எங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு "ரஹ்மானை" தலையில் வைத்து கொண்டாட...

இன்று எந்த இந்திய தொலைக்காட்சி சேனல்களை திருப்பினாலும் ஒரே செய்தி தான். எந்த பத்திரிக்கை இணையத்திற்கு சென்றாலும் ஒரே செய்தி தான். அது நம் ஏ.ஆர் ரஹ்மான் வாங்கிய ஆஸ்காரைப் பற்றிய செய்திகள் தான்.

உண்மையில் அனைந்து இந்தியனும் பெருமைபடவேண்டிய விஷயம் தான். ஒவ்வொரு இந்தியனும் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.

இதுவரை எட்டாக்கனியாக இருந்த இந்திய சினிமாவிற்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் ரஹ்மான்.

பாலிவுடின் பெரிய பெரிய நடிகர்களும், நடிகைகளும் இயக்குனர்களும் ரஹ்மானால் இந்தியாவிற்கே பெருமை கிடைத்ததாக பல பேட்டிகளை படிக்க முடிந்தது.

"ரங்தே பஸந்தி" படத்தின் இயக்குனர் ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா "ரஹ்மானால் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை இணைந்தது மட்டுமில்லாமல் இப்போது கிழக்கும் மேற்கும் இணைந்திருக்கிறது" என்கிறார். இவர் சினிமாவை மட்டும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

எந்த டி.வியை பார்த்தாலும் ரஹ்மான் பற்றிய செய்திகள். அவரது வாழ்க்கை பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

கண்டிப்பாக இந்த செய்திகளை மூலை முடுக்கிலுள்ள எல்லா இந்தியனுக்கும் எடுத்து சென்றிருக்கும் இந்த மீடியாக்கள். அனைவருக்கும் அந்த காட்சியை பார்க்கும் போது உடல் சிலிர்த்திருக்கும். அந்த புண்ணியமெல்லாம் மீடியாவையே சாரும்.

சரி இந்த வட இந்திய மீடியாக்கள் இத்தனை நாள் எங்கிருந்தார்கள்?. ஒரு தமிழன் பேரும் புகழும் அடையும் போது சந்தோஷமாக இவன் இந்தியன் என்பதில் எங்களுக்கு பெருமை என்று தீடீர் பாசத்தில் வாய்கூசாமல் கூறும் பிரபலங்களும், மீடியாக்களும் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்ட நூற்றுகணக்கான தமிழக மீனவர்களை "இந்தியன் சுடப்பட்டான்" என்று என்றைக்காவது மருந்துக்காகவாவது மீடியாக்கள் தங்கள் மொழி சேனல்களில் காண்பித்ததுண்டா??

இலங்கை தமிழர்களுக்காக இங்கு ஒலிக்கும் தமிழர்களின் குரல்களை காண்பித்ததுண்டா?

இப்போது மட்டும் ஏன் இந்த பாசம்.

ஆதலால் எங்களுக்கு மட்டுமே "ரஹ்மானை" தலையில் வைத்து கொண்டாட உரிமை உண்டு. உங்கள் தீடீர் பாசம் எங்களுக்கு வேண்டாம்.

தனியாக அழ முடிந்த எங்களுக்கு உங்கள் வாழ்த்துகள் இல்லாமல் வாழவும் தெரியும்.

கடைசியாக ரஹ்மான் சார்.... நீங்கள் மேடையில் ஏறி தமிழில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற போது உடல் சிலிர்த்து விட்டது. "ஹேட்ஸ் ஆப் ரஹ்மான்" சார்.

சிட்டி எப்.எம் 101.6 - உசார்....

நேற்று காலை துபாய் சிட்டி எப்.எம் 101.6 நடந்த ஆங்கில உரையாடலின் மொழிபெயர்ப்பு....

"ஹலோ சோனு"

"யெஸ்... யாரு?"

"நான் பூஜா பேசுறேன். சிட்டி எப்.எம்ல இருந்து"

"ஓ அப்படியா? என்னால நம்பவே முடியல"

"உண்மையாதான் சோனு"

"சொல்லுங்க பூஜா என்ன விசயம்?"

"நீங்க கிருத்திகாவுக்கு(மற்றுமொரு RJ) மெயில்ல என்ன அனுப்பினீங்க?"

"ஏன் என்னாச்சு?"

"நேத்து மட்டும் கிட்டதட்ட 52 மெயில் அனுப்பியிருக்கீங்க...."

"ஆமா பூஜா...அது வந்து...."

"அதுவும் என்னமா உருகி உருகி ஏதேதொ எழுதி அனுப்பியிருக்கீங்க"

"ஏன் அவுங்க கோவிச்சுக்கிட்டாங்களா?"

