ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி

பிரபலம்: "அடடே வாங்க வாங்க. நல்லாயிருக்கீங்களா? என்ன இந்த பக்கம்?"


நிருபர் : "நல்லாயிருக்கேன். உங்களை பார்க்கலாம்னு தான்.... உங்களோட இன்னொரு இடத்தையும் பிடிச்சுட்டாங்களாமே?
உங்க இனத்தையே விரட்டிவிட்டுட்டாங்களாமே? அத பத்தி பேட்டியெடுக்கலாம்ன்னு வந்தேன்"


"தவறை திருத்திக்கொள்ளுங்கள். பாதி பேரை கொன்னுருக்காங்க. மீதி தப்பி பிழைச்சவங்க இங்க ஓடி வந்திருக்காங்க"


"என்னது கொன்னுருகாங்களா? நாங்க கேட்ட வரைக்கும் அவுங்க உங்களை பாதுகாப்பா தான் வச்சிருந்ததா சொல்றாங்க"


"பாதுகாப்பா?? எங்களுக்கா?? நீங்க சொல்றத கேட்டா சிரிப்பு தான் வருது. ஆனா சிரிக்க கூட முடியாத நிலைமைல
நாங்க இருக்கோம்"


"இது மட்டும் உலக நாடுகளுக்கு தெரிஞ்சா அவுங்க சும்மா இருக்க மாட்டாங்களே"


"எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலயே. இத்தனை வருஷமா இந்த அநியாயம் நடந்திட்டு தான் இருக்குது
அப்பெல்லாம் எங்க போச்சு உங்க உலகநாடுகள். கொத்து கொத்தா கொன்னுட்டு இருக்கும் போது எங்க போச்சு உங்க
உலகநாடுகள். பேருக்கு தான் சட்டம்னு இருக்கு அத யாராவது மதிக்கிறாங்களா?"


"சும்மா கொத்து கொத்தா கொன்னுட்டு இருந்தாங்கன்னு சொல்றீங்களே. நீங்களே உங்களுக்குள்ள அடிச்சுட்டு செத்துப்
போனதை சொல்ல மாட்டேங்கிறீங்களே"


"இது சகோதரச்சண்டை, நாங்க அடிச்சுகிட்டு சாவோம் பின்னாடி ஒன்னாகிடுவோம் அத பத்தி உங்களுக்கு என்ன?
உலகத்தில எங்க தான் சண்டை இல்ல. அது இயற்கை. நாங்க அடிச்சுகிறத வச்சு நீங்க எங்களை கொல்லுவீங்களா?"


"நீங்க மட்டும் அவுங்கள கொல்றீங்க. எத்தனை அப்பாவி உயிர்கள் போயிருக்கு தெரியுமா? அதுவும் அவுங்க இடத்தில"


"என்னது அவுங்க இடமா?? உங்களுக்கு வரலாறு தெரியலன்னு நினைக்கிறேன். உங்களுக்கு மட்டுமில்ல இப்ப இருக்கிற
தலைமுறைக்கே வரலாறு தெரியமாட்டேங்குது. இந்த மண்ணில முதல்ல வாழ ஆரம்பிச்சது நாங்க தான்.
ஆனா இப்ப மெஜாரட்டிய வச்சு முடிவு பண்றீங்க. இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள் நாங்க தான்."


"உங்க ஆளுங்க சில பேர் உங்ககிட்ட இருந்து பிரிஞ்சு போய் அவுங்கிட்ட நல்ல வசதியோடும், நிம்மதியாகவும் இருக்கிறதா
சொல்றாங்களே"


"அவுங்க வாழ்றது இராஜ வாழ்க்கைன்னு நினைச்சுட்டு பேட்டி கொடுத்து இருக்காங்க. அது நிரந்தரம் இல்ல. உண்மைய
சொல்லனும்னா இப்ப தான் அவுங்க ஆபத்தில இருக்காங்க. அவுங்க ஒவ்வொரு அசைவையும் எதிரிங்க கவனிச்சிட்டு தான்
இருக்காங்க. அவுங்கள விட்டு விலகி வேற எங்காவது போகும் போது உயிருக்கே ஆபத்து ஏற்படும்னு தெரியல.
ஒரு இராஜ கைதி வாழ்கை தான் அவுங்களது இப்ப"


"சரி அவுங்க தான் அவுங்க சட்டதிட்டதிற்கு உட்பட்டு உங்கள வாழ அனுமதிக்கிறாங்க. அந்த சட்டத்தில உங்களுக்கு
போதிய அளவு பாதுகாப்பும் மரியாதையும் கிடைக்குது, அப்புறம் ஏன் முரண்டுபிடிக்கிறீங்க"


"நீங்க தெரிஞ்சு தான் இந்த கேள்வியை கேட்கிறீங்களான்னு தெரியல. அதாவது ஒரு அடிமை மாதிரி அவுங்க சொல்றத
கேட்டுட்டு வாழ சொல்றீங்க. அவுங்க பிச்சை போடுற வாழ்க்கை எதுவும் வேண்டாம். எங்களுக்கு தேவை
ஒரு சுதந்திர பூமி."


