ஒரு பிரபலத்தின் (வெளிவராத) பேட்டி!

நிருபர் : "சார் வணக்கம்"

பிரபலம் : "வாங்க வணக்கம், என்ன இந்த பக்கம்? என்னை கூட ஞாபகம் வச்சிருக்கீங்க பரவாயில்லை"

நிருபர் :"இல்ல சார் இந்த தடவை உங்கள பத்தி தான் ஊரே பேசுதே, நீங்க இவ்வளவு கொடூரமா நடப்பைங்கன்னு யாரும் எதிர் பார்க்கல"

பிரபலம் :"ஒரு நிமிஷம் நிறுத்துங்க..சும்மா சும்மா நான் ரொம்ப கடுமையா நடந்திட்டுருக்கேன்னு சொல்றீங்களே, அவுங்க செய்ததை நீங்க பேசவே மாட்டீங்களா"

"உங்களுக்காகவும் சில பேர் பேசுறாங்க..ஆனா நீங்க திடுதிடுப்புன்னு மத்தவங்க வீட்டுக்கு போயி அவுங்கள வீட்டை விட்டு வெளியேத்துறது ரௌடிசம் மாதிரி இல்லையா"

"என்னது அவுங்க வீடா?, அதுவுமில்லாம நான் ரௌடிசம் பண்றேனா? என்ன வார்த்தை சொல்றீங்க.. எங்க பரம்பரை பத்தி இந்த ஊருக்கே தெரியும். இன்னும் என்னோட மூதாதயரை கடவுளா வணங்குறவுங்களும் இருக்காங்க நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு இந்த மக்களுக்கு தெரியும் இந்த மாதிரி வதந்தியை பரப்புறதே உங்க மீடியா தான்"

"சார் எல்லாரையும் மாதிரி மீடியாவை குத்தம் சொல்லாதீங்க. நாங்க என்ன நடக்குதோ அதையே தான் காட்றோம்"

"நீங்க மும்பையில காட்டுனத பத்திதான் ஊரே பேசுதுதே! சரி நான் அவுங்க வீட்ல திடுதிடுப்புன்னு நுழைச்சதா சொல்றீங்களே அவுங்க இருக்குறது என்னோட நிலம். அத அநியாயமா அபகரிச்சு வீட்டை கட்டியிருக்காங்க அப்ப எங்க போச்சு உங்க மீடியா?"

"நாங்களும் இத அப்பப்ப அரசாங்கத்துக்கிட்ட மறைமுகமாக சொல்லிகிட்டுதான் இருக்கோம். இதுமல்லாம எங்களோட டி.வி.ல இதபத்தி அப்பப்ப காட்றோம். ஆனா ஆளும்கட்சியே இதை செய்யும் போது நாங்க என்ன சார் செய்ய முடியும்"

"நீங்க சொல்றதும் சரி தான். நானும் என்ன செய்யிறது சொல்லுங்க..மாசத்தில எத்தனை நாடுகளுக்கு போக வேண்டி இருக்கு தெரியுமா. எவ்வளவு பிஸி தெரியுமா. இவ்வளவு பிஸில இங்க யாராவது வீடு கட்டுறாங்களா இல்லையான்னு எப்படி தெரிஞ்சுகிறது. இத்தனைக்கும் சில வருடங்களுக்கு முன்னால ஒரு சில பேரை கொண்டு சில அமைப்புகளை எல்லாம் உருவாக்கினேன். ஆனா அவுங்களாளையும் எதுவும் செய்ய முடியல. நான் இங்க இருக்குறதே கொஞ்ச நாள் தான். ஆனாலும் இங்க நான் வந்தேன்னா செய்யிற நல்லதெல்லாம் மீடியாவில இருக்கிற உங்களுக்கும் தெரியும். ஏதோ இடையில ஒரு ரெண்டு மூணு வருஷம் வரமுடியல. அதுக்குள்ள என்னோட இடத்தை ஆக்கரமிச்சு கட்டிட்டாங்க. அதான் இந்த வருஷம் இத்தனை பேரோட வந்து....கொஞ்சம் அதிகமா பிரச்சனை ஆகிடுச்சு"
"உங்களுக்கு வேண்டியவங்கள கொலை செய்யிறதா வேற சொல்லியிருந்தீங்க?"

