துபாயில் பேக்கரி கடை ஓனர் "வீரபாகு"

துபாயிலிருந்து சென்னைக்கு கூட ஈஸியா வந்துடுலாம். ஆனா வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து சார்ஜாவிற்க்கு டாக்ஸி கிடைச்சு பின்ன அந்த டிராபிக்ல மீட்டர் ஓடுறத பார்த்து பிரஷர் எகிறி ரூமுக்கு வருவதற்குள் தாவு தீர்ந்திடும்.

நேத்து நண்பர் ஒருத்தர பார்த்துட்டு "வாரணம் ஆயிரம்" படத்துக்கு போகலாம்ன்னு கலீரியா தியேட்டருக்கு போனா அந்த படத்தை தூக்கிட்டு "டிவண்டி-20" மலையாள படம் ஓடிட்டுருக்கு. சரி இனி டி.வி.டில தான் பார்க்கனும் போல நினைச்சுட்டு வந்துட்டோம்.

அங்கிருந்து திரும்ப ரூமிற்கு வரம்போதும் தான் பிரச்சனை ஆரம்பமாச்சு. டாக்ஸியே கிடைக்கல. கிடைச்சாலும் சார்ஜா வரமாட்டேங்கிறான். இது ஏதோ இந்தியா போலவும் அது ஏதோ பாகிஸ்தான் போலவும் நினைக்கிறானுங்க. எல்லாம் இந்த வெள்ளி கிழமையும், சாயங்கால நேரத்திலேயும் தான்.

போன ஜென்மத்தில பண்ணுன புண்ணியம் போல ஒரு டாக்ஸிகாரன் வந்தான். சார்ஜா சொன்னத்தும் ஏறிக்கோன்னு சொன்னான். பாகிஸ்தான் டிரைவர்.

ரொம்ப சந்தோஷமா பேசிகிட்டே வந்தான். டிராபிக் அதிகமா இருந்தனால பேசுறதும் கொஞ்சம் நேரம் கடத்தறது மாதிரி இருந்தது. எந்த ஊருன்னு கேட்டான். அவன்கிட்ட 'சென்னை' இல்லையென்னா 'மெட்ராஸ்ன்னு' சொன்னா புரியாது. மதராஸின்னு சொன்னேன். அவன்களுக்கு தென் இந்தியால "மதராஸி" "மலையாளி" இந்த இரண்டும் தான் தெரியும்.

அவன் பேச்சுல அவன் கொஞ்சம் சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. என்ன விஷயமுன்னு கேட்டேன். அவன் இப்போ சார்ஜா ஏர்போட்டுக்கு தான் போறானாம். அவனோட மச்சான் ஒருத்தன் ஊர்லயிருந்து வரானாம்.

சரி அதுக்கெதுக்குடா இவ்வளவு சந்தோஷம்ன்னு கேட்டேன். அவன் ஒரு "ஹார்ட்வேர்" கடை ஒன்னு நடத்த போறானாம். அங்க வேலை செய்ய தான் அவனோட மச்சான் வரானாம். இன்னும் கொஞ்ச நாள்ல அவனோட பொண்டாட்டியவும் கூட்டிட்டு வரப்போறானாம். சீக்கிரமே இந்த டாக்ஸி டிரைவர் வேலைய விடப்போறானாம்.

ஏண்டா இவ்வளவு நல்ல டாக்ஸ் டிரைவர் வேலைய விடுறன்னு கேட்டேன். அவன் அதுக்கு சொன்ன காரணமும் நியாயமா தான் இருந்திச்சு. காலையில வண்டியில உட்கார்ந்தா எப்போ கீழ இறங்குவோம்ன்னு தெரியாது. ஏதாவது அவசரத்திற்கு கூட கீழ இறங்க முடியாதாம். அதாவது தண்ணிகுடிக்க, சாப்பிட ஏன் அவசரத்துக்கு ஒன்னுக்கு கூட போக முடியாதாம்.

அதான் சொந்தமா கடை தொறக்க போறேன்ல அப்புறம் ஏன் இந்த கருமம் புடிச்ச டாக்ஸி டிரைவர் வேலைக்கு போகனும்ன்னு கேட்டான். நானும் ஆமாம் ஆமாம்ன்னு தலையாட்டினேன்.

எனக்கொரு டவுட் தீடீர்ன்னு எப்படி இவனுக்கு கடை திறக்கற அளவுக்கு பணம் வந்துச்சுன்னு.. அவன்கிட்ட கேட்டேன் அவன் எனக்கொரு மச்சான் இருக்காரு இங்க. அவரோட கடைதான் அது.

ஆரம்பத்தில எனக்கு தரமாட்டேன்னு தான் சொன்னாரு. அப்பாலிக்கா பேசி அவரோட மனசை கரைச்சு சம்மதம் வாங்கிட்டேன்னு சொன்னான்.