"சோனு...சான்ஸே இல்லை. எல்லாமே சூப்பரா இருந்தது உங்க மெயில் பார்த்ததிலிருந்து அவ எப்பவும் உங்களைப் பத்தியே தான் பேசுறா"

"அப்படியா? என்ன பேசுறாங்க?"

"என்ன பேசுறாங்களா...என்ன தான் சொக்குபடி போட்டீங்களோ எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கா"

"ஈஸ் இட்"
"நான் அவளோட கஸின் தான் அதுனால உங்ககிட்ட நேரடியா கேட்கிறேன். அவளைப் பத்தி என்ன நினைக்கிறீங்க"

"நான் எப்பவும் அவுங்களப் பத்தி தான் நினைச்சுட்டு இருக்கேன். அதுனால தானே அப்படி மெயில் அனுப்பினேன் "

"அய்யோ உங்கள மாதிரி ஒரு ஆள் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனும். நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா பொருத்தமா இருப்பீங்க...எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு"

"ஹலோ நீங்க என்ன சொல்ல வரீங்க (சந்தோஷத்தில் திக்குமுக்காடி போய் வார்த்தைகள் வருகிறது)"

"இன்னுமா உங்களுக்கு புரியல..."

"இல்ல அவுங்க என்ன நினைக்குறாங்கன்னு தெரியாம..."

"அட என்னங்க நீங்க சதா உங்களப்பத்தியே யோசிச்சிட்டு இருக்காங்கன்றேன். திரும்பவும் கேட்கிறீங்க...அவுங்க இந்த மாதிரி சிரிச்சு சந்தோஷமா பேசி ரொம்ப நாள் ஆச்சு"

"அப்படியா(சந்தோஷத்துடன்)"

"ஆமாங்க அவளோட முத புருஷன் கொடுத்த டார்ச்சர்ல ரொம்ப நாள் மூடில இருந்தா இப்ப தான்.. "

"எக்ஸ்கியூஸ்மீ..ஒரு நிமிஷம்..அவுங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?"

"ஆமா சோனு. என்ன சோனு அவளோட பெரிய ஃபேனா இருந்துகிட்டு அவளப் பத்தி எதுவும் விசாரிக்கலையா என்ன"

"இருங்க எனக்கு ஒன்னும் புரியல(நடுக்கத்துடன்)"

"ஹேய் சோனு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை... உனக்கு சர்பரைஸ்..அவளோட ஒரு சின்ன அழகான தேவதை "குஷி"யைப் பார்த்தா நீ உலகத்தையே மறந்திடுவ"

"என்னது குழந்தையா? அவுங்களுக்கு என்ன வயசிருக்கும்"

"இருபத்தெட்டு...உனக்கென்ன வயசு?"

"இருபத்தஞ்சு தான் ஆகுது"

"இப்பல்லாம் மூணு வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லை..நீ, கிருத்திகா, குஷி மூணு பேரையும் ஒரே பேமிலியா நினைச்சுப் பார்க்கவே எனக்கு சந்தோஷமா இருக்கு. என்ன சோனு சத்ததையே காணோம்?"

"இல்ல என் அம்மா அப்பாகிட்ட கேட்டு தான் முடிவெடுக்கனும்...(இழுக்கிறான்)"

"ஏன் சோனு...." என்று அவள் முடிக்கும் போது "ஹேப்பி பர்த்டே டூ யூ" என்ற பாட்டு ஒலிக்க அங்கு இரண்டு பெண்கள் சிரிக்க கேட்டுகொண்டிருந்தவன் கொஞ்சம் அதிர்ச்சியடைந்து பின்பு அவனை கலாய்கிறார்கள் என்று புரிகிறான்.

"சோனு நீங்க சிட்டி எப்.எம் 101.6 லைவ்வா பேசிட்டிருக்கீங்க. பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று கிருத்திகா வருகிறார்.

சோனு நீங்க பயப்படவேண்டாம் என்னைய கல்யாணமும் செய்திக்க வேண்டாம் என்று சிரிப்பை அடக்க முடியாமல் கூறிகிறாள். அவன் அசடு வழிந்து போனை வைக்கிறான்.

பின்பு 5 நிமிடம் கழிந்து "நிறைய மெசேஜ் வருகிறது. "கிருத்திகா உனக்கு 10 குழந்தை இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றெல்லாம் வருகிறது." என்று சிரித்துகொண்டே கூறிகிறாள். மெசேஜ் அனுப்பியவர்களுக்கு நன்றி வேறு.

