அவனா நீயி?

"என்னடா ஆச்சு?" தீனா

"ஒன்னுமில்லடா மச்சான்" என்றேன் நான்

"பின்ன ஏன் மூஞ்சிய தூக்கி வச்சிருக்க?" விடாமல் தினேஷ்.

நான் "அது.. பஸ்ஸில ஒருத்தன்...." இழுத்தேன்.

"ஒருத்தன்.... என்னடா மேல கைவச்சுட்டானா?" உட்கார்ந்திருந்த நிர்மல் எழுந்திருத்து கேட்டான்.

"கையெல்லாம் வைக்கல..ஆனா கொஞ்சம் பிரச்சனையாடுச்சு" என்றேன்

"எந்த ஏரியா பையன்னு தெரியுமா?" நிர்மல்

"அண்ணா நகர்ன்னு நினைக்கிறேன்?"

"சரி விடு நாளைக்கு அண்ணா நகர்ல பாத்துக்கலாம் அவனை..." சசி

"ஹேய் மச்சி அதெல்லாம் வேணாம் சொல்றத கேளுங்கடா" என்றேன்

"சரி சொல்லு" கோரஸாக வந்தது
அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருளை சுத்தி பின்னாடி போகலாம்

ss1
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு சிந்தாமணி பேருந்து நிருந்தத்தில் வந்து நின்றேன். இந்த 34 நம்பர்
பஸ்ஸில் போவதை நினைத்தாலே எரிச்சலாக வரும். கால் கட்டை விரலை மட்டும் முட்டு கொடுத்து நின்று கொண்டு
சில சமயம் போய் இருக்கிறேன். சில சமயம் அந்தரத்தில்.....

கடந்த இரண்டு மாதமாக சென்ரல் வரை ஒரு பஸ்ஸிலும் அங்கிருந்து ட்ரைனிலும் போவதை வழக்கமாக்கினேன்.
இது கொஞ்சம் சுலவாக இருந்தாலும் சரியான நேரத்தில் போகவில்லையென்றால் இரயில் மிஸ்ஸாகும்.

மேட்டருக்கு வருவோம். 7F பஸ் வந்தது. சுமாரான கூட்டம். ஜிம்மிற்கு நானும் நிர்மலும் போய்கொண்டிருந்த காலம் அது.
ஆபிஸை விட்டு வந்ததும் மற்றவர்களை மிரள வைக்க, பைசப்ஸை நன்றாக தெரியும் படி சட்டை கையை மடக்கி
வைப்பேன். பஸ்ஸில் முன்புறம் ஏறி கருப்பு டீ சர்ட் போட்டிருந்தவனை "ஹலோ பாஸ் ஒரு சென்ட்ரல்" என்று
காசை நீட்டினேன்.

"வேர்?" என்று திரும்பினான். ஆள் கொஞ்சம் ஸ்மார்டாக இருந்தான். இந்த மாதிரி அழகா இருந்தா தான் நமக்கு
ஆவாதே. "அஞ செண்டரலு" என்றேன் நக்கலுடன். நெஞ்சை இரண்டு இன்ஞ்க்கு உயர்த்தினேன். டிக்கட்டை அவன்
கொடுக்கும் போது என் உடம்பை பார்த்து கொஞ்சம் மெர்சலாகி போனான்.

பனிப்போர் அதோடு முடியவில்லை. கூட்டம் அதிகம் ஏறியதால் என் அருகே நகர்ந்து வரவேண்டியிருந்தது.
நான் நகராமல் அங்கேயே நின்றேன். அவன் என் மேல் இடித்தான். நான் பதிலுக்கு இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக
இடித்தேன்.
முன் சீட்டிலிருந்த ஒரு ஆள் "புரசைவாக்கம் வந்திருச்சாப்பா?" என கேட்டார்.
நான் "அடுத்த ஸ்டாப் தான்" என்று கூறி அவர் அருகில் செல்ல முற்பட்டேன் அடுத்து உட்காருவதற்காக. ஆனால்
அந்த சீட் அவன் அருகில் இருந்தது. இருந்தாலும் நான் விடாமல் முட்டி மோதி அந்த சீட்டில் உட்கார்ந்து அவனைப்
பார்த்து ஒரு நக்கல் புன்னகையை விட்டேன்.

