கோழி, மாடு மற்றும் குழந்தை....

நமது ஊரில் "கலப்படம் இல்லாத உணவு தாய்பாலே" என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது வேலைக்கு செல்லும் பெண்களும், நாகரீக மங்கைகளும் அதை மறந்து வரும் நிலையில் அந்த சொல்லை ஞாபகப் படுத்தும் விதமாக சீனாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.கடந்த ஒரு மாதமாக சீனாவில் உணவு பொருட்களில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்சனையில் சீனாவின் பொருளாதாரம் உலக அளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே சீனாவில் தயாராகும் எலக்ட்ரானிக் மற்றும் வேறு பல பொருட்கள் உலக சந்தையில் மிகவும் வேகமாக விற்பனையானாலும் தரத்தில் (முக்கியமாக வளைகுடா நாடுகளில்) யாருக்கும் எந்த திருப்தியும் ஏற்பட்டதில்லை. இதில் நச்சுத் தன்மையுள்ள உணவு பொருட்களினால் பல நாடுகள் சீனாவின் பொருட்களை தடை செய்தது சீனாவிற்கு பலத்த அடி.

சரி அப்படியென்ன உணவு பொருட்களில் கலந்துள்ளது என்று வலையை மேய்ந்தால் கிடைத்தது "மேலமைன்"(melamine) என்ற பொடி.

சாதாரணமாக இந்தப் வெள்ளை நிறமான இந்தப் பொடி "ப்ளாஸ்டிக்" தயாரிக்கப் பயன்படுத்தப்படும். இது 1830 ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிவியல் அறிஞரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனுடன் சில வேதிப் பொருட்களை சேர்ந்து ஃபார்மைக்கா, டைல்ஸ், மார்க்கரால் எழுதப்படும் வெள்ளைப்பலகை, சமையலரையில் உபயோகிக்கும் சில பொருட்கள் என பல பொருட்களைத் தயாரிக்கலாம்.

சரி இதெப்படி முட்டையில் மற்றும் பால் பவுடரில் சேர்ந்தது என்பது ஒரு சோகம் கலந்த சுவாரஸமான விடயம். "melamine" கோழி, மாடுகள் மற்றும் பல விலங்குகளின் உணவு பொருட்களில் இது கலக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட கோழி இடும் முட்டையிலும், மாட்டின் பாலிலும் கலந்துள்ளதை 4 குழந்தை இறந்த பிறகே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சரி இதையேன் விலங்குகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களில் சேர்த்தார்கள் என்று அந்த கம்யூனிச நாட்டு புத்திசாலிகளை கேட்ட போது, அதில் நைட்ரஜன் அதிகம் இருக்கிறதாம். "melamine"ல் மற்றவற்றை காட்டிலும் மிகவும் குறைந்த செலவில் நைட்ரஜன் கிடைக்கிறதாம். சரிய்யா அந்த நைட்ரஜன்ல அப்படி என்ன தான் இருக்கிறது?

அதை விலங்கின் உணவுப்பொருட்களில் சேர்ப்பதால் விலங்கிலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களில் "புரோதச் சத்து" அதிகமாக தெரியுமாம். சரியாக படிக்கவும் "தெரியுமாம்". அதாவது சாதாரணமாக உணவுப்பொருட்களை சோதனை செய்யும் முறையில் அப்படித்தான் தெரியுமாம். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அந்த சோதனை முறையில் அறிய முடியாதாம். நைட்ரஜனை வைத்தே புரோதச் சத்து கணக்கிடப்படுமாம்.

கடந்த வருடம் இதே "melamine" கலந்துள்ள கோதுமை உணவுப் பொருட்களை சாப்பிட்டதால் அமெரிக்காவில் பல நாய் மற்றும் பூனை இறந்தனவாம். அதுவும் இதே சீன தயாரிப்பு தான்.


சரி இதனால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்றால் எல்லாம் ஒன்றும் அறியாத குழந்தைகள் தான். இதுவரை 4 குழந்தைகள் இறந்துள்ளன. 22000 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 99 சதவிகிதம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள். அக்குழந்தைகள் எல்லாம் அந்த டின் பாலைச் சார்ந்தே இருந்தது ஒரு சோகமான விசயம். கம்யூனிச நாட்டுத் தலைவர்கள் தாய் பாலின் மகத்துவத்தைத் தாய்மார்களிடம் உணர்த்தவில்லை என்றே தோன்றுகிறது.

