நாங்களும்(விஜயை போல) "ஹீரோ" தான்!

குஷி படத்தில நம்ம "டாக்டர்" விஜய் ஒரு பாட்டுல கயிறை கட்டிகிட்டு மேல இருந்து கீழ குதிப்பாரு. அதை அப்படியே வாய பொழந்துகிட்டு "அகஸ்தியா" தியேட்டர்ல பார்த்துட்டு "மச்சி எப்படிடா விஜய் மேலிருந்து கீழ குதிச்சாரு? ஒருவேளை டூப்பா இருக்குமோ"ன்னு நண்பர்கள் எல்லாம் பேசிட்டு வந்திருக்கோம்.

இந்த வருஷம்(பிப்ரவரி '08) துபாயில "bungy jump"ன்னு நம்ம DSFல்ல (dubai shopping festival) தொடங்கியிருக்கிறதா நம்ம நண்பர் போன் பண்ணி சொல்ல, உடனே துபாயிக்கு புறப்பட்டேன். அதாவது 60 அடி மேல இருந்து கீழ குதிக்கனும். கிடைக்கிற சான்ஸ ஏன் விடனும். வீடியோவோட சேர்த்து 350 திரம்ஸ் ஆச்சு.

என்னோட துரதிஷ்டம் அது கடைசி நாள். மாலை ஆறு மணிக்கு மேல ஆயிடுச்சு. இருட்டிடுச்சு. சரி பரவாயில்லை குதிக்கலாம்ன்னு குதிச்சதுதான் கீழ இருக்கிற வீடியோ. இருட்டினதுனால வீடியோ கொஞ்சம் க்ளியரா இல்லை.:-(

ஹி..ஹி..பேக் க்ரவுண்ட் மியூஸிக் நம்ம கைங்கரியம்.....அந்த பேக் க்ரவுண்ட் மியூஸிக் பிடிக்காதவங்களுக்கு இது..ஹி...ஹி


டிஸ்கி:வீடியோவை பாராட்டி எழுதினா அவுங்க பதிவில(எப்பேர்பட்டதானாலும்) வந்து 25 பின்னூட்டம் போடப்படும்.

24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

துளசி கோபால் said...

பஞ்சி ஜம்பிங் தோற்றம் எங்க நாடுதான். இங்கே இருந்து மற்ற நாடுகளுக்கு போயிருக்கு.

விஜய் இங்கேதான் வந்து குதிச்சார். குவீன்ஸ் டவுன் நகரில் அருகில் ஏர்ரோ டவுன் என்ற இடத்தில் ரெண்டு மலைகளுக்கிடையில் கட்டிவைச்ச பாலத்தில் இருந்து குதிக்கிறாங்க.

நீங்க குதிச்சப்ப இருட்டிருச்சா? அச்சச்சோ.....
பேசாம நியூஸிக்கு வாங்க. குதிக்கலாம்.

ஸ்ரீமதி said...

வீடியோ தெரியலியே... :(( வீட்ல போயி பார்த்து சொல்றேன் அண்ணா.. :))

ஷங்கர் Shankar said...

சூப்பருங்கண்ணா!

டாக்டர் விஜய் ரேஞ்சுக்கு குதிக்கிறிர்கள் !

ஆனா வீடியோதான் சரியாத் தெரியலே

நான் ஆதவன் said...

//நீங்க குதிச்சப்ப இருட்டிருச்சா? அச்சச்சோ.....
பேசாம நியூஸிக்கு வாங்க. குதிக்கலாம்.//

வாங்க டீச்சர்..எனக்கும் வரனும்ன்னு ஆசை தான். ஒரு விசா ரெடி பண்ணிடுங்க அங்கேயும் குதிச்சிரலாம் :-)

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
வீடியோ தெரியலியே... :(( வீட்ல போயி பார்த்து சொல்றேன் அண்ணா.. :))//

சரி தங்காச்சி..பார்த்துட்டு கமெண்டுங்கோ..

