எங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு "ரஹ்மானை" தலையில் வைத்து கொண்டாட...

இன்று எந்த இந்திய தொலைக்காட்சி சேனல்களை திருப்பினாலும் ஒரே செய்தி தான். எந்த பத்திரிக்கை இணையத்திற்கு சென்றாலும் ஒரே செய்தி தான். அது நம் ஏ.ஆர் ரஹ்மான் வாங்கிய ஆஸ்காரைப் பற்றிய செய்திகள் தான்.

உண்மையில் அனைந்து இந்தியனும் பெருமைபடவேண்டிய விஷயம் தான். ஒவ்வொரு இந்தியனும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

இதுவரை எட்டாக்கனியாக இருந்த இந்திய சினிமாவிற்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் ரஹ்மான்.

பாலிவுடின் பெரிய பெரிய நடிகர்களும், நடிகைகளும் இயக்குனர்களும் ரஹ்மானால் இந்தியாவிற்கே பெருமை கிடைத்ததாக பல பேட்டிகளை படிக்க முடிந்தது.

"ரங்தே பஸந்தி" படத்தின் இயக்குனர் ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா "ரஹ்மானால் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை இணைந்தது மட்டுமில்லாமல் இப்போது கிழக்கும் மேற்கும் இணைந்திருக்கிறது" என்கிறார். இவர் சினிமாவை மட்டும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

எந்த டி.வியை பார்த்தாலும் ரஹ்மான் பற்றிய செய்திகள். அவரது வாழ்க்கை பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

கண்டிப்பாக இந்த செய்திகளை மூலை முடுக்கிலுள்ள எல்லா இந்தியனுக்கும் எடுத்து சென்றிருக்கும் இந்த மீடியாக்கள். அனைவருக்கும் அந்த காட்சியை பார்க்கும் போது உடல் சிலிர்த்திருக்கும். அந்த புண்ணியமெல்லாம் மீடியாவையே சாரும்.

சரி இந்த வட இந்திய மீடியாக்கள் இத்தனை நாள் எங்கிருந்தார்கள்?. ஒரு தமிழன் பேரும் புகழும் அடையும் போது சந்தோஷமாக இவன் இந்தியன் என்பதில் எங்களுக்கு பெருமை என்று தீடீர் பாசத்தில் வாய்கூசாமல் கூறும் பிரபலங்களும், மீடியாக்களும் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட நூற்றுகணக்கான தமிழக மீனவர்களை "இந்தியன் சுடப்பட்டான்" என்று என்றைக்காவது மருந்துக்காகவாவது மீடியாக்கள் தங்கள் மொழி சேனல்களில் காண்பித்ததுண்டா??

இலங்கை தமிழர்களுக்காக இங்கு ஒலிக்கும் தமிழர்களின் குரல்களை காண்பித்ததுண்டா?

இப்போது மட்டும் ஏன் இந்த பாசம்.

ஆதலால் எங்களுக்கு மட்டுமே "ரஹ்மானை" தலையில் வைத்து கொண்டாட உரிமை உண்டு. உங்கள் தீடீர் பாசம் எங்களுக்கு வேண்டாம்.

தனியாக அழ முடிந்த எங்களுக்கு உங்கள் வாழ்த்துகள் இல்லாமல் வாழவும் தெரியும்.

கடைசியாக ரஹ்மான் சார்.... நீங்கள் மேடையில் ஏறி தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற போது உடல் சிலிர்த்து விட்டது. "ஹேட்ஸ் ஆப் ரஹ்மான்" சார்.

33 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

ஆ! இதழ்கள் said...

வட இந்தியர்களை திருத்த முடியாது. ரஹ்மான் அவார்டு வாங்கியவுடன் அவர் தமிழன் என்பது அவர்களுக்கு மிக எளிதாக மறந்துவிடும்.

கஜினி இந்திக்கு சென்றால் இந்தி தான் சிறந்தது என்பார்கள். பில்லு வந்தவுடன் தமிழில் அது ஃப்ளாப்பாமே என்பார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை?

நான் ஆதவன் said...

