கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...


கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா...

உன் கடிதத்தை முழுமையாக படித்து முடித்த போது கண்ணீரை அடக்க முடியவில்லை தோழா. உன் போல் எத்தனை உயிர்களை இழக்க வேண்டுமோ தெரியவில்லை. சில சோமாரிகளினாலும், அம்மா என்ற புனித வார்த்தைக்கே கொஞ்சமும் பொருத்தமில்லாதவர்களாலும், பத்திரிக்கை நடத்தும் சில மதவாதிகளாலும், கேடுகட்ட மத்திய அரசாலும் ஈழத்தில் இழந்தது மட்டுமல்லாது உன்னையும் இழந்தோமே தோழா..

நெஞ்சு வெம்முகிறது தோழா. சோனியாவிற்கு "பிரபாகரனின்" இரத்தம் பழிக்கு பழியாக வேண்டும் என்றால், தனி ஈழம் கிடைக்குமென்றால் அதையும் கேட்காமலே கொடுப்பானே பிரபாகரன். இன்னும் எவ்வளவு இரத்தம் வேண்டும் சோனியாவிற்கு....கொடுக்க தயாராக இருக்கிறோம் மேலும்....

வந்தாரை வாழவைக்கும் தமிழகம் தன் தொப்புள்கொடி உறவைமட்டுமல்லாது தன் உயிரையே எடுக்கிறதே. இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க வேண்டுமோ. உன் உயிர் கடைசியாக இருக்கட்டும் ஈழத்திற்கும் சேர்த்து....

தன் குடும்பத்தின் நலனுக்காக டெல்லி வரை ஓயாமல் பயணம் செய்யும் தமிழின தலைவருக்கு உன் உயிருக்காக ஒரு இரங்கற்பா மட்டும் எழுத நேரம் கிடைக்கும் தோழா.
வெட்கமே இல்லாமல் தமிழக அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்காக கூட்டணியை மாத்த தயாராக இருக்கும்.

காங்கிரஸ் சுயமரியாதைக்காரனுக்கு உன் உயிர் போனது உறைக்காது தோழா. மூச்சுக்கு மூச்சு காமராஜர் ஆட்சி அமைக்க சபதம் எடுக்கும் அவனுக்கு காமராஜர் இருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழனின் நிலையே மாற்றி இருப்பார் என்று உறைக்காது தோழா. அவனுக்கு அடுத்தவனின் காலைப் பிடித்து வாழவே தெரியும் உன்னை போல் ரோஷம் அவனுக்கு வராது. சூடு சொரனை கிடையாது.

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உனக்கு நடிக்க வரவில்லையே தோழா. வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்த உனக்கு தெரியவில்லையே தோழா. கண்ணீர் விட்டு கவிதை எழுத உனக்கு தெரியவில்லையே தோழா. கேவலம் எங்களைப் போல் கையாலாகாதனத்தைக் கண்டு தினமும் கண்ணீர் சிந்த தெரியவில்லையே தோழா.

மானங்கெட்ட, ரோஷங்கெட்ட இன்னும் மூன்று மாத காலம் இருக்கும் மத்திய அரசே.....அடுத்து நீ கூட்டணி வைக்கும் கட்சி கண்டிப்பாக தமிழகத்தில் வர போவதில்லை.

கடைசியாக கலைஞரே..... சிறிய மதவாத கட்சியான பி.ஜே.பிக்கு உள்ள தைரியம், ரோஷம் உங்கள் கட்சிக்கு இல்லையே. இந்த உயிருக்கு உங்கள் பதில் என்ன????
மீண்டும் மேனன்மார்களையும் நாயர்களையும் பேச்சுவார்த்தைக்கு அனுப்ப போகிறீர்களா???? தமிழனை மதிக்காத ஒருவனை நடுநிலை பேச்சாளனாக அனுப்ப போகிறீர்களா? எப்படி உறங்க முடிகிறது உங்களால்???? உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா??

14 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

அபி அப்பா said...

அழுவதை தவிர வேற என்ன செய்ய முடியும்P-((

HS said...

Muthukumar Photo
http://kelvi.net/wp-content/uploads/2009/01/muthukumar1.jpg

திலீபன்- said...

///////எப்படி உறங்க முடிகிறது உங்களால்???? உங்களை இன்னமும் நம்பிகொண்டிருக்கிறோமே, ஆறு கோடி தமிழனும் உயிர் விட வேண்டுமா?? /////////

பதவி வெறி கருணாநிதிக்கு தலைமேல் அமர்ந்து உள்ளது. கூடிய விரைவில் தமிழக மக்கள் எலுமிச்சை தடவுவார்கள்.

அய்யகோ பூமிக்கு பாரமாக இன்றும் பலர், வாழவேண்டிய மொட்டு கருகிவிட்டது.

viji said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

Anonymous said...

