துபாயில் பேக்கரி கடை ஓனர் "வீரபாகு"

துபாயிலிருந்து சென்னைக்கு கூட ஈஸியா வந்துடுலாம். ஆனா வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து சார்ஜாவிற்க்கு டாக்ஸி கிடைச்சு பின்ன அந்த டிராபிக்ல மீட்டர் ஓடுறத பார்த்து பிரஷர் எகிறி ரூமுக்கு வருவதற்குள் தாவு தீர்ந்திடும்.

நேத்து நண்பர் ஒருத்தர பார்த்துட்டு "வாரணம் ஆயிரம்" படத்துக்கு போகலாம்ன்னு கலீரியா தியேட்டருக்கு போனா அந்த படத்தை தூக்கிட்டு "டிவண்டி-20" மலையாள படம் ஓடிட்டுருக்கு. சரி இனி டி.வி.டில தான் பார்க்கனும் போல நினைச்சுட்டு வந்துட்டோம்.

அங்கிருந்து திரும்ப ரூமிற்கு வரம்போதும் தான் பிரச்சனை ஆரம்பமாச்சு. டாக்ஸியே கிடைக்கல. கிடைச்சாலும் சார்ஜா வரமாட்டேங்கிறான். இது ஏதோ இந்தியா போலவும் அது ஏதோ பாகிஸ்தான் போலவும் நினைக்கிறானுங்க. எல்லாம் இந்த வெள்ளி கிழமையும், சாயங்கால நேரத்திலேயும் தான்.

போன ஜென்மத்தில பண்ணுன புண்ணியம் போல ஒரு டாக்ஸிகாரன் வந்தான். சார்ஜா சொன்னத்தும் ஏறிக்கோன்னு சொன்னான். பாகிஸ்தான் டிரைவர்.

ரொம்ப சந்தோஷமா பேசிகிட்டே வந்தான். டிராபிக் அதிகமா இருந்தனால பேசுறதும் கொஞ்சம் நேரம் கடத்தறது மாதிரி இருந்தது. எந்த ஊருன்னு கேட்டான். அவன்கிட்ட 'சென்னை' இல்லையென்னா 'மெட்ராஸ்ன்னு' சொன்னா புரியாது. மதராஸின்னு சொன்னேன். அவன்களுக்கு தென் இந்தியால "மதராஸி" "மலையாளி" இந்த இரண்டும் தான் தெரியும்.

அவன் பேச்சுல அவன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. என்ன விஷயமுன்னு கேட்டேன். அவன் இப்போ சார்ஜா ஏர்போட்டுக்கு தான் போறானாம். அவனோட மச்சான் ஒருத்தன் ஊர்லயிருந்து வரானாம்.

சரி அதுக்கெதுக்குடா இவ்வளவு சந்தோஷம்ன்னு கேட்டேன். அவன் ஒரு "ஹார்ட்வேர்" கடை ஒன்னு நடத்த போறானாம். அங்க வேலை செய்ய தான் அவனோட மச்சான் வரானாம். இன்னும் கொஞ்ச நாள்ல அவனோட பொண்டாட்டியவும் கூட்டிட்டு வரப்போறானாம். சீக்கிரமே இந்த டாக்ஸி டிரைவர் வேலைய விடப்போறானாம்.

ஏண்டா இவ்வளவு நல்ல டாக்ஸ் டிரைவர் வேலைய விடுறன்னு கேட்டேன். அவன் அதுக்கு சொன்ன காரணமும் நியாயமா தான் இருந்திச்சு. காலையில வண்டியில உட்கார்ந்தா எப்போ கீழ இறங்குவோம்ன்னு தெரியாது. ஏதாவது அவசரத்திற்கு கூட கீழ இறங்க முடியாதாம். அதாவது தண்ணிகுடிக்க, சாப்பிட ஏன் அவசரத்துக்கு ஒன்னுக்கு கூட போக முடியாதாம்.

அதான் சொந்தமா கடை தொறக்க போறேன்ல அப்புறம் ஏன் இந்த கருமம் புடிச்ச டாக்ஸி டிரைவர் வேலைக்கு போகனும்ன்னு கேட்டான். நானும் ஆமாம் ஆமாம்ன்னு தலையாட்டினேன்.

எனக்கொரு டவுட் தீடீர்ன்னு எப்படி இவனுக்கு கடை திறக்கற அளவுக்கு பணம் வந்துச்சுன்னு.. அவன்கிட்ட கேட்டேன் அவன் எனக்கொரு மச்சான் இருக்காரு இங்க. அவரோட கடைதான் அது.

ஆரம்பத்தில எனக்கு தரமாட்டேன்னு தான் சொன்னாரு. அப்பாலிக்கா பேசி அவரோட மனசை கரைச்சு சம்மதம் வாங்கிட்டேன்னு சொன்னான்.

என்னது இங்க உனக்கு மச்சானா...எப்படி அந்த உறவுமுறைன்னு கேட்டேன்.

