இனி வரும் குருவி பறக்கனுமா? வில்லு சீறிப்பாயனுமா? விஜய்க்கு டிப்ஸ்

தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்த "தல" என்றழைக்கப்படும் அஜீத்திற்கு தக்க சமயத்தில் நம்ம சகா
கார்க்கி சில ஐடியாக்களை கொடுத்தார். அதை அஜித் இப்போது பின்பற்றி வருவதாக "லைட் ஆப் சுனில்" நேற்று
போன் செய்து கூறினார்.

ஆனால் இன்று அதே நிலையில் அநாமத்தாக இருக்கும் நம்ம இளை(த்)த தளபதி விஜய்க்கு யாரும் ஐடியா கொடுக்காமல்
இருக்கிறார்கள். சகாவை பொருத்த வரையில் "வில்லு" வெற்றிப்படம் போல, அதுனால நம்மளே ஐடியாவை உதிர்க்கலாம்.
டிஸ்கி: இது தமிழ் மசலாப் பட ரசிகர்களுக்கு மட்டும். உலக சினிமா பார்ப்பவர்கள் இந்தப் பதிவை படிக்காமல் இருப்பது
நலம்.

1)ஓப்பனிங் சாங்: படம் எப்படி இருந்தாலும் முதல் பாடலில் அரங்கம் அதிர ஆடித் தீர்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால் தியேட்டரில்
அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் இருந்தால்.... பின்ன என்னங்க குஷ்புவை போய் ஆட வச்சீங்கன்னா எவன் பார்ப்பான்?
இதென்ன மானாட மயிலாடன்னு நினைச்சீங்களா? டி.வில பாட்டை பார்த்த எனக்கே நைட்டு சாப்பாடு இறங்கல...பாவம்
தியேட்டர்ல படத்தை பார்த்தவங்க. அப்புறம் "அன்பு வேணும்", "ஆப்பம் வேணும்" எத்தனை நாளுக்கு பாடுவீங்க,
"நீ எனக்கு சகோதரன்" "நான் உனக்கு மச்சான்" சும்மா உறவு முறை வச்சு பாட கூடாது. அப்புறம் பிரச்சனையாயிடும்.

2)ரிலீஸ் தேதி: இப்பெல்லாம் பொங்கல், தீபாவளின்னு தனுஷ் படமும் இறங்க ஆரம்பிச்சுடிச்சு. "பொல்லாதவன்" வந்து
ATMக்கு ஆப்பு வச்சுது. "யாரடி நீ மோகனி" குருவிக்கு சூடு வச்சுது. இப்ப உங்க வில்லு "படிக்காதவனை" ஓட வச்சிடும்.
அதுனால தனுஷ் படம் எப்ப இறங்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி ரிலீஸ் பண்ணுங்க. அவர் வேற
நடிக்கவெல்லாம் செய்யிறாரு. அப்புறம் காசுக்கு ஆசப்பட்டு அதாவது "வீக் எண்ட் கலெக்ஷன்" பார்த்து அமெரிக்காவில
நாலு நாள் முன்னாடி ரிலீஸ் பண்ணீங்க. இப்ப என்னாச்சு? படத்தை பார்த்துட்டு அப்பவே நிறைய பேர் வில்லை
இராமன் உடைச்ச மாதிரி உடைச்சுட்டாங்க. அதைப் படிச்சுட்டு இங்க நிறைய பேர் பொங்கல் லீவுல இந்த படத்துக்கு
போக வேணாம்ன்னு முடிவெடுத்துட்டாங்க. (இல்லைன்னா மட்டும் போவோமான்னு கேட்டா நீங்க தான் உண்மையான புத்தசாலி).

3)இசை மற்றும் நடனம்: ஆமா ஏன் எல்லா பாட்டையும் தெலுங்கலிருந்தே எடுக்குறீங்க??? வேற மாநிலமே உங்க
காதுக்கு கேக்கலையா?. நம்ம ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் தெலுங்கு தான். உங்க பாட்டை கேட்டாலே இது தெலுங்கு
பாட்டுடான்னு உடனே சொல்லிடுவாங்க. பாடல்கள் ஹிட்டானாலே படம் ஹிட்டாயிடும்ன்னு நினைப்பா உங்களுக்கு???
சரி முன்னவாவது டான்ஸ் நல்லா ஆடிகிட்டு இருந்தீங்க. இப்ப என்னாச்சு? வர வர உங்க டான்ஸ் சகிக்கல.
இனிமே உங்க இசையமைப்பாளர்கிட்ட சொல்லி சொந்தமா இசையமைக்க சொல்லுங்க.

