'லக்கி'யை மட்டும் நம்பகூடாது..

இப்பதிவை எழுதிவிட்டு இதை வெளியிடலாமா வேண்டாமா என்று ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்டால் தலை
வந்தது. சரியாக சுண்டவில்லை என்று தீர்மானித்து பின்பு மறுபடியும் சுண்டினேன். இந்த முறையும் தலை வந்ததில்,
உட்கார்ந்து கொண்டு சுண்டினால் மரியாதையாக இருக்காது என்று, இந்த தடவை நின்று கொண்டு சுண்டியதில் பூ
விழுந்து பதிவை வெளியிடலாம் என்று உத்தரவு வந்தது.

ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கமும் பூ இருக்க கூடாதா என்று இம்மாதிரி நேரங்களில் நினைத்ததுண்டு.

இது இப்பொழுது தொடங்கியதில்ல சிறு வயதில் இது போல் பல விஷயங்களில் தொடங்கியது. நான்காவது வகுப்பு
வரை A B C D முழுசாகக் கூட தெரியாமல் இருந்தேன். சென். காப்ஸில் (ST.Cops அல்ல.. சென்னை கார்ப்பரேஷன்
என்பதின் சுருக்கம்). ஆறாவது என்று நினைக்கிறேன் காலாண்டு தேர்வில் ஆங்கில தேர்வு வரும் போது பயம் எடுத்துக்
கொண்டது. சின்னக்கா என்னதான் சொல்லிகொடுத்தாலும் மனதில் நிற்காது.

தெரியாத கேள்வியா வந்தால் அட்லீஸ் தெரிந்த கேள்வி & பதில் எழுதிவிட்டு வா என்று சின்னக்கா அட்வைஸ்
செய்யும். எதுவும் எழுதாமல் வராதே என்று திட்டும். நான் சாமி கும்பிட்டு திருநீறு பூசிக் கொண்டு இது பரிட்சை முடியும்
வரை அழியாமல் இருந்தால் பரிட்சை நன்றாக எழுதுவேன் என்று நம்பிக்கையோடு செல்வேன்.

பரிட்சை பேப்பரை பார்த்ததும் ஒரு கேள்விக்கும் பதில் தெரியாமல் 'போச்சுடா' என்று நெற்றியில் கைவைப்பேன்
திருநூறு அழிந்து போகும். பின்பு சாயங்காலம் திருநூறு அழிந்ததால்தான் சரியாக எழுதமுடியவில்லை என்று நினைத்து
வருத்தப்பட்டதுண்டு.
(ஒரு தடவை பதில் தெரிந்த கேள்வியான "what is your name?" "how old are you?" எழுதிவிட்டு
வந்தேன். அதற்கும் டிக் போட்டு மார்க் கொடுத்தார் அந்த பாரி வள்ளல் சென்.காப்ஸ் ஆசிரியர் :-)

ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கொண்டு போய்கொண்டிருக்கும் போது தூரத்தில் இருக்கும் கல்லை,
அருகில் இருக்கும் மற்றொரு கல்லால் காலால் தட்டிவிட்டு அது மற்ற கல்லின் மேல் பட்டால் நினைத்த காரியம் நடக்கும்
என்று நினைப்பேன். ஆனால் இந்த கல் அந்த கல்லின் அருகே போய் நின்று விடும். பின்பு அருகில் சென்ற இந்த
கல்லை திரும்பவும் தட்டி விட்டு (அதாவது அந்த கல்லில் படும் வரை) மனநிறைவுடன்(!) செல்வேன்.

ஏதாவது ஒரு பொருளை எறிந்து விட்டு திரும்பவும் அதே இடத்தில் விழுந்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு
நகரவேண்டும் என்று அரைமணிநேரத்திற்கும் மேலாக வீணாக்கியிருக்கிறேன்.

