பக்கவாத்தியம்

"உங்க வீடு எங்கயிருக்கு?"

இந்த கேள்விக்கு நான் பெரும்பாலும் "திருவொற்றியூர்" என்று தான் சொல்வேன். "தண்டையார்பேட்டை" என்று
சொன்னால் பெரும்பாலான பேர் "அது எங்க இருக்கு?" என்ற அடுத்த கேள்வியை கேட்பார்கள். தெரிந்தவர்கள் மட்டும்
"அங்க எங்க இருக்கீங்க?" என்ற கேள்வியை கேட்பார்கள்.

அன்று கேட்டது நான் புதியதாக சேர்ந்திருக்கும் கம்பெனியின் டீம் லீடர். மேனேஜர் அவரிடம் என்னை சேர்த்து "இவர்
புதுசா ஜாய்ன் பண்ணியிருக்கார். உங்க டீம் தான் " என்று விடைபெற்றார். முதல் கேள்வி பெயரோடு போனது.
இரண்டாவதாக அந்த கேள்வி. நான் வழக்கமாக சொல்லும் "திருவொற்றியூர்" என்ற போது "அங்க எங்க இருக்கீங்க"
என்றார். அவருக்கு ஓரளவு தெரிந்திருக்கிறது என்று நினைத்து "திருவொற்றியூர் இல்ல சார் அதுக்கு முன்ன "டோல்கேட்"
என்றேன்.

"அங்க எங்க?"
"டோல்கேட்டுக்கு முன்ன "தமிழ்நாடு தியேட்டர்" பக்கத்தில" என்றேன்.
"அட, அங்க எங்க?"
"பெருமாள் கோவில் எதிர் தெருவுல"
"அந்த தெருவிலயா இருக்கீங்க. எந்த வீடு" என்ற போது அந்த வரிசையில் இரண்டு பக்கமும் இருந்த சீட்டிலிருந்த
ஆட்களும் எங்களை ஆச்சர்யமாக நோக்கினார்கள்.
"ஒரு ப்ரௌஸிங் செண்டர் இருக்குதில்ல அந்த வீடு தான் சார்" என்றேன்.
"அட நானும் அங்க தான்...."என்று முடிக்கும் முன் முன் சீட்டிலிருந்த ஒருவர் "சார் இரண்டு பேரும் பேசி வச்சுகிட்டு
கலாய்கிறீங்களா" என்றார்.
"இல்ல சுரேஷ் நானும் அதே வீட்ல தான் ஆறு மாசம் முன்ன வரைக்கும் இருந்தேன். அப்புறம் தான் தி.நகர் வந்தேன்"
என்று என் பக்கம் திரும்பி "எந்த வீடு ப்ஸ்ட் ப்ளோரா?"
"ஆமாம் சார். நாங்க வந்து மூணு மாசம் தான் ஆகுது"

அன்றிலிருந்து எனக்கு மிகவும் நெருக்கமானார். என் வீட்டு ஓனரிடம் அவரைப் பற்றி கேட்டேன். அவர்களும் அவரைப்
பற்றி பெருமையாக கூறினார்கள். அவர் வேலை விஷயமாக அமெரிக்கா சென்ற போது இவர்களுக்காக ஒரு கேமரா
வாங்கி வந்ததை பெருமையாக சொன்னார்கள். ஓனர் பையன் வலிய வந்து பேசினான். இதுவரை என்னிடம் தெனாவட்டாக
பேசியவன் இன்று ஒரு வித மரியாதையுடன் பேசியது ஒரே ஆச்சர்யமாக இருந்தது. அது கடைசியில் அவன் கேட்ட கேள்வியில்
புரிந்தது "உன்னையும் அமெரிக்காவிற்கு அனுப்புவாங்களா?". நான் பந்தாவாக "ஆமா இல்லையா பின்ன..ஆனா அது
அமேரிக்காவா இல்ல யுரோப்பான்னு தான் சரியா தெரியல"என்றேன் போலியான கவலையோடு.

தினமும் காலையில் வேலைக்கு போகும் போது அவனை பார்த்து "என்னடா ஏதாவது வேலை கிடைச்சுதா" என்று
கிண்டலாக கேட்பதை வழக்கமாக கொண்டேன். அவ்வாறு கேட்கும் போது அவன் முகம் போகும் போக்கை பார்க்க
சந்தோஷமாக இருக்கும். உள்ளுக்குள் டீம் லீடருக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்