இந்த உரையாடல் அப்போது கேட்க சுவாரஸியமாக இருந்தாலும் ஒரு ஆளை கலாய்க்க இந்த மாதிரி ஒரு விஷயத்தை கையாண்ட அந்த பெண்ணின் மேல் வெறுப்பு தான் வந்தது.

இது மட்டும் பெங்களூரில் நடந்திருந்தா நம்ம இராம சேனா அமைப்பு உண்மையாலும் கண்னாலம் செஞ்சு வச்சிருப்பாங்க.......அம்மணி சூதானமப்பு.
-----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வெள்ளிக்கிழமை துபாயில நண்பனைப் பார்த்துட்டு டாக்ஸிக்காக காத்திருந்தேன்.

மதியம்னால ரோடு கொஞ்சம் ட் ராபிக் இல்லாம இருந்தது. ஒரு டாக்ஸியை கையைப் போட்டு நிறுத்தினேன்.

அவன் கண்ணாடிய இறக்கி பார்த்தபோது இரண்டு பேருக்கும் ஒரே அதிர்ச்சி...
நான் "நீயா....ன்னு" கேட்க

அவன் "தும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"ன்னு இழுக்க...அப்படியே கொசுவத்தி சுருள் இரண்டு பேருக்கும் சுத்திச்சு....

ss1

சரியா ஒரு மாசம் முன்ன பொங்கலுக்கு மொதோ நாள். டெய்லி மெஸ்ல சாப்பிட்டு காஞ்சு போய் கிடக்கிற நாம, இந்த மாதிரி பொங்கல், தீபாவளின்னு ஏதாவது பண்டிகை வரும் போது பண்டிகையை கொண்டாடுற ஒரு நண்பருக்கு ஒரு நாள் முன்னவே போன் போட்டு விஷ் பண்றது வழக்கம்.

அவரும் யதார்த்தமா நாளைக்கு வாங்க தலைவா ஸ்பெஷல் சாப்பாடு இருக்குதுன்னு கூப்பிடுவார். பின்ன போன் பண்ணியதே அதுக்கு தானே...விடுவோமோ கண்டிப்பா உங்களுக்காக வரேன்ன்னு சொல்றது வழக்கம்.

இந்த வருஷமும் ஒரு நாள் முன்ன போன் செய்தப்ப அவரு "அண்ணே ப்ரீயா இருந்தா இப்ப ரூம் பக்கம் வாங்கண்ணேன்னு" சொன்னாரு. நானும் போனேன்.

நாளைக்கு பொங்கலுக்கு நிறைய சாமான் வாங்கனும் பர் துபாய் வரைக்கும் போய்ட்டு வரலாம் வாங்கன்னு கூப்பிட்டார். சரின்னு வேற வழியில்லாம போனேன்.

போய் நிறைய சாமானெல்லாம் வாங்கின பிறகு ஒரு இடத்தில அவ்ர் நின்னுட்டாரு. அவர் கண்ணு சும்மா பள பளன்னு மின்னுச்சு. என்னன்னு பார்த்தா "கரும்பு".

என்ன தலைவா இங்க நின்னுட்டீங்கன்னு கேட்டேன். கரும்பு வாங்கியே ஆகனும்னு அடம் பிடிச்சாரு. நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல....

சரின்னு வாங்கினோம். பஸ்ஸிக்காக காத்திருந்து பஸ்ஸில் ஏறப்போன போது டிரைவர் கரும்போட உள்ள்வே விடல.

டாக்ஸிகாரனும் வரமாட்டேன்னு சொல்லிட்டான். ரொம்ப நேரம் கழிச்சு ஒரு டாக்ஸிகாரன் வந்தான். உள்ள உட்காரசொன்னவன் கரும்பு டிரைவர் சீட்டு வரைக்கும் நீட்டிகிட்டு இருக்குற பார்த்து, உள்ள தள்றேன்னு டக்னு இரண்டு கரும்பையும் இரண்டா உடைச்சுட்டான்.

அவ்வளவுதான் நம்ம நண்பர் பத்ரகாளியா மாறி கத்த அவன் கத்த, ஹிந்தில இத்தனை கெட்ட வார்த்தை இருக்கான்னு அப்பதான் தெரிஞ்சுது.திரும்பவும் கொசுவத்தி சுருளுக்கு போவோம்.....

ss

ரெண்டு பேரும் திரும்ப ஜர்க்லருந்து வெளிய வந்தோம். எனக்கு அவனைப் பார்த்ததும் சிரிப்பு வந்து சிரிச்சேன். அவனும் சிரிச்சான்.