அவன் கொஞ்சம் காண்டாயிருக்க வேண்டும். வேண்டுமென்றே அடுத்து சீட் காலியாகயிருந்தும் என் அருகில் நின்று
கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். என் சீட்டின் இருந்த ஆள் இறங்கியதும் அவன் என்னருகில் உட்கார்ந்தான்.

நினைத்தது சரிதான். அவன் என் மேல் காண்டாக இருந்திருக்கிறான். ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு இடம் இருந்தும்
நன்றாக நெருக்கி உட்கார்ந்தான். நானும் விடவில்லை நன்றாக அவன் பக்கம் நெருக்கி உட்கார்ந்தேன். அவன் இன்னும்
அதிகமாக நெருக்கவே நான் "சரி எதுக்கு பிரச்சனை, அதான் சென்ட்ரல் வந்திருச்சே" கொஞ்சம் பொறுமை
காத்தேன். என் பொறுமையை சோதிக்கப்படவே நான் "ஹலோ பாஸ் கொஞ்சம் வழி விடுங்க இறங்கனும்" என்றேன்.
"நானும் சென்ட்ரல்ல தான் இறங்கனும்" என்றான் சிரித்தபடியே.

இறங்கியதும் இரயிலை பிடிக்க ஓட்டமும் நடையுமாக போன போது ஒரு குரல் "ஹலோ சார்" என்று.
(இனி வரும் டயலாக் கொஞ்சமும் மாற்றாமல் கொடுக்கப்பட்டுள்ளது)
யார்டா அது இவ்வளவு மரியாதையா என்று திரும்பினால் அவன் தான். நம்மளை சார்ன்னு கூப்பிட்டானே கொஞ்சம்
கெத்தாக "யெஸ்" என்றேன்.
"ஐ யம் ----------" என்று கை குடுத்தான். (பெயர் கார்த்தியோ என்னவோ சொன்ன ஞாபகம்)
நானும் என் பெயர் சொல்லி கை குடுத்தேன்.
"உங்க eyes ரொம்ப sharpஆ இருக்கு" என்றான்
"இஸ் இட்" என்று இரண்டு புருவத்தை உயர்த்தி இன்னும் sharp ஆக்கினேன் புன்முறுவலோடு.
"இப் யூ டோண்ட் மைண்ட் அங்க ஒரு பிப்டீன் மினிட்ஸ் ஒன்னா ஸ்பெண்ட் பண்ணலாம்" என்று ஒரு இருட்டான
சந்தை காட்டினான்.
அடப்பாவி அவனா நீயி?...இது தெரியாம உன்கிட்ட ஆக்சன் சீக்வென்ஸ் எல்லாம் காட்டினேனா
அவனை அப்போது பார்த்த போது எனக்கு பயம் தான் ஏற்பட்டது. இருந்தாலும் முகத்தில் அதை காட்டாமல் "வாட்?"
என்றேன். அவன் "பாஸ் பயப்படாதீங்க ஜஸ்ட் ஒரு.." என்று முடிக்கும் முன்
நான் "@ங்#$*&$%*(;த்.,^)" என்ற போது
ரகுவரன் ஸ்டைலில் "ஓகே ஒகே பாஸ் வேண்டாம்னா விட்டுருங்க" என்று
கையை பாக்கியராஜ் ஸ்டைலில் வைத்து கொண்டு சொல்லி கொண்டே பின் நகர்ந்தான்.
அடப்பாவி ஒரு ஆக்சன் ஹீரோவா நான் செஞ்ச விஷயமெல்லாம் உனக்கு வேற மாதிரி தோணியிருக்கா என
கோபம் கோபமாக வந்தது. அதே மூட் அவுட்டுடன் வீட்டிற்கு சென்றேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ss

சிரிப்பு சத்தம் அடங்க வெகு நேரம் ஆனது.
"மச்சி மேல கை வச்சானா?" என்று நிர்மல் திரும்பவும் கேட்டான்.

