்ஷி பொரிஞ்சு தள்ளிட்டார். மிக வேதனையான மனநிலைமையில இருக்கிறதுனால இந்த பதிவை நான் போட வேண்டியதா போச்சு.

ஆஸ்கார் கிடைக்கல..ஆனா பட்டாம்பூச்சி கிடைச்சுது

மனசுக்குள்ள கிட்டதட்ட பட்டாம்பூச்சியே பறக்குற மாதிரி தான் இருக்கு. ஆமாங்க சும்மா இல்ல போன வாரம் ரெட்டை சந்தோஷம். ஒன்னு நம்ம அஞ்சா நெஞ்சன்(நல்லா படிங்கப்பா..) கைப்புள்ள எனக்கு "பட்டாம்பூச்சி" விருது கொடுத்து கௌரவப்படுத்தியிருக்கிறார்.அவர் எனக்கு பரிச்சியமானது நான் "Butterfly effect" பத்தி ஒரு பதிவ போட்டபோதுன்னு நினைக்கிறேன். அதுனாலவோ என்னவோ எனக்கு இந்த "பட்டாம்பூச்சி" விருதை கொடுத்திருக்கிறார் போல. நான் ஆஸ்காரை பத்தி எழுதிய இந்த பதிவை முதல்ல படிச்சிருந்தா எனக்கு ஆஸ்காரே கொடுத்து கௌரவபடுத்தியிருப்பார். ஆனா விதி விளையாடிருச்சு :(

ஓகே சந்தோஷமா பேசிகிட்டிருக்கும் போது எதுக்கு என் கஷ்டம். இரண்டாவது சந்தோஷம் என்னான்னா..... போன வாரம் "Live Traffic Feed"ல எங்கிருந்தெல்லாம் வந்திருக்காங்கன்னு பார்க்கும் போது யூத் விகடன்ல இருந்து ஒரு புண்ணியவான் வந்திருக்காரு. லின்ங் புடிச்சு போய் பார்த்தா குட் ப்ளாக்கர்ஸ்ல என்னோட "நாங்க (தான்) கடவுள்" வந்திருக்கு.

நீங்க நினைக்கிற மாதிரி "நம்மளையும் பெரிய ஆளுங்க கவனிக்க ஆரம்பிச்சுடாங்கன்னு" பொறுப்பெல்லாம் வரல....எனவே மொக்கைகள் தொடரும் :)இத யாருக்கு கொடுக்கலாம்ன்னு யோசிச்சா உடனே ஞாபகம் வந்தது நம்ம "பல்லவன்". இவர் சம்பந்தபட்ட துறை,வரலாறு, கவிதை மொக்கைகள் (அய்யய்யோ கவிதை பக்கத்தில கமா(,) வரும்.. போட மறந்திட்டேன்) என கலந்துகட்டி அடிக்கிறவர்.


அடுத்து நம்ம அனந்த் "ஆ!இதழ்கள்". போட்டாகிராப்பர் . இன்னமும் சினிமாவுல காலேஜ் போற மாதிரி யூத் மாதிரி இருப்பேன்ன்னு அவரே சொல்லுவாரு. அவ்வளவு நகைச்சுவையாளர் அவரு.

அடுத்து எல்லாருக்கும் போய் சலிக்காம பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்துற "ஜமால்" அண்ணாத்தே.

நீங்க செய்ய வேண்டியது....

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

6. நான் "கைப்புள்ள" பதிவுல இருந்து இந்த ஐஞ்சு பாயிண்டையும் காப்பி & பேஸ்ட் செஞ்ச மாதிரி என் பதிவுல இருந்து இந்த பாயிண்ட காப்பி பண்ணாம டைப் செய்யனும் . ஆமா சொல்லிபுட்டேன்.......

துபாயிலயும் பெரியார் வேண்டும்!

"சொல்லுங்க ஆதவன், என்ன செய்ய போறீங்க?"

"சார் ப்ரொஜெக்ட் தான் நிறைய இருக்கே."