கிரிக்கெட்டில், பீல்டிங் செய்யும் போது அவுட்டே ஆகாமல் ரன்களை குவிக்கும் எதிர்டீமில் ஒருத்தன்
நான் யதேச்சையாக ஒரு காலை மடக்கி மற்றொரு காலின் முட்டியின் பின்புறம் சொறியும் போது அவுட்டானான். பின்பு
அடுத்த ஒவ்வொரு பாலும் அதே போல் மடக்கி மடக்கி, பின்பு அடுத்தவன் அவுட்டாகாமல், அப்போது போல் இப்போது
கரெக்ட்டா அதே இடத்தில் காலை மடக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொள்வேன்.

அடுத்த வருடம் மார்ச்சில் முடிவடையும் விசாவை இதோடு முடித்துக் கொண்டு ஊருக்கு போலாமா அல்லது இன்னும்
ஒரு விசா நீட்டிக்கலாமா என்று ஆபிஸ் சேரில் உட்கார்ந்து யோசிக்கும் போது, கையில் உள்ள கசங்கிய பேப்பரை
தொலைவில் உள்ள குப்பை கூடையில் சரியாக போட்டால் நீட்டிக்கலாம் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
என்று முடிவுசெய்தேன். இரண்டு தடவை சரியாக விழாமல் கீழே விழுந்தது. பின்பு யூஸ் செய்த பேப்பரை போட
வேண்டாம் என்று புதிய A4 பேப்பரை கசக்கி சரியாக போட்டேன். விசாவை நீட்டிக்கலாம் என்று முடிவுசெய்தேன்.

ஆனால் அங்கு வந்த மேனேஜர், நான் ஏதோ ஆபிஸ் நேரத்தில் விளையாடுவதாக தவறாக நினைத்து செம டோஸ்
கொடுத்தார்.....அநேகமாக விசாவை அவர்களே கேன்சல் செய்தாலும் செய்வார்கள்.

ஆகவே மக்களே நீங்களும் என்னை போல் இந்த மாதிரி 'லக்கி'யை(அட அதிர்ஷ்டத்தங்க..ஏன் நீங்க வேற எதாச்சும் நினைச்சீங்களா?)
நம்பி நாசமா போகாம பொழைக்கிற வழியை பாருங்கோ...........

உங்களுக்கு யார் மேலவாவது கோபம் இருக்கும், உங்க மேலதிகாரிகிட்ட, தங்கமணி, ரங்கமணி ஏன் இந்த பதிவ
படிச்சுட்டு என் மேல கூட இருக்கலாம். அந்த ஆத்திரத்தை கீழ உள்ள தமிழீஸ் முத்திரையில இரண்டு குத்து
குத்தினீங்கன்னா சரியா போகுது.

53 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட்

துளசி கோபால் said...

ஆஹா.... அதெப்படிங்க நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக் கிடக்கோம்!!!!!

கிரி said...

//சரியாக சுண்டவில்லை என்று தீர்மானித்து பின்பு மறுபடியும் சுண்டினேன்//

அது சரி! :-))

//கையில் உள்ள கசங்கிய பேப்பரை
தொலைவில் உள்ள குப்பை கூடையில் சரியாக போட்டால் நீட்டிக்கலாம் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
என்று முடிவுசெய்தேன்//

ஹா ஹா ஹா

ஸ்ரீமதி said...

//அந்த ஆத்திரத்தை கீழ உள்ள தமிழீஸ் முத்திரையில இரண்டு குத்து
குத்தினீங்கன்னா சரியா போகுது.//

ரெண்டு குத்தா?? அண்ணா நீ ஊருக்கு வா அப்பறம் எப்படி குத்தறேன் பாரு... :)))

ஸ்ரீமதி said...

//ஏன் இந்த பதிவ
படிச்சுட்டு என் மேல கூட இருக்கலாம். //

கண்டிப்பா... இதுல சந்தேகமே வேண்டாம்..

ஸ்ரீமதி said...

அடடா நான் இந்த அளவுக்கு அறிவாளித்தனமா இருந்ததில்லையே.. :(( ஏன் அண்ணா நீ மட்டும் இப்படி??