என் மேல் டிம் லீடருக்கு ஒருவிதமான கரிசனம் இருந்தது என்று கூட சொல்லலாம்.
ஆரம்பத்தில் செய்த சிறு சிறு தவறுகளை எல்லாம் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் அவர் செய்யும் சிறிய
விஷயங்களையெல்லாம் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்த்தார். அதை அவர் கூறாமலே நாமே கண்டுபிடித்து சொல்ல
வேண்டும் அவருக்கு. ஒரு சின்ன க்ளூ மட்டும் நமக்கு கிடைக்கும்.
சுரேஷ் "சார் உங்க காருக்கு புது பெயிண்ட் அடிச்சிருக்கீங்களா என்ன சும்மா பளபளன்னு இருக்குது?"
"அப்படியா இருக்கு! ஜஸ்ட் வாட்டர் வாஷ் தான் பண்ணியிருக்கேன்" என்பார் பெருமிதச்சிரிப்போடு....
அந்த வேலையை சுரேஷ் சரியாக செய்து வந்தான். அதற்கேற்ற சில சலுகைகளும் அவனுக்கு கிடைத்தது. குறைந்தது
வருடத்திற்கு ஒருமுறையாவது யுரோப்பிற்கு ட்ரிப் வரும் அதில் அவனும் இருப்பான்.

ஒருநாள் "சுரேஷ் today something special, guess what?" என்றார் டீம் லீடர்.
"ஆமா சார் இன்னைக்கு சன் டி.வில "காதல்" படம் போடுறான் சார்" என்றான் சம்பந்தமே இல்லாமல். டீம் லீடர் ஒன்னும்
சொல்லாமல் போனார். அவர் முகம் மாறியிருந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாக புரியவில்லை. பின்பு
டீ டைமில் அனைவரும் பேசியதிலிருந்து சுரேஷ்ற்கு மலேசியாவில் வேலை கிடைத்ததாக தெரிந்தது. அன்று டீம்
லீடரின் பிறந்த நாளாம். சுரேஷ் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வாழ்த்து சொல்லி வருகிறானாம்.

அடுத்த இரண்டு மாதத்தில் என்னிடம் நன்றாக பழகினார். ஒருநாள் புது சட்டை அணிந்து வந்திருந்தார் "சார் ஷர்ட்
புதுசா? ரொம்ப நல்லாயிருக்கு" என்றேன். அவர் "ஆமா நேத்து டெக்ஸ்டைல் இந்தியா போயிருந்தேன் அங்க எடுத்தது" என்றார்.
பின்பு வாட்ச், ஷீ, ப்ராஜெக்ட்டில் அவர் எடுக்கும் முடிவு என நீண்டது. மற்றவர்கள் அடுத்த சுரேஷ் நீதாண்டா என்றனர். எனக்கு சரியாக
அப்போது தெரியவில்லை. இப்போது யோசித்தால் அது சரிதான்.

நான்கு மாதம் கழித்து இரண்டு மாத யுரோப் ட்ரிப்பிற்கு என்னோட பாஸ்போர்ட் காப்பி வாங்கினார்.

கஜினி திரைப்படம் வந்த புதிது. பாடல்களை கேட்டு அவர் மிகவும் புகழ்ந்து கொண்டிருந்தார். நானும் அவருக்கு தோதாக
புகழ்ந்து கொண்டிருந்தேன். தீடீரென்று "இங்க எங்க கீபோர்ட் சொல்லிதராங்கன்னு தெரியுமா" என்றார்.

நான் "ஏன் சார்" என்று ஆரம்பித்து பின்பு புரிந்து கொண்டு "ஆமாம் சார் நீங்களும் கத்துக்கங்க சார் உங்களுக்கு
கற்பூர புத்தி சீக்கிரம் பிக் அப் ஆயிடுவீங்க" என்றேன். அவர் சிரித்தார்.

நான் விளையாட்டாக துபாய் வேலைக்கு அப்ளை செய்தது ஒரு நல்ல சம்பளம், அப்பாயிமெண்ட் ஆர்டரோடு சீரியஸாக
திரும்பி வந்தது. கொஞ்சம் குழப்பமாக இருந்தது துபாயா போகலாமா இல்லை இரண்டு மாத யுரோப்பா என்று.

இரண்டு நாள் கழித்து ஆபிஸிலிருந்து கிளம்பும் போது என்னிடம் "தெரியுமா நான் கீ போர்ட் க்ளாஸில சேர்ந்துட்டேன்"
என்றார் சிரித்துக்கொண்டே.
நானும் எப்போதும் போல் "அதான் உங்கள பார்த்தாலே தெரியுதே சார்" என்றேன் அவரை உயர்த்தி.
"அவர் எப்படி?" என்றார் ஆச்சர்யத்துடன்
இப்படி தீடீரென்று கேட்பார் என்று தெரியாமல் முழித்து பின்பு சமாளித்து "இன்னைக்கு நீங்க கால்குலேட்டர் யூஸ்
பண்றத பார்த்தாலே தெரிஞ்சுது சார்" என்றேன். அவர் பேசாமல் அங்கிருந்து போனார். முகம் மாறியிருந்தது.