"அதெல்லாம் நாம ஆறு மாசத்துக்கு முன்னால சைன் பண்ணியது. இன்னும் மூணு மாசத்துக்கு அந்த ப்ரொஜெக்ட் ஓடும்..அது இருக்கட்டும் நான் கேட்டது என்ன? நீங்க சம்பந்தமே இல்லாம பேசுறீங்க"

என்னது சம்பந்தம் இல்லையா...அடகொக்கா மக்கா. டேய் மேனேஜர் மண்டையா போன வருஷம் இதே டேபிள், இதே சேர் உட்கார்ந்து நாம இரண்டு பேரு பேசுனது மறந்துட்டியா. இல்ல அத ஞாபகம் வச்சுகிட்டு இப்படி கூப்பிட்டு வச்சு கலாக்கிறயா....

போன வருஷம் பிப்ரவரி மாசம். இதே மேனேஜர் முன்னாடி உட்கார்ந்துகிட்டுயிருக்கேன். அவர் கொஞ்சம் சாப்டா கேக்குறாரு.

"என்ன ஆதவன் விஷயம் ஏதாவது ப்ரொஜெக்ட்ல பிரச்சனையா?"

"இல்ல சார் பர்சனலா கொஞ்சம் பேசனும்"

"சொல்லுங்க என்ன விஷயம்"

"சார் எனக்கு இன்கிரிமெண்ட் பத்தல" பட்டென்று போட்டு உடைத்தேன்.

கொஞ்சம் அதிர்ச்சியானார் பின்பு "என்ன ஆதவன் இத பேசுறதுக்கு முன்னால உங்க டிசைனர் கிட்ட பேசுனீங்களா? அவர் என்ன சொன்னார்"

"அவர்கிட்ட நான் ஏன் சார் பேசனும்."


"உங்க அப்ரைசல் அவுங்க குடுக்குற ரிப்போர்ட்ட பேஸ் பண்ணியும் இருக்கும்"

"இருக்கட்டும் சார். ஆனா எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. என்னோட வேலை மேல எதாவது ப்ளாக் மார்க் இருந்தா சொல்லுங்க ஏத்துக்கிறேன்."

சிரிக்கிறார்..."அப்படி எதுவும் இல்ல....ஆனா எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் போட்டுயிருக்கோம். உங்களுக்கும் 30% போட்டிருக்கோம் ஆதவன். செக் பண்ணி பாருங்க"

"இல்ல சார் எனக்கு இதுல உடன் பாடில்ல. முடியலைன்னா சொல்லுங்க நான் ரிஸைன் பண்ணிக்கிறேன். வீட்ல வேற அம்மாவும் அப்பாவும் அங்கேயே செட்லாக கூப்பிட்டுயிருக்காங்க" கையில ஆறு ப்ராஜெக்ட் இருக்குற தைரியம். வேற எவனா வருவதற்கே இரண்டு மாசமாவது ஆகும். கண்டிப்பா கொடுப்பானுங்கன்ற தைரியம்.

"ஓகே ஆதவன். நீங்க சீட்டுக்கு போங்க. நான் எம்.டி கிட்ட பேசிட்டு சொல்றேன்"

விசிலடித்துகொண்டே சீட்டிற்கு வந்தேன். பக்கத்து சீட்டிலிருக்கும் மலையாளி "எந்தா தம்பி இத்தற சந்தோஷம்? மேனேஜர் என்னா சொல்லி" இவன் ஒருத்தன் தமிழ் பேசுறதா நினைச்சுகிட்டு மலையாளமும் இல்லாம தமிழும் இல்லாம ஒரு புது மொழில பேசுறவன்.

"சேட்டா உங்களுக்கு எங்க பெரியார தெரியுமா?"

"ஆரு தம்பி"

"மூடநம்பிக்கைன்னா என்னான்னு தெரியுமா சேட்டா. அதை எல்லாம் எங்க மக்கள் கிட்ட தப்புன்னு எடுத்து சொன்னவரு" ங்கொய்யால இவன்கிட்ட இத சொல்லி புரியவைக்கிறதுகுள்ள தாவு தீர்ந்து போச்சு.

