"எந்திரன்" - கசிந்த கதை.. டென்ஷனாகும் சங்கர்

"தேவலோகத்துக்கு ஒரு இந்திரன்டா

பூலோகத்துக்கு இந்த எந்திரன்டா"


"எந்திரன்" கதையை ஆளாக்கு பிய்த்து கொண்டிருக்க, நம்ம பங்குக்கு ஒரு கதையை ரெடி செய்துட்டேன். பின்ன என்ன சூப்பர் ஸ்டாருக்கெல்லாம் நாம கதை சொல்ல இத விட்டா வேற நல்ல சான்ஸ் கிடைக்குமா என்னா?
நாசாவில் செவ்வாய் கிரகம் பற்றிய ஆராய்ச்சில ஈடுபட்டிருக்கிற ஒரு மிகப்பெரிய டீமுக்கு இந்திரன் (ரஜினி) தான் தலைவர்.

செவ்வாயில முதலில் அனுப்பிய விண்கலம் மக்கர் செய்ய இங்கிருக்க டீம் என்ன செய்யிறதுன்னு தெரியாம முழிக்க, அப்ப பிரச்சனை ஆன உடனே விண்கலத்தில இருக்கிற ஒரு சின்ன பெட்டி கைகால் எல்லாம் கிராபிக்ஸ் புண்ணியத்தில முளைச்சு ஒரு முழு மனுசனாகி பிரச்சனையை சரி செய்ய தொடங்க, இங்க இருக்கிற டீமுக்கு யார் அதுன்னு தெரியல. முகம் தெரிஞ்ச பின்னாடி எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி. அது டீம் லீடர் இந்திரன். அவர் யாருக்கும் தெரியாம இந்த மாதிரி பிரச்சனையை சமாளிக்க அவரைப் போலவே ஒரு ரோபாவை விண்கலத்தொடு அனுப்பி வைத்திருக்கிறார்.

ஒரு வெள்ளைகாரி "ஹூ இஸ் திஸ்"ன்னு கேட்க,

நம்ம விவேக் ஸ்டைலாக கண்ணாடிய தூக்கிட்டு "திஸ் இஸ் எந்திரன்"னு சொல்றாரு.

எல்லோரும் சந்தோஷத்தோடு "எந்திரன்" கத்த ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இந்திரனோ மிகவும் சோகமாக நிற்கிறார். நண்பர் விவேக் வந்து காரணம் கேட்கிறார். இன்று அவரது பெற்றோரின் நினைவு நாள்.மிகப்பெரிய கோடீஸ்வரன் குடும்பத்தில பிறந்த அவர் சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்து வீட்டு வேலைக்காரியின் அரவணைப்புல வளர்ந்து நல்லா படிஞ்சு இப்ப நாசாவில வேலை. இன்று அவரை வளர்த்த தாயைப் பார்க்க(வேலைக்காரி) விரும்புவதாக கூறுகிறார்.

உடனே இருவரும் அவர்களின் உயர் அதிகாரியை சந்தித்து அனுமதி கேட்க, அடுத்த விண்கலம் அனுப்ப இரண்டு மாத காலம் மட்டுமே இருப்பதால் இரண்டு வார விடுமுறை மட்டும் தருகிறார்.

இருவரும் இந்தியாவிற்கு செல்கின்றனர். அங்கு அவரது வளர்ப்பு தாய் தேடி அலைகிறார்.

இங்கு ஒரு மிகவும் பின் தங்கிய கிராமத்தில் தாயைக் கண்டுபிடிக்கிறார்.
தாயின் அண்ணன் மகளான ஐஸ் அங்கு ஏழைகளுக்கான ஒரு பள்ளிக்கூடம் நடத்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்திரன் தனது தாயை அமெரிக்காவிற்கு அழைக்கிறார். ஆனால் அவரது அண்ணன் மகளை விட்டு வரமறுக்கிறார். ஐஸ்ஸூம் அத்தையை இந்திரனிடம் விட மறுக்கிறார். ஐஸ்ஸூக்கு கல்யாணம் செய்துவிட்டு வருகிறேன் என்கிறார் தாய். ஐஸ் இந்த கிராமத்தில் எல்லா குழந்தைகளும் பள்ளிக்கு வந்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்கிறார்.