அன்றிலிருந்து என்னிடம் பேசுவதை குறைத்து கொண்டார். நானும் வேறு வழியில்லாமல் துபாய் வேலையை தேர்ந்தெடுத்தேன்.

ஆனால் நான் அன்றைக்கு சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று இன்று வரை யோசித்தும் விடை தெரியவில்லை.

12 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

:)))

கைப்புள்ள said...

//இப்படி தீடீரென்று கேட்பார் என்று தெரியாமல் முழித்து பின்பு சமாளித்து "இன்னைக்கு நீங்க கால்குலேட்டர் யூஸ்
பண்றத பார்த்தாலே தெரிஞ்சுது சார்" என்றேன். அவர் பேசாமல் அங்கிருந்து போனார். முகம் மாறியிருந்தது.//

ஒரு வேளை நீங்க நக்கல் பண்ணறீங்களோன்னு நெனச்சிட்டாரோ என்னவோ?

Anonymous said...

VERY NICE.

நான் ஆதவன் said...

//கார்க்கி said...

:)))//

நன்றி கார்க்கி
--------------------------------------------------------------
//Anonymous said...

VERY NICE.//
நன்றி அனானி
--------------------------------------------------------
//ஒரு வேளை நீங்க நக்கல் பண்ணறீங்களோன்னு நெனச்சிட்டாரோ என்னவோ?//

அதை நான் ஒரு பாராட்டா தான் சொன்னேன் கைப்புள்ள. கொஞ்சம் ஓவர் ஆகிடுச்சோ

narsim said...

சுவாரஸ்யம்..

இளைய பல்லவன் said...

அவர் போனது கம்ப்யூட்டர் கீ போர்ட் க்ளாஸ். நீங்க கால்குலேட்டர் யூஸ் பன்றதப் பத்தி சொல்லியிருக்கீங்க. அவரோ கால்குலேட்டர் யூஸ் பண்ணாலே கம்ப்யூட்டர் ரேஞ்சுக்கு புகழணும்னு எதிர்ப்பார்க்கிறார்ன்றீங்க. இப்படி உல்டாவா சொல்லிட்டீங்களே. ஒரு வேள இது மாதிரி எதுனா சொல்லியிருந்தீங்கன்னா உங்கள ரிலீவே பண்ணியிருக்க மாட்டார்.

'நீங்க நம்ம டீம் மெம்பர்சுக்கெல்லாம் கீ போர்ட் கத்து கொடுத்துக்கிறீங்கன்னு சொல்றாங்க':))

ஸ்ரீமதி said...

அண்ணா ரொம்ப அழகா எழுதிருக்கீங்க... ரொம்ப அழகான ப்லொவ்.. Really superb.. Enjoyed.. Amazing.. :))

நான் ஆதவன் said...

//narsim said...

சுவாரஸ்யம்..//

உண்மையாகவா தல. நன்றி தல...ஆனா கடையில தான் போனியே ஆகல :-(

நான் ஆதவன் said...

//இளைய பல்லவன் said...

அவர் போனது கம்ப்யூட்டர் கீ போர்ட் க்ளாஸ். நீங்க கால்குலேட்டர் யூஸ் பன்றதப் பத்தி சொல்லியிருக்கீங்க. அவரோ கால்குலேட்டர் யூஸ் பண்ணாலே கம்ப்யூட்டர் ரேஞ்சுக்கு புகழணும்னு எதிர்ப்பார்க்கிறார்ன்றீங்க. இப்படி உல்டாவா சொல்லிட்டீங்களே.//

இது வேறயா...நான் கால்குலேட்டர்லயே உங்க கை இப்படி விளையாடுதே அப்ப கீ போர்டுல எப்படி விளையாடும்ன்ற அர்த்தத்தில சொன்னேன். அதுக்கே இப்படி. கம்யூட்டர் கீ போர்டுன்னு சொல்லியிருந்தேன்னா என் வேலை அப்பவே போயிருக்கும்

//'நீங்க நம்ம டீம் மெம்பர்சுக்கெல்லாம் கீ போர்ட் கத்து கொடுத்துக்கிறீங்கன்னு சொல்றாங்க':))//

அந்த டீம் உருப்படவிடமாட்டீங்க போல இருக்கே

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

அண்ணா ரொம்ப அழகா எழுதிருக்கீங்க... ரொம்ப அழகான ப்லொவ்.. Really superb.. Enjoyed.. Amazing.. :))//

உண்மையாவா சொல்ற.....ரொம்ப ரொம்ப தாங்ஸ் தங்காச்சி

SUREஷ் said...

ஐ............

நான் ஆதவன் said...

//SUREஷ் said...

ஐ............//

எதுக்கு இந்த ஐ......அந்த சுரேஷ் நீங்க இல்ல...

Related Posts with Thumbnails