இவனோட அக்காவ அந்த அரபி கல்யாணம் பண்ணிகிட்டானாம். எத்தனாவது கல்யாணம்ன்னு நான் கேக்கலாம்ன்னு நினைச்சேன். வேண்டாம் இப்ப கேட்டா காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகிடும்ன்னு விட்டுட்டேன்.
ஏன்னா இங்கிருக்க அரபிகளுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிகளெல்லாம் ரொம்ப சாதாரணம்...

நான் அவன்கிட்ட உன்னை மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் பேக்கிரி கடை வச்சுருக்கான். அவன் பேரு வீரபாகு.அவனும் உன்னை போலவே ரொம்ப நல்லவருருருருருன்னு சொன்னேன்.

டாக்ஸிகாரனும் சிரிச்சுகிட்டே "அச்சா அச்சா" அப்படின்னான்.

17 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

புதுகை.அப்துல்லா said...

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். (நம்பளும் 11 மாசம் துபாய்ல வேலை செஞ்சோம்ல)

புதுகை.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஸ்டு :)

அறிவன்#11802717200764379909 said...

:))))))))

கடைசி வீரபாகு பஞ்ச் அற்புதம் !

மங்களூர் சிவா said...

/
நான் அவன்கிட்ட உன்னை மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் பேக்கிரி கடை வச்சுருக்கான். அவன் பேரு வீரபாகு.
/

ROTFL
:)))))))))))

தமிழ் பிரியன் said...

செம கலக்கல்ப்பா...:))

நான் ஆதவன் said...

//புதுகை.அப்துல்லா said...
இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். (நம்பளும் 11 மாசம் துபாய்ல வேலை செஞ்சோம்ல)//

அடடே அப்படியா அண்ணே...அப்ப இங்க இருக்க டிராபிக் கொடுமையெல்லாம் தெரிஞ்சுருக்கும்...

//புதுகை.அப்துல்லா said...
ஹையா மீ த ஃபர்ஸ்டு :)//

நம்ம கடை பெரும்பாலும் காலியா தான் இருக்கும். அதனால ஈஸியா ஃபர்ஸ்டு அடிக்கலாம். :-)

நான் ஆதவன் said...

//அறிவன்#11802717200764379909 said...
:))))))))

கடைசி வீரபாகு பஞ்ச் அற்புதம் !//

நன்றி அறிவன்
---------------------------------------------------------------
//மங்களூர் சிவா said...
/
நான் அவன்கிட்ட உன்னை மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் பேக்கிரி கடை வச்சுருக்கான். அவன் பேரு வீரபாகு.
/

ROTFL
:)))))))))))//

வாங்க மங்களூர் சிவா. மிக்க நன்றி
-----------------------------------------------------------------
//தமிழ் பிரியன் said...
செம கலக்கல்ப்பா...:))//

நன்றி தமிழ் பிரியன்..

ஆ! இதழ்கள் said...

ஹே..ஹே... அந்த வீரபாகு சொன்னது ஊரு பூரா பரவுச்சுன்னா இந்த வீரபாகு சொன்னது உலகம் பூரா பரவீருச்சு... ஆமா..அவன், பிகரு பத்தி ஒண்ணும் பேசலியா?... பொ..துவா கேட்டேன்...

குசும்பன் said...

ஹா ஹா செமகலக்கல்! இந்த டாக்ஸி வேலை எப்படி வாங்கினதுன்னு கேட்டீங்களா?:)))))))))

நான் ஆதவன் said...

//ஆ! இதழ்கள் said...
ஹே..ஹே... அந்த வீரபாகு சொன்னது ஊரு பூரா பரவுச்சுன்னா இந்த வீரபாகு சொன்னது உலகம் பூரா பரவீருச்சு... ஆமா..அவன், பிகரு பத்தி ஒண்ணும் பேசலியா?... பொ..துவா கேட்டேன்...//

நானும் கேக்கனும்ன்னு தான் நினைச்சேன். ஆனா ரொம்ப நேரம் கழிச்சு கிடைச்ச டாக்ஸி, ஏதாவது ஏடாகூடமா கேட்டு இறக்கிவிட்டுட்டு போய்ட்டானா என்ன பண்றதுன்னு தான் விட்டுட்டேன் :-)

நான் ஆதவன் said...

//குசும்பன் said...
ஹா ஹா செமகலக்கல்! இந்த டாக்ஸி வேலை எப்படி வாங்கினதுன்னு கேட்டீங்களா?:)))))))))//

இது வேறயா...ஆனா அவனுக்கு ரெண்டு மூணு அக்கா இருக்காங்கன்னு நினைக்கிறேன் :-)

ஸ்ரீமதி said...

:-)))))))))))))))))))))))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
:-)))))))))))))))))))))))//

இவ்வளவு பெரிய சிரிப்புக்கு தாங்ஸ் தங்காச்சி...

கடைசி பக்கம் said...

:-)))))

mayvee said...

orey comedy than...

anyways. good post.

Silly Village Girl said...

nalla comedy

நான் ஆதவன் said...

//கடைசி பக்கம் said...
:-)))))//

நன்றி கடைசி பக்கம்
-----------------------------------------------
//mayvee said...
orey comedy than...

anyways. good post.//

நன்றி மாயாவி
-----------------------------------------------
//Silly Village Girl said...
nalla comedy//

thanks Silly Village Girl

Related Posts with Thumbnails