4)கதைக்களங்கள்: முன்னெல்லாம் தெலுங்கிலேருந்து கதையை உருவுனீங்க. ஜெயம் ரவி குடும்பம் உங்களுக்கு ஆப்பு
வச்சுது. இந்த பக்கம் மலையாளம். அத ஏற்கனவே பி.வாசுன்னு ஒருத்தர் உருவிகிட்டு இருக்காரு. புது கதைன்னு
சொல்லி குருவி எடுத்தீங்க. அது முக்கால் வாசி "சத்தரபதி"ன்னு ஒரு தெலுங்கு படத்திலிருந்து எடுத்திருக்கீங்கன்னு
கொஞ்சம் பேருக்கு தான் தெரியும். அதுவும் பாக்க சகிக்கல. இப்ப இந்திப் படம். ஆமா உங்களுக்கு கொஞ்சம் கூட
மூளையே இல்லையா???? போயும் போயும் அந்த "சோல்ஜர்" இந்தி படம் தானா கிடைச்சுது?. அதுவே ஒரு டப்பா
படம். சாரூக், ஹிருத்திக் ரோஷன் படம் எதுனா முயற்சி பண்ண தோணலையா உங்களுக்கு? பேசாம பி.வாசு கூட ஒரு
மலையாள ரீமேக் படம் பண்ணுங்க. எங்கையோஓஓஓஒ போயிடுவீங்க

5)இமேஜ்: இந்த எழவு எப்ப வந்தது உங்களுக்கு??? அந்த மண்ணெல்லாம் ஒன்னும் கிடையாது. உங்களுக்கு காமெடி
தான் நல்லா வருதில்ல, உங்க பாடி லாங்வேஜும் அதுக்கு ஒத்துழைக்குது அப்புறம் ஏன் தனியா பைட் பண்ணி காமெடி
பண்றீங்க? வடிவேலு காமெடியான செத்து செத்து விளையாடுறத வேற கடந்த இரண்டு படங்கள்ல பண்ணி காமெடி
பண்ணியிருக்கீங்க. அப்புறம் படத்துல வடிவேலுவும், விவேக்கும் எதுக்கு?
அப்புறம் இந்த வீர வசனம் பேசி டயத்த வேஸ்ட் பண்றதுக்கு பதிலா தங்கர் பச்சானோடவாவது ஒரு படம்
பண்ணுங்க ஏன்னா நடிப்புன்னா என்னான்னு தெரியனுமில்ல. அப்புறம் பின்னால அரசியல்வாதியா ஆயிட்டு, நடிக்க
தெரியாம பொழப்பு ஓடாது பாருங்க.

டிஸ்கி2. இதற்கு மரணமொக்கைச் சாமின்னு லேபிள் போட்டது தற்செயலாக நடந்த ஒன்று.

டிஸ்கி3. இதையெல்லாம் படிச்சுட்டு நான் தல ரசிகன்னு கேவலமான முடிவுக்கு வருபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது
"உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு" :)

டிஸ்கி4. புரியலன்னா இதற்கு தொடர்புடைய லின்ங் இது தான். படிச்சுட்டு இங்க வாங்க

37 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

இப்போ திருப்தியா உங்களுக்கு? நான் எப்போ வில்லு சூப்ப்ர் ஹிட்ன்னு சொன்னேன் சகா?

கார்க்கி said...

//லா தங்கர் பச்சானோடவாவது ஒரு படம்
பண்ணுங்க ஏன்னா நடிப்புன்னா என்னான்னு தெரியனுமில்ல//

இப்படியெல்லாம் அசிங்கபடுத்துவீங்க எங தளப்திய?

/பின்ன என்னங்க குஷ்புவை போய் ஆட வச்சீங்கன்னா எவன் பார்ப்பான்//

ஹலோ குஷ்பூ கொஞ்ச நேரம்தான் ஆடறாங்க..

//முன்னவாவது டான்ஸ் நல்லா ஆடிகிட்டு இருந்தீங்க. இப்ப என்னாச்சு? வர வர உங்க டான்ஸ் சகிக்கல.//

சகிக்கல என்பது அதிகம்.. ஆனா கம்ம்மி ஆயிடுச்சு.. உண்மைதான்

/உங்களுக்கு காமெடி
தான் நல்லா வருதில்ல, உங்க பாடி லாங்வேஜும் அதுக்கு ஒத்துழைக்குது //

இதுதான் நச் பாய்ன்ட்... விஜய் கவனிப்பாரா?

