சட்டத்தின் கையில் சாதி!

குண்டு வைத்து பல உயிர்களை கொன்றவனுக்கும் தூக்கிலிடும் கொடிய தண்டனையை கொடுக்க வேண்டாம் என மன்றாடும் தேசமடா இது. கையில் கட்டையுடனும், கத்தியுடனும் உன் கேடுகட்ட வீரத்தை காட்ட உனக்கு படிப்பித்தவன் எவன்.

மேலதிகாரியின் அனுமதியில்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்காத, கடமை தவறாத(?) காவல் துறையின் முன் உன் அட்டூழியம் நிகழ்த்தியிருப்பது ஒன்றும் அதிசயமல்ல... இதற்கு முன் அவர்கள் முன் பல அட்டூழியங்களை உன் போல் மிருகத்திற்கு பிறந்த பல அரசியல்வாதிகளை செய்திருக்கிறார்கள். அதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தன்னுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் தனது சீனியரை அடித்து கீழே விழுந்தவனை மீண்டும் மீண்டும் அடித்து உன் தீராத மிருக வெறியை பார்த்த போது.....அய்யோ ... இதயம் நின்று விட்டதடா...

உனக்கு உண்ண உணவு, தங்க இடம், படிக்க தேவையான பணம் என உன் பெற்றோரும் அரசாங்கமும் எல்லா வசதியும் செய்து கொடுத்த பின்னரும் உனக்கு என்ன கேடு.....

நீ படிக்கும் சட்டத்தை இயற்றிய மேதையின் பெயரில் இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்து எண்ணும் போது .. அடப்பாவி அந்த சட்ட மேதை ஆத்மா சாந்தி அடையுமா...

உன்னைச் சொல்லி குற்றமில்லை.... உனக்கு பாடசாலையில் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" எனச் சொல்லி கொடுக்க விட்டு உன் முலமாகவே ஒரு ஜாதி அரசியலை நடத்தும் அரசியல் வாதியை சொல்ல வேண்டும்.

"முதல்வன்" படத்தில் வருவது போல் உள்ளதடா இந்த நிகழ்ச்சியும்.. போலிஸுக்கும் தெரிந்திருக்கும் நீ அங்கு பிரச்சனை செய்வாய் என்று. போலிஸின் கைகளை கட்டிப் போட்டிருக்கலாம் அரசியல் .

உன்னை வழக்கறிஞர் என்று எப்படியடா கூப்பிடுவது?. மனிதாபிமானம் இல்லாத உன்னை மனிதன் என்றே கூப்பிட தகுதியற்றவன்.

எதிர்கட்சிகளையும், மக்களின் வாயை அடைக்க சில காவல் துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது அரசு. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் உங்களை அடக்க வந்த கடந்த காலங்களில் அவர்கள் மீதே பழியைப் போட்டு பல நாள் வேலை நிறுத்தம் செய்து, பல காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்.

நீ அடித்தவனும் யோக்கினாக இல்லாமலிருக்கலாம். அதனால் நாளை அடிவாங்கியவனின் உன்னை தாக்கலாம். அப்போது உனக்கு இதை விட மோசமான நிலைமை உனக்கு வரும் என்று எண்ணினாயா?6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

Mãstän said...

உன்னை வழக்கறிஞர் என்று எப்படியடா கூப்பிடுவது?. மனிதாபிமானம் இல்லாத உன்னை மனிதன் என்றே கூப்பிட தகுதியற்றவன்.

அருமையான பதிவு.

ஜாதி/மதம் முன்பு மனிதாபிமானம் இறந்துவிடும்.

நான் ஆதவன் said...

//ஜாதி/மதம் முன்பு மனிதாபிமானம் இறந்துவிடும்.//

வருந்தக்கூடிய உண்மை மஸ்தான்...

நந்தா said...

நடந்த சம்பவம் உங்களுக்குள் பெரும் அதிர்வுகளை கிளப்பி இருக்கிறது. மனிதமுள்ள எவருக்கும் அப்படித்தான். உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.