"ஆ அறியும்....கொரச்சு கேட்டுட்டுண்டு"

"அவர் மாதிரி ஒரு ஆள் இந்த துபாய்க்கு வேணும் சேட்டா" என்றேன்

"அது எந்தா தம்பி அங்கன பறஞ்சு"

"அது வந்து சேட்டா. நான் ரிஸைன் பண்ணப்போறேன் சொன்னேன். அதுக்கு நம்ம மேனேஜர் இல்ல வேண்டாம் ஆதவன் நீங்க வந்த பிறகு தான் நல்ல நல்ல ப்ராஜெக்ட் எல்லாம் கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னால இப்படியெல்லாம் கிடைக்கல நம்ம அரபாப் கூட போன வாரம் இதே தான் சொன்னாரு. நீங்க போனா பழையபடி கம்பெனி ஆகிடும் அதுனால போகாதீங்க அப்படின்னாரு. இப்ப பறையும் சேட்டா இந்த மாதிரி ஆளுங்களுக்கு எங்க பெரியார் தான் கரெக்டு" என்று பயங்கரமாக சிரித்தேன். அவன் சிரிக்கவில்லை. எனக்கு அது தான் வேணும். அடிக்கடி அவனை கலாய்ப்பதில் அப்படி சுகம் எனக்கு.

எனக்கு 40% இன்கிரிமெண்ட் கிடைத்தது. ஆனா.....அது போன வருஷம். நான் இப்ப கேட்டுட்டுயிருக்குறது இந்த வருஷம்.................

இப்ப எனக்கு விசா முடியுது. என்னை கூப்பிட்டு டேய் இருக்குறயா இல்ல போறயான்னு கேக்குறார் என்னோட மேனேஜர். அதுக்கு தான் முதல்ல பேசுன டயலாக். திரும்பவும் போவோம் அந்த சீனுக்கு...
"சொல்லுங்க ஆதவன், என்ன செய்ய போறீங்க?"

"சார் ப்ரொஜெக்ட் தான் நிறைய இருக்கே."


"அதெல்லாம் நாம ஆறு மாசத்துக்கு முன்னால சைன் பண்ணியது. இன்னும் மூணு மாசத்துக்கு அந்த ப்ரொஜெக்ட் ஓடும்..அது இருக்கட்டும் நான் கேட்டது என்ன? நீங்க சம்பந்தமே இல்லாம பேசுறீங்க"


"இல்ல சார் இந்த தடவை எக்ஸ்டண்ட் பண்ணிக்கிறேன்"


"இல்ல ஆதவன் போன வருஷமே உங்க அப்பா அம்மாகிட்ட போனும்ன்னு சொன்னீங்க"

"இல்ல சார் அவுங்கலால இப்ப பிரச்சனை ஏதும் இல்ல சார்..ஹி...ஹி..ஹி" வழிந்தேன்.


ஒரு பார்வை பார்த்துவிட்டு "இந்த தடவை இன்கிரிமெண்ட் எல்லாம் கிடையாது ஆதவன். இஷ்டம்னா சொல்லுங்க விசா அடிக்கலாம். இல்லைன்னா உங்க விருப்பம்"

"யெஸ் சார். நோ ப்ராப்ளம்..ஹி...ஹி...ஹி" மறுபடியும் இளித்தேன். இருடி இரு நிலைம மாறாமலா போகும் அப்ப இருக்குது உனக்கு....

எரிச்சலுடன் வெளியே வந்தேன். அதே சேட்டன் கவலையோடு நான் வருவதை பார்த்து என்னவென்று கேட்டார். இன்கிரிமெண்ட் இல்லையென்று சொன்னேன்.

அவர் ஆறுதல் கூறி உனக்கு முன்னாடியே நான் போயிட்டு வந்துட்டேன். எனக்கும் இல்லைன்னு சொன்னார்.

கொஞ்ச நேரம் கழித்து "தம்பி ஓர்மம் உண்டோ...நீ பறஞ்ச பெரியார பத்தி" என்று பயங்கரமாக சிரித்தார்.

அடங்கொக்கா மக்கா...நாதாரி நான் ஒரு வருஷம் முன்னாடி சொன்னத ஞாபகம் வச்சிட்டு இப்படி டைமிங்கல எடுத்துவுடுது. இதுல பஞ்ச் டயலாக் வேற

"தம்பி வித்தில (சுவர்ல) அடிச்ச பால் திருச்சு வரும் தம்பி ஹா...ஹா...ஹா"

ங்கொய்யால இருடி இரு அடுத்த தடவை அதே சுவர்ல சாணி அடிக்கிறேன்......

