"Slumdog Millionaire" விருதுகள்-வெட்கி தலைகுனியும் இந்தியர்கள்.


இந்தியர்களை வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராக கன்னத்தில் அறைந்தாலும் இந்த அளவிற்கு உறைத்திருக்குமா
என்பது சந்தேகமே.

பாலிவுட்டாலும், நம்ம நிதிஅமைச்சராலும் பட்டாடை போர்த்தி உலகநாடுகளிடையே மிகப்பிரமாண்டமாய் காட்டப்படும்
இந்தியாவை, துணியை உருவி அப்பட்டமாய் இது தான் இந்தியா என்று காட்டியிருக்கிறார் வெள்ளைகார
டைரக்டர். அது உண்மையாக இருப்பதால் பல காட்சிகளில் கண்ணீரையும், படம் முடிந்ததும் மௌனத்தையும் மட்டுமே
நம்மால் வெளிப்படுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல பேர் விமர்சனங்கள் செய்துவிட்டாலும் ஒரு நல்ல திரைப்படத்தை கண்டுவிட்டு அதைப் பற்றி எழுதாவிட்டால்
இந்த ப்ளாகர் உலகம் என்னை மன்னிக்காது.

கதாநாயகன் ஜமால்மாலிக்(Dev patel) காவல்துறையால் சித்தரவதைப்படுத்துவதோடு படம் தொடங்குறது. இருபது மில்லியன் பரிசு போட்டியில்
பத்து மில்லியன் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலை சொல்வதினால், அவன் ஏமாற்றுகிறான் என்று கருதி போட்டி
நடத்துபவர் காவல்துறையிடம் அவனை ஒப்படைத்துவிடுகிறார். மீதமிருக்கும் ஒரு கேள்வி நாளை போட்டி தொடங்கும்
போது கேட்கப்படும். அதற்குள் அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க காவல்துறை அவனை அடித்து துன்புறுத்துகிறது.

காவல் துறை அதிகாரியான இர்ஃபான் கான் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எப்படி தெரியும் என்று விசாரிக்கும் போது
ப்ளாஸ்பேக்ற்குள் ஒரு ப்ளாஸ்பேக் மலர்ந்து கதை நகர்கிறது. ஒவ்வொரு கேள்வியும், அவனின் வாழ்க்கையோடு
ஒன்றிப்போன நிகழ்வுகளால் ஏற்பட்ட வலியோடு வருவதால் அவனால் அதை எளிதாக கூறமுடிகிறது. கடைசியில் அவன் காவல்துறையிடமிருந்து
விடுவிக்கப்பட்டானா? கடைசி கேள்விக்கு பதில் கூறி கோடீஸ்வரன் ஆனானா? எதற்காக இந்த போட்டியில் கலந்து
கொண்டான்? என்ற கேள்விகளுக்கு பதில் தான் மீதி கதை.

கதை இவ்வாறு சொல்வதை கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் படத்தில் காட்சியமைப்புகளும், இசையும்
படத்தை பல விருதுகள் வாங்கி தர மிக தரமானதாக இருக்கின்றன.

வில்லன்கள் துரத்தி வர ஹீரோ சந்துகளில் ஓடிப் போகும் பல சேஸிங் காட்சிகளை கண்டுருப்போம். ஆனால்
சிறுவர்களை துரத்திப் போகும் போலிஸ்காரர்களின் சேஸிங் காட்சிகள் படமாக்கபட்ட விதம் இதுவரை தமிழ் சினிமாவில்
வரவில்லை. இந்திய சினிமாவில் உள்ளதா என தெரியவில்லை. அதற்கு கொடுத்த பிண்ணனி இசை காட்சிக்கு கூடுதல்
பலம். இதில் வரும் "they can't touch me" என்ற பாடல் அருமை. அந்த ஒரு பாடலில் மும்பை வாழ் சேரி வாசிகள் வாழும்
முறையை முழுதும் காணலாம்.

யாரப்பா அந்த சிறுவன்????(Ayuesh mahesh khedekar) கொள்ளை அழகு அவனிடம். அவன் காட்டும் முகபாவனை அடடா..கையையும் காலையும்
ஆட்டி வீர வசனம் பேசும் தமிழ் நடிகர்கள் அவனிடம் பாடம் கற்க செல்லலாம். முக்கியமாக, அவன் கழிவறையில்
இருக்கும் போது, (மன்னிக்கவும் அது கழிவு அறை அல்ல கழிவு ஓடம் என்று சொல்லலாம். ஸ்ட்ரைட் கனெக்ஷன் டூ
கூவம்) வெளியில் ஒரு ஆள் மிக அவசரமாக நெளிய இவன் முக்கி கொண்டே பேசும் டயலாக் டெலிவரி இருக்கிறதே.....
அடடா அற்புதம்.வெளியில் அமிதாப் பச்சன் வருகிறார் என்றதும் அவன் காட்டும் முகபாவனை, மற்றும் அவரை காண்பதற்காக அவன்
செய்யும் காரியத்திற்கு முன் காட்டும் முகபாவனை என அனைத்தும் ஃபர்பெக்ட். ஆனால் ஒரு நடிகனுக்காக ஒரு இந்தியன்
எந்த ஒரு கேவலத்தையும் செய்ய தயாராக இருக்கிறான் என்கிற உண்மையும் வெளிப்படுகிறது :( இதில் முதல் கேள்விக்கான
பதில் அவனுக்கு கிடைக்கிறது :)

