அச்சுவிண்ட அம்(மே)மா..


தலைப்பை பார்த்துட்டு "அஞ்சரகுல்ல வண்டி" மாதிரி ஏதாவது ஏடாகூடமா நினைச்சு உள்ளே வந்தைங்கன்னா நான் பொறுப்பல்ல...

எப்ப வளைகுடா வந்தேனோ அப்பவே மலையாள படங்களைப் பார்பதும் அதிகமானது.அதற்கு முன் சென்னையில "இராகவேந்திரா" "வெங்கடேஷ்வரா" போன்ற பக்தி தியேட்டர்களில் ஷகீலா படம் பார்த்ததோட சரி.

இங்க வந்து பார்த்த முதல் மலையாள படம் "அச்சுவிண்ட அம்மா"(2005).அந்த படத்தைப் பார்த்த போது மலையாள படங்கள் மேல ஒரு மரியாதையே வந்தது. ஊர்வசி, மீரா ஜாஸ்மின், நரைன் போன்ற பெரிய நட்சரத்திங்கள் இல்லாமல் ஒரு படம்.

அம்மாவாக ஊர்வசி, மகளாக மீரா ஜாஸ்மின்.கணவன் இல்லாமல் தனியாக தன் மகளுடன், தனது சாமர்த்திய பேச்சால் பலரை பாலிசி எடுக்க வைக்கும் எல்.ஐ.சி ஏஜெண்டாக ஊர்வசி. டிப்ளோ சிவில் இன் ஜினியராக அச்சு (அஸ்வதி) கேரக்டராக மீரா ஜாஸ்மின் நமக்கு அறிமுகமாகிறார். இருவரும் தாய் மகளை போல் அல்லாமல் தோழிகள் போல் பழகுகின்றனர். இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் ஒருவொருக்கொருவர் மறைப்பதில்லை. அவர்களுக்கிடையே ஒரே ஒரு விஷயம் மட்டும் திரை மறைவில் உள்ளது, அது அச்சுவின் அப்பா...

தன் அப்பா அம்மாவை ஏமாற்றி சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு தன் அப்பாவைப் பற்றி எதுவும் கேட்காமல் இருக்கிறார் அச்சு. அதற்கேற்றாற் போல் அச்சுவிடம் ஊர்வசிக்கு கொண்டுள்ள அளவு கடந்த பாசம் அவளுக்கு அப்பாவைப் பற்றி நினைக்கக் கூட செய்யவில்லை.அச்சுவிற்கு ஏதேச்சையாக நண்பனாக அறிமுகமாகிறார் வக்கீல் நரைன். அதே நேரத்தில் அச்சுவிற்கும் ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இருவரின் ஆரம்ப நட்பு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஊர்வசி இருவரின் காதலுக்கு ஆரம்பத்தில் ஓகே சொல்லிவிட்டு பின்பு அவர் தன் தாய் தந்தை மற்றும் குடும்பத்தையே ஒரு விபத்தில்(தற்கொலை) இழந்தவர் என்று தெரிந்து கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.தன் மகளை ஒரு கூட்டு குடும்பமத்தில் மட்டுமே கல்யாணம் செய்து கொடுப்பதாக கூறுகிறார்.

இதனால் தாய் மகள் இருவரிடையே விரிசல் ஏற்படுகிறது. இதுவரையில் தன் அப்பாவை குறித்து ஏதும் கேட்காத அச்சு அப்பாவைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பதில் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன் தோழியுடன் தங்குவதற்கு செல்லும் அவள் அதற்குரிய சூழ்நிலைகள் அங்கு இல்லாததால் மனவிரக்தியில் செல்லும் போது விபத்தில் சிக்குகிறாள். மருத்துவமனையில் அவளை காண வரும் ஊர்வசியை உடன் பேச மறுக்கிறாள்.
ஊர்வசி மனம் வெறுத்து அவள் பிறப்பின் ரகசியத்தை நரைனிடம் கூறுகிறாள். ஊர்வசி பதினைந்து வயதில் சிவகாசியில் வேலை செய்யும் போது அங்குள்ள பெண்களை வட மாநிலத்திற்கு கடத்தும் கும்வலில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பிக்கும் போது அந்த கும்பலில் சிக்கியிருக்கும் ஒரு இரண்டு வயது சிறுமி அவள் பாவாடையை பிடுத்து "தானும் வருவது போல்" சிரிக்கும் போது, ஊர்வசி இக்குழந்தை இவ்விடத்தில் இருந்தால் இதன் வாழ்க்கையே சீரழியும் என்று தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். அப்பெண்ணுக்கு அச்சு என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்கிறாள்.