ஸ்ரீமதி said...

நீ சுண்டிப்போட்ட காச இன்னுமா கைல வெச்சிருக்க?? அத தலைய சுத்தி தூக்கியெறி.. அதால தானே இவ்ளோ பிரச்னையும்.. :)))))

ஸ்ரீமதி said...

//ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கமும் பூ இருக்க கூடாதா என்று இம்மாதிரி நேரங்களில் நினைத்ததுண்டு.//

நல்லவேள அப்படி எதுவும் இல்லையேன்னு நான் இப்ப சந்தோஷப்படறேன்.. :)))

சரவணகுமரன் said...

:-)

ஸ்ரீமதி said...

//இது இப்பொழுது தொடங்கியதில்ல சிறு வயதில் இது போல் பல விஷயங்களில் தொடங்கியது.//

நீ அப்போவே இப்படி தானா அண்ணா?? ;)))))

ஸ்ரீமதி said...

//நான்காவது வகுப்பு
வரை A B C D முழுசாகக் கூட தெரியாமல் இருந்தேன்//

இப்பவும் கூட உனக்கு தெரியாதுன்னு நான் கேள்விப்பட்டேன்.. ;)))))

ஸ்ரீமதி said...

//பரிட்சை பேப்பரை பார்த்ததும் ஒரு கேள்விக்கும் பதில் தெரியாமல் 'போச்சுடா' என்று நெற்றியில் கைவைப்பேன்
திருநூறு அழிந்து போகும். //

பின்ன இப்படி தேச்சா அழியாம அப்படியேவா இருக்கும்?? பேசாம பெயிண்ட்ல வரைஞ்சிவிட்றுக்கணும் உனக்கு.. :))

ஸ்ரீமதி said...

//ஏதாவது ஒரு விஷயத்தை மனதில் நினைத்துக்கொண்டு போய்கொண்டிருக்கும் போது தூரத்தில் இருக்கும் கல்லை,
அருகில் இருக்கும் மற்றொரு கல்லால் காலால் தட்டிவிட்டு அது மற்ற கல்லின் மேல் பட்டால் நினைத்த காரியம் நடக்கும்
என்று நினைப்பேன். ஆனால் இந்த கல் அந்த கல்லின் அருகே போய் நின்று விடும். பின்பு அருகில் சென்ற இந்த
கல்லை திரும்பவும் தட்டி விட்டு (அதாவது அந்த கல்லில் படும் வரை) மனநிறைவுடன்(!) செல்வேன்.//

:)))))))))))))))))))))))))

ஸ்ரீமதி said...

//ஏதாவது ஒரு பொருளை எறிந்து விட்டு திரும்பவும் அதே இடத்தில் விழுந்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு
நகரவேண்டும் என்று அரைமணிநேரத்திற்கும் மேலாக வீணாக்கியிருக்கிறேன்.//

நீ பெரிய நியூட்டன் தான் நான் ஒத்துக்கறேன்.. ;))

ஸ்ரீமதி said...

//அடுத்த வருடம் மார்ச்சில் முடிவடையும் விசாவை இதோடு முடித்துக் கொண்டு ஊருக்கு போலாமா அல்லது இன்னும்
ஒரு விசா நீட்டிக்கலாமா என்று ஆபிஸ் சேரில் உட்கார்ந்து யோசிக்கும் போது, கையில் உள்ள கசங்கிய பேப்பரை
தொலைவில் உள்ள குப்பை கூடையில் சரியாக போட்டால் நீட்டிக்கலாம் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
என்று முடிவுசெய்தேன். இரண்டு தடவை சரியாக விழாமல் கீழே விழுந்தது. பின்பு யூஸ் செய்த பேப்பரை போட
வேண்டாம் என்று புதிய A4 பேப்பரை கசக்கி சரியாக போட்டேன். விசாவை நீட்டிக்கலாம் என்று முடிவுசெய்தேன்.//

இன்னமுமா அண்ணா நீ திருந்தல?? very good.. :)))))

ஸ்ரீமதி said...

