தேவாவிற்கும் வாலிக்கும் ஒரு நன்றி...

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த பதிவிற்கும் என் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இல்லை... இல்லை. கடந்த வார இறுதி நாளின் எப்போழுதும் போல மப்புடன் படுக்கச் சென்றேன். வழக்கம் போல் ஐபாடை ஆன் செய்து கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கமான பாடல்களின் நடுவே இதுவரை கேட்டிராத ஒரு பாடலைக் கேட்டேன். ஆரம்பமே ஒரு சலங்கை சத்தம் போல....
"ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்" என்று கேட்டப் போது சொக்கிப் போனேன்.

பாடலில் தேவாவின் வாசனை வந்தாலும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஐபாடை பார்த்த போது "இந்து" என்ற படத்திலிருந்து பாடல் என்று தெரிந்தது. சந்தோஷமா அல்லது கருமாந்திரமா என்று தெரியாமல் குமட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அதுவும் நன்றாக இருந்ததால் திரும்பவும் கேட்டேன். ரூமிலுள்ள நண்பர் ஓவர் போதையில் உளரிக் கொண்டிருந்ததால் ஐபாடை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். திரும்பவும் ப்ளே பொத்தானை அழுத்தினேன்.

"அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
இளிச்சிடாதா நின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல
வா முனிமா வா வா முனிமா வா
வா முனிமா வா வா முனிமா வா"

ஆஹா என்ன கருத்தாழம் மிக்க வரிகள். யாரோ ஒருவர் என் கையை பிடித்து டப்பாங்கூத்து ஆடுவது போல ஒரு உணர்வு. நீண்ட நாட்கள் கழித்து நாக்கைக் கடித்து கட்டை விரலில் எச்சைத் தொட்டு நெற்றியில் திலகமிட்டு ஒரு குத்து குத்தினேன். நீண்ட நாட்கள் கழித்து கண் கலங்கினேன். இதற்கு முன்னர் நண்பன் வீட்டு தாத்தா சாவுக்கு ஆடியது. எழுதியவர் மீது அளவில்லா கோவம். எழுதியவர் கண்டிப்பாக வாலியாகத்தான் இருக்க முடியும். இது போன்று இளமை ததும்பும் கேப்மாரிதனமான தத்துவ பாடலை எழுத அவரால் தான் முடியும். மறுநாள் வலையில் மேய்ந்த போது வாலி தான் என்று உறுதியானது. ஆனால் பாடியவர் மனோ மற்றும் மின்மினி.

"ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ப்ரெண்டு உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்ம பிரிக்க வந்தா வெட்டு (கோரஸ்)
எட்டு ரெண்டும் பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்து (கோரஸ்)
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா வா முனிமா வா ஹோய்... "

சொக்கிப்போனேன். வராந்தாவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. ஓவர் போதையில் இருந்ததால் நேராக நிக்க முடியாமல் சுவரில் சாய்ந்து நாக்கைக் கடித்து மீண்டும் ஒரு டப்பாகூத்து ஆடினேன். அருகில் ஒரு பூனை மட்டும் என்னை போல் தனியாக இருந்தது. என்னைப் பார்த்ததும் என் அருகில் வந்து மடியில் அமர்ந்து கொண்டது. ஆறுதலாய் உணர்ந்தேன். இத்தனை நாள் இந்த மாதிரி டப்பாகூத்து ஆடாமல் வீணடித்ததை நினைத்து வருந்தினேன். பாடல் அழகா இல்லை மனோ பாடியது அழகா என்று போதையில் பட்டிமன்றம் நடத்தினேன். கடைசியில் ஆண் கோரஸ் வரும் பாருங்கள்......ரொம்ப நாளாச்சு...கேட்டுப் பாருங்கள்.

பல்லவி:
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமா அத்தை மவன் நேசம்
வெண்ணையில மாமா நெய் வாசம்
என் திண்ணையில மாமா உன் வாசம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமன் அத்தை மவன் நேசம்
வெண்ணையில....... மாமா நெய் வாசம்
என் திண்ணையில.....மாமா நா நா நாராசம்.....
நான்சென்ஸ்.....

யேய் என்ன திட்ர உனக்கு பாட்டு தானே வேணும்
டேய் பட்டாசு ..
இப்ப பாரு பட்டய கிளப்புறேன்


ஹாய் வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஹாய் வா முனிமா வா முனிமா வா முனிமா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச்சு பக்கம் வாடி (கோரஸ்)
வா முனிமா வா வா முனிமா வா முனிமா (கோரஸ்)
வா முனிமா வா வா முனிமா வா (கோரஸ்)

சரணம்1;
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
இளிச்சிடாதா நின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல
முனிமா வா வா முனிமா வா
வா முனிமா வா வா முனிமா வா

சரணம்2;
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ப்ரெண்டு உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்ம பிரிக்க வந்தா வெட்டு (கோரஸ்)
எட்டு ரெண்டும் பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்து (கோரஸ்)
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா வா முனிமா வா ஹோய்...

