இதுக்கெல்லாம் அடிப்பாங்களா என்ன?

மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயியைப் போல நாங்கள் விடுமுறைக்காகக் காத்திருப்போம். அநேகமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பலபேருக்கு இதுதான் நிலைமை. ஏனென்றால் விடுமுறை இந்தியாவில் இருப்பது போல அடிக்கடி வராது. ஆனால் வந்தால் இரண்டு மூன்று தினங்கள் சேர்ந்தமாதிரி வரும். அப்படி வந்தது தான் ஒரு ரம்ஜான்.

லீவு விட்டா நேரா அபுதாபு தான். அங்க நிறைய நண்பர்கள் இருக்காங்க. நமக்கு கம்பெனி மெஸ்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கும். எப்பவாவது இந்த மாதிரி வெளிய போகும் போது மூக்கு பிடிக்க (அப்படின்னா என்னன்னு கேட்கப்படாது) நம்மூர் சாப்பாடை ஒரு கட்டு கட்டுவேன்.

அன்னைக்கு அபுதாபி நண்பர்கள் எல்லாரும் சாப்பிட ஒரு நம்மூர் அசைவ ஹோட்டலுக்கு சென்றோம். எல்லாம் ஆர்டர் செய்த போது நான் "காடை ரோஸ்ட்" சொன்னேன். "வேண்டாம் மச்சி அது சூடுடா" அப்படின்னு சொன்னான் ஒரு ப்ரெண்டு. நான் "பரவாயில்ல நான் ஆற வச்சு சாப்பிட்டுக்கிறேன்"ன்னு சொன்னேன். இதுல என்னங்க தப்பு அதுக்கு போய் எல்லாரும் சேர்ந்து அடிச்சுட்டான்ங்க..... வர வர என் பொழப்பு வடிவேலு கணக்கா ஆகிடுச்சு.

--------------------------------------------------------------------------

அப்புறமா அல் ஐன்ல இருக்கிற "fun city"க்கு போனோம். ஜாலியா சுத்திட்டிருக்கும் போது ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தோம். அப்படியே அவுங்களோடவே போய் ஒவ்வொரு இடத்துக்கும், ராட்டினம் என எல்லாத்துக்கும் போனோம். அவுங்களோட போக காரணம் இல்லாமயில்லை. அந்த குடும்பத்தில இரண்டு பொண்ணுங்க இருந்துச்சு. இரண்டும்(இரண்டு பொண்ணுங்களும்) நல்லா வெள்ள வெள்ளேன்னு சூப்பரா இருந்துச்சு. அவுங்க பேச்ச வச்சு ஐயர் குடும்பம்ன்னு தெரிஞ்சுது.

நான் கொஞ்சம் ஓவரா பில்டப் செய்து பொண்ணுங்கள கவர செய்த முயற்சி எதுவும் நண்பர்களுக்கு பிடிக்கல. ஏன்னா அவன்கள கலாய்த்து தான் அந்த பொண்ண என் பக்கம் திருப்ப முயற்சி செய்தேன். கடைசியா போகும் போது வாயில்ல ஒரு இடத்தில உட்கார்ந்தோம். நான் எழுந்திருக்கும் போது தலைக்கு மேல ஒரு இரும்பு கம்பி இருந்திருக்கு அதுல இடிச்சுக்கிட்டேன். "டங்ங்ங்ங்ங்ங்"ன்னு டி.டி.ஸ் எபக்ட்ல ஒரு சவுண்ட்...எனக்கு தல சுத்த ஆரம்பிச்சுது. கேலக்ஸி கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சுது. கண் இரண்டும் ஒன்னோட ஒன்னு பாக்க முயற்சி பண்ணிச்சு. நண்பர்கள் எல்லாம் பதறி என்ன ஆச்சு கத்த ஆரம்பிச்சாங்க. அந்த பொண்ணுங்களும் பார்க்க எனக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல..திடீரென்னு "மச்சி அந்த கம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு" கொஞ்சம் கெத்தா சொல்ல..அந்த பொண்ணுங்க "க்ளிக்"ன்னு சிரிக்க...நண்பர்கள் அஞ்சு பேரும் நங் நங்ன்ன்னு அதே இடத்தில கொட்டி "எங்க கைக்கும் ஒன்னும் ஆகலையே" சிரிச்சுட்டே சொன்னான்க. இதுக்கெல்லாமா கொட்டுவாங்க. அதுக்கு அந்த பொண்ணுங்க சிரிச்சுது பாருங்க....மானேமே போச்சு.