//ஆகவே மக்களே நீங்களும் என்னை போல் இந்த மாதிரி 'லக்கி'யை(அட அதிர்ஷ்டத்தங்க..ஏன் நீங்க வேற எதாச்சும் நினைச்சீங்களா?)
நம்பி நாசமா போகாம பொழைக்கிற வழியை பாருங்கோ...........//

கொடுமை... இதுதான் சாத்தான் வேதம் ஓதுரதுன்னு சொல்வாங்களா?? ;)))))))))

ஸ்ரீமதி said...

//துளசி கோபால் said...
ஆஹா.... அதெப்படிங்க நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக் கிடக்கோம்!!!!!//

டீச்சர் ஆன்டி நீங்களுமா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :) அப்ப நானும் யோசிச்சு பார்க்கிறேன்.. ;)))))))

கார்க்கி said...

/ஸ்ரீமதி said...
//ஆகவே மக்களே நீங்களும் என்னை போல் இந்த மாதிரி 'லக்கி'யை(அட அதிர்ஷ்டத்தங்க..ஏன் நீங்க வேற எதாச்சும் நினைச்சீங்களா?)
நம்பி நாசமா போகாம பொழைக்கிற வழியை பாருங்கோ...........//

கொடுமை... இதுதான் சாத்தான் வேதம் ஓதுரதுன்னு சொல்வாங்களா?? ;)))))))))//

அட உனக்கும் பதிவுலக அரசியல் தெரியுமா?

விஜய் ஆனந்த் said...

:-)))...

ஸ்ரீமதி said...

ஆபீஸ் வந்ததும் உங்க பதிவு தான் அண்ணா படிச்சேன்.. சூப்பர்.. :)))))) நன்றி.. நல்ல சிரிப்புக்கு நீங்க காரணம்.. :))))) அப்பறம் நான் போட்ட கமெண்ட் ஏதாவது உங்களுக்கு வருத்தத்த தந்தா சாரி... :)) நிஜமா ரசிச்சேன் உங்க பதிவ.. :)))))))

ஸ்ரீமதி said...

//கார்க்கி said...
/ஸ்ரீமதி said...
//ஆகவே மக்களே நீங்களும் என்னை போல் இந்த மாதிரி 'லக்கி'யை(அட அதிர்ஷ்டத்தங்க..ஏன் நீங்க வேற எதாச்சும் நினைச்சீங்களா?)
நம்பி நாசமா போகாம பொழைக்கிற வழியை பாருங்கோ...........//

கொடுமை... இதுதான் சாத்தான் வேதம் ஓதுரதுன்னு சொல்வாங்களா?? ;)))))))))//

அட உனக்கும் பதிவுலக அரசியல் தெரியுமா?//

அச்சச்சோ எனக்கு எதுவும் தெரியாது.. :(((((

நான் ஆதவன் said...

//கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட்//
பர்ஸ்ட் நீங்க தான் ஆனா எதுவும் கமெண்டலயே?
----------------------------------------------------------
//துளசி கோபால் said...

ஆஹா.... அதெப்படிங்க நாமெல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக் கிடக்கோம்!!!!!//

வாங்க டீச்சர்..நீங்களுமா மனசுக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. நம்ம மாதிரி ஒருத்தர் இருக்காங்களேன்னு :-)

நான் ஆதவன் said...

//கிரி said...

//சரியாக சுண்டவில்லை என்று தீர்மானித்து பின்பு மறுபடியும் சுண்டினேன்//

அது சரி! :-))

//கையில் உள்ள கசங்கிய பேப்பரை
தொலைவில் உள்ள குப்பை கூடையில் சரியாக போட்டால் நீட்டிக்கலாம் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளலாம்
என்று முடிவுசெய்தேன்//

ஹா ஹா ஹா//

வாங்க கிரி..நல்ல ஆத்திரத்தில இருக்கீங்க போல. தமிலீஸ்ல ஓட்டு குத்தியிருக்கீங்களே அதனால கேட்டேன் :-) நன்றி கிரி