என்னது இங்க உனக்கு மச்சானா...எப்படி அந்த உறவுமுறைன்னு கேட்டேன்.

இவனோட அக்காவ அந்த அரபி கல்யாணம் பண்ணிகிட்டானாம். எத்தனாவது கல்யாணம்ன்னு நான் கேக்கலாம்ன்னு நினைச்சேன். வேண்டாம் இப்ப கேட்டா காமெடி டைம் சீரியஸ் டைம் ஆகிடும்ன்னு விட்டுட்டேன்.
ஏன்னா இங்கிருக்க அரபிகளுக்கு ரெண்டு மூணு பொண்டாட்டிகளெல்லாம் ரொம்ப சாதாரணம்...

நான் அவன்கிட்ட உன்னை மாதிரியே எங்க ஊர்ல ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் பேக்கிரி கடை வச்சுருக்கான். அவன் பேரு வீரபாகு.அவனும் உன்னை போலவே ரொம்ப நல்லவருருருருருன்னு சொன்னேன்.

டாக்ஸிகாரனும் சிரிச்சுகிட்டே "அச்சா அச்சா" அப்படின்னான்.

குசும்பனின் ஆசிர்வாதத்தோடு......

கடல் சீற்றத்திற்கு பயந்து பாதுகாப்பான இடம் தேடி தன் குழந்தைகளுடன் போகும் தாய்.....


கடினமான பாடத்தை நீக்கினதுக்காக வகுப்பை புறக்கணிக்கும் மாணவிகள்..
இது கேப்டன்...

இலங்கை தமிழர்களுக்காக வழக்கம் போல போராடும் கம்யூனிஸ்டுகளுடன் ம.தி.மு.க
இது பைனல் டச்...நம்ம குசும்பனுக்காக....ஹி...ஹி

அச்சுவிண்ட அம்(மே)மா..


தலைப்பை பார்த்துட்டு "அஞ்சரகுல்ல வண்டி" மாதிரி ஏதாவது ஏடாகூடமா நினைச்சு உள்ளே வந்தைங்கன்னா நான் பொறுப்பல்ல...

எப்ப வளைகுடா வந்தேனோ அப்பவே மலையாள படங்களைப் பார்பதும் அதிகமானது.அதற்கு முன் சென்னையில "இராகவேந்திரா" "வெங்கடேஷ்வரா" போன்ற பக்தி தியேட்டர்களில் ஷகீலா படம் பார்த்ததோட சரி.

இங்க வந்து பார்த்த முதல் மலையாள படம் "அச்சுவிண்ட அம்மா"(2005).அந்த படத்தைப் பார்த்த போது மலையாள படங்கள் மேல ஒரு மரியாதையே வந்தது. ஊர்வசி, மீரா ஜாஸ்மின், நரைன் போன்ற பெரிய நட்சரத்திங்கள் இல்லாமல் ஒரு படம்.

அம்மாவாக ஊர்வசி, மகளாக மீரா ஜாஸ்மின்.கணவன் இல்லாமல் தனியாக தன் மகளுடன், தனது சாமர்த்திய பேச்சால் பலரை பாலிசி எடுக்க வைக்கும் எல்.ஐ.சி ஏஜெண்டாக ஊர்வசி. டிப்ளோ சிவில் இன் ஜினியராக அச்சு (அஸ்வதி) கேரக்டராக மீரா ஜாஸ்மின் நமக்கு அறிமுகமாகிறார். இருவரும் தாய் மகளை போல் அல்லாமல் தோழிகள் போல் பழகுகின்றனர். இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் ஒருவொருக்கொருவர் மறைப்பதில்லை. அவர்களுக்கிடையே ஒரே ஒரு விஷயம் மட்டும் திரை மறைவில் உள்ளது, அது அச்சுவின் அப்பா...

தன் அப்பா அம்மாவை ஏமாற்றி சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு தன் அப்பாவைப் பற்றி எதுவும் கேட்காமல் இருக்கிறார் அச்சு. அதற்கேற்றாற் போல் அச்சுவிடம் ஊர்வசிக்கு கொண்டுள்ள அளவு கடந்த பாசம் அவளுக்கு அப்பாவைப் பற்றி நினைக்கக் கூட செய்யவில்லை.அச்சுவிற்கு ஏதேச்சையாக நண்பனாக அறிமுகமாகிறார் வக்கீல் நரைன். அதே நேரத்தில் அச்சுவிற்கும் ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இருவரின் ஆரம்ப நட்பு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. ஊர்வசி இருவரின் காதலுக்கு ஆரம்பத்தில் ஓகே சொல்லிவிட்டு பின்பு அவர் தன் தாய் தந்தை மற்றும் குடும்பத்தையே ஒரு விபத்தில்(தற்கொலை) இழந்தவர் என்று தெரிந்து கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.தன் மகளை ஒரு கூட்டு குடும்பமத்தில் மட்டுமே கல்யாணம் செய்து கொடுப்பதாக கூறுகிறார்.

