இதுக்கெல்லாமா வேலைய விட்டு தூக்குவாங்க.....

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ஆகிபோச்சு என் நிலைமை. எங்க கம்பெனியோட டிசைன் இன்ஜினியர் ஊருக்கு போனதினால் என்கிட்ட ஒரு ப்ராஜெக்ட்ட கொடுத்து டிசைன் பண்ண சொன்னாங்க..... சரி நானும் இதெல்லாம் எப்ப கத்துக்கிறதுன்னு சரின்னு சொன்னேன்.

டிசைன் செய்து அத fabricationம் செய்து erectionம் செய்துட்டாங்க...அப்பறமா தான் ஒரு சின்ன தப்பு நடந்தது தெரிய வந்தது. அந்த சின்ன தப்புக்கு போய் வேலைய விட்டு எடுக்க போறேன்னு சொல்றாங்க. இது என்னங்க அநியாயம். நீங்களே படத்த பாருங்க.........


foundationஐ டிசைன் செய்ய மறந்துட்டேனுங்க... உங்களுக்கு தெரிஞ்ச சிவில் டிசைன் இன்ஜினியர் யாராவது இருந்தா சீக்கரம் எனக்கு தெரிவிங்க....

20 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

நான் ஆதவன் said...

தமிழ்மணம் பதிவுகளை திரட்டாததால் இந்த பின்னூட்ட மொள்ளமாறித்தனம்

GOLD_SANTHU said...

nana erutha kolaye seiven

நான் ஆதவன் said...

//GOLD_SANTHU said...
nana erutha kolaye seiven//

ஏன்??..ஏன் இந்த கொலவெறி?

புதுகை.அப்துல்லா said...

அவ்வ்வ்வ்வ்வ்

ஸ்ரீமதி said...

இன்னுமா உங்கள வேலைய விட்டு எடுக்கல?? :))

rapp said...

:):):)

rapp said...

ஆனா இது ரொம்பப் பழைய ஜோக்:):):)

நான் ஆதவன் said...

//rapp said...
ஆனா இது ரொம்பப் பழைய ஜோக்:):):)//

அவ்வ்வ்வ்...இப்படியெல்லாம் கால வார கூடாது.

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
இன்னுமா உங்கள வேலைய விட்டு எடுக்கல?? :))///

என்னைய வேலையை விட்டு தூக்கறதுக்கு பயபுள்ளைக்கு என்னா சந்தோஷம்...
:-(

வடுவூர் குமார் said...

ஏங்க இதில் என்ன தப்பு??
உங்களுக்கு நாட்டு/உலக விபரமே தெரியலை. :-))
இப்பெல்லாம் கட்டிடத்தை top -- > down முறையில் தான் கட்டுகிறார்கள்.பவுண்டேசன் போடுவதற்குள் ஏன் இந்த அவசரம்.
துபாயில் சுற்றும் கட்டிடத்தை மேலிருந்து கீழாகத்தான் கட்டுகிறார்களாம் - இன்றைய செய்தித்தாளில் வந்த செய்தி.
சே! மொக்கயாக்கூட போட முடியலை என்று முனகுவது கேட்கிறது. :-)))

நான் ஆதவன் said...

//உங்களுக்கு நாட்டு/உலக விபரமே தெரியலை. :-))
இப்பெல்லாம் கட்டிடத்தை top -- > down முறையில் தான் கட்டுகிறார்கள்//

நீங்க சிவில் இன்ஜினியரா... அண்ணே உங்களத்தானே தேடிகிட்டு இருக்கோம்.

//பவுண்டேசன் போடுவதற்குள் ஏன் இந்த அவசரம்.//

இதத்தான் நானும் கேட்டேன். அதுக்கு தான் வேலையிலருந்து தூக்க பாக்குறாங்க...

//சே! மொக்கயாக்கூட போட முடியலை என்று முனகுவது கேட்கிறது. :-)))//

எப்படிங்க இதெல்லாம்?...மனசுல நினைச்சுட்டே படிச்சுகிட்டு வந்தா கடைசில இதையும் போட்டுட்டீங்க...

உருப்புடாதது_அணிமா said...

ஐயோ பாவம் ...
எந்த கம்பெனி அது சொல்லுங்க ஒரு தர்ணா ரெடி பண்ணிடலாம் ..
இல்லனா தந்தி அனுப்பலாமா உங்க பாசுக்கு

இராகவன், நைஜிரியா said...

ஏங்க உங்களை டிசைன் மட்டும் தான் பண்ணச்சொன்னாங்க. நீங்களும் கரெக்டா டிசைன் பண்ணி கொடுத்திட்டிங்க. erection பண்ணிய இன்ஞினியர் தான் அது எல்லாம் பார்க்கணும், அதை விட்டு உங்களை வேலையை விட்டு எடுத்தால் ரொம்ப தப்பு. அதெல்லாம் சரிங்க... யாருங்க உங்களுக்கு பாஸ். அவருதான் இப்படியெல்லாம் டிசைன் செய்ய கத்து கொடுத்தாருங்களா... இராகவன், நைஜிரியா

நான் ஆதவன் said...

//உருப்புடாதது_அணிமா said...
ஐயோ பாவம் ...
எந்த கம்பெனி அது சொல்லுங்க ஒரு தர்ணா ரெடி பண்ணிடலாம் ..
இல்லனா தந்தி அனுப்பலாமா உங்க பாசுக்கு//

வேண்டாம் சாமி, இந்த தந்தி அடிக்கிறது, உண்ணாவிரதம் இருக்கிறது இதெல்லாம் சும்மா கண் துடைப்புன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்....

நான் ஆதவன் said...

//யாருங்க உங்களுக்கு பாஸ். அவருதான் இப்படியெல்லாம் டிசைன் செய்ய கத்து கொடுத்தாருங்களா... இராகவன், நைஜிரியா//

இல்லங்க அவரு சரியா தான் சொல்லி கொடுத்தாரு, எனக்கு தான் கொஞ்சம் ஞாபக மறதி அதிகம்....

Anonymous said...

ஒன்னும் கவல படதிங்க... அப்படியெ பக்கதுல 4 செங்கல்ல வச்சி சிமென்ட் பொட்டு பூசிடுங்க...

யப்படி நம்ம ஐடியா...?? :)

நான் ஆதவன் said...

//ஒன்னும் கவல படதிங்க... அப்படியெ பக்கதுல 4 செங்கல்ல வச்சி சிமென்ட் பொட்டு பூசிடுங்க...

யப்படி நம்ம ஐடியா...?? :)//

அடேயப்பா...இது எனக்கு தோணவேயில்லையே!

கவிதா said...

இன்னுமா உங்களை வேலையில் வைத்து இருக்காங்க..???

நான் ஆதவன் said...

//கவிதா said...
இன்னுமா உங்களை வேலையில் வைத்து இருக்காங்க..???//

நீங்களுமா கவிதா???....போன சென்மத்துல செஞ்ச புண்ணியம் இன்னும் வேலைய விட்டு எடுக்கல.....

மங்களூர் சிவா said...

அருமையான டிசைன் இதுல எந்த பிரச்சனையும் இருக்கற மாதிரி தெரியலையே
:))))

Related Posts with Thumbnails