'Chaos theory'-கன்னா பின்னாவென ஒரு விளக்கம்...

தசாவதாரம் புண்ணியத்தில் "க்யோஸ் தியரி" என்ற ஒன்று இருப்பது பற்றி தெரிந்திருப்போம். மொத்தமாக குழப்பி இதுதான் க்யோஸ் தியரி என்றதும் நம் ரசிகர்கள் கொஞ்சம் பேர் டென்ஷன் ஆனார்கள். நமது சகபதிவர் கயல்விழியின்
'தசாவதாரம்" விமர்சனம் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் "Butterfly effect"யைப் பற்றி அறிய "Butterfly effect" படத்தைப்
பாருங்கள் என்று கூறியிருந்தார்.

கடந்த வாரம் படம் ஏதாவது படம் டவுண்லோட் செய்யலாம் என்று நெட்டில் மேய்ந்த போது கண்ணில் பட்டது தான் "Butterfly effect". உடனே இறக்கினேன் இரண்டு பாகத்தையும்.

ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லை. ஒருத்தனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் குழப்பத்தை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றனர். அதாவது பன்னிரெண்டுவயதில் ஒருத்தனுக்கு ஒரு சம்பவம் நடக்கிறது அவன் அப்போது எடுக்கும் ஒரு முடிவால் தன் கல்லூரி பருவத்தில் தோழி இறக்க, பின்பு திரும்பவும் அதே 12 வயதிற்கு சென்று வேறு முடிவெடுக்க அதில் தன் கல்லூரி பருவத்தில் ஒரு கொலை செய்து ஜெயிலுக்கு போக, பின்பு திரும்பவும் அதே 12...........

இப்படியே ஹீரோவுக்கு நல்ல முடிவு வரும் வரை தொடர்கிறது நம்ம 12B போல. ஸாரி இது 12B விட தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். "Butterfly effect-2"வும் ஒரே கதையமைப்பு கொண்டவை. கதைக்களம் மட்டும் வேறு வேறு.

ஆமா இது எப்படி க்யோஸ் தியரியோடு ஒத்துப்போகும். "Butterfly effect"ன் தியரியே ஆப்பிரிக்காவில் பட்டாபூச்சியின் இறக்கை துடிப்பதற்கும் அமெரிக்காவில் புயல் அடிப்பதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதாகும்.
அதாவது உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விசயத்திற்கும் வேறு ஒரு மூலையில் நடக்கும் மற்றொரு விசயத்திற்கும் கன்னா பின்னாவென்று தொடர்பு இருக்குமாம்.

ஆனால் இதில் தனிமனிதன் ஒருவன் தன் வாழ்வில் ஒரு சமயத்தில் எடுக்கும் முடிவு அவனின் தலையெழுத்தையே மாற்றுகிறது. இது எப்படி க்யோஸ் தியரியோடு ஒப்பிடுவது?. அதில் சுவாரஸ்யம் அதிகம் இருப்பதாக தெரியவில்லை.
நான் கூட +2 முடித்தவுடன் ஐ.ஐ.டி entrance exam எழுதியிருந்தால் இந்நேரம் என் வாழ்கை எங்கேயோ போயிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நான், தண்டையார் பேட்டையிலிருந்து அடையாருக்கு போக
பஸ்ஸுக்கு காசில்லாததால் entrance exam application form வாங்க முடியவில்லை. சரி விடுங்க என் சோகம் என்னோட போகட்டும்.

இப்ப விஷயத்திற்கு வருவோம்.. நம்ம வாழ்க்கையிலும் நமக்கு தெரியாம க்யோஸ் தியரி நிறைய விளையாடியிருக்கும் ஆனால் நமக்கு தான் அது தெரியவதில்லை. அந்த அளவிற்கு நாம் அப்பாவியாக இருக்கிறோம். எனக்கும் "Butterfly effect"
ஏற்பட்டுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் அது ஒரு "peacock effect".

