வாழ்த்து கூற பிடிக்குமா? அப்படின்னா உள்ள வாங்க..

எனக்கு வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மிகவும் பிடிக்கும்.

என் நண்பர்கள் பல பேர்களின் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு அவர்களின் பிறந்தநாளில் அவர்களை
அழைத்து வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளேன். அதிக பிரசங்கிதனமாக "வால்பையனின்" பிறந்தநாள் என்று
நினைத்து வேறொரு தினத்தில் வாழ்த்து கூறி பதிவுமிட்டேன். ஆனால் அடுத்து குசும்பனுக்கும் அதே மாதிரி ஆகப்போகிறதென்று
நினைத்து தனியாக மெயில் அனுப்பினேன். அவரிடம் இருந்து நான் தான் முதலில் வாழ்த்து கூறினேன் என்ற கூறி பதில்
மெயில் வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

அதே போல் சில மகிழ்ச்சியான தருணங்களில் என்னை வாழ்த்திய சில பேர் மற்றும் சில சம்பவங்கள் என்னால் இன்றும்
மறக்க முடியவில்லை.

சிறுவயதில் பிறந்தநாளில் அதிகாலையில் கண்விழித்தாலும் கண்களை திறக்காமல் கண்மூடியே படுத்திருந்திருக்கும் போது,
நான் தூங்குவதாக நினைத்து கன்னத்தில் முத்தமிட்டு என்னை எழுப்பாமல் வாழ்த்தும் என் அம்மாவின் வாழ்த்து பிடித்தது.

ஐந்தாவது பாஸானதாக போஸ்ட்மேன் கொடுத்த போஸ்ட் கார்டை வாங்காமல் அப்படி யாரும் இல்லை என்று
கூற, அவர் அடுத்தடுத்த வீட்டிற்கு சென்று விசாரிக்க பின்பு அடுத்த வீட்டில் உள்ள லதா அக்கா அந்த போஸ்கார்டை
வாங்கி என்னிடம் கொடுத்து, போஸ்ட்மேன் மாறி கொடுத்துவிட்டதாக கூறி, அவர்கள் வாழ்த்தியது பிடித்தது.

மிகவும் பிடித்த ஷீலா டீச்சர் வகுப்பறையில் எல்லார் முன்னிலையில் நான் அவர்களின் மிகச்சிறந்த மாணவன் என்று
வாழ்த்தியது பிடித்தது.

பத்தாவது பாஸ் ஆனபோது பக்கத்துவீட்டு பெண் கைகுலுக்கி வாழ்த்து கூறியது பிடித்தது.

மறக்காமல் என் பிறந்தநாளுக்கு இந்தியாவில் பன்னிரெண்டு மணி அடிக்கும் போது துபாயில் பத்தரை ஆகுமென்றும்
தெரியாமல் என்னை எழுப்பியதாக நினைத்து வாழ்த்தியது பிடித்தது.

இவ்வாறு அடுத்தவர்கள் வாழ்த்து எனக்கு முக்கியமாய் பட்டது. இப்பொழுதும் இந்த ஐம்பதாவது பதிவிற்கான உங்கள்
வாழ்த்துக்களும்....15 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் ...

நான் ஆதவன் said...

நன்றி ஜமால்

இளைய பல்லவன் said...

ஆ.... இப்பத்தான் அம்பதா! அண்ணே, வாழ்த்துக்களப் பிடிங்கண்ணே ! ! !

எண்ணிக்கையை விட எண்ணங்கள்தான் முக்கியம். உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு நல்முத்து. அவை அனைவரின் சொத்து ?!?!?!

(கொஞ்சம் சீரியஸ் மேட்டர்களும் எழுதுங்க.... பாருங்க உங்களுக்குப் போடற பின்னூட்டத்த கூட ரெண்டு வரிக்கு மேல சீரியசா யோசிக்க முடியல:(()

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

எண்ணிக்கையை விட எண்ணங்கள்தான் முக்கியம். உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு நல்முத்து. அவை அனைவரின் சொத்து ?!?!?//

இதுக்கு நேர்ல கூப்பிட்டு செருப்பால இரண்டு அடி அடிச்சிருக்கலாம்

நான் ஆதவன் said...