வித்யா said...

எப்படியாவது இத விஜய் படிச்சா நல்லாருக்கும்.

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

இப்போ திருப்தியா உங்களுக்கு? நான் எப்போ வில்லு சூப்ப்ர் ஹிட்ன்னு சொன்னேன் சகா?//

சும்மா தான் சகா. உங்ககிட்ட கேக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க கோவிச்சுக்க போறீங்கன்னு கேக்கல.

வில்லு சூப்பர் ஹிட்டுன்னு நீங்க சொல்லல. ஆனா தலைக்கு ஐடியா...இளைய தளபதிக்கு இல்லையா :)

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
இப்படியெல்லாம் அசிங்கபடுத்துவீங்க எங தளப்திய?//

ஹி...ஹி
//சகிக்கல என்பது அதிகம்.. ஆனா கம்ம்மி ஆயிடுச்சு.. உண்மைதான்//

கம்மியெல்லாம் இல்லை வில்லுல்ல டான்ஸ் ரொம்ப மோசம்

//இதுதான் நச் பாய்ன்ட்... விஜய் கவனிப்பாரா?//

விஜயோட ரசிகர்களுக்கு பிடிக்காத "வசீகரா" எனக்கு ரொம்ப பிடிச்ச படம். காரணம் விஜயோட காமெடி மற்றும் பாடி லாங்வேஜ்

நான் ஆதவன் said...

//வித்யா said...

எப்படியாவது இத விஜய் படிச்சா நல்லாருக்கும்.//

நல்லாதான் இருக்கும். ஆனா விஜய் ரசிகர்கள் இத படிக்கனும் முதல்ல

குடுகுடுப்பை said...

வித்யா said...

எப்படியாவது இத விஜய் படிச்சா நல்லாருக்கும்.
//\\

அவருக்கு டமில் படிக்க தெரியுமா?

புல்லட் பாண்டி said...

நல்லாருக்குபா! பேசாம தளபதிட மானேஜரா சேந்துடுங்களேன். அடுத்த முறையாவது டிக்கட் காசுக்கு மோசமில்லாம எதையாவது பாக்லாம் ;)

கார்க்கி said...

/
விஜயோட ரசிகர்களுக்கு பிடிக்காத "வசீகரா" எனக்கு ரொம்ப பிடிச்ச படம். காரணம் விஜயோட காமெடி மற்றும் பாடி லாங்வே//

ஒரு சின்ன கரெக்ஷன். நான் விஜய் ர‌சிகன் தான். ஆனா வசீகராவ 50 தடவ பார்த்திருப்பேன். எனக்கு மின்சார கண்ணாவும் பிடிக்கும்.. விஜ்யின் நடனத்திற்கு பின் அவரின் காமெடிதான் டாப்..

/வில்லு சூப்பர் ஹிட்டுன்னு நீங்க சொல்லல. ஆனா தலைக்கு ஐடியா...இளைய தளபதிக்கு இல்லையா //

அதான் நீங்க சொல்லிடிங்களே.. ஆனா விஜயின் படங்கள் குறைந்தபர்சம் அவரின் ரசிகர்களையாவது திருப்திபடுத்தும். தல அப்படியா??????

//சும்மா தான் சகா. உங்ககிட்ட கேக்கலாம்ன்னு நினைச்சேன். ஆனா நீங்க கோவிச்சுக்க போறீங்கன்னு கேக்க//

கோவமா..கிகிகிகி. நான் அவ்ளோ பைத்தியம் இல்லப்பா

vinoth gowtham said...

Opening song ல அந்த ஆட்டம் மிஸ்ஸிங்..

Anonymous said...

அடேய் நீ என்ன மென்டலா ?? சின்ன வயதில இருந்து இப்படிதானா ???

Anonymous said...

//////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////

உன்னக்கு எல்லாம் பொண்டாடி கூட போய் சகிலா படம் பாக்க தெரியும் , ஆனா விஜய் படம் என்னடா நக்கலோ ... அட மடையா நீ எல்லாம் என்ன படம் பாக்குது எண்டு தெரியும் ... BF பாக்குற நீ எல்லாம் விஜய் படம் பார்த்து கதை சொல்ற ................ உனக்கு எல்லாம் ஒரு வெப் சைட் அதில பத்து நாதாரிங்க சப்போர்ட் ..............