அதிர்ச்சியடைய வேண்டாம்.....விளக்குகிறேன். சுமார் 18 வருடங்களுக்கு முன்னால்.....

எனக்கு ஆறு வயது இருக்கும். வெள்ளந்தி மனது. எங்கள் வீட்டிற்கு "நவீன் அப்பா" வந்திருந்தார். அவரை அப்படிதான் அழைப்போம்.
அவரது மகன் பெயர் "நவீன்". முன்பு எங்கள் வீட்டின் அருகில் அவர் குடும்பமும் இருந்தது. பின்பு வீடு காலி செய்து
வேறு எங்கேயோ போய் விட்டனர். அடிக்கடி வருவார். இந்த மாதிரி வெயிலில் யாராவது வரும் போது வீட்டில்
"ரோஸ் மில்க்" கொடுப்பது வழக்கம். அம்மா சமையலறையில் ஒரு டம்ளரில் ரோஸ்மில்க் ஊற்றிக்கொண்டிருந்தார்.
நான் "அம்மா எனக்கு?" என்றேன். "பால் காலி ஆயிடுச்சு, இப்ப தான குடிச்ச அதுக்குள்ள என்ன கொள்ளையில
போகுது" என்று சத்தமாக திட்டியபடியே உள்ளே சென்று அவரிடம் குடுத்தார். நான் அம்மா திட்டியதால் நான்
கோபித்து, பின்பு ஒரு நிமிடம் போல கழித்து உள்ளே சென்றேன்.

அவர் சிரித்தபடியே "தம்பி இந்தா" என்று டம்ளரை நீட்டினார். நான் ரோஷமாக "இல்லை வேண்டாம்" என்றேன்.
அவர் திரும்பவும் "இல்ல தம்பி இத பிடி" என்றார். நான் இன்னும் சத்தமாக "இல்லங்க வேண்டாம்" என்றேன். அவர்
"இல்லப்பா இது வெறும் டம்ளர் தான் இத பிடி" என்று நக்கலாக சிரித்தபடி டம்ளரை நீட்டினார்.(எனக்கென்ன தெரியும்
அந்தாளு ஒரு நிமிஷத்தில அத குடிச்சு தொளப்பாருன்னு). நான் கொஞ்சம் அவமானமாக அதை வாங்கி வைத்தேன்.

சின்னக்கா, பெரியக்கா என எல்லோரும் அவர் போன பிறகு சிரித்த சிரிப்பு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அண்ணன் வந்ததும் அவரிடமும் சொல்லி கிண்டலடித்தனர் நான் ஏதோ பத்திரிக்கைகாரனிடம்
'ஷூ'வில் அடிவாங்கியமாதிரி.

இதுக்கு யார் காரணம்????? இங்கு தான் கியோஸ் தியரி விளையாடியிருக்கிறது. நான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு
ஒரு தடவை சென்ற போது அங்கு ஒரு மயில் தோகை விரித்தாடி ஆடிக் கொண்டிருந்தது. அம்மாவிடம் ஏன் என்று
கேட்ட போது "மழை வரப்போகுது" என்றார். அந்த வருடம் நல்ல மழை. மழை அதிகம் பெய்ததால் நெல் எல்லாம்
வெள்ளத்தில் மூழ்கியது. நெல் அதிகம் இல்லாமல் வைக்கோல் அதிகம் கிடைக்கவில்லை. வைக்கோல் இல்லாமல்
மாடுகள் உணவு இல்லாமல் பால் அதிகம் சுரக்கவில்லை. பால் சுரக்காததால் பால் பண்ணையில் பால் கிடைப்பது
டிமாண்ட் ஆனது. ஆதலால் ரோஸ்மில்க் போடும் போது பால் கிடைக்காமல் போனது.

இப்போது சொல்லுங்கள் இதற்கு "peacock effect" தானே காரணம். இதே விசயத்தை கமல் தெளிவாக சொல்லாததால்
பாதி பேருக்கு புரியவில்லை. இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறேன். போதுமென்று நினைப்பவர்கள் கீழே தமிலீஷில்
ஒரு ஓட்டும் தமிழ்மணத்தில் தம்ஸ் அப்பையும் க்ளிக் செய்யவும்.

