தமிழ் பிரியனுக்கு ஒரு எச்சரிக்கை!!

சில நிகழ்வுகள் நடந்து சில பல ஆண்டுகள் ஆனாலும் அதனோடு தொடர்புடைய சில பொருட்களையோ நபர்களையோ பார்க்கும் போது நம் நினைவில் சட்டென்று திரும்ப வரும்.

சில பதிவுகளும் அப்படி தான். தமிழ்பிரியனின் இந்த துபாய் நினைவுகள் - 7 வருஷமாக கூடவே ஒட்டி வந்த உறவு! பதிவைப் படித்து விட்டு எனக்கு இந்த லெபன் அப்பை கடைகளில் பார்க்கும் போதெல்லாம் தமிழ் ப்ரியன் நினைவு வரும்.



அந்த பதிவு மறக்காமல் போனதற்கு காரணம் ஒன்றும் தேடவேண்டியதில்லை. எப்போதாவது சைட்டிற்கு செல்லும் போது அதே போன்ற நிகழ்வை நேரில் பல தடவை கண்டிருக்கிறேன். அதை இயல்பாக தமிழ் பிரியன் சொல்லியதும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அந்த பானத்தை அருமருந்தாக அவர் புகழ்ந்து இப்பொழுது அதை மிகவும் இழப்பதாக கூறியிருந்தார். எல்லாம் நன்மைக்கே.

சார்ஜா முனிசிபாலிட்டி இந்த பானத்தை குடிக்க தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இந்த பானத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.






அமீரக நண்பர்கள் இந்த பானத்தை வாங்கி குடிப்பதை தவிர்கவும். இன்னும் சில கடைகளில் (பழைய ஸ்டாக்) இதை விற்பதை காணமுடிந்தது. ஆகவே உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.


ஆகவே தமிழ் ப்ரியன் இப்ப நீங்க எதையும் மிஸ் பண்ணல....கொஞ்சம் சிரிங்க...ம்ம்ம்ம்ம்
இனிமே மொட்டு வளையை பார்த்து ரொம்ப யோசிக்காதீங்க. சரியா...

9 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

நான் ஆதவன் said...

//Valaipookkal said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team//

ரைட்டுடுடுடுடு...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அடுத்த வாரம் வந்துடுவாராம்.. அதுக்குள்ள ஸ்டாக் தீந்துடுமா அங்க :)

நான் ஆதவன் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஓ அடுத்த வாரம் வந்துடுவாராம்.. அதுக்குள்ள ஸ்டாக் தீந்துடுமா அங்க :)//

வாங்க மேடம். அவர் சவூதில இருக்குறாரு மேடம். சவூதில தடை இருக்கான்னு தெரியல...

rapp said...

வலைப்பூக்கள் எல்லாருக்கும் போய் இப்டி அழகா பின்னூட்டம் போடறீங்களே, எனக்கும் ஏக்கமா இருக்கு, என் பதிவிலயும் மதிச்சு, இப்டி போடுங்கப்பா:):):) அதுக்குப் பதிவுன்னு ஒன்னுத்தை போடனும்னு சின்னப்புள்ளத்தனமா பேசக்கூடாது.

ஸ்ரீமதி said...

அண்ணாவுக்காக :))

cheena (சீனா) said...

aakaa நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் - இவ்ளோ தானா ? அவரு என்னமோ கொசுவத்தி சுத்தினா - அவர் ஆசயக் கெடுக்கறீங்களே !!

நான் ஆதவன் said...

// cheena (சீனா) said...

aakaa நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் - இவ்ளோ தானா ? அவரு என்னமோ கொசுவத்தி சுத்தினா - அவர் ஆசயக் கெடுக்கறீங்களே !!//

சும்மா தான் ஐயா :) கொஞ்சம் பயமுறுத்தி பாக்கலாமேனு...

நானானி said...

நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்! இவ்வளவுதானா?

நம்மூரிலேயும் குடிக்க தகுதியற்ற பானங்கள் நிறைய இருக்குது, உங்களை மாதிரி யார் அக்கறை எடுத்து எச்சரிக்கிறார்கள்?

Related Posts with Thumbnails