இரண்டாவது கேள்வி இராமனின் கையில் இருப்பது என்ன? என்ற அபத்தமான கேள்வியை கேட்டாலும். கதாநாயகன்
ஒரு முஸ்லீமாக இருப்பதால் அந்த கேள்வி கொஞ்சம் சுவாரஸமானது. அதற்கு மனதை கனக்க வைக்கும் அவனது ப்ளாஸ்பேக்
இந்தியாவின் ஒரு கரும்புள்ளி :(

"Darshan Do Ghanshyam" என்ற பாடலை எழுதியவர் யார்? என்கிற கேள்விக்கு பதில் அனைவரையும் அதிர்ச்சியில்
உறைய வைக்கிறது. சிறிது வருடங்களுக்கு முன்னால் ஒரு வார இதழில் வடநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சிறுவர்,
சிறுமிகளை இங்கு(சென்னை சென்ட்ரலில்) பிச்சையும், பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்ய விடுவதாக படித்துள்ளேன்.
ஆனால் அது எப்படி நடக்கிறது என்று காட்டும் போது கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை. அதுவும் பின்னாளில்
கண் போன ஜமாலின் நண்பன் "நீ அதிர்ஷ்டகாரன்டா" என கூறும் போது கண் குளமாகுவதை தடுக்கமுடியவில்லை.

அதுவரை சிறுவர்களை இந்தியிலேயே பேச வைத்து அந்த குழந்தை தனம் மாறாமல் எடுத்தது புத்திசாலிதனம். ஓரளவு
மெச்சூட் ஆன பிறகு ஆங்கிலத்தில் உரையாடலை வைத்திருக்கிறார்கள். டைரக்டர் டச்.

ஜமாலின் அண்ணன் சலீம் பக்கா வில்லத்தனமாக இருந்தாலும் பாசம் அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. அதுவே கடைசியில்
ஜமாலையும் அவன் காதலியையும் சேர்க்க உதவியாக இருக்கிறது. ஹோட்டலில் ஜமாலும், சலீமும் பேசிக்கொண்டிருக்கையில்
சலீம் ஒரு குப்பையிலிருந்து கேன் ஒன்றை எடுத்து தண்ணீர் பிடித்து மீண்டும் மூடியை ஒட்ட வைப்பது அவனது கேடி
தனத்திற்கு நல்ல காட்சியமைப்பு. படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஜமாலின் காதலியாக வரும் லத்திகா (freida pinto) கருப்பாக அழகாக இருக்கிறாள். கொடுத்த வேலையை சரியாக
செய்திருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது. எங்கென்று ஞாபகம் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சி தொகுப்பாளராக அனீல் கபூர். அவர் நடிக்க வந்து முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டதாம்.
இன்னமும் கதாநாயகனாக இளமை மாறாக நடித்துகொண்டிருப்பவர். அவரது பெண்ணும் கதாநாயகியாக வலம் வந்துவிட்டார்.
எப்படி சார் இந்த மாதிரி தைரியமான வேடத்தில நடிக்கிறீங்க? எங்க ஹீரோவுக்கெல்லாம் 25வருசமா நடிச்சா நாங்க
பெரிய விழா எடுப்போம். இந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த சின்ன ரோல்ல எல்லாம் நடிக்க விடமாட்டோம் தெரியுமா?
கட் அவுட் வைப்போம். பால் அபிஷேகம் பண்ணுவோம். என்னமோ சார் உங்களுக்கு பொழைக்கவே தெரியல.

இதை ஒரு இந்தியன் படம் எடுத்திருந்தால் எனக்குள் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்று தெரியாது.
ஏனென்றால் ஒவ்வொரு இந்தியனும் இதே போல் ஏதாவது இந்திய யதார்த்தத்தில் மாட்டி கொண்டு வெளிவந்திருப்பான்.
ஆதலால் அவனின் பாதிப்பாக அதை பார்க்க தோன்றும். ஆனால் படம் இயக்கியதோ ஒரு வெள்ளைகாரன்.(Danny Boyle).
திரைக்கதை அமைத்ததும் ஒரு வெள்ளைகாரன்(Simon beaufoy). கதை மட்டும் "Vikas swarup" எழுதிய "Q&A" என்ற
நாவலை தழுவி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இந்த படததை எடுத்திருக்கிறார்கள் என்று
பார்க்கிற போது ஆச்சர்யம் அளிக்கிறது.

