சிங்கங்கத்தோடு ஒரு தீடீர் பதிவர் சந்திப்பு!

கடந்த வாரம் ஜிமெயிலில் வந்த கோபிநாத் என்னுடைய நம்பர் கேட்டு, நான் கொடுத்ததும் உடனே போனில் அழைத்தார்.

இருவரும் பேசிக்கொண்ட பின் தான் தெரிய ஆரம்பித்தது சென்னையில் அவரும் நானும் ஒரே ஏரியா, பள்ளிகூடத்தில் எனக்கு சீனியர், காலேஜிலும் எனக்கு சீனியர்.

இந்த வாரத்தில் ஒரு நாள் மீட் பண்ணலாம் என்றார். ஓகே சொன்னேன் விதி வலியது என்று தெரியாமல்.....

திங்கட்கிழமை இரவு எட்டு மணிக்கு வரச்சொன்னது சிங்கம் கோபிநாத் (இதற்கு விளக்கம் கேட்பவர்கள் முத்துலட்சுமி மேடத்திடம் செல்லவும்).

சென்ஷியும் வருவதை உறுதிப்படுத்தினார். பள்ளி கல்லூரி சீனியர் ஒருவரை சந்திக்க போகிறோம் என்ற ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பொடி நடையாக சென்றேன்.

அவர் சொன்ன இடத்திற்கு சென்று அவருக்கு போன் செய்தால் பக்கத்திலேயே இருந்தார். பார்த்தால் எனக்கு ஜூனியர் மாதிரி இருக்கிறார். கட்டித்தழுவி அரவணைத்து இப்படி எல்லாம் ஒன்னும் (நல்லவேளை) செய்யல. கை கொடுத்தார், மிகவும் யதார்த்தமாக பழகினார். கொஞ்ச நேரத்திலேயே உரிமையோடு பேசியது கூச்சத்தை அறேவே போக்கியது.

நல்ல சிலு சிலுவென்று காற்று வீசியது. சென்ஷி வேறு இன்னும் வரவில்லை என்று கவலையோடு (: போன் செய்து கேட்டார் கோபிநாத். இந்த இரண்டுக்கும் சம்பந்தம் இருப்பது சென்ஷியை பார்த்த போது விளங்கியது. ஒல்லியான அடக்கமான உருவம்.

இவர் ஒரு படி மேலே போய் புதிய பதிவர் என்ற எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல் பழகினார். நல்ல பண்பானவர், பல திறமைகளில் இருந்தும் ஈகோ இல்லாமல் பழகும் தன்மையுள்ளவர், அழகானவர்(ஸ்ஸ்ஸ்ப்பா..).

கொஞ்ச தூரம் நடந்து ஒரு பாகிஸ்தானி ஹோட்டலுக்கு சென்றோம். அதுவரைக்கும் எல்லாம் நல்லா தான் போச்சு......

ஏன்யா ஒரு ஆளு புதுசா மாட்னான்னா இப்படியா கலாய்கிறது. நான் எப்படி பிரபலம்(?) ஆனேன்னு இரண்டு பேரும் பண்ண ஆராய்ச்சிய பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருந்தது. உண்மையிலேயே அவுங்க ஆராய்ச்சிபடி நான் செய்திருந்தா கண்டிப்பா பிரபலம் ஆகியிருப்பேன். அதுக்காக என்னைய பத்தி இப்படியா புரளிய கிளப்புறது???

இப்படியே ஒரு மணி நேரம் போச்சு. மட்டனும், சிக்கனும் வாங்கி கொடுத்து தோள் மேல கைய போட்டு கூட்டிட்டு போகும் போதே ஒரு டவுட்... என்னடா இத பார்த்தா ஏதோ ஆடு மேல போட்ட மாலை மாதிரி இருக்கேன்னு டவுட் ஆனேன்.