வளரும் போது தான் அவளுக்கு சொந்தம் ஏதும் இல்லை, அவள் புகுந்த வீட்டிலாவது நிறைய சொந்தங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் இக்கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறாள். இதை அவளிடம் சொல்லவேண்டாம் என்றும் இனி அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் செல்கிறார்.
நரைன் அச்சுவிடம் அவள் பிறப்பின் இரகசியத்தை கூற நேருடிகிறது. தன் தவறை உணர்ந்து அவள் வீடு வரும் போது அவள் அன்னை அவளை போன்றே மற்றுமொரு நான்கு வயது அச்சுவிற்கு தாயாகியிருக்கிறாள் என்று தெரியவருகிறது. மனது கனக்கும் க்ளைமாக்ஸோடு படம் நிறைவடைகிறது.


ஊர்வசிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு கேரக்டர்.ஆரம்பித்தில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகள் நமக்கு இயல்பாய் சிரிப்பை வரவழைக்கின்றன. காமெடி ஊர்வசிக்கு வெகு இயல்பாய் வருகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையாக இருப்பததால் பிற்பாதியின் சோகத்தைத் தாங்க எந்த ஒரு ஆயத்தமும் செய்யவிடாமல் கதை நகர்வது ஒரு ப்ளஸ்பாயிண்ட். குறிப்பாக ஊர்வசி ஆங்கிலம் கற்பதும், வீட்டை விட்டு ஓடி வரும் அச்சுவின் தோழியை நைசாக பேசி அவள் வீட்டிற்கு அனுப்புவது போன்ற நகைச்சுவை காட்சிகளைச் சொல்லலாம்.


மீரா ஜாஸ்மின் "அச்சு" என்ற சுட்டிப்பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருந்தியுள்ளார். மிகவும் அழ்காக இருக்கிறார் இந்த படத்தில்.


நரைன் நம்ம அஞ்சாதே ஹீரோ. இவர் வேலையை இவர் சரியாக செய்திருக்கிறார். 'அஞ்சாதே' படத்தைப் பார்க்கும் போது 'இவர்' தான் 'அவர்' என்று கூறினால் மலையாளிகள் நம்ம மறுத்தனர். இப்போது அப்படியொரு மாற்றம் அவரிடம்.


இளையராஜா பாடல்கள் இனிமையாக இருக்கின்றன். அதிலும் "எந்து பறஞ்சாலும்" என்ற பாடலை இன்றும் கேரள மாநிலத்தில் ஒலித்தால் கேட்க ஒரு கூட்டம் காத்திருக்கும். அதை படமாக்கின விதமும் பாடலை எளிமையாக மக்களிடம் சென்றடைய ஒரு காரணம். நீங்களும் கேளுங்க..25 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கார்க்கி said...

thanks for sharing sagaa. intersting.will try to wtach(sorry for english comment)

ஸ்ரீமதி said...

அழகான விமர்சனம் :))

நான் கார்த்தி said...

VERY NICE REVIEW

Anonymous said...

மிக அருமையான திரைப்படம். நல்ல முறையில் விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.. மிக்க நன்றி..

அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரை விட்டுவிட்டீர்களே.. இயல்பான காமெடி..

அதிரை ஜமால் said...