24 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

துளசி கோபால் said...

அங்கே மண் இல்லையா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்லி இருக்கலாமே:-)

ஒருவேளை 'மீசை'யே இல்லையோ......

பாவம்ப்பா. அந்தப் பொண்ணுங்க.

உருப்புடாதது_அணிமா said...

wat blood???

Same blood!!!!!!!!!

நான் ஆதவன் said...

//அங்கே மண் இல்லையா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்லி இருக்கலாமே:-)//

நான் கீழ விழவேயில்லைன்னு சொன்னது தான் பிரச்சனை டீச்சர். :-)

//பாவம்ப்பா. அந்தப் பொண்ணுங்க.//

என்ன பார்த்தா பாவமா இல்லையா..கல் நெஞ்சு டீச்சர் உங்களுக்கு :-(

நான் ஆதவன் said...

//wat blood???

Same blood!!!!!!!!!//

வா நண்பா வா. உனக்குமா....அவ்வ்வ்...

Aruna said...

//"மச்சி அந்த கம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு" கொஞ்சம் கெத்தா சொல்ல..அந்த பொண்ணுங்க "க்ளிக்"ன்னு சிரிக்க...//

கடைசியா ஒருவழியா அந்தப் பொண்ணுங்களை இம்ப்ரெஸ் பண்ணிட்டு மறுநிமிஷம் இப்பிடிக் குப்புற விழுந்துட்டீங்களே???
அன்புடன் அருணா

நான் ஆதவன் said...

ஆமாங்க அருணா... :-(

கார்க்கி said...

அடுத்த‌வங்கள சிரிக்க வைக்கத்தான் நீங்க எவ்ளோ கஷ்ட்டபடறீங்க சகா?

நான் ஆதவன் said...

//கார்க்கி said...
அடுத்த‌வங்கள சிரிக்க வைக்கத்தான் நீங்க எவ்ளோ கஷ்ட்டபடறீங்க சகா?//

ஆமா சகா...(இது எதுவும் பதிவ பத்தின கேள்வியா? இல்ல பதிவில நடந்த சம்பவத்த பத்தின கேள்வியா? இந்த கேள்வில உள்குத்து வெளிகுத்து எதுவும் இல்லையே?)

SUREஷ் said...

"பரவாயில்ல நான் ஆற வச்சு சாப்பிட்டுக்கிறேன்//


சின்னப் பசங்களுக்கு புரியல.. விடுங்க...

SUREஷ் said...

அவுங்களோட போக காரணம் இல்லாமயில்லை. ///நாங்க தமிழங்கல்ல............

SUREஷ் said...

நல்லா வெள்ள வெள்ளேன்னு சூப்பரா இருந்துச்சு//////////மதுரைலதானே கல்யாணம் பண்ண போறீங்க......

நான் ஆதவன் said...

//சின்னப் பசங்களுக்கு புரியல.. விடுங்க...//

சரியா சொன்னீங்க...

//நாங்க தமிழங்கல்ல............//

எந்த ஊருக்கு போனாலும் அத நிரூபிப்போமுல...

//மதுரைலதானே கல்யாணம் பண்ண போறீங்க......//

ஏன் பொண்ணு எதுவும் ரெடியா இருக்கா?