"அதான் இல்லையின்னு அப்பவே சொன்னேன்ல" என்றேன்

"டேய் அதில்லடா நான் வேற மாதிரி கை வச்சானான்னு கேட்டேன்" ஒரு பெரிய ஜோக் சொன்ன மாதிரி சிரித்தான்.

மறுநாள் ஆபிஸில் லஞ்சில் சீனியர் செக்கருடன் இதை சொன்ன போது அங்கு யாரும் சிரிக்கவில்லை. மாறாக
அவர் "இந்த மாதிரி பசங்க கெட்டு போகுறது எல்லாம் ஹாஸ்டல் சகவாசம் தான்" என்றார். அப்போது அவருடன்
வாக்குவாதம் செய்தேன் அது மட்டும் காரணமாக இருக்காது என்று.

ஆனால் நான்கு வருடம் கழித்து, இங்கு துபாயில் ஒரு பெரிய கம்பெனியில் காலேஜ் கேம்பஸ் வழியாக செலக்ட் ஆகி
நண்பனின் அறையில் இரண்டு மாதம் முன்பு ஒருவன் வந்திருக்கிறான். அவனும் இந்த கேஸ் என்று தெரிந்தது.
விசாரித்ததில் அது ஹாஸ்டலில் ஆரம்பித்த பழக்கம் தான். இந்த பதிவு இப்போது எழுதவும் இவன் தான் காரணம்.

என்னோட கஷ்டகாலம்........ அவனுக்கும் "@ங்#$*&$%*(;த்.,^)" என்று என் வாயால் வாழ்த்தியிருக்கிறேன்.
வயசு பசங்க ரோட்டுல நடமாட முடியலயேப்பா.......

20 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

ராஸ்கல்ஸ்.... என்னது இது ஒரு கமெண்ட் கூட இல்ல..பிச்சு புடுவேன் பிச்சு

பின்னூட்ட காவாலித்தனம்

Anonymous said...

enakkum indha mathiri librariyil, bus il oru thadavai thollai koduththullargal.phycology-pady ithu oru mana viyadhi.athanal thittamal othungi poy viduven.

தோழி said...

konja neram sirippa thavira vera ethuvume thonalai. not even pinnoottam.

Irunthaalum over nianappu ungalukku. Ensoiiiiiiiiiii

பலசரக்கு said...

சரி சரி உண்மையா நடந்ததை சொல்லு தலீவா!!

ஆ! இதழ்கள் said...

நான் "@ங்#$*&$%*(;த்.,^)" என்ற போது//

என்ன இது வெறும் காத்துதான் வருது சத்தத்தை காணோம்.

நான் ஆதவன் said...

//நான் ஆதவன் said...

ராஸ்கல்ஸ்.... என்னது இது ஒரு கமெண்ட் கூட இல்ல..பிச்சு புடுவேன் பிச்சு

பின்னூட்ட காவாலித்தனம்//
நன்றி நான் ஆதவன் :-)
------------------------------------------------------------------------------
//Anonymous said...

enakkum indha mathiri librariyil, bus il oru thadavai thollai koduththullargal.phycology-pady ithu oru mana viyadhi.athanal thittamal othungi poy viduven.//

அப்பப்ப இதுக்கு டோஸ் கொடுக்கலைன்னா சரிபட்டுவராதுங்க..
------------------------------------------------------------------------------
//தோழி said...

konja neram sirippa thavira vera ethuvume thonalai. not even pinnoottam.

Irunthaalum over nianappu ungalukku. Ensoiiiiiiiiiii//

நன்றி தோழி

நான் ஆதவன் said...

//பலசரக்கு said...

சரி சரி உண்மையா நடந்ததை சொல்லு தலீவா!!//

அவ்வ்வ்வ்வ்... அப்ப இதெல்லாம் நீங்க நம்பலையா???? உண்மையா இதுதான் தலீவா நடந்துச்சு
--------------------------------------------------------------------
//ஆ! இதழ்கள் said...