இதனால் தாய் மகள் இருவரிடையே விரிசல் ஏற்படுகிறது. இதுவரையில் தன் அப்பாவை குறித்து ஏதும் கேட்காத அச்சு அப்பாவைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பதில் கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தன் தோழியுடன் தங்குவதற்கு செல்லும் அவள் அதற்குரிய சூழ்நிலைகள் அங்கு இல்லாததால் மனவிரக்தியில் செல்லும் போது விபத்தில் சிக்குகிறாள். மருத்துவமனையில் அவளை காண வரும் ஊர்வசியை உடன் பேச மறுக்கிறாள்.
ஊர்வசி மனம் வெறுத்து அவள் பிறப்பின் ரகசியத்தை நரைனிடம் கூறுகிறாள். ஊர்வசி பதினைந்து வயதில் சிவகாசியில் வேலை செய்யும் போது அங்குள்ள பெண்களை வட மாநிலத்திற்கு கடத்தும் கும்வலில் சிக்குகிறார். அங்கிருந்து தப்பிக்கும் போது அந்த கும்பலில் சிக்கியிருக்கும் ஒரு இரண்டு வயது சிறுமி அவள் பாவாடையை பிடுத்து "தானும் வருவது போல்" சிரிக்கும் போது, ஊர்வசி இக்குழந்தை இவ்விடத்தில் இருந்தால் இதன் வாழ்க்கையே சீரழியும் என்று தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். அப்பெண்ணுக்கு அச்சு என்று பெயரிட்டு தன் மகளாகவே வளர்க்கிறாள்.


வளரும் போது தான் அவளுக்கு சொந்தம் ஏதும் இல்லை, அவள் புகுந்த வீட்டிலாவது நிறைய சொந்தங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் இக்கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறுகிறாள். இதை அவளிடம் சொல்லவேண்டாம் என்றும் இனி அவளை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் செல்கிறார்.
நரைன் அச்சுவிடம் அவள் பிறப்பின் இரகசியத்தை கூற நேருடிகிறது. தன் தவறை உணர்ந்து அவள் வீடு வரும் போது அவள் அன்னை அவளை போன்றே மற்றுமொரு நான்கு வயது அச்சுவிற்கு தாயாகியிருக்கிறாள் என்று தெரியவருகிறது. மனது கனக்கும் க்ளைமாக்ஸோடு படம் நிறைவடைகிறது.


ஊர்வசிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு கேரக்டர்.ஆரம்பித்தில் இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகள் நமக்கு இயல்பாய் சிரிப்பை வரவழைக்கின்றன. காமெடி ஊர்வசிக்கு வெகு இயல்பாய் வருகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் நகைச்சுவையாக இருப்பததால் பிற்பாதியின் சோகத்தைத் தாங்க எந்த ஒரு ஆயத்தமும் செய்யவிடாமல் கதை நகர்வது ஒரு ப்ளஸ்பாயிண்ட். குறிப்பாக ஊர்வசி ஆங்கிலம் கற்பதும், வீட்டை விட்டு ஓடி வரும் அச்சுவின் தோழியை நைசாக பேசி அவள் வீட்டிற்கு அனுப்புவது போன்ற நகைச்சுவை காட்சிகளைச் சொல்லலாம்.


மீரா ஜாஸ்மின் "அச்சு" என்ற சுட்டிப்பெண்ணாக கதாபாத்திரத்திற்கு ஏற்ப பொருந்தியுள்ளார். மிகவும் அழ்காக இருக்கிறார் இந்த படத்தில்.


நரைன் நம்ம அஞ்சாதே ஹீரோ. இவர் வேலையை இவர் சரியாக செய்திருக்கிறார். 'அஞ்சாதே' படத்தைப் பார்க்கும் போது 'இவர்' தான் 'அவர்' என்று கூறினால் மலையாளிகள் நம்ம மறுத்தனர். இப்போது அப்படியொரு மாற்றம் அவரிடம்.


இளையராஜா பாடல்கள் இனிமையாக இருக்கின்றன். அதிலும் "எந்து பறஞ்சாலும்" என்ற பாடலை இன்றும் கேரள மாநிலத்தில் ஒலித்தால் கேட்க ஒரு கூட்டம் காத்திருக்கும். அதை படமாக்கின விதமும் பாடலை எளிமையாக மக்களிடம் சென்றடைய ஒரு காரணம். நீங்களும் கேளுங்க..இதுக்கெல்லாமா வேலைய விட்டு தூக்குவாங்க.....