\\எப்ப வளைகுடா வந்தேனோ அப்பவே மலையாள படங்களைப் பார்பதும் அதிகமானது.அதற்கு முன் சென்னையில "இராகவேந்திரா" "வெங்கடேஷ்வரா" போன்ற பக்தி தியேட்டர்களில் ஷகீலா படம் பார்த்ததோட சரி.\\

உண்மையா இருக்கீக

Anonymous said...

நான் மிகவும் விரும்பி பார்த்த படம். ஆனால் என் favourite மைனா குருவிக்கு & சுவாசத்தின் தாளம் கண்கள் அறியுமோ இரண்டும்.

// இளையராஜா பாடல்கள் இனிமையாக இருக்கின்றன். அதிலும் "எந்து பறஞ்சாலும்" என்ற பாடலை இன்றும் கேரள மாநிலத்தில் ஒலித்தால் கேட்க ஒரு கூட்டம் காத்திருக்கும்.//

எந்து பறஞ்சாலும் - பச்சமல பூவு + அடி வான்மதி பாடல்களின் மிக சிறப்பான கலவை. பின்னணி இசையிலும் இசைஞானி பட்டய கிளப்பி iruppar.

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
thanks for sharing sagaa. intersting.will try to wtach(sorry for english comment)//

கமெண்ட் எதுல பண்ணினா என்ன சகா..இதுக்கெல்லாமா ஸாரி கேப்பாங்க..

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
அழகான விமர்சனம் :))//

நன்றி .ஆனா உன் கவிதையை விட எதுவும் அழகல்ல..

நான் ஆதவன் said...

//நான் கார்த்தி said...
VERY NICE REVIEW//

நன்றி நான் கார்த்தி.(அட நீங்களும் "நான்" தானா)

//அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கேரக்டரை விட்டுவிட்டீர்களே.. இயல்பான காமெடி..//

ஆம் அனானி. அவர் தொல்லைகள் எல்லாம் நல்ல காமெடி.

தமிழ்ப்பறவை said...

அருமையான விமர்சனம். நானும் இப்படத்தைப் பார்க்க வேண்டுமென ஆவலுடன் இருந்தேன். ஆவல் கூடிவிட்டது.
எனக்குப் பிடித்த பாடல்கள்
மைனாக்குருவிக்கு மாலையிடு மற்றும் சுவாசத்தின் தாளம் தென்னல்
ஆகியவை.
இவ்வளவு சொல்லிட்டு டைரக்டர் சத்யன் அந்திக்காடு பேரச் சொல்லாம விட்டுட்டீங்களே...

நான் ஆதவன் said...

//அதிரை ஜமால் said...

உண்மையா இருக்கீக//

ஆமா ஜமால்..அது ஒரு பருவகோளாறு :-)

நான் ஆதவன் said...

//எந்து பறஞ்சாலும் - பச்சமல பூவு + அடி வான்மதி பாடல்களின் மிக சிறப்பான கலவை. பின்னணி இசையிலும் இசைஞானி பட்டய கிளப்பி iruppar.//

ஆம் அனானி. அந்த பாடலை கேட்கும் போது "பச்சமல பூவு" பாடலை நானும் உணர்ந்தேன். ஆனால் பாடாலாக்கிய விதம் அதை மறக்கச்செய்தது.

நான் ஆதவன் said...

//தமிழ்ப்பறவை said...
அருமையான விமர்சனம். நானும் இப்படத்தைப் பார்க்க வேண்டுமென ஆவலுடன் இருந்தேன். ஆவல் கூடிவிட்டது.
எனக்குப் பிடித்த பாடல்கள்
மைனாக்குருவிக்கு மாலையிடு மற்றும் சுவாசத்தின் தாளம் தென்னல்
ஆகியவை.
இவ்வளவு சொல்லிட்டு டைரக்டர் சத்யன் அந்திக்காடு பேரச் சொல்லாம விட்டுட்டீங்களே...//

நன்றி தமிழ்பறவை. தவறு தான் அவரைப் பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

தமிழ்ப்பறவை said...