நான் "@ங்#$*&$%*(;த்.,^)" என்ற போது//

என்ன இது வெறும் காத்துதான் வருது சத்தத்தை காணோம்.//

மனசுக்குள்ள படிச்சா காத்து தான் வரும். நல்லா சத்தம் போட்டு படிங்க. :-)

இளைய பல்லவன் said...

ஆதவரே எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படில்லாம். ஒரு தடவன்னா ஓகே. மறுபடியும் துபாயிலன்றீங்க.

நல்லா ஒரு தடவ கண்ணாடில பாருங்க. நெத்தில ஏதாவது தெரியுதான்னு.

(நீங்கள் பகன்றதை நம்பியதன் விளைவாய் விளைந்த பின்னூட்டக் கருத்துரையெனக் கொள்க)

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

ஆதவரே எப்படிங்க உங்களுக்கு மட்டும் இப்படில்லாம். ஒரு தடவன்னா ஓகே. மறுபடியும் துபாயிலன்றீங்க.

நல்லா ஒரு தடவ கண்ணாடில பாருங்க. நெத்தில ஏதாவது தெரியுதான்னு.//

ஏன் இப்படி ஒரு கொலவெறி என்மேல????

//(நீங்கள் பகன்றதை நம்பியதன் விளைவாய் விளைந்த பின்னூட்டக் கருத்துரையெனக் கொள்க)//

நான் சொன்னதை நீங்க நம்பி போட்ட பின்னூட்டம்ன்னு நான் நம்பிட்டேன்.
(வர வர உங்க பின்னூட்டம் கூட சக்கர வியூகம் மாதிரியே இருக்கு)

சுபாஷினி said...

என்னதான் இருந்தாலும் குப்பைத்தொட்டினு எல்லாம் பேர் வைக்ககூடாதுங்க...

Venkatesh said...
This comment has been removed by the author.
கிரி said...

//நான் ஆதவன் said...
//நான் ஆதவன் said...

ராஸ்கல்ஸ்.... என்னது இது ஒரு கமெண்ட் கூட இல்ல..பிச்சு புடுவேன் பிச்சு

பின்னூட்ட காவாலித்தனம்//
நன்றி நான் ஆதவன் :-)//

:-))))

thevanmayam said...

"உங்க eyes ரொம்ப sharpஆ இருக்கு" என்றான்
"இஸ் இட்" என்று இரண்டு புருவத்தை உயர்த்தி இன்னும் sharp ஆக்கினேன் புன்முறுவலோடு.
"இப் யூ டோண்ட் மைண்ட் அங்க ஒரு பிப்டீன் மினிட்ஸ் ஒன்னா ஸ்பெண்ட் பண்ணலாம்" என்று ஒரு இருட்டான
சந்தை காட்டினான்.///

நல்ல வேளை
தப்பிச்சிங்க!!!

தேவா...

நான் ஆதவன் said...

//சுபாஷினி said...

என்னதான் இருந்தாலும் குப்பைத்தொட்டினு எல்லாம் பேர் வைக்ககூடாதுங்க...//
ஏன் சுபாஷினி?. வேற தலைப்பு தேடிகிட்டிருக்கேன். கிடைச்சதும் மாத்திடுறேன்

நான் ஆதவன் said...

//Venkatesh said...
This post has been removed by the author. //

ஏன் வெங்கடேஷ்??? இருந்தாலும் நான் படிச்சுட்டேன். அதுல ஒன்னும் தப்பா இல்லையே. அவரும் தப்பா நினைக்கமாட்டார் :)

நான் ஆதவன் said...

வாங்க கிரி. வேற என்ன பண்றது??கடை காத்து வாங்குதே :-)

நான் ஆதவன் said...

//thevanmayam said...

நல்ல வேளை
தப்பிச்சிங்க!!!

தேவா...//

ஆமா தேவா...க்ரேட் எஸ்கேப்

தாமிரா said...

:-))

நான் ஆதவன் said...

நன்றி தாமிரா

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாச்சி கலக்கலான போஸ்ட்... :))))))))))))))))

Related Posts with Thumbnails