சரணம்3;
அய்யோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
அய்யோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
கை கொடுத்த ஆளு நம்ம கலுத்தறுத்தான் பாரு
சும்மா நின்ன சங்கு இத ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு இல்ல எடுத்திடுவோம் நொங்கு
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை நைட்டு எல்லாரும் சேர்ந்து வெளியில் தள்ளி கதவை பூட்டி விட்டனர்...

10 பேர் கருத்து சொல்லியிருக்காங்க..:

கிழஞ்செழியன் said...

நல்லா வேணும்.

கார்க்கி said...

ஆஹா எனக்கே எதிர் பதிவா???? கலக்க்க்க்க்கிட்டிங்க சகா... பாடலின் வரிகளை விடுங்கள்.. எனக்கு இந்த மெட்டு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் இந்த கொத்தமல்லி வாசம்... நல்ல பாட்டு.. ரொம்ப நாள் கழிச்சு ரீமிக்ஸ் பண்ணி இருகிங்க. ஏன்? ஜூப்பராத்தான் இருக்கு


இதன் மூலம் நானும் மூத்த பதிவராயிட்டேன்.. ஆயிட்டேன்.. யிட்டேன்.. ட்டேன்..டேன்..ன்.........

நான் ஆதவன் said...

//நல்லா வேணும்.//

அவ்வ்வ்வ்வ்வ்ளே கல் நெஞ்சக்காரரா நீங்க... :-)

கார்க்கி said...

ஆஹா எனக்கே எதிர்பதிவா? கலக்கல் சகா.... லேட்டா பண்ணாலும் வெயிட்டான ரீமிக்ஸ்... நல்ல பாட்டுங்க.. வரிகள்தான் நல்லா இருக்காது.. எனக்கு மெட்டு புடிக்கும்..


இதன் மூலம் நானும் மூத்தப் பதிவராயிட்டேன்.. திவராயிட்டேன்...வராயிட்டேன்... ராயிட்டேன்.. யிட்டேன்... ட்டேன்... ட்டேன்.. டேன்...ன்.....

நான் ஆதவன் said...

//ஆஹா எனக்கே எதிர் பதிவா???? கலக்க்க்க்க்கிட்டிங்க சகா... பாடலின் வரிகளை விடுங்கள்.. எனக்கு இந்த மெட்டு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் இந்த கொத்தமல்லி வாசம்... நல்ல பாட்டு.. ரொம்ப நாள் கழிச்சு ரீமிக்ஸ் பண்ணி இருகிங்க. ஏன்? ஜூப்பராத்தான் இருக்கு//

நன்றி சகா.. ஏதாவது தப்பா நினைப்பைங்களோன்னு நினச்சேன்:-)

இப்ப தான் ஐடியா தோணிச்சு...

//இதன் மூலம் நானும் மூத்த பதிவராயிட்டேன்.. ஆயிட்டேன்.. யிட்டேன்.. ட்டேன்..டேன்..ன்.........///

நீங்க எப்பவோ மூத்த பதிவராயிட்டீங்களே...உங்களுக்கு தெரியாதா என்ன?

நான் ஆதவன் said...

//நல்ல பாட்டுங்க.. வரிகள்தான் நல்லா இருக்காது.. எனக்கு மெட்டு புடிக்கும்//

எனக்கும் மெட்டு பிடிக்கும் சகா...ஆனா வரிகள் தான் ரொம்ப மோசமா இருக்கு,,வாலி தான் இத எழுதினாருன்னு நம்பவே முடியல...

Anonymous said...

இந்து பிரபுதேவா என்ற மகத்தான நடிகர் கதாநாயகனாக அறிமுகமான படம். இதை இயக்கிய பவித்ரனுக்கு, அவரது முந்தைய படமான 'வசந்த காலப் பறவை'யில் அசோசியேட்டாக இருந்தவர் இயக்குநர் *ஷ்ஷங்க்கர்*.

ஸ்ரீமதி said...

உவ்வே.. அண்ணா இந்த பாட்டு நல்லாவே இல்ல..:(((

நான் ஆதவன் said...

//ஸ்ரீமதி said...
உவ்வே.. அண்ணா இந்த பாட்டு நல்லாவே இல்ல..:(((//

தெரியும்..சும்மா கார்க்கி கலாக்கத்தான் இந்த பதிவு தங்காச்சி....

ஸ்ரீமதி said...

அச்சச்சோ அப்படியா அண்ணா?? இப்ப தான் அந்த பதிவையும் படிச்சேன்... நல்லா கலாய்ச்சிருக்கீங்க... :)))))))))))

Related Posts with Thumbnails