ஐஸ்ஸூன் கல்யாணத்தை நடத்த மாப்பிள்ளை பார்க்கிறார். மேலும் பள்ளிக்கு குழந்தைகளை சேர்க்க வீடு வீடாக சென்று மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். குழந்தைகளின் கல்வி மிக அவசியம் என எடுத்துரைக்கிறார். எவரும் வர வில்லை. காரணத்தை ஆராய்கிறார்.
ஜாதி வேற்றுமையால் கிராமத்தில் கீழ்ஜாதி மக்களுக்கு கல்வியறிவு கிடைக்காமல் இருக்கிறது. மதத்தினால் மூட நம்பிக்கைகளுக்கு அடிமையாகி இருக்கின்றனர். அந்த கிராமத்தில் மின்சாரவசதிகூட இல்லை.

எல்லாம் கண்டு மனம் மிகவும் நொந்து கொள்கிறார். இதற்கெல்லாம் அந்த ஊர் அரசியல் வாதியே காரணம் என்பதை கண்டு பிடிக்கிறார். அரசியல் வாதியால் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார். உதவிக்கு விண்கலத்திலிருந்து வந்த அவரது ரோபோவை அமெரிக்காவிலிருந்து அழைக்கிறார். அது மனிதனாக, மிருகமாக, பொருளாக மாறி அமெரிக்க போலிஸை ஏமாற்றி சென்னைக்கு வருகிறது.ஒரு கோளாறினால் இந்திரனுக்கும் எந்திரனுக்கும் உள்ள தொடர்பு நின்று போகிறது. சென்னையில் ரோபோவை இந்திரன் என நினைத்து அரசியல் வாதிகளின் ஆதரவு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது. அதை ரோபோ முறியடிக்க விசயம் பெரிதாகிறது.

அங்கு கிராமத்தில் தனது அறிவாலும் பணத்தாலும் ஊரிலுள்ள மலையின் ஊற்றிலிருந்து மின்சாரம் எடுக்க முயற்சி செய்கிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். கடும் முயற்சிக்கிடையே மின்சாரம் கிடைக்கிறது. எல்லோருக்கும் இந்திரனை பிடித்து போகிறது. இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். ஜாதி வேற்றுமையை தன் அறிவாலும், திறையாலும் முற்றிலும் ஒழிக்கிறார். எல்லோரும் ஒற்றுமையாய் வாழத்தொடங்குகிறார்கள்.

ஐஸ்ஸூக்கும் இந்திரன் மேல் கோடம்பாக்கம் சூத்திரங்களுக்குட்பட்டு அவரின் நல்ல மனதை கண்டு காதல் மலர்கிறது.

நாசா தலைமை விஞ்ஞானி ஒரு மாதம் ஆகியதால் இந்திரனை உடனே திரும்பி வருமாறு அழைக்கிறார். இந்திரன் இரண்டு நாள் டைம் கேட்கிறார்.

இதனிடையே சென்னையில் இந்திரனை தேடி எந்திரன் அலைகிறான். அவனை அரசியல் வாதிகள் துரத்த க்ராபிக்ஸ் உதவிடன் கடும் சண்டை நடக்கிறது. அரசியல் வாதிகளின் ஊழலை மீடியாவின் உதவியுடன் நாடு முழுதும் எந்திரன் அறியச் செய்கிறான். யாருக்கும் எந்திரன் ரோபோ என்று தெரியவில்லை.

ஐஸ் மற்றும் தாயை அமெரிக்காவிற்கு அழைக்கிறான் இந்திரன். ஆனால் ஐஸ் இந்தியாவை விட்டு வரமாட்டேன் என்கிறார். இந்தியாவில் ஏழை குழந்தகளுக்காக பள்ளி ஆரம்பிக்க போவதாக கூறி கண்ணீருடன் வர மறுக்கிறார். அது அவர் மனதை மாற்றுகிறது.

இந்திரன், ரோபோ மற்றும் விவேக் மட்டும் அமெரிக்காவிற்கு வந்து அந்த அடுத்த விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துகிறார்கள்.