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி ஆகிபோச்சு என் நிலைமை. எங்க கம்பெனியோட டிசைன் இன்ஜினியர் ஊருக்கு போனதினால் என்கிட்ட ஒரு ப்ராஜெக்ட்ட கொடுத்து டிசைன் பண்ண சொன்னாங்க..... சரி நானும் இதெல்லாம் எப்ப கத்துக்கிறதுன்னு சரின்னு சொன்னேன்.

டிசைன் செய்து அத fabricationம் செய்து erectionம் செய்துட்டாங்க...அப்பறமா தான் ஒரு சின்ன தப்பு நடந்தது தெரிய வந்தது. அந்த சின்ன தப்புக்கு போய் வேலைய விட்டு எடுக்க போறேன்னு சொல்றாங்க. இது என்னங்க அநியாயம். நீங்களே படத்த பாருங்க.........


foundationஐ டிசைன் செய்ய மறந்துட்டேனுங்க... உங்களுக்கு தெரிஞ்ச சிவில் டிசைன் இன்ஜினியர் யாராவது இருந்தா சீக்கரம் எனக்கு தெரிவிங்க....

பிரபல பதிவர் புகைப்படங்கள் (வித் கமெண்ட்ஸ்)


நான் லக்கியோட தீவிர ரசிகை.. இத யாராவது அவர்கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்....

புலிகளுக்கு ஆதரவா பேசினதால இவரோட போஸ்டர இங்கிருந்து எடுக்க சொல்லிட்டாங்க......

ஒரு நாள் குடி போதையில இவரு நைட்டு என் வீட்டுக்கு வந்தாரு......அன்னைலருந்ந்து நான் இப்படி ஆயிட்டேன்.


இவரு தான் அதிஷ வா.....
ஆமா இவரு எழுத்துக்கு மயங்காத ஆளே இல்லை...
கி.பி 23ஆம் நூற்றாண்டு: இவர் 21ஆம் நூற்றாண்டு பதிவுலகத்தில கலக்கின பதிவர். பதிவர் சந்திப்புல பஜ்ஜி, போண்டா எல்லாம் கொடுப்பாரு.....

டேய் குசும்பா...வயசானாலும்(!) உன் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லடா...


இந்த நல்ல உள்ளத்தத்தான் நான் விரும்புறேன்...தயவு செய்து என்னை ஏத்துக்க சொல்லுங்க.....

"திண்டிவனம் இளைய நிலா" முதலாம் மாநாட்டுக்கு உங்க எல்லாரையும் வருக வருக என்று கேட்டுக்கொள்கிறேன்.....
சட்டத்தின் கையில் சாதி!

குண்டு வைத்து பல உயிர்களை கொன்றவனுக்கும் தூக்கிலிடும் கொடிய தண்டனையை கொடுக்க வேண்டாம் என மன்றாடும் தேசமடா இது. கையில் கட்டையுடனும், கத்தியுடனும் உன் கேடுகட்ட வீரத்தை காட்ட உனக்கு படிப்பித்தவன் எவன்.

மேலதிகாரியின் அனுமதியில்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்காத, கடமை தவறாத(?) காவல் துறையின் முன் உன் அட்டூழியம் நிகழ்த்தியிருப்பது ஒன்றும் அதிசயமல்ல... இதற்கு முன் அவர்கள் முன் பல அட்டூழியங்களை உன் போல் மிருகத்திற்கு பிறந்த பல அரசியல்வாதிகளை செய்திருக்கிறார்கள். அதையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் தன்னுடன் ஒரே கல்லூரியில் படிக்கும் தனது சீனியரை அடித்து கீழே விழுந்தவனை மீண்டும் மீண்டும் அடித்து உன் தீராத மிருக வெறியை பார்த்த போது.....அய்யோ ... இதயம் நின்று விட்டதடா...

உனக்கு உண்ண உணவு, தங்க இடம், படிக்க தேவையான பணம் என உன் பெற்றோரும் அரசாங்கமும் எல்லா வசதியும் செய்து கொடுத்த பின்னரும் உனக்கு என்ன கேடு.....

நீ படிக்கும் சட்டத்தை இயற்றிய மேதையின் பெயரில் இப்படி ஒரு கொடூரம் நிகழ்ந்து எண்ணும் போது .. அடப்பாவி அந்த சட்ட மேதை ஆத்மா சாந்தி அடையுமா...

உன்னைச் சொல்லி குற்றமில்லை.... உனக்கு பாடசாலையில் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" எனச் சொல்லி கொடுக்க விட்டு உன் முலமாகவே ஒரு ஜாதி அரசியலை நடத்தும் அரசியல் வாதியை சொல்ல வேண்டும்.