இந்தியில் பிரகாஷ்ராஜ் என்றால் அது "இர்ஃபான் கான்" என்று சத்தம் போட்டு சொல்லலாம் :)

படத்தில் ப்ளஸ் மட்டுமே உள்ளது என்றால் இல்லை... மைனஸும் இருக்கிறது. சிறுவர்கள் வன்முறை ஈடுபடுவதாக
காட்டியிருக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது. பின்பு பத்து பன்னிரண்டு வயதில் காதலியை தேடி அழைவதாக
காட்டியிருக்கும் காட்சிகள் ரொம்ம்ம்ம்ம்ப ஓவர்.... இந்திய சினிமாவிற்கே உண்டான காதல் காட்சிகள், காதலியை வில்லன்
கடத்துவது, க்ளைமாக்ஸில் இரயில் நிலையத்தில் ஒன்று சேர்வது என பார்த்து பார்த்து புளித்த காட்சிகள் என்றாலும்
அடர்த்தியான திரைக்கதையில் எதுவும் எரிச்சலை தரவில்லை. கடைசி பாட்டு சூப்பர் ஏ.ஆர் ரஹ்மான் சார்.

மொத்தத்தில் இந்தியாவின் டோட்டல் இமேஜை, உண்மையை சொல்லி டேமேஜ் ஆக்கிவிட்டு அதற்கு விருதும் கொடுத்து
நம்மை தலை குனிய செய்திருக்கிறார்கள் இந்த வெள்ளைகாரர்கள் :)

59 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

துளசி கோபால் said...

இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.

Anonymous said...

இந்தியாவின் குறைகளை வெளிச்சம் போடாத இயற்கையிலே வெளிச்சம் போட்டுக் காட்டிப் பரிசுகள் தட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.
ஏழ்மை மிகவும் கொடுமையானது.
அந்த ஏழ்மையைப் பயன் படுத்திப் பணக்காரர்கள் ஆவது மிக்கக் கொடூரமானது, ஆனால் படம் எடுத்தவர் பணம் பன்னுவதோ நியாயம்தான்.

SurveySan said...

kalakkalaa solli irukkeenga.

Indiavin 'yadhaartham' ippadi adikkadi veliyil kaattuvadhu nalladhunne, ippellaam thonudhu.

Sathyam maadhiri, mulaam poosi, oorai emaaththikkittu irukkaanuva ellaarum ;)

ஆ! இதழ்கள் said...

Sathyam maadhiri, mulaam poosi, oorai emaaththikkittu irukkaanuva ellaarum ;)//

சர்வேசனுக்கு ஒரு ரிப்பீட்டு.

ஷாஜி said...

//இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.//

நானும் தான்..

//எங்க ஹீரோவுக்கெல்லாம் 25வருசமா நடிச்சா நாங்க பெரிய விழா எடுப்போம். இந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த சின்ன ரோல்ல எல்லாம் நடிக்க விடமாட்டோம் தெரியுமா?
கட் அவுட் வைப்போம். பால் அபிஷேகம் பண்ணுவோம். என்னமோ சார் உங்களுக்கு பொழைக்கவே தெரியல.//

-- Note பண்றா.. Note பண்றா.. இத்த Note பண்றா.. (தமிழ் நாட்டு mass ஹிரோக்களுக்கு சவுக்கடி..)

கிரி said...

//ஷாஜி said...
//இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.//

நானும் தான்..//

நானும் தான் :-)

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...

இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.//

கண்டிப்பா டீச்சர். பார்க்க வேண்டிய படம் இது

Anonymous said...

//ஹோட்டலில் ஜமாலும், சலீமும் பேசிக்கொண்டிருக்கையில்
சலீம் ஒரு குப்பையிலிருந்து கேன் ஒன்றை எடுத்து தண்ணீர் பிடித்து மீண்டும் மூடியை ஒட்ட வைப்பது அவனது கேடி
தனத்திற்கு நல்ல காட்சியமைப்பு. படம் பார்த்தவர்கள் கவனித்திருப்பார்களா என்று தெரியவில்லை.//

கவனித்தேன். இரண்டு தடவைகளுக்கு மேல் பார்த்தால் இதைப் போல பல நுண்ணிய விஷயங்களை கவனிக்க முடியும்.

//சிறுவர்கள் வன்முறை ஈடுபடுவதாக
காட்டியிருக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது.//

மும்பையில் இது போன்ற சிறுவர்களை சர்வ சாதரணமாக பார்க்க இயலும். அதிகம் அல்ல என்பது என் கருத்து.

//மொத்தத்தில் இந்தியாவின் டோட்டல் இமேஜை, உண்மையை சொல்லி டேமேஜ் ஆக்கிவிட்டு அதற்கு விருதும் கொடுத்து
நம்மை தலை குனிய செய்திருக்கிறார்கள் இந்த வெள்ளைகாரர்கள் :) //

கசப்பான உண்மை...