இந்தியாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தை மட்டும் தான் தன்னால் மாற்ற முடிந்தது ஆனால் இந்தியா முழுதும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாசா வேலையை விட்டு இந்தியாவில் இஸ்ரோவில் பணி செய்ய முடிவெடுக்கிறார்.

இஸ்ரோவில் பணி செய்து கொண்டே ரோபோவின் உதவியோடு பல கிராமங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். ஐஸ்ஸை கரம் பிடிக்கிறார். தாயுடன் சந்தோஷமாக வாழ படம் முடிகிறது.

இடையில் விவேக்கின் பகுத்தறிவு பிரச்சார காமெடியும், கிராமத்தில் மக்களுக்காக ரஜினி பாடம் பகுத்தறிவு பாடலும், எந்திரன் அரசியல் வாதிகளை ஏமாற்றும் காமெடியும் சேர்ந்து இரண்டரை மணி நேர ஜனரஞ்சனமான படமாக அனைத்து ரஜினி ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என அனைவரையும் கவரும் படமாக இருக்கும்.

இந்த கதையை கேட்டு இத மிஸ் பண்ணிட்டோம்மேன்னு சங்கர் டென்ஷனாகலாம். இப்ப ஒன்னும் கெட்டு போகல. அவரோட அடுத்த படத்துக்கும் என்கிட்ட கதை ரெடி. (தலைப்புக்கு லின்ங் கொடுத்தாச்சு!)

டிஸ்கி1: இந்த படத்தின் மெயின் கதையை "ஸ்வதேஸ்" என்ற ஹிந்தி படத்திலிருந்து எடுத்துள்ளேன் என சரியாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு "வில்லு" படத்தின் முதல் பாதி பட டிஸ்க் பரிசாக கொடுக்கப்படும்.

டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம்.

டிஸ்கி3: எச்சரிக்கை: கலாய்த்து பின்னூட்டம் இடுபவர்கள் "செந்தழல் ரவி"ன் முன்னிறுத்தி "பார்பன ஜாதி"யைப் பற்றி உயர்வாக பேச வைக்கப்படுவர்.30 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

SUREஷ் said...

//ஒரு கோளாறினால் இந்திரனுக்கும் எந்திரனுக்கும் உள்ள தொடர்பு நின்று போகிறது. //


=

rajini + shankar

SUREஷ் said...

//அது மனிதனாக, மிருகமாக, பொருளாக மாறி அமெரிக்க போலிஸை ஏமாற்றி சென்னைக்கு வருகிறது.
//


hard work

SUREஷ் said...

கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்

ஆ! இதழ்கள் said...

நாசா தலைமை விஞ்ஞானி ஒரு மாதம் ஆகியதால் இந்திரனை உடனே திரும்பி வருமாறு அழைக்கிறார். இந்திரன் இரண்டு நாள் டைம் கேட்கிறார்.//

சொந்த அனுபவம் மாதிரி இருக்குது.

அனேகமா இப்படியே பொனா இந்திரன லே ஆஃப் பண்ணிருவாங்க.

Bleachingpowder said...

தலைவரையே கலாய்க்குறீங்கலா...இருங்க போய் கிரியையும், கார்க்கியை கூட்டிட்டு வந்து வச்சுக்குறேன் கச்சேரியை

Bleachingpowder said...

//டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம்.
//

ஐய்யய்யோ....அப்போ எனக்கு இரண்டாம் பாதியா??? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம், இப்படியெல்லாம் வன்முறையில் இறங்காதீங்க. ப்ளிஸ் அதை என் நண்பன் கார்க்கிக்கு அனுப்பிச்சுடுங்க....

Bleachingpowder said...

//டிஸ்கி3: எச்சரிக்கை: கலாய்த்து பின்னூட்டம் இடுபவர்கள் "செந்தழல் ரவி"ன் முன்னிறுத்தி "பார்பன ஜாதி"யைப் பற்றி உயர்வாக பேச வைக்கப்படுவர். //

இனிமே நான் இந்த பக்கமே வரமாட்டேன் போதுமா

RAMASUBRAMANIA SHARMA said...

Super Article...Avlothaaaaaan....

நான் ஆதவன் said...