இதனால் ஏற்படும் விளைவுகள்ப் பற்றி கேட்கும் போது அந்தபிஞ்சுக் குழந்தைகள் எப்படி தாங்கும் என்று மனது துடிக்கிறது. கிட்னியில் கல் உண்டாகுமாம், கிட்னி ட்யூப்களை பழுதடையச் செய்யுமாம், சில சமயம் கிட்னியை செயலிலக்கச் செய்யுமாம்.

இந்த மாதிரி நச்சுத் தன்மைக் கொண்ட பால் பவுடரை சீனாவில் மட்டும் 22 கம்பெனிகள் தயாரிக்கின்றனவாம்.

இதில் நியூசலாந்து மற்றும் டென்மார்க் கம்பெனிகள் இந்த் சீன கம்பெனிகளோடு வியாபார ரீதியாக கூட்டு வைத்துள்ளதாம்.

இது போன்று பால்பவுடர் மட்டும் அல்லாமல் பிஸ்கட், சாக்லேட் மற்றும் குழந்தைகள் சாப்பிடும் பல பொருட்களும் நச்சுத் தன்மை உள்ளவனவாக தயாரிக்கப்பட்டுள்ளதாம். அதை இப்போது தேடித் தேடி அழித்து வருகின்றனர் உலகம் முழுவதும்.

அந்த பால்பவுடரில் "melamine" மட்டும் அல்லாமல் லெட், பேட்டரியில் உபயோகப்படுத்தும் காடிமம் மற்றும் மெர்குரி போன்ற மூளையை பாதிக்கும் வேதிப் பொருட்களும் உள்ளனவாம்.

இவ்வளவு பெரிய விடயத்தை தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கம்யூனிச நாடு கவனிக்காமல் விட்டது ஒரு சோகமான விடயம். சீனத் தயாரிப்புகளை இனி புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இனியும் இது போல் வேறு எந்த நாட்டிலும் நடவாதிருக்க பிராத்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய.......

6 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

பாபு said...

நம்ம நாட்டுல பஞ்சாப் ல தாய்ப்பாலிலேயே இது போன்ற பூச்சிகொல்லிகளின் தாக்கம் இருக்கிறது என்பது செய்தி

www.nellaitamil.com said...

பால்பவுடரில் "melamine" மட்டும் அல்லாமல் லெட், பேட்டரியில் உபயோகப்படுத்தும் காடிமம் மற்றும் மெர்குரி போன்ற மூளையை பாதிக்கும் வேதிப் பொருட்களும் உள்ளனவாம்.????ஃ
அதிர்ச்சி அளிக்கும் செய்தி தான்.

நான் ஆதவன் said...

//பாபு said...
நம்ம நாட்டுல பஞ்சாப் ல தாய்ப்பாலிலேயே இது போன்ற பூச்சிகொல்லிகளின் தாக்கம் இருக்கிறது என்பது செய்தி//

இது புதுசா இருக்கே பாபு... இது எப்ப நடந்தது?

நான் ஆதவன் said...

//www.nellaitamil.com said...
பால்பவுடரில் "melamine" மட்டும் அல்லாமல் லெட், பேட்டரியில் உபயோகப்படுத்தும் காடிமம் மற்றும் மெர்குரி போன்ற மூளையை பாதிக்கும் வேதிப் பொருட்களும் உள்ளனவாம்.????ஃ
அதிர்ச்சி அளிக்கும் செய்தி தான்.//

வருகைக்கு நன்றி நெல்லைத்தமிழ்..

இளைய பல்லவன் said...

பொதுவாகவே சீனத் தயாரிப்புகளில் தரத்திற்கு முக்கியத்துவம் குறைவுதான்.

அதுவும் குழந்தைகளை, அடுத்த தலைமுறையை பாதிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டதென்றால் மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்.

நான் ஆதவன் said...

ஆமாம் பல்லவன். இங்கு துபாயில் சீனத் தயாரிப்புகள் மிக அமோகமாக விற்பனை ஆகின்றன...அது குழந்தைகள் விளையாடும் பொம்மையில் இருந்து உட்கொள்ளும் உணவு வரை ஊடுருவி இருப்பது தான் பரிதாபம்...

Related Posts with Thumbnails