ஒ மரணித்த வீரனே உன்னுடல் மடிந்தாலும்
உன் புகழ் மடியவில்லையடா நீவிர் எம் தமிழீழம் மலர
உம்முயிர் தந்து உரம் தந்தீர் ஒ மாவீரனே உமக்கு எம் வீர வணக்கங்கள்

kajan said...

அவன் மடிந்து விட்டலும் அவன் நினைவுகள் மடியாது

Anonymous said...

முத்துக்குமாரின் ஆன்மா சாந்தி அடையவேண்டுமென்றால்..

அவரின் தன்னிலை விளக்க உரையில் குறிப்பிடப்பட்ட அனைத்து தலைவர்களும் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்..எனவே.. அது கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, பான் கி மூனோ என்று பாராமல் அனைவரிடமும் பதிலை பெற நாம் முயல வேண்டும்..வெறும் கவிதைகளும், சாடல்களும் இன்னுயிரை காக்காது..

தயவு செய்து இனியும் காலம் தாழ்த்தாது, முத்துகுமாரின் உரைக்கு பதில்.. பகிரங்கமாக அளிக்க அனைத்து சம்மந்தப்பட்டவர்களையும் வலியுறுத்தும் போராட்டம் எழுச்சி பெற வேண்டும்..

உண்ணா நோன்பு, அறவழிப்போராட்டம் எல்லாம் இனி திசை திருப்பப்பட்டு இந்த வழியில் இறங்க வேண்டும்..

இதில் பெரும் வெற்றியே தமிழனுக்கு நாம் செய்யும் பெரும் பங்காக எடுத்து கொள்ள வேண்டும். நிச்சயம் முத்துகுமாரின் ஆன்மா இதை அறிந்து மகிழ்வுறும் வண்ணம் நம் செயல்கள் இருக்க வேண்டும்..

நாம் வெறும் விட்டில் பூச்சிகள் அல்ல.. ஆலமாய் வளர்ந்து தரணி ஆளும் வல்லமை பெற்ற தமிழர்கள்.. நம்மை நாமே குறைத்து மதித்து சகதியில் வீழ வேண்டாம்.. பொறுமையின் எல்லையை கடந்து நிற்கிறோம்..

tsr said...

ஆழ்ந்த அனுதாபங்கள். எழுதியவை உண்மை நிலையின் பிரதிபலிப்புகள்--கீழுள்ளதைத் தவிர. விசாரணைக்கு தன்னை உட்படுத்தவே தயாராக இல்லாத பிரபாகரன், நீங்கள் குறிப்பிட்டுள்ளதெல்லாம்
கொஞம் ஓவர்.
" சோனியாவிற்கு "பிரபாகரனின்" இரத்தம் பழிக்கு பழியாக வேண்டும் என்றால், தனி ஈழம் கிடைக்குமென்றால் அதையும் கேட்காமலே கொடுப்பானே பிரபாகரன்."

ஜீவன் said...

கண்ணீர் அஞ்சலி ,,

Venkat said...

Another young victim to our dirty politics.

Venkat said...

நம்மூர் அரசியல் மல கிடங்கில் அநியாயமாக ஒரு அப்பாவியின் உயிர் பறிக்கப் படிருக்கிறது - ஆஸ்திரேலியாவில் இருந்து அழும் ஒரு தமிழன்

enpaarvaiyil said...

இவ்வளவு தெளிவாக சிந்திக்க தெரிந்த நீ
ஏன் அவசரப்பட்டு இந்த கோர முடிவை மேற்க்கொண்டாய்?
அதுதான் தமிழனின் பலவீனமோ?
உயிரோடு இருந்தால் அல்லவோ எதையும் சாதிக்கலாம் என்பதை
ஏன் மறந்தாயோ?
மற்றவர்களாவது உணர்ச்சிவசப்பட்டு உன்னை பின் தொடராமல்
தமிழ் மக்களைகாப்பாற்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து
ஒன்றுபட்டு செயல்படுவதே உன் ஆன்மாவிற்கு செலுத்தும்
நன்றிக்கடனாகும்

Joe said...

இறந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலி.

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது.

வாமுகோமு said...

கனவுகளையும் , கேள்விகளையும் வீசிவிட்டு , மனமிருந்தால் , நெஞ்சில் நீதியிருந்தால் , பெருந்தலைவர் வழி நடப்பவானாயிருந்தால் துன்பப்படும்
தமிழனுக்கு ஏதாவது செய் , அன்றேல் செத்துமடி என்பதை சொல்லாமல்
சொல்லி தன் இன்னுயிரை ஈழத்திற்க்காக ஈந்த தமிழனை பெற்றெடுத்த தாய்
தந்தையை மானமுள்ள தமிழனாய் இருந்தால் வணங்குவோம்.

கவலைப்படாதே உன் மகன் இல்லையென்று , ஈழம் கிடைத்தால் அனைவரும்
உன் பிள்ளைகள் , உன் நாடு என பெருமிதம் கொள்ளலாம் ,அதுவரைக்கும்
காத்திரு !

Related Posts with Thumbnails