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

ரெண்டு குத்தா?? அண்ணா நீ ஊருக்கு வா அப்பறம் எப்படி குத்தறேன் பாரு... :)))//

விசா நீட்டலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். மீ த எஸ்கேப்
//கண்டிப்பா... இதுல சந்தேகமே வேண்டாம்..//

அதான் தெரியுமே. அதுக்கு தான் என்னை குத்துறதா நினைச்சுகிட்டு ஓட்டு குத்த சொன்னேன். நீ தான் உனக்கு ஓட்டு போடுற வயசாகலன்னு சொன்னையே... அட்லீஸ் இதுலயாவது ஓட்டு போடு :-)

//அடடா நான் இந்த அளவுக்கு அறிவாளித்தனமா இருந்ததில்லையே.. :(( ஏன் அண்ணா நீ மட்டும் இப்படி??//

அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்குமா??? இருக்காது. :-)

நான் ஆதவன் said...

////நீ சுண்டிப்போட்ட காச இன்னுமா கைல வெச்சிருக்க?? அத தலைய சுத்தி தூக்கியெறி.. அதால தானே இவ்ளோ பிரச்னையும்.. :)))))//

அது ரன் பட யபெக்ட்...

//நல்லவேள அப்படி எதுவும் இல்லையேன்னு நான் இப்ப சந்தோஷப்படறேன்.. :)))//

நீ சந்தோஷபடுறதிலேயும் ஒரு காரணம் இருக்கு. இல்லையினா இந்த மாதிரி ஒரு அருமையான பதிவு கிடைச்சிருக்குமா?

//நீ அப்போவே இப்படி தானா அண்ணா?? ;)))))//

எப்பவுமே இப்படிதான் :-)

நான் ஆதவன் said...

//சரவணகுமரன் said...

:-)//
வாங்க சரவணகுமரன். வருகைக்கு நன்றி

நான் ஆதவன் said...

//இப்பவும் கூட உனக்கு தெரியாதுன்னு நான் கேள்விப்பட்டேன்.. ;)))))//

இப்படி பப்ளிக்கா எதுவும் கேக்கப்படாது....

//
பின்ன இப்படி தேச்சா அழியாம அப்படியேவா இருக்கும்?? பேசாம பெயிண்ட்ல வரைஞ்சிவிட்றுக்கணும் உனக்கு.. :))//

செஞ்சிருக்கலாம். ஆனா கணக்கு பரிட்சைக்கு குங்குமம் வச்சிட்டு போனா தான் நல்லா எழுதுவேன்னு ஒரு நம்பிக்கை. அறிவியலுக்கு சந்தனம்ன்னு இப்படி பலவற்றை பூச வேண்டியிருந்ததால் பெயிண்ட் வேணாம்ன்னு விட்டுட்டேன் :-)

//நீ பெரிய நியூட்டன் தான் நான் ஒத்துக்கறேன்.. ;))//

உனக்கு தெரியுது ஆனா நான் வேலை செய்யிற கம்பெனிக்கு தெரியலயே :-(

நான் ஆதவன் said...

//இன்னமுமா அண்ணா நீ திருந்தல?? very good.. :)))))//

திருந்தறதுக்கு அப்படி என்ன நான் தப்பா செஞ்சுட்டேன்.

//கொடுமை... இதுதான் சாத்தான் வேதம் ஓதுரதுன்னு சொல்வாங்களா?? ;)))))))))//

ஏன் கூடாதா....வேதம் என்ன பார்பனர்கள் மட்டும் தான் சொல்லனுமா...கலைஞர் யார் வேணாலும் அர்ச்சகர் ஆகலான்னு சட்டமே போட்டிருக்கார் தெரியுமா? (பார்த்தயா இதுல எப்படி அரசியல கொண்டு வந்தேன்னு:-) இத தான் கார்க்கி கீழ கேட்டிருக்கார். அப்படிதானே கார்க்கி?)