'எந்து பறஞ்சாலும்' பாட்டை இப்போதான் முழுசாக் கேட்கிறேன். இனிய பாடல் அறிமுகத்திற்கு நன்றி.

பாடலுக்கான ரிச்னெஸ்ஸைக் கோடிகளில் தேடும் இயக்குனர்களே, இப்பாடலில் தெரிவது போல் அன்பின்,அழகின்,எளிமையின் ரிச்னெஸ்ஸைக் காட்ட முடியுமா...?

துளசி கோபால் said...

கொறே திவசங்களுக்கு மும்பு ஞானும் கண்டு.

ஊர்வசி நல்லொரு நடியா.

வளரே இஷ்டப்பெட்டு.

நான் கார்த்தி said...

yes me too my friend

நான் ஆதவன் said...

//தமிழ்ப்பறவை said...
'எந்து பறஞ்சாலும்' பாட்டை இப்போதான் முழுசாக் கேட்கிறேன். இனிய பாடல் அறிமுகத்திற்கு நன்றி.

பாடலுக்கான ரிச்னெஸ்ஸைக் கோடிகளில் தேடும் இயக்குனர்களே, இப்பாடலில் தெரிவது போல் அன்பின்,அழகின்,எளிமையின் ரிச்னெஸ்ஸைக் காட்ட முடியுமா...?//

நல்ல கேள்வி தமிழ் பறவை..ம்ம்ம் நமது தமிழ் சினிமாவில் அதெல்லாம் 80களிலேயே தொலைந்துவிட்டது

நான் ஆதவன் said...

//துளசி கோபால் said...
கொறே திவசங்களுக்கு மும்பு ஞானும் கண்டு.

ஊர்வசி நல்லொரு நடியா.

வளரே இஷ்டப்பெட்டு.//

உவ்வே டீச்சர்...செரிக்க ஞானும் இஷ்டப்பட்டு

நான் ஆதவன் said...

//நான் கார்த்தி said...
yes me too my friend//

keep visit my friend

நாடோடி இலக்கியன் said...

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். கொரியாவில் இருந்தபோது மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மோகன்லால் படங்களை பார்த்திருக்கிறேன்.அதில் ஒரு படத்தை பற்றிய பதிவுகூட சில மாதங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன்.

நான் ஆதவன் said...

//நாடோடி இலக்கியன் said...
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்கள். கொரியாவில் இருந்தபோது மலையாள படங்கள் பார்க்க ஆரம்பித்தேன்.இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட மோகன்லால் படங்களை பார்த்திருக்கிறேன்.அதில் ஒரு படத்தை பற்றிய பதிவுகூட சில மாதங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன்.//

உங்களின் மோகன்லாலின் படம்(தசரதம்) பற்றிய பதிவை இப்போது படித்தேன். உண்மையில் அவரது நடிப்பு மிக யதார்தமாக இருக்கும். நான் அவரின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரின் தற்போதைய படங்கள் அவ்வாறு இல்லாதது வருத்தமே. கடைசியாக அவர் நடித்து குறிப்பிடும்படியாக இருந்தது "தன்மாத்ரா" மட்டுமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி "நாடோடி இலக்கியன்"

விலெகா said...

நல்லா இருக்குங்க,.

துளசி கோபால் said...

உவ்வே தெற்று

உவ்வூ சரி

:-)))

நான் ஆதவன் said...

//விலெகா said...
நல்லா இருக்குங்க,.//

நன்றி விலேகா..

//துளசி கோபால் said...
உவ்வே தெற்று

உவ்வூ சரி

:-)))//

தெற்று பற்றி போயி டீச்சர்.... ஷெமிக்கனும்

(என்னது இதுலையும் தப்பு இருக்கா...அவ்வ்வ்வ்வ்வ்)

Anonymous said...

Enthu paranjalum-chitra voice la inimayana paadal...Kadhaiyai sonnadharku nanri..DVD alladhu Asianet lo kandippa paarka vendum...
Krish

Related Posts with Thumbnails