பேச்சு கொஞ்சம் கொஞ்சமா சூடாகி இலங்கையில நடக்கிற பிரச்சனைக்கு போச்சு. மத்தலத்தில வாங்கின இடி மாதிரி இந்த சைடு ஒரு குத்து அந்த சைடு ஒரு குத்து. மட்டனும் சிக்கனும் செரிச்சு போச்சு. கொஞ்சம் டயர் ஆகியிருப்பாங்க போல. ஒரு ஐஸ்கிரீம வாங்கி கொடுத்து "மூத்திர(முட்டு) சந்தில" கூட்டுட்டி போய் மூச்சு திணற திணற பேச்சு. நானும் எவ்வளவு நேரம் தான் தாங்குறது. மணி பதினொன்றை ஆயிடுச்சு.

நான் டயர்டாகி போனதை சிங்கம் கவனிச்சு டீ வாங்கி கொடுத்து தெம்பாக்கிச்சு. இதுக்கு பேரு தான் தெளிய வச்சு அடிக்கிறது போல...... திரும்பவும் ஆரம்பிக்க போறாங்க போலன்னு பயந்துகிட்டே பார்த்தா சிங்கம் டயர்டாகி இருக்கும் போல.....

இன்னைக்கு இது போதும் மிச்சத்த இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு சொல்லுச்சு. சென்ஷி அண்ணனும் பாவம்டா இன்னைக்கு இது போதும்னு நினைச்சுகிட்டு போ சொல்லி உத்தரவு கொடுத்தது.

இப்படி (முத)பதிவர் சந்திப்பு நல்ல படியா முடிஞ்சு ரூமிற்கு வர பன்னிரெண்டு ஆயிடுச்சு.........

ss

எடுத்த போட்டாவை போடக்கூடாதுன்னு சிங்கம் கர்ஜித்தது. சரின்னு போடல...

32 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோவி.கண்ணன் said...

//ஏன்யா ஒரு ஆளு புதுசா மாட்னான்னா இப்படியா கலாய்கிறது. நான் எப்படி பிரபலம்(?) ஆனேன்னு இரண்டு பேரும் பண்ண ஆராய்ச்சிய பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருந்தது. உண்மையிலேயே அவுங்க ஆராய்ச்சிபடி நான் செய்திருந்தா கண்டிப்பா பிரபலம் ஆகியிருப்பேன். அதுக்காக என்னைய பத்தி இப்படியா புரளிய கிளப்புறது???//

சூப்பரு,

நல்லாப் போச்சு போல இருக்கிறது சந்திப்பு !

ஆ! இதழ்கள் said...

நல்ல வேளைக்கு ஆட்டோல ஏத்தி அவுங்க மச்சான்ட்ட அனுப்பாம விட்டாங்களே... அதுவரைக்கும் தப்புச்சீங்க. அது சரி இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அவுங்கள ஏன் சும்மா விட்டீங்க?

கோபிநாத் said...

அடப்பாவி பதிவே போட்டுட்டியா!!!!அவ்வ்வ்வ்வ்வ்வவ்...இரு படிச்சிட்டு வரேன் ;)

கோபிநாத் said...

\\இருவரும் பேசிக்கொண்ட பின் தான் தெரிய ஆரம்பித்தது சென்னையில் அவரும் நானும் ஒரே ஏரியா, பள்ளிகூடத்தில் எனக்கு சீனியர், காலேஜிலும் எனக்கு சீனியர்.\\

அன்னிக்கு போன்ல பேசியாதையே ஒரு பதிவாக போடலாமுன்னு நினைச்சேன் ஆனா முடியல!! ;)

கோபிநாத் said...

\\ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பொடி நடையாக சென்றேன்.\\

அதான் பார்த்தேனோ!! உங்க பொடி நடையை எதிர்ல எத்தனை பேர் நீ மோதி விழுந்துதாங்கன்னு எனக்கு தானே தெரியும் ;)

கோபிநாத் said...

\\பல திறமைகளில் இருந்தும் ஈகோ இல்லாமல் பழகும் தன்மையுள்ளவர், அழகானவர்\\

ம்ம்ம்...வாங்கி கொடுத்ததுக்கு நல்லா தான்ய்யா கூவுறா!! ;))

கோபிநாத் said...