முத தடவையா ஒரு பாகிஸ்தானி இப்படி என்கிட்ட சிரிச்சு இப்ப தான் பார்க்கிறேன். அவனுக்கும் அந்த சம்பவத்தை நினைச்சு இப்ப சிரிப்பு வந்த அந்த நகைச்சுவை உணர்வு ஆச்சர்யமே....

டிஸ்கி: இரண்டு சுருள்லையும் வித்தியாசம் இருக்கு. கண்டு பிடிங்க பார்க்கலாம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------

போன வாரம் நண்பன் ஒருத்தன் அவனோட நண்பிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான். அன்னையர் தினம், காதலர் தினம் மாதிரி இன்னைக்கு "உலக கற்பழிப்பு தினம்"(World rape day). அதுனால இன்னைக்கு வெளிய எங்கையும் போகாதே என்று.

அதுக்கு அவகிட்ட இருந்து reply வந்தது....

FYI

நான் இன்னைக்கு பெசன்ட் நகர் போறேன்.

சிங்கங்கத்தோடு ஒரு தீடீர் பதிவர் சந்திப்பு!

கடந்த வாரம் ஜிமெயிலில் வந்த கோபிநாத் என்னுடைய நம்பர் கேட்டு, நான் கொடுத்ததும் உடனே போனில் அழைத்தார்.

இருவரும் பேசிக்கொண்ட பின் தான் தெரிய ஆரம்பித்தது சென்னையில் அவரும் நானும் ஒரே ஏரியா, பள்ளிகூடத்தில் எனக்கு சீனியர், காலேஜிலும் எனக்கு சீனியர்.

இந்த வாரத்தில் ஒரு நாள் மீட் பண்ணலாம் என்றார். ஓகே சொன்னேன் விதி வலியது என்று தெரியாமல்.....

திங்கட்கிழமை இரவு எட்டு மணிக்கு வரச்சொன்னது சிங்கம் கோபிநாத் (இதற்கு விளக்கம் கேட்பவர்கள் முத்துலட்சுமி மேடத்திடம் செல்லவும்).

சென்ஷியும் வருவதை உறுதிப்படுத்தினார். பள்ளி கல்லூரி சீனியர் ஒருவரை சந்திக்க போகிறோம் என்ற ஒரு பயம் கலந்த மரியாதையுடன் பொடி நடையாக சென்றேன்.

அவர் சொன்ன இடத்திற்கு சென்று அவருக்கு போன் செய்தால் பக்கத்திலேயே இருந்தார். பார்த்தால் எனக்கு ஜூனியர் மாதிரி இருக்கிறார். கட்டித்தழுவி அரவணைத்து இப்படி எல்லாம் ஒன்னும் (நல்லவேளை) செய்யல. கை கொடுத்தார், மிகவும் யதார்த்தமாக பழகினார். கொஞ்ச நேரத்திலேயே உரிமையோடு பேசியது கூச்சத்தை அறேவே போக்கியது.

நல்ல சிலு சிலுவென்று காற்று வீசியது. சென்ஷி வேறு இன்னும் வரவில்லை என்று கவலையோடு (: போன் செய்து கேட்டார் கோபிநாத். இந்த இரண்டுக்கும் சம்பந்தம் இருப்பது சென்ஷியை பார்த்த போது விளங்கியது. ஒல்லியான அடக்கமான உருவம்.

இவர் ஒரு படி மேலே போய் புதிய பதிவர் என்ற எந்த ஒரு வித்தியாசமும் பார்க்காமல் பழகினார். நல்ல பண்பானவர், பல திறமைகளில் இருந்தும் ஈகோ இல்லாமல் பழகும் தன்மையுள்ளவர், அழகானவர்(ஸ்ஸ்ஸ்ப்பா..).

கொஞ்ச தூரம் நடந்து ஒரு பாகிஸ்தானி ஹோட்டலுக்கு சென்றோம். அதுவரைக்கும் எல்லாம் நல்லா தான் போச்சு......

ஏன்யா ஒரு ஆளு புதுசா மாட்னான்னா இப்படியா கலாய்கிறது. நான் எப்படி பிரபலம்(?) ஆனேன்னு இரண்டு பேரும் பண்ண ஆராய்ச்சிய பார்த்தா எனக்கே ஆச்சர்யமா இருந்தது. உண்மையிலேயே அவுங்க ஆராய்ச்சிபடி நான் செய்திருந்தா கண்டிப்பா பிரபலம் ஆகியிருப்பேன். அதுக்காக என்னைய பத்தி இப்படியா புரளிய கிளப்புறது???