நான் ஆதவன் said...

//டீச்சர் ஆன்டி நீங்களுமா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :) அப்ப நானும் யோசிச்சு பார்க்கிறேன்.. ;)))))))//

புத்திசாலிங்கன்னா அப்படிதான் ...
(அய்யய்யோ இன்னும் உன்னோட கமெண்ட் இருக்கா...அவ்வ்வ்வ்வ்வ் இப்படி examக்கு கூட பதில் எழுதினதில்லையே)

//ஆபீஸ் வந்ததும் உங்க பதிவு தான் அண்ணா படிச்சேன்.. சூப்பர்.. :)))))) நன்றி.. நல்ல சிரிப்புக்கு நீங்க காரணம்.. :))))) அப்பறம் நான் போட்ட கமெண்ட் ஏதாவது உங்களுக்கு வருத்தத்த தந்தா சாரி... :)) நிஜமா ரசிச்சேன் உங்க பதிவ.. :)))))))//

இத நாங்க நம்பனுமாக்கும்...

நான் ஆதவன் said...

//விஜய் ஆனந்த் said...

:-)))...//

வாங்க ஸ்மைல் ஆனந்த். :-)
---------------------------------------------------------
கார்க்கி said...
//அட உனக்கும் பதிவுலக அரசியல் தெரியுமா?//

வாங்க சகா..ஆணி அதிகம் இருந்து மீள் பதிவு போடும் நிலமையிலும் என் பதிவில் கமெண்ட் போட்டதற்கு நன்றி சகா

ஸ்ரீமதி said...

//அதான் தெரியுமே. அதுக்கு தான் என்னை குத்துறதா நினைச்சுகிட்டு ஓட்டு குத்த சொன்னேன். நீ தான் உனக்கு ஓட்டு போடுற வயசாகலன்னு சொன்னையே... அட்லீஸ் இதுலயாவது ஓட்டு போடு :-)//

ஆபீஸ்ல ஆப்பு வெச்சிருக்காங்க.. வீட்டுக்கு போயி போடறேன்.. :))

ஸ்ரீமதி said...

//நீ சந்தோஷபடுறதிலேயும் ஒரு காரணம் இருக்கு. இல்லையினா இந்த மாதிரி ஒரு அருமையான பதிவு கிடைச்சிருக்குமா?//

Good joke.. ;)))))

ஸ்ரீமதி said...

//செஞ்சிருக்கலாம். ஆனா கணக்கு பரிட்சைக்கு குங்குமம் வச்சிட்டு போனா தான் நல்லா எழுதுவேன்னு ஒரு நம்பிக்கை. அறிவியலுக்கு சந்தனம்ன்னு இப்படி பலவற்றை பூச வேண்டியிருந்ததால் பெயிண்ட் வேணாம்ன்னு விட்டுட்டேன் :-)//

கஷ்டம் :)))))

ஸ்ரீமதி said...

//ஏன் கூடாதா....வேதம் என்ன பார்பனர்கள் மட்டும் தான் சொல்லனுமா...கலைஞர் யார் வேணாலும் அர்ச்சகர் ஆகலான்னு சட்டமே போட்டிருக்கார் தெரியுமா? (பார்த்தயா இதுல எப்படி அரசியல கொண்டு வந்தேன்னு:-) இத தான் கார்க்கி கீழ கேட்டிருக்கார். அப்படிதானே கார்க்கி?)//

No comments.

ஸ்ரீமதி said...

//(அய்யய்யோ இன்னும் உன்னோட கமெண்ட் இருக்கா...அவ்வ்வ்வ்வ்வ் இப்படி examக்கு கூட பதில் எழுதினதில்லையே)//

ரசிச்சு இவ்ளோ கமெண்ட் போட்டா.. அதுக்கு பதில் போட அழறியா அண்ணா நீ??????

ஸ்ரீமதி said...

//இத நாங்க நம்பனுமாக்கும்...//

நீ புத்திசாலின்னு தான் எனக்கு தெரியுமே.. ;)))))

நான் ஆதவன் said...