"ஆமா, நான் இங்க வருவதற்கு அவுங்களும் ஒரு காரணம், ஆனா அவுங்களையும் இங்க இருக்கவங்க வெட்டி கொன்னுருக்காங்க. இதுதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவுங்க யாருக்கும் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிங்க. அவுங்கள போய் கொன்னுருக்காங்க. அவுங்கள கொன்னுட்டா நான் இங்க வருவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறாங்க. ஆனா அந்த முட்டாள்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இதனால் என்னுடைய வருகை ரொம்ப ஆவேசமா இருக்கும், மேலும் அவர்களை நான் வீடு புகுந்தும் அடிப்பேன்"

"நீங்க மட்டும் இவ்வளவு அநாகரிகமா பேசலாமா?"

"மன்னிக்கனும், நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன், நான் இங்க வருவதை ஏன் தடுக்குறாங்கன்னு தெரியல இதுனால அவுங்களுக்கு என்ன நன்மையின்னும் தெரியல"

"சரி இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க"

"அதுதான் எனக்கும் தெரியில. எனக்கு மேலை நாட்டுலயெல்லாம் நிறைய இடம் இருக்கு அங்கெல்லாம் இந்த மாதிரி நடக்கிறதில்லை. அங்கெல்லாம் எனக்கு நல்ல மரியாதை இருக்கு. இங்க மட்டும் தான் இப்படி. ஆனா ஒன்னு நான் உங்க ஊருக்கு வருவதை நிறுத்தினா உங்க அரசாங்கத்துக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா. இது உங்க ஆட்சி பீடத்தில் மாறி மாறி உட்கார்ந்திருக்கும் எல்லா முதலைமைச்சருக்கும் தெரியும்"

"அப்படின்னா நீங்க வருவதை முன்னாலேயே தெரிவிச்சுருந்தா இங்க முன்னேற்பாடு செய்திருப்பாங்களே? நீங்க ஏன் முன்னாடியே சொல்லல?"

"நான் தான் வருவேன் டி.வி.ல வானிலை மையத்தலைவர் ரமணி சொல்லியிருந்தாரே, நீங்க பாக்கலையா? சரி நான் தான் ஒவ்வொரு வருஷம் ஆகஸ்டு மாசத்திலிருந்து டிசம்பர் வரைக்கும் எப்பவேணா தீடீர் திடீர்ன்னு வருவேன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே. இது கூட உங்க அறிவுக்கு தெரியல" என்று கோபமாக கூறி பேட்டியை முடித்துக் கொண்டு வேறு இடத்திற்கு செல்லவிருப்பதால் நம் பிரபலம் "மழை" இங்கு பெய்வதை நிறுத்திவிட்டு வேகமாக சென்று மறைந்தார்.


இது நம்ம பிரபலம்!


இது அவருக்கு வேண்டியவங்க....


18 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

நல்ல ஐடியா சகா.. சூப்பர்

Bleachingpowder said...

நீங்கள் எழுதியதிலேயே இதுதான் பெஸ்ட்.வாழ்த்துகள் :)

smile said...

கலக்கல்

ஸ்ரீமதி said...

சூப்பர் அண்ணா... :))))) படிக்க ஆரம்பிச்சதும் கொஞ்சம் யூகிச்சுட்டேன்... சாரி.. :((

ஸ்ரீமதி said...

மழை படம் ரொம்ப அழகு... வெள்ளி நிறம்.. சூப்பர்.. :)))

நல்லதந்தி said...

நான் எதிர்பார்க்க வில்லை இந்த டுவிஸ்ட்டை!.சூப்பர்!

கோவி.கண்ணன் said...

நல்ல முயற்சி !