//(கொஞ்சம் சீரியஸ் மேட்டர்களும் எழுதுங்க.... பாருங்க உங்களுக்குப் போடற பின்னூட்டத்த கூட ரெண்டு வரிக்கு மேல சீரியசா யோசிக்க முடியல:(()//

சீரியஸா எழுத தான் இத ஆரம்பிச்சேன். ஆனா இங்க பதிவுலகத்தில இருக்கிற சீரியஸ பார்த்த பிறகு கொஞ்ச நாளைக்கு மொக்கையோட நிறுத்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்

இளைய பல்லவன் said...

ஆதவன்.. கூல் டவுன் கூல் டவுன்..

நீங்க மட்டும் சீரியஸ் மேட்டர் எழுதிப் பாருங்க.. எங்கயோஓஓஓஓஓஓஓ போயிடுவீங்க..(ஸீரிய்ஸா ஸொல்றேங்க)

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

ஆதவன்.. கூல் டவுன் கூல் டவுன்..

நீங்க மட்டும் சீரியஸ் மேட்டர் எழுதிப் பாருங்க.. எங்கயோஓஓஓஓஓஓஓ போயிடுவீங்க..(ஸீரிய்ஸா ஸொல்றேங்க)//

அந்த ஓஓஓஓஓஓஓஓ பார்த்தா எனக்கு ஊதுற சங்கு மாதிரியே இருக்கு பல்லவன்

நர்மதா சிவா said...

வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் ஆரோக்கியமே. நல்ல உணர்வை கொடுக்கும். ஆனால் வாழ்த்துக்கும் புகழ்ச்சிக்கும் இடையில் வித்தியாசம் எப்போதும் உணர்ந்து கொள்ளுதல் நல்லது. புகழ்ச்சி பல நேரங்களில் தலைக்கனத்தை விழைவிப்பதுண்டு.

இளைய பல்லவன் said...

//அந்த ஓஓஓஓஓஓஓஓ பார்த்தா எனக்கு ஊதுற சங்கு மாதிரியே இருக்கு பல்லவன்//

வெற்றிக்குக் கூட சங்கு ஊதுவாங்க ஆதவன்..

சங்கே முழங்குன்னு புரட்சித்தலைவர் பாடியிருக்காரே !

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் ஆதவன்....
அன்புடன் அருணா

நான் ஆதவன் said...

//நர்மதா சிவா said...

வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் ஆரோக்கியமே. நல்ல உணர்வை கொடுக்கும். ஆனால் வாழ்த்துக்கும் புகழ்ச்சிக்கும் இடையில் வித்தியாசம் எப்போதும் உணர்ந்து கொள்ளுதல் நல்லது. புகழ்ச்சி பல நேரங்களில் தலைக்கனத்தை விழைவிப்பதுண்டு.//

உணமை தான் நர்மதா சிவா
----------------------------------------------------------------
//இளைய பல்லவன் said...

//அந்த ஓஓஓஓஓஓஓஓ பார்த்தா எனக்கு ஊதுற சங்கு மாதிரியே இருக்கு பல்லவன்//

வெற்றிக்குக் கூட சங்கு ஊதுவாங்க ஆதவன்..

சங்கே முழங்குன்னு புரட்சித்தலைவர் பாடியிருக்காரே !//

எதையும் பாஸிடிவா எடுக்கும் உங்க குணம் ரொம்ப பிடிச்சிருக்கு பல்லவன் :)

நான் ஆதவன் said...

//அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் ஆதவன்....
அன்புடன் அருணா//

நன்றிகள் பல அருணா

பாலராஜன்கீதா said...

//மறக்காமல் என் பிறந்தநாளுக்கு இந்தியாவில் பன்னிரெண்டு மணி அடிக்கும் போது துபாயில் பத்தரை ஆகுமென்றும்
தெரியாமல் என்னை எழுப்பியதாக நினைத்து வாழ்த்தியது பிடித்தது.//

யார் என்று(pun intended) எழுதினால் நாங்களும் வாழ்த்துவோம்

ஸ்ரீமதி said...

வாழ்த்துகள் அண்ணா :))

நான் ஆதவன் said...

//பாலராஜன்கீதா said...

யார் என்று(pun intended) எழுதினால் நாங்களும் வாழ்த்துவோம்//

ஒன்னுமே புரியலைங்கோ....
-------------------------------------------------
//ஸ்ரீமதி said...
வாழ்த்துகள் அண்ணா :))//

நன்றி தங்காய் :))

Related Posts with Thumbnails