சினிமா..சினிமா..சினிமா..சினிமா

"என்னடா போனையே காணோம்"

"என்னது போனை காணாமா? தொலைச்சுட்டையா?"

"என்ன கடிக்கிறயா. உதைப்பேன் ராஸ்கல். உன்கிட்ட இருந்து போன் காலே வரலைன்னு கேட்டா...."

"இல்லண்ணே வேலை ஜாஸ்தி. கொஞ்சம் பிஸி ஆயிட்டேன்"

"அப்ப நாங்க என்ன வேலை வெட்டி இல்லாமலா இருக்கோம்." என்றார் என் அண்ணன்.

சொன்னா யாரும் நம்ப மாட்டேங்கிறாங்கையா. அமீரகமே வேலையில்லாம இருக்கு ஆனா எம் கம்பனில மட்டும் ஆணி இஷ்டத்துக்கு இருக்கு. புடுங்க புடுங்க வந்துகிட்டே இருக்கு. பதிவு எழுதுறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது.

சரி நைட்டு ரூம்ல என்னடா பண்றேன்னு கேட்டா, ரூமுக்கு வந்து போன வாரம் முழுசும் சென்ஷி கொடுத்த இரண்டு புக்கை படிச்சேன். அப்புறம் கலந்து கட்டி நிறைய படம் பார்த்தேன்... இரவு நெடுநேரம்.

புத்தக விமர்சனம் எழுதுற அளவுக்கு இப்ப பொறமை இல்ல. பார்த்த சினிமாவை பத்தி எழுதலாம். முதல்ல தமிழ்...

வெண்ணிலா கபடி குழு:

ஏற்கனவே நிறைய விமர்சனம் படிச்சிட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தனால கொஞ்சம் தைரியமாவே(மொக்கையா இருக்காதுன்னு) பார்த்தேன். எதிர்பார்ப்ப விட அதிகமாவே பூர்த்தி செஞ்சுது. ஒரிஜினல் பிரிண்ட் கிடைக்கிற வரை பார்க்காம இருந்து கிடைச்ச உடனே பார்த்தேன்.

அடக்கமான அறிமுகங்களின் அசத்தனால நடிப்பு, தெளிவான திரைக்கதை, காதல் விளையாட்டுன்னு இரண்டு விஷயங்களை திருவிழான்னு ஒரு புள்ளியில தொடங்கி ஒரே சீராக கொண்டு போய் அதே திருவிழாவில முடிச்சிருக்கறது என எல்லாமே அட்டகாசம்.கேரளாவுக்கு மட்டும் பிரம்மாவின் சலுகை!

முடிவு "காதல்" படம் மாதிரி கொஞ்சம் மனசை தொடர மாதிரி இல்லைன்னா "பிடிச்சிருக்கு" படம் மாதிரி நல்லா இருந்தாலும் சரியா போகாதுன்னு டைரக்டர் தெரிஞ்சிருக்கார். படம் எப்படி போகுதுன்னு சென்னையில இருக்குறவங்க தெரியப்படுத்தலாம்.

Ullasanga Uthsahanga (தெலுங்கு)
கேபிள் சாரோட "ஹேப்பி டேஸ்" விமர்சனத்தில பின்னூட்டம் மூலமா நம்ம சூப்பர் ஸ்டார் கார்க்கி இந்த படத்தை பத்தி சொல்லியிருந்தார். "ஹேப்பி டேஸ்" ஏற்கனவே பார்த்துட்டேன். "உல்லாசங்கா உற்சாகங்கா" நெட்ல தேடி எடுத்து டவுண்லோட் பண்ணி பார்த்தேன். முதல் பாதி காமெடின்ற பேர்ல படு மொக்கையா இருந்தது. தெரியாம டவுண்லோட் பண்ணிட்டோமோ நினைச்சேன். ஹீரோவும் சரியில்லை. ஒரே ஆறுதல் ஹீரோயின் "சினேகா உலால்". அப்படியே fresh ஆ இன்னைக்கு பூத்த பூ மாதிரி இருக்கா.இரண்டாவது பாதி கொஞ்சம் நல்லாயிருக்கு. அதுவும் அந்த "சரோஜா லேதம்மா" காமெடி சூப்பர். க்ளைமாக்ஸூம் நல்ல திருப்பம். ஒரு அக்மார்க் தெலுங்கு படமா நல்லா தான் இருந்தது.

