"கஜினி" Vs "GHAJINI"

தமிழில் வைத்த மாதிரியே ஹிந்தியிலும் சம்பந்தமேயில்லாமல் படத்தின் தலைப்பை வைத்தால் மும்பையில் படத்தை
ஓட விடமாட்டார்கள் என யாராவது முருகதாஸிடம் சொல்லியிருக்க வேண்டும். அது தான் வில்லனின் பெயரையே
தைரியமாக தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

தமிழைப் போன்றே அதிரடியுடன் தொடங்குகிறது. கதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் கதையைப்
பற்றிய விமர்சனங்களை விட்டுவிடலாம்.

short term memory loss ஆக அமீர்கான் செய்யும் மேனரிசம் சூர்யாவை விட நன்றாக இருக்கிறது. உடம்பையும் நன்றாக ஏத்தி
வைத்திருக்கிறார். ஆனால் சஞ்சய் ராமசாமியாக வரும் சூர்யாவின் ஸ்டைலும் ராயல் லுக்கும் இவரிடம் மிஸ்ஸிங். ரியாஸ்கான்
முதன் முதலாக டைரியை ஓபன் செய்து சூர்யாவின் போட்டாவை பார்க்கும் போதே நமக்கும் ஒருவித ஈர்ப்பு ஏற்படும்.
"ஸ்கவுட் பாய்" போன்று டிரஸ் போட்டிருக்கும் அமீர்கானைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.

விமானத்திலிருந்து அமீர்கான் இறங்கி வரும் போதும் சட்டையெல்லாம் மடக்கி விட்டு ஏதோ "WWE"க்கு சண்டைக்கு
போகிற மாதிரி வருகிறார்.

படத்தின் இரண்டு ப்ளஸ். ஒன்று தமிழில் இருந்த தவறுகளெல்லாம் திருத்தப்பட்டிருக்கின்றன. அசினின் ஓபனிங் பாட்டு
கூட அசின் கனவு காண்பது போல எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் நயன்தாராவின் பாட்டிற்கு வில்லன் ஏன் வருகிறார்,
அவர் அங்கு வருவது சூர்யாவிற்கு எப்படி தெரியும், அவரது போட்டோ எப்படி சூர்யாவிற்கு கிடைக்கும் என்பதை
எல்லாம் சொல்லவில்லை. ஆனால் அதையெல்லாம் இதில் கதையோடு ஒட்டி சொல்லியிருக்கிறார்கள். இப்படி சிறிய
சிறிய விஷயங்களெல்லாம் பார்த்து பார்த்து அமீர்கான் செய்திருப்பது பாராட்டக்கூடியது.

இரண்டாவது அசின். கலக்கியிருக்கிறார் அசின். மிக அழகாக தெரிகிறார். அதே சுட்டித்தனம். குறிப்பாக சஞ்சயை
டில்லி விமானத்தில் பார்த்ததாக எல்லோரிடமும் 'உதார்' விடும் டயலாக் தமிழை விட அதிக சுட்டிதனம்.
பாலிவுட் ஹீரோயின்களுக்கு ஆப்பு வைக்க ஆண்டவன் அனுப்பியிருக்கிறான் போல. அடுத்த ஸ்ரீதேவி ரெடி என்று சொல்லலாம்.

ஆனால் தமிழில் உரையாடலில் கொடுத்த நகைச்சுவை அங்கே இல்லை. உதாரணத்திற்கு மனோபாலா ஆப்பிள் ஜூஸ்
கொண்டு வரும் போது அசின் "அய்யோ நீங்க ஏன் சார் இதை எடுத்துட்டு வரீங்க"
மனோபாலா "பரவாயில்லம்மா" என்பார். உடனே அசின் "இல்ல சார் எனக்கு ஆப்பிள் ஜூஸ் பிடிக்காது" என்பார். இது
போன்ற "கடி" படம் முழுவதும் தமிழை விட மிகக்குறைவே.