பெற்றோர்களின் அளவில்லா பாசம், பாதுகாப்புடன் மழலையை கடத்த வேண்டிய வயதில் பசி, பட்டினி, ஆரோக்கியமற்ற சூழல், குழந்தைகள் மீதான வன்முறை போன்றவைகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் விளிம்பு நிலை குழந்தைகளின் வாழ்க்கை முறையை உறைக்கும் விதத்தில் பதிவு செய்துள்ளது இத்திரைப்படம்.

malar said...

இன்னும் பார்க்கலை.உங்கள் பதிவை பார்த்த பிறகு உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளது.

நான் ஆதவன் said...

//Anonymous said...

இந்தியாவின் குறைகளை வெளிச்சம் போடாத இயற்கையிலே வெளிச்சம் போட்டுக் காட்டிப் பரிசுகள் தட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.
ஏழ்மை மிகவும் கொடுமையானது.
அந்த ஏழ்மையைப் பயன் படுத்திப் பணக்காரர்கள் ஆவது மிக்கக் கொடூரமானது, ஆனால் படம் எடுத்தவர் பணம் பன்னுவதோ நியாயம்தான்//

அனானி அண்ணே இந்த மாதிரி ஏழ்மையை படம் பிடித்து பணம் பண்ணினாலும் பரவாயில்லை ஒரு நல்ல படம் கிடைக்குமில்ல..அப்படியே நம்ம சமுதாயத்தில ஏதாவது நல்லது நடந்தாலும் பரவாயில்லை

நான் ஆதவன் said...

//SurveySan said...

kalakkalaa solli irukkeenga.

Indiavin 'yadhaartham' ippadi adikkadi veliyil kaattuvadhu nalladhunne, ippellaam thonudhu.

Sathyam maadhiri, mulaam poosi, oorai emaaththikkittu irukkaanuva ellaarum ;)//

உண்மைதான் சர்வேசன்.. சத்யம் பிரச்சனையை க்ரெக்ட்டான உதாரணமா சொல்லியிருக்கீங்க. நன்றி சர்வேசன்

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

Sathyam maadhiri, mulaam poosi, oorai emaaththikkittu irukkaanuva ellaarum ;)//

சர்வேசனுக்கு ஒரு ரிப்பீட்டு.//

நன்றி ஆ!இதழ்கள்
-----------------------------------------------------------
//ஷாஜி said...

//இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.//

நானும் தான்..//

நன்றி ஷாஜி

//-- Note பண்றா.. Note பண்றா.. இத்த Note பண்றா.. (தமிழ் நாட்டு mass ஹிரோக்களுக்கு சவுக்கடி..)//

நோட் பண்ணி என்ன பண்ண ஷாஜி...நாம திருந்த மாட்டோம்

நான் ஆதவன் said...

//கிரி said...

//ஷாஜி said...
//இன்னும் பார்க்கலை. விடக்கூடாதுன்னு தோணுது இதைப் படிச்சபிறகு.//

நானும் தான்..//

நானும் தான் :-)//

என்ன இப்படி எல்லாரும் லைன் கட்டி நிக்கிறீங்க :) நில்லுங்க நில்லுங்க நல்ல விசயம் தான்

நான் ஆதவன் said...

//malar said...

இன்னும் பார்க்கலை.உங்கள் பதிவை பார்த்த பிறகு உடனே பார்க்க வேண்டும் போல் உள்ளது.//

நன்றி மலர்

நான் ஆதவன் said...

//
கவனித்தேன். இரண்டு தடவைகளுக்கு மேல் பார்த்தால் இதைப் போல பல நுண்ணிய விஷயங்களை கவனிக்க முடியும். //

நான் முத தடவையே கவனித்தேன் :-)

//மும்பையில் இது போன்ற சிறுவர்களை சர்வ சாதரணமாக பார்க்க இயலும். அதிகம் அல்ல என்பது என் கருத்து. //

இல்லை என்று நான் சொல்லவில்லை. அது போன்ற காட்சியமைப்புகளை குறைத்திருக்கலாம் என்பது என் கருத்து. இது போன்ற விடயங்களில் உள்ளதை உள்ளபடியே காண்பிக்க வேண்டிய அவசியம் வேண்டாமே..

//கசப்பான உண்மை...

பெற்றோர்களின் அளவில்லா பாசம், பாதுகாப்புடன் மழலையை கடத்த வேண்டிய வயதில் பசி, பட்டினி, ஆரோக்கியமற்ற சூழல், குழந்தைகள் மீதான வன்முறை போன்றவைகளை எதிர்நோக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் விளிம்பு நிலை குழந்தைகளின் வாழ்க்கை முறையை உறைக்கும் விதத்தில் பதிவு செய்துள்ளது இத்திரைப்படம்.//

ஆம் அனானி

Anonymous said...