\நான் டயர்டாகி போனதை சிங்கம் கவனிச்சு டீ வாங்கி கொடுத்து தெம்பாக்கிச்சு.\\

ராசா அந்த டீக்கும் மாப்பி தான் காசு கொடுத்தான்...நான் இல்ல ;)))

கோபிநாத் said...

ஆமா எல்லாம் சரி...உன்னோட லீலைகளை பத்தி ஒரு வரிகூட எழுதல!!?? இருடி ராசா உனக்கு ஒருநாள் ;))

அப்புறம் இன்னொரு விஷயம் நீ ஆதவன்னு எங்களுக்கு தெரியும் அதை எதுக்கு இப்படி ஒடி ஆடி தலைகீழாக நின்னு சொல்லிக்கிட்டு இருக்கா!!!??

;))

கோபிநாத் said...

இன்னொரு விஷயம் தயவு செய்து பின்னூட்ட பொட்டியை மாத்து ரொம்ப கஷ்டமாக கிது பின்னூட்டம் போட ;(

அபி அப்பா said...

நல்லது! இனி இருவர் மூவராயாச்சா? நடத்துங்க:-))

Leo Suresh said...

சென்ஷி நானும் வந்து கும்மி இருப்பேன்....மறந்துட்டீங்களா
லியோ சுரேஷ்

முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கும் அந்த பட்டத்துக்கு காரணம் தெரியாது.. நான் புதுபதிவரா வந்தப்ப எனக்கு அப்படித்தான் கோபியை அறிமுகப்படுத்தினாங்க.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

அவங்க நல்லவங்க வல்லவங்க...ன்னு சொன்னதுமே ரிப்பீட்டே மட்டும் போடும் கோபி எத்தனை கமெண்ட் எத்தனை கமெண்ட்..ம்..பொழைக்கத்தெரிந்த பிள்ளை..அதான் வெளியூர் போய் பிழைக்கிறேன்னு சொல்லக்கூடாது.. :)

வால்பையன் said...

நீங்க ரொம்பபபபபப நல்லவருன்னு அந்த ரெண்டு பேரும் சொன்னாங்களா?

நான் ஆதவன் said...

//கோவி.கண்ணன் said...

சூப்பரு,

நல்லாப் போச்சு போல இருக்கிறது சந்திப்பு !//

ஆமாங்க கோவி.கண்ணன். நல்லா இருந்தது இந்த பதிவர் சந்திப்பு
-------------------------------------------------------------------
//ஆ! இதழ்கள் said...

நல்ல வேளைக்கு ஆட்டோல ஏத்தி அவுங்க மச்சான்ட்ட அனுப்பாம விட்டாங்களே... அதுவரைக்கும் தப்புச்சீங்க. அது சரி இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அவுங்கள ஏன் சும்மா விட்டீங்க?//
வாங்க ஆ!இதழ்கள். இவ்வளவு நடந்த பிறகும் அவுங்கள சும்மா விடுவேனா....கை கால்ல எல்லாம் விழுந்து இனிமே இந்த மாதிரி பண்ணாதீங்கன்னு எச்சரிக்கை செய்திட்டுல வந்தேன்

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...

அடப்பாவி பதிவே போட்டுட்டியா!!!!அவ்வ்வ்வ்வ்வ்வவ்...இரு படிச்சிட்டு வரேன் ;)//

பின்ன....வாக்கு மாறமாட்டோம்ல...

//கோபிநாத் said...

அன்னிக்கு போன்ல பேசியாதையே ஒரு பதிவாக போடலாமுன்னு நினைச்சேன் ஆனா முடியல!! ;)//

இப்படியே யோசிச்சுகிட்டே இருந்தீங்கன்னா எப்ப போடுறது...

//கோபிநாத் said..
அதான் பார்த்தேனோ!! உங்க பொடி நடையை எதிர்ல எத்தனை பேர் நீ மோதி விழுந்துதாங்கன்னு எனக்கு தானே தெரியும் ;)//

அதுல நீங்க ஒரு ஆளுன்னு சொல்லவே இல்லையே...

//கோபிநாத் said...