// ஆ! இதழ்கள் said...

வட இந்தியர்களை திருத்த முடியாது. ரஹ்மான் அவார்டு வாங்கியவுடன் அவர் தமிழன் என்பது அவர்களுக்கு மிக எளிதாக மறந்துவிடும்.

கஜினி இந்திக்கு சென்றால் இந்தி தான் சிறந்தது என்பார்கள். பில்லு வந்தவுடன் தமிழில் அது ஃப்ளாப்பாமே என்பார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை?//

சரிதான் ஆ!இதழ்கள். வருத்தமான உண்மைகள்

கார்க்கி said...

:)))))))))

குசும்பன் said...

ரைட்டு நான் ஆதவன் சொன்னதுக்கு அப்புறம் அப்பீல் ஏது?:))

(ஆமாம் தலையில் நிஜமாலுமே தூக்கிவைக்கமுடியுமா?)

//இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட நூற்றுகணக்கான தமிழக மீனவர்களை "இந்தியன் சுடப்பட்டான்"//

ஆமா இது எப்ப நடந்தது? எனக்கு தெரிந்தவரை மீனவர்கள் ஒருவருக்குள் ஒருவர் அல்லவா கடலுக்குள் சென்று சுட்டுக்கிட்டாங்க, வரப்பு தகறாருதான் காரணம் என்றும் படிச்சேன். நீங்க சொல்வது புதுக்கதையாக இருக்கிறது.

முதலில் தமிழக தலைவர்களை கவலைப்பட சொல்லும்:((

வித்யா said...

உண்மை தான். ஒரே ஆறுதல் அவரின் இரு தங்கைகளின் பேட்டிகளை ஒளிப்பரப்பியது.

எம்.எம்.அப்துல்லா said...

100 % கரெக்ட்டு அண்ணே நீ சொல்றது.

enRenRum-anbudan.BALA said...

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த வட இந்திய சேனலகள் பயங்கரமான ஓரவஞ்சனை பிடித்த பரதேசிகளால் நடத்தப்படுவது :-(

Anonymous said...

வட இந்தியர்கள் இந்தியனுக்கு ஆஸ்கார் கிடைச்சிருச்சி என்னு காலர தூக்குவாங்க அதாச்சும் பரவாயில்ல, அவங்களுக்கு ஏ.ஆர் ரஹ்மானோ இல்ல அவர் தமிழன் என்கிறதையோ பெருசா எடுத்துக்க மாட்டாங்க ஆஸ்கார எடுத்துக்குவாங்க. ஆனா மலயாளிங்க எத்தின பேருக்கு இன்னைக்கு செம காண்டா இருக்கும்?

ராஜ நடராஜன் said...

பெரும்பான்மையான ஊடகங்கள் ஈழம் பற்றிய விசயங்களில் இருட்டடிப்போ அல்லது ஒரு நிலை சார்ந்த முடிவே எடுக்கிறார்கள்.

தமிழர்களின் கவலைகளும்,துயரங்களும் அரசியல்,மொழி என்ற இரு நிலைகளுக்குள் அமிழ்ந்து விடுகிறது.ஆனால் ரகுமானின் இசை வடிவம் இவை அனைத்தையும் கடந்த ஒரு ஏகாந்த நிலை.எனவே ரகுமான் சொந்தம் கொண்டாட விரும்புவர்கள் கொண்டாடட்டும்.

இந்தக் காலகட்டத்தில் ரகுமான் ஈழம் குறித்த இசை வடிவம் தந்தால் உலகின் பார்வை ஈழம் நோக்கி திரும்பும் சாத்தியங்கள் உண்டு.செய்வாரா?

Anonymous said...

"இந்தக் காலகட்டத்தில் ரகுமான் ஈழம் குறித்த இசை வடிவம் தந்தால் உலகின் பார்வை ஈழம் நோக்கி திரும்பும் சாத்தியங்கள் உண்டு.செய்வாரா?"

niyayamana koorikaii..

Anonymous said...