"முதல்வன்" படத்தில் வருவது போல் உள்ளதடா இந்த நிகழ்ச்சியும்.. போலிஸுக்கும் தெரிந்திருக்கும் நீ அங்கு பிரச்சனை செய்வாய் என்று. போலிஸின் கைகளை கட்டிப் போட்டிருக்கலாம் அரசியல் .

உன்னை வழக்கறிஞர் என்று எப்படியடா கூப்பிடுவது?. மனிதாபிமானம் இல்லாத உன்னை மனிதன் என்றே கூப்பிட தகுதியற்றவன்.

எதிர்கட்சிகளையும், மக்களின் வாயை அடைக்க சில காவல் துறையினரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது அரசு. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் உங்களை அடக்க வந்த கடந்த காலங்களில் அவர்கள் மீதே பழியைப் போட்டு பல நாள் வேலை நிறுத்தம் செய்து, பல காவல் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்.

நீ அடித்தவனும் யோக்கினாக இல்லாமலிருக்கலாம். அதனால் நாளை அடிவாங்கியவனின் உன்னை தாக்கலாம். அப்போது உனக்கு இதை விட மோசமான நிலைமை உனக்கு வரும் என்று எண்ணினாயா?இதுக்கெல்லாம் அடிப்பாங்களா என்ன?

மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயியைப் போல நாங்கள் விடுமுறைக்காகக் காத்திருப்போம். அநேகமாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பலபேருக்கு இதுதான் நிலைமை. ஏனென்றால் விடுமுறை இந்தியாவில் இருப்பது போல அடிக்கடி வராது. ஆனால் வந்தால் இரண்டு மூன்று தினங்கள் சேர்ந்தமாதிரி வரும். அப்படி வந்தது தான் ஒரு ரம்ஜான்.

லீவு விட்டா நேரா அபுதாபு தான். அங்க நிறைய நண்பர்கள் இருக்காங்க. நமக்கு கம்பெனி மெஸ்ல சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து கிடக்கும். எப்பவாவது இந்த மாதிரி வெளிய போகும் போது மூக்கு பிடிக்க (அப்படின்னா என்னன்னு கேட்கப்படாது) நம்மூர் சாப்பாடை ஒரு கட்டு கட்டுவேன்.

அன்னைக்கு அபுதாபி நண்பர்கள் எல்லாரும் சாப்பிட ஒரு நம்மூர் அசைவ ஹோட்டலுக்கு சென்றோம். எல்லாம் ஆர்டர் செய்த போது நான் "காடை ரோஸ்ட்" சொன்னேன். "வேண்டாம் மச்சி அது சூடுடா" அப்படின்னு சொன்னான் ஒரு ப்ரெண்டு. நான் "பரவாயில்ல நான் ஆற வச்சு சாப்பிட்டுக்கிறேன்"ன்னு சொன்னேன். இதுல என்னங்க தப்பு அதுக்கு போய் எல்லாரும் சேர்ந்து அடிச்சுட்டான்ங்க..... வர வர என் பொழப்பு வடிவேலு கணக்கா ஆகிடுச்சு.

--------------------------------------------------------------------------

அப்புறமா அல் ஐன்ல இருக்கிற "fun city"க்கு போனோம். ஜாலியா சுத்திட்டிருக்கும் போது ஒரு தமிழ் குடும்பத்தை பார்த்தோம். அப்படியே அவுங்களோடவே போய் ஒவ்வொரு இடத்துக்கும், ராட்டினம் என எல்லாத்துக்கும் போனோம். அவுங்களோட போக காரணம் இல்லாமயில்லை. அந்த குடும்பத்தில இரண்டு பொண்ணுங்க இருந்துச்சு. இரண்டும்(இரண்டு பொண்ணுங்களும்) நல்லா வெள்ள வெள்ளேன்னு சூப்பரா இருந்துச்சு. அவுங்க பேச்ச வச்சு ஐயர் குடும்பம்ன்னு தெரிஞ்சுது.