Mr and Mrs Iyer (ஆங்கிலம்)

ரொம்ப வருஷமா பார்க்கனும் நினைச்சுகிட்டுருந்த படம் இது. உத்ராஞ்சலோ ஏதோ ஒரு மலைபகுதிலிருந்து கல்கத்தாவிற்கு தன் ஒரு வயது குழந்தையுடன் தனியாக செல்கிறாள் தமிழ் பிராமண பெண் Mrs Iyer. பஸ்ஸில் பயணத்தில் உதவியாக இருக்க பேருந்து நிலையத்தில் தன் தந்தையால் அறிமுகப்படுத்த படுகிறார் "ராஜா" என்கிற ஒரு இளைஞர். பின்பு மத கலவரத்தில் மாட்டிக்கொண்டு அந்த பஸ் பாதியில் நிற்கின்றது. பஸ் நின்ற ஊரில் ஊரடங்கு உத்தரவு. தன் கைக்குழந்தையுடன் அவஸ்தை படும் அவளை பத்திரமாக கல்கத்தா சேர்கிறான் அந்த "ராஜா" என்கிற முஸ்லீம் இளைஞர். இருவரும் காதலுடன் இரயில் நிலையத்தில் பிரிகின்றனர்.இந்த படத்தை எடுத்த விதம் மிகவும் பாராட்டுக்குரியது. பஸ்ஸில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியின் கேரக்டரை டயலாக்கே அதிகம் இல்லாமல் ஒரு 20 நிமிடம் காண்பிக்கும் காட்சிகள் அற்புதம். படத்தை பாராட்ட பல காட்சிகள் இருந்தாலும் கொஞ்சம் சவுத் இண்டியன் முக்கியமாக பிராமணர்களை பகடி செய்திருப்பதாக தோன்றுகிறது :) திரும்பவும் பார்க்க வேண்டும். இதை இவ்வாறு சிறிதாக விமர்சனம் செய்வது கடினம். பிறிதொரு சந்தர்பத்தில் விரிவாக எழுதுகிறேன்.

Memento (ஆங்கிலம்)

ஏற்கனவே பார்த்த படம் தான். ஒன்னுமே புரியாம அப்படியே வச்சிருந்தேன். ஆனால் போன வாரம் ஹாலிவுட் பாலாவும், சர்வேசனும் விமர்சனம் செய்ததில் கொஞ்சம் புரிஞ்சு திரும்பவும் பார்த்தேன். அதை எடுத்த விதம் உண்மையிலேயே பாராட்டுக்குறியது. ஆனா இப்பவும் "டெடி" நல்லவனா கெட்டவனான்னு ஒரு சந்தேகம் இருக்கு. சரி விடுங்க இன்னொரு தடவை யாராவது விளக்கம் கொடுத்தா அப்ப திரும்பவும் பார்த்து தெளிஞ்சுக்கலாம் :)ஏற்கனவே நம்ம கார்க்கி சொல்லி "Irreversible" படம் பார்த்தேன்(பார்த்ததுக்கு பின்னால ஏண்டா பார்த்தேன்னு ஆயிடுச்சு). இதே போல கதையை பின்னாடி இருந்து முன்னாடி சொல்லியிருப்பாங்க. ஆனா அதைவிட இது கொஞ்சம் பெட்டரா இருக்கு. Irreversibleல ஒவ்வொரு காட்சியும் 15 நிமிஷத்துக்கு மேல வரும். அதுல என்ன ஸ்பெஷல்னா அதை கட்டே செய்யாம ஒரே சாட்ல எடுத்திருப்பாங்க.