ஆஸ்கர் ஜெயிப்பதற்கு மட்டும் "ஜெய் ஹோ" ந்னு இந்தி பாட்டு வேணும். ஆனா இந்திகாரனுக கொண்டாட மட்டும் கூடாது!!! வாழ்க தமிழ் பண்பாடு!!!

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

:)))))))))//

எதுக்கிந்த சிரிப்பு சகா???
-----------------------------------------------------
// குசும்பன் said...

(ஆமாம் தலையில் நிஜமாலுமே தூக்கிவைக்கமுடியுமா?)//

கண்டிப்பா உங்களலால முடியும் குசும்பரே. உங்க தலையை பத்தி தான் கேள்வி பட்டிருக்கேனே நிறைய காலியிடம் இருக்குன்னு...

//முதலில் தமிழக தலைவர்களை கவலைப்பட சொல்லும்:((//

இனி இவிங்கள சொல்லி புரயோசனம் இல்ல...மீடியாவின் அட்டென்ஸன் வேணும் இந்தியா முழுதும் தெரியப்படுத்த...

நான் ஆதவன் said...

//வித்யா said...

உண்மை தான். ஒரே ஆறுதல் அவரின் இரு தங்கைகளின் பேட்டிகளை ஒளிப்பரப்பியது.//

ஆம் வித்யா..வருகைக்கு நன்றி
-------------------------------------------------------------
//எம்.எம்.அப்துல்லா said...

100 % கரெக்ட்டு அண்ணே நீ சொல்றது.//

நன்றிண்ணே...
-------------------------------------------------------------
//Blogger enRenRum-anbudan.BALA said...

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த வட இந்திய சேனலகள் பயங்கரமான ஓரவஞ்சனை பிடித்த பரதேசிகளால் நடத்தப்படுவது :-(//

ஆம் பாலா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நான் ஆதவன் said...

//ராஜ நடராஜன் said...

பெரும்பான்மையான ஊடகங்கள் ஈழம் பற்றிய விசயங்களில் இருட்டடிப்போ அல்லது ஒரு நிலை சார்ந்த முடிவே எடுக்கிறார்கள்.//

வட இந்தியாவில் இது இருட்டடிப்பு மட்டுமே செய்யப்படுகிறது. ராஜ நடராஜன்


// இந்தக் காலகட்டத்தில் ரகுமான் ஈழம் குறித்த இசை வடிவம் தந்தால் உலகின் பார்வை ஈழம் நோக்கி திரும்பும் சாத்தியங்கள் உண்டு.செய்வாரா?//

நல்ல யோசனை..அவர் செய்யனுமே

நான் ஆதவன் said...

// Anonymous said...

ஆஸ்கர் ஜெயிப்பதற்கு மட்டும் "ஜெய் ஹோ" ந்னு இந்தி பாட்டு வேணும். ஆனா இந்திகாரனுக கொண்டாட மட்டும் கூடாது!!! வாழ்க தமிழ் பண்பாடு!!!//

எதுக்காக எழுதியிருக்கேன்னு படிச்சும் கூட புரியாத உங்க ஹிந்தி பற்று புரியுது :-)

வெத்து வேட்டு said...

normal indian fishermen weren't killed...
smugglers (arms/fuel) were killed in srilankan water where there is a deadly WAR going on?
kappish????

Anonymous said...

Hey,
There's a fisherman mafia out there:-)

All beware!

-kajan

P.S. God bless those poor families. You tears will not go unrepented for by those that have remained quite.

சென்ஷி said...

கலக்குறீங்க தம்பி! :))

நவீன் said...

அருமை அருமை!

ரகுமானின் இசையில் 'பனைமரக்காடே பறவைகள் கூடே' என்ற பாடல் ஈழ உறவுகளின் அகதிநிலையை சித்தரித்தது.

இன்றைய நிலையில் அவர்களின் துயரத்தை இசையால் வடித்தால் அர்த்தம் நிறைய்த்தாய் இருக்கும்.

Anonymous said...