//SUREஷ் said...

rajini + shankar

hard work

கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்//

நல்ல ரசிக்கும்படியான காம்பினேஷன் கொடுத்திருக்கீங்க சுரேஷ். உங்க "கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்" ஏற்கனவே படிச்சுட்டு கமெண்ட் போட்டுருக்கேன் பாருங்க.

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

சொந்த அனுபவம் மாதிரி இருக்குது.

அனேகமா இப்படியே பொனா இந்திரன லே ஆஃப் பண்ணிருவாங்க.//

யாரோட சொந்த அனுபவம்????? ஏன் கதை நல்லா இல்லையா? அப்படின்னா இன்னொரு கதை இருக்கு சொல்லவா?

நான் ஆதவன் said...

//Bleachingpowder said...

தலைவரையே கலாய்க்குறீங்கலா...இருங்க போய் கிரியையும், கார்க்கியை கூட்டிட்டு வந்து வச்சுக்குறேன் கச்சேரியை//

கலாய்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா நாங்க யாரையும் விடமாட்டோம் தல...

//ஐய்யய்யோ....அப்போ எனக்கு இரண்டாம் பாதியா??? எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம், இப்படியெல்லாம் வன்முறையில் இறங்காதீங்க. ப்ளிஸ் அதை என் நண்பன் கார்க்கிக்கு அனுப்பிச்சுடுங்க....//

இருங்க இருங்க கார்க்கி கிட்ட சொல்றேன்......(சொன்னா நானும் மாட்டிப்பேனோ???

//இனிமே நான் இந்த பக்கமே வரமாட்டேன் போதுமா//

இதுக்கெல்லாம் பயந்தா எப்படி??? எவ்வளவோ பார்த்துட்டீங்க இத பார்க்கமாட்டீங்களா??

நான் ஆதவன் said...

//RAMASUBRAMANIA SHARMA said...

Super Article...Avlothaaaaaan....//

நன்றி இராமசுப்பிரமணிய சர்மா...அவ்ளோ தான்..

ஷங்கர் Shankar said...

டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம்.

அதுக்கு பேசாம முட்டுசந்துல பதினோரு பேரைவைத்து மூச்சு திணற திணற அடிக்கலாம்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு போஸ்டர் .

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...

நான் ஆதவன் said...

//ஷங்கர் Shankar said...

அதுக்கு பேசாம முட்டுசந்துல பதினோரு பேரைவைத்து மூச்சு திணற திணற அடிக்கலாம்!//

ஹா..ஹா...ஆனா நாம ரொம்ப நல்லவங்களா, அதுனால எவ்வளவு அ(ந)டிச்சாலும் தாங்குவோம்ல...

நான் ஆதவன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்லாருக்கு போஸ்டர் .//
நன்றி சதீஷ்குமார்

ஈழ தமிழரை காக்க ஒரு பதிவிடுங்கள் ....
போரை நிறுத்த ஒரு குரல் கொடுங்கள் ....
நன்றி ...

கண்டிப்பாக...

மதுவதனன் மௌ. said...

// டிஸ்கி1: இந்த படத்தின் மெயின் கதையை "ஸ்வதேஸ்" என்ற ஹிந்தி படத்திலிருந்து எடுத்துள்ளேன் என சரியாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு "வில்லு" படத்தின் முதல் பாதி பட டிஸ்க் பரிசாக கொடுக்கப்படும்.

டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம். //

அம்மாடியோவ்.... வில்லு பட ட்ரெயிலருக்கான யூடியூப் லின்க யாரும் குடுத்தாலே கைகாலெல்லாம் உதறுது... அதுக்குள்ள டிஸ்ககா... வேணாம் சாமி...

மதுவதனன் மௌ.

ஈர வெங்காயம் said...

// டிஸ்கி3: எச்சரிக்கை: கலாய்த்து பின்னூட்டம் இடுபவர்கள் "செந்தழல் ரவி"ன் முன்னிறுத்தி "பார்பன ஜாதி"யைப் பற்றி உயர்வாக பேச வைக்கப்படுவர்.//

ஏன் இந்த கொலை வெறி..?

நான் ஆதவன் said...

//மதுவதனன் மௌ. said...