எச்சரிக்கை: விளக்கம் போதவில்லை என்று நினைத்து ஓட்டு போடவில்லையென்றால் நிறைய விளக்கங்கள்
என்னிடம் உள்ளது அவையெல்லாம் அடுத்து வெளியிடப்படும்.

23 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Anonymous said...

சுஜாதா "கற்றது பெற்றதும்" இல் க்யோஸ் தியரி பற்றி எழுதி உள்ளார்.
பதிவு interest ஆக இருக்கு.
ஆனால் நான் கஷ்டப்பட்டு விளங்கி வைத்திருந்ததை நீங்கள் பழையபடி குழப்பிவிட்டீர்கள்

கார்க்கி said...

sabbaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

நான் ஆதவன் said...

//Anonymous said...

சுஜாதா "கற்றது பெற்றதும்" இல் க்யோஸ் தியரி பற்றி எழுதி உள்ளார்.
பதிவு interest ஆக இருக்கு.
ஆனால் நான் கஷ்டப்பட்டு விளங்கி வைத்திருந்ததை நீங்கள் பழையபடி குழப்பிவிட்டீர்கள்
//

நன்றி அனானி அண்ணே. குழப்பத்த தீர்க்க இதே மாதிரி நிறைய ஐயிட்டம் இருக்கு..போடவா??
(அண்ணே ஏற்கனவே கடை காத்து வாங்குது, இதுல மொத கமெண்டே அனானின்னா நான் தான் கமெண்ட்ட போட்டேன் புரளிய கிளப்பி விட்டுடுவாங்க அதுனால பேரயும் சேர்த்து இனிமே போடுங்க)

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

sabbaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa//

இருந்தாலும் உங்க அளவுக்கு வரமுடியுமா சகா...

இளைய பல்லவன் said...

//
எச்சரிக்கை: விளக்கம் போதவில்லை என்று நினைத்து ஓட்டு போடவில்லையென்றால் நிறைய விளக்கங்கள்
என்னிடம் உள்ளது அவையெல்லாம் அடுத்து வெளியிடப்படும்.
//

விளக்கம் போதவில்லை :)))

நான் ஆதவன் said...

//விளக்கம் போதவில்லை :)))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இது ஆனந்த கண்ணீர் பல்லவன்)

அமர பாரதி said...

சூப்பர். கலக்கிட்டீங்க. முக்கியமா அந்த பின்நவீனத்துவ பீகாக் எபக்ட் விளக்கம் அருமை.

//எச்சரிக்கை: விளக்கம் போதவில்லை என்று நினைத்து ஓட்டு போடவில்லையென்றால் நிறைய விளக்கங்கள்
என்னிடம் உள்ளது அவையெல்லாம் அடுத்து வெளியிடப்படும்// போதும் சார். இது ஒன்னே போதும். இன்னும் ஒரு மாசத்துக்கு தாங்கும்.

நான் ஆதவன் said...

//அமர பாரதி said...

சூப்பர். கலக்கிட்டீங்க. முக்கியமா அந்த பின்நவீனத்துவ பீகாக் எபக்ட் விளக்கம் அருமை. //

ரொம்ப நன்றி அமரபாரதி.
//போதும் சார். இது ஒன்னே போதும். இன்னும் ஒரு மாசத்துக்கு தாங்கும்.//

கவலைபடாதீங்க இனிமே போடமாட்டேன் :-)

நான் ஆதவன் said...

//முக்கியமா அந்த பின்நவீனத்துவ பீகாக் எபக்ட் விளக்கம் அருமை. //

ஓஓஓ இதுக்கு பேரு தான் பின்நவீனமா.....

ஆ! இதழ்கள் said...

நீங்கள் ஷூவில அடிவாங்குவது இருக்கட்டும். அந்த மயிலை சும்மாவா விட்டீர்கள்?