நான் ஆதவன் said...

//ஷங்கர் Shankar said...
சூப்பருங்கண்ணா!

டாக்டர் விஜய் ரேஞ்சுக்கு குதிக்கிறிர்கள் !

ஆனா வீடியோதான் சரியாத் தெரியலே//

நன்றி ஷங்கர். அதான் எனக்கும் ஒரே கவலை. இந்த தடவை வந்தா வெளிச்சத்தல குதிக்கனும்

ஸ்ரீமதி said...

//வெளிச்சத்தல குதிக்கனும்//

கீழ குதிக்கலாம்... கெணத்துல குதிக்கலாம்.. வெளிச்சத்துல எப்படி குதிக்கறது?? :((

நான் ஆதவன் said...

//கீழ குதிக்கலாம்... கெணத்துல குதிக்கலாம்.. வெளிச்சத்துல எப்படி குதிக்கறது?? :((//

சத்தியமா இந்த மாதிரி மொக்க போட்டேனா நான் கடல்லயே குதிச்சிருவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

கார்க்கி said...

ஒரு வேளை எங்க தலைவர கின்டலடிக்கறீங்களோனு பயந்துக்கிட்டா வந்தேன்.. அப்படியே பத்ரில கை மேல கார் ஏத்தியதையும் ட்ரை பண்ணுங்க சகா

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
ஒரு வேளை எங்க தலைவர கின்டலடிக்கறீங்களோனு பயந்துக்கிட்டா வந்தேன்.. அப்படியே பத்ரில கை மேல கார் ஏத்தியதையும் ட்ரை பண்ணுங்க சகா//

அது கூட வேண்டுதல் இருக்கு சகா...நட்சத்திர பதிவாளரா ஆயிட்டேனா அதை நிறைவேத்துறேன்னு மேல்மருவத்தூர் கருமாரியம்மன்கிட்ட வேண்டியிருக்கேன் ("சத்தியமா அப்படி எதுவும் நடக்காதுன்ற தைரியத்தில வேண்டியிருக்கான் பாரு"ன்னு முனகுவது கேட்குது சகா)

ஆ! இதழ்கள் said...

என்னிடம் 400 திரம்ஸ் குடுத்து குதிக்க சொன்னாலும் மாட்டேன்பா....

மேலே போனவுடன் பக்கத்துல இருக்கிறவன தள்ளிவிட்ருந்தா என்ன ஆகும்.

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...
என்னிடம் 400 திரம்ஸ் குடுத்து குதிக்க சொன்னாலும் மாட்டேன்பா....

மேலே போனவுடன் பக்கத்துல இருக்கிறவன தள்ளிவிட்ருந்தா என்ன ஆகும்.//

ஹா...ஹா. என்னுடைய நண்பர் மேல போய் 5 நிமிஷமா குதிக்க மாட்டேன்னு பயத்துல அடம் பிடிக்க அவர்கிட்ட பக்கத்திலிருந்த ஆள் இரண்டு கையையும் நீட்ட சொல்லிட்டு நீட்டினதுக்கப்புறம் லைட்டா தள்ளி விட்டுட்டாரு...:-)

இளைய பல்லவன் said...

//வீடியோவை பாராட்டி எழுதினா அவுங்க பதிவில(எப்பேர்பட்டதானாலும்) வந்து 25 பின்னூட்டம் போடப்படும்.
//

வீடியோ ரொம்ப சூப்பர்.

ஆனா என்ன ஒண்ணுமே தெரியல. அதனால என்ன பாராட்டக்கூடாதா.