/////////////////////////////////////////////////////////////////////
//////////////////////////////////////////////////////////////////////

Bleachingpowder said...

பட்டைய கிளப்பீட்டீங்க :)) என்ன இன்னைக்கு எல்லா பதிவர்களும் சூப்பர் ஃபார்ம்ல இருக்கீங்க.

Bleachingpowder said...

//விஜயோட ரசிகர்களுக்கு பிடிக்காத "வசீகரா" எனக்கு ரொம்ப பிடிச்ச படம். காரணம் விஜயோட காமெடி மற்றும் பாடி லாங்வே//

எனக்கும் விஜய் படத்தில பிடிச்சதுனா அது வசீகராவும் சச்சினும் தான

Bleachingpowder said...

// தனுஷ் படம் எப்ப இறங்குதுன்னு பார்த்துட்டு அதுக்கேத்த மாதிரி ரிலீஸ் பண்ணுங்க. அவர் வேற
நடிக்கவெல்லாம் செய்யிறாரு. //

எனக்கும் அப்படி தான் தோனுது. கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி விக்ரம் படமும் விஜய் படமும் ஒன்னா வரும் போதெல்லாம் விஜய் படம் உதை வாங்கும்.

LOSHAN said...

அருமை.. சபாஷ்.. சரியான போட்டி.. தலைக்கு தளபதி.. உங்கள் பதிவு வாசித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.. வயிற்று வலி மாத்திரை ப்ளீஸ்

நான் ஆதவன் said...

//குடுகுடுப்பை said...


அவருக்கு டமில் படிக்க தெரியுமா?//

அட அவர் சுத்த தமிளனுங்க...
--------------------------------------------------------------
//புல்லட் பாண்டி said...

நல்லாருக்குபா! பேசாம தளபதிட மானேஜரா சேந்துடுங்களேன். அடுத்த முறையாவது டிக்கட் காசுக்கு மோசமில்லாம எதையாவது பாக்லாம் ;)//

யோசனை நல்லாதானுங்கண்ணா இருக்கு. ஆனா நான் வாழ்கையில உருப்படியா ஏதாவது செய்யலாம்னு இருக்கேன். அதுனால இருக்கிற வேலையே போதுங்கண்ணா

நான் ஆதவன் said...

கார்க்கி said...

//ஒரு சின்ன கரெக்ஷன். நான் விஜய் ர‌சிகன் தான். ஆனா வசீகராவ 50 தடவ பார்த்திருப்பேன். எனக்கு மின்சார கண்ணாவும் பிடிக்கும்.. விஜ்யின் நடனத்திற்கு பின் அவரின் காமெடிதான் டாப்..//

உண்மை தான் சகா...

//அதான் நீங்க சொல்லிடிங்களே.. ஆனா விஜயின் படங்கள் குறைந்தபர்சம் அவரின் ரசிகர்களையாவது திருப்திபடுத்தும். தல அப்படியா??????//

நீங்க சொல்லாததால தான் நான் சொன்னேன். விஜய் அவரோட இரசிகர்களுக்கு மட்டும் படம் பண்ணினா போதுமா? தலய டீல்ல விடுங்க :)

// கோவமா..கிகிகிகி. நான் அவ்ளோ பைத்தியம் இல்லப்பா//

நன்றி சகா

நான் ஆதவன் said...

//vinoth gowtham said...

Opening song ல அந்த ஆட்டம் மிஸ்ஸிங்..//

ஆமாங்க வினோத். ஆனா எவ்வளவு நாள் தான் அதையே பார்ப்பீர்கள்?

நான் ஆதவன் said...

//Anonymous said...

// உன்னக்கு எல்லாம் பொண்டாடி கூட போய் சகிலா படம் பாக்க தெரியும் ,//

ஏணுங்கண்ணா நான் உங்க பொண்டாட்டி கூட போய் ஷகீலா படம் பார்க்கணும்???? நீங்க கூட்டிட்டு போக வேண்டியது தானே?

//BF பாக்குற நீ எல்லாம் விஜய் படம் பார்த்து கதை சொல்ற ................ உனக்கு எல்லாம் ஒரு வெப் சைட் அதில பத்து நாதாரிங்க சப்போர்ட் ..............//

இந்த மாதிரி ஒரு நாதாரி விஜய் இரசிகர்னா.......ங்........ரொம்ப கஷ்டமுங்கண்ணா

Anonymous said...