மேட்டர் சூடாயிருச்சு....

narsim said...

நல்லா வச்சய்யா தலைப்ப!!!!!

gulf-tamilan said...

:)))

மோகன் கந்தசாமி said...

சுய எள்ளல் சூப்பர் மாமு!

தராசு said...

செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு, கடைசியில செய்யாதேன்னு சொல்லீருக்கீங்களே, நீங்க என்ன சாமியாரா?????

உங்களுக்கு சிஷ்யர்கள் கூட்டம் வேற இருக்குது,

நல்லா உட்றாங்கப்பா தத்துவங்களை!!!

இருந்தாலும் ரசிக்க முடிந்தது.

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...

ரசிச்சு இவ்ளோ கமெண்ட் போட்டா.. அதுக்கு பதில் போட அழறியா அண்ணா நீ??????//

சாரிம்மா ரொம்ப சாரி....இனிமே இந்த மாதிரியே கமெண்ட் போடு...சூடாக்கனதுக்கு டாக்ஸ் தங்கச்சி
----------------------------------------------------------------
//narsim said...

நல்லா வச்சய்யா தலைப்ப!!!!!///

ஹி..ஹி..இல்லன்னா உங்கள மாதிரி பெரிய ஆளுக வருவீகளா...
----------------------------------------------------------------

நான் ஆதவன் said...

//gulf-tamilan said...

:)))//

நன்றி கல்ப் தமிழன் (அந்த கல்ப்பா?)
----------------------------------------------------
//மோகன் கந்தசாமி said...

சுய எள்ளல் சூப்பர் மாமு!//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் கந்தசாமி
-------------------------------------------------------------
//தராசு said...

செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு, கடைசியில செய்யாதேன்னு சொல்லீருக்கீங்களே, நீங்க என்ன சாமியாரா?????//

மேனேஜர்கிட்ட டோஸ் வாங்கினதுனால இந்த அட்வைஸ் :-)

//
நல்லா உட்றாங்கப்பா தத்துவங்களை!!!

இருந்தாலும் ரசிக்க முடிந்தது.//

நன்றி தராசு

கைப்புள்ள said...

//இப்பதிவை எழுதிவிட்டு இதை வெளியிடலாமா வேண்டாமா என்று ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டி விட்டால் தலை
வந்தது. சரியாக சுண்டவில்லை என்று தீர்மானித்து பின்பு மறுபடியும் சுண்டினேன். இந்த முறையும் தலை வந்ததில்,
உட்கார்ந்து கொண்டு சுண்டினால் மரியாதையாக இருக்காது என்று, இந்த தடவை நின்று கொண்டு சுண்டியதில் பூ
விழுந்து பதிவை வெளியிடலாம் என்று உத்தரவு வந்தது.//

பதிவில் உள்ள பல விஷயங்களுக்கும் நான் ரிப்பீட்டேய் போட வேண்டி உள்ளதால் இதுக்கு மட்டும் ஒரு பெரிய ரிப்பீட்டேய் போட்டுக்கறேன். எதார்த்தமான எழுதிருக்கீங்க. நல்லாருக்கு படிக்கறதுக்கு.

நான் ஆதவன் said...

//பதிவில் உள்ள பல விஷயங்களுக்கும் நான் ரிப்பீட்டேய் போட வேண்டி உள்ளதால் இதுக்கு மட்டும் ஒரு பெரிய ரிப்பீட்டேய் போட்டுக்கறேன். எதார்த்தமான எழுதிருக்கீங்க. நல்லாருக்கு படிக்கறதுக்கு.//

வருகைக்கு நன்றி கைப்புள்ள. உங்க பெரிய ரிப்பீட்டுக்கு ஒரு நன்றி

செந்தழல் ரவி said...

பெரிய அறிவாளி நீங்க !!!!!!

ஐன்ஸ்டீன் காலத்துல பொறந்திருந்தா அவருடைய அசிஸ்டெண்டா சேர்ந்திருக்கலாம்..!!