நான் கொஞ்சம் ஓவரா பில்டப் செய்து பொண்ணுங்கள கவர செய்த முயற்சி எதுவும் நண்பர்களுக்கு பிடிக்கல. ஏன்னா அவன்கள கலாய்த்து தான் அந்த பொண்ண என் பக்கம் திருப்ப முயற்சி செய்தேன். கடைசியா போகும் போது வாயில்ல ஒரு இடத்தில உட்கார்ந்தோம். நான் எழுந்திருக்கும் போது தலைக்கு மேல ஒரு இரும்பு கம்பி இருந்திருக்கு அதுல இடிச்சுக்கிட்டேன். "டங்ங்ங்ங்ங்ங்"ன்னு டி.டி.ஸ் எபக்ட்ல ஒரு சவுண்ட்...எனக்கு தல சுத்த ஆரம்பிச்சுது. கேலக்ஸி கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சுது. கண் இரண்டும் ஒன்னோட ஒன்னு பாக்க முயற்சி பண்ணிச்சு. நண்பர்கள் எல்லாம் பதறி என்ன ஆச்சு கத்த ஆரம்பிச்சாங்க. அந்த பொண்ணுங்களும் பார்க்க எனக்கு என்ன செய்யிறதுன்னு தெரியல..திடீரென்னு "மச்சி அந்த கம்பிக்கு என்ன ஆச்சுன்னு பாரு" கொஞ்சம் கெத்தா சொல்ல..அந்த பொண்ணுங்க "க்ளிக்"ன்னு சிரிக்க...நண்பர்கள் அஞ்சு பேரும் நங் நங்ன்ன்னு அதே இடத்தில கொட்டி "எங்க கைக்கும் ஒன்னும் ஆகலையே" சிரிச்சுட்டே சொன்னான்க. இதுக்கெல்லாமா கொட்டுவாங்க. அதுக்கு அந்த பொண்ணுங்க சிரிச்சுது பாருங்க....மானேமே போச்சு.

கோழி, மாடு மற்றும் குழந்தை....

நமது ஊரில் "கலப்படம் இல்லாத உணவு தாய்பாலே" என்று சொல்வதுண்டு. ஆனால் இப்போது வேலைக்கு செல்லும் பெண்களும், நாகரீக மங்கைகளும் அதை மறந்து வரும் நிலையில் அந்த சொல்லை ஞாபகப் படுத்தும் விதமாக சீனாவில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.கடந்த ஒரு மாதமாக சீனாவில் உணவு பொருட்களில் ஏற்பட்டுள்ள தொடர் பிரச்சனையில் சீனாவின் பொருளாதாரம் உலக அளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே சீனாவில் தயாராகும் எலக்ட்ரானிக் மற்றும் வேறு பல பொருட்கள் உலக சந்தையில் மிகவும் வேகமாக விற்பனையானாலும் தரத்தில் (முக்கியமாக வளைகுடா நாடுகளில்) யாருக்கும் எந்த திருப்தியும் ஏற்பட்டதில்லை. இதில் நச்சுத் தன்மையுள்ள உணவு பொருட்களினால் பல நாடுகள் சீனாவின் பொருட்களை தடை செய்தது சீனாவிற்கு பலத்த அடி.

சரி அப்படியென்ன உணவு பொருட்களில் கலந்துள்ளது என்று வலையை மேய்ந்தால் கிடைத்தது "மேலமைன்"(melamine) என்ற பொடி.

சாதாரணமாக இந்தப் வெள்ளை நிறமான இந்தப் பொடி "ப்ளாஸ்டிக்" தயாரிக்கப் பயன்படுத்தப்படும். இது 1830 ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிவியல் அறிஞரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனுடன் சில வேதிப் பொருட்களை சேர்ந்து ஃபார்மைக்கா, டைல்ஸ், மார்க்கரால் எழுதப்படும் வெள்ளைப்பலகை, சமையலரையில் உபயோகிக்கும் சில பொருட்கள் என பல பொருட்களைத் தயாரிக்கலாம்.

சரி இதெப்படி முட்டையில் மற்றும் பால் பவுடரில் சேர்ந்தது என்பது ஒரு சோகம் கலந்த சுவாரஸமான விடயம். "melamine" கோழி, மாடுகள் மற்றும் பல விலங்குகளின் உணவு பொருட்களில் இது கலக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட கோழி இடும் முட்டையிலும், மாட்டின் பாலிலும் கலந்துள்ளதை 4 குழந்தை இறந்த பிறகே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சரி இதையேன் விலங்குகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்களில் சேர்த்தார்கள் என்று அந்த கம்யூனிச நாட்டு புத்திசாலிகளை கேட்ட போது, அதில் நைட்ரஜன் அதிகம் இருக்கிறதாம். "melamine"ல் மற்றவற்றை காட்டிலும் மிகவும் குறைந்த செலவில் நைட்ரஜன் கிடைக்கிறதாம். சரிய்யா அந்த நைட்ரஜன்ல அப்படி என்ன தான் இருக்கிறது?

அதை விலங்கின் உணவுப்பொருட்களில் சேர்ப்பதால் விலங்கிலிருந்து கிடைக்கும் உணவு பொருட்களில் "புரோதச் சத்து" அதிகமாக தெரியுமாம். சரியாக படிக்கவும் "தெரியுமாம்". அதாவது சாதாரணமாக உணவுப்பொருட்களை சோதனை செய்யும் முறையில் அப்படித்தான் தெரியுமாம். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை அந்த சோதனை முறையில் அறிய முடியாதாம். நைட்ரஜனை வைத்தே புரோதச் சத்து கணக்கிடப்படுமாம்.