ஜியாகானிற்கு நயன்தாராவின் வேடம். நயன் தாராவை வைத்து தேவையில்லாமல் கவர்ச்சி காண்பித்தது போல் இல்லை.
கதைக்கு அவசியமான சீன்கள் மட்டுமே அவரை வைத்திருக்கிறார் முருகதாஸ். ஹாஸ்டலிலும் க்ளைமாக்ஸிலும்
நயன்தாரா கவர்ச்சியாக ஓடி வரும் (எப்படி கவனிச்சிருக்கேன் பாருங்க!) போன்ற அநாவசியமான சீன்கள் எதுவும்
இல்லை. அவர் ஆடும் பாட்டை கூட முழுசாக காட்டவில்லை. அவரது கண்ணே கவர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் நடிக்க
மட்டும் வைத்திருக்கிறார் டைரக்டர்.

இனி க்ளைமாக்ஸிற்கு வருவோம். அந்த இரட்டை வில்லன் கேரக்டரை தூக்கியதை பாராட்டி கொண்டே அடுத்தடுத்த
சீன்களை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது. அசினை காப்பாற்றுவதற்காக சூர்யா போடும் சண்டையை தூக்கி விட்டு
மொத்தமாக க்ளைமாக்ஸில் ஒரு பெரிய சண்டையை வைத்திருக்கிறார்கள். ஒரு அடியில் எல்லோரும் சுருண்டு
விழுகிறார்கள். கடைசி 20 நிமிடம் அச்சு அசல் தமிழ் அல்லது தெலுங்கு படத்தை பார்ப்பது போன்ற உணர்வு. அதுவும்
முடிவு, தமிழில் பார்த்துவிட்டு இதை பார்க்கும் போது கொட்டாவி தான் வருகிறது.

பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பிண்ணனியில் தமிழில் வெறி கொண்ட சூர்யாவிற்கும், ப்ளாஸ்பேக் சூர்யாவிற்கும்,
அசினின் காமெடிக்கும் கொடுக்கும் தீம் மியூஸிக் இதில் எடுபடவில்லை.

தமிழில் பார்க்காமல் ஹிந்தியில் முதலில் பார்ப்பவர்களுக்கு இந்த படம் விருந்தாக இருக்கலாம். ஆனால்
மொத்தத்தில் அமீர்கான் உடம்பை ஏத்தி ஆக்ஸனில் சூர்யாவை விட சிறப்பாக செய்து விட்டு, மற்ற காட்சிகளில் ஈடு
கொடுக்க முடியாமல் போகிறார்.

13 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

துளசி கோபால் said...

சொன்னாக் கோவிச்சுக்காதீங்க.......

சூர்யா ஆமீர்கான் ஒப்பிடும்போது ஆமீர் கிழவன் லுக்.


நான் இன்னும் ஹிந்தி வெர்ஷன் பார்க்கலை. இங்கே இந்த மாசம் திரையிடறாங்க. போகமாட்டேன். எப்படியும் ஊருக்குப் போகும்போது விமானத்தில் பார்த்துக்கலாம், இப்போ எதுக்கு 15 டாலர் அழணும்?

ஆ! இதழ்கள் said...

தமிழில் வைத்த மாதிரியே ஹிந்தியிலும் சம்பந்தமேயில்லாமல் படத்தின் தலைப்பை வைத்தால் //

அமீர்கான் முருகதாஸின் கண்ணை பார்த்து பெயர் காரணம் கேட்டிருக்கலாம்... அதற்கு மு.தா. என்ன சொல்லியிருப்பார்?

தொடர்ந்து முயற்சி செய்து பழிவாங்குவதாய்ச் சொல்லியிருக்கலாமோ?

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...

சொன்னாக் கோவிச்சுக்காதீங்க.......