இராகவன், நைஜிரியா said...

கருத்து விழுந்த அளவு ஓட்டு விழலயப்பா... நான் என்ன செய்வேன்.. இந்த மொக்கை தமிலிழில் பாப்புலராகலன்ன வேற எந்த மொக்கை பாப்புலராகுங்க..

ஒழுங்கா காயின் சுண்டி பார்த்து போட்டியப்பா..
இனிமே பூ போட்டு பார்த்துட்டு பதிவு போடுங்க.. என்ன நான் சொல்றது சரிதானே..

நான் ஆதவன் said...

//செந்தழல் ரவி said...
பெரிய அறிவாளி நீங்க !!!!!!

ஐன்ஸ்டீன் காலத்துல பொறந்திருந்தா அவருடைய அசிஸ்டெண்டா சேர்ந்திருக்கலாம்..!!//

அண்ணே நீங்க சொன்னா சரிதாண்ணே.

அதுல பாருங்க உங்களுக்கு தெரியுது, என் கம்பெனிக்கு தெரியல...

நான் ஆதவன் said...

//இராகவன், நைஜிரியா said...
கருத்து விழுந்த அளவு ஓட்டு விழலயப்பா... நான் என்ன செய்வேன்.. இந்த மொக்கை தமிலிழில் பாப்புலராகலன்ன வேற எந்த மொக்கை பாப்புலராகுங்க..

ஒழுங்கா காயின் சுண்டி பார்த்து போட்டியப்பா..
இனிமே பூ போட்டு பார்த்துட்டு பதிவு போடுங்க.. என்ன நான் சொல்றது சரிதானே..//

ஆமாங்க அதான் கொஞ்சம் கவலையா இருந்தது. நீங்க அப்ப இருந்தீங்கன்னா அப்பவே பப்ளிஷ் ஆகியிருக்கும். மூணு ஓட்டு வாங்கிட்டு லைன்லயே ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தது :-(

PoornimaSaran said...

:)

நான் ஆதவன் said...

//PoornimaSaran said...

:)//

நன்றி பூர்ணிமாசரண். என்னோட பதிவுகளில் முதன் முறையா ஐம்பதாவது கமெண்ட் உங்களோடது வந்திருக்கு. அதுக்கு ஒரு ஸ்பெஷல் டாங்ஸ் :-)

கண்மணி said...

இந்த blog படிக்கும் போது என்னால சிரிப்பா Control பண்ண முடியல
உலகத்துல 75% இப்படித்தான் யோசிப்பாங்க போல ..
நான் படிச்சா முடிச்ச பின்னாடி
எங்க வேலைக்கு போவேன்னு எங்க அம்மாகிட்ட
மூணு விரலை காமிச்சு ,..

ஆள்காட்டி விரல் வந்து USA
பாம்பு விரல் பெங்களூர்
மோதிர விரல் Channai

எங்க தொட்டது என்னவோ ஆள்காட்டி விரல் தான் ....ஆனா
காலபகவான் என்ன இப்போ மலேசியாவுக்கு இழுத்துட்டு வந்துட்டாரு ....

:-) :-)

கண்மணி said...

இந்த blog படிக்கும் போது என்னால சிரிப்பா Control பண்ண முடியல
உலகத்துல 75% இப்படித்தான் யோசிப்பாங்க போல ..
நான் படிச்சா முடிச்ச பின்னாடி
எங்க வேலைக்கு போவேன்னு எங்க அம்மாகிட்ட
மூணு விரலை காமிச்சு ,..

ஆள்காட்டி விரல் வந்து USA
பாம்பு விரல் பெங்களூர்
மோதிர விரல் Channai

எங்க தொட்டது என்னவோ ஆள்காட்டி விரல் தான் ....ஆனா
காலபகவான் என்ன இப்போ மலேசியாவுக்கு இழுத்துட்டு வந்துட்டாரு ....

:-) :-)

Related Posts with Thumbnails