நீங்கள் மேடையில் ஏறி தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற போது உடல் சிலிர்த்து விட்டது. "ஹேட்ஸ் ஆப் ரஹ்மான்" ///

கடைசியில கொன்னுட்டீங்க. தமிழ் தமிழன்னு பேசிட்டு வந்து கடைசியில ஹேட்ஸ் ஆஃபா?? I'm pissed off

ஆனா. கட்டுரையோட மையக் கருத்தோட நான் உடன்படுறேன்.

Bleachingpowder said...

//இராணுவத்தால் சுடப்பட்ட நூற்றுகணக்கான தமிழக மீனவர்களை "இந்தியன் சுடப்பட்டான்" என்று என்றைக்காவது மருந்துக்காகவாவது மீடியாக்கள் தங்கள் மொழி சேனல்களில் காண்பித்ததுண்டா??
//

சரி தான் தல, ஆனா அதே மாதிரி, குஜராத் மீனவர்களை பாக் ராணுவம் சுடுவதையும், கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை படுத்துவதை நம்முடைய பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் அவ்வளவாக கண்டுக்க மாட்டார்கள்.

வடநாட்டு மீடியாவை விடுங்க தல, இங்க நம்ம அரசியல்வாதிகளுக்கே அதை பத்தி கவலையில்ல. எம்.பி சீட்டும், மந்திரி பதவியும் என் மயிருக்கு சமம், தமிழர் நலம் தான் முக்கியம்னு முதுகெலும்போட சொல்ல இங்க நமக்கு யாரு இருக்கா?

நான் ஆதவன் said...

//வெத்து வேட்டு said...

normal indian fishermen weren't killed...
smugglers (arms/fuel) were killed in srilankan water where there is a deadly WAR going on?
kappish????//

அண்ணே காமெடி பண்ணாதீங்க..
-------------------------------------------------------
// சென்ஷி said...

கலக்குறீங்க தம்பி! :))//

நண்றிங்கண்ணே..
--------------------------------------------------------
நன்றி நவீன்

நான் ஆதவன் said...

//ஆசிப் மீரான் said...
கடைசியில கொன்னுட்டீங்க. தமிழ் தமிழன்னு பேசிட்டு வந்து கடைசியில ஹேட்ஸ் ஆஃபா?? I'm pissed off//

அண்ணாச்சி வராதவக வந்திருக்கீங்க நீங்க சொன்னா சரிதான். இனி திருத்திக் கொள்கிறேன்...

//ஆனா. கட்டுரையோட மையக் கருத்தோட நான் உடன்படுறேன்.//

நன்றி அண்ணாச்சி

நான் ஆதவன் said...

//Bleachingpowder said...
சரி தான் தல, ஆனா அதே மாதிரி, குஜராத் மீனவர்களை பாக் ராணுவம் சுடுவதையும், கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை படுத்துவதை நம்முடைய பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் அவ்வளவாக கண்டுக்க மாட்டார்கள்.
வடநாட்டு மீடியாவை விடுங்க தல, இங்க நம்ம அரசியல்வாதிகளுக்கே அதை பத்தி கவலையில்ல. எம்.பி சீட்டும், மந்திரி பதவியும் என் மயிருக்கு சமம், தமிழர் நலம் தான் முக்கியம்னு முதுகெலும்போட சொல்ல இங்க நமக்கு யாரு இருக்கா?//

அதென்னவோ உண்மை தான் தல...மீடியா முழுசும் அரசியல்வாதிங்ககிட்ட இருக்கு...இதுல நியாயம் தர்மம் எதிர்பார்க்கமுடியுமா??

ஸ்ரீமதி said...

உண்மை தான் அண்ணா :))

Anonymous said...

வருத்தமான உண்மைகள்

இளைய பல்லவன் said...

அண்ணே மற்றும் தலைவரே,

உங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்று சொல்லவியலவில்லையென்று சொல்லத்தோன்றினாலும், கருத்துடனுடன்படுகிறேன் என்றே சொல்லத்தோன்றுவதை சொல்லாமலிருக்கவியலவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

Anonymous said...