டைவடிச்சது ஆதவனாச்சே. அதனால்தான் வெளிச்சமில்லையோ என்னவோ. ;-))

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
//கீழ குதிக்கலாம்... கெணத்துல குதிக்கலாம்.. வெளிச்சத்துல எப்படி குதிக்கறது?? :((//

சத்தியமா இந்த மாதிரி மொக்க போட்டேனா நான் கடல்லயே குதிச்சிருவேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்//

அய்யய்யோ அண்ணா வேண்டாம் நான் இனிமே ஒன்னும் கேட்கமாட்டேன்... :))

கோவி.கண்ணன் said...

பாட்டுகள் சேர்ப்பு கலக்கல். ரொம்ப துணிவுதான்.

பாராட்டுகள் !

SUREஷ் said...

தைரியம் பாஸ்

நான் ஆதவன் said...

//வீடியோ ரொம்ப சூப்பர்.//

25 பின்னூட்டம் க்ராண்டட்

//ஆனா என்ன ஒண்ணுமே தெரியல. அதனால என்ன பாராட்டக்கூடாதா.

டைவடிச்சது ஆதவனாச்சே. அதனால்தான் வெளிச்சமில்லையோ என்னவோ. ;-))//

ஆமா கருப்புச் சூரியன்

நான் ஆதவன் said...

//அய்யய்யோ அண்ணா வேண்டாம் நான் இனிமே ஒன்னும் கேட்கமாட்டேன்... :))//

அப்ப வெறும் ஸ்மைலி தானா இனி அவ்வ்வ்வ்வ்வ் அப்ப கடல்ல குதிக்கறது கன்பார்ம்

நான் ஆதவன் said...

//கோவி.கண்ணன் said...
பாட்டுகள் சேர்ப்பு கலக்கல். ரொம்ப துணிவுதான்.

பாராட்டுகள் !//

வாங்க கோவிக்கண்ணன் நீங்க ஒரு ஆளு தான் பாட்டை கவனிச்சு பாராட்டியிருக்கீங்க...ரொம்ப ரொம்ப தாங்ஸ் :-)

நான் ஆதவன் said...

//SUREஷ் said...
தைரியம் பாஸ்//

மதுரைகாரங்கன்னா சும்மாவா :-)

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
//அய்யய்யோ அண்ணா வேண்டாம் நான் இனிமே ஒன்னும் கேட்கமாட்டேன்... :))//

அப்ப வெறும் ஸ்மைலி தானா இனி அவ்வ்வ்வ்வ்வ் அப்ப கடல்ல குதிக்கறது கன்பார்ம்//

அச்சோ சரி சரி.. வெறும் ஸ்மைலி மட்டும் போடமாட்டேன்.. போதுமா அண்ணா?? :)

rapp said...

ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எனக்கு பாக்கறதுக்கே தல சுத்துது. வீடியோ சூப்பர்:):):) அப்டி தொங்கிக்கிட்டிருந்தப்போ எப்டி இருந்துச்சி? என்ன நெனச்சீங்க அப்போ?

நான் ஆதவன் said...

//rapp said...
ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், எனக்கு பாக்கறதுக்கே தல சுத்துது. வீடியோ சூப்பர்:):):) அப்டி தொங்கிக்கிட்டிருந்தப்போ எப்டி இருந்துச்சி? என்ன நெனச்சீங்க அப்போ?//

அதை ஏன் கேக்கிறீங்க (உடனே காதை பொத்திப்பீங்களே. காதுலயிருந்து கைய எடுங்க) குதிக்கறதுக்கு முன்னாடி பயத்தில பயங்கரமா உளறுனேன். குதிக்கம் போது பயங்கரமா கத்தினேன். அதை எல்லாம் மறைக்க தான் "பேக் க்ரவுண்ட் சாங்" போட்டு மேக்கப் செய்திருக்கேன். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா எப்படியெல்லாம் கஷ்டபடவேண்டியிருக்கு பாருங்க...

rapp said...

//குதிக்கறதுக்கு முன்னாடி பயத்தில பயங்கரமா உளறுனேன்//

அதாவது நார்மலா இருந்தேங்குறீங்க:):):)

Related Posts with Thumbnails