ஒருவரை மிகக் கேவலமாய் இகழ்ந்து பேச அவரது தாயை பழிப்பது என்பது பொதுப்புத்தியின் வெளிப்பாடு. நீங்கள் அதிலிருந்து வெளிவர வேண்டுகிறேன்.

இவனுங்கதான் மிருகத்தினர்.

har said...

அவன் தாயை பழிப்பது அவன் செய்த செயலிலும் கொடிது, தயவு செய்து அதை இனிமேல் செய்யாதீர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து ஹரன்

நான் ஆதவன் said...

தவறு தான் நந்தா, ஹரன்...
வீடியோவை பார்த்தவுடன் எழுதினேன். இனி இது போன்ற இழிவான சொல் பயன்படுத்த மாட்டேன்.

Maayoan said...

நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...

தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....


யாரவது எதாவது சாதித்தால்.. தமிழுக்கே.. தமிழருக்கே பெருமை என்று சொல்லி கொள்கின்றோமே...

இந்த கேவலத்தை என்ன என்று சொல்வது...

மேம்போக்காக பார்த்தால், எதோ மாணவர்கள் வெறிபிடித்து சண்டை போட்டதாக தோன்றுகின்றது..

இதற்கு யார் காரணம்...?

ஜாதி யா?

தமிழ் நாட்டில் யாரும் ஜாதி பெயரை சொந்த பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில்லை என்று பெருமையாக மற்ற மாநில நண்பர்களிடம் சொல்வதுண்டு..

பெயரில் இல்லை ... ஆனால்..

ஜாதி தமிழனின் குருதியில் கலந்து விட்டது..

வோட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளால்..


வேறு எந்த மாநிலத்தையும் விட நம்மிடம் தான் ஜாதி வெறி அதிகம்...


என்ன செய்வது...


௧.ஜாதி, மதம் வைத்து அரசியல் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..

௨.ஆள் பலம் காட்ட ஊர்வலம், பேரணி நடத்துவது தடுக்க பட வேண்டும்..

௩. ஜாதி கர்வம் பொதுவில் தெரியும் வண்ணம் செய்யப்படும் எதுவும் தவறு என்று உறுதியாக சொல்லப்படவேண்டும் ...

௪ . வெகு ஜன ஊடகங்களில் ஜாதி சார்பு முற்றிலும் தவிர்க்க பட வேண்டும்...

௫ . அவர் பிறந்த நாள், இவர் இறந்த நாள் என்று கூட்டம் சேர்த்து விஷ விதை விதைப்பது, "ஆண்ட சமுகமே அடங்கி கிடப்பது ஏன் " ... "அடங்க மறு " என்று எவனும் உளர இடம் கொடுக்க கூடாது..

௬ . கலவரம் ஏற்படுத்த பயன்படும் என்ற காரணதிர்க்க்காகவே முச்சந்திக்கு முச்சந்தி வைக்கப்படும் எல்லா சிலை களையும் பிடுங்கி ( காந்தி சிலையையும் கூட ) ஒரே இடத்தில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் ...

--இதெல்ல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும்...


ஆனால்...கண்டிப்பாக இவை எதுவும் நடக்க போவதில்லை ....


மூன்று வருடங்களுக்கு முன், ஒரு சமூகத்தின் தலைவரின் ஜெயந்தி விழாவை ஒட்டி, என் கல்லூரி மாணவர்கள் திடீர் என்று இரண்டு பட்டதை என் கண்களால் பார்த்தேன்..

பொறியியியல் படிக்கும் வசதி படைத்த நகரத்து மாணவர்களே உருட்டு கட்டைகளுடன் திரிந்தனர்..

அன்று நடந்தது பெரிதாக வில்லை / பெரிதாக வெளியில் தெரியவில்லை...

இன்று ஊடகங்களின் கண் முன் நடந்து விட்டது..

நேற்று நடந்த சம்பவம் வெறுமனே சம்பவம் அல்ல...

தமிழ் நாட்டின் ஒரு கோரமுகம் ....


Maayoan @gmail.com

Related Posts with Thumbnails