// டிஸ்கி1: இந்த படத்தின் மெயின் கதையை "ஸ்வதேஸ்" என்ற ஹிந்தி படத்திலிருந்து எடுத்துள்ளேன் என சரியாக பின்னூட்டம் இடுபவர்களுக்கு "வில்லு" படத்தின் முதல் பாதி பட டிஸ்க் பரிசாக கொடுக்கப்படும்.

டிஸ்கி2: தவறான பதில்களுக்கு "வில்லு" படத்தின் இரண்டாம் பாதி பட டிஸ்க் அனுப்பி வைக்க படம். //

அம்மாடியோவ்.... வில்லு பட ட்ரெயிலருக்கான யூடியூப் லின்க யாரும் குடுத்தாலே கைகாலெல்லாம் உதறுது... அதுக்குள்ள டிஸ்ககா... வேணாம் சாமி...

மதுவதனன் மௌ.//

வாங்க மதுவதனன் மௌ. வில்லு பத்தி சொன்னா எல்லாருக்கும் அல்லு இல்ல போல :)
-------------------------------------------------------------------
//ஈர வெங்காயம் said...

// டிஸ்கி3: எச்சரிக்கை: கலாய்த்து பின்னூட்டம் இடுபவர்கள் "செந்தழல் ரவி"ன் முன்னிறுத்தி "பார்பன ஜாதி"யைப் பற்றி உயர்வாக பேச வைக்கப்படுவர்.//

ஏன் இந்த கொலை வெறி..?//

வாங்க ஈரவெங்காயம்....சும்மா தான் :)

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் சொன்னது…
இந்த கதையில் "கதை" இருப்பதால் இதில் எங்கள் தலிவர் ரஜினி நடித்தால் அது அவருக்கு இழுக்கு ஏற்படும் என்பதை இமயமலை பாபாஜியின் அருளால் அறியப்பெற்று இந்த பதிவின் முதல் கண்டணத்தை என் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

(சோடா ப்ளீஸ்....)
//
நீங்க அங்க வந்து சொன்னத நான் இங்க வந்து ரிப்பீட்டிக்கிறேன்.

இளைய பல்லவன் said...

http://ilayapallavan.blogspot.com/2009/01/blog-post_17.html

நான் ஆதவன் said...

இதுல கதை இருக்குன்னு சொல்லி மனச தேத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பல்லவன். ஆனா தலைவர் இதுல நடிக்கமாட்டாருன்டீங்களே :((.

அவருக்காக இன்னொரு ரோபோ எழுதட்டுமா??

இதுவும் நீங்க சொன்னது தான். இதையும் ரீப்பீட்டுக்கிறேன் :-)

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

ஸ்ரீமதி said...

நல்லாத்தான் கத சொல்றீங்க :))

இளைய பல்லவன் said...

//
இதுவும் நீங்க சொன்னது தான். இதையும் ரீப்பீட்டுக்கிறேன் :-)
//

ஆக மொத்தம் தலைவர் சம்பந்தப் பட்டதெல்லாமே 'ரிப்பீட்டு'தான்னு சொல்றீங்களா?!?!? :)))

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

//
இதுவும் நீங்க சொன்னது தான். இதையும் ரீப்பீட்டுக்கிறேன் :-)
//

ஆக மொத்தம் தலைவர் சம்பந்தப் பட்டதெல்லாமே 'ரிப்பீட்டு'தான்னு சொல்றீங்களா?!?!? :)))//

நீங்க சொன்ன இந்த உண்மையை நான் ரிப்பீட்டுக்கிறேன் :)

பிரபு said...

கதை நல்லாயிருக்கு என்பதாலும் , கதையில் அரசியல் , மற்றும் போலி ஆன்மிகம் இரண்டும் குறைவாக இருப்பதால் அதில் ரசினி நடிக மாட்டார்

prabu said...

((aahaa....

parandhu parandhu kadha solraaingaleyya...))

prabu said...

(( aahaa...

parandhu parandhu kadha solraaingaleyya...

ivaingalukku namma samudhaayam enna kaimmaaru seiya pogudhu?

paesama namma vvsanga thalaivarukku, d.m.k. kootanila m.p. election la oru seat kudungayya!

kandipa ivar mattumaachum vetri blade oda thirumbi varuvar.

Related Posts with Thumbnails