//எதுக்காக எழுதியிருக்கேன்னு படிச்சும் கூட புரியாத உங்க ஹிந்தி பற்று புரியுது :-)//

இந்திப் பற்றா... பார்பான்னு உடனே சொல்லாம போனதுக்கு சந்தோசம்.

நான் என்ன சொல்ல வந்தேன்னா... கொண்டாட்ட நேரத்தில் இந்த பேச்சு தேவைதானா?

அது போக இந்திகாரனுக்கு உரிமையில்லை எனில் எந்த தமிழ்நாடுகாரனுக்கும் உரிமை இல்லை. இந்தி மீடியா கண்டு கொள்கிறா மாதிரி நாம் என்ன செய்து விட்டோம்? பதிவும் பின்னூட்டமும் போடுவதை தவிர?

முதல் மீனவன் இறந்த உடனே தமிழ்நாடு ஸ்பிக்கிற மாதிரி தொடர் போராட்டம் நடத்தி இருந்தால் வடக்கு பத்திரிக்கை என்ன, 10, ஜன்பதே திரும்பி பார்த்திருக்கும்.இரண்டாவது சாவே விழுந்திருக்காது. நாம் நம்ம பிரச்சனை உண்டு தான் உண்டு இருந்து விட்டு இப்ப அவன்மீது பழியை போட்டு விட்டு தப்பிக்க முயலும் எஸ்கேபிசத்திற்கு எதிரான பின்னூட்டம் தான் அது....

Anonymous said...

//வெத்து வேட்டு said...

normal indian fishermen weren't killed...
smugglers (arms/fuel) were killed in srilankan water where there is a deadly WAR going on?
kappish????//

அண்ணே காமெடி பண்ணாதீங்க..//

இன்றைய தினமணி செய்தி

கடத்தப்படவிருந்த 200 லிட்டர் டீசல் பறிமுதல்

கன்னியாகுமரி, பிப்.24: கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகப் பகுதியிலிருந்து இலங்கைக்கு டீசல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார் புதர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் டீசலை கைப்பற்றினர்.

இதுகுறித்து 3 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
--------------------------------------------------
எல்லைதாண்டி இலங்கை பகுதியில் அத்துமீறி போன இந்திய மீனவர்கள் ராடாரில் சிக்கிய படத்துடன் ஆசியா டிரிபுயூன் ரிப்போர்ட்


The problems of Indian fishermen poaching in Sri Lankan waters and vice-versa has been a regular occurrence since of late, though there was a mutual understanding between the fishermen themselves from both countries on this matter.

However, with the emergence of the LTTE, followed by its Sea Tiger wing in 1985, the issue became one of military and political importance. From being an issue which was confined to innocent fishermen crossing in each others waters; it shifted to that of a terrorist organisation which possessed deadly capabilities of attacking a sovereign nation’s Navy.

The LTTE also exploited the presence of Indian fishermen in Sri Lankan waters for its own illegal activities and carried out a number of attacks against the Sri Lanka Navy, while stealthily moving among the cluster of Indian fishing boats and trawlers in Sri Lankan waters.

Sources have also claimed that in private, many Tamil Nadu fishermen have admitted that reclaiming Katchatheevu will not solve the problem as they go deep into Sri Lankan waters for fishing and that since almost fishermen use nylon nets, the question of ‘drying their nets’ on the Katchatheevu island also does not arise.

Beneath the surface of protesting against the action by the Sri Lankan Navy, what the agitating Rameshwaram fishermen are actually asking for is some avenue for them to fish in Sri Lankan waters. The incident which has resulted in the protest did not involve any ‘attack’, ‘injury’ or ‘loss of life’ to the fishermen as based on intelligence inputs received, the Sri Lankan Navy was well within its jurisdiction to carry out checking of the boats and the fishermen as the boats were well within Sri Lankan waters.

Amidst this uproar, the various instances where the Sri Lanka Navy has come to the rescue of Tamil Nadu fishermen who were in distress at sea, most often in Sri Lankan waters, is also slowly and unfortunately fading into the background.

நான் ஆதவன் said...

//Blogger ஸ்ரீமதி said...

உண்மை தான் அண்ணா :))//

வா ஸ்ரீமதி...இதுக்கெதுக்கு சிரிப்பு :-)
-----------------------------------------------------
// இளைய பல்லவன் said...

அண்ணே மற்றும் தலைவரே,

உங்கள் கருத்துடன் உடன்படவில்லை என்று சொல்லவியலவில்லையென்று சொல்லத்தோன்றினாலும், கருத்துடனுடன்படுகிறேன் என்றே சொல்லத்தோன்றுவதை சொல்லாமலிருக்கவியலவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.//

அண்ணே மற்றும் தலைவரே...

உங்கள் பின்னூட்டத்துடன் உடன்படவில்லை என்று சொல்லவியலவில்லையென்று சொல்லத்தோன்றினாலும், கருத்துடனுடன்படுகிறேன் என்றே சொல்லத்தோன்றுவதை சொல்லாமலிருக்கவியலவில்லை என்பதைச் சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.

நான் ஆதவன் said...

//இந்திப் பற்றா... பார்பான்னு உடனே சொல்லாம போனதுக்கு சந்தோசம்..//

ஏன் இந்த கொலவெறி...

//முதல் மீனவன் இறந்த உடனே தமிழ்நாடு ஸ்பிக்கிற மாதிரி தொடர் போராட்டம் நடத்தி இருந்தால் வடக்கு பத்திரிக்கை என்ன, 10, ஜன்பதே திரும்பி பார்த்திருக்கும்.இரண்டாவது சாவே விழுந்திருக்காது. நாம் நம்ம பிரச்சனை உண்டு தான் உண்டு இருந்து விட்டு இப்ப அவன்மீது பழியை போட்டு விட்டு தப்பிக்க முயலும் எஸ்கேபிசத்திற்கு எதிரான பின்னூட்டம் தான் அது....//

அதெல்லாம் மீனவர்,விவசாய சங்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பெரிய(!) கட்சிகள் வரை எல்லா ஆர்பாட்டமும் உண்ணாவிரதமும் செஞ்சாச்சு...ஆனா எதுவும் தமிழ்நாட்டை விட்டு வெளிய போகல. அரசியல் கட்சிய விடுங்க...மீடியாக்கள் "இந்தியன் சுடப்பட்டான்"னு கொஞ்சம் பரபரப்பு செலுத்துனா இந்தியா முழுக்க கொஞ்சம் கவனத்தை ஈர்க்க முடியும்

//அது போக இந்திகாரனுக்கு உரிமையில்லை எனில் எந்த தமிழ்நாடுகாரனுக்கும் உரிமை இல்லை. இந்தி மீடியா கண்டு கொள்கிறா மாதிரி நாம் என்ன செய்து விட்டோம்? பதிவும் பின்னூட்டமும் போடுவதை தவிர?//

செஞ்சது பக்கத்து மாநிலத்துகாரனா இருந்தா நாம கையாலாதவன்னு சொல்லலாம்..ஆனா பக்கத்து நாடாச்சே. இதுக்கு மத்திய அரசின் தலையீடு முக்கியமாச்சே

//ஆஸ்கர் ஜெயிப்பதற்கு மட்டும் "ஜெய் ஹோ" ந்னு இந்தி பாட்டு வேணும். ஆனா இந்திகாரனுக கொண்டாட மட்டும் கூடாது!!! வாழ்க தமிழ் பண்பாடு!!!//

அதே மாதிரி "ஆஸ்கர் ஜெயிப்பதற்கு மட்டும் தமிழன் பாட்டு வேணும் ஆனா கஷ்டம்னா கண்டுக்கமாட்டோம்னா" எப்படிங்க???

நான் ஆதவன் said...

அனானி அண்ணே ஏதோ ஒரு மேட்டரை மட்டும் போட்டுட்டு பாக்கி இறந்தவங்க எல்லாம் இந்த மாதிரி தான்னு கண்ண மூடிகிட்டு சொன்னா நல்லாவா இருக்கு??

Anonymous said...