Please read this following link.. As I lived in Mumbai for eight years.. I could not resist writing the blog:
http://australianbookkeeper.blogspot.com/2009/01/blog-post_10.html

Anonymous said...

you have commented about the actress,Lathika'even if she was dark(karuppu)she was pretty'
why do you have to add the adjective saying about the colour of the skin.
you have shown the indian mentality of equating beauty with skin colour.For white racists we are all 'Pakis' with brown skin,but among ourselves we think the person with light brown skin is prettier than others.what a stupid notion?
don't you think we indians are more colour prejudiced than white europeans.
Atleast in europe and america,a girl can be dark and become cinema actress or top model,but it can't happen in india.
you have failed to mention about the singer Mia arulpragasam.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் இன்னும் பார்க்கலை சாமி..

இத்தனை பேர் சொல்றப்ப கண்டிப்பா அபாரமான படமாத்தான் இருக்கணும்..

விமர்சனத்திற்கு நன்றி..

நான் ஆதவன் said...

dear anony,

i nevar felt any complex about our colours and i won't. i just tried to say that she was pretty.
any way i removed "irunthaalum" word from my post. :) thanks for your bold opinion.

yes i failed to mention abt the singer. even i dont know who was the singer until see ur comments. thanks for the information

Mahesh said...

நல்ல சொல்லியிருக்கீங்க... இது வரைக்கும் இந்த மாதிரி க்ராஸ்-ஓவர் படங்கள்ல எத்தனை படங்கள் இந்தியாவின் அழகிய முகத்தைப் பத்தி சொல்லி வெற்றி அடைஞ்சிருக்கு? 99% படங்கள் இந்தியாவின் அவல நிலையை, ஏழ்மையை, வறுமையை, இன்னும் சில அசிங்கங்களை (அது கூட என்னமோ இந்தியாவுல மட்டுந்தான் இப்பிடிங்கற மாதிரி) சொல்லியே காசு / அவார்டு பாத்துருக்காங்க.

அப்பறம் அந்த அனானி சொன்ன மாதிரி "கருப்பா இருந்தாலும்...." தவிர்த்திருக்கலாம்.

ambi said...

நன்றி ஆதவன், உங்க பதிவை படிச்சபுறம் பாக்கனும்னு தோணுது.

narsim said...

wow..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்

hajan said...

அருமையான வலைப்பதிவு

நான் ஆதவன் said...

//Anonymous said...

Please read this following link.. As I lived in Mumbai for eight years.. I could not resist writing the blog:
http://australianbookkeeper.blogspot.com/2009/01/blog-post_10.html//

என் கருத்தை அங்கு சொல்லியிருக்கிறேன் நாகராஜ்

நான் ஆதவன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நானும் இன்னும் பார்க்கலை சாமி..

இத்தனை பேர் சொல்றப்ப கண்டிப்பா அபாரமான படமாத்தான் இருக்கணும்..

விமர்சனத்திற்கு நன்றி..//

நன்றி உண்மை தமிழரே
-----------------------------------------------------------------
//Mahesh said...

நல்ல சொல்லியிருக்கீங்க... இது வரைக்கும் இந்த மாதிரி க்ராஸ்-ஓவர் படங்கள்ல எத்தனை படங்கள் இந்தியாவின் அழகிய முகத்தைப் பத்தி சொல்லி வெற்றி அடைஞ்சிருக்கு? 99% படங்கள் இந்தியாவின் அவல நிலையை, ஏழ்மையை, வறுமையை, இன்னும் சில அசிங்கங்களை (அது கூட என்னமோ இந்தியாவுல மட்டுந்தான் இப்பிடிங்கற மாதிரி) சொல்லியே காசு / அவார்டு பாத்துருக்காங்க. //

அதில் உண்மை இருப்பதால் அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியவில்லை மகேஷ்

//அப்பறம் அந்த அனானி சொன்ன மாதிரி "கருப்பா இருந்தாலும்...." தவிர்த்திருக்கலாம்.//

தவறு திருத்தப்பட்டுள்ளது மகேஷ்

நான் ஆதவன் said...

//ambi said...

நன்றி ஆதவன், உங்க பதிவை படிச்சபுறம் பாக்கனும்னு தோணுது.//

நன்றி அம்பி.
------------------------------------------------------------
//narsim said...

wow..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ஆதவன்//

நன்றி நர்சிம்
-------------------------------------------------------------
//hajan said...

அருமையான வலைப்பதிவு//

நன்றி ஹாஜன்

ஸ்ரீமதி said...

இன்னும் பார்க்கல.. :(( ஆனா அழகா சொல்லிருக்கீங்க அண்ணா.. :))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
இன்னும் பார்க்கல.. :(( ஆனா அழகா சொல்லிருக்கீங்க அண்ணா.. :))//

நன்றி தங்காச்சி..

Joe said...

Amitabh has slammed this movie saying that it portrays India in bad light & that slums, poor people exist even in the richest countries.