ஸ்ரீமதி said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா :))))))))))))))))))))நல்லா சிரிச்சேன்....:)) உங்களுக்கு நல்லா வேணும்... அந்த பொண்ணுங்களும் வந்து கொட்டிருக்கணும்... :))))))))))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா :))))))))))))))))))))நல்லா சிரிச்சேன்....:)) உங்களுக்கு நல்லா வேணும்... அந்த பொண்ணுங்களும் வந்து கொட்டிருக்கணும்... :))))))))))//

ஸ்ரீமதி உனக்கும் கல் நெஞ்சு தான்.... :-(

ஸ்ரீமதி said...

இல்ல அண்ணா குழந்தைகள் எப்பவும் இப்படி தான் சூதுவாது தெரியாது... :((

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
இல்ல அண்ணா குழந்தைகள் எப்பவும் இப்படி தான் சூதுவாது தெரியாது... :((//

என்ன கொடுமை கடவுளே இது!

ஸ்ரீமதி said...

ஹி ஹி ஹி ஹி ;))))))

நான் ஆதவன் said...

//ஹி ஹி ஹி ஹி ;))))))//

என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது...

ஸ்ரீமதி said...

அண்ணா சிரிக்க வெக்கறது எவ்ளோ பெரிய கலை தெரியுமா?? (யார் அந்த பொண்ணுன்னு கேட்கக்கூடாது..) அத நீங்க ரொம்ப அழகா செய்யறீங்க.. :))))

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
அண்ணா சிரிக்க வெக்கறது எவ்ளோ பெரிய கலை தெரியுமா?? (யார் அந்த பொண்ணுன்னு கேட்கக்கூடாது..)//

நீ பாராட்டுறயா இல்ல கலாய்கிறயான்னு தெரியல...


//அத நீங்க ரொம்ப அழகா செய்யறீங்க.. :))))//

நானும் ரொம்ப அழகு தான். என்ன பார்க்கறவங்க கொஞ்சம் பொறாமையில பொய் சொல்லுவாங்க...

ஸ்ரீமதி said...

//நான் ஆதவன் said...
//ஸ்ரீமதி said...
அண்ணா சிரிக்க வெக்கறது எவ்ளோ பெரிய கலை தெரியுமா?? (யார் அந்த பொண்ணுன்னு கேட்கக்கூடாது..)//

நீ பாராட்டுறயா இல்ல கலாய்கிறயான்னு தெரியல...//

அது பாராட்டு தான்... :))

////அத நீங்க ரொம்ப அழகா செய்யறீங்க.. :))))//

நானும் ரொம்ப அழகு தான். என்ன பார்க்கறவங்க கொஞ்சம் பொறாமையில பொய் சொல்லுவாங்க...//

பின்ன என் அண்ணா அழகா இல்லாமலா இருப்பீங்க?? :)))))))))

நான் ஆதவன் said...

//பின்ன என் அண்ணா அழகா இல்லாமலா இருப்பீங்க?? :)))))))))//

இது என் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கிறதால மறுப்பேதும் இல்லாம ஒத்துக்கொள்கிறேன்..

மங்களூர் சிவா said...

:))))))))))

vinoth kumar said...

Etha line na padikum pothey //ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தோம். அப்படியே அவுங்களோடவே போய் ஒவ்வொரு இடத்துக்கும், ராட்டினம் என எல்லாத்துக்கும் போனோம்// aduthathu enna aaluthirupanu na guess pannitean.. same chennai தீவு திடல் exhibition நாபகம்..

Ethaiyum before ah guess pannitean //நான் எழுந்திருக்கும் போது தலைக்கு மேல ஒரு இரும்பு கம்பி இருந்திருக்கு அதுல இடிச்சுக்கிட்டேன்// entha sambavam sumar 40 - 60 times நடதுஇர்ருகும் மா ?? oruthadava blood varumbothu kuda etha dilogue ne vidalayyaeee!!!!

sari sari antha ponnunga number vanginiyaa?? I mean mobile number??? illa valakam polla flop ah?????

Related Posts with Thumbnails