ம்ம்ம்...வாங்கி கொடுத்ததுக்கு நல்லா தான்ய்யா கூவுறா!! ;))//

நீங்க ஒன்னுமே வாங்கி கொடுக்காம உங்களை பத்தியும் சொல்லியிருக்கேனே...அடுத்த தடவை உங்க செலவு தான்

நான் ஆதவன் said...

//கோபிநாத் said...
ராசா அந்த டீக்கும் மாப்பி தான் காசு கொடுத்தான்...நான் இல்ல ;)))//

வாங்கி கொடுக்க சொன்னது நீங்க தானே...

//ஆமா எல்லாம் சரி...உன்னோட லீலைகளை பத்தி ஒரு வரிகூட எழுதல!!?? இருடி ராசா உனக்கு ஒருநாள் ;))//

அதெல்லாம் எதுக்கிப்ப....மறப்போம் மன்னிப்போம்

//அப்புறம் இன்னொரு விஷயம் நீ ஆதவன்னு எங்களுக்கு தெரியும் அதை எதுக்கு இப்படி ஒடி ஆடி தலைகீழாக நின்னு சொல்லிக்கிட்டு இருக்கா!!!??//

பொறாமை...ஒருத்தன் நல்ல விதமா ஏதாவது செஞ்சா பிடிக்காதே

//இன்னொரு விஷயம் தயவு செய்து பின்னூட்ட பொட்டியை மாத்து ரொம்ப கஷ்டமாக கிது பின்னூட்டம் போட ;(//

இது கஷ்டமா....ஓகே மாத்திடுறேன்

நான் ஆதவன் said...

//அபி அப்பா said...

நல்லது! இனி இருவர் மூவராயாச்சா? நடத்துங்க:-))//

வாங்க அபிஅப்பா...ரொம்ப நன்றி :)
-------------------------------------------------------------------
//Leo Suresh said...

சென்ஷி நானும் வந்து கும்மி இருப்பேன்....மறந்துட்டீங்களா
லியோ சுரேஷ்//

நீங்களும் இங்க தானா?? ஒருத்தன கும்முறதுல்ல என்னா சந்தோஷம் பயபுல்லைக்கு...

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

எனக்கும் அந்த பட்டத்துக்கு காரணம் தெரியாது.. நான் புதுபதிவரா வந்தப்ப எனக்கு அப்படித்தான் கோபியை அறிமுகப்படுத்தினாங்க.. :)//

அப்ப காலங்காலமா வருதா....

//அவங்க நல்லவங்க வல்லவங்க...ன்னு சொன்னதுமே ரிப்பீட்டே மட்டும் போடும் கோபி எத்தனை கமெண்ட் எத்தனை கமெண்ட்..ம்..பொழைக்கத்தெரிந்த பிள்ளை..அதான் வெளியூர் போய் பிழைக்கிறேன்னு சொல்லக்கூடாது.. :)//

ஹி...ஹி... அப்படியெல்லாம் சொல்லமாட்டேன்

ஆமா அனிமேஷன் எப்படி இருக்கு??? தேறுமா? ஒன்னுமே சொல்லல...
---------------------------------------------------------------
//வால்பையன் said...

நீங்க ரொம்பபபபபப நல்லவருன்னு அந்த ரெண்டு பேரும் சொன்னாங்களா?//

அவ்வ்வ்வ்வ்வ்வ் அதுதான் ஊருக்கே தெரியுமே..ஆனாலும் என்னைய முதல்ல நல்லவருன்னு சொன்னது நீங்கதான்...ஞாபகம் இருக்கா?

கிரி said...

நல்லா காமெடியா!!! போச்சு போல ;-)

எம்.எம்.அப்துல்லா said...

//ம்ம்ம்...வாங்கி கொடுத்ததுக்கு நல்லா தான்ய்யா கூவுறா!! ;))//

ஃபீல் பண்ணி கூவுறாய்யா..

:))

நான் ஆதவன் said...

//கிரி said...

நல்லா காமெடியா!!! போச்சு போல ;-)//

ஆமா கிரி...
---------------------------------------------------------
//எம்.எம்.அப்துல்லா said...