I would say, we need not be ashamed of our poverty, or the slums, our politicians need to be ashamed and they must do something constructive so that this country prospers. (okay, now that wouldn't happen in another century, but then every1 has a right to dream!)

’டொன்’ லீ said...

கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்கிறேன்

நானானி said...

எங்கே ஓடுது....எங்கேயிருக்கு? பார்க்கணும், பார்க்கணும்.

samy said...

please note:
siruvarkalai( oru siruvani ) police thurathum kaathi KAAKHA KAAKHA padathil ullathu...

நான் ஆதவன் said...

//Joe said...

Amitabh has slammed this movie saying that it portrays India in bad light & that slums, poor people exist even in the richest countries.

I would say, we need not be ashamed of our poverty, or the slums, our politicians need to be ashamed and they must do something constructive so that this country prospers. (okay, now that wouldn't happen in another century, but then every1 has a right to dream!)//

ஏழ்மைக்கு நாம் வெக்கப்படதேவையில்லை தான் ஜோ. ஆனால் அதற்கு காரணமான அரசியல்வாதியை தேர்ந்தெடுத்ததற்கு வெக்கப்படவேண்டும்

நான் ஆதவன் said...

//டொன்’ லீ said...

கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்கிறேன்//

நன்றி டொன்' லீ
----------------------------------------------------
//நானானி said...

எங்கே ஓடுது....எங்கேயிருக்கு? பார்க்கணும், பார்க்கணும்.//

சென்னையில வந்துடுச்சான்னு தெரியல நானானி..
-----------------------------------------------------------
//samy said...

please note:
siruvarkalai( oru siruvani ) police thurathum kaathi KAAKHA KAAKHA padathil ullathu...//

இது அது மாதிரி இல்ல சாமி. வேற மாதிரி சேஸிங் :) பார்த்தா உங்களுக்கே புரியும்

Personal Web Mate said...

எதற்க்காக இந்தியர்கள் தலைகுனியப்போகிறார்கள்? ஜனவரி 23 ஆம் தேதி வெளிவர வேண்டிய படம் இன்று நான் பிழைப்புக்காக வந்த மாகாராஷ்ட்ரத்தில் இரவுக் காட்சியாக ஓட இருக்கு. பார்த்தீர்களா? கள்ளத்தனம் பன்னுவதில் இந்தியன் எவ்வளவு வல்லவனேன்று? பதிவு அருமை! கண்டிப்பாக உங்கள் பதிவை வாசித்துவிட்டு படத்தைப் பார்க்க நிறைய பேர் போவார்களேன நம்புகிறேன்!

உமையணன் said...

//
SurveySan said...
kalakkalaa solli irukkeenga.

Indiavin 'yadhaartham' ippadi adikkadi veliyil kaattuvadhu nalladhunne, ippellaam thonudhu.

Sathyam maadhiri, mulaam poosi, oorai emaaththikkittu irukkaanuva ellaarum ;)
//

சர்வேசன்,

பருத்திவீரன் ஆஸ்காருக்கு அனுப்பப்படாமைக்கு அந்தப்படம் இந்தியாவின் மோசமான பக்கத்தைக் காட்டுகிறது அதனால் அனுப்பப்படாதது சரிதான் என்று நீங்கள் சொல்லியதாக நினைவு.

Anonymous said...

உங்களது விமர்சனம் வைத்து பார்க்கும் போது படம் கிட்டத்தட்ட சலாம் பாம்பே என்ற ஒரு படம் 20 வருடங்களுக்கு முன் வந்தது , அந்த படத்தின் நவீனமாக்கமாக இருக்கும் போல இருக்கிறது இந்த படம். அந்த படம் முழுக்க இந்தியில் தான் வரும். ஆனால் சலாம் பாம்பே பார்ப்பதற்கு மொழி எல்லாம் தேவை இல்லை.

படத்தின் முடிவில் படத்தின் தலைவனான அந்த சிறுவன் தனது வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும், அந்த கடிதத்தில் அவனது திட்டங்களை தெரிவிப்பதும் படம் பார்ப்பவர்களை அடுத்து என்ன காட்டப்போகிறார்கள் என்ற உந்துதலுக்கு தள்ளும். பிறகு கடிதம் முடிந்ததும் அந்த சிறுவன் சொல்லும் அஞ்சல் முகவரியில் தெரியும் பாருங்கள் ஒரு சோகம், அதைவிட அந்த மாதிரியான படத்திற்கு ஒரு முடிவு இனி யாரும் கொடுப்பதற்கு இல்லை.

படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவேன்.

பனிமலர்.

துளசி கோபால் said...

எங்கூர்லே ரிலீஸ், அடுத்தமாசம் அஞ்சாம்தேதி.

nandan said...