கடந்த வருடம் இதே "melamine" கலந்துள்ள கோதுமை உணவுப் பொருட்களை சாப்பிட்டதால் அமெரிக்காவில் பல நாய் மற்றும் பூனை இறந்தனவாம். அதுவும் இதே சீன தயாரிப்பு தான்.


சரி இதனால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்றால் எல்லாம் ஒன்றும் அறியாத குழந்தைகள் தான். இதுவரை 4 குழந்தைகள் இறந்துள்ளன. 22000 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 99 சதவிகிதம் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள். அக்குழந்தைகள் எல்லாம் அந்த டின் பாலைச் சார்ந்தே இருந்தது ஒரு சோகமான விசயம். கம்யூனிச நாட்டுத் தலைவர்கள் தாய் பாலின் மகத்துவத்தைத் தாய்மார்களிடம் உணர்த்தவில்லை என்றே தோன்றுகிறது.

இதனால் ஏற்படும் விளைவுகள்ப் பற்றி கேட்கும் போது அந்தபிஞ்சுக் குழந்தைகள் எப்படி தாங்கும் என்று மனது துடிக்கிறது. கிட்னியில் கல் உண்டாகுமாம், கிட்னி ட்யூப்களை பழுதடையச் செய்யுமாம், சில சமயம் கிட்னியை செயலிலக்கச் செய்யுமாம்.

இந்த மாதிரி நச்சுத் தன்மைக் கொண்ட பால் பவுடரை சீனாவில் மட்டும் 22 கம்பெனிகள் தயாரிக்கின்றனவாம்.

இதில் நியூசலாந்து மற்றும் டென்மார்க் கம்பெனிகள் இந்த் சீன கம்பெனிகளோடு வியாபார ரீதியாக கூட்டு வைத்துள்ளதாம்.

இது போன்று பால்பவுடர் மட்டும் அல்லாமல் பிஸ்கட், சாக்லேட் மற்றும் குழந்தைகள் சாப்பிடும் பல பொருட்களும் நச்சுத் தன்மை உள்ளவனவாக தயாரிக்கப்பட்டுள்ளதாம். அதை இப்போது தேடித் தேடி அழித்து வருகின்றனர் உலகம் முழுவதும்.

அந்த பால்பவுடரில் "melamine" மட்டும் அல்லாமல் லெட், பேட்டரியில் உபயோகப்படுத்தும் காடிமம் மற்றும் மெர்குரி போன்ற மூளையை பாதிக்கும் வேதிப் பொருட்களும் உள்ளனவாம்.

இவ்வளவு பெரிய விடயத்தை தொழிலாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கம்யூனிச நாடு கவனிக்காமல் விட்டது ஒரு சோகமான விடயம். சீனத் தயாரிப்புகளை இனி புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இனியும் இது போல் வேறு எந்த நாட்டிலும் நடவாதிருக்க பிராத்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய.......

தேவாவிற்கும் வாலிக்கும் ஒரு நன்றி...

முதலிலேயே சொல்லி விடுகிறேன் இந்த பதிவிற்கும் என் பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... இல்லை... இல்லை. கடந்த வார இறுதி நாளின் எப்போழுதும் போல மப்புடன் படுக்கச் சென்றேன். வழக்கம் போல் ஐபாடை ஆன் செய்து கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். வழக்கமான பாடல்களின் நடுவே இதுவரை கேட்டிராத ஒரு பாடலைக் கேட்டேன். ஆரம்பமே ஒரு சலங்கை சத்தம் போல....
"ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்" என்று கேட்டப் போது சொக்கிப் போனேன்.

பாடலில் தேவாவின் வாசனை வந்தாலும் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ஐபாடை பார்த்த போது "இந்து" என்ற படத்திலிருந்து பாடல் என்று தெரிந்தது. சந்தோஷமா அல்லது கருமாந்திரமா என்று தெரியாமல் குமட்டிக் கொண்டு வந்தது. ஆனால் அதுவும் நன்றாக இருந்ததால் திரும்பவும் கேட்டேன். ரூமிலுள்ள நண்பர் ஓவர் போதையில் உளரிக் கொண்டிருந்ததால் ஐபாடை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன். திரும்பவும் ப்ளே பொத்தானை அழுத்தினேன்.

"அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
இளிச்சிடாதா நின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல
வா முனிமா வா வா முனிமா வா
வா முனிமா வா வா முனிமா வா"

ஆஹா என்ன கருத்தாழம் மிக்க வரிகள். யாரோ ஒருவர் என் கையை பிடித்து டப்பாங்கூத்து ஆடுவது போல ஒரு உணர்வு. நீண்ட நாட்கள் கழித்து நாக்கைக் கடித்து கட்டை விரலில் எச்சைத் தொட்டு நெற்றியில் திலகமிட்டு ஒரு குத்து குத்தினேன். நீண்ட நாட்கள் கழித்து கண் கலங்கினேன். இதற்கு முன்னர் நண்பன் வீட்டு தாத்தா சாவுக்கு ஆடியது. எழுதியவர் மீது அளவில்லா கோவம். எழுதியவர் கண்டிப்பாக வாலியாகத்தான் இருக்க முடியும். இது போன்று இளமை ததும்பும் கேப்மாரிதனமான தத்துவ பாடலை எழுத அவரால் தான் முடியும். மறுநாள் வலையில் மேய்ந்த போது வாலி தான் என்று உறுதியானது. ஆனால் பாடியவர் மனோ மற்றும் மின்மினி.

"ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ப்ரெண்டு உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்ம பிரிக்க வந்தா வெட்டு (கோரஸ்)
எட்டு ரெண்டும் பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்து (கோரஸ்)
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா வா முனிமா வா ஹோய்... "

சொக்கிப்போனேன். வராந்தாவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் இல்லை. ஓவர் போதையில் இருந்ததால் நேராக நிக்க முடியாமல் சுவரில் சாய்ந்து நாக்கைக் கடித்து மீண்டும் ஒரு டப்பாகூத்து ஆடினேன். அருகில் ஒரு பூனை மட்டும் என்னை போல் தனியாக இருந்தது. என்னைப் பார்த்ததும் என் அருகில் வந்து மடியில் அமர்ந்து கொண்டது. ஆறுதலாய் உணர்ந்தேன். இத்தனை நாள் இந்த மாதிரி டப்பாகூத்து ஆடாமல் வீணடித்ததை நினைத்து வருந்தினேன். பாடல் அழகா இல்லை மனோ பாடியது அழகா என்று போதையில் பட்டிமன்றம் நடத்தினேன். கடைசியில் ஆண் கோரஸ் வரும் பாருங்கள்......ரொம்ப நாளாச்சு...கேட்டுப் பாருங்கள்.

பல்லவி:
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம் துஜம்ஜம்
ஜிங்கன ஜிங்கன ஜன ஜம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமா அத்தை மவன் நேசம்
வெண்ணையில மாமா நெய் வாசம்
என் திண்ணையில மாமா உன் வாசம்
கொத்தமல்லி வாசம் கொத்து கொத்தா வீசும்
அப்படிதான் மாமன் அத்தை மவன் நேசம்
வெண்ணையில....... மாமா நெய் வாசம்
என் திண்ணையில.....மாமா நா நா நாராசம்.....
நான்சென்ஸ்.....

யேய் என்ன திட்ர உனக்கு பாட்டு தானே வேணும்
டேய் பட்டாசு ..
இப்ப பாரு பட்டய கிளப்புறேன்


ஹாய் வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஹாய் வா முனிமா வா முனிமா வா முனிமா வா
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச்சு பக்கம் வாடி
அடி நீயும் நானும் ஜோடி சும்மா பீச்சு பக்கம் வாடி (கோரஸ்)
வா முனிமா வா வா முனிமா வா முனிமா (கோரஸ்)
வா முனிமா வா வா முனிமா வா (கோரஸ்)

சரணம்1;
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
அதோ வரா பொண்ணு நாம ஆயா கடை பன்னு
இளிச்சிடாதா நின்னு அவ கட்டிடுவா டின்னு
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
தண்ணி கொண்டா சொம்புல தள்ளி நிக்கும் பொம்பள
கோவம் வந்தா வம்புல நான் அடிச்சுடுவேன் கொம்புல
முனிமா வா வா முனிமா வா
வா முனிமா வா வா முனிமா வா

சரணம்2;
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
ஒன்னும் ஒன்னும் ரெண்டு நான் கிணத்துக் கடவு நண்டு
நீயும் நானும் ப்ரெண்டு உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு நம்ம பிரிக்க வந்தா வெட்டு (கோரஸ்)
எட்டு ரெண்டும் பத்து நம்ம நண்பர் எல்லாம் முத்து (கோரஸ்)
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிமா வா வா முனிமா வா ஹோய்...

சரணம்3;
அய்யோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
அய்யோ யம்மா காலு அங்க கொட்டிடுச்சான் தேளு
கை கொடுத்த ஆளு நம்ம கலுத்தறுத்தான் பாரு
சும்மா நின்ன சங்கு இத ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு இல்ல எடுத்திடுவோம் நொங்கு
ராவ்வரைய்யா ரா ராத்திரிதான் ரா (கோரஸ்)
ஜிங்குனு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா (கோரஸ்)

நான் என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை நைட்டு எல்லாரும் சேர்ந்து வெளியில் தள்ளி கதவை பூட்டி விட்டனர்...
Related Posts with Thumbnails