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
நல்ல ஐடியா சகா.. சூப்பர்//

நன்றி சகா..
--------------------------------------------------------
//Bleachingpowder said...
நீங்கள் எழுதியதிலேயே இதுதான் பெஸ்ட்.வாழ்த்துகள் :)//

அப்படியா...ரொம்ப நன்றி ப்ளீச்சிங் பவுடர்
--------------------------------------------------------
//smile said...
கலக்கல்//
நன்றி smile
--------------------------------------------------------
//ஸ்ரீமதி said...
சூப்பர் அண்ணா... :))))) படிக்க ஆரம்பிச்சதும் கொஞ்சம் யூகிச்சுட்டேன்... சாரி.. :((//

நீ என் தங்கச்சி ஆச்சே..புத்திசாலியாத்தான் இருப்ப :-)

//மழை படம் ரொம்ப அழகு... வெள்ளி நிறம்.. சூப்பர்.. :)))//

எல்லாம் சுட்டது தான்
---------------------------------------------------------
//நல்லதந்தி said...
நான் எதிர்பார்க்க வில்லை இந்த டுவிஸ்ட்டை!.சூப்பர்!//

நன்றி நல்லதந்தி சார்...
---------------------------------------------------------
//கோவி.கண்ணன் said...
நல்ல முயற்சி !//

உங்களை மாதிரி பெரிய ஆளுங்க வாழ்த்துறதுன்னா சும்மாவா

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
//ஸ்ரீமதி said...
சூப்பர் அண்ணா... :))))) படிக்க ஆரம்பிச்சதும் கொஞ்சம் யூகிச்சுட்டேன்... சாரி.. :((//

நீ என் தங்கச்சி ஆச்சே..புத்திசாலியாத்தான் இருப்ப :-)//

ஹைய்யா ஜாலி :))))))))

நான் ஆதவன் said...

//ஹைய்யா ஜாலி :))))))))//

ஒரு சின்ன பொய் சொன்னதுக்கு இந்த பொண்ணுக்கு இன்னா சந்தோஷம்...

வெங்கட்ராமன் said...

கலக்கீட்டீங்க. . .
வித்தியாசமா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. . . .

முத்துலெட்சுமி-கயல்விழி said...

மிக அருமையா இருந்தது.. :)

அன்புடன் அருணா said...

A nice way of expressing the feelings.
anbudan aruna

சந்தனமுல்லை said...

நல்லா இருந்ததுங்க! முத்து சொல்லிதான் இங்க வந்தேன்! கடைசி வரை யாரு யாருன்னு மண்டைய பிச்சுக்க வெச்சுட்டீங்க!

கபீஷ் said...

ரொம்ப நல்லாருக்கு! யாருன்னு guess பண்ண முடியல. வித்தியாசமான முயற்சி! வாழ்த்துக்கள்

நான் ஆதவன் said...

//வெங்கட்ராமன் said...
கலக்கீட்டீங்க. . .
வித்தியாசமா நச்சுன்னு சொல்லி இருக்கீங்க. . . .//

ரொம்ப நன்றி வெங்கராமன்
-----------------------------------------------------------
//முத்துலெட்சுமி-கயல்விழி said...
மிக அருமையா இருந்தது.. :)//

மிகவும் நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி ..
(நீங்க தானே சந்தனமுல்லை மேடத்துக்கு ரெகமண்ட் செய்தது? அதுக்கு ஒரு தாங்ஸ் :-)
----------------------------------------------------------
//அன்புடன் அருணா said...
A nice way of expressing the feelings.
anbudan aruna//

நன்றி அருணா
----------------------------------------------------------
//சந்தனமுல்லை said...
நல்லா இருந்ததுங்க! முத்து சொல்லிதான் இங்க வந்தேன்! கடைசி வரை யாரு யாருன்னு மண்டைய பிச்சுக்க வெச்சுட்டீங்க!//

அப்படியா? இதுவே ஒரு மிகப்பெரிய பாராட்டுதான் :-)
-------------------------------------------------------
//கபீஷ் said...
ரொம்ப நல்லாருக்கு! யாருன்னு guess பண்ண முடியல. வித்தியாசமான முயற்சி! வாழ்த்துக்கள்//

நன்றி கபீஷ்..தொடர்ந்து வாங்க

chinnu said...

really fantastice.

initially i thought it was some rubbish and later hoping on u read the entire content and i was stormed.

good. keep it up

நான் ஆதவன் said...

//chinnu said...
really fantastice.

initially i thought it was some rubbish and later hoping on u read the entire content and i was stormed.

good. keep it up//

mmmm...thanks chinnu

Related Posts with Thumbnails