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...

நீங்கள் ஷூவில அடிவாங்குவது இருக்கட்டும். அந்த மயிலை சும்மாவா விட்டீர்கள்?//

அப்ப எனக்கு இதுக்கு காரணம் அந்த மயில் தான்னு தெரியாது பாருங்க..அதுனால மயில் தப்பிச்சுது

இளைய பல்லவன் said...

//
நான் ஆதவன் said...
//விளக்கம் போதவில்லை :)))//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (இது ஆனந்த கண்ணீர் பல்லவன்)
//

அழுகையெல்லாம் இருக்கட்டும். விளக்கம் எங்க..

நான் ஆதவன் said...

//
அழுகையெல்லாம் இருக்கட்டும். விளக்கம் எங்க..//

நீங்க ஒருத்தர்தான் இன்னும் விளக்கம் வேண்டும்ன்னு கேட்டதனால வந்த அழுகை அது. கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் போட்டுறேன்

மு.வேலன் said...

//எனக்கும் "Butterfly effect"
ஏற்பட்டுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் அது ஒரு "peacock effect".//
அருமை, நல்ல படைப்பு.
உண்மையிலே வாய்விட்டு சிரித்து விட்டேன்.
நன்றி.

ராஜ நடராஜன் said...

எனக்குத் தெரிஞ்சு மயில் எபக்ட் என்பது பதினாறு வயதினிலே அந்த டாக்டர் தொட்டு தொட்டு எபக்ட் இருக்குதான்னு கேட்பதுதான்:)

mubaarak said...

//நான் ஏதோ பத்திரிக்கைகாரனிடம்
'ஷூ'வில் அடிவாங்கியமாதிரி.//

:-))

nallaa eluthi irukeenga

நான் ஆதவன் said...

நன்றி வேலன், ராஜ நடராஜன், முபாரக். தொடர்ந்து வாங்க..

இளைய பல்லவன் said...

//
ரொம்ப நன்றி அமரபாரதி.
//போதும் சார். இது ஒன்னே போதும். இன்னும் ஒரு மாசத்துக்கு தாங்கும்.//

கவலைபடாதீங்க இனிமே போடமாட்டேன் :-)
//
????

//
நான் ஆதவன் said...
//
அழுகையெல்லாம் இருக்கட்டும். விளக்கம் எங்க..//

நீங்க ஒருத்தர்தான் இன்னும் விளக்கம் வேண்டும்ன்னு கேட்டதனால வந்த அழுகை அது. கூடிய சீக்கிரமே எல்லாத்தையும் போட்டுறேன்
//

????

நான் ஆதவன் said...

பல்லவன் கவலைபடாதீங்க...கருத்துகணிப்பு வச்சு முடிவுபண்ணலாம். அப்படி போடக்கூடாதுன்னு வந்ததுனா உங்களுக்கு தனியா மெயில் பண்றேன்.

உங்க பதிவு ஒன்னு சூடாயிருச்சு போல...நான் கூட ஒரு பதிவு எழுதியிருக்கேன். அப்புறமா போடுறேன்

கைப்புள்ள said...

சூப்பருங்க. கண்ணுல தண்ணி தளும்புது. உங்க பழைய பதிவையெல்லாம் தேடித் தேடிப் படிக்கணும் போல.
:)))

நான் ஆதவன் said...

//கைப்புள்ள said...

சூப்பருங்க. கண்ணுல தண்ணி தளும்புது. உங்க பழைய பதிவையெல்லாம் தேடித் தேடிப் படிக்கணும் போல.
:)))//

நன்றி கைப்புள்ள. போய் படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க.

ஸ்ரீமதி said...

அண்ணா முடியல... ப்ளீஸ்... விட்டுடுங்க.. ;))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

அண்ணா முடியல... ப்ளீஸ்... விட்டுடுங்க.. ;))//

இதுக்கே இப்படியா?? இன்னும் நிறைய இருக்கே..

Related Posts with Thumbnails