"சரி இப்ப இருக்கிற நிலைமையில இது நடக்கிற காரியமா, இப்ப அமெரிக்க அதிபரா ஓபாமா பதவி எடுத்திருக்காறே
உங்க கனவு சாத்தியப்படுமா?"


"சம்பந்தமே இல்லாம இருக்கு உங்க கேள்வி, இருந்தாலும் சொல்றேன் அமெரிக்காவில புதிய அதிபர் வந்தாலும்,
இந்தியாவில புதிய பிரதமர் வந்தாலும் எங்களுக்கு ஒரு நல்ல காலம் பொறக்கும் என்ற எண்ணமே போச்சு. எங்க கனவை
நாங்களே நிறைவேத்துனா தான் உண்டு"


"வெளிநாட்டில் உள்ள உங்க நண்பர்கள் தொடர்பு..."


"தேவையில்லாம எதுக்கு இப்ப அவுங்கள இதுல இழுக்கிறீங்க. அவுங்கலாவது நல்லா இருக்கட்டுமே. கடல் கடந்து
பரவி உலகம் முழுதும் வெவ்வேறு இடத்தில இருந்தாலும் உணர்வுபூர்வமா எங்களோட இனம் ஒன்னாதான் இருக்கு.
இந்த அரசாங்கம் தான் நவீன ஆயுதங்கள் பல வச்சுகிட்டு எங்களை அழிக்க முயற்சி பண்றாங்க. எங்ககிட்ட அந்த
மாதிரி நவீன ஆயுதம் எதுவும் கிடையாது. ஆனா நேர்மை இருக்கு.""இந்தியாவிலருந்து அனுப்பிய உதவி பொருட்கள் எல்லாம் நீங்க எடுத்துகிட்டதா சொல்றாங்களே???"


"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......."


"ஏன் கோவப்படுறீங்க நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?"


"பின்ன என்னாடா...அப்பேலருந்து சம்பந்தமே இல்லாம கேள்வி கேக்கிற......உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஒழுங்க போயிடு இல்ல
புலி அடுச்சு தான் சாவேன் அடம் பிடிச்சா இன்னைக்கு லஞ்ச் நீதான்"


என்று நம்ம பிரபலம் புலி கோபமாக உரும.. நிருபர் ஓட்டம் பிடித்தார்.


இது பிரபலம் ....

இதெல்லாம் அவுங்க இனம்தானுங்க ......

ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி - 1 க்கு செல்ல க்ளிக்கவும்

9 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

பின்னூட்ட களவானித்தனம்...

Anonymous said...

குப்பைத்தொட்டி

புல்லட் பாண்டி said...

நீங்க எந்த சைடு பாஸ்? அப்பிடியும் தாக்கி இப்பிடியும் தாக்கிறீங்க? யாராவது தொட்டி அடில ஓட்டையப் போட்டுட்டாய்ங்களோ?

நான் ஆதவன் said...

//புல்லட் பாண்டி said...
நீங்க எந்த சைடு பாஸ்? அப்பிடியும் தாக்கி இப்பிடியும் தாக்கிறீங்க?//

நீங்க எந்த கண்ணோட்டத்தில பாக்குறீங்கன்னு தெரியல :) நான் காடுகளையும், மிருகளையும் அழித்து கொண்டிருக்கும் மனித இனத்தைப் பற்றி சொல்லியிருக்கேன். அவ்வளவுதான்

//யாராவது தொட்டி அடில ஓட்டையப் போட்டுட்டாய்ங்களோ?//

ஆனாலும் குசும்பு ஜாஸ்திதான் உங்களுக்கு :)

ஸ்ரீமதி said...

நான் கமெண்ட் போட்டேனா?? இல்லையா?? :((

ஸ்ரீமதி said...

போட்டது என்னாச்சு??

ஸ்ரீமதி said...

சரி இப்ப போடறேன்..

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
பின்னூட்ட களவானித்தனம்...//

அண்ணா ஏன் இப்படி?? :))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

நான் கமெண்ட் போட்டேனா?? இல்லையா?? :((//
உனக்கே தெரியலையா??:) நான் மட்டுருத்தல் செய்யவில்லையே??

////நான் ஆதவன் said...
பின்னூட்ட களவானித்தனம்...//

அண்ணா ஏன் இப்படி?? :))//

யாரும் கமெண்ட் போடலன்னா இப்படிதான் நடக்கும்:))))

Related Posts with Thumbnails