Poi polappa paruda kena k..........

நான் ஆதவன் said...

//Bleachingpowder said...

பட்டைய கிளப்பீட்டீங்க :)) என்ன இன்னைக்கு எல்லா பதிவர்களும் சூப்பர் ஃபார்ம்ல இருக்கீங்க.//

நீங்க தான் பதிவே போட மாட்டிங்கிறீங்க..அதான் நாங்கலாவது பட்டைய கிளப்புறோம்

//எனக்கும் விஜய் படத்தில பிடிச்சதுனா அது வசீகராவும் சச்சினும் தான//

விஜய் இரசிகர் அல்லாத நிறைய பேருக்கு பிடிச்ச படம் நீங்க சொன்ன அந்த இரண்டு படம்

// எனக்கும் அப்படி தான் தோனுது. கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி விக்ரம் படமும் விஜய் படமும் ஒன்னா வரும் போதெல்லாம் விஜய் படம் உதை வாங்கும்.//

இப்ப விக்ரம் எங்கைய்யோ போய்ட்டார். ஆனா விஜய் இன்னமும் அங்கையே தான் இருக்கார்

நான் ஆதவன் said...

//LOSHAN said...

அருமை.. சபாஷ்.. சரியான போட்டி.. தலைக்கு தளபதி.. உங்கள் பதிவு வாசித்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.. வயிற்று வலி மாத்திரை ப்ளீஸ்//

நன்றி லோஷன்

கார்க்கி said...

/இப்ப விக்ரம் எங்கைய்யோ போய்ட்டார். ஆனா விஜய் இன்னமும் அங்கையே தான் இருக்கார்//

இங்க்தான் நான் வ்ர்றேன்.. விக்ரம் எங்க போயிட்டாரு? பீமா என்ற மொக்கை படத்துக்காக ரென்டு வருஷம் வேஸ்ட் பண்னாரு.. இப்போ கந்தசாமி என்ற கமர்ஷியல் படுத்துக்கு வெய்ட் பண்றாரு.. நடுவுல மஜான்னு ஒரு ரீமேக். இது எல்லாம் விஜய் பண்ன வேண்டிய வேலை. விக்ரம் எதுக்கு பண்றாரு?

சூர்யாவும் அப்படித்தான். நல்ல நடிகர்ன்னா எதுக்குங்க‌ ஆறு, வேலு, அயன்னு கமர்ஷியல் படுத்துல நடிக்கனும்? விஜய்க்குதான் நடிக்க தெரியல.. இவங்களாவது நல்ல அப்டத்துல நடிகலாமே?எல்லாருக்கும் காசுதான் முக்கியம்.. அதுவே விஜய் சொல்லிட்டு செஞ்சா தப்பா????

ஸ்ரீமதி said...

:)))

Anonymous said...

யப்பா யாரவது விஜய இனி வரும் படங்களில் காஸ்ட்யூம் change பண்ண சொல்லுங்கப்பா. அந்த ஜீன்சயும் கழுத்தில் தொங்கும் கிழிஞ்ச துணியையும் பார்த்தால் வாந்தி வருது.

சங்கவி said...

நானும் என் தாராளமயமாக்கல் கொள்கையும் இல்லேன்னா இன்னைக்கு விஜய்ன்னு ஒருத்தர் தமிழ் சினிமாவிலேயே கிடையாது. ஆனா என்னைப்பத்தி ஒரு வரி கூட எழுதாத ஆதவனை கண்டிக்கிறேன். தெரியாமத்தான் கேக்கிறேன் தனுஷ், விக்ரம் படம் வராட்டி தான் விஜய் படம் ஓடும்கிறீங்களே.. என் கூட (நடிச்சு) எந்த படமாச்சும் ஓடாம இருந்திருக்கா? ம்ம்ம்... என்ன மாதிரி ஒரு ஹீரோயின் அமைஞ்சா விஜய் படமெல்லாம் பிச்சுக்கிட்டு ஓடாதா..??

-சங்கவி,
2016 முதல்வரின் மகளிர் அணித்தலைவி.

யுவராணி said...

இப்ப கூட நான் எளய தளபதி கூட படத்துல கபடி ஆடுனா படம் பிச்சுக்கிட்டு ஓடும்.

(ஆதவன் இந்த பாயின்டையும் சேத்துக்கோங்க)

Joe said...

//அவருக்கு டமில் படிக்க தெரியுமா?