//ஏழ்மைக்கு நாம் வெக்கப்படதேவையில்லை தான் ஜோ. ஆனால் அதற்கு காரணமான அரசியல்வாதியை தேர்ந்தெடுத்ததற்கு வெக்கப்படவேண்டும்//
ஏன் வெட்கப்பட வேண்டும்? ஒரு ஓட்டிற்கு 5000 உரூபாய் வாங்கியிருக்கிறானல்லவா? அவனுடைய புத்திசாலித்தனத்தை நினைத்து பெருமை தான் படவேண்டும்.

Anonymous said...

Started like Hollywood
Ended like Bollywood

நான் ஆதவன் said...

//Personal Web Mate said...

எதற்க்காக இந்தியர்கள் தலைகுனியப்போகிறார்கள்? ஜனவரி 23 ஆம் தேதி வெளிவர வேண்டிய படம் இன்று நான் பிழைப்புக்காக வந்த மாகாராஷ்ட்ரத்தில் இரவுக் காட்சியாக ஓட இருக்கு. பார்த்தீர்களா? கள்ளத்தனம் பன்னுவதில் இந்தியன் எவ்வளவு வல்லவனேன்று? பதிவு அருமை! கண்டிப்பாக உங்கள் பதிவை வாசித்துவிட்டு படத்தைப் பார்க்க நிறைய பேர் போவார்களேன நம்புகிறேன்!//

என்னது இன்றைக்கு தான் அதுவும் இரவுகாட்சியாகவா?? சிரிப்பு தான் வருகிறது....
நன்றி Personal Web Mate

நான் ஆதவன் said...

//உமையணன் said...
சர்வேசன்,

பருத்திவீரன் ஆஸ்காருக்கு அனுப்பப்படாமைக்கு அந்தப்படம் இந்தியாவின் மோசமான பக்கத்தைக் காட்டுகிறது அதனால் அனுப்பப்படாதது சரிதான் என்று நீங்கள் சொல்லியதாக நினைவு//

மோசமான பக்கத்தை காட்டுவதால் நல்ல படத்தை ஒதுக்க முடியாது உமையணன். அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவரிடம் தான் கேட்க வேண்டும்

நான் ஆதவன் said...

//Anonymous said...

உங்களது விமர்சனம் வைத்து பார்க்கும் போது படம் கிட்டத்தட்ட சலாம் பாம்பே என்ற ஒரு படம் 20 வருடங்களுக்கு முன் வந்தது , அந்த படத்தின் நவீனமாக்கமாக இருக்கும் போல இருக்கிறது இந்த படம். அந்த படம் முழுக்க இந்தியில் தான் வரும். ஆனால் சலாம் பாம்பே பார்ப்பதற்கு மொழி எல்லாம் தேவை இல்லை.

படத்தின் முடிவில் படத்தின் தலைவனான அந்த சிறுவன் தனது வீட்டிற்கு ஒரு கடிதம் எழுதுவதும், அந்த கடிதத்தில் அவனது திட்டங்களை தெரிவிப்பதும் படம் பார்ப்பவர்களை அடுத்து என்ன காட்டப்போகிறார்கள் என்ற உந்துதலுக்கு தள்ளும். பிறகு கடிதம் முடிந்ததும் அந்த சிறுவன் சொல்லும் அஞ்சல் முகவரியில் தெரியும் பாருங்கள் ஒரு சோகம், அதைவிட அந்த மாதிரியான படத்திற்கு ஒரு முடிவு இனி யாரும் கொடுப்பதற்கு இல்லை.

படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவேன்.

பனிமலர்.//

படத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க பனிமலர். "சலாம் பாம்பே" டி.வி.டி கிடைச்சா பார்த்துட்டு நானும் விமர்சனம் எழுதுகிறேன்

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...

எங்கூர்லே ரிலீஸ், அடுத்தமாசம் அஞ்சாம்தேதி.//

பார்த்துட்டு கருத்தை சொல்லுங்க டீச்சர்
------------------------------------------------------------------
//nandan said...

//ஏழ்மைக்கு நாம் வெக்கப்படதேவையில்லை தான் ஜோ. ஆனால் அதற்கு காரணமான அரசியல்வாதியை தேர்ந்தெடுத்ததற்கு வெக்கப்படவேண்டும்//
ஏன் வெட்கப்பட வேண்டும்? ஒரு ஓட்டிற்கு 5000 உரூபாய் வாங்கியிருக்கிறானல்லவா? அவனுடைய புத்திசாலித்தனத்தை நினைத்து பெருமை தான் படவேண்டும்.//

கண்டிப்பா நாமெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ப புத்திசாலிதான்
-----------------------------------------------------------------------
//Anonymous said...

Started like Hollywood
Ended like Bollywood//

:)

Anonymous said...

It doesn't look like they are holding their heads down in shame. Looks like 'even if highlights our shame' we are glad you English recognized us! LOL.

I am really proud of Rahman. One can honestly say, he deserves it. It is nice to see at least a few, getting the recognition they deserve.