சூர்யா ஆமீர்கான் ஒப்பிடும்போது ஆமீர் கிழவன் லுக்.//

நான் ஏன் கோவிச்சிக்க போறேன் டீச்சர்..உண்மை அது தானே.
ஆனா இந்த ஒப்பீடு இல்லாம படத்த பார்த்தோம்ன்னா அமீர்கான் ஓகே

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

தொடர்ந்து முயற்சி செய்து பழிவாங்குவதாய்ச் சொல்லியிருக்கலாமோ?//

தொடர்ந்து படையெடுத்து வந்த கஜினி ஒவ்வொரு தடவையும் தோற்கவில்லை மாறாக இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றான் என்பது வரலாறு. ஆனால் நம்மாளுங்க அவன் 16 முறை தோற்று போனான்னு கட்டு கதை கட்டி விட்டுட்டாங்க..

அதுனால இந்த விளக்கம் அங்க எடுபடாது.

Anonymous said...

I watched the film with an expectation that Amir would fare better than Surya. When we compare Amir with Surya,sincerely I tell you Amir is jujipee.

இளைய பல்லவன் said...

//
ஹாஸ்டலிலும் க்ளைமாக்ஸிலும்
நயன்தாரா கவர்ச்சியாக ஓடி வரும் (எப்படி கவனிச்சிருக்கேன் பாருங்க!)போன்ற அநாவசியமான சீன்கள் எதுவும் இல்லை.
//

நீங்க ரிலாக்ஸ் ஆளாச்சே, இதுவும் கவனிப்பீங்க. இதுக்கு மேலயும் கவனிப்பீங்க. !!

இது அனாவசியமான சீனா?

கிரி said...

//தமிழில் வைத்த மாதிரியே ஹிந்தியிலும் சம்பந்தமேயில்லாமல் படத்தின் தலைப்பை வைத்தால் மும்பையில் படத்தை
ஓட விடமாட்டார்கள் என யாராவது முருகதாஸிடம் சொல்லியிருக்க வேண்டும்.//

உண்மையில் பல முறை இவர் முயற்சி செய்து பழிவாங்குவார்..அதனாலேயே கஜினி என்று பெயர் வைத்ததாக முருகதாஸ் கூறி இருந்தார்.

எனவே சம்பந்தம் இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டியதில்லை.

நிழற்படம் said...
This comment has been removed by the author.
நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...
நீங்க ரிலாக்ஸ் ஆளாச்சே, இதுவும் கவனிப்பீங்க. இதுக்கு மேலயும் கவனிப்பீங்க. !!//

சத்தியமா அதுக்கு மேலயெல்லாம் கவனிக்கலங்க...

//இது அனாவசியமான சீனா?//

என்னைய மாதிரி நல்ல பசங்களுக்கு அது அநாவசியமான சீன் தான் :-)
---------------------------------------------------------------------
//கிரி said...
உண்மையில் பல முறை இவர் முயற்சி செய்து பழிவாங்குவார்..அதனாலேயே கஜினி என்று பெயர் வைத்ததாக முருகதாஸ் கூறி இருந்தார்.

எனவே சம்பந்தம் இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டியதில்லை.//

கிரி நான் ஆ!இதழ்களுக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும்
-------------------------------------------------------------------
//நிழற்படம் said...
This post has been removed by the author. //

என்ன சொன்னீங்க?? ஏன் எடுத்தீங்க?..

shabi said...

என்ன ஆதவன் இன்னும் நீங்க உங்க profile மாத்தலியே

ஸ்ரீமதி said...

:))

அன்புமணி said...

இந்தி கஜினிக்கு இசை நம்ம ஏ.ஆர்.ரகுமான். அதைச்சொல்லலேயே....

நான் ஆதவன் said...

//shabi said...

என்ன ஆதவன் இன்னும் நீங்க உங்க profile மாத்தலியே//

நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது :)
-------------------------------------------------------------
//ஸ்ரீமதி said...

:))//
:))))
--------------------------------------------------------------
//அன்புமணி said...

இந்தி கஜினிக்கு இசை நம்ம ஏ.ஆர்.ரகுமான். அதைச்சொல்லலேயே....//

மறந்துட்டேன் அன்புமணி..தாங்ஸ்

Related Posts with Thumbnails