அட அவர் சுத்த தமிளனுங்க...//

சுத்த தமிழ் பெண்ணான த்ரிஷாவுக்கு தமிழ் பேசவே தெரியாது என்பதை இங்க நினைவில் கொள்க!

ச்சின்னப் பையன் said...

ஹாஹா...

நான் ஆதவன் said...

//சூர்யாவும் அப்படித்தான். நல்ல நடிகர்ன்னா எதுக்குங்க‌ ஆறு, வேலு, அயன்னு கமர்ஷியல் படுத்துல நடிக்கனும்?//

இதுவே தப்பு சகா..நல்ல நடிகன்னா எல்லா படத்திலேயும் நடிக்கனும்
-------------------------------------------------------------------
//ஸ்ரீமதி said...

:)))//

வாங்கோ தங்காச்சி
-------------------------------------------------------------------
//Joe said...

//அவருக்கு டமில் படிக்க தெரியுமா?

அட அவர் சுத்த தமிளனுங்க...//

சுத்த தமிழ் பெண்ணான த்ரிஷாவுக்கு தமிழ் பேசவே தெரியாது என்பதை இங்க நினைவில் கொள்க!//
:)
--------------------------------------------------------------
//ச்சின்னப் பையன் said...

ஹாஹா...//

சிரிப்புக்கு நன்றி ச்சின்னப் பையன்

சரவணகுமரன் said...

ரணகளம் :-)

Anonymous said...

அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு. Vijay படங்கள் எல்லாம் 16 முதல் 18 வயதில் உள்ள விடலை பருவத்தில் உள்ளவருக்காக உருவாக்க படுகின்றன என்று நான் நினைக்கிறேன். ஒருமுறை நான் என் 14 வயது மகளுடன் Chennayil உள்ள ஒரு பிரபாலமான திரை அரங்கிற்கு சென்றேன். Vijay படம் sivakasi தொடங்கி சில நிமிடங்கள் ஆகி இருந்தது. அப்போது அங்கே சீட்டு விற்பவர் "வேண்டாம் அம்மா தயவு செய்து திரும்பி விடுங்கள். உள்ளே நிலைமை ரொம்ப மோசமாகும் என்றார். இன்னும் அதே நிலைமை தான் போலிருக்கிறது.

இளைய பல்லவன் said...

ஆதவன்..

விஜய் படங்கள் ரொம்ப ஸ்டீரியோடைப்டாக வருகின்றன. பல சமயங்களில் எந்த படம் என்ற குழப்பம் வரும். நடிப்புலயும் வெரைட்டி இல்ல. இப்படியே போனா கல்லா கட்டிட வேண்டியதுதான்.

(விஜய்க்கும் ஒரு கதை எழுதிடலாமா? சொல்லுங்க...!!!)

நான் ஆதவன் said...

//சரவணகுமரன் said...

ரணகளம் :-)//
நன்றி சரவணகுமரன்
------------------------------------------------------------------
//இளைய பல்லவன் said...

ஆதவன்..

விஜய் படங்கள் ரொம்ப ஸ்டீரியோடைப்டாக வருகின்றன. பல சமயங்களில் எந்த படம் என்ற குழப்பம் வரும். நடிப்புலயும் வெரைட்டி இல்ல. இப்படியே போனா கல்லா கட்டிட வேண்டியதுதான்.//

சரிதான் பல்லவன். சில படங்களை தவிர எல்லா படமும் ஸ்டீரியோடைப்டாக தான் :(

//(விஜய்க்கும் ஒரு கதை எழுதிடலாமா? சொல்லுங்க...!!!)//

மேலே எனக்கு வந்த இரண்டு மூணு பின்னூட்டத்த பார்த்தும் உங்களுக்கு இந்த ஆசைன்னா.......தைரியசாலி தான் போங்க

நான் ஆதவன் said...

//Anonymous said...

அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு. Vijay படங்கள் எல்லாம் 16 முதல் 18 வயதில் உள்ள விடலை பருவத்தில் உள்ளவருக்காக உருவாக்க படுகின்றன என்று நான் நினைக்கிறேன். //

உண்மை தாங்க...முழுக்க முழுக்க இளைஞர்களை திருப்திப்படுத்த மட்டுமே படம் எடுக்குறாங்க...ஆனா இப்போ இளைஞர்கள் ரசனை மாறிடிச்சு...ஆனா அவுங்க மாறல

kabilanbhavani said...

ya....this is i want...
thadaratum ungal pani.

Related Posts with Thumbnails