Coming to 'shame'... why look at everything from politicians. It is people from the society who become politicians. People need to change. At least, if one well off person sponsors a child's education, you will have millions of them off the street. How many middle class is willing to set aside some bucks for even the lowest care and school education?

At least in Tamilnadu, please try to change. If the minds of the people change, even those politicians will fear doing wrong. I know some things are not easy, but it's worth a try.

-kajan

An apt reply to Amitabh's blog about Slumdog Millionaire:

http://www.jocalling.com/2009/01/india-is-not-a-k-jo-film-sirjee/

இளைய பல்லவன் said...

நல்ல படத்திற்கு நல்ல விமரிசனம். நன்றி ஆதவன்.

அன்புடன் அருணா said...

//மொத்தத்தில் இந்தியாவின் டோட்டல் இமேஜை, உண்மையை சொல்லி டேமேஜ் ஆக்கிவிட்டு அதற்கு விருதும் கொடுத்து
நம்மை தலை குனிய செய்திருக்கிறார்கள் இந்த வெள்ளைகாரர்கள் :) //

அப்படியா??? இப்போ இந்தப் படம் பார்த்தே ஆகணுமான்னு தோணுது...
அன்புடன் அருணா

நான் ஆதவன் said...

//Anonymous said...

It doesn't look like they are holding their heads down in shame. Looks like 'even if highlights our shame' we are glad you English recognized us! LOL.

I am really proud of Rahman. One can honestly say, he deserves it. It is nice to see at least a few, getting the recognition they deserve.

Coming to 'shame'... why look at everything from politicians. It is people from the society who become politicians. People need to change. At least, if one well off person sponsors a child's education, you will have millions of them off the street. How many middle class is willing to set aside some bucks for even the lowest care and school education?//

-kajanabsolutely kajan :)

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

நல்ல படத்திற்கு நல்ல விமரிசனம். நன்றி ஆதவன்.//

நன்றிக்கு நன்றி பல்லவன்

நான் ஆதவன் said...

//அன்புடன் அருணா said...


அப்படியா??? இப்போ இந்தப் படம் பார்த்தே ஆகணுமான்னு தோணுது...
அன்புடன் அருணா//

பாருங்க அருணா...பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க

உமையணன் said...

//மோசமான பக்கத்தை காட்டுவதால் நல்ல படத்தை ஒதுக்க முடியாது உமையணன்.//

எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்.

//அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவரிடம் தான் கேட்க வேண்டு//

அவரிடம்தான் கேட்கிறேன்

காத்து said...

ஒரு நேர்மையான விமர்சனம்...

சந்தோஷ் = Santhosh said...

அமீரகத்துல இந்த படத்தை வெளியிட்டாங்களோ?

நான் ஆதவன் said...

//உமையணன் said...

எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்.//
நன்றி உமையணன்

//அவரிடம்தான் கேட்கிறேன்//

:)

நான் ஆதவன் said...

//காத்து said...

ஒரு நேர்மையான விமர்சனம்...//

நன்றி காத்து
---------------------------------------------------------------
//சந்தோஷ் = Santhosh said...

அமீரகத்துல இந்த படத்தை வெளியிட்டாங்களோ?//

இல்லைங்கோ. இந்த படம் விருது வாங்குறதுக்கு முன்னாடியே megauploadல ஏதோ ஒரு புண்ணியவான் போட்டிருக்கான்.

தாராவி said...

அடடடா, இந்தியாவுல யாருக்குமே தெரியாததயா வெள்ளக்காரன் படம் புடிச்சிட்டான், வெளி நாட்டுக்க்கார நாய்ங்க இந்தியா வரக்கும் வந்து ஏழ்மையப் பார்க்க முடியாது, அதனால அவங்க அவங்க ஊர்லயே உக்காந்து பர்க்கறதுக்கு எடுத்திருக்கான்...உன்ன வெள்ளக்காரன் எப்பன்டா மதிச்சான்.. நீ படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதறதுக்கா படம் எடுத்திருக்கான்...எவன் இந்தியாவ கேவலமா எழுதினாலோ படம் எடுத்தாலோ வெள்ளக்காரன் விருது கொடுப்பாண்டா...ஏன்டா நாயே சென்னையில குடிசைங்களே இல்லையா... இல்ல உங்க ஊர்ல ஏழ்மையே இல்லையா.. ஏழைங்களுக்கு நீ என்னடா உதவி செஞ்சிருக்க..படம் பார்த்தன்ன காசு வெள்ளக்காரனுக்குத்தானட போகும்...இந்தியாவுக்கு படம் தேவையில்ல பணம் தானடா வேணும்?

துளசி கோபால் said...

படம் இப்போதான் பார்த்தேன்.

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...

படம் இப்போதான் பார்த்தேன்.//

எப்படி இருந்தது டீச்சர்?

kabilanbhavani said...

கண்டிப்பா பாப்பேன்......

Related Posts with Thumbnails