இப்படியே ஒரு மணி நேரம் போச்சு. மட்டனும், சிக்கனும் வாங்கி கொடுத்து தோள் மேல கைய போட்டு கூட்டிட்டு போகும் போதே ஒரு டவுட்... என்னடா இத பார்த்தா ஏதோ ஆடு மேல போட்ட மாலை மாதிரி இருக்கேன்னு டவுட் ஆனேன்.

பேச்சு கொஞ்சம் கொஞ்சமா சூடாகி இலங்கையில நடக்கிற பிரச்சனைக்கு போச்சு. மத்தலத்தில வாங்கின இடி மாதிரி இந்த சைடு ஒரு குத்து அந்த சைடு ஒரு குத்து. மட்டனும் சிக்கனும் செரிச்சு போச்சு. கொஞ்சம் டயர் ஆகியிருப்பாங்க போல. ஒரு ஐஸ்கிரீம வாங்கி கொடுத்து "மூத்திர(முட்டு) சந்தில" கூட்டுட்டி போய் மூச்சு திணற திணற பேச்சு. நானும் எவ்வளவு நேரம் தான் தாங்குறது. மணி பதினொன்றை ஆயிடுச்சு.

நான் டயர்டாகி போனதை சிங்கம் கவனிச்சு டீ வாங்கி கொடுத்து தெம்பாக்கிச்சு. இதுக்கு பேரு தான் தெளிய வச்சு அடிக்கிறது போல...... திரும்பவும் ஆரம்பிக்க போறாங்க போலன்னு பயந்துகிட்டே பார்த்தா சிங்கம் டயர்டாகி இருக்கும் போல.....

இன்னைக்கு இது போதும் மிச்சத்த இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு சொல்லுச்சு. சென்ஷி அண்ணனும் பாவம்டா இன்னைக்கு இது போதும்னு நினைச்சுகிட்டு போ சொல்லி உத்தரவு கொடுத்தது.

இப்படி (முத)பதிவர் சந்திப்பு நல்ல படியா முடிஞ்சு ரூமிற்கு வர பன்னிரெண்டு ஆயிடுச்சு.........

ss

எடுத்த போட்டாவை போடக்கூடாதுன்னு சிங்கம் கர்ஜித்தது. சரின்னு போடல...

தமிழ் பிரியனுக்கு ஒரு எச்சரிக்கை!!

சில நிகழ்வுகள் நடந்து சில பல ஆண்டுகள் ஆனாலும் அதனோடு தொடர்புடைய சில பொருட்களையோ நபர்களையோ பார்க்கும் போது நம் நினைவில் சட்டென்று திரும்ப வரும்.

சில பதிவுகளும் அப்படி தான். தமிழ்பிரியனின் இந்த துபாய் நினைவுகள் - 7 வருஷமாக கூடவே ஒட்டி வந்த உறவு! பதிவைப் படித்து விட்டு எனக்கு இந்த லெபன் அப்பை கடைகளில் பார்க்கும் போதெல்லாம் தமிழ் ப்ரியன் நினைவு வரும்.அந்த பதிவு மறக்காமல் போனதற்கு காரணம் ஒன்றும் தேடவேண்டியதில்லை. எப்போதாவது சைட்டிற்கு செல்லும் போது அதே போன்ற நிகழ்வை நேரில் பல தடவை கண்டிருக்கிறேன். அதை இயல்பாக தமிழ் பிரியன் சொல்லியதும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அந்த பானத்தை அருமருந்தாக அவர் புகழ்ந்து இப்பொழுது அதை மிகவும் இழப்பதாக கூறியிருந்தார். எல்லாம் நன்மைக்கே.

சார்ஜா முனிசிபாலிட்டி இந்த பானத்தை குடிக்க தகுதியற்றதாக அறிவித்துள்ளது. இந்த பானத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அமீரக நண்பர்கள் இந்த பானத்தை வாங்கி குடிப்பதை தவிர்கவும். இன்னும் சில கடைகளில் (பழைய ஸ்டாக்) இதை விற்பதை காணமுடிந்தது. ஆகவே உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.


ஆகவே தமிழ் ப்ரியன் இப்ப நீங்க எதையும் மிஸ் பண்ணல....கொஞ்சம் சிரிங்க...ம்ம்ம்ம்ம்
இனிமே மொட்டு வளையை பார்த்து ரொம்ப யோசிக்காதீங்க. சரியா...

தி.மு.க ஸ்பெஷல் கார்டூன்ஸ்

தி.மு.க பொதுக்குழுவில்....


அண்ணா சமாதியில்....
கேப்டன் அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்துகிறார்...
Related Posts with Thumbnails