சீனி கம் (ஹிந்தி)

படம்னா இது படம்யா. சும்மா 65 வயசு இளைஞனை வச்சு படம் முழுசும் இளைமையாவே எடுத்திருக்காங்க. நம்ம அமிதாப்போட நடிப்பு சூப்பர். சும்மா பூத்து விளையாடுறார். 65க்கும் 35க்கும் காதல்ன்னதும் ஒரு காமெடியாவும் இல்லாம விகாரமாவும் இல்லாமல் ஒரே ரொமான்ஸா அதாவது காதலாவே தெரியிற மாதிரி எடுத்திருக்கிறது சூப்பர்.அதுவும் தபுவோட அப்பாகிட்ட போய் பொண்ணு கேட்க போய் அவர் இவரோட 6 வயசு சின்னவருன்னு தெரியிற இடம் சூப்பர். பாத்ரூம்ல போய் பொண்ணு கேட்டு அவர் அதிர்ச்சியில ஜிப்ப போடாம நிக்கிற இடம் ஒரே காமெடி.

சீக்கிரமே செத்திடும்ன்னு படத்தோட ஆரம்பத்தில சொல்லி படத்தோட கடைசியில சாவுற அந்த சின்ன பொண்ணு கேரக்டரும் நல்லாயிருக்கு. ஆனா வாய் ஜாஸ்தி. பேச்சுல ஒரே அதிகபிரசங்கிதனம்.

Earthstorm (ஆங்கிலம்)

ங்கொய்யால...ராஸ்கல்ஸ் என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க. உங்களுக்கு எடுக்கெடுத்தாலும் ஒரே பயம்னு எங்களுக்கு தெரியும் அதுக்காக இப்படியெல்லாம் மொக்க படம் எடுத்து எங்க உயிர வாங்கனும்.

அட நம்ம அமெரிக்காகாரனை தான் சொல்றேங்க. சரியான மொக்க படம்ங்க இது. ஹீரோவா நம்ம விஜயகாந்தோ இல்ல விஜயோ நடிக்க வேண்டிய படம்ங்க இது.


அதாவது நிலா ரெண்டா உடையப்போகுதாம். அப்படி உடைஞ்சு நேரா அமெரிக்காவில விழப் போகுது போல. உலகத்தில அங்கங்க வேற விழுதாம். ஆனா இந்த உலகத்த காப்பாத்த அமெரிக்கா மட்டும் தான் இருக்கே. அங்கயிருந்து நிலாவுக்கு ஒரு டீமை அனுப்புறாங்க. அனுப்புற டீமுல நம்ம ஹீரோவும் இருக்கார். அவர பார்த்தா நம்ம பழைய அஜீத்த விட தொப்ப பயங்கரமா இருக்கு.

அந்த டீமை நிலாவுல அனுப்பி உடையிற நிலாவை வெல்டிங் செஞ்சு ஒட்ட வைக்கனுமாம். நல்லா கேட்டுகங்க மக்கா இரண்டா உடையிற நிலாவை வெல்டிங் செஞ்சு ஒட்டவைக்கனுமாம். ங்கொய்யால கேக்குறவன் கேன பயலாயிருந்தா தேவாவுக்கு கூட ஆஸ்கார குடுக்கனும்ன்னு சொல்லுவானுங்க.
வெல்டிங்னா 3G, 6G வெல்டிங் போல இல்ல மக்காஸ்....இது கொஞ்சம் பெருசு.

ஏலேய் விஜய், அஜித், தனுசு, சிம்பு, விசாலு வாசு மகனுன்னு எல்லோரும் ஓடி வாங்கடோய்.. இங்க கூட ஒங்கல மாதிரி மொக்கச்சாமிங்க இருக்கானுவுஙோய்...அதுனால காலர கொஞ்சம் தூக்கிவிட்டுகங்கடோய்..

இப்படி இரவு முழுதும் சினிமாவில் கரைந்தது. இன்னும் பார்க்க வேண்டிய படம் நிறைய இருக்கிறது. நேரம் கிடைத்து பார்க்கும் போது பதிவிடுகிறேன்.

நாங்க (தான்) கடவுள்!

இவுங்கெல்லாம் எப்பவும் கடவுள்கள்....இவுங்கெல்லாம் சீஸன் கடவுள்கள்.....
இந்த தெய்வத்துக்கு மாநக்கல்ல... ஸாரி நாமக்கல்ல கோவில் கட்ட போறாங்களாம்

இவுங்க அடுத்த கடவுள்...அடுத்த கோவில் இவுங்களுக்கு தான்னு சொல்றாங்க..

ரொமான்ஸ் படங்கள் (18+ மட்டும் ப்ளீஸ்ஸ்)


Related Posts with Thumbnails