//ம்ம்ம்...வாங்கி கொடுத்ததுக்கு நல்லா தான்ய்யா கூவுறா!! ;))//

ஃபீல் பண்ணி கூவுறாய்யா..

:))//

வாங்கண்ணே....ஆமாண்ணே கரெக்ட்டா சொன்னீங்க

ஸ்ரீமதி said...

இந்த கோபி அண்ணா என் பதிவுக்கு வந்தா மட்டும் ஏன் ஒரு ஸ்மைலி மட்டுமே போடராருன்னு அடுத்த முறை பார்த்தா கேட்டுட்டு வாங்க அண்ணா :((

தங்கம் said...

நான் ஒரு ஈழத் தமிழனா இந்த கட்டுரையப் படிக்கும் போது என் கண்களில் நீர்... ஒன்று ஆனந்த கண்ணீர்... எங்களைப் பற்றி நித்தமும் சிந்திக்கும் தொப்புள் கொடி உறவுகள் பற்றி.. மற்றது எங்களைப் பற்றி கதைக்கிறதையே தாங்க முடியவில்லை உங்களால், எப்படி நாங்கள் எத்தனை எத்தனியையோ தாங்கிக் கொள்கிறம் இங்கே??? இருந்தும் உங்கள் உணர்வுகளுக்கு நன்றிகள்...

Anonymous said...

Hello Boss...Recently I started reading ur posts...good...whr r u living in Dubai? Am at Deira (Naif). -Nawab

நான் ஆதவன் said...

//Anonymous said...

Hello Boss...Recently I started reading ur posts...good...whr r u living in Dubai? Am at Deira (Naif). -Nawab//

அப்படியா நான் சார்ஜாவுங்க...மெயில் பண்ணுங்க

இளைய பல்லவன் said...

//
"சிங்கங்கத்தோடு !"

//

இந்த சொற்குற்றத்தை யாருமே பார்க்காதது ஏன்???

ஆதவனார் விளக்குவாறா??

நான் ஆதவன் said...

//Blogger இளைய பல்லவன் said...

//
"சிங்கங்கத்தோடு !"

//

இந்த சொற்குற்றத்தை யாருமே பார்க்காதது ஏன்???

ஆதவனார் விளக்குவாறா??//

பல்லவன் இந்த தவறை "சென்ஷி" ஏற்கனவே சொல்லிட்டார்...நான் மாத்தாம இருக்கேன். நீங்க இரண்டாவது....ஆனாலும் உங்களை மாதிரி தமிழ் ஆர்வலர்கள் கிட்டயிருந்து தப்பிக்க முடியுமா?

நான் ஆதவன் said...

// ஸ்ரீமதி said...

இந்த கோபி அண்ணா என் பதிவுக்கு வந்தா மட்டும் ஏன் ஒரு ஸ்மைலி மட்டுமே போடராருன்னு அடுத்த முறை பார்த்தா கேட்டுட்டு வாங்க அண்ணா :((//


அவர்கிட்ட கேட்டேன் ஸ்ரீமதி. அவர் இப்பெல்லாம் ரொம்ப பிஸியாம். யாரோட பதிவையும் படிக்கவே டைம் இல்லைன்னாரு. இதுல படிச்சுட்டு விரிவா கமெண்ட் போட நேரம் கிடைப்பதில்லையாம். இந்த பதிவுல அவரை சம்பந்தப்படுத்தி எழுதியிருப்பதால் எனக்கு மட்டும் நிறைய கமெண்ட் :)

cheena (சீனா) said...

பரவாயில்லெயே - பதிவர் சந்திப்பு நல்ல படியா நடந்திருக்கே

நான் ஆதவன் said...

// cheena (சீனா) said...

பரவாயில்லெயே - பதிவர் சந்திப்பு நல்ல படியா நடந்திருக்கே//

ஆமாம் சீனா சார். என்னோட முதல் பதிவர் சந்திப்பு

தண்டோரா said...

ரொம்ப நல்லாயிருக்கு ...நிறைய எழதுங்கள் ...

Related Posts with Thumbnails