//மீடியாக்கள் "இந்தியன் சுடப்பட்டான்"னு கொஞ்சம் பரபரப்பு செலுத்துனா இந்தியா முழுக்க கொஞ்சம் கவனத்தை ஈர்க்க முடியும்//

அண்ணே, நிறைய தடவ தமிழக மீனவர் சுடப்பட்ட போது இந்திய மீனவன் சாவு வடக்கு பத்திரிக்கைகள் போட்டிருக்கு உதாரணம...

http://www.dnaindia.com/report.asp?newsid=1177281

http://www.newkerala.com/topstory-fullnews-27180.html

http://www.rediff.com/news/2007/mar/29lanka1.htm

http://timesofindia.indiatimes.com/articleshow/1724107.cms

http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070007298

மக்கள் படிச்சிருப்பாங்க. நாம எப்படி குஜராத் மீனவனை பாகிஸ்தான் சுட்ட போது 'உச்' கொட்டிவிட்டு வேறு வேலை பாக்க போய்விட்டோமோ, அப்படி அவர்களும் போயிருப்பார்கள்.நம்ம நாட்டுல உயிருக்கு அவளோதான் மதிப்பு. நம்மூர்காரன் ஒருநாள் போராட்டம், அசலூர்காரன் எனில் அதுவும் இல்லை.

நாம போராட்டம்ன்ன ஒரு நாள் நடத்திவிட்டு மறந்துவிடக்கூடாது. தொடர் போராட்டம். அது போக நம்மூர் 8 ம*ராண்டிகள் அங்கு என்ன செய்கிறார்கள்? தினமும் வெளியுறவு மந்திரி கிட்ட போய் போரடுணுமே, இவங்களுக்கு துட்டு பாக்கவே நேர பத்தல!

//இதுக்கு மத்திய அரசின் தலையீடு முக்கியமாச்சே//

மத்திய அரசில் நமது 32 சிறுதலைகளும் 8 பெருந்தலைகளும் ஒரு அங்கம்தானே?

நிற்க, மீனவர் சாவில் மேலே அனாநி போஸ்ட் போட்டிருக்கும் விசயத்தை கவனித்தீரா? அவர்களுக்கு நமது பகுதியிலும் நமக்கு அவர்கள் பகுதியிலும்தான் மீன்கள் கிடைக்கின்றன. அதனால் நமது மீனவர்கள் எல்லை தாண்டி போய் கொண்டுதான் இருந்தார்கள். LTTE பிரச்சனையால் நமது மீனவர்களுக்கு பிரச்சனை. இல்லாவிடில் நமது மத்திய அரசும் அடித்து பேச முடியும். இலங்கை பிரச்சனை ஓயும் வரை அல்லது புலிகளில் கடற்படை ஓயும் வரை இந்த பிரச்சனை தீராது.

//அதே மாதிரி "ஆஸ்கர் ஜெயிப்பதற்கு மட்டும் தமிழன் பாட்டு வேணும் ஆனா கஷ்டம்னா கண்டுக்கமாட்டோம்னா" எப்படிங்க???//

கரெகட், ரஹ்மான் தமிழன், தமிழ்ல பேசினாருன்னு குதிக்கிற நாம்,அதே ரஹ்மான் ஆஸ்கார் மேடைல இந்திலயும் பேசுனாருங்கறத மறந்து போய்விடுகிறோம். ஏன்னா அவருக்கு தமிழும் வேணும் இந்தியும் வேணும்."ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"

ஏன் எப்பவுமே நமக்கு குறைகள் மட்டும்தான் தெரியுது? கமல் இந்தில தோத்துப் போனப்ப "தமிழ்ன்னா அவனுக ஏத்துக்க மாட்டானுக அமுக்கிடுவானுக"ன்னு ஒரு பேச்சு தமிழ்நாட்டுல இருந்தது. இப்ப தமிழர்களை வைத்து கொண்டாடுகிறார்கள்... ரஹ்மான், மனிரதனம் ஏன் மாதவன் கூட பல படத்துல நடிக்கறாரு. ஆனா இப்பவும் நாம் புலம்பிகிட்டேதான் இருக்